• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தனித்த வனத்தில் 12

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
31
தனித்த வனத்தில் 12

திங்கள் காலையில் நடந்த வாராந்தர மீட்டிங்கில் பார்த்த பின், இரண்டு முழு நாட்களாகியும் மன்மத ராவ் சாம்பவியின் கண்களில் படவில்லை. அன்றும் கூட்டம் முடிந்ததுமே, வேகமாக வெளியேறி விட்டான். தினமும் மாலையில் அவனது கார் தாமதமாக வீடு திரும்பியதைப் பார்த்தாள்.

‘அவரை எப்படிப் பாக்கறது, நான் பயத்தில் கட்டிப் புடிச்சதை அவர் எப்படி எடுத்துப்பார், இனிமே நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கணும்’ என்று தனக்குத்தானே போட்ட கட்டளைகளை மறந்தவளுக்கு, முதல் இரண்டு நாட்கள் இல்லாமல், மூன்றாம் நாள் தன்னைப் பார்ப்பதைத் தவிர்க்கிறானோ எனத் தோன்றிய எண்ணம் அடுத்த இரண்டு நாட்களில் வலுப்பெற்றது.

மன்மத ராவின் அலுவலக வண்டி, தினமும் காலையில் அந்தந்தப் பிரிவுகளின் தலைவர்களோடும், ஜெனரல் மேனேஜர், சேர்மென் என உயரதிகாரிகளின் மீட்டிங் நடக்கும் நேரத்திற்கு வந்து செல்வதைப் பார்த்தாள்.

‘புலியைக் கண்ட அதிர்ச்சில, அவருக்கு ஏதாவது ஆயிடுச்சோன்ற பயத்துல கட்டிப்புடிச்சதுக்கே, இப்டி ஒதுங்கிப் போறவருக்கு இன்னும் என் மனசுல நான் நினைச்சதெல்லாம் தெரிஞ்சா?’

‘ஏய் சாம், நிஜமாவே நீ அவரை…ம்?’

‘எனக்கே புரியலையே. ஆனா, அவரை, அவர் பேச்சை ரொம்பப் புடிச்சிருக்கு. அதுக்கு மேல யோசிக்க பயமாயிருக்கு’

கல்யாணம் நின்று, கிட்டத்தட்ட ஒருவருடம் கழித்துத் தன்னிடம் இயல்பாகப் பேசியவனின்
நம்பிக்கையை, நட்பை இழந்துவிட்ட உணர்வு எழ, சாம்பவிக்குக் கண்ணில் நீர் துளிர்த்து விட்டது.
இருக்கும் இடத்தை நினைத்துத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

எத்தனை நாளைக்கு
இப்படிக் கண்ணா மூச்சி விளையாட முடியும்? தன்னால் அவருக்கு ஏன் சங்கடம், பேசாமல் கேட்டு வாங்கி வேறு பிரிவுக்குச் சென்று விடுவோமா என்று தோன்றியது.

இப்போதைய நிலையில் அதுபோல் ஏதாவது செய்தால், அதிதி, கல்பகோஷுக்கு பயந்துகொண்டு செய்ததாக அவர்கள் நினைக்க ஏன் வாய்ப்பு தர வேண்டும், என்ற எண்ணமும் உடன் எழுந்தது.

மறுநாள் மாலை அலுவலகம் முடியும் முன் மன்மத ராவின் பிஏ சஞ்சய், தரக்கட்டுப்பாட்டுப் பிரிவில் இருந்தவர்களுக்கு சங்கராந்தி தினத்தன்று துவங்கும் கோல்ஃப் டோர்னமென்ட்டுக்கான ஸ்பெஷல் பாஸ்களை தலா இரண்டாக வழங்கி, ஏதேனும் ஒரு நாள் போகலாம் என்றும், எந்தெந்தத் தேதிகளில் மன்மத ராவ் விளையாடுகிறான் என்றும் இறுதிப் போட்டி குடியரசு தினத்தன்று என்றும் அறிவித்தான்.

