• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தங்கச்சிலை போல் வந்து மனதை…! 9

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
தங்கச்சிலை போல் வந்து மனதை…! 9

Woodaku வின் ப்ளாக்குகளை சிறிதும் கவனமின்றி அனிச்சையாக நகர்த்திய மேதாவின் சிந்தனை முழுவதும் வைரவனும் அவனது வீடும்தான் இருந்தது.

ஆயா கூட அவள் வந்ததில் இருந்து ‘திரும்பவும் கடைல ஏதாவது பிரச்சனையா?’ என இரண்டு, மூன்று முறை கேட்டு விட்டார்.

சனிக்கிழமை என்பதால் ஸ்வர்ணலதா, ஜீவா இருவருமே வீட்டில் இருக்க, மேதா தணிகைநாதனைப் பார்த்த பின்புதான் அவரது வீடும் அதுதானே என முன்பின்னாக யோசித்தாள்.

கதவைத் திறந்த ஜீவாவை எங்கோ பார்த்ததுபோல் இருக்க, அவனோ வெகு நாள் பழகியவன் போல் புருவம் உயர்த்திச் சிரித்தபடி “வாங்க” என்று வரவேற்றான்.

“உள்ள வா, வழிய விட்றா ஜீவா” என்ற வைரவனுடன் அந்தச் சிறிய முன் கூடத்தைக் கடந்து முற்றத்துக்குள் நுழைந்தாள்.

மேதாலக்ஷ்மிக்கு காரைக்குடி வீடுகள் புதிதல்ல. ஆனால், பெரிய வீடு குட்டி போட்டது போல் இருந்த வைரவனின் வீட்டை வியப்பாகப் பார்த்தாள்.

வள்ளியம்மை கட்டிலிலும், தணிகைநாதன் தரையில் பாய் விரித்தும் மதிய உறக்கத்தில் இருக்க, மஞ்சள் நிற சார்ட்டில் எதையோ வரைந்து கொண்டிருந்த லதாவை அடையாளம் கண்ட மேதா “ஹாய்” என்றாள்.

தங்கையிடம் “செல்லி, இவங்களை பின்பக்கம் கூட்டிட்டு போ. என்ன வேணும்னு கேளு” என்ற வைரவன் மேதாவிடம் போகச் சொல்லி ஜாடை செய்தான்.

ரணகளத்துலயும் கிளுகிளுப்பாக மேதா “இதான் செல்லியா” என அவனிடம் முணுமுணுத்தபடி கடந்து சென்றாள்.

வைரவன் சிரிப்பை அடக்க, எதிரில் நின்ற ஜீவா, கேள்வியாக “மனசுக்குள் மத்தாப்பு?”

“ஆமாண்டா, தீபாவளி ஸ்பெஷல்” என்றபடி சமையலறைக்குள் சென்று கைகளைக் கழுவிய வைரவன், காஃபி மேக்கரில் டிகாக்ஷன் போட்டு, பாலை அடுப்பில் வைத்தான்.

வைரவனுக்கு இன்டன்ட் காபி பிடிக்காது. ஆனால், பில்டரில் சரியாக டிகாக்ஷன் போட வராததால், மீனாக்ஷியின் உபயம் காஃபி மேக்கர்.

இவர்களது அரவத்தில் வள்ளியம்மை முழித்திருந்தார்.

உள்ளே வந்த லதா “அண்ணா, எனக்கும் காஃபி”

“தரேன், அவங்க எங்க?”

“அந்த அக்கா அம்மா கூட இருக்காங்க”

ஜீவா “அக்காவா…” என்று இழுக்க, வைரவன் “செல்லி, அம்மா காஃபி குடிக்கறாங்களான்னு கேளு” என்றவன், லதா சென்றதும் “ஜீவா, எதையாவது உளறாத, அந்தப் பொண்ணு காதுல விழுந்து வைக்கப் போகுது” என எச்சரித்தான்.

“இப்ப நான் சொல்றது உனக்கு பிரச்சனை இல்ல, அந்தப் பொண்ணு காதுல விழறதுதான் பிரச்சனை, அப்படித்தானே?”

“ஜீவா…”

“காஃபிய ட்ரேல வெச்சுக் குடு. என்னைப் பையன் பார்க்க வந்ததா நெனச்சு கொண்டு போய் குடுக்கறேன்”

வைரவன் ஜீவாவின் தொண்டைக் குழியில் இரண்டு விரல்களை வைத்து அழுத்த, இருமிக்கொண்டே கண்ணில் நீர்வரச் சிரித்த ஜீவா,

“எந்தன் கழுத்து வரை உந்தன் காதல் வந்து இரு கண்விழி பிதுங்கி நின்றேன்” என்று பாடவும் வைரவன் பக்கெனச் சிரித்துவிட்டான்.

“நீ இந்தக் காஃபிய எடுத்துட்டுப் போய் அவ கால்லயே வேணாலும் விழு, இப்ப ஜருகண்டீ”

ஜீவா காஃபியுடனும் வைரவன் ஒரு தட்டில் சீப்பு சீடையுடனும் வந்தனர். லதா தணிகை நாதனை எழுப்பினாள்.

அவர்களது மதிய நேர அமைதி தன்னால் கலைக்கப்பட்ட சங்கடத்துடன் மேதா “அங்கிளை ஏன் எழுப்பறீங்க?” என்றாள்.

எழுந்து அமர்ந்த தணிகைநாதன் “வாம்மா மேதா, வைரவா, எதுவும் பிரச்சனை இல்லையே?”

