• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தங்கச்சிலை போல் வந்து மனதை…! 8

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
தங்கச்சிலை போல் வந்து மனதை…! 8


மொ
ட்டை மாடியில் கைகள் இரண்டையும் கோர்த்துத் தலைக்கடியில் வைத்தபடி வானத்தைப் பார்த்துப் படுத்து அவ்வப்போது கண்களை மூடுவதும் திறப்பதுமாக இருந்த வைரவன் எழுந்து உட்கார்ந்தான்.

தன் லேப்டாப்பில் தீவிரமாக எதையோ செய்து கொண்டிருந்த ஜீவா “எனி ப்ராப்ளம் பிரதர்?”

“தூக்கம் வரலைடா ஜீவா”

“இப்ப என்ன?”

“என்ன, ஒன்னும் இல்ல”

“ரைட்டு, அப்ப சொல்லு”

“எதை?”

“உனக்குத் தூக்கம் வராத காரணத்தை”

“டேய்”

“சரி விடு, போய் ஒரு டீ அடிச்சிட்டு வரலாமா?”

வைரவனும் ஜீவாவும் இதுபோல் எப்போதாவது அதிசயமாய் போவதுண்டு. வைரவனுக்கும் போகலாம் என்று தோன்றியது.

“காசில்லடா, கீழதான் போகணும்”

ஜீவா தன் லேப்டாப் பையைத் துழாவியதில் நூற்றி இருபது ரூபாய் கிடைத்தது.

“ஸீ, ஐ’ம் ரிச் யூ நோ”

லேப்டாப்பை மூடி, பையில் போட்டு, அறைக்குள் வைத்து, இதற்கெனவே மாடியறையில் வைத்திருந்த பழைய செருப்புகளை எடுத்துக்கொண்டு, கதவை சார்த்திவிட்டு வெளிப்புறப் படிக்கட்டு வழியாக இறங்கிச் சென்றனர். மணி பத்தரை.

நல்ல அந்தஸ்தான ஏரியா என்பதால் டீ கடை எதுவும் அருகில் கிடையாது. அப்படியே இருந்தாலும் இந்நேரத்துக்கு திறந்திருக்காது. குறைந்தது மூன்று தெருக்கள் நடக்க வேண்டும்.

தெரு திரும்பி சிறிது நடக்க, எதிரில் ஏதோ கார் வந்தது. அருகில் வர வர வேகம் குறைய, ஒதுங்கி நடந்தவர்களின் பக்கத்தில் வந்ததும் நின்ற காரில் சிவானந்தன்.

“வைரவா, இந்நேரத்துல எங்கடா?”

“சும்மா நடக்கலாம்னு. கடை எடுத்து வெச்சிட்டு இப்பதான் வர்றியாண்ணா?”

“ம்… வேலை முடியல. தீபாவளி பக்கத்துல வருதுல்ல, அப்பாவும் தண்ணீர்மலையும் கடைலதான் இருக்காங்க. ராகவி கால் செய்யவும் நான் வந்துட்டேன்”

“சரிண்ணா, சீக்கிரம் போ. இந்த சமயத்துல அண்ணி தினமும் லேட்டா தூங்கறது நல்லது இல்லைண்ணா”

ஒரு நீண்ட நொடி வைரவனைப் பார்த்த சிவானந்தன் “சரிடா, பார்த்துப்போங்க. ஜீவா, இதானே ஃபைனல் இயர்?”

“ஆமாண்ணா”

சிவா காரை நகர்த்தவும், மேலே நடந்தனர்.

ஜீவா “சிவாண்ணா ஏன் டல்லா தெரியுறாரு?”

“என்னைக் கேட்டா?”

தூரத்தில் இருந்தே அன்பு டீ ஸ்டால் தெரிய, அந்நேரத்திலும் கூட்டமாக இருந்தது.

கைபேசியின் விளைவாக உலகமே வலையில் சிக்கி இருக்க, இளைத்தது என்னவோ இரவுகள்தான்.

தேநீரை வாங்கிக்கொண்டு சற்றுத் தள்ளி வந்து நின்றனர்.


தேநீரைப் பருகியபடி சுற்றி நின்றவர்களை வேடிக்கை பார்த்த ஜீவா, இலக்கற்ற பார்வையுடன் கிளாஸ் காலியான பிறகும் இரண்டு, மூன்று முறை வாய்க்கருகே கொண்டு சென்ற வைரவனைக் கண்டான்.

“வைரவா, இன்னொரு டீ சொல்லவா?”

“ஹா… இல்ல, வேணாம்”

திரும்பி நடக்கையில் “வைரவா, சாயங்காலம் திடீர்னு கிளம்பி எங்க போன, அதுவும் சன்டே அன்னிக்கு?”

“சும்மாதான், பக்கத்துல”

“போன இடத்துல ஏதோ ஒரு சம்பவம் நடந்திருக்கு போலவே… யாரோ மந்திரிச்சு விட்டா மாதிரி ஒரு மார்க்கமா இருக்க”

“...”

