• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தங்கச்சிலை போல் வந்து மனதை…! 7

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
தங்கச்சிலை போல் வந்து மனதை…! 7

மே
தாலக்ஷ்மி இன்னும் மூன்று நாட்களில் காரைக்குடிக்குக் கிளம்ப வேண்டும். வந்ததில் இருந்தே ஊருக்குத் திரும்பிச் செல்லவேண்டும் என புலம்பிய நளினியின் அம்மாவைத் தடுத்து வைத்திருக்க, இப்போது அவர்தான் அதிக உற்சாகத்துடன் இருந்தார்.

ராமநாதன் கூட “என்னக்கா நீ, யாரோ அசல் மாப்பிள்ளை மாதிரி ரொம்பத்தான் பண்ற. இங்க இருக்கறதுல உனக்கு என்ன கஷ்டம்? இன்னும் எத்தனை நாள் உன்னால அங்க தனியா இருக்க முடியும்?” எனக் கடிந்தார்.

கடந்த இரண்டு வாரங்களில் மேதா நிறைய ஷாப்பிங் செய்தாள்.

நளினி “என்னவோ கலெக்டர் உத்தியோகத்துக்கு போகப் போறவ மாதிரி எத்தனை ட்ரெஸ்ஸு? மூணு மாசம் முன்னாடிதானே எல்லாம் புதுசா வாங்கிட்டு போன. அதையே போட்டுக்கக் கூடாதா?”

“இங்க பாரு ராக்ஸுக்கு கூட மூணு ட்ரெஸ்ஸு வாங்கி இருக்கேன்”

“உங்க கடைல யூனிஃபார்ம்லாம் கிடையாதாடீ?”

“நான் டிஸைனர் மா. அதெல்லாம் குடுத்தா, அந்தப்பக்கமே போக மாட்டேன். பளபளன்னு புடவை வேற”

“இப்ப எதுக்குடீ இன்னோரு ஜீன்ஸ் வாங்கின?”

“போட்டுக்கதான். நீயும் வேணா ட்ரை பண்றியா?”

“உன்னை….”

ராமநாதன் “நல்லி, ஒரு தரம் போட்டுதான் காட்டேன். கண்குளிரப் பாக்கறேன்”

“டாடீ”


உடைகளைப் பெட்டியில் அமுக்க, உள்ளாடைகள் இருந்த பை வெளியே கிடக்க, நளினி “இதை முதல்ல உள்ள வை” என்று எடுத்துக் கொடுத்தாள்.

நளினி காஃபி போடுகிறேன் என்று உள்ளே செல்ல , ராமநாதன் மகளிடம் “குட்டிமா, சக்கரை ஐயா நடந்ததுக்காக சங்கடப்படறார். இதை சரி செய்ய நினைக்கிறார். சிவாவும் நான் பாத்துக்கறேன்னு அத்தனை தூரம் சொல்லும்போது என்ன செய்ய முடியும்?”

“...”

நளினி “மேதா, ஒரு ரெண்டு, மூணு மாசம். ராகா டெலிவரிம்போது நான் கூட்டிட்டு வந்துடறேன்”

“ம்…”

“இப்ப வளைகாப்பு, சீமந்தம்னு நாங்களும் அடிக்கடி வரதான் போறோம்”

“ம்…”

ராமநாதன் “என்னடா?”

“தெரியலைப்பா. என்னவோ மாதிரி இருக்கு”

“நத்திங் டா. நீ என்ன தப்பு செஞ்ச?”

என்னவென்று தெரியாமல், வீட்டைச் சுற்றி வந்தாள். மறுநாள் அதிகாலையில் புறப்பட்டு எல்லோரும் மருதமலைக்குச் சென்றனர்.

பெற்றோருக்கு மேதாவிடம் சென்றமுறை இருந்த இலகுத்தன்மையும், விளையாட்டுத்தனமும் வெகுவாகக் குறைந்தது போல் தோன்றியது.

மறுநாள் காலை ஆயாவும் மேதாவும் டிரைவரோடு காரில் பயணிப்பதாக இருந்ததால், சீக்கிரமே படுத்து விட்டனர்.

ஊருக்குப் போவது, தன் வேலை, அதே சூழலுக்குத் திரும்பச் செல்வது, ராகவி, பெற்றோர், பாலா என மடியில் லேப்டாப்பைத் திறந்து வைத்துக்கொண்டு எதையோ யோசித்தபடி அமர்ந்திருந்தவள் “ஒழுங்கா படுத்து தூங்கு பாலா” என்ற அப்பாவின் அதட்டலில் மீண்டாள்.


சில நிமிடங்களில் நிசப்தம் நிலவ, மனதைக் குடைவது என்னவென்று புரிந்ததில் கதவைத் திறந்துகொண்டு பெற்றோரின் அறைக்குச் சென்றாள். பிள்ளைகள் அனுமதி கேட்டுக் கதவைத் தட்டுவது நளினி, ராமநாதன் இருவருக்குமே பிடிக்காது.

“அதென்ன அம்மா, அப்பா ரூமுக்கு கதவைத் தட்டிட்டு வர்றது. பசங்களுக்கு இந்த ஸ்வாதீனம் கூட இல்லைன்னா அப்புறம் நாங்க என்ன அம்மா, அப்பா? இந்த விஷயத்துல என்னைக்கும் குழந்தையாவே இருங்க, புரியுதா?” என்பார் ராமநாதன்.

ராகவி வயதுக்கு வந்த பிறகுதான் ராகவியும் மேதாவும் தனி அறையில் உறங்கத் தொடங்கினர். அப்போதெல்லாம் தூக்கம் வராது இங்கும் அங்குமாக படுத்துக் கொள்வர். சில நாட்கள் நளினியோ, ராமநாதனோ இவர்களோடு பேசியபடி உறங்குவார்கள். ஐந்து பேரும் ஹாலில் உறங்குவதும் உண்டு.