“சும்மாதாம்ப்பா”

தணிகைநாதன் “எம்மா, இதான் நம்ம சிவா மகமிண்டியோட தங்கச்சி. பேரு மேதாலட்சுமி” என மனைவிக்கு அறிமுகம் செய்ய, மகமிண்டியா? (மருமகளா) என திகைத்தவளிடம் ஜீவா காஃபி தம்ளரை நீட்டினான்.

கட்டிலின் அருகே இருந்த குட்டை ஸ்டூலில் அமர்ந்த வைரவன், காஃபியை ஆற்றி, படுத்த வாக்கிலேயே வள்ளியம்மைக்கு சிறிது சிறிதாகப் புகட்டினான்.

அதுவரை வள்ளியம்மை ஏதோ தூக்கம் கலைந்த அசதியில் படுத்தபடியே பேசுவதாக நினைத்த மேதாவிற்கு, இப்போதுதான் அவருக்கு வேறு ஏதோ கடுமையான உபாதை எனப் புரிந்தது.

எல்லோருமே வீட்டிற்குப் புதிதாக வந்திருக்கும் தனது இருப்பை இயல்பாக ஏற்றுப் பேசியபடி இருக்க, அவளது சிறு நகைகள் பிரபலமானது பற்றி கேட்டு வள்ளியம்மையும் லதாவும் பாராட்டினர்.

பத்து நிமிடங்களில் எழுந்த வைரவன் “நான் சாலைக்குக் கிளம்பறேன் மா” என்றவன் மேதாவைப் பார்த்துத் தலையசைத்தான்.

அதற்குள் கதவு தட்டப்பட, வள்ளியம்மைக்கு ஃபிஸியோதெரபி செய்யும் பெண் உள்ளே வந்தாள். அவளைப் பார்த்ததுமே, வள்ளியம்மை “வலிக்குது மா தேவி, இன்னைக்கு வேணாமே” என்றார்.

தணிகைநாதன் மனைவியிடம் “ஏம்மா, நீ என்ன சின்னப் புள்ளையா?” என,

வைரவன் “வள்ளி டார்லிங், சொல் பேச்சு கேக்கணும். ஜீவா, அமுக்கிப் புடி” என்றதில் மேதா புன்னகைத்தாள்.

வீட்டு வெளிக் கதவைத் திறக்காது, முகப்பில் நின்று மேதாவிடம் “நீ நேரா வீட்டுக்குப் போயிடு. மணியும் மூணரைக்கு மேல ஆச்சு. நாளைக்கு சன் டே. நீ திங்கள்கிழமை வந்தா போதும்” என, மேதா தயங்கினாள்.

வைரவன் “வண்டிக்காக யோசிக்கிறியா, நான் கொண்டு வந்து தர ஏற்பாடு செய்யறேன்”

மேதா “அதில்ல, நான் சொல்லாம பாதில போயிட்டா, அந்த தண்ணீர்மலை…”

மேதாவைப் பார்த்துத் தோளைக் குலுக்கியவன் “அவனை விடு, எப்படியும் ஏதாவது சொல்லத்தான் போறான்”

“ஏன், இப்ப என்ன?”

“நாம ரெண்டு பேரும் வந்து இறங்கினதை அவன் பார்த்துட்டான்”

“பெஸ்ட்டா போச்சு” - மேதா.

இரண்டு தெருக்கள் தள்ளி வந்து மேதாவை ஒரு ஆட்டோவில் ஏற்றிவிட்ட பின் வைரவன் சாலைக்குச் சென்றான். சொன்னபடியே டீ கடை பையன் அசோக்கின் மூலம் வண்டியை அனுப்பி வைத்தான்.

ராகவியும் சரி மேதாவும் சரி, விவரம் தெரிந்தபின் ஆணோ, பெண்ணோ மிக நெருங்கிய நண்பர்களைத் தவிர, பெரிதாய் யாரையும் வீடுவரை அழைத்ததில்லை. அதற்காக நட்புகளே இல்லை என்று அர்த்தமில்லை.

அப்படி அழைக்காததற்கு பாலாவும் ஒரு முக்கிய காரணம். அது பாலாவின் நிலையால் வந்த தாழ்வு மனப்பான்மை இல்லை. பரிதாபமான பார்வைகள், அனுதாபம் நிறைந்த விசாரணைகளோடு, சிலர் விளையாட்டாய் பாலாவின் இயலாமையை சீண்டி, கோபத்தைத் தூண்டி விடுவதையும் தவிர்க்கத்தான்.

இதையும் மீறி ஒரு நெருங்கிய நட்பு வட்டம் உண்டுதான். அதில் ஆண்களும் உண்டு. அவர்களும் மேதாவின் வீட்டுக்கு வந்திருக்கின்றனர், இவளும் போய் இருக்கிறாள்தான்.

ஆனாலும் வீட்டாரின் கண்களில் ‘இவன் அல்லது இவள் இப்போது ஏன் வந்திருக்கிறாள்(ன்), இவர்களுக்குள் என்ன?’ என்பது போன்ற கேள்விகளும் குறைந்தபட்ச விசாரணையும் இல்லாமல் இருக்காது. ஏன், அம்மா நளினியுமே அப்படித்தானே?

ஆனால், என்னதான் கடையில் வேலை செய்பவள், ராகவியின் தங்கை, என்ன உறவென்று மேதாவுக்குத் தெரியாவிட்டாலும் ஏதோ உறவு என காரணங்கள் நூறு இருப்பினும், வைரவன் வீட்டினர் அவளை வரவேற்றுப் பேசிய இயல்பு மேதாவுக்கு வியப்பாக இருந்தது.