மௌனம் காத்த வைரவன் உண்மையிலேயே அப்படித்தான் உணர்ந்தான்.


மூன்று வாரங்கள் இருக்குமா, அன்று தண்ணீர்மலை நடந்துகொண்ட முறையில் தணிகைநாதனும், வைரவனும் பேசியதில் அப்போதைக்கு அமைதியானாலும் சமாதானமாகாத மேதா, இரவு எட்டு மணிபோல் அழைத்து “நான் ஊருக்குப் போறேன்” என்றாள்.

“சரி”

“திரும்ப வர மாட்டேன்”

“கடைக்கா, காரைக்குடிக்கா?” என்ற வைரவனின் கேள்வியில் வந்த ஆத்திரத்தில் அழைப்பைத் துண்டித்திருந்தாள். கோபம் சற்று அடங்கியதும் தானே அழைத்தாள்.

“நான் திரும்பி வரலைன்னா உங்களுக்கு சந்தோஷம், அப்படிதானே?”

“ஏய், என்ன உளர்ற, நான் அப்டி சொன்னேனா?”

மேதாவின் வினாவில் திகைத்தவன், தன் விடையில் விதிர்த்தான்.

‘கடவுளே, உளர்றது நானா, அவளா?”

மேதா “இப்ப நான் என்ன செய்யட்டும்?”

‘என்னைக் கேட்டா?’

“அரசு…”

‘இது வேற, இதை யாரு இவ கிட்ட சொன்னாங்களோ தெரியல’

“நாளைக்கு சாலைல பேசலாம் “

“நான் காலைல ஊருக்குப் போறேன்”

“சரி”

“நான் ஊருக்குப் போய்ட்டா உங்களுக்குப் பரவாயில்லையா?”

‘சவாரி குதிரை மாதிரி அங்கேயே வந்து நிக்கறாளே’

“பேசாம நான் என்ன சொல்லணும்னு நீயே சொல்லிடு”

“...”

“சரி, நாளைக்கு…”

‘அம்மா கூப்பிடறாங்க’ என்று சைகை செய்த லதாவிடம் வைரவன் “இதோ வரேன் செல்லி” என்றான்.

“செல்லி யாரு?” - மேதா.

“ஊருக்குப் போற உனக்கு ஏன் அது?”

“அப்ப என்னை போன்னு சொல்றீங்களா?”

வைரவனுக்கு முடியைப் பிய்த்துக்கொள்ளலாம் போலிருந்தது. இதுவரை யாரும் அவனை இப்படி மண்டை காய வைத்ததில்லை. ஜீவாவும், லதாவும் இதுபோல் ஜல்லியடித்தால் நன்றாகத் திட்டி, பத்தி விடுபவனின் இந்தப் பொறுமை அவனுக்கே வியப்புதான்.

“ஓகே, இப்ப அம்மா கூப்பிடறாங்க. நாளைக்கு…”

இடைமறித்து “அதே தேனாற்றங்கரை பிள்ளையார் கோவில்ல பாக்கலாமா?” என்றாள் வேகமாக.

“ம்… ம்”

மேதா “பதினோரு மணி, பீ ஷார்ப். குட் நைட்” என்று கட் செய்ய, பல்லைக் கடித்தவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

‘மோகினியாச்சி’

மறுநாள் காலையில் அன்று போலவே காத்திருந்தாள். அவள் வந்ததும் நசநசவென மழை வேறு தொடங்கியது. அன்றிருந்த ஈ, காக்கையைக் கூடக் காணோம்.

இன்று பிள்ளையார் இரண்டு விளக்குகளுடன், புத்தம்புது அருகம்புல் மாலை அணிந்து சற்றுப் பிரகாசமாகத் தெரிந்தார். மழையில் லேசாக நனைந்தபடி வந்த வைரவன் நேரே சென்று பிள்ளையாருக்குத் தோப்புக்கரணம் போட்டு, மேதாவிற்கு சற்றுத் தள்ளி அமர்ந்து கொண்டான்.

“என்ன?” - வைரவன்

“என்னன்னா நீங்கதானே வரச்சொன்னீங்க?”

மேதா போட்ட போட்டில் ‘நான் வரச் சொன்னேனா?’ என்று வைரவன் முறைக்கவும்,

“ஓகே, அதை விடுங்க, எனக்கு என்ன முடிவு சொல்லப் போறீங்க?”

“ஏய், என்ன விளையாடறியா, நான் ஏதோ தப்பு செஞ்சா மாதிரி பேசுற, நான் என்ன முடிவு சொல்லணும்?

அவளது கேள்வியின் அ(ன)ர்த்தம் அவளுக்குப் புரிகிறதா இல்லையா என்று வைரவன்தான் குழம்பினான்.

“நான் வேலையை விட்டு ஊருக்குப் போறதைப் பத்திக் கேட்டேன். நீங்க என்ன நினைச்சீங்க?”

“...”

“மிஸ்டர் கிங்”

வைரவன் உதடுகளை மடித்து, ஆள்காட்டி விரலால் பத்திரம் காட்ட, மேதாவின் முகம் சுருங்கிவிட, மழையை வேடிக்கை பார்த்தாள்.

