• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தங்கச்சிலை போல் வந்து மனதை…! 5

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
தங்கச்சிலை போல் வந்து மனதை…! 5

“ஆயா, இப்ப எதுக்கு என்னை ராகா வீட்டுக்குப் போக சொல்ற?”

“மாசமா இருக்கற பொண்ணு, பருப்பு உருண்டை குழம்பு வேணும்னு வாயவிட்டுக் கேட்ட பிறகும் செஞ்சு தரலைன்னா ஆயான்னு நான் எதுக்கு இருக்கேன், அதுவும் உள்ளூர்ல?”

“இதெல்லாம் அவங்க வீட்ல செய்ய மாட்டாங்களா?”

“அது.. அவங்க செய்யிறது வேறடா”

“ஏன், அவ என்ன இங்கிலீஷ் காரனையா கட்டி இருக்கா, பத்து பொருத்தமும் பக்காவா பாத்துதான் லவ்வே பண்ணி இருக்காங்க… அப்புறம் என்ன?”

“மேதா, நீ இப்ப போகப் போறியா இல்லையா?”

“இதை நாளைக்கு செஞ்சு கொடுத்தா ஆகாதா, கடைல கொண்டுபோய் மாமாகிட்ட குடுத்துடுவேன்ல”

“சேச்சே, அது மரியாதை இல்லை”

“சன் டே அன்னைக்கும் படுத்துற ஆயா”

சாலை விடுமுறையாதலால் மேதாவும் தனது வாராந்திர விடுமுறையை ஞாயிறன்றே எடுத்துக் கொண்டிருந்தாள்.

எண்ணெய்க் குளியல், பொடி தோசை, ஃபில்டர் காஃபி என்று தொடங்கிய ஞாயிற்றுக்கிழமை தினத்தில் வெளியே போக மனதே இல்லாமல் உடை மாற்றி வந்தவளைப் பாட்டியும், பாட்டி அடுக்கி வைத்திருந்த டப்பாக்களையும் கண்டு பரஸ்பரம் அதிர்ந்தனர்.

“என்ன ஆயா இது?”

“ஏன்டீ உங்கக்காக்கு மட்டும் தரமுடியுமா? அவ கேட்டதோ காரமா குழம்பு. சம்பந்தி வீட்டுக்கு இனிப்பு இல்லாம எப்படி, அதான் கொஞ்சம் மாலட்டும், புழுங்கலரிசி முறுக்கும் செஞ்சேன். இதுல மாங்கா சாதம் இருக்கு…எல்லாமே கொஞ்சம் சொஞ்சம்தான்.. ”

“எதே, உனக்கு இது கொஞ்சமா, என்னவோ செய், தயவு செஞ்சு இந்த ஒயர் கூடை வேணாம், உனக்குப் புண்ணியமாப் போகும். ஏன் ஆயா, உனக்கு சமைச்சு சமைச்சு போரடிக்கலையா?”

“இது தோசைல பொடிய தடவியே குடுத்துடு ஆயான்னு கேட்டபோது தோணலியா?”

“தம்பி பொண்ணு, சொந்தப் பேத்தின்னு கூட பாக்காம…”

“போதும், ட்ரெஸ்ஸை மாத்திட்டுக் கிளம்பு. போறவழியில பூ வாங்கிட்டுப் போ”

“ஒய், இந்த ட்ரெஸ்ஸுக்கு என்ன கொறைச்சல்?” என்றவள், அக்கா வீட்டு லொகேஷனை கூகுள் மேப்பில் ஒருமுறை பார்த்துக் கொண்டு பெரிய்ய ஷாப்பர்ஸ் பையுடன் வெளியேறினாள் மேதாலஷ்மி”

***********************

“நீங்கதான் சின்னம்மாவோட தங்கச்சிங்களா?” என்று கேட்ட ஒரு பணிப்பெண் கதவருகே வந்து உள்ளே அழைத்துச் சென்றாள். முகப்பு, இடைகழி, முற்றம், பட்டாளை எல்லாம் காலியாக இருக்க, அந்தப் பெண் வலப்புறம் இருந்த ஒரு அறைவாயிலில் நின்று “உள்ள போங்கம்மா” என்று கைகாட்டிவிட்டுச் சென்றாள்.

அந்த மெகா சைஸ் அறையில் டீவி ஓடிக்கொண்டிருந்தது.

சுவரோரமாய் 7 போல் போடப்பட்ட வசதியான திவான்களில் ஒன்றில் சக்கரை ஐயா அமர்ந்திருக்க, மற்றொன்றில் பார்வதி ஆச்சி படுத்திருந்தார்.

“ஐயா”

“ஓ, வாம்மா பொண்ணு, வா” என்று வரவேற்றார்.


ஆச்சியும் எழுத்து அமரவும் “பரவால்ல, நீங்க படுத்துக்குங்க” என்றாள் மேதா.

“வயசாகுதில்ல, அப்பப்ப படுக்க வேண்டியதா இருக்கு கண்ணு. இரு உங்கக்காவைக் கூப்பிடுறேன்” என்று எழப்போக, மேதாவுக்கு சங்கடமாக இருந்தது.

“நானே கூப்பிடறேன் ஆச்சி” என்றவள் ராகவியை மொபைலில் அழைத்து, பூவை எடுத்து ஆச்சியின் கையில் கொடுக்க, பெரியவரிடம் மெச்சுதல் தெரிந்தது. டப்பாக்கள் இருந்த பையை அவருக்கு எதிரே இருந்த சென்ட்டர் டேபிளில் வைத்தாள்.