இவள் வந்த காரணம் தெரிந்தும், சங்கடப்படுத்தாத அவர்களது தன்மை கவர்ந்தது. அந்த ஜீவா மட்டும்தான் கொஞ்சமே கொஞ்சம் குறுகுறுப்பாக பார்த்ததுபோல் இருந்தது.

இந்த வைரவன்! எத்தனை இயல்பாய் வேலை செய்கிறான், அம்மாவை கவனித்துக் கொள்கிறான். ஜீவா இன்ஜினீயரிங் படிக்கிறானாம். லதாவுக்கு வைரவனும் ஜீவாவுமே பாடம் சொல்லித் தருவார்களாம். அவளே சொன்னது.

வைரவனின் படிப்பைப் பற்றி எண்ணும்போதே, வைரவன் ஷர்மியின் அண்ணனுடைய காலேஜ்மேட் என்றது நினைவுக்கு வந்தது.
பிறகு ஏன் இந்த நகைக்கடை வேலை?

வைரவனின் வீட்டுக்குப் போனதை ஆயாவிடம் சொன்னாளே தவிர, அவனைப் பற்றிய கேள்விகளைத் தன்னோடே வைத்துக்கொண்டாள். ஏனோ, அவனைப் பற்றி யாரிடமும் கேட்கத் தோன்றவில்லை.

“மேதா, சாப்பிட வா” என்ற ஆயாவின் அழைப்பில் எழுந்து சென்றாள்.

**********************

“என்னண்ணா, சனிக்கிழமை நைட்டும் சாப்பாடுதானா?”

“லதா குட்டீ நான் கேக்க நெனச்சேன், நீயே கேட்டுட்ட. ஒரு நூடுல்ஸ், இட்லி, முறுகலா ரவா தோசை, அட்லீஸ்ட் ஒரு உப்புமா…” என இழுத்த ஜீவாவுக்கு லதா ஹை - பைவ் கொடுத்தாள்.

“செல்லி, நாளைல இருந்து உன்னோட அண்ணன் மாஸ்டர் செஃப் ஜீவா கிட்ட நைட்டுக்கு என்ன வேணும்னு சொல்லிடு. செஞ்சு தருவாரு” - வைரவன்.

“யூ நோ லதாக்குட்டீ, நம்மூர் வெயிலுக்கு நைட் மோர் சாதம்தான் சாப்பிடணும்னு சாதமலை சித்தர் சொல்லி இருக்கார்” - ஜீவா.

வள்ளியம்மை “சாதமலை சித்தர் யாருடா?” என, எல்லோரும் சிரித்தனர்.

வைரவன் “செல்லி, இன்னைக்கு டயமில்லடா. இப்ப சாப்பிடு, ஐஸ்க்ரீம் வாங்கலாம்”

ஜீவாவும் லதாவுமே போய் ஐஸ்க்ரீம் வாங்கி வந்தனர்.
மழை பெய்ததில் மொட்டை மாடிக்குப் போக முடியாது அறைக்குள்ளேயே இருந்தனர்.

ஜீவா ஏதோ கேட்க, வைரவன் எங்கோ சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.

‘இது சரிவராது, என் பொறுப்பு, கடமை எல்லாம் வேற’ என தன் எண்ணங்களுக்குக் கூடத் தடை போடுபவனால், இன்று தன் வீட்டில், தனக்கு நெருக்கமானவர்களுக்கு நடுவே அமர்ந்து மேதா பேசியதை நினைக்க நினைக்க, ஜீவா சொன்னதுபோல், மனதெல்லாம்
மத்தாப்பூதான். இதில் அக்கா மீனாக்ஷி இல்லையே என்ற குறை வேறு.

மேதாவிடம் எல்லோரும் இயல்பாக இருக்க, மனதின் பரபரப்பை வெளிக்காட்டாது இருப்பது வைரவனுக்குதான் கடினமாக இருந்தது.

ஜீவா மிக அருகில் வந்து “வைரவா“ என அவனது வலது தோளில் கையை வைக்க, ஷாக் அடித்தது போல் பட்டென உதறினான் வைரவன்.

ஜீவா “ஸாரிடா, நான் பேசறதே காதுல விழாம இருந்தியா, அதான் தொட்டேன். பயந்துட்டியா?”

“ம்… ம்ஹும், ஆமா. அதைவிடு, நீ என்ன சொல்ல வந்த?” என ஜீவாவிடம் கவனமானான்.

சிறிது நேரம் இருவரும் ஏதேதோ பேசினர். விளக்கை அணைத்துப் படுத்துக் கண்களை மூடிய வைரவன் தன் கைகளைக் கட்டியபடி வலது கையில் இருந்த வளையத்தை தன் இடக்கையால் மூடிக்கொண்டான்.

‘ஆத்தாடீ, தப்பிச்சேன். இது மட்டும் ஜீவாவுக்குத் தெரிஞ்சுது, அவ்ளோதான். ஓட்டியே சாகடிப்பான்’

வைரவனுக்கு சின்னத்தம்பி, அலைபாயுதே என சினிமாவில் தாலியை மறைத்துக்கொண்டு இயல்பாக சுற்றும் ஹீரோயின்களின் நினைவு.