மணியைப் பார்க்க பகல் பன்னிரெண்டு. தந்தை வீட்டுக்கு வந்து விடுவார். போய் சாப்பிட்டு சாலைக்குச் செல்ல வேண்டும்.

“ஹலோ கோவை எக்ஸ்பிரஸ், இங்க பாரு, நீ திரும்பிப் போக நினைச்சா அது உன் விருப்பம். ஆனா, ஓவ்வொரு தரமும் நீ போறது அந்தத் தண்ணீர்மலைக்கு பயந்து ஓடற மாதிரி இல்ல?”

“...”

“அவனை, அவன் பேச்சை இக்னோர் செய். நீ எதுக்கு இங்க வந்தியோ அந்த வேலையைப் பாரு”

“வேலை தந்தாதானே செய்ய முடியும்?”

மேதாவைக் கூர்ந்தவன் “ஒரு சீக்ரெட் சொல்லவா, நீ புதுசா எந்த டிஸைனும் பண்ண வேணாம். என்னால செய்ய முடியாததை நீ ஈஸியா செய்யலாம்”

“எப்படி?”

“நீயே டிஸைன் பண்ணின சிறு நகைங்க, அதாவது, தோடு, மூக்குத்தி, ஒத்தை வளையல் / பிரேஸ்லெட், சின்ன பென்டன்ட் இப்படி ஏதாவது… சிம்பிளா, சின்னதா, நடுத்தர மக்கள் வாங்கக் கூடியதா இருக்கணும். இருக்கா?”

“ம்… ஏழெட்டு டிஸைன் இருக்கு. ஆனா ஊர்ல இருக்கு. நீங்க குடுத்த மேல் காது தோடு டிஸைன் இல்ல, அதை கூட அம்மா செஞ்சு வெச்சிருக்காங்க” என்றவள் மொபைலில் சில சிறு நகைகளைக் காட்டினாள்.

“குட், இதையெல்லாம் ஒவ்வொண்ணா போட்டுக்கோ. ஆனா, எல்லாத்தையும் ஒரே நேரத்துல மாட்டிக்கக் கூடாது”

“நானா, நான் போட்டுக்கிட்டா என்னாகும்?

“ நான் வேணும்னாலும் டிஸைன் தரேன். ஆனா, நீதான் செலவு பண்ணி செஞ்சுக்கணும்”

“சரிங்க கஞ்சனாரே, ஆனா ஏன்னுதான் புரியலை”

“சொல்றதை செய், புரியும்”

“என்னை என்ன நடமாடும் மாடல்னு நெனச்சீங்களா?”

“ஜஸ்ட் ஒரு ஐடியாதான். மத்தபடி சாய்ஸ் ஈஸ் யுவர்ஸ்”

“இப்ப என்னை ஊருக்குப் போன்னு சொல்றீங்களா, வேணாம்னு சொல்றீங்களா?”

இப்போது நேராகவே முறைத்தவன் “எனக்கு கஞ்சி, களி ரெண்டுமே புடிக்காது”

“வாட்?”

“உன்னைக் கொலை செஞ்சுட்டு ஜெயிலுக்கு போனா அங்க அதானே கிடைக்கும்”

“%₹@#!?!”

“வரட்டா, கோவை போறதுன்னா சிவாண்ணா கிட்ட சொல்லிட்டுப் போ, இப்ப மழைக்கு முன்னால வீட்டுக்குப் போ”

*****************

நான்கு நாட்களாக வராது புதன்கிழமை காலை அழகுநாச்சி ஆபரண மாளிகைக்குள் நுழைந்தாள் மேதாலக்ஷ்மி.

U வடிவில் அடுக்கடுக்காய் ஃப்ளிப் லேயர் செய்து சீராக வெட்டப்பட்ட கூந்தலின் நுனியிலும், முன்னிருந்து பின்னாக, இரண்டு மூன்று கற்றையிலும் டிப் ஸ்டைலில் மயில் கழுத்து நீலத்தில் கலரிங் செய்திருந்தாள்.

அருகே வந்தவளின் மூக்கில் நல்ல மரகதக் கற்கள் இழைத்த மூக்கு வளையம் (நத்). கழுத்தில் இருப்பதே தெரியாத invisible செயினில் அதே எமரால்டில் எளிமையான பூ வடிவ பென்டன்ட், அவள் அணிந்திருந்த மஞ்சள் நிற சூரிதாரில் எடுப்பாகத் தெரிந்தது.

மேதாவின் சலித்த மணலின் நிறத்திற்கு அந்த எளிமையான நகைகள் அழகைக் கூட்டியது.

எதற்கும் அசராத பார்த்தசாரதியே அகலமாகப் புன்னகைக்க, தண்ணீர்மலையைச் சுற்றி நின்றவர்கள் உடைகளைத் தூக்கிப் பிடித்துக் கொண்டனர். அலட்சியம் செய்து, ஆர்டரிங் செக்ஷனில் போய் நின்றுகொண்டாள்.