ஞாயிறு விடுமுறை என்பதைத் தாண்டி, திங்களன்று பொங்கல், வட இந்தியாவில் மகர் சங்கராந்தி. அஸ்ஸாமில் மாஹ் பிஹு ( Magh Bihu) என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

‘அட ஆமால்ல, அன்னைக்குப் படிச்சு, மொபைல்ல ஃபோட்டோ கூட எடுத்தேனே. அப்ப அவர் என்னை பாக்கறதை தவிர்க்கலையா, டோர்னமென்ட் வேலையாதான் போறாரா?’

மூன்று நாட்களாக சோக கீதம் இசைத்த சாம்பவியின் முகம் பளிச்சென்று ஜாஸ் மியூஸிக் வாசிக்கத் தொடங்க, பிஏ “உங்களுக்கு என்னைக்கு மேம் டிக்கெட் வேணும்?” என்று கேட்டது அவள் காதுகளை எட்டவேயில்லை.

பிஏ அறைக்குள் சென்றதும் மேனேஜர்களில் ஒருவர் “கோல்ஃபைப் போல போரான விளையாட்டு எதுவுமே கிடையாது. ஸ்டேடியத்துக்கு நடுல விளையாடறிங்களா, சுத்தி உக்காந்து பாத்தமான்னு இல்லாம, அவங்க பாட்டு நடந்துக்கிட்டே இருப்பாங்க. படு மொக்கை” எனவும், எல்லோரும் ஆமோதித்துச் சிரித்ததை சாம்பவி ரசிக்கவில்லை.

அவசியத்திற்குத் தவிர வாய் திறவாதவள் “கோல்ஃப் விளையாடறது ஒரு தியானம் மாதிரி…” என்று தொடங்கி, மன்மத ராவ் அவளிடம் சொன்னதில் நினைவில் இருந்தவற்றை எல்லாம் சொற்பொழிந்தவள், அவர்களின் கேலிப் பார்வைகளையும், நமுட்டுச் சிரிப்பையும் அலட்சியப்படுத்தி
வெளியேறினாள்.

சாம்பவி சென்றபின் “இந்தப் பொண்ணுக்கும் கோல்ஃப்புக்கும் என்ன கனெக்ஷன்?”

“நாம லீவு கேட்டாலே குடுக்காத மனுஷன், தன் சொந்த ஸ்கூட்டரைக் கொடுத்ததிலேயே என்ன கனெக்ஷன்னு தெரியலையா?”

“ஒரு விஷயம் கவனிச்சீங்களா, நியூ இயர் பார்ட்டில கூட, ரெண்டு பேரும் ஒரே கலர், ஒரே மாதிரி ட்ரெஸ்ல வந்திருந்தாங்க”

“அது மட்டுமா, அவருக்கு சாப்பாடு போகுதாம், உடம்பு சரியில்லைன்னு அவரு இவங்க வீட்டுக்கே போய் விசாரிக்கிறாராம், என் ஒயிஃப் சொன்னா”

“நம்ம கல்பகோஷ்தான் பாவம், இவனை விட பெரிய ஆள் கிடைச்சதும்…”

சாம்பவி பேசும்போதே யோசனையில் சுருங்கிய கல்பகோஷின் முகம், மற்றவர்களின் வம்புப் பேச்சில் கறுத்துவிட,

“ஸ்டாப் இட், நீங்களா ஏன் கற்பனை பண்றீங்க? உங்களுக்குத் தெரியுமா, நான் இப்ப லீவ் போட்டு ஊருக்குப் போறதே, எங்க கல்யாணத்தைப் பத்தி எங்க வீட்ல பேசதான்” என்று உரத்த குரலில் கத்தினான்.

சட்டென அமைதி சூழ்ந்தாலும், பார்வைகளில் சுவாரஸ்யம் கூடியது. கல்பகோஷ் தன்னிடம் சொன்னதை, இப்படிப் பொதுவில் சொல்வானென எதிர் பார்க்காத அதிதிக்கு, அவன் மேல், கோபம், பரிதாபம் இரண்டும் எழுந்தது.