“இதெல்லாம் ஆயா குடுக்க சொன்னாங்க”

“நல்லது, உக்காரும்மா, உம் பேரு என்ன சொன்ன?”

“மேதாலக்ஷ்மி”

“நம்ம கடை வேலை எப்படி இருக்கு, எனக்கும் ஏதாச்சும் வரைஞ்சு குடு. நானும் புதுமோஸ்தர்ல நகை செஞ்சுக்கறேன். சரிதானே மாமா?”

மனைவியிடம் “உனக்குப் போகதான் வியாபாரமே” என்று சிரித்த சக்கரை ஐயாவை வியப்புடன் பார்த்தாள் மேதா. முதல் முறை பார்த்ததுபோல் இன்றி, சொந்த பேத்தியிடம் பேசுவது போல் பழகினர்.

“நிச்சயம் நான் டிஸைன் செஞ்சு தரேன். புடிக்குதான்னு பாருங்க ஆச்சி”

அதற்குள் அந்தப் பணிப்பெண் ஒரு கண்ணாடி ஜாடியில் சாத்துக்குடி ஜூஸ் மற்றும் நாலைந்து கிளாஸுடன் வர, பின்னாலேயே ராகவி வந்தாள்.

“வா வா” என்றவளின் முகம் ஒரு கணம் சுருங்கி விரிந்தது. பார்வதி ஆச்சி “உள்ள கூட்டிட்டுப் போய் பேசும்மா”


மாடியில் இருந்த அறைக்குள் நுழைந்ததுமே “இது என்னடீ ட்ரெஸ்ஸு?” என்றாள் ராகவி.

“ஏன், நல்லா இல்லையா?”

“ம்ப்ச், இங்க வரும்போது இப்படி…”

“கட் இட் அவுட் ராக்ஸ். ஏன் உங்கிட்ட இத மாதிரி ட்ரெஸ் இல்லையா, ஹனிமூன்ல கூட போட்டிருந்ததானே?”

“ஏன்டீ கத்தற, அது யாருக்கும் தெரியாது. என் மாமியார் பாத்தா ஏதாச்சும் சொல்லுவாங்க”

“ஹலோ, அவங்க உனக்குதான் மாமியார். புரியுதா?”

“ரொம்ப ஏட்டிக்குப் போட்டியா பேசுற மேதா”

“யாரு, நானா, நீதான் நூத்துக்கிழவி மாதிரி பேசுற?”

“சரி விடு, ஆயா வீட்ல பொழுது போகுதா, வேலை எப்படி இருக்கு?”

“ஏதோ போகுது”

“என்னடீ ஒரு மாதிரி பேசற, அந்த வைரவன் உங்கிட்ட ஏதாச்சும்…”

அக்காவிடம் வைரவனைப் பற்றிக் கேட்கலாம் என்ற எண்ணத்தை இன்ஸ்டன்டாகக் கைவிட்டவள்
“ஸ்டாப், ஸ்டாப். தெரியாம சொல்லிட்டேன். வேற எதானும் பேசலாமா, உள்ள பாப்பா எப்டி இருக்காங்க, டாக்டர் என்ன சொல்றாங்க?”

ராகவி “நேத்துதான் ஸ்கேன் போனோம். பேபியோட ஹார்ட்பீட் கேட்டோம், நல்லா இருக்கான்னு சொன்னாங்க” என்றாள் மகிழ்ச்சியுடன்.

மேதா “எங்க, யாரையும் காணும்?”

“அத்தை, மாமா, உங்க மாமாவோட தம்பி மூணு பேரும் ஒரு கல்யாணத்துக்கு மதுரை வரைக்கும் போயிருக்காங்க”

“சரி, நான் கிளம்பறேன்”

“சாப்பிட்டு போடீ, மாமாவும் வந்துடுவாங்க”

“பரவாயில்லை, இன்னொரு நாள் வரேன்”

“நீ எங்க வர்ற?”

“...”

மேதா எழுந்துவிட, ராகவியும் உடன் வந்தாள். பெரியவர்களிடம் சொல்லிக்கொள்ள, முன்னறைக்கு வந்தனர். ஐயா கண்ணயர்ந்திருக்க, ஆச்சிதான் விழித்திருந்தார்.

“ராகவி, தாம்பூலம் குடும்மா. நேத்து கொய்யாப் பழம் பறிச்சதுல இருந்து கொஞ்சம் கொண்டு வரச் சொல்லு“

ராகவி சென்றவுடன், உறங்கும் கணவரைப் பார்த்த பார்வதி ஆச்சி , மேதாவை அருகில் அழைத்தார்.

“நம்ம கடையில இருக்க. நாலு பேரு வந்து போய், புழங்குற இடம். மனுஷங்களைப் புரிஞ்சு பத்திரமா இரு கண்ணு”

“சரி ஆச்சி”

“ஒன் வயசுல நான் கூட கடைக்கு போவேன். ஆனா, காச எண்ணி வாங்கறது மட்டுந்தான் என் வேலை” என்று சிரித்தவருடன் சேர்ந்து கொண்டாள் மேதா.