மேதாவுக்கு கவலையும் பிரிவுமற்ற அந்த நாள்களுக்குத் திரும்பிச் செல்ல மாட்டோமா என்றிருந்தது.

மனதில் இருந்த குழப்பமும், பெற்றோரிடம் எப்படிச் சொல்வது என்ற தயக்கமும் இருந்தாலும், கதவைத் திறந்து உள்ளே சென்றுவிட்டாள்.

படிக்கும் விளக்கு அமர்த்தலாக எரிய, இருவருமே அமர்ந்திருந்தனர். மேதா அவர்களைப் பார்த்தபடி கட்டிலின் நடுவே சம்மணமிட்டு அமர்ந்து கொண்டாள்.

நளினி “தூங்கலையா இன்னும், காலைல சீக்கிரம் கிளம்பணும்”

ராமநாதன் “நல்லி வெய்ட். என்னடா குட்டி”

மேதாவுக்கு தாய், தந்தையிடம் பேதம் கிடையாது, பயம் கிடையாது. மரியாதை உண்டு. பேச்சில் , பேசும் விஷயங்களில் சுதந்திரமும் உண்டு, அதற்கு எல்லையும் உண்டு.

எல்லாம் இருந்தும், இப்போது தான் இதைச் சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று சிறிதே தயங்கினாலும், அது குறித்து எதுவுமே பேசாமல் போவதில் அவளுக்கு இஷ்டமில்லை. அது குற்றவுணர்வைத் தரும்.

பெற்றோருக்கே தெரிந்திருக்கலாம். இல்லை எனில், எச்சரிக்கை செய்வது அவசியம் அல்லவா?

நளினி “மேதா, என்னடீ யோசனை, இங்கேயே படு, வா”

“...ம்மா.., டாடி…”

“சொல்லுடா”

“நான் சொல்றதை… எப்டி சொல்றது… ம்மா…”

“மேதா, என்னடீ, உனக்குப் புடிக்கலைன்னா நீ அங்க வேலைக்குப் போக வேணாம், விடு”

“ம்ப்ச், நல்லி, நீ கொஞ்சம் சும்மா இரு. அவளே பேசட்டும்”

“நாலு நாள் முன்னால நீங்க ரெண்டு பேரும் பொள்ளாச்சிக்குப் போய் இருந்தீங்கள்ல மா, அன்னைக்கு…

********************


மதிய உணவுக்குப் பின் அலுவலகம் சென்ற வேகத்திலேயே பரபரப்பும் ஓட்டமுமாக வீட்டுக்குத் திரும்பி வந்த ராமநாதன் “நம்ம பொள்ளாச்சி கதிரேசனோட மாப்பிள்ளை ஆக்ஸிடென்ட்ல தவறிட்டாராம். கிளம்பு நல்லி”

கதிரேசன். ஏக்கராவாக பரம்பரை நிலமும், இரண்டு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும், கார், மற்றும் பைக் ஷோரூமூம் வைத்திருக்கிறார். நல்ல சில்லறை. ராமநாதனின் தந்தையின் காலத்திலிருந்தே மிக முக்கியமான க்ளையன்ட். நளினியும் விரைந்து தயாரானாள்.

“அக்கா, மேதா, முடிஞ்சவரை சீக்கிரம் வந்துடுவோம். ஆனா, எப்படியும் எட்டரை, ஒம்போது மணியாயிடும். பாலா கிட்ட கவனமா இருங்க. பாலா, பிஹேவ், அண்ட் பீ எ குட் பாய்”

“அவங்கிட்ட மொபைல் குடுக்காத மேதா” என்ற நளினி சற்று யோசனையோடுதான் கிளம்பினாள்.

மதிய நேரமாதலால், ஆயா அறைக்குள் சென்று கண்ணயர்ந்து விட்டார். பாலா மதியம் தூங்கமாட்டான். அவனது உணவு, மருந்து, பயிற்சிகள், இரவு உறக்கம் என எல்லாமே நேரத்துக்கு நடவாது என்பதால் நளினி அதை அனுமதிப்பதும் இல்லை.

பாலாவுக்கு எதையோ கலரிங் செய்யக் கொடுத்துவிட்டு, டைனிங் டேபிளில் தன் லேப்டாப்புடன் அமர்ந்திருந்தவள், அவன் மீது கவனம் வைத்திருந்தாள்.

பாலாவிடம் கடந்த ஒரு மாதத்தில் பெற்றோர் சொன்ன முரட்டுத்தனமும் பிடிவாதமும் (Tantrum) சிலமுறை வெளிப்பட்டதுதான். ஆனால், அதற்கான காரணமும் பெற்றோரின் அளவுகடந்த கவலையும் சேர, மேதாவும் தம்பியை உற்றுப் பார்த்தாள்தான்.

சில நேரம் வெறித்த பார்வையுடன் இருப்பான், டீவியில் பாட்டு, சினிமா என்று வருகையில் சில நேரம், அவனது கண்கள் ஒளிரும். ஆனால், மேதாவும் டீவியில் மூழ்கி இருக்கையில், குறிப்பாக எதுவும் அவளது கவனத்தில் படவில்லை.

மேதா தன் லேப்டாப்பில் தீவிரமாக எதையோ படித்துக் கொண்டிருக்க, திடீரென அருகில் நிழலாட, அவள் நிமிர்வதற்குள் மேஜையில் இருந்த அவளது அலைபேசியுடன் பாலா அவனது அறைக்குள் ஓடிவிட்டான்.

மொபைலை லாக் செய்து வைத்திருப்பதால், அவனால் ஒன்றும் செய்ய முடியாது என நினைத்தவளுக்கு, சத்தம் வராமல் இருக்கவும், எங்கே, வேலை செய்யவில்லை என்ற கோபத்தில் செல்லை உடைத்துவிடப் போகிறானோ என்ற பயம் பிடித்துக்கொண்டது.