‘போடா, உன்னையே சுத்தி வந்த என்னைப் புடிக்கலைன்னு சொன்னல்ல? முதல்ல உங்க வீட்ல ஒத்துப்பாங்களான்னு பாரு. அப்படியே ஒத்துக்கிட்டாலும் சாம்பவியோட லிஸ்ட்ல நீ எங்கயுமே இல்ல. உனக்கெல்லாம் பட்டாதான் புரியும்’

மன்மத ராவின் அறையில் இருந்த பிஏ, உரையாடலின் சத்தம் அதிகரித்ததில் கீற்றாகத் திறந்திருந்த கதவின் வழியே மொத்த உரையாடலையும் கேட்டிருந்தான்.

********************

சாம்பவி வீட்டுக்கும் வாசலுக்குமாக நடைபயின்றாள்.
முதலில் மன்மத ராவ் தன்னைத் தவிர்க்கவில்லை என்று மகிழ்ந்தவள் பின் தினமும் கோல்ஃப் விளையாடத்தான் போய் இருக்கிறான் என்று ஆறுதல் அடைந்தவள், நேரம் செல்லச் செல்லக் கவலையானாள்.

‘பனியும் மலையும், செடிகளும், புதர்களும், மரங்களும் மேடும் பள்ளமுமான கோல்ஃப் கோர்ஸில், இருள் கவிந்த பிறகும் இன்னும் என்ன செய்யறார்?’

‘பகல்ல தனியா வந்த புலி, ராத்திரில குடும்பத்தோட வந்தா?’

‘ஒரு வேளை அதோட வீடு (காடு?) அங்கேயேதானோ என்னவோ?’

‘ரெண்டு நாள் முன்னால, நியூஸ்ல கூட டிக்பாய் டீ எஸ்டேட்ல ஒரு குழந்தை, ஒரு பொண்ணு, ரெண்டு பசுமாட்டை சிறுத்தை அடிச்சதா பேப்பர்ல வந்ததே’

சாம்பவியின் கற்பனையில், ஃப்ளட் லைட் வெளிச்சத்தில், கோல்ஃப் கோர்ஸின் நடுவே மன்மத ராவ் தனியே நின்றிருக்க, சுற்றிலும் நாலைந்து சிறுத்தைகள் நின்றது.

இன்னொரு காட்சியில் மன்மத ராவ் பயந்து ஓட, புலி துரத்தியது.

அடுத்ததில் அவன் சட்டையைக் கவ்வியே விட, உடலை உதறி, உரக்க “ஷண்முகா” என்றிருந்தாள்.

இரவு உணவு பற்றிக் கேட்ட வந்த ஷோபா “க்யா ஹுவா மேம்?”
(என்ன ஆச்சு மேம்)

ஒண்ணுமில்லை என்றவள், இரவுக்கு தோசை வார்த்துக் கொள்வதாகச் சொல்லி, அவளை அனுப்பி விட்டாள்.

வெங்காயத் துவையல் செய்கையில், மன்மத ராவின் கார் சத்தம் கேட்க, சட்டென எட்டுப் பத்து தோசைகளை வார்த்து ஹாட் பேக்கில் அடுக்கி எடுத்துக்கொண்டு, அவனது வீடு நோக்கிச் சென்றாள்.

********************

மன்மத ராவ் காலை முதல் வெட்ட வெளியில் நின்றதும், போட்டிகளுக்கென கோல்ஃப் மைதானத்தைச் செப்பனிடும் வேலையோடு கூடவே விளையாடவும் செய்ததில், அத்தனை குளிரிலும் கசகசக்கவே, நேரே குளிக்கச் சென்றான்.

மாலையில் செக்ரட்டரி கால் செய்து அலுவலக வேலையோடு, தயங்கியபடியே சொன்ன விஷயத்தை யோசிக்கவே, இப்போதுதான் நேரம் கிடைத்தது.