இடையில் ஒரு நாள் காது குத்திக்கொள்கிறேன் என்று வைரவனிடம் தோடை கொடுத்தவளிடம், அவன் பெருமாள் ஆசாரியைக் கை காட்ட, கோபத்தில் மீண்டும் டப்பாவை உள்ளே வைத்தாள்.

தடுத்தவன் “அது அவரோட வேலை. ராசியான ஆளு. குத்தி விடுவார் போ” என்றான்.

ஒரு வாரத்துக்குள்ளாகவே, மேதா கடையில் இருந்த அந்த இரண்டு, மூன்று மணி நேரங்களிலேயே வைரவனின் ஐடியா சிறப்பாக வேலை செய்யத் தொடங்கி இருந்தது.

கடைக்கு வரும் டீன் ஏஜ், பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள் பலரும் மேதாவின் மிகச்சிறிய, ஆனால் பளீரென்ற நாலு கல் வைர மூக்குத்தி, நத்து எனப்படும் வளையம், காது தோடுகள், சின்னச் சின்ன டாலர்கள், அமேதிஸ்ட்டில் செய்த பிரேஸ்லெட் என , அவள் அணிந்திருந்ததைக் காட்டி, அதுபோல் வேண்டுமெனக் கேட்டே ஆர்டர் செய்தனர்.

நடுத்தரவயதுப் பெண்கள் அவற்றில் சிலவற்றை சற்றே பெரிய அளவில், எடையில், அவர்களுக்குப் பிடித்த கற்களை வைத்துச் செய்து தரக் கேட்டனர்.

இரண்டாவது வார இறுதியில் மேதா அணிந்திருந்த சிறிதான ஒற்றை வைரக்கல் மூக்குத்தியையும், அதில் தங்கத்தில் மூன்று ரூபி பதித்த தொங்கும் முத்துகளையும் இரண்டே நாள்களில் பதினைந்து பேருக்கு மேல் ஆர்டர் கொடுத்தனர்.

அந்த மாடல் பழசுதான். ஆனால், மிகச் சிறிய தபேலாவைப் போன்ற உருண்டையான வடிவில் செய்யப்பட்ட தங்கத்தில் ரூபி ஜ்வலித்தது. குறிப்பாக அதன் சிறிய அளவு , இளம்பெண்களிடையே பழைய ஃபேஷனை ட்ரெண்ட் செய்தது என்று கூடச் சொல்லலாம். சிலர் காதில் தொங்கட்டானாக மாட்டிக்கொள்ள ஏதுவாக அதையே ஜோடியாக செய்து தரச்சொன்னார்கள்.

இவ்வளவு ஏன், சிவானந்தன் ராகவிக்கே அதுபோல் ஒன்று செய்யச் சொன்னான்.

சனிக்கிழமையன்று கடைக்கு வந்த சர்க்கரை ஐயா, மேதாவை அழைத்து “என்ன பொண்ணே, சத்தமில்லாம சாதிச்சிட்ட போல” என்று பாராட்டினார்.

தினமும் சாலைக்கு வந்து வைரவனிடம் செய்தி வாசித்தாலும், சிறிய மாற்றங்களுடனான அவளது டிஸைன்கள் குறுகிய காலத்திலேயே அதற்கான அங்கீகாரத்தைப் பெறவும், மகிழ்ச்சியாக உணர்ந்தாள்.

ஞாயிறன்று பாலாவின் பிறந்தநாள் என்பதால், காலையிலேயே ஆயாவுடன் கொப்புடை வடிவம்மன் கோவிலுக்குப் போய்வந்தாள். பின் ஆயா கொடுத்த பலகாரங்களுடன் ராகவியைப் போய் பார்த்து வந்தாள். பெற்றோருக்கும் பாலாவுக்கும் ஆன்லைனில் ஒரு கேக் ஆர்டர் செய்தாள்.

பிற்பகல் மூன்று மணிக்கு “பிள்ளையார் கோவில், அஞ்சு மணி” என்று வைரவனுக்குத் தகவல் அனுப்பினாள். நீண்ட நேரம் ஆன்லைன் என்றும், டைப்பிங் என்றும் காட்டியவன், ஒருவழியாகக் கட்டை விரலை உயர்த்தினான்.

********************

தேனாற்றங்கரைப் பிள்ளையார் இப்போது மேதாவின் ஜிகிரி தோஸ்த் ஆகிவிட்டார். என்னவென்று புரியாத உணர்வில், எதற்கும் இருக்கட்டும் என்று “பிள்ளையாரப்பா, காப்பாத்து” என்று ஒரு அப்ளிகேஷனைப் போட்டு வைத்தாள்.

வைரவனின் பைக் சத்தம் கேட்டது. ஆம், இத்தனை நாட்களில் மேதாவிற்கு வைரவனின் பைக் சத்தம் பரிச்சயமாகித் தனித்து ஒலித்தது.

“எதுக்கு வரச்சொன்ன?” என்றபடி வந்தான்.