“அரசு கிட்ட வேலை பழகுறியாமே, திறமையான பயன்னு உங்க ஐயா அடிக்கடி சொல்லுவாரு. என்ன, கோபந்தான் கொஞ்சம் மூக்கு மேலயே குடி இருக்கும். ஆனா, பொறுப்பா சொல்லித் தருவான். நல்லா படிச்சுக்க கண்ணு.

“அரசு யாரு ஆச்சி?”

“அவனுக்கு எம் மாமனார் பேரு. அதான் அரசுன்னு சொல்லுறது, ம்….”

“!!??”

‘பருத்தி மூட்டை மொமன்ட்டுடீ மேதா’

ராகவி திரும்பி வந்து விட, அவள் கொடுத்ததைப் பெற்றுக்கொண்டு புறப்பட்டாள். வாசல் வரை கூட வந்த ராகவி, திடீரென நினைவு வந்தவளாக “இன்னைக்குக் கடை உண்டே, நீ ஏன் போகல?”

“கடை ஓனர்தான் தினமும் போகணும், நான் ஒரு சாதாரண ட்ரெய்னீ தாயே”

“என்னவோ போ, லண்டன்ல படிச்சிட்டு வந்து, அந்த வைரவன் கிட்ட போய் ட்ரெய்னீயா இருக்க”

ஆச்சியின் அரசு என்ற விளிப்பும், அக்காவின் அலட்சியமும் தந்த கலவையான கேள்விகளுடன் ஸ்கூட்டரைச் செலுத்தியவள், தெரு திரும்புகையில் ஒரு கையில் கேக் பெட்டியுடன் , மற்றொரு தோளில் இருந்த பெண் குழந்தையிடம் பேசியபடி வந்த வைரவனைக் கண்டதுமே, அந்தக் கேள்விகள் அனைத்தும் அர்த்தமின்றிப் போக, அருகில் சென்று ஸ்கூட்டரை நிறுத்தி ஹெல்மெட்டைக் கழற்றியவள் “ஹாய்” என்றாள்.

வைரவன் கோடியில் ஒரு வாய்ப்பாகக் கூட அவனது வீடு இருக்கும் தெருவில், அந்நேரத்தில் மிலிட்டரி ப்ரின்ட் போட்ட முக்கால் பேன்ட்டும், காலர் இல்லாத வெண்ணிற டீ ஷர்ட்டின் மத்தியப் பிரதேசத்தில் தலை வைத்த படி குப்புறப் படுத்துத் தூங்கும் குழந்தைப் படம் போட்ட மேல் சட்டையும் அணிந்த மேதாவை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

கண நேர கவன ஈர்ப்பை சாமர்த்தியமாக மறைத்தவன், சற்றும் அலட்டிக்கொள்ளாத தலையசைப்போடு “ஹாய், இங்க எங்க?” என்றான் வைரவன்.

“ஹலோ, நீங்க எங்க இங்க?”

ராகவியின் வீட்டிற்கு எதிர்சாரியில் இரண்டு, வீடுகள் தள்ளி இருந்த ஒரு வீட்டைக் காட்டிய வைரவன் “அதான் எங்க வீடு”

“ஹாய் பேபி, உங்க பேர் என்ன?”

புதியவளைக் கண்டு குழந்தை கூச்சத்தில் முகம் திருப்ப, மருமகளிடம் “பேர் கேட்டா சொல்லணும்டா தங்கம்” என்ற
வைரவன், மேதாவிடம் “அவ பேரு நிலா, என் அக்கா பொண்ணு” என்றான்.

“ஓ, நைஸ் நேம். நான் அக்கா வீட்டுக்கு வந்தேன்”

முன்பே அது புரிந்திருந்ததில் அவளை மேலும் கீழும் பார்த்தபடி
தலையசைத்தான்.

அதற்குள் நிலா ”மாமா, ஹேப்பி பர்த் டே கேக் வேணும்”

மேதாவின் விழிவினாவில் “என் தம்பி ஜீவாக்கு பர்த் டே”

வேகமாகக் கணக்கிட்டவள் “நீங்க நாலு பேரா?”

“ம்”

வைரவனின் முகத்தைத் தன்புறம் திருப்பிய நிலா “மாமா, அம்மாட்ட” எனவும்

“தங்கம் ஆன்ட்டிக்கு பை சொல்லு, ஸீ யூ”

தன் ‘ஆன்ட்டி’ யில் ஷாக்காகி, ஜெர்க்காகி, கோபமாகி, யாதுமான காளியாகி பதில் கூற வராது நின்றவளைப் பார்த்துச் சிரிப்பை அடக்கியவன், சற்றும் எதிர்பாராமல், அதுவரை பேசாத நிலா “பை ஆன்ட்டி” என்று விட, மேதாவின் முகம் போன போக்கில் வைரவன் ‘பக்’கெனச் சிரித்துவிட்டான்.


மதுரையிலிருந்து காரில் திரும்பிக்கொண்டிருந்த தண்ணீர்மலையும் அவன் பெற்றோரும் தெரு வளையும் இடத்தில் சிரித்தபடி நின்றவர்களை சற்று தூரத்தில் இருந்தே பார்த்தனர்.

வேகம் குறைக்காது வளைவில் திரும்பிய காரையும் அதன் ஓட்டுனரையும் இனம் கண்டு கொண்ட வைரவன், இடைவெளி இருக்குமெனினும் அனிச்சை செயலாக, சட்டென மேதாவின் ஸ்கூட்டர் ஹேண்டில்பாரைப் பிடித்து ஓரமாக நகர்த்தி “நீங்க கிளம்புங்க” என்றான்.