“சாம்பவி மேடம் கோல்ஃப் பத்தி பொதுவாதான் சார் சொன்னாங்க. அதுக்கு அவங்க போன பிறகு…”

“சொல்லுங்க”

“உங்களையும் மேடத்தையும்…”

“ம்… ஒகே சஞ்சய். ஃப்ரீயா விடுங்க. காஸிப் தானே அடங்கிடும்”

“ஸார்.. இதுக்கு அப்புறம், கல்பகோஷ் சார்……”

“ஓ!”

கேட்டதில் இருந்தே உறுத்தியது கல்பகோஷ் சொன்னதுதான். அது உண்மையாக இருக்காது என உள்மனது சென்னாலும், கல்பகோஷுக்கு சாம்பவியின் சம்மதம் இல்லாமல், அவளுடனான திருமணத்தைப் பற்றிப் பொதுவெளியில் பேசும் தைரியம் வந்தது எப்படி என்ற கேள்வி குடைந்தது.

‘நீதான் அவ வேண்டாம்னு ஒதுங்கிப் போற முடிவை எடுத்துட்டல்ல, அப்புறம் அவ யாரை கல்யாணம் பண்ணினா உனக்கென்ன?’

‘கல்பகோஷ் நல்ல பையன்னு சர்ட்டிஃபிகேட் கொடுத்தது யாரு?’

‘அதுக்காக?’

‘நான் சொன்னா, அவ என்னை விட்டுடுவாளா? அப்ப அவ முகத்துல தெரிஞ்ச சிக்கு (Siggu - வெட்கம், நாணம்)?’

‘என்னைப் புடிக்காமலா ஹக் பண்ணிக்கிட்டா?’

‘லூஸாடா நுவ்வு? அவ புலிக்கு பயந்து உங்கிட்ட வந்தா, அதுக்குப் பேர் லவ்வா, அவ அப்படீன்னு உங்கிட்ட சொன்னாளா?’

‘ஏன், நீ சொன்னியா?’

தலையைப் பிய்த்துக்கொள்ளலாம் போலிருந்தது.

‘சாம்பவியை மறக்க கோல்ஃப் போதாது போலவே?’

அழைப்பு மணி இரண்டு, மூன்று முறை ஒலித்த பிறகே, தன் நினைவுக்கு வந்தவனின் உதடு, கை, கால் விரல்கள் எல்லாம், நீண்ட நேரம் நீரில் இருந்ததில் சுருங்கி வெளுத்திருக்க, நடுங்கியது.

‘கமிங்’ என்று கத்தியபடி, அவசரமாக ஒரு பாத்ரோபுக்குள் புகுந்து கொண்டு, கதவைத் திறந்தவன், வெளியே நின்ற சாம்பவியைக் கண்டு இனிதாக அதிர்ந்தான்.

அவனது கோலத்தைக் கண்டு, சாம்பவி தலையைக் குனிந்துகொள்ள

“ஹாய் சாம்பவி, கம் இன். உக்காரு, இதோ வரேன்” என்பதற்குள் குளிரில் குரல் நடுங்கியது.

மன்மத ராவ் சற்று நேரத்தில் இரண்டு கோப்பைகளில் பால் கலக்காத, ‘லால் சாய்’ எனப்படும் அதிகம் பதப்படுத்தப்படாத, இயற்கையான இனிப்பும் மணமும் கொண்ட அஸ்ஸாமின் ஸ்பெஷலான Red tea யுடன் வந்தான்.

“தேங்க்ஸ்”

“ஃபர்ஸ்ட் டைம் இங்க வந்திருக்க இல்ல, வெல்கம் சாம்பவி”

“...”

“சாம்பவி?”

“ஏன் எங்கிட்ட சொல்லாம, என்னை அவாய்ட் செஞ்சீங்க? கோல்ஃப் விளையாடப் போறேன்னு சொல்லி இருக்கலாம்ல? வந்து… அது…என்னாலதான் நீங்க…”

“வெய்ட், வெய்ட். கொஞ்சம் மூச்சு விடும்மா. நீதான் அன்னைக்கு போர்ட்ல பார்த்தியே?”