தொடர்ந்த மழையின் காரணமாக, தேனாற்றில் கூட நிதானமான நீர் வரத்து
இருந்ததை கோவில் கட்டையில் அமர்ந்தபடி மௌனமாக வேடிக்கை பார்த்தனர்.

தீடீரென தன் வலக் கையின் மேல்பகுதியில் இறுக்கமான தொடுகையை உணர்ந்து சட்டென்று திரும்பிய வைரவன் அதிர்ந்தான்.

மேதா அவனது முழங்கைக்கு மேல், வங்கி அணியும் இடத்தில் ஆர்ம்லெட் (Armlet) எனப்படும் வளையத்தை மாட்டிப் பொருத்திக் கொண்டிருந்தாள்.

“ஏய், என்னதிது?” என்று கைகளை உதறப்போகுமுன் க்ளிக் என பொருந்திய சத்தம் கேட்டது. பொருந்திய இடத்தில் சிறிதாக ஒரு இதயம் இருந்தது.
பார்த்தாலே நல்ல வெள்ளி எனத் தெரிந்தது.

கோபத்துடன் நிமிர்ந்தவன் “என்னது இது, உனக்கென்ன பைத்தியமா, யாராவது பார்த்தா நம்பள பத்தி என்ன நினைப்பாங்க?”

“பெரிய ஹீரோயின்னு நெனைப்போ?”

“நீ என்ன செய்யுறன்னு தெரிஞ்சுதான் செய்யறியா?

நீ சம்பாதிச்சா எவ்வளவு வேணாலும் செலவு செய்வியா? உங்க வீட்ல உன்னை எதுவும் கேக்க மாட்டாங்களா, தண்ணி தெளிச்சு விட்டாங்களா?”

“எங்க வீட்ல இது ஏதுடான்னு கேட்டா நான் என்ன சொல்லுவேன்?”


என்று படபடவெனப் பொரிந்தவன், அதை அவிழ்க்க முற்பட, இதைத்தான் எதிர்பார்த்தாள் எனினும், அவளே அவனுக்காக டிஸைன் செய்து, செய்து வாங்கி வந்ததை, அவன் என்னவென்று கூடப் பாராது திட்டத் தொடங்கியதில் மேதாவுக்கு வருத்தமாக இருந்தது.

வைரவன் வரையும்போது அவனிடம் காணப்படும் தீவிரம், சாதாரணமான, நீண்ட ஒல்லியான, கைகளும் புஜமும் அவன் வரைகையில் நரம்புகள் புடைக்க இறுகுவதை முதல்முறை பார்த்ததில் இருந்தே அவனை ரசித்தவள்…

இப்போது ஒரு டிஸைனராக, அவனிடம் அனுப்பி வைக்கப்படும் வாடிக்கையாளர்களுக்கு அவன் தரும் ஆலோசனைகள், சின்னச் சின்ன நகாசு வேலைகளில் அந்த நகையின் ‘லுக் (look)’ கையே மாற்றி விடுவது என வைரவனிடம் அவளை ஈர்க்கவும் கற்றுக்கொள்ளவும் நிறைய இருந்தது.

உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், ஒரு வருட வெளிநாட்டுப் படிப்பை விட, நமது பாரம்பரிய நகைகள், அவற்றின் நுணுக்கமான வேலைப்பாடு(intricate design), எந்த தரப்பு மக்கள் எது மாதிரியான நகைகளைத் தேர்ந்தெடுப்பர் என்பது போன்ற சின்னச் சின்ன விவரங்களைக் கூடக் அவன் கவனித்து, கணித்து வைத்திருப்பதில் அவன் சொல்லாமலே நிறைய தெரிந்துகொண்டாள்.

ஆசையும் ஆர்வமும் உந்த வைரவனுக்கு எதையாவது பரிசளிக்க வேண்டும் என்ற வேகத்தில் செய்தவளின் உற்சாகத்தில் வைரவன் தண்ணீர் ஊற்ற, பரிதாபமாகப் பார்த்தாள்.

“இந்த சோக சீன்லாம் இங்க வேணாம், இது டைட்டா இருக்கு, போட்டேல்ல, நீயே கழட்டு”


“...”

“என்ன?”

“ஒரு சின்ன கிஃப்ட். அதுக்கு ஏன் இவ்வளவு யோசிக்கிறீங்க? நான் குடுத்தா குடுத்ததுதான். உங்களுக்கு பிடிக்கலைன்னா, நீங்களே கழட்டிக்கோங்க. இன்னொண்ணு, எனக்கு நான்தான் குடுத்தேன்னு வெளில சொல்ல பயமோ, தயக்கமோ கிடையாது. யார் என்ன நினைச்சாலும் கவலையில்லை” என்றவள், அவன் அழைத்தும் நிற்காமல் வேகமாக வண்டியைக் கிளப்பிக்கொண்டு போயே போய்விட்டாள்.

வைரவன் அசையாது அமர்ந்திருந்தான்.
இருளும் மழையும் மருட்டியபடி இருக்க, குருக்கள் ஒருவர் வந்து பிள்ளையார் கோவிலின் மின்விளக்கைப் போட்டு, தீப ஆரத்தி காட்டினார். கும்பிடு போட்டு, அவர் தந்த விபூதியை வாங்கிப் பூசிக் கொண்டு வெளியே வந்தான்.