“ஏன், யாரோட கார் அது, அவன் வேகமா போனா அதுக்கு நான் ஏன் கிளம்பணும்… ஓ, உங்களுக்குத் தெரிஞ்சவங்களா, அதனால என்ன?”

‘ஆத்தாடியாத்தா, விருதுப்பட்டி சனியன விலைக்கு வாங்குவானேன்னு பாத்தா… என்ன இவ்வ்வ்வ்ளோ பேசுறா’

“அதுல போனது உங்க அக்காவோட மாமனார் மாமியாரும் கொழுந்தனும், மீரு இப்புடு வெள்த்துன்னாவா?”

******************

வைரவன் வீட்டில் பிறந்த நாளுக்கு கேக் வெட்டும் பழக்கம் எல்லாம் கிடையாது. பாயசம், வடை, இனிப்பு என வீட்டிலேயே வள்ளியம்மை செய்வதுதான் வழக்கம். தவறாது கோவிலுக்குச் செல்வர்.

வள்ளியம்மையின் நடமாட்டம் முடங்கியபின் இனிப்புக்காகவும், குழந்தைகளை உற்சாகப் படுத்தவும் தணிகைநாதன் கேக், பஃப்ஸ் என வாங்கி வருவார்.

இன்று குட்டிப் பெண் நிலா, காலையில் ஜீவாவிற்குப் பிறந்த நாள் என்று தெரிந்ததில் இருந்தே ‘ஜீவா மாமா ஹேப்பி பர்த் டே, கேக் வேணும்’ என்றதில் ஜீவாவுக்கு அடித்தது யோகம்.

வாழ்வில் முதல் முறையாக மட்டுமின்றி, அந்த வீட்டிலேயே முதல்முறையாக பிறந்த நாளுக்கு கேக் கட் செய்தவன் நெகிழ்ந்திருந்தது எல்லோருக்குமே புரிந்தது.

நிலாவிடம் “அக்கா மகளே இந்து” என்று பாடி லதாவிடம் மொத்து வாங்கினான்.

ஜீவா மீனாட்சியிடம் “பாருக்கா” என, அவளோ “இன்னும் ரெண்டு போடு லதா” என்றாள்.


கையில் கேக்கை வைத்துக் கொண்டு “லதா, கேட்ச்” என்று கைகளை உயர்த்தவும், நிலா குஷியாகி கை தட்ட, லதா அழுகை மோடுக்குப் போனாள்.

“ஏய், சும்மாடீ”


இதற்கு நேர்மாறாக வள்ளியம்மைக்கு கேக் ஊட்டுகையில் அமைதியாக இருந்தான்.

ஜீவாவின் தலை முடியைக் கோதியவர் “ஒன்னுமில்லடா கண்ணு, நல்லா இரு” என்றார்.

மதியம் மூன்று மணிக்கு மேல் தணிகைநாதன் மீனாக்ஷியையும் பேத்தியையும் அழைத்துக்கொண்டு மதுரைக்குப் புறப்பட்டார்.

அல்பகோடா பழத்தையும் மூன்று ஒட்டு மாங்காய்களையும் மகளிடம் கொடுத்தார்.

“இப்ப ஏதுப்பா மாங்கா?”

“சீனிவாசன் கிட்ட சொல்லி புதுக்கோட்டைல இருந்து வரவழைச்சிருக்கேன்மா”

“எதுக்குப்பா கார் எல்லாம்?”

“வரேன்னு சொன்ன மாப்பிள்ளைய வேண்டாம்னு சொல்லியாச்சு. ஜாக்கிரதையா இருக்க வேண்டிய நேரம்மா இது. எதுக்கு ரிஸ்க்?”

“என்னால எப்பவுமே அதிகப்படி செலவுதான், இல்லப்பா?”

வைரவன் “அக்கா, எதையாவது உளறாம புறப்படு சொல்றேன். தங்கம், அம்மாவை தூக்கச் சொல்லக் கூடாது. சரியா?”

இரண்டு வாரங்களாய் மீனாக்ஷியின் பேச்சும், குழந்தையின் மழலையும் அழுகையும் ஓட்டமும் சிரிப்புமாய் கலகலத்த வீடு, விசையை அமர்த்தியதுபோல் அமைதியாகி வெறிச்சோடியது.

வள்ளியம்மையை மகளின் பிரசவம் குறித்த கவலை பிடித்துக்கொண்டது. ஸ்வர்ணலதா வைரவனின் மொபைலைக் கேட்க, அவனது கவனம் எங்கேயோ இருக்க அமைதியாக எடுத்து நீட்டினான்.

லதா ஜீவாவிடம் சைகையில் என்னவென்று கேட்க, ஜீவா தோளைக் குலுக்கினான்.

வைரவனின் அருகில் சென்று அமர்ந்த ஜீவா

“உன்னாலே ஏய் மூடாச்சு
My harmone balance damage'u

“ஜீவாஆஆ”

“பரவால்ல, உசிரு இருக்கு”

*********************

தணிகைநாதன் மதுரை சென்றிருந்ததால், வைரவன் காலையிலேயே சாலைக்கு சென்று விட்டான்.

