• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தனித்த வனத்தில் 11

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
31
தனித்த வனத்தில் 11

டுத்த நாள் காலை மழை நின்றிருக்க, காலையிலேயே கால் செய்த அதிதி தாம்னே “நான் உன்னைப் பார்க்க வரலாமா சாம்பவி?” என்றாள்.

“தாராளமா, பிரஞ்ச் (Brunch)?”

“டன், அப்ப பதினோரு மணிக்கு வரேன்”

அலுவலகத்தில் ஒரே பிரிவில் கூடவே இருந்தாலும், இருவருக்கும் இடையே தேவைக்கேற்ப, அளவான பேச்சுகள்தான். தனக்குள் மூழ்கி இருந்த சாம்பவிக்கு, உண்மையில் அதிதியே முன் வந்து நட்புக்கரம் நீட்டியது மகிழ்ச்சியளித்தது.

அவள் வரும் சமயத்தில் மினி இட்லி, மெதுவடை சாம்பார் , லெமன் ரைஸ், ஃபில்டர் காஃபிக்கு டிகாக்ஷன் என தயார் செய்து வைத்துக் காத்திருந்தாள்.

சொன்ன நேரத்துக்கு வந்தாள் அதிதி. உரையாடல் சிறிது நேரம் பொதுவாக, அவரவரது குடும்பம், படிப்பு, கல்லூரி, சாம்பவியின் முந்தைய வேலை எனச் சென்றது.

ஷோபா வடைகளை சூடாகப் போட்டு எடுத்து வர, உண்டு முடித்ததும், சாம்பவி இருவருக்கும் காஃபியுடன் வந்தாள்.

“நைஸ் காஃபி” என்ற அதிதி, “சாம்பவி, நீ கல்பகோஷை விரும்பறியா? உனக்கும் அவருக்கும் கல்யாணமாமே”

தன்னுடன் வேலைபார்க்கும், அதிக நெருக்கமில்லாத, சக வயதுப் பெண்ணிடமிருந்து இதுபோன்ற ஒரு கேள்வியை, அதுவும் முகத்துக்கு நேரே சற்றும் எதிர்பாராததிலும் சட்டென்று முகிழ்த்த கோபத்திலும், சாம்பவியின் முகம் சிவந்துவிட, தன்னைச் சமன் படுத்திக்கொள்ளப் பெரிதும் முயற்சித்தாள்.

பின், பதில் சொல்ல சொற்களைத் தேடியும் கிடைக்காமல் “அப்படீன்னு உங்களுக்கு யார் சொன்னது?”

“உங்க கல்யாணத்துக்கு சம்மதம் கேட்க சங்கராந்தி (பொங்கல்) சமயத்துல அவர் லீவ் போட்டுக் கொல்கத்தா போகப்போறதா அவரே…”

“வாட் நான்சென்ஸ்?”

“சாம்பவி..”

“ப்ளீஸ் அதிதி, என் சம்மதமோ, விருப்பமோ இல்லாம அவர் எப்படி உங்க கிட்ட இதுபோலப் பேசினார்னு எனக்குப் புரியல. யெஸ், அவர் கல்யாணம்
செஞ்சுக்கலாமான்னு என்னைக் கேட்டது உண்மைதான், ஆனா…”

பாதியில் இடைமறித்த அதிதி தாம்னே, எட்டி சாம்பவியின் கையைப் பிடித்துகொண்டு “தேங்க்ஸ், சாம்பவி, தேங்க் யூ ஸோ மச். நான் இங்க வேலைக்கு வந்து ரெண்டு வருஷமாகுது. எனக்கு கல்பகோஷை ரொம்பப் பிடிக்கும். அவர்கிட்ட நிறைய தரம் பேச முயற்சி செஞ்சேன்”

“...”

“ஒரு முறை கூட அவர் என்னைப் பேச விட்டதே இல்லை, தவிர்த்துடுவார். ஆனா, நீ வந்ததுமே அவர் பார்வை, கவனம் எல்லாம் உன்மேலதான். இப்ப நான் பயந்த மாதிரியே…”

இதற்கு எப்படி எதிர்வினை ஆற்றுவதென்றே புரியாது, அதிதியான அதிதியின் முன் சாம்பவி எழுந்து விட்டாள்.