‘எப்படிதான் தைரியமா இருந்தாங்களோ? ஆனா, பொம்பளைங்களால ஈஸியா அவங்க ட்ரெஸ்ஸுக்குள்ள தாலிய ஒளிச்சு வைக்க முடியும். இங்க என்னடான்னா,
வீட்டு வேலை செய்யும்போது கூட சட்டைய அவுக்க முடியாம வேர்த்து வழியுது. அம்மா நேத்து கேக்கவே செஞ்சாங்க. அவ பாட்டு குடுத்துட்டுப் போய்ட்டா. எனக்குதான் அவஸ்தையா இருக்கு’

மேதா ‘உனக்குப் பிடிக்கலைன்னா நீயே கழட்டிக்கோ’ என்றாள்தான். அவனுக்குப் பிடிக்காமலா… பிடித்துதான், ரொம்பவே பிடித்துதான் இருக்கிறது. அதைக் கழட்ட மனம் இல்லாமல்தானே யாரும் பார்த்து விடாதபடி கவனமாக இருக்க மெனக்கெடுகிறான்?

இது வெளியில் தெரிந்து, கேள்விகளுக்குப் பதில் சொல்லும் சங்கடத்தைத் தவிர்க்க எண்ணினான், அதோடு அவள் உறவாக, சம்பந்தி வீட்டுப் பெண்ணாக வேறு இருக்க, இதில் மேதாவின் பெயரை இழுப்பதில் வைரவனுக்கு விருப்பமில்லை.

வயதிற்கேற்ப, மனம்போன போக்கில் போக முடியாது, ஆசையை அடக்கச் சொல்லும் தன் முதிர்ச்சி அவனுக்கே பிடிக்கவில்லை.

‘கிழட்டுப் பயலாடா நீ? அந்தப் பொண்ணுக்கு இருக்கற தைரியம் கூட உனக்கு இல்லை’

‘அவளுக்கென்ன, வசதியான வீட்டுப் பொண்ணு. நல்ல பையனா பார்த்துக் கட்டிக் கொடுப்பாங்க. என்னைக் கட்டிக்கிட்டா கடமையும் கவலையும்தான் மிஞ்சும்’

‘டேய் வைரவா, உன் குடும்பத்தை நீ அப்படிதான் நினைக்கிறியா’

‘ஐயய்யோ, சத்தியமா அப்டி இல்ல. இது என் பொறுப்பு. என்னோட சேர்ந்து அவளும் ஏன்…’

சடாரென எழுந்து அமர்ந்தவன், மடமடவெனத் தண்ணீரைக் குடித்துவிட்டுப் பிடிவாதமாகப் படுத்து உறங்கிப் போனான்.

********************

வைரவன் முந்தைய நாளின் சஞ்சலத்தைப் போக்க, தந்தையிடம் மட்டும் சொல்லிக்கொண்டு, அதிகாலையிலேயே புறப்பட்டு, தன் கல்புவைக் காண பிள்ளையார்பட்டிக்கு வந்து விட்டான்.

நடை திறக்கவே இன்னும் இருபது நிமிடங்களுக்கு மேல் இருந்தது. புலர்ந்தும் புலராத அந்தக் காலை வேளையில், மழையின் ஈரப்பதமும் காற்றின் குளிர்ச்சியும் விரவிக் கிடக்க, வைரவன் குளத்தின் மீதும் கோபுரத்தின் மீதும் பறக்கும் புள்ளினங்களைப் பார்த்தபடி நின்றிருந்தான்.

நடை திறக்கவும் முதல் ஆளாக உள்ளே சென்றவனுக்கு ஆறடி உயர தேசி விநாயகரைப் பார்த்ததுமே மனம் லேசானது போன்ற உணர்வு. ஒரு தூணருகில் அமர்ந்தபடி அமைதியாக அவரைப் பார்த்திருந்தான்.

ஹாஸ்டலுக்குப் போகும் முன்பும், படிப்பைத் துண்டிக்க முடிவு செய்ததும், அதற்கு முன்னும் பின்னும் வேறு சில சந்தர்ப்பங்களிலும் இதே போல்தான் வந்து அமர்ந்திருந்தான்.

அப்போதெல்லாம் கூட இல்லாத ஏக்கமும் அவஸ்தையும் இப்போது உள்ளுக்குள் பரவியது.

‘கல்பு, ப்ளீஸ். என்னை, என் புத்தியை நீதான் தெளிய வைக்கணும். என்னை நினைச்சா எனக்கே பயமா இருக்கு. நான் நார்மலா இருக்கேனா இல்ல, நான் இப்படி இருக்கறதுதான் நார்மலா… ரெண்டுமே புரியல. பாத்து செய் கல்பு’

தன் பக்தனின் விக்னத்தைத் தீர்க்கக் காத்திருந்த கற்பகக் களிறு ஒளி வீசிச் சிரித்தது.

ஒரு மணி நேரத்துக்கு மேல் அமர்ந்திருந்தவன், கூட்டம் அதிகரிக்கவும் எழுந்து கார்த்தியாயனி, நாகலிங்கஸ்வாமி, பசுபதீஸ்வரர் என நிதானமாகச் தரிசித்துவிட்டு, மீண்டும் பிள்ளையாரை கண்களில் நிரப்பிக்கொண்டவனின் மொபைல் அதிர்ந்தது.

கோவிலை விட்டு வெளியில் வருவதற்குள் நாலைந்து முறை அடித்து ஓய, எடுத்துப் பார்க்க, அழைத்தது சிவானந்தன். மணி பார்க்க எட்டு.