‘அவளே சும்மா ஒரு சாதாரண கிஃப்ட்டுனுதானே சொன்னா, அடங்குடா’

பைக்கில் அமர்ந்து தன் வலது கையில் இருந்த காப்பைத் திறக்க முயல, மெலிதான க்ளிக் சத்தத்துடன் மேலும் கீழுமாக இரண்டாகப் பிளந்த இதயத்தின் மேல் பகுதி, ஆங்கில எழுத்து M ஆகவும், கீழ் பகுதி V ஆகவும் இருக்க, இணைத்தால் க்ளிக் எனக் கச்சிதமாகப் பொருந்தியது.

‘சாதாரண கிஃப்டாடீ இது?’சின்ன ஹார்ட்டீன், அந்த M, V, குட்டி லாக், கேப் இருப்பதே தெரியாத அளவு ஸ்மூத்தான சீம்லெஸ்ஸான (seamless) டிஸைன் என அவனுக்கான மேதாவின் மெனக்கெடலும் அவளது மனமும் புரிந்தது.

‘இதைப் பார்த்தா கத்துவேன்னுதான் ஓடிட்டா, கேடி’

நீண்ட பெருமூச்சுடன் அந்த இதயத்தை ஒற்றை விரலால் வருடினான்.

தனது குடும்ப நிலமையும் அவளது அந்தஸ்தும், இருவரது வளர்ப்பும் சேர முடியாத இணை கோடுகள் என்று புரிந்து, அவளை விட்டு விலகவும் முடியாமல், விலக்கவும் விரும்பாமல் தன் ஆசைக்கும் பொறுப்புகளுக்கும் இடையே சிக்கித் தவித்தவனை மொத்தமாக சலனப்படுத்தி வீழ்த்தி இருந்தாள் மேதா.

‘கல்பு, ஏன்டா?’

*******************

ராகவியிடம் “பால் மட்டும் போதும்” என்றான் சிவானந்தன்.

அவனுக்காகக் கீழே இருந்த ஒரு அறையில் காத்திருந்தவள், பாலுடன் மெதுவே மாடியேற, மாமியார் தெய்வானை எட்டிப் பார்ப்பது தெரிந்தது. ராகவி நின்று பேச்சை வளர்க்க விரும்பாது மேலே வந்துவிட்டாள்.


வயிற்றுப் பிள்ளையின் பொருட்டுத் தன் கோபத்தை கட்டுக்குள் வைக்க முயன்றாலும், பத்துப் பதினைந்து நாட்களாக அது மிகக் கடினமான செயலாக இருக்கிறது.

மேதா வாரநாளில் திடீரென கோவை வந்திருப்பதாக அம்மா சொல்லவுமே, ராகவிக்கு மீண்டும் என்னவோ என்றுதான் தோன்றியது.

அதையே கணவனிடம் கேட்க “எங்கிட்ட சொல்லிட்டுதான் போனா” என்றதோடு நிறுத்திக்கொண்டான்.

தண்ணீர்மலை மேதாவைத் தான்தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிக்கை விட்டதுமே, சர்க்கரை ஐயா “வாயை மூட்றா, நீ இழுத்து வைக்கிற ஏழரைக்கெல்லாம் நாங்க வேணா சப்பைக்கட்டு கட்டலாம். நீ அந்தப் பொண்ணு கிட்டபோய் திரும்பவும் வம்பு வளர்த்து வெச்சதுல, அவ கடைக்கு வருவாளான்னே தெரியல”

“...”

“முருகா, கல்யாணம் விளையாட்டு கிடையாது. இவன் கேட்டதும் வாங்கித் தர்றதுக்கு அந்தப் பொண்ணு என்ன பைக்கா, காரா? சம்பந்தி வீட்டுப் பொண்ணு, அண்ணியோட தங்கச்சின்னு மரியாதையா இல்லாம, இவன் இப்படியே பேசிக்கிட்டு திரிஞ்சா நம்ம மானந்தான் போகும். இந்தப் பேச்சை, இங்கேயே, இப்பவே மறந்துடுங்க எல்லாரும். வீட்டுப் பொம்பளைங்களுக்குக் கூடத் தெரிய வேணாம்.


“சிவா, புள்ளைத்தாச்சி பொண்ணு கிட்டபோய் எதையாவது சொல்லி வைக்காத. புரியுதா?”

தண்ணீர்மலையிடம் “தம்பி, நேரம் வந்தா கல்யாணம் தன்னால நடக்கும், ஆத்திரப்படாம போய் வேலையைப் பாரு” என்று முடித்துவிட்டார்.

“ரூமுக்குள்ள தனியா போய் அப்படி என்ன பேசினீங்க?” என்று தெய்வானை கொடுத்த குடைச்சலில், முருகப்பன் நடந்ததைச் சொல்லிவிட்டார்.