“சரி பார்த்தேன்தான், மறந்துட்டேன். அதனால என்ன, நீங்க சொல்லக்கூடாதா?”

“...”

“தினமும் லேட்டா வர்றீங்க. எங்க போறீங்கன்னு தெரியாது. இன்னைக்கு சஞ்சய் சொன்னதுல இருந்து எவ்வளவு டென்ஷனா இருக்கு தெரியுமா?”

தான் அவளைத் தவிர்த்ததாக நினைத்துத் தயங்கியவளின் படபடப்பில் மன்மத ராவ் பார்த்த வினோதப் பார்வையையும், அடக்கப்பட்ட சிரிப்பையும் உணராத சாம்பவி,

“அங்க சிறுத்தை வந்தா? அதுவும் ஒண்ணுக்கு மேல வந்தா? எனக்குத் தெரியாது, நாளைல இருந்து நானும் உங்க கூட வருவேன்”

சாம்பவியின் தீவிரத்தில் இப்போது மன்மத ராவ் உரக்க / சத்தமாக / பகபகவெனச் சிரித்தான்.

“வந்து? புலி கிட்ட இருந்து என்னைக் காப்பாத்தப் போறீங்களோ?”

“!!!”

“ச்சில் சாம்பவி, ஆறு வருஷமா நான் இங்கதான் இருக்கேன். அதே கோல்ஃப் கோர்ஸ்லதான் ப்ராக்டீஸ் செய்யறேன். புலி எப்பவாவது வரும்தான். ஆள் இருக்காங்க. நான் பத்திரமா இருப்பேன், டோன்ட் ஒர்ரி”

“...”

“தினம் வர்றதுக்குப் புலி என்ன கோல்ஃப் க்ளப் மெம்பரா இல்ல ப்ளேயரா?”

“பன்னெண்டு நாள் டோர்னமென்ட். லீவ் போட்டு தினமும் எங்கூட வருவியா? ஏற்கனவே ஆஃபீஸ்ல…” என்று எதையோ சொல்ல வந்து, நிறுத்திக்கொண்டான்.

பின் “நீ டின்னர் சாப்பிட்டியா, எனக்குப் பசிக்குது, இதுல என்ன இருக்கு?” என்றபடி டப்பாக்களைத் திறந்தவன்,

“வாவ், தோசையும் ஆனியன் சட்னியும். டெம்ப்டிங்”

தோசைகளை எண்ணியவன் “சாம்பவி, ஒண்ணு சொன்னா என்னைத் தப்பா நினைக்க மாட்டியே?”

“சொல்லுங்க”

“இருக்கற பசிக்கு எனக்கே இது பத்தாது. நீ இன்னும் சாப்பிடலைன்னா…”

“நீங்க சாப்பிடுங்க, நான் வீட்ல போய் தோசை பண்ணிக்கறேன்”

“தேங்க்ஸ் சாம்பவி, நீ நிஜமாவே ஏன்ஜல் ஷெஃப்தான்”

“மேட்ச் பாக்க என்னைக்கு வர, நானே கூட்டிட்டுப் போறேன்”

“நான் பாஸே வாங்கிக்கலை. ஃபைனல்ஸுக்கு வரேன்”

“நான் ஆடலைன்னா?”

“ரொம்ப நல்லது, என் கூட உக்கார்ந்து வேடிக்கை பாருங்க”

“தேவுடா!”

அவள் கிளம்ப, ஏதோ தோன்றவும் “சாம்பவி, நீ என்னோட சாட்டர்டே, சன்டே வரியா?” என்றான்.

மறுநாள் அலுவலகம் சென்றதுமே, அதிதி, சாம்பவியிடம் கல்பகோஷின் பேச்சை மறுஒலிபரப்ப, அவனோ கோபத்துடன் காத்திருந்தவளிடம் சிக்காமல், முதல் நாள் இரவே ஊருக்குக் கிளம்பி இருத்தான்.