கால் செய்ய, சிவானந்தன் ”வைரவா, ஐயா பேசணுமாம்”

“ம்”

“அரசு, சாரதி ஊர்ல இல்ல. தீபாவளிக்கு நாலே நாள்தான் இருக்கு. முருகனுக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்கு. ஞாயித்துக்கிழமை வேற. இன்னைக்கு கடைல கூட்டம் அதிகம் இருக்கும். ஆர்டர் குடுத்த நகைங்களும், புது ஸ்டாக்கும் சிவகங்கைக்குப் போகணும். நீ போய்ட்டு வந்துடு. காரை எடுத்துட்டுப் போ”

“சரிங்கய்யா”

பொதுவாக சாரதி, முருகப்பன், தண்ணீர்மலை மூவரும் மாற்றி மாற்றி சிவகங்கைக்குப் போவர். மொத்தத நகைகளும் செய்வது இங்கே சாலையில்தான். இதற்குமுன் இரண்டு, மூன்று தடவை வைரவன் போய் இருக்கிறான்.

பைக்கில் ஏற, மீண்டும் மொபைல் ஒலிக்க, மேதாலக்ஷ்மி.

‘சன் டே காலைல இந்நேரத்துக்கே இவ ஏன் கால் பண்றா?’

எடுத்தவுடன் “எனக்கு உங்க கிட்ட பேசணும்” என்றாள்.

“இப்ப என்ன, அந்தக் கிறுக்கன் ஃபோன் பண்ணி ஏதாவது சொன்னானா?”

“நான் என்ன சொல்றேன், நீங்க என்ன பேசறீங்க, என்ன மணி சத்தம் கேக்குது, எங்க இருக்கீங்க?”

‘ஊஃப்’

“நா இப்ப பிள்ளையார்பட்டி கோவில்ல இருக்கேன்”

“ம்…. என்னால இப்ப அங்க வரமுடியாதே. எங்க பாக்கலாம்?”

“இப்ப ஏன் பாக்கணும். நானே சிவகங்கை பிராஞ்சுக்கு போகப் போறேன்”

“நானும் வரவா, பேசிட்டே போகலாம்”

தன் மொபைலையும் கோவிலுக்குள் இருந்தவரையும் முறைத்த வைரவன் ‘வாட் ஈஸ் திஸ் கல்பு?’

“என்ன விளையாடறியா, உங்க பாட்டி கிட்ட என்ன சொல்லிட்டு வருவ?”

“அது என் கவலை. எதுல, எப்படி போகப்போறோம், எங்க வரணும்?”

“அதெல்லாம் வேணாம். யாராவது பார்த்தா…”

“பாத்தா என்ன, ஒரு சாதாரண ரோட் ட்ரிப்புக்கு போய் ஏன் இப்படி பயப்படறீங்க?”

“உனக்கு எல்லாமே சாதாரணம்தான். சரி, நான் சொன்னதும் கிளம்பி உங்க வீட்டு பக்கத்துல மெயின் ரோட்ல பூக்கடை, பேக்கரி எல்லாம் இருக்குல்ல, அங்க வா. நான் பிக்கப் பண்ணிக்கறேன்”

கோர்த்து விட்ட குஷியில் குலுங்கிச் சிரித்தார் வைரவனின் கல்பு.

*****************

வைரவன் வந்து சிவகங்கைக்குப் போவதைச் சொல்லும் முன்பே, தணிகைநாதனுக்குத் தெரிந்திருக்க, ஜீவாவை சமையலறைக்குள் அனுப்பி அவனுடன் குஸ்தி போட்டுக் கொண்டிருந்தார்.

தணிகைநாதன் இரண்டு விஷயங்களைத் தவிர எதை வேண்டுமானாலும் செய்வார். முதலாவது வள்ளியம்மையின் காலை நேரத் தேவைகளை வேறு யாரையும் செய்ய விடமாட்டார்.

இரண்டாவது சமையல் வேலை. செய்ய மாட்டார் என்பதைவிட, சமையல் அவருக்கு சுத்தமாக வராதபோது அவரும்தான் என்ன செய்வார், பாவம்?

கற்றுக்கொள்ள வைரவனுக்கு இருந்த பொறுமை அவருக்கு இல்லை. அந்த நேரத்தில் அவருக்கு இருந்த அழுத்தத்தில், அவரது உடல்நிலை சீராக இருந்ததே பெரிய விஷயம் என்று வைரவன் நினைக்காத நாளில்லை.

“வைரவா, சீக்கிரம் புறப்படுடா, மணியாகுது”

“முதல்ல கடை திறக்கட்டும்ப்பா”

“என்னடா ஜீவா செய்யுற?” என்றபடி அடுக்களைக்குள் சென்றான். அங்கே லதா தேங்காய் துருவிக் கொண்டிருந்தாள்.
இன்றைக்கெனப் பார்த்து மாவும் இல்லாததில், ஜீவா வியர்த்து வழிய எதையோ கிண்டிக் கொண்டிருந்தான்.

வைரவன் “கஞ்சியாடா, தொட்டுக்க இஞ்சித் தொவையல் அரைக்கட்டுமா?” என, லதா புரையேறுமளவு சிரித்தாள்.

ஜீவா இருவரையும் முறைக்கும் மும்முரத்தில் கையில் இருந்த கரண்டியை பாத்திரத்தில் போட, அது கஞ்சி மூழ்கிக் கரண்டியானது. அதை எடுக்கப்போய் கையை சுட்டுக் கொண்டவன் “ஆ…” என்று கத்தினான்.