தெய்வானையின் அண்ணன்கள் இருவரும் இரண்டு வருடங்களுக்கு முன்பே “உம்மகனோட போக்கே சரியில்ல” என்று எச்சரித்ததோடு, சிவானந்தனுக்குக் காதல் திருமணம் என்றதுமே “அது அவன் இஷ்டம். ஆனா, தயவுசெய்து உன் ரெண்டாவது புள்ளைக்குப் பொண்ணு கேட்டு வந்து எங்களை சங்கடப்படுத்தாத” என்றிருந்தனர்.

தெய்வானை நினைத்ததுபோல் பணக்காரர்கள் இல்லையெனினும் ராகவிக்கும் நன்றாகத்தான் சீர் செய்திருந்தனர். திருமணமும் சடங்குகளும் நன்றாகவே நடந்தது.

இப்போது மகனே அவளைத் திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லவும், செய்தால் என்ன, பெண் கொடுத்த இடம், நாம் கேட்டால் மறுக்கவா போகிறார்கள் என்ற எண்ணம் எழுந்ததில், மகன் இழுத்து வைத்த வம்பெல்லாம் தெய்வானைக்கு மறந்து போனது.

கற்பனையில் திருமணம் வரை சென்றவர், கணவரிடம் மனம் திறக்க, என்னதான் வெளியில் முட்டுக்குடுத்தாலும், முருகப்பனுக்கு மகனின் லட்சணம் தெரியாதா என்ன?

தந்தை சொன்னது ஒரு புறம் உறுத்தினாலும், மனைவி சொன்னதும் சரியென்று பட, தலையை ஆட்டி வைத்தார்.

மேதா திரும்பி வந்தது, அவள் வடிவமைத்த நகைகளைக் குறிப்பிட்டு வாடிக்கையாளர்கள் கேட்பது, சிவானந்தனே ராகவிக்கு அவள் டிஸைன் செய்த மூக்குத்தியை செய்யச் சொன்னதில், தெய்வானைக்கு மகனது ஆசையை நிறைவேற்றுவதே தன் தலையாய கடமை எனத் தோன்றி விட்டது.

சனிக்கிழமை இரவு உணவுக்குப் பின், சர்க்கரை ஐயா, பார்வதி ஆச்சியிடம் காட்டுவதற்கென,
மாதிரிக்காக மேதா கொடுத்த அவளது நகைகளை வீட்டுக்கு எடுத்து வர, அதிலிருந்து பேச்சைப் பிடித்துக்கொண்ட தெய்வானை,
“பரவாயில்லையே, நம்ம ராகவியோட தங்கச்சி. பேசாம நகை பத்தி இத்தனை தெரிஞ்ச பொண்ணை நம்ம வீட்டுக்கே மருமகளாக்கிட்டா நல்லா இருக்கும்ல, நீ என்ன சொல்ற ராகவி?” என சந்தர்ப்பத்தை வீணடிக்காது பிட்டைப் போட்டவர், மருமகளையும் கூட்டு சேர்க்க முயன்றார்.

ஆனால், ஆண்கள் அமைதி காக்க, அந்தப் பேச்சு வளர்வது ராகவிக்குப் பிடிக்காவிட்டாலும் ‘அதெல்லாம் எங்க அம்மா, அப்பாதான் முடிவு செய்வாங்க’ என்று சொல்லித் தப்பித்துக்கொள்ள முடியாத நிலையில் இருந்தாள்.

கேட்டால் ‘உன் கல்யாணத்தை முடிவு செஞ்சது யாரு’ என்ற கேள்வி வருமே?

நல்ல காலமாக பார்வதி ஆச்சி “அதை நாம குட்டித்தம்பிக்கு கல்யாணம் பண்ண பொண்ணைத் தேடும்போது பாக்கலாம். இப்பத்திலிருந்தே என்ன?” என்று ஒத்திப்போட்டார்.


விஷயம் தெரிந்ததில் இருந்து “என் தங்கை பத்தின விஷயத்தை எங்கிட்ட ஏன் சொல்லலை?” என்று சிவானந்தனிடம் பிணங்கிய ராகவிக்கு இன்னும் மேதா ஏன் கோவை சென்றாள் எனத் தெரியாது.

“உங்க தம்பி அவகிட்ட நடந்துக்கிட்ட முறைக்கு எந்த மூஞ்சிய வெச்சுக்கிட்டு உங்கம்மா பொண்ணு கேப்பாங்க. எங்க வீட்ல சம்மதிச்சாலும் நானே குறுக்க விழுந்து தடுப்பேன்”

“ராக்கம்மா, பாப்பாவை வெச்சிக்கிட்டு கோபப்படாதடீ. நீ அவசரப்பட்டு உங்க வீட்ல எதுவும் சொல்லி வைக்காத. அதுக்கு வைற ஒரு பஞ்சாயத்து வேணாம். நான் அம்மாகிட்ட பேசறேன்”

“நீங்கதானே…?”