அம்மா பாலாவின் கையில் மொபைல் தருவதை அறவே நிறுத்தி இருந்ததோடு, அதை சொல்லிச் சென்றதும் நினைவு வர, எழுந்து போய் கதவைத் திறந்தாள்.

பாலாவின் பாதுகாப்பு கருதி, அவனது அறையின் உள்பக்கம் தாழ்கள் கிடையாது. எனவே கதவைத் திறக்கவிடாது முதலில் பின்னாலிருந்து முட்டுக்கொடுத்து எதிர்த்தான் பாலா.

இதென்ன புதிதாய் என்று திகைத்த மேதா, சில நிமிடங்கள் பொறுத்தவள் தன் சக்தியைத் திரட்டி கதவை ஒரே தள்ளாய் தள்ள, அங்கே கண்ட காட்சியில் தன் வாழ்நாளின் உச்சபட்ச அதிர்ச்சியை அனுபவித்தாள்.

மேதா தன்னைப் பார்ப்பதை உணராது, தன் இடையின் கீழே ஆடைகள் ஏதுமின்றி நின்றிருந்தவன்,
கட்டிலின் மேல் கிடந்த மொபைலில் ஏதோ ஓடிக்கொண்டிருக்க, முழுதாக உணர்வுகள் தூண்டப்பட்ட நிலையில், கண்கள் செருக, தன்னிலை மறந்து, தனக்குத்தானே….

படாரென கதவை மூடியவளுக்கு நா உலர்ந்து, குடலே வெளியில் வந்து விடும்போல உமட்ட, உமிழ்நீரை வெளியேற்றி, வாய் கொப்பளித்து வந்தாள்.


“பாலா, இப்ப மொபைலைத் தரியா இல்லை, ரவி ஸாரைக் கூப்பிடவா?” என்று கத்தினாள். ரவி பாலாவின் தெரபிஸ்ட் ட்ரெயினர். கருணையும் கடுமையும் சேர்ந்த கலவை அவர். பாலாவுக்கு அவரிடம் பயம் உண்டு.

மேதா போட்ட சத்தத்தில் ஆயா எழுந்து வெளியே வந்தார்.

“மேதா, ஏன் அப்டி சத்தம் போட்ட?”

“பாலா என் ஃபோனை தூக்கிட்டுப் போயிட்டான் ஆயா”

“அதுக்கா இந்தக் கத்து கத்தின?”

“...”

பாலாவிடமிருந்து சத்தம் வராது போக, மெதுவே கதவைத் திறக்க, சரியாக உடையணிந்து, கண்களை மூடிப் படுத்திருந்தான். அருகில் சென்று மொபைலை

எடுத்துக்கொண்டு, அமைதியாக வெளியே வந்துவிட்டாள்.

வீட்டில்தான் இருப்பதால் பெயருக்கு பேட்டர்ன் மட்டும் கடவுச் சொல்லாக வைத்திருந்தாள். மொபைலை பேட்டர்னை வைத்துதான் திறந்திருக்க வேண்டும்.

மொபைலில் ஏதோ ரீல்ஸ் வீடியோ ‘பாஸ்’ ஆகி நின்றது. ‘ப்ளே’ செய்ய, உணர்வுகளைத் தூண்டும் காட்சிகள் ஓடியது. நிறுத்தி, ஹிஸ்டரியைப் பார்க்க அந்த பதினைந்து நிமிடங்களிலேயே மூன்று, நான்கு ரீல்ஸ் ஓடி இருந்தது.

மேதாவின் அதிர்ச்சி நீங்கி ஆச்சர்யம் மேலிட்டதில், மனதில் கேள்விகள் வரிசை கட்டி நின்றன.

மேதா, பாலாவின் மன நிலையைப் புரிந்துகொள்ள முயன்றாள்.

பாலாவின் வெகுளித்தனம் என்பது அறியாமையில் வந்ததுதானா?

மனதில் ஏதோ ஒரு கள்ளமும், செய்வது தவறு என்பதும் புரிந்ததால்தானே கேளாமல் மொபைலை எடுத்துச் சென்றதும், தன்னைக் கதவைத் திறக்க விடாது எதிர்த்ததும்?

ஆக, நான் மொபைலைத் திறக்குப்போதெல்லாம் பேட்டர்னை உற்றுக் கவனித்திருக்கிறான்.


நாம் பார்க்கும் , பேசும் பொருட்களின் விளம்பரங்களும், ஒன்று போலான வீடியோக்களும் தானே வருவதால், அவன் அதை எப்படிப் பார்த்தான் என்பதில் அவளுக்கு வியப்பேதுமில்லை

ஆனால், சரியாக அது போன்ற வீடியோவை எப்படித் தேர்ந்தெடுத்தான், அதுவும் என் மொபைலில்?

‘நான் பார்க்கறது இல்லைன்னாலுமே ரீலஸ்ல வராமலேவா இருக்கு?’

அது பார்ன் (porn) வீடியோ அல்லதான், ஆனால், காண்பவரின் இச்சையைத் தூண்டுமளவுக்கு இருந்தது.

பாலா போன்றோரின் பாலுணர்வுகள் குறித்து கூகுள் செய்து படித்தவளுக்கு பயத்தில் அடிவயிற்றைப் பிசைத்தது.

ஆணோ, பெண்ணோ இது பற்றிய புரிதலின்றி, அவர்களது உணர்வுகளை எளிதாகத் தூண்டி வன்புணர்வு செய்த கதைகள் இணையமெங்கும் கொட்டிக்கிடந்தன.

பெற்றோருக்குத் தெரியும், தெரிந்துதான் பாலாவுக்குக் காவல் இருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்தது.