“பழுவேட்டரையருக்கு அப்புறம் உனக்குதாண்ணா அதிக விழுப்புண்” - லதா.

“அது யாரு?”

“ம்… சரத்குமார்” என்ற வைரவன், வேறு நீளமான கரண்டியால் கிளற, ரவை கஞ்சியாகவும் ஆங்காங்கே சிறிய, பெரிய கட்டிகளாகவும் சளக் புளக்கெனக் கொதித்தது.

“என்னடா இது?”

லதா “அப்பாவின் ஆணை, நேயர் விருப்பம், கட்டளை, சாஸனம் - ரவா பொங்கல்”

“ஆண்டவரே, எம்மை ரட்சியும்” என்ற வைரவன் அடுப்பை அணைத்து விட்டான்.

“ஏன்டா அணைச்ச, இன்னும் அது ஆகலையே”

“அது ஆகாது. வெறும் ரவால கோந்து செஞ்சது போதும். நீ வெளிய வா. செல்லி, தேங்காயை ஃப்ரிட்ஜ்ல தூக்கி வெச்சிட்டு நீயும் வா”

லதா “அப்ப டிஃபன்?”

“ஜீவா, நீ போய் எல்லாருக்கும் அம்பாள் ஆச்சி கடைல இருந்து டிஃபன் வாங்கிட்டு வா. எனக்கு நேரமாகுது”

வைரவன் கிளம்புகையில், லதா “அண்ணா, மதியத்துக்கு?”

தணிகைநாதன் “நான்தான் இருக்கேன்ல, பார்த்துக்க மாட்டேனா?” என, அங்கே குபீர் சிரிப்பு வெடித்தது.

தீபாவளி நேரம் என்பதால், வழக்கத்தை விட அதிக மதிப்புள்ள நகைகள் இருக்கவே, வைரவன் கவனமாக லிஸ்ட் செய்து, குறித்துக் கொண்டு, கிளம்பினான்.

சொன்னபடி சொன்ன நேரத்தில், இடத்தில் காத்திருந்த மேதா, காரில் ஏறியதுமே “ஒய் சிவகங்கை?”

“நகையை டெலிவர் செய்ய”

சுற்றிலும் பார்த்தவள் “எங்க?”

“எல்லாம் பத்திரமா இருக்கு” என்றவன், போக்குவரத்தில் கவனம் செலுத்தினான்.

பாதி தூரத்தைக் கடந்திருக்க, வைரவன் “என்னவோ பேசணும்ன?”

“...”

“என்னோட மௌன ஊர்வலம் வரணும்னு வேண்டுதலா?” என்ற வைரவனை முழுதாகத் திரும்பிப் பார்த்தாள்.

கறுப்பு நிற பேன்ட்டும், பிரவுன் நிற கட்டம்போட்ட சட்டையும் அணிந்திருந்தான். இன் கூட செய்யவில்லை.

“என்ன?”

“உங்கம்மாக்கு என்ன பிரச்சனை?”

“...”

“ஜீவா ஏன் உங்கம்மா, அப்பாவை பெரியம்மா, பெரியப்பான்னு சொல்றாரு?”

“...”

“உங்களுக்கும் சக்கரை அய்யா வீட்டுக்கும் என்ன உறவு?”

“ஏன், உங்கக்கா எதுவும் சொல்லலையா?”

“நான் கேட்கல”

“உங்கப்பா, அம்மா”

“அப்பா உங்களை அக்கா வீட்டுக்கு ஏதோ உறவு, அவ கல்யாணத்துல பார்த்திருக்கேன்னு மட்டும்தான் சொன்னார்”

“சிறப்பு. இப்ப இதை தெரிஞ்சுக்கிட்டு நீ என்ன செய்யப் போற?”

மேதா “நேத்து உங்க வீட்டுக்கு வந்து போன அப்புறம், நான் இதைக் கேப்பேன்னு உங்களுக்குத் தெரியாதா?” என்றதில் வைரவனுக்குதான் அல்லு விட்டது.

‘கட்டின பொண்டாட்டி கூட இத்தனை கான்ஃபிடன்டா (உறுதியா) பேச மாட்டா. நேரம்டா வைரவா’

சிலபல நிமிட அமைதியான பயணத்திற்குப் பின் வைரவனே “இப்ப என்ன, இன்னொரு கால் மணில சிவகங்கை வந்துடும். திரும்ப வரும்போது என் திவ்ய சரித்திரத்தைச் சொல்றேன், போதுமா?”

அதுவரை மங்கி இருந்த மேதா விளக்கு பிரகாசமாக எரியத் தொடங்கவும், வைரவன் உதட்டை மடித்து சிரிப்பை அடக்க, மடிந்த உதடுகளை விரிப்பது போல் விரல்களை அவனது முகத்துக்கு வெகு அருகில் கொண்டு வந்து “நல்லாவே சிரிச்சுக்கோங்க, எனக்கு ஒன்னுமில்ல” என்றதில், வைரவனின் கவனம் சிதற, பின்னால் வந்த கார் காரன் திட்டிவிட்டுச் சென்றான்.

காரை ஓரங்கட்டி நிறுத்தி “ஏய், உனக்கென்ன கிறுக்கா?” என வள்ளென விழுந்தான்.

“நான் ஒழுங்காதான் இருந்தேன். இந்த நாலஞ்சு மாசமாத்தான் இப்டி சுத்தறேன்” என அவனுக்குக் கேட்குமாறு தெளிவாக முணுமுணுத்தாள்.