“ஸாரி அதிதி, எனக்கு கல்பகோஷ் மேல அப்படி எந்த எண்ணமும் இல்லை. உங்களுக்கு நான் போட்டியும் இல்லை, இதுக்கு மேல உங்க கூட இதை விவாதிக்க எனக்கு விருப்பமோ அவசியமோ கிடையாது. ஹோப், யு அண்டர்ஸ்டாண்ட்”

முகம் கருத்த அதிதி “அதுக்கில்ல சாம்பவி, நான் ஏன் சொல்…”

“ஐ’ம் ஸாரி அதிதி, உன் பர்ஸனல் எனக்குத் தேவையில்லை” என்ற சாம்பவியின் குரலில் அவளை மீறி எரிச்சலும் கடுமையும் வெளிப்பட்டது.

இறங்கிய குரலில் “ஸாரி சாம்பவி, நான் வரேன்” என்று கிளம்பிய அதிதியை சாம்பவி தடுக்கவில்லை.

இயல்பான சக வயது பெண் தோழமையை வரவேற்கத் தயாராக இருந்த சாம்பவிக்கு, தனது தனிப்பட்ட விஷயத்தை விசாரிக்கவென்றே அவள் வீடு தேடி வந்தது ஒவ்வாமையைக் கொடுத்தது.

‘எனக்குன்னு எங்க இருந்துதான் வராங்களோ, specimens’

‘நான் என்னவோ இவ காதலுக்குக் குறுக்க நிக்கறாப்போல, எங்கிட்ட வந்து என்கொயரி நடத்தறா!’

‘அவன் சட்டையைப் போய் புடிக்காம, எங்கிட்ட வந்து கேட்டா?’

‘என்னை லவ் பண்ணுன்னு நான் போய் கல்பகோஷைக் கேட்டேனா?’

‘இவன் பெரிய ரெமோ, இவனுக்குப் போட்டி வேற போடறாங்க’

‘ நான் பதில் சொல்லாம, என் அனுமதி, சம்மதம்னு எதுவுமே இல்லாம, அதெப்படி அவனா முடிவு செஞ்சு, அவங்க வீட்ல பேசுவான்?’

‘ஏன், எனக்கு சுயமரியாதை, வீடு, அம்மா, அப்பாவெல்லாம் கிடையாதா, இதென்ன பொறுக்கித்தனம்?’

சம்பந்தப்பட்ட இருவரையும் மனதில் வறுத்தெடுத்தவளுக்குத் திடீரென சிரிப்பு வந்துவிட்டது.

‘சும்மா சொல்லக்கூடாதுடீ சாம், செம்ம ராசி உனக்கு. நிச்சயம் பண்ணினவன், ப்ரபோஸ் செஞ்சவனுக்கெல்லாம் நல்ல டிமாண்ட். குறுக்க வந்து கொத்திட்டுப் போறாங்க’

எண்ணத்தொடரின் முடிவில் மன்மத ராவின் முகம் வர, எதிர்மறையாக எதையும் யோசிக்க விரும்பாது, லேப்டாப்பைத் திறந்தவள், எந்த ஸ்கூட்டரை வாங்கலாம் என்று கேட்க சூர்யாவை அழைத்தாள்.

“சாம், வருஷம் முழுக்க மழை பெய்யற ஊர்ல இருக்க, டூ வீலர் வேணாம்டா, பேசாம சின்னதா ஒரு காரே வாங்கிக்கோ” என மன்மத ராவ் முன்பு சொன்னதையே இப்போது சூர்யாவும் சொல்லவும் யோசனையுடன் அமைதியானாள்.

“லைன்ல இருக்கியா சாம், பணத்துக்கு யோசனை செய்யாத. லோன் வேண்டாம். உங்கிட்ட இருக்கறது பத்தலைன்னா நான் அனுப்பறேன்”

“இல்லண்ணா, சேவிங்ஸ்ல இருக்கு. எனக்கு கார் டிரைவிங் தெரியாதேன்னுதான்…”

“இதெல்லாம் ஒரு மேட்டரா, ரெண்டு வாரம் கிளாஸுக்குப் போனா ரோல்ஸ் ராய்ஸைக் கூட ஓட்டலாம். மொதல்ல ஒரு டிரைவிங் ஸ்கூலைப் புடி. எத்தனை நாளைக்குதான் இன்னோருத்தரோட வண்டியை வெச்சிருப்ப?”