கடைசிவருடம் என்பதால் ஜீவாவுக்கு ப்ராஜக்ட் தொடங்கி இருக்க, பெரும்பாலும் வீட்டில்தான் இருந்தான்.

வைரவன் பெருமாள் ஆசாரியுடன் கடைக்குச் சென்று, அன்றைய வேலைக்குத் தேவையான தங்கத்தையும், கற்களையும் எடைபோட்டுக் கையெழுத்திட்டு வாங்கிக்கொண்டு வெளியே வரவும், மேதா கடைக்குள் நுழையவும் சரியாக இருக்க, சிறு புன்னகையுடன் கடந்தனர்.

அன்று வரை எந்த வேலையும் கடையில் இல்லாது இருந்தவளுக்கு ‘இதை எடு, அதைக் காட்டு, அந்தக் கவுன்டருக்குப் போ, எடை போட்டுக் கொண்டு வா, கஸ்டமருக்கு நாலு காஃபி சொல்லு, ஜூஸ் கிளாஸை எடுத்திட்டுப் போ, இந்த டேகை எல்லாம் இதில் கோர்த்து வை’ என தண்ணீர்மலை இடைவிடாது வேலை கொடுத்தான்.

முதலில் எதுவும் தோன்றாமல் அவன் சொன்னதைச் செய்தவளுக்குப் பிறகுதான் ‘ஏதோ சரியில்லை’ என்று உரைத்தது. மதியம் ஆனதும் அன்று அமைதியாக சாலைக்குச் சென்றுவிட்டாள்.

அடுத்த வந்த இரண்டு நாள்களும் அதுவே தொடர, அநாவசியமாக அவன் தன்னை வேலை வாங்குவதும், மாமா சிவானந்தன் இல்லாத தளத்தில் அவளுக்கு வேலை கொடுப்பதும், மற்ற ஊழியர்கள், குறிப்பாக சில பெண்கள் இதை ஏதோ, அவர்களே இவளைப் பழி வாங்கியது போல் பார்த்ததும்…

வைரவனும் சில ஆசாரிகளும் கூட “என்னாச்சுமா, உடம்பு சரி யில்லையா?” எனறு விசாரித்தனர்.

ஆபரண மாளிகையின் ஒவ்வொரு அசைவும் பதிவாகும் வண்ணம், சிசிடீவிகள் நீக்கமற நிறைந்திருக்க, மாமா சிவானந்தனுக்கோ, அவர்களது தந்தை முருகப்பனுக்கோ இங்கு நடப்பது எதுவுமே தெரியாது என்று அவளால் நம்ப முடியவில்லை. ஆனால், ஏன்?

நான்காவது நாள் மதியம் வழக்கமான நேரத்திற்கு சிவானந்தனிடம் சொல்லிவிட்டு சாலைக்குக் கிளம்பும் நேரம், சரியாக அங்கு வந்த தண்ணீர்மலை “கடைல இன்னைக்குக் கூட்டம் அதிகம். வேலை இருக்கு. இங்கேயே இருக்கலாமே”

சிவானந்தன் யோசனையாகத் தம்பியைப் பார்க்க, பொறுமை இழந்த மேதா, சற்றும் தயங்காது “ஸாரி ஸர், நான் டிஸைனர். சேல்ஸ் கேர்ல் இல்லை” என்றவள், பதிலை எதிர்பாராது வெளியேறினாள்.

சாலைக்குச் செல்ல மனமின்றி, வைரவனுக்கு ஒரு மெஸேஜைத் தட்டிவிட்டு, நேரே வீட்டுக்குச் சென்றுவிட்டாள்.

நிச்சயமாகக் கடையில் வேலை செய்யும் விற்பனைப் பெண்களை மேதா தன்னைவிடக் கீழாக எண்ணவில்லை. ஆனால், அது அவளது வேலையில்லை. ஆள்கள் குறைவு, கூட்டம் அதிகம். கொஞ்சம் பாரு என்றால் உதவி செய்வது வேறு. இது ஏதோ பழி வாங்குவதைப்போல்…

ஐந்து மணிபோல் வைரவனை அழைத்த மேதா “எனக்கு உங்க கிட்டப் பேசணும், எங்க பார்க்கலாம்?”

*******************

காலை பதினோரு மணி வெயில் சுள்ளென்று அடிக்க, தேனாற்றுப் பாலத்தின் அருகே கரையோரமாய் இருந்த விநாயகர் கோவிலில் தன் ஸ்கூட்டரில் வந்து இறங்கிய மேதா, சுற்றும்முற்றும் பார்த்தபடி, கோவிலின் முன் மண்டப நிழலுக்குள் சென்று கட்டைச் சுவற்றில் அமர்ந்தாள்.

அது பெரிய கோவிலெல்லாம் இல்லை. ஆற்றங்கரைப் பிள்ளையாருக்கு சிறியதாக ஒரு கூரையும், மண்டபமும் இருந்தது. அவ்வளவே. யாருமில்லை. தேவகோட்டை போகும் ரஸ்தாவாதலால் வண்டிகள் விரைந்தன.

‘இந்தக் கோயில எங்க புடிச்சான், ஆளையும் காணும்’

“ஹலோ” என்ற குரலில் திடுக்கிட்டுத் திரும்பியவள், வைரவனைக் கண்டு ‘ஊஃப்’ என ஆசுவாஸித்தாள்.