பாலாவின் மூளைக்குறைபாடு காரணமாக அவனது புரிதலின் வயது குறைவு. இருபத்தோரு வயது இளைஞனுக்கு இப்போதுதான் பதினாறு, பதினேழு வயது பதின்பருவத்தின் உடல் வளர்ச்சியின் உணர்வுகளின் எழுச்சிதான் என்றும், இது இயற்கை என்றும் படித்தாள்.

பாலாவின் மூளைக்கு வேண்டுமானால் வயதுக்குரிய முதிர்ச்சி இல்லாது இருக்கலாம், ஆனால் உடலுக்கு?

ஆண், பெண் உறவின் மென்மையான, நுட்பமான உணர்வுகள் ஏதுமின்றி, பாலா இயற்கையின் அடிப்படை உந்துதலில் சிக்கித் தவிப்பது மேதாவுக்குப் புரிந்தது.

நான்கைந்து நாள்களாக சொல்லவா, வேண்டாமா என ஒத்தையா ரெட்டையா போட்டவளுக்கு ஒன்றும் தெரியாதது போல் போக மனமில்லை.

தான் பார்த்தது, அதிர்ந்தது படித்தது, தன்னுடைய புரிதல் என வார்த்தைகளைத் தேடித் தேடி ஒரு வழியாய் சொல்லி முடிக்கையில் அழுது விட்டாள். நளினி மகளிடம் தண்ணீர் பாட்டிலை நீட்டினாள்.

“இதைக் குடி. அழறதை நிறுத்து.
எங்களுக்குத் தெரியும். சில நாளைக்கு ரொம்பவே போராட்டமா போகுது.
டீவி, மொபைல்னு மட்டும் இல்லாம, ஆட்கள் மேலையும் அவன் பார்வை மாறுது”

“டாக்டர் கிட்ட…”

ராமநாதன் “பேசியாச்சுடா. இது இயற்கைதான்னு சொல்றார். இதைக் கடந்துதான் ஆகணும்”

“இப்படியே எத்தனை நாள்ப்பா, பாலாவோட ஹெல்த் என்னாகும், இதுக்கு தீர்வு?”

“அதுக்காக அவனுக்கு கல்யாணமாடீ பண்ணி வைக்க முடியும்?”

“...ம்மா…”

ராமநாதன் “குட்டிமா, அப்பா உனக்கு மசாலா பால் கொண்டு வரேன்” என்று வெளியில் சென்றார்.

நளினியின் கையைப் பிடித்துக்கொண்டவள் “அம்மா, பாலாவோட தனியா இருக்க உனக்கு… ம்… சங்கடமா… பயமா இருக்காம்மா?”

“சங்கடந்தான். ஆனாலும், அவன் இன்னும் குழந்தைதான். விவரம் தெரிஞ்சா நம்ம எதிர்லயே மு நம்மோடயே இப்படி நடந்துப்பானா, சொல்லு. தாங்கித்தான்டா ஆகணும்” என்ற நளினியின் முகத்தில் வலியும் வேதனையும் உறுதியும் தெரிந்தது.

ராமநாதன் மூவருக்கும் பாதாம், பிஸ்தா, ஏலப்பொடி, குங்குமப்பூ போட்டு சூடாக பால் கொண்டு தந்தார். மூவரும் அமைதியாகப் பருகினர்.

மேதா “நான் வேணா இங்கேயே இருக்கட்டுமா?”


“அதெல்லாம் ஒன்னும் வேணாம். எங்களுக்குத் தெம்பு இருக்கற வரைக்கும் பாலா எங்க பொறுப்புதான். எங்களுக்குப் பிறகு, அவனை யார் கையிலயும் குடுக்காம கடவுள்தான் காப்பாத்தணும்” என்ற நளினியின் குரல் உடைந்தது.

ராமநாதன் “நல்லி, குழந்தை கிட்டப் போய் என்ன இது, டோன்ட் ஒர்ரி குட்டிமா, வி வில் டேக் கேர் ஆஃப் பாலா. அவனுக்காக நீ உன் கேரியரை, லைஃபை பாக்காம இருக்க முடியாது. கூடாது. உன்னோட வழக்கமான உற்சாகத்தோட இருக்கணும், ஓகே?”

“ம்…”

“அப்பா ஒரு பிரட், அம்மா ஒரு பிரட், மேதாகுட்டிதான் ஜாம்” என்று சிறுவயதில் இருவருக்கும் நடுவில் படுத்துக்கொண்டு அவள் சொன்னதை சொல்லிப் புன்னகைத்தவர் கை நீட்டி
“படுத்துக்கோடா” என்றார்.

என்ன வயதாக இருந்தால் என்ன, பெற்றோர் தரும் பாதுகாப்பு உணர்வு தனிதானே?

********************

“சிவா, பதினோரு மணிக்கு வண்டிய எடுத்துட்டு வா, நான் கடைக்கு வரேன்”

“சரிங்கய்யா”

முருகப்பன் “அப்புச்சி, முந்தாநாள்தானே வந்தீங்க, இன்னைக்கு அப்படி முக்கியமா…”


சக்கரை ஐயா எதுவும் பேசவில்லை. இன்று அந்தப்பெண் மேதாலக்ஷ்மி மீண்டும் வேலைக்கு வருகிறாள்.

ஒரு மனத்தாங்கலில் வேலையை விட்டுச் சென்ற சம்பந்தி வீட்டுப் பெண்ணை அப்படியே போகட்டும் என விடுவது இரண்டு தரப்புக்குமே பார்க்கும்போதெல்லாம் சங்கடத்தைக் கொடுக்கும் என்பதால், அதை சீர் செய்ய நினைத்தார்.