சூர்யா அவன் பார்த்தேயிராத மன்மத ராவை அவனளவில் இன்னொருத்தர் என்றதே சாம்பவிக்கு என்னவோ போல் இருக்க

“ம்… ஓகேண்ணா, அண்ணி, லட்டு எப்டி இருக்காங்க? ஆதி எங்க இருக்கான்?”

“நாளைக்குதான் டிஸ்சார்ஜ் செய்யறாங்க. நான் ஆதி கூட மீரா வீட்லதான் இருக்கேன்” என்றவன் சற்றே தயக்கத்துடன் “தேவாக்கு மிஸ்கேரேஜ் ஆனதுல ரெஸ்ட்டுக்கு ரெண்டு வாரமா நம்ம வீட்லதான் இருக்கா. அதனால அம்மா ஃப்ரீ இல்ல. நான் பத்து நாள் லீவ்ல இருக்கேன்”

திகைத்த சாம்பவி, இதற்கு என்ன சொல்வதென்று தெரியாமல், எதைச் சொன்னாலும் தப்பாகப்படும் என்ற எண்ணத்தில் “ஓ… டேக் கேர் ணா, பை” என்று ஃபோனை வைத்து விட்டாள்.

‘தேவசேனாவையே சிறுபெண் என இவர்கள் நினைத்திருக்க, முதல் குழந்தைக்கு ஏழுமாதம் ஆகவில்லை, அதற்குள் இன்னொன்றா?’

மீண்டும் அழைத்தவள் “நான் வேணா லீவு கிடைக்குமான்னு கேட்டுப் பார்க்கவாண்ணா? ஆதியையாவது பாத்துப்பேன்ல”

சூர்யா “இப்ப வேணாம் சாம். தேவைன்னா நானே சொல்றேன். அதோட… “ என எதையோ சொல்ல ஆரம்பித்து நிறுத்திக்கொண்டான்.

ஆதி மீராவின் வீட்டில் இருப்பதால், சாம்பவி அவர்கள் வீட்டில் போய்த் தங்க முடியாது. இங்கே தேவாவின் எதிர்பார்ப்புகளுக்கு அம்மா ஈடுகொடுப்பதில், ஆதி இரண்டாம் பட்சமாகி விடுவான் என சூர்யா சொல்ல வந்ததை, சாம்பவி புரிந்துகொண்டாள்.

“சரிண்ணா”

**********************

கல்பகோஷ் தன் வீட்டின் சமையலறையில் பிஸியாக இருந்தான். அது ஒரு பேச்சிலரின் கிச்சன்/ வீடு என்றால் நம்புவது கடினம் என்னும் அளவிற்கு அத்தனை நேர்த்தியாக வைத்திருந்தான்.

பாரம்பரிய பெங்காலி உணவில் அதிக விருப்பமுடைய கல்பகோஷ், அவசரத்திற்குக் கூட ஆஃபீஸ் கேன்டீனில் சலுகை விலையில் கிடைக்கும் உணவை சாப்பிடமாட்டான். மூன்று வேளையும் சுயம்பாகம்தான்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால், நிதானமாக பெங்காலி ஷோர்ஷே மாச் (Shorshe Maach ) செய்வதற்குக் கடுகில் மசாலாக்கள் சேர்த்து அரைத்து மீனில் பிரட்டி (marinate) ஊறுவதற்கு ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு, தண்ணீர் பாதி, பால் பாதி, டீத்தூள், சர்க்கரை, ஒரு ஏலக்காய், ஒரு கிராம்பு எல்லாம் ஒன்றாகப் போட்டு, அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, எலெக்ட்ரிக் குக்கரில் சாதத்தை ஆன் செய்து, பொங்கிவந்த ‘பங்லா சாயை’ கப்பில் வடி கட்டி எடுத்துக்கொண்டு வாசல் வராண்டாவில் இருந்த பிரம்பு ஜூலாவிற்கு வந்த கல்பகோஷ், எதிர் சாரியில் இரண்டு வீடு தள்ளி இருந்த சாம்பவியின் வீட்டிலிருந்து அதிதி வெளியே வருவதைப் பார்த்தான்.