“நீ சொன்னேன்னு உன்னைக் கூட்டிட்டு வந்தேன் பாரு, நான்தான் கிறுக்கு”

மேதா “ஆத்துப்பாலத்துக்கு வா, புள்ளையார் கோவிலுக்கு வான்னு நானா கூப்பிட்டேன்?”

அவளை அவன் அழைத்ததாகச் சொல்லவும் வைரவனின் கோபம் எகிறிவிட “யார் கிட்ட பேசற, அவன் திட்டினான், இவன் அடிச்சான்னு புகார் சொல்லக் கூப்பிட்டது நீயா நானா?”

“...”

“உனக்கெல்லாம் அந்தத் தண்ணீர்மலை மாதிரி ஆள்தான் சரி”

வைரவன் அவள் ஏதோ பொய் புகார் சொன்னது போல, அழுமூஞ்சி ரேஞ்சுக்குப் பேசவும், கோபத்தில் எதுவும் பேசாது, வாயை இறுக மூடிக்கொண்ட மேதா, கார் சிவகங்கை டவுனுக்குள் பிரவேசித்ததும் “ஸாரி, இனிமே கூப்பிட மாட்டேன். என்னை இங்கேயே இறக்கி விடுங்க. நான் பஸ்ல போய்க்கறேன்” என்றாள்.

மேதா சொன்னதை பொருட்படுத்தாது, காரை சிவகங்கையில் இருந்த அழகுநாச்சி ஆபரண மாளிகை வாயிலில் போய் நிறுத்தியவன், “என்னால பாதில பொறுப்பை விட முடியாது. நீ இப்படியே திரும்பி போகப் போறேன்னா, அது உன் விருப்பம். நானே டாக்ஸி புடிச்சுத் தரேன். பத்திரமா வீட்டுக்கு போய்ட்டேன்னு மெஸேஜ் பண்ணு. Let it be the last one. Bye”

ஸீட் பெல்ட்டைக் கழற்றி, ஸீட்டை பின்னே தள்ளி, அதன் கீழே இருந்த லெதர் பையை எடுத்துக்கொண்டு இறங்கி, மேதாவின் பக்கம் வந்து அவளைக் கீழே இறங்கச் சொல்லி சைகை செய்தான்.

அவள் இறங்கியதும் அவளது இருக்கையின் கீழிருந்தும் ஒரு பையை எடுத்துக் கொண்டு, காரைப் பூட்டி, கடையை நோக்கி நடக்க யத்தனிக்க,

மேதா “எனக்கு டாக்ஸி” என, வைரவன் வந்த ஆத்திரத்தில் விடுவிடுவென கடைக்குள் சென்று விட்டான்.

தன்னை நிதானித்துக்கொண்டு கடைக்குள் நுழைந்தவளை ஒரு சிப்பந்தி, ஃப்ளோர் மேனேஜர் போல, “வணக்கம்மா, இந்தப் பக்கம்” என முதல் மாடியில் இருந்த ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றார்.

உள்ளே அந்தக் கிளையின் மேனேஜரும், நிர்வாகியும், பொறுப்பாளரும் இருந்தனர். இதில் அந்த பொறுப்பாளர், சக்கரை ஐயாவிற்கு சகோதரர் முறை. குழந்தைகள் இல்லை. அவரும் மனைவியும்தான். பேங்க் வேலையை விட்டுவிட்டுக் கடையை கவனித்துக் கொள்கிறார்.

மேதா வந்ததும் அருகில் இருந்த நாற்காலியில் அமரச்சொல்லி கை காட்டிய வைரவன், இரண்டு பைகளில் ஒன்றை மேதாவிடம் கொடுத்தான்.

மற்றொன்றைத் திறந்து, சைஸ் வாரியான ஜிப்லாக் கவர்களை ஒவ்வொன்றாக வெளியில் எடுத்து, தனக்கொரு லிஸ்ட்டும், பொறுப்பாளரிடம் ஒரு லிஸ்ட்டும் கொடுத்து செக் செய்ய, சிறிதும், பெரிதுமாக தங்க நகைகள் வந்து கொண்டே இருந்தன.

மேதாவிடமிருந்த பையில் வைர அட்டிகை, இரண்டு பூச்சரம், கழுத்தணி, ரூபி நெக்லஸ் ஒன்று என இருந்தது.

அடுத்து எழுந்து நின்ற வைரவன், மேதாவைப் பார்த்து ஒரு நொடி தயங்கினாலும், தன் சட்டையை உயர்த்தி, இடுப்பைச் சுற்றிக் கட்டி இருந்த பட்டையான பெல்ட்டை அவிழ்த்து, அதற்கு வலிக்காத படி மேஜை மீது மல்லார்த்திப் போட்டான்.

அதில் ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டு லேயர் வெல்க்ரோவால் (Velcro) இறுக்கமாக ஒட்டி மூடப்பட்டிருந்தது. திறக்க, கைப் பையினுள் இருக்கும் உள் ஜிப்பைப் போல், சின்னச் சின்ன பர்ஸுகளாக இருந்தது.

அவை ஒவ்வொன்றிலும் வைரத் தோடுகள், மூக்குத்திகள், குறிப்பாக அதிக எண்ணிக்கையில் தலை தீபாவளி மாப்பிள்ளைகளுக்கான வைர மோதிரங்கள் என ஒவ்வொன்றாக வெளியில் எடுத்தான்.