இன்னும் ராகவியின் வளைகாப்பு, பிரசவம், பெயர் சூட்டல் என சந்திக்கும் சந்தர்ப்பங்கள் எத்தனையோ இருக்கிறதே!

மிஞ்சி மிஞ்சிப்போனால் ஆறு மாதமோ, ஒரு வருடமோ, அந்தப் பெண்ணுக்குத் திருமணம் கை கூடும் வரைதானே?

அதனால்தான் மீண்டும் ராமநாதனை அழைத்துப் பேசி இருந்தார். அவள் வருகையில் தானே இருந்து பேச விரும்பினார்.

முருகப்பனுக்கும் தெய்வானைக்கும் போனவளைத் திரும்பக் கூப்பிடுவானேன், அப்படி என்ன அவளது உறவு முக்கியம் என்ற எண்ணம்.

அவர் சொன்னதுபோலவே சிவா வந்து அழைத்துச் சென்றான்.
முன்பே வந்து காத்திருந்த மேதாவை அலுவலக அறைக்கு அழைத்தனர்.

தாத்தா, மகன், பேரன்கள் மற்றும் பார்த்தசாரதி ஐவரும் இருந்தனர். சிவானந்தன் அமைதியாக இருக்க, முருகப்பனும் தண்ணீர்மலையும் தன்னை உறுத்து விழிப்பதை மேதா உணர்ந்தாள்.

மேதா “ஐயா, நான் டிஸைனிங்தானே பழகணும். அதை சாலைல இருந்தே செய்யறேன்”

“ம்… அதுவும் சரிதான். ஒரு வேலை செய். காலைல ஒரு ரெண்டு மணிநேரம் ஆர்டரிங் செக்ஷன்ல இரு. சாரதியும் அங்கதான் இருப்பார். அப்புறமா சாலைக்குப் போ”

மேதா தயங்கினாலும், இதற்கு மேல் பெரியவரிடம் மறுப்பது சரியில்லை என்பதால் சம்மதித்தாள்.

மேதாவின் பின்னே கனமான அந்த தானியங்கி கதவு மெதுவே மூட, தண்ணீர்மலை “இதெல்லாம் ரொம்ப ஓவர். அவ பாட்டு கண்டீஷன் போடறா, நீங்களும் ஒத்துக்கறீங்க”

முருகப்பன் “அப்புச்சி, அந்த பொண்ணுக்காக நீங்க வந்திருக்க வேண்டிய அவசியமே இல்ல” என்றதும் காதில் விழுந்தது.

*********************

ஒரு வாரம் போல் சென்றிருக்கும். வேலை என்று குறிப்பிட்டு எதுவும் இல்லாது இருப்பது மேதாவுக்குப் போரடித்தது.

வைரவனைப் பார்க்க,
டீ ஷர்ட் அணிந்திருந்தவனின் மேல் கை இறுகி, நரம்பு புடைக்க, கடினமான ஒரு கோணத்தில் கையை வைத்தபடி எதையோ வரைந்து கொண்டிருந்தான்.

‘இவன் மட்டும் எப்படி எப்ப பார்த்தாலும் எதையோ செய்யறான். என்னை சாலைக்கு வான்னு சொல்லிட்டு டீயும் வடையும் சாப்பிட பழக்கி விட்டிருக்கான்’

‘இதுக்கு அம்மா, அப்பாவோட ஊர்லயே இருந்திருக்கலாம்’ என் நினைத்த மேதாவுக்கு இந்த வேலை தேவையா என்ற கேள்வி எழுந்தது.

அழகுநாச்சியில் இருந்த முதல் இரண்டு மாதங்களில் மேதாவின் பார்வையில், அங்கு வந்த வாடிக்கையாளர்கள் பலரும் பாரம்பரியமான நகைகளைத்தான் தேர்வு செய்தனர்.

இப்போது ஆர்டரிங் செக்ஷனிலேயே இருக்க, வளையல், அட்டிகை, சங்கிலியில் கூட குறிப்பிட்ட மாடல்களைத்தான் வெவ்வேறு எடைகளில் செய்து வாங்கினர்.

‘இதுல நான் என்னத்த டிஸைன் பண்ணி, அவங்க அதை அப்ரூவ் செஞ்சு, தங்கம் போட்டு … அவங்கதான் ஃபேக்டரி மாதிரி நகை செய்யறாங்களே’

கடை ஆள் ஒருவனுடன் மூன்று பெண்கள் வந்தனர்.

“வைரவா, சிவா சார் அனுப்பினார்”

“உக்காருங்க”

ஒரு சிறிய டப்பாவில் இருந்த மஞ்சள்நிற கற்களை எடுத்து வைரவனிடம் கொடுத்தனர்.

“கனக புஷ்பராகம். ரொம்ப நல்லா இருக்கு மேடம். எங்க வாங்கினது?”

“பழசு தம்பி. எண்பதுகள்ல ஸ்ரீலங்கால பிரச்சனை வர முன்னால அங்க இருந்தோம். அப்ப வாங்கினது”

“இதுல என்ன செய்யணும்?”

கூட வந்த இளைஞியைக் கை காட்டியவர் “எம் பேத்திக்கு கல்யாணம் தம்பி. தோடும் பென்டன்ட்டும்
ஸ்டைலா வேணுமாம். உங்க கடைல இருக்கற டிஸைன்லாம் புடிக்கலையாம்”

சட்டென தன் இடதுபுறம் கைகாட்டியவன் “ எந்த மாதிரி வேணும்னு மேடம் கிட்ட சொல்லுங்க” எனவும் பராக்கு பார்த்துக்கொண்டிருந்த மேதா ஒரு கணம் விழித்தவள் அவர்கள் அவளிடம் நகர ‘அரசு’ என்று சத்தமின்றி பல்லைக்கடிக்க, வைரவன் கஸ்டமரைக் கவனிக்கச் சொல்லி கண்ணைக் காட்டினான்.