மேதா “ஊருக்குள்ளயே எங்கேயாவது மீட் பண்ணி இருக்கலாம்

“ஏன், காரைக்குடி ஃபுல்லா நாம ரெண்டு பேரும் வைரல் ஆகணுமா?”


“ஆனா ஆகட்டும்”

“ஹலோ மேதாவி மேடம், சின்ன ஊரு, அநேகம் பேருக்கு என்னைத் தெரியும்”

“ஆமாமா, நீங்க பெரிய கானாடுகாத்தான் இளவரசர் பாருங்க” என்றவளது தொனியில் ஒரு பக்கமாக சிரித்தவனின் பூனைக்கண்களும் சேர்ந்தே சிரிக்க, சட்டென பார்வையை அகற்றிக்கொண்டாள்.

“சரி, அது போகட்டும், இந்த மீட்டிங் எதுக்கு?”- வைரவன்.

“உங்களுக்கு இன்னொரு பேர் இருக்காமே” - மேதா.

“ஆமா, மாணிக்பாட்ஷா”

மேதா முகத்தைத் திருப்பிக்கொள்ள, வைரவன் “யார் என்ன சொன்னாங்க?”

“உங்களுக்கும் ஐயா வீட்டுக்கும் என்ன உறவு?”

“வைரவபீடியாவை படிக்கதான் என்னை இங்க வரச் சொன்னீங்களா, எனக்கு ஊர்ப்பட்ட வேலை கிடக்கு மேடம்”

“ம்ப்ச், நான் வேலைய விட்டுக் கோயம்புத்தூருக்கே போயிடப் போறேன்”

“நல்லது, இதை ஏன் எங்கிட்ட சொல்றீங்க?”

“ஒரு கேள்விக்குக் கூட ஒழுங்கா பதில் சொல்ல மாட்டீங்களா அரசு ஸார்?”

மேதாவையே சில நொடிகள் கூர்ந்தவன் “தண்ணீர்மலை கிட்ட முதல்நாளே இது என் வேலை இல்லைன்னு சொல்றதை விட்டு என்னைக் கேள்வி கேட்டா?”

“?!?!?”

“என்ன?”

“உங்களுக்கு எப்படி…?”

“இதெல்லாம் ஒரு மேட்டரா, அவன் புத்தி அவ்வளவுதான்”

“அவரு திடீர்னு ஏன் இப்டி செய்யறாரு?”

“உங்களுக்குத் தெரியலையா?”

“நான் யாரோட பேசினா அந்தாளுக்கென்ன?”

“புரியுதில்ல, அவ்வளவுதான் விஷயம். போடான்னு போய்க்கிட்டே இருக்கணும். இப்ப நான் கிளம்பவா?”

“...”

“இன்னும் என்ன?”

“அந்த வாட்டர்ஹில் அப்படி செஞ்சது, சிவா மாமாவுக்கு, அவங்க அப்பாவுக்கெல்லாம் தெரியாமலா இருக்கும்?”

“நிச்சயமா தெரிஞ்சுதான் இருக்கும். ஏன், உங்க அக்காக்கு கூட தெரிஞ்சு இருக்கலாம்”

“வாட் அப்ப எல்லாருக்கும் அவன் செஞ்சதுல சம்மதமா?”

“...”

“நீங்களும் இன்னும் எந்த வேலையும் தரல. நானும் வேலைல சேர்ந்து நாப்பது நாள் ஆச்சு. இங்க இருந்து ஒரு யூஸும் இல்லை”

“...”

“நான் பேசாம ஊருக்கே போறேன்”

“உருப்படியான வேலை, செய்ங்க, நான் வரேன்”

“அதை அந்த பிள்ளையார் கிட்ட சொல்லிட்டுப் போங்க”

‘இதைச் சொல்ல ரகசிய லொகேஷன் வேற எட்டெட்டும் பதினாறு கிலோமீட்டர் வந்து… பெட்ரோல் வேற தண்டம்’

வைரவன் சென்றுவிட, மேதா அங்கேயே அமர்ந்திருந்தாள். பைக் சத்தம் கேட்டு நிமிர, வைரவன்தான், இளநியுடன் வந்தான்.

“இந்தாங்க மேடம், கூல் டவுன்”

“இந்த மேடம் இப்ப ரொம்ப அவசியமா?”

வெயிலுக்கு இளநீர் வெகு இதமாக இருந்தது.

“தேங்க்ஸ்”

“நான் ஒன்னு சொல்லவா, உங்களுக்கு ஹோம்சிக்கா இருக்குன்னு நினைக்கிறேன். எதானாலும் ஊருக்குப் போய் முடிவு பண்ணுங்க”

“அப்ப என்னை போகச் சொல்றீங்களா?”

‘ஆத்தீ, படுத்தறாளே’

“இந்த ஆட்டத்துக்கு நான் ஆளில்லை. இப்ப போகலாம் வாங்க”

இவனை எதற்கு அழைத்துப் பேசினோம் என்று புரியாது மேதாவும், இவ ஊருக்குப் போனா திரும்பி வருவாளா என்று வைரவனும் யோசித்தபடி அவரவர் வண்டியில் அவரவர் வீடுகளுக்குச் சென்றனர்.

*******************

குடும்பமே கூடி இருக்க, சக்கரை ஐயா கோபத்தில் எல்லாரையும் வறுத்தார்.