சாம்பவி சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் மன்மத ராவுடன் கோல்ஃப் கோர்ஸுக்குச் செல்ல, போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் எல்லோரும் ப்ராக்டீஸுக்காக வந்திருக்க, மன்மத ராவ் “ஷி ஈஸ் சாம்பவி” என்று அறிமுகப்படுத்த,

வயதில் மூத்தவரும், முதன்மையான கோல்ஃபரும், ஆர்மியில் உயர்பதவியில் இருப்பவருமான ராஜேஷ் கருட் “குட் டு ஸீ யூ வித் ஏ பியூட்டிஃபுல் கேர்ல் மேன்” என்று சிரித்தபடி, விளையாட்டாய் மன்மத ராவின் வயிற்றில் குத்த, இருவரும் புன்னகை மாறாது, அடுத்தவரை நோக்காமல் நின்றிருந்தனர்.

அதன் பிறகு அவனும் அழைக்கவில்லை, சாம்பவியும் நுழைவுச் சீட்டைக் கேட்டுப் போட்டிகளைக் காணச் செல்லவில்லை.

சென்று வந்த சக அதிகாரிகள் மூலம் மன்மத ராவ் இறுதிப்போட்டியில் விளையாடத் தகுதியானதை அறிந்து, அவனுக்குக் குறுஞ்செய்தி அனுப்பி வாழ்த்தினாள்.

ஃபைனல்ஸுக்கு வரச்சொல்லி அவனும் அழைக்கவில்லை, வருகிறேன் என்று அவளும் சொல்லவில்லை.

இந்திய ஆயில் கழகத்தின் உயரதிகாரிகள் பலரும் வருகையில், சாம்பவியைத் தன்னுடன் அழைத்துச் செல்வது இருவருக்குமே சங்கடத்தைத் தரும் என்பதால் மன்மத ராவ் தயங்க, அரையிறுதிக்கும் இறுதிப்போட்டிக்கும் இருந்த இரண்டு நாள் இடைவெளியில், சாம்பவியின் அண்ணன் சூர்யாவிடமிருந்து அவசரமாகக் வரச்சொல்லி அழைப்பு வந்தது.

மன்மத ராவ்தான் துறை அதிகாரி என்பதால், ஃபோனிலேயே விடுப்பு கேட்டு, அடுத்த நிலை அதிகாரியிடம் அனுமதி பெற்றாள்.

“ஆல் த பெஸ்ட் ஃபார் யுவர் ஃபைனல்ஸ் ஸார், வின் பண்ணினதும் சொல்லுங்க”

“டன்”

மன்மத ராவ் மற்ற கோல்ஃப் வீரர்களுடன் டின்னர், பார்ட்டி, கோல்ஃப் க்ளப் செக்ரட்டரியும் அவனே என்பதால், அவர்கள் தங்குவதற்கான வசதி, மற்ற ஏற்பாடுகள் என பிஸியாக இருந்ததில், அவனை நேரில் சந்திக்காமலே சென்னைக்குப் புறப்பட்டாள்.
 
Author: VedhaVishal
Article Title: தனித்த வனத்தில் 12
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Joined
Jun 19, 2024
Messages
21
😍😍😍

ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சு இருக்கு.. எப்பதான் மனசை திறந்து சொல்ல போறீங்களோ? 😒😒

என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது
புதிதாக ஏதோ நிகழ்கின்றதோ
புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றதோ
நாடி எங்கும் ஓடி ஒரு கோடி மின்னல் கோலமிடுதோ

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
137
சூப்பர் அம்மா ❤️❤️❤️❤️❤️❤️அங்க என்ன வில்லங்கம் காத்துகிட்டு இருக்கோ 🤔🤔🤔🤔🤔
 
Krishnanthamira

New member
Joined
Nov 7, 2024
Messages
5

Andha loosu family enna iluthu vachurukangalo.
 
Top Bottom