‘கடைக்கு வந்தா மட்டும் இவனை காட்டேரி புடிச்சுக்குது’

மேதா அங்கிருந்த டிஸைன்களைக் காட்ட, அந்தப் பெண் தனக்கு என்ன வேண்டுமென்றே புரியாது, எல்லாவற்றையும் மறுத்தாள்.

வைரவன் “மேடம், நீங்க உங்க மொபைல் நம்பர் குடுங்க. அவங்க டிஸைன் அனுப்பி விடுவாங்க, நிதானமா பாத்து செலக்ட் பண்ணுங்க” எனவும் மேதாவிடமே எண்ணைக் கொடுத்துவிட்டு, அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

“என்ன திடீர்னு கோத்து வுடறீங்க?”

“ உங்களுக்கு நான் எதுவும் வேலை குடுக்கலைன்னு மைண்ட் வாய்ஸ் கேட்டுச்சே ?”

“அதெப்டி உங்களுக்குத் தெரியும்?”

“இதோ நீங்களே ஒத்துக்கிட்டீங்களே”

“!!??”

“வேலை செய்யாம, என்னை வேடிக்கை பார்த்தா போதுமா?”

“...”

“எத்தனை ஸ்டோன்ஸ், அதோட சைஸ் பார்த்தீங்கள்ல, நாலைஞ்சு டிஸைன் பண்ணி எங்கிட்ட காட்டிட்டு அவங்களுக்கு அனுப்பி விடுங்க”

“ம்”

அதுவரை தாழ்ந்த குரலில் பேசியவன், சட்டென குரலை உயர்த்தி ”மாணிக்கண்ணே, இங்க வந்து பக்கத்துல உட்கார்ந்து கேட்டா தெளிவா கேக்கும்ல?”

மாட்டிக்கொண்ட மாணிக்கம் கூச்சத்துடன் “வைரவா…” என, மற்ற ஆசாரிகள் அனைவரும் சொடுக்கி விட்டதுபோல தீவிரமாக வேலையில் ஆழ்ந்தனர்.

இரவு நெடுநேரம் தீவிரமாக வேலை செய்தவள், மறுநாள் வரைந்ததை வைரவனிடம் கொடுத்தாள்.

“ம்…இது நல்லா இருக்கு. இதுல கம்பி வேலை அதிகம். இந்த பென்டன்ட் நல்லா இருக்கு. ஆனா, நம்ம ஊர்ல எடுபடாது”

முதலில் கணக்குப் பாடத்தில் திடீர் டெஸ்ட் பேப்பரை சப்மிட் செய்த மாணவனின் மனநிலையில் இருந்தவள், அவனது கமெண்டரியைக் கேட்டு முறைத்தாள்.

‘நான் வேலை மெனக்கெட்டு லண்டனுக்குப் போய் படிச்சுட்டு வந்தா, என் டிஸைனை கோளாறு சொல்லுவியா’ என ஒரு கணம் சுறுசுறுவென கோபம் ஏறியது.

“ஹலோ லண்டன் மேடம், நீங்க வரைஞ்சு இருக்கற டிஸைன் எல்லாமே வெள்ளைக்காரி போட்டுக்கற டிஸைனா இருக்கு. அநேகமா பதினாறு கேரட், பதினெட்டு கேரட் தங்கத்துல செய்வாங்க. இங்க இருபத்திரெண்டு கேரட்ல செய்தாலே மீதி ரெண்டு கேரட் எங்கேன்னு கேப்பாங்க”

“...”

“இந்த பென்டன்ட், இந்த ரெண்டு தோடு, இந்த தொங்கட்டானை தூக்கி இந்த தோடுல போடுங்க. இதே டிஸைன்ல இன்னொரு டாலர் வரைஞ்சிட்டு, அவங்களுக்கு அனுப்பி வைங்க. கூடவே, தங்கம் எவ்வளவு, எத்தனை சேதாரம், கூலி இதெல்லாம் கேப்பாங்க. தெரிஞ்சுக்கிட்டு அனுப்புங்க. ஆர்டர் கொடுத்தா மூணுவாரம் மினிமம்”

குரலில் மாற்றமின்றி, நக்கலின்றி, மிகச் சாதரணமாகதான் பேசினான். இவளுக்குதான் தன்னைக் குறை சொல்வது போல் இருந்தது.

‘பேயரசன்’

வைரவன் ஆளோடியில் நின்ற சரவணனிடம் “மேடத்துக்கு சக்கரை தூக்கலா போட்டு சூடா டீ சொல்லு சரவணா”

மேதாவுக்கு வந்த கோபத்திற்கு சுற்றிலும் ஆசாரிகள் இருந்ததால் வைரவன் பிழைத்தான்.

இதில் இருவருமே அறியாத ஒன்று, வைரவன் அவளிடம் பேசுவதும் அவன் உடல்மொழியும் இயல்பாக இருந்தாலுமே, இவள் அவனைப் பார்ப்பதும், முறைப்பதும் அவனுடன் பேசுவதும் , அவன் அவளை ஏதோ சொல்லி இருக்கிறான் என்ற எண்ணத்தைத் தர, அவர்களை ஆசாரிகள் சுவாரஸியமாகக் கவனிப்பதை.

********************

மேதா பதினோரு மணிக்கு சாலைக்கு வருகையில் தணிகைநாதன்தான் அமர்ந்திருப்பார்.


வைரவனைப் போல் இறுக்கமோ, சுளீரென வரும் நக்கல் கமெண்ட்டுகளோ, சுருக்கென்ற கட்டளைத் தொனியோ இன்றி இருப்பவரால், அந்த சமயத்தில் சாலையே சிறிது தளர்ந்து, கலகலக்கும். பேச்சோடு வேலையும் நடக்கும்.