“ஏன்டா, சம்பந்தி வீட்டுப் பொண்ணுன்னு தெரியாதா, இப்படியா மானத்தை வாங்குவீங்க? முருகா, நீ பெரியவன்தானே, இது தெரிஞ்சதுமே நிறுத்தி இருக்க வேண்டாமா?”

“அப்புச்சி, கடைல கூட்டமா இருந்….”

“அந்தப் பொண்ணு வர்றதுக்கு முன்னால நாம வியாரமே பண்ணலை பாரு!”

“...

“ஏன் சிவா, உன் மாமனார், பேரம்பிண்டியோட தங்கச்சிய நாம சொன்னதன் பேர்ல உன்னை, நம்மை நம்பி, மதிச்சுதானே நம்ம கடைக்கு அனுப்பி இருக்காங்க? அந்த மரியாதையை நீ காப்பாத்த வேணாமா? விஷயம் இப்படின்னு எங்கிட்ட சொல்லி இருக்கலாமே?”

“மேதா எதுவுமே சொல்லலை தாத்தா…” என்று இழுத்த சிவானந்தன், மனைவியைப் பார்க்க, ராகவி முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்றாள்.

“நானும் சொல்லத்தான் செஞ்சேன், இந்தப் பய கேக்கலை”


ஐயா தண்ணீர்மலையிடம் “உனக்கு எல்லாத்துலயும் ஆத்திரம், அவசரம். ஊரெல்லாம் ஜம்பமா சம்பந்தி வீட்டுப் பொண்ணுன்னு சொல்லிட்டு, தண்ணி குடு, காஃபி கிளாஸை எடுத்துட்டுப் போன்னு சொல்லி இருக்கீங்க. ஃபாரின்ல டிஸைனிங் படிச்ச பொண்ணை நாலு நாளைக்கு மொத்த கடையும் வேடிக்கை பார்த்திருக்கு”

“...”

“ரெண்டு நாள் சாரதி ஊர்ல இல்லை, நானும் வரலைன்னதும் உன் இஷ்டப்படி நடந்திருக்க. திரும்பி வந்த சாரதி சொல்லியும் நீ நிறுத்தலை. உன்னைக் கண்டிக்காம உங்கப்பனும் அண்ணனும் காந்தாரி மாதிரி கண்ணைக் கட்டிக்கிட்டாங்க போல”

தண்ணீர்மலை “அந்தப் பொண்ணுதான்…” என்று ஏதோ சொல்ல வர, கையமர்த்தினார் பெரியவர்.

“அந்தப் பொண்ணு என்ன செய்யுறா, யாரைப் பாக்குறா, யாரோட பேசுறா இதெல்லாம் அவ விருப்பம். அதோட, ஊரான் வீட்டுப் பொண்ணைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ நீ யாரு?”

முருகப்பனின் மனைவி தெய்வானை “இது என்ன ஆஃபீஸ் வேலையா, உன் வேலை, என் வேலன்னு பிரிக்க? வேலைக்குன்னு வந்துட்டா சொன்னதை செய்ய வேண்டியதுதான். அவளும் அவ உடுப்பும், சிரிப்பும்…”

ராகவி சிவானந்தனை முறைத்துவிட்டு உள்ளே செல்ல “நீங்க வேற ஏம்மா?”

சக்கரை ஐயா “அந்தக் காலத்துலயே நம்ம வீட்டுப் பொம்பளைங்க புருஷங்காரங்க கடல் கடந்து போனா, உள்ளூர் வியாபாரத்தைக் கவனிப்பாங்க. அவங்களை நம்பிதான் விட்டுப் போனாங்க. இந்த சொகுசு அப்பல்லாம் கிடையாது. ஆச்சிங்கதான் காடு, கழனி, கடை, வியாபாரம், மாடு, கன்னு, பணப் பட்டுவாடா, லேவா தேவின்னு அத்தனையும் முன்னால நின்னு செஞ்சாங்க”

“...”

“பொண்டாட்டிய புருஷனும் புருஷனை பொண்டாட்டியும் நம்பலைன்னா வீட்டுக்குள்ளயே கிடந்து சந்தேகத்துல வெந்து புழுங்கி, மக்கி மண்ணாப்போக வேண்டியதுதான்”

“அது சின்னப் பொண்ணு. சிரிச்ச மொகமா, கலகலப்பா இருக்கா. இப்ப சம்பந்திகிட்ட என்ன சொல்லுறதுன்னு தெரியல. உங்களுக்குதான் சம்பந்தி. நீங்க படவேண்டிய கவலைய இந்த வயசுல நான் படறேன்”

தண்ணீர்மலை “அவ யார்கிட்டயும் சொல்லாம ஓடிப் போனதுக்கு நாம ஏன்…”

சக்கரை ஐயா “என்ன பேச்சு இது, அவ ஏன் உன்கிட்ட சொல்லணும்? அந்தப் பொண்ணை வேலை கத்துக்க வரச்சொன்னது நான். வேலை பழகச் சொன்னது அரசுகிட்ட. எங்க ரெண்டு பேர் கிட்டயும் சொல்லிட்டுதான் போய் இருக்கா”

மேதா சென்றது வைரவனுக்குத் தெரியும் என்றதில் தண்ணீர்மலையின் அசூயை அதிகரித்தது.