மேதாவை அந்த நகைகளை விட, அந்த மல்டி பவுச் (Muti pouch) வைத்த பெல்ட் தான் மிகவும் ஈர்த்தது.

கூடவே ஏறக்குறைய ஆறு கோடி ரூபாய் பெறுமான நகையின் பொறுப்பைச் சுமந்து வந்தவனின் டென்ஷனும் கோபமும் புரிந்தது.

சாலையில் கவனம் சிதறி, ஏதாவது நடந்து, நாலு பேர் கூடி இருந்தால், எத்தனை பேருக்கு அவன் பதில் சொல்ல வேண்டி இருக்கும் என நினைத்துத் தன்னையே நொந்தாள்.

கணக்கை முடித்து, நகைகளை ஒப்படைத்து, வைரவன் சிவானந்தனுக்கும் சர்க்கரை ஐயாவிற்கும் தகவல் கொடுக்கும் நேரத்தில், இன்டர்காம் ஒலிக்க, எடுத்த நிர்வாகி “இன்னைக்குமா, இதோ வரேன்” என்று எழுந்தார்.

பொறுப்பாளர் “ரமேஷ், யாரு?”

“அந்தப் பொண்ணு ஜோதியோட அம்மா, அப்பா, மாமனுங்க மூணு பேர்னு கூட்டமா வந்திருக்காங்க போல. அவங்க பேசக்கூடிய யாரும் வரலைன்னு சொன்னா கேட்க முடியாதுன்னு சத்தம் போடறாங்களாம். நீங்க பேசறீங்களா, சார்”

“சரி, இங்கேயே வரச்சொல்லுங்க, கஸ்டமர் எதிர்ல ரகளை வேணாம்”

வந்திருந்த காஃபியை வாயில் கவிழ்த்துக் கொண்ட வைரவன், மேதாவிடம் கண்ணைக் காட்ட, இருவரும் எழுந்து பொறப்பாளரிடம் விடை பெறுவதற்குள், திமுதிமுவென கூட்டமாக நுழைந்தவர்களின் நடுவே வெகு இளமையாக, எளிமையாக நின்றிருந்தாள் ஜோதி.

அவளுக்கு இன்றைக்கெல்லாம் பதினெட்டு வயது நிரம்பி இருந்தாலே சாமிக்கு சூடம் ஏத்த வேண்டும்.

உள்ளே வந்து கொண்டே “எங்க அந்தாளு? அவன் இந்தப்பக்கம் வரலைன்னா, எங்களுக்கு காரக்குடிக்கு வரத்தெரியாதா?”

“ஏதோ, எங்க வீட்டுப் பொண்ணு விவகாரமாச்சேன்னு பொறுமையா போனா, ஒளிஞ்சு விளையாடறானா அவன்?”

“கடைல வேலை செய்யற, ஏழைங்கன்னா சுலபமா ஏமாத்தலாம்னு நெனைச்சுக்கிட்டு இருக்கானா, ஒரே சீவா சீவிட்டு ஜெயிலுக்குப் போயிருவேன்”

வைரவன் ‘நாங்க வரோம்’ என ஜாடை காட்டி மேதாவுடன் வெளியே வந்தான்.

கார் நகர்ந்ததும் மேதா “யாரைத் தேடறாங்க?”

“எல்லாம் உன் வாட்டர்ஹில்லைத்தான்”

“அது என்ன உன் வாட்டர்ஹில், நீங்க எப்டி அப்படி சொல்லலாம்?”

“இப்ப நான் ரெடி, ஸ்டார்ட் மியூஸிக்”
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: தங்கச்சிலை போல் வந்து மனதை…! 9
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Joined
Jun 19, 2024
Messages
33
😍😍😍

கல்பு பிளீஸ் என்னை, என் புத்தியை நீதான் தெளிய வைக்கணும்.. பார்த்து செய் கல்பு..
கல்பு மைண்ட் வாய்ஸ்... செஞ்சுருவோம்...😜😜😜

images (5) (28).jpeg
 
Last edited:

Srinisaran

New member
Joined
Jun 21, 2024
Messages
5
மேதாவின் கேள்விக்கு அரசுவின் பதில் என்னவாயிருக்கும் 🤔🤔🤔
 
vijaya mahesh

New member
Joined
Jun 20, 2024
Messages
24
Super sister. எவளோ நகை கொண்டு போறான். ஜீவா ரொம்ப timing comedy பண்றான்.
 
9487494287

New member
Joined
Jul 18, 2024
Messages
2

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
கல்பு உனக்கு ஆசி வழங்கிட்டார். அடுத்து வைரவன் வரலாறு
 
VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
அவ மியூசிக் ஸ்டார்ட் பண்ணுறது இருக்கட்டும். நீ உன் வாழ்க்கை வரலாற்றை முன்னணி பின்னணியோடு சொல்ல ஆரம்பி
 
VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
😍😍😍

கல்பு பிளீஸ் என்னை, என் புத்தியை நீதான் தெளிய வைக்கணும்.. பார்த்து செய் கல்பு..
கல்பு மைண்ட் வாய்ஸ்... செஞ்சுருவோம்...😜😜😜

View attachment 3
படத்தைப் பார்த்ததும் பக்குனு சிரிச்சுட்டேன்🤣🤣
 
Subha Balaji

Member
Joined
Jun 30, 2024
Messages
71
பாவம் மேதா😭. தண்ணீர்மலையோட சூழ்ச்சில மாட்டிக்கபோறா
 
Top Bottom