அன்று ஆசாரி செந்திலுக்கு அவன் அத்தை மகளுடன் திருமணம். அருகில்தான் என்பதால் மூவராய், நால்வராய் சென்று வாழ்த்திவிட்டுத் திரும்பினர்.

மேதாவிற்குத் தனியாகச் செல்ல சங்கடமாய் இருக்கவே, அமைதியாக இருந்து விட்டாள். பரிசு வாங்க ஆளுக்கு இவ்வளவு என எல்லோரும் காசு போடவும் கொடுத்திருந்தாள்.

பழனிவேல் ஆசாரி, தணிகைநாதனிடம் “நம்ம சாலைல சரவணனுக்கும் வைரவனுக்கும்தான் கல்யாணம் நடக்கறது பாக்கி”

பெருமாள் ஆசாரி வயதில் மிகவும் மூத்தவர் ஆதலால் “தணிகா, மாமன் பொண்ணுதான் இல்லைன்னு ஆயிடுச்சு. வேற இடம் பாக்க வேண்டியதுதானே”

“பார்க்கணும்ணா, என் சிநேகிதனோட பொண்ணை கேக்கலாம்னு இருக்கேன். வைரவனைக் கேட்டா வேண்டாம்னு சொல்றான்”

“அவன் அப்படிதான் சொல்லுவான். பொண்ணைக் கண்ணுல காட்டினா சரின்னுட்டுப் போறான்”

மேதாவுக்கு ஏனோ அந்தப் பேச்சே ரசிக்கவில்லை.

*********************

மேதா வேலையில் சேர்ந்து நெருங்க ஒரு மாதமிருக்கும். காலையில் கடைக்கு வருபவள், எப்போதடா பதினோரு மணியாகும் என்று காத்திருந்து சாலைக்கு ஓடிவிடுபவளைப் பார்த்துப் பொருமினான் தண்ணீர்மலை.

அவள் இருக்கும் நேரத்தில் ஆர்டரிங் பிரிவு பக்கம் அவன் அவசியத்துக்குச் சென்றாலே, சிவானந்தன் முறைக்கிறான்.

‘இந்த பார்த்தசாரதி கிழம்! என்னவோ சிபிஐ ஆபீஸர் மாதிரி அவளுக்குக் காவல் இருக்கு. எல்லாம் ஐயாவால வந்தது’

அன்று ஆர்டர் எடுக்கும் ஆள் இன்னும் வந்திருக்கவில்லை.
சாரதி யாரோ ஒரு கரைவேட்டியுடன் பேசிக்கொண்டிருந்தார்.

யாரோ முத்துமாலையும் ஆன்டிக் லக்ஷ்மி பென்டன்ட்டும் ரெடிமேடாக இருந்ததை விட அதிக எடையில் செய்யக் கொடுக்க வர, தண்ணீர்மலை கவுன்ட்டரில் தனியே நின்ற மேதாவிடம் அனுப்பி வைத்தான்.

பெரிய தொகைக்கான ஆர்டர் என்பதால் மேதா தயங்க, தண்ணீர்மலை சுள்ளென
“டிஸைனும் செய்யக்காணும், கடைல வேலை சொன்னாலும் பிரச்சனை. சாலைல போய் என்னத்தைப் பழகுறியோ? இதுக்கு எதுக்கு கோயமுத்தூர்ல இருந்து வேலைக்கு வரணும்?” என்றது சிவாவின் காதில் தெளிவாக விழுந்தது.

கஸ்டமர்களின் முன்னே மேதா இறுகிப்போய் நிற்க,

இரண்டாவது முறையாக இத்தனை விரைவில் அதே போன்ற நடத்தையை எதிர்பாராத சிவானந்தன் சினமும் அதிர்ச்சியும் மிக எழுந்து வந்து, மேதாவிடம் “நீ சாலைக்கு போம்மா” என்றவன், கஸ்டமரைக் கவனித்தான்.

*******************

தணிகைநாதன் உள்ளே நுழையும்போதே “பாவம்டா அந்தப் பொண்ணு. இன்னைக்கும் கடைல வெச்சு அந்த சின்னப்பய அவ மனசு நோக எதையோ சொல்லி இருக்கான். நம்ம தேவா சொன்னான். புள்ளைக்கு மொகமே வாடிப்போச்சு” என்றபடி வந்தார்.

“யாருங்க?” என்ற வள்ளியம்மைக்கு கதை சொல்லத் தொடங்கினார் தணிகைநாதன்.

சாப்பிட்டுக் கொண்டிருந்த வைரவன் எதுவும் பேசாது எழுந்து கை கழுவச் செல்ல, பின்னாலேயே வந்த ஜீவா “அவன் (தண்ணீர்மலை) ஏன்டா இப்டி இருக்கான்?”

“என்னைக் கேட்டா?”

“வைரவா”

“அவன் பேசினா இவளுக்கு வாய் எங்கடா போச்சு? இதுல அவ அக்கா புருஷன் வேற அங்கேயே இருக்கான். மொத தப்ப சரி செய்யறேன்னு அவளைக் கூட்டிட்டு வந்து, இதோ, இப்ப இன்னொண்ணு. அவன் ஒரு நாய் வால். ****ளி”

வைரவனிடம் இந்த எதிர்வினையை எதிர்பார்க்காத ஜீவா, சிரிப்புடன்

“உன்னையே நம்பி வந்திருக்காடா அவ”

“அடிங்க, போதும். அவ்வளவு சீன்லாம் இல்ல. போய் அப்பாக்கு சாப்பாடு போடு, போ”

தணிகைநாதன் “ஜீவா, இங்க வா”

ஜீவா உள்ளே செல்ல, வைரவன் சாலைக்குச் சென்றான். நல்ல மழை பெய்ததில் மின்சாரம் நின்றிருந்தது.