கல்பகோஷுக்கு அதிதிக்குத் தன் மீதுள்ள ஈடுபாடு புரிந்தும், அவனுக்கு அப்படி எதுவும் தோன்றாததால், அவள் தனித்துப் பேச முயற்சித்த போதெல்லாம் அவளைத் தவிர்த்து விடுவான்.

திருமணம் ஆகாத பெண், தானே வந்து விருப்பத்தைக் கூறுகிறாள் என்று அவளை அவன் கீழாகப் பார்க்கவுமில்லை, அதையே சாக்காக வைத்து அவளுடன் டைம் பாஸ் செய்து பொய்யாக நம்பிக்கை கொடுக்கவும் விரும்பவில்லை.

தான் சாம்பவியுடன் கண்ட்டி பாபா மந்திருக்குப் போனதும், நின்ற காரிலிருந்து கொட்டும் மழையில் அவள் இறங்கியதும், காட்டுத்தீயாக அலுவலகம், காலனி என எல்லா இடத்திலும் பரவி இருந்தது. சிலர் அவனையே கூடக் கேட்டனர்.

இத்தனையில் கல்பகோஷ் சாம்பவி, காதல், கல்யாணம் என்றதில் பதட்டமாகி விட்டாளே தவிர, தன் மேல் அவளுக்கு வெறுப்பில்லை என்றே நினைத்தான்.

இதை சரி செய்ய எண்ணி,
நியூ இயர் பார்ட்டியில், அன்று நடந்ததற்கு மன்னிப்புக் கேட்டு, சமாதானம் செய்து, தன் நேசத்தின் ஆழத்தைத் தெரிவிக்க நினைத்துதான் சாம்பவியிடம் பேசச் சென்றான்.

ஆனால், எல்லோரும் அவர்களையே கூர்ந்து கவனித்ததில் சாம்பவியை நெருங்கும் முன்பே அவள் பதட்டமானாலும் “அன்னைக்கு நடந்ததுக்கு ஸாரி, ஆனால் நான் சொன்னதெல்லாம் நிஜம்தான்” என்றவன், அவளது பதிலை எதிர்பார்க்காமல் நகர்ந்து விட்டான்.

சாம்பவி இங்கு வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே கல்பகோஷின் நடவடிக்கைகளில் தெரியும் மாற்றத்தையும், அவனது வெளிப்படையான ஆர்வத்தையும் கவனித்து வந்த அதிதி, வதந்தியைத் தொடர்ந்து அன்று பார்ட்டியில் அவர்கள் இருவரையும் பார்த்துக் குழம்பினாள்.

கடைசியாகத் தன் மனதைச் சொல்லி, நேரடியாகக் கேட்டுவிட எண்ணிக் கல்பகோஷிடம் பிடிவாதமாகப் பதிலை எதிர்பார்த்தவளிடம், “ஆமா,
சாம்பவியை நான் லவ் பண்றேன். எங்க வீட்ல கல்யாணத்துக்கு அனுமதி வாங்கதான் சங்கராந்தி லீவுல கொல்கத்தா போகப்போறேன்” என்றிருந்தான்.

அதிதி “உங்க வீட்ல ஒரு மதராஸியை, வேற பாஷை பேசற பொண்ணை மருமகளா ஏத்துப்பாங்களா?”

அவளது கேள்வியில் கோபமடைந்த கல்பகோஷ் “சாம்பவி மதராஸின்னா, நீ மராட்டி. அவ எந்த பாஷைல பேசினா என்ன, எனக்குப் புடிச்சிருக்கு?”

அதிதியைப் பார்த்தவுடன் நடந்தது நினைவுக்கு வந்தது.