“அடியே ராக்கு”

**********************

இந்த முறை தமிழ்நாடு முழுவதுமே மழை நன்றாகப் பெய்ய, காரைக்குடியிலும் வெளுத்து வாங்கியது. தீபாவளிக்கு சில நாட்களே இருக்க, கடையும் சாலையும் வெகு பிஸியாக இருந்தது.

மேதாலக்ஷ்மி சாதாரண நாட்களில் கடையிலிருந்து சாலைக்குச் செல்லும் முன் தேவையென்றால் மட்டுமே ஓய்வறையை உபயோகிப்பாள்.

சாலையில் இவளைத் தவிர ஆண்கள் மட்டுமே என்பதால், கழிப்பறை எங்கே என்பதே அவளுக்குத் தெரியாது. சென்ற முறை கோவை சென்றபோது வந்த மாதவிடாய், இப்போது வழக்கத்தை விட மூன்று,நான்கு நாட்கள் முன்னரே வரும்போல் திடீரென அடிவயிற்றைச் சுருட்டி இழுத்தது.

மழையும் பெய்யவே, ஓய்வறைக்குச் செல்ல எழுந்த உந்துதலைக் கட்டுப்படுத்திக்கொண்டு அமர்ந்திருந்தாள். நேரமாக ஆக, வலி கடுமையானது.

இரண்டரை மணி இருக்கும், செய்த நகைகளை எடைபோட்டு அதற்கான ரோஸ்நிற பேப்பர்களில் மடித்து ஜிப்லாக் கவர்களில் போட்டவள், வலி தாங்காது, சுவரில் சாய்ந்து கொண்டாள்.

எதிரே இருந்த பெருமாள் ஆசாரியிடம் பேசிக்கொண்டிருந்தவனிடம் , அவர் “வைரவா, புள்ளைக்கு என்னன்னு பாரு” என்றார்.

அருகில் வந்து குனிந்து கேட்க, மேதா “வாஷ் ரூம் போகணும்” என்றதைக் கேட்டவனுக்குத் தன்னை எதால் அடித்தால் தகும் என்றிருந்தது.

‘ச்சே, இந்த இடத்துல அவ வாஷ்ரூம்க்கு எங்க போவான்னு கூட இதுவரை நான் யோசிக்கல. ஐயோ, என்ன அவஸ்தையோ தெரியலையே. டேய் வைரவா, நீயெல்லாம் அம்மாவுக்கு செய்யறேன், அக்கா தங்கையைப் பாத்துக்கறேன்னு வெளில சொல்லிடாத. கேவலமா போயிடும்’

“வீ… வீட்டுக்குப் போயிடறியா?”

“ம்…”

மெதுவே எழுந்தவள், கவலையாகத் தன் பின்னே பார்த்தபடி நடக்க, வைரவன் “நத்திங், வா போகலாம்” என்றான்.

“உன்னால வண்டி ஓட்ட முடியுமா?”

“இங்க பக்கத்துல நல்ல ஹோட்டல் ஏதாவது இருக்கா?”

“சாலைல இருந்து எங்க வீடு பக்கம்தான், வரியா?” என்றான் பட்டென்று.

மேதா தயங்கவும் “உங்க அக்கா வீட்ல விடவா?”

“வேணாம்”

“அப்ப வா போகலாம்” என்றவன், பைக்கில் ஏறச்சொல்லி தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

வைரவனின் வீட்டு வாசலில் அவனுடன் பைக்கில் வந்து இறங்கிய மேதா மதிய உணவுக்குப் பின் கடைக்குச் செல்ல காரில் வெளியே வந்த தண்ணீர்மலையின் பார்வையில் பட்டாள்.
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: தங்கச்சிலை போல் வந்து மனதை…! 8
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

dharani

Member
Joined
Jul 6, 2024
Messages
26
சரியான ஆள் கண்ணில் தான் பட்டு இருக்காங்க...

யப்பா வைரவா உன் டிசைன் எல்லாம் கற்பனைக்கு கூட வர மாட்டுது எனக்கு
 

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
சரியான ஆள் கண்லதான் பட்டிருக்காங்க, நகைகள் டிசைன் லாம் சூப்பர்👌👌👌👌
 
Joined
Jun 19, 2024
Messages
33
😍😍😍

அவ பெரிய ஹீரோயினியான்னு எல்லாம் தெரியாது, ஆனா உனக்கான ஹீரோயினி அவ தான்...😒😒
"எங்க வீடு பக்கம் தான் வரியா?"🤗🤗

 
Joined
Jun 19, 2024
Messages
33
😍😍😍

மேதாவோட ஜிகிரி தோஸ்த் கல்ப்புக்கு ஒரு பாட்டு...😁😁

 

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
😍😍😍

அவ பெரிய ஹீரோயினியான்னு எல்லாம் தெரியாது, ஆனா உனக்கான ஹீரோயினி அவ தான்...😒😒
"எங்க வீடு பக்கம் தான் வரியா?"🤗🤗

💝💝💝
 
Joined
Jun 19, 2024
Messages
26
முழு எபிசோட்ல கடைசி வரிதான் மனசுக்கு திற்புதி வாட்டர்டாங் இருக்குடா உனக்கு
 
Top Bottom