ஆளோடியின் குறட்டில் அமர்ந்திருந்தவளின் கண்கள் கலங்கி இருந்ததோ?

அருகில் சென்று அமர்ந்தான்.

“சாப்ட்டியா?”

“...”

“ம்ப்ச், இப்ப என்ன?”

“இல்ல, என்னைப் பாத்தா அவனுக்கு எப்படி தெரியுது, நானா இங்க வரேன்னு சொன்னேன். பெரியவங்க கௌரவத்துக்கு என்னைப் பலி போடறாங்க. ஏன்தான் ஜூவல்லரி டிஸைன் படிச்சேன்னு இருக்கு. நான் ஊருக்குப் போறேன். இனி யார் சொன்னாலும் திரும்ப வரமாட்டேன்”

“என்ன சொன்னான்?”

“...”

“சரி விடு, அவன் என்ன திருவாசகமா சொல்லி இருக்கப்போறான். நீ ஊருக்குப் போனா அவன் சொன்னது இல்லைன்னு ஆயிடுமா?”

“அவன் பாட்டு பேசிட்டே இருப்பான். எங்க அக்கா, மாமான்னு பாத்துக்கிடாடு நான் ஒண்ணும் நடக்காத மாதிரி கேட்டுட்டு இருக்கணுமா?”

“இந்த வாய அங்க காட்டறது”

“அவனும் அவன் பார்வையும்.
அவன் ஒரு லீச் (அட்டைப்பூச்சி).
He is creepy you know”

“இதை அவன்கிட்ட சொல்லி சட்டையப் புடிக்கறதை விட்டு, இங்க உக்கார்ந்து கைகேயி வேஷம் போட்டா?”

வைரவனை அடிக்க விருட்டென கைப்பையை ஓங்கியவள், சூழல் புரிய கையைத் தணித்தாள்.

வைரவன் “கோபம் போச்சா, சாப்பிடு” என்றான்.

*********************

மறுநாள் காலை வேளை. ஐயாவின் அறையில் ஆண்கள் மட்டுமே கூடி இருந்தனர்.

முருகப்பன் மகனுக்கு உதவ முடியாது அமைதியாக இருக்க, சிவானந்தன் “ஐயா, ஊருக்குப் போன பொண்ணை அப்படியே விட்டுருக்கலாம். இவன் செய்யுறது எதுவுமே சரி இல்லை. இவனோட சிரிச்சுப் பேசிற கடை பொண்ணுங்களை கண்டுக்காம இருக்கறது, மத்தவங்களை சரியான நேரத்துல சாப்பிட போக விடாம செய்யறதுன்னு ஏற்கனவே ஏகப்பட்ட புகார் வருது. ராகவி வீட்ல நம்மை பத்தி என்ன நினைப்பாங்க?”

சக்கரை ஐயா அமைதியாக இருக்க, தண்ணீர்மலை “என்ன வேணா நினைக்கட்டும், வேலை செய்யலைன்னா கேக்க மாட்டாங்களா?”

முருகப்பன் “பேசாம இரு தம்பி” என்று மகனை அடக்கப் பார்த்தார்.

சிவானந்தன் “அப்படிக் கேட்கணும்னா நாங்க இத்தனை பேர் இருக்கோம். நீ ஏன் கேக்கணும், அதுவும் தப்பா அர்த்தம் வர அளவுக்கு?”

தண்ணீர்மலை “நான் கட்டிக்கப்போற பொண்ணை நான் தட்டிக் கேக்காம யார் கேப்பா?”


\
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: தங்கச்சிலை போல் வந்து மனதை…! 7
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Joined
Jun 19, 2024
Messages
26
இவன் கட்டிக்க போறதுன்னு இவனே முடிவு பண்ணிக்குவானா?
பொண்ணு சம்மதம் எல்லாம் தேவை கிடையாதோ🤔
 

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
கனவு காணுங்கள் என்று அப்துல்கலாம் தொடங்கி ஐஸ்வர்யா ராய் வரை சொல்லியிருக்காங்க தான். ஆனா அங்கிட்டு அவுக ரெண்டு பேரும் ஏற்கனவே டூயட் வரைக்கும் போயிட்டாங்க... நீ 80ஸ் கிட்ஸ் மாதிரி சோலோவா நிக்கப்போற வாட்டர்ஹில்ஸ்
 

dharani

Member
Joined
Jul 6, 2024
Messages
26
ஜொள்ளு ஹில்ஸ் அதை நீங்க மட்டுமே சொல்லிட்டு இருந்தா எப்படி...

பாலா வோட விசயம் ரொம்ப சென்சிடிவ் ராகா வீட்டுல முண்ணவே ரொம்ப கெடுபிடி பாலா விசயத்தில் இது தெரிந்ததா ....
 

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
113
😃😃😃😃😃😃😃மேதா முறைக்குறதுல தண்ணீர் வற்றி வெறும் மலை ஆகப்போறன்
 
Joined
Jun 19, 2024
Messages
33
😍😍😍

எதே! நீ கட்டிக்க போற பொண்ணா? 😳😳 இது அவளுக்கு தெரியுமா? 😏😏 கடைசியில அவ வைரவனை கட்டிக்கிட்டு போகும் போது இப்படித்தான் பாட போற..😜😜

 

SaiSakthi

New member
Joined
Jun 20, 2024
Messages
25
தண்ணீர்மலை... பேருக்கு ஏத்த மாதிரி ஜொள்ளு மலை நீ‼️ நீயெல்லாம் அதுக்கு சரிப்பட மாட்டடா ‼️ ( மேதாவுக்கு ஜோடியா நீ ‼️ Good Joke 🤦😠😏)
 

Lakshmi

Member
Joined
Jun 19, 2024
Messages
43
என்னாது கட்டிக் போற பொண்ணா.இது எப்போதிருந்து.
 
Top Bottom