‘இவ ஏன் இப்ப சாம்பவி வீட்டுக்குப் போய்ட்டு வரா, ஆளும் முகமும் சுத்தமா சரியில்லையே’

‘மை காட், அங்க போய் சாம்பவி கிட்ட இவ என்ன கேட்டா, அவ என்ன சொன்னா, ரெண்டு பேரும் என்ன பேசினாங்கன்னு தெரியலையே’

‘எப்படி இருந்தாலும், ஊருக்குப் போய் அம்மா, அப்பாகிட்ட பேசி, சம்மதம் வாங்கின பிறகு சாம்பவியை சர்ப்ரைஸ் பண்ணனும்,

கல்பகோஷ் தன் காதலை கல்யாணத்தில் முடிக்க வேண்டிய தீவிரத்தில், சாம்பவியின் விருப்பம், சம்மதம், மனம் என அதற்குத் தேவையான எதுவுமே அவன் புத்திக்கு எட்டவில்லை.

போதாத குறைக்கு தன் சீனியரான மன்மதராவ் அவள் மீது அக்கறை காட்டுவது வேறு அவனை துரிதப்படுத்தியது.

கல்பகோஷின் பெற்றோர், அவனிடம் ஒரு வருடமாகவே திருமணம் குறித்துக் கேட்டுக்கொண்டேதான் இருக்கின்றனர். இந்த ஒன்றரை மாதத்தில் “அமி எய்ஸே போல்போ (நானே வந்து சொல்றேம்மா) எனப் பல முறை சொல்லி இருந்தான். அவனது புத்திசாலிப் பெற்றோர்களுக்கு அதன் அர்த்தம் தெளிவாகப் புரிந்தது.

*********************

அதிதி தாம்னே சொன்ன செய்தியைப் புறந்தள்ள முயன்றாலும், சாம்பவி இதன் விளைவுகளை எண்ணிக் கவலையானாள்.

சம்பந்தப்பட்ட அவளிடம் எதுவுமே கேட்காமல், தானே முடிவு செய்து, அதை அதிதியிடம் வேறு பறை சாற்றிய கல்பகோஷை நினைக்கவே ஆத்திரம் வந்தது’

‘படித்த முட்டாள்! இவனெல்லாம் பெரிய ஹீரோன்னு நினைச்சு ஒருத்தி உருகறா, அவளை விட்டுட்டு, இவன் ஒரு கனவுல சுத்துறான், இடியட்’

உடனடியாக அவனிடம் பேசி இதற்கொரு முடிவு கட்டத் நினைத்தவள், காதல், ஊதலென்று தானே போய்ப் பேச விருப்பப்படாததோடு, இவளே அழைத்து, அதை அவன் தவறாகப் புரிந்துகொண்டால்?

கல்பகோஷ் விடுப்பில் செல்வதற்கு முன், தன்னிடம் ஏதேனும் சொன்னால், நேரடியாக மறுத்துப் பதில் சொல்லக் காத்திருந்த சாம்பவிக்குக் கடைசிவரை அந்தச் சந்தர்ப்பத்தையே அவன் கொடுக்கவில்லை.

அவர்களைப் பற்றியே யோசித்து, யோசித்துக் குழம்பியவள், அதிதி, கல்பகோஷ் இருவரின் மீதும் எரிச்சல் எழ, ரெஸ்ட்லெஸ்ஸாக இருக்கவே, இருப்புக்கொள்ளாமல், திடீர் தீர்மானமாய் வெஸ்பாவில் வெளியேறியவள், வாழ்வில் முதல் முறையாக முப்பத்தி ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தீன்சுக்கியாவிற்குத் தனியே வந்திருந்தாள்.
 

Author: VedhaVishal
Article Title: தனித்த வனத்தில் 11
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Joined
Jun 19, 2024
Messages
21
😍😍😍

"நிச்சியம் பண்ணினவன், ப்ரப்போஸ் செஞ்சவனுக்கெல்லாம் நல்ல டிமாண்ட் " - கோல்ஃப் சொல்லிக் கொடுத்தவனுக்கு டிமாண்ட் இல்லை தானே? 🙈🙈🙈

FB_IMG_1714983426617.jpg
 

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
85
சீக்கிரம் சொல்லு இல்ல இவன் வேற ஸ்பீடா கல்யாணம் வரை போய்டுவான் போல
 
Top Bottom