“அதோட இங்க யாரும் அடுத்த வீட்டுப் பொண்ணை மரியாதைக் குறைவா பேச வேணாம். முருகா, சொல்லி வை” என்ற ஐயா என்றுமில்லாமல் “வாடீ உள்ள” என்று மனைவியிடமும் எரிந்து விழ, நிசப்சம் நிலவியது.

********************

ஆயாவின் மறுப்பையும், பொறுமையாக இரு என்ற ஆலோசனையும் வேலைக்காகாது போக, குழந்தைபோல் “எனக்கு அப்பா கிட்ட போகணும்” என்றவளைத் தனியே விட மனமின்றி, பேத்தியுடன் பெரியவரும் கோயம்புத்தூர் சென்றார்.

மேதாவுக்குப் பெற்றோரிடம் எதையும் ஒளித்துப் பழக்கமில்லை. அவள் ராகவியின் வீட்டுக்குச் சென்றது முதல் வழியில் வைரவனைப் பார்த்தது, அவளிடம் தண்ணீர்மலை நடந்துகொண்ட விதம், வைரவனை தேனாற்றங்கரைப் பிள்ளையார் கோவிலில் தனித்து சந்தித்தது வரை ஒப்பித்து விட்டாள்.

“நீ பாட்டு புறப்பட்டு வந்துட்ட. ராகவி அங்க இருக்காளே, அவளை என்ன சொல்லுவாங்களோ” - நளினி.

“ஏய் நல்லி, அறிவிருக்கா உனக்கு. குட்டிமாதான் அந்தப் பையனோட பார்வையும் பேச்சுமே சரியில்லைன்னு சொல்றால்ல? லவ் பண்ணத் தெரிஞ்சவளுக்கு புருஷனையும் அவங்க வீட்டையும் ஹேண்டில் பண்ணவும் தெரியும், தெரியணும்”

“அவ மாசமா இருக்கா மாமா…”

“அது அவங்களுக்கில்ல புரியணும். முந்தா நேத்து நடந்தது. நேத்து முடிவு பண்ணி இன்னைக்கு இங்க இருக்கா. அவ தங்கைதானே, ஒரு ஃபோன் கூடவா பண்ண முடியல. சும்மா இருக்கும்போது குளிச்சியா, டாய்லெட் போனியான்னு நூறு ஃபோன் பண்றவளுக்கு இப்ப என்ன கேடு?”

“தம்பி…”

தந்தையின் கோபத்தில் மேதாவுக்கு, தான் செய்தது சரியா என்ற பயமே வந்துவிட்டது.

“டாடி”

“இங்க வாடா செல்லம்” என்றவர், மகளின் கையைப் பிடித்துக் கொண்டு “நீ எங்கேயும் போக வேணாம். எங்கூடவே இரு” என்று உருகியதில், நளினியும், அவள் அம்மாவும் அமைதியாகி விட்டனர்.

“பாலா எங்கம்மா?”


ராமநாதன் நளினியைப் பார்க்க, நளினி “பாலா காலைல ரொம்பவே மூர்க்கமா ஆயிட்டான். மொபைலை கேக்கறான். குடுக்கலைன்னா வயலன்ட்டா ஆயிடறான். இப்படி அடிக்கடி நடக்குது. நம்ம ஈஸ்வரியோடது (பணிப்பெண்) பட்டன் ஃபோன், அதை எடுத்துப் பாத்துட்டு, அதுல படம் வராதுன்னதும் தூக்கி எறிஞ்சுட்டான். பிறகு படபடப்பு அதிகம் ஆனதால மருந்து கொடுத்து, இப்பதான் தூங்கறான்” என்றாள்.

மேதாலக்ஷ்மிக்கு அவளிடமிருந்து பெற்றோர் எதையோ மறைப்பதாய் தோன்றியது.
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: தங்கச்சிலை போல் வந்து மனதை…! 5
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
113
வாட்டர் ஹில் கொஞ்சம் ஓவரா தான் செஞ்சுட்டான் ஜொள்ளு பார்ட்டி 😡😡😡😡😡
 

eswari

Member
Joined
Jun 19, 2024
Messages
45
Appuchchi 👏👏👏👏👏
Love panni thaana kalyaanam mudinjithu...appo pesa vendiyathu thaana thangaikaaga....
Good going ji 👍👍👍👍
 

Kokila Balraj

New member
Joined
Jun 19, 2024
Messages
6
அடேய் பார்க்கல பார்க்கலன்னு விலாவரியா பார்க்கற மேன்
 
Joined
Jun 19, 2024
Messages
26
வைரவன் மைண்ட் வாய்ஸ்..😂
போனா வருவாளோ...வந்தா இருப்பாளோ
சண்டாளி உன் நினைவால நா சருகா உருகுறேனே...
🤪
 
Joined
Jun 19, 2024
Messages
33
😍😍😍

"இவ ஊருக்கு போனா திரும்பி வருவாளா? 🤔🤔 அதெல்லாம் கண்டிப்பா வருவா, வரலையின்னா கட்டி இழுத்துட்டு வந்துர மாட்டோம்..😁😁

 

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
😍😍😍

"இவ ஊருக்கு போனா திரும்பி வருவாளா? 🤔🤔 அதெல்லாம் கண்டிப்பா வருவா, வரலையின்னா கட்டி இழுத்துட்டு வந்துர மாட்டோம்..😁😁


😍😍😍

"இவ ஊருக்கு போனா திரும்பி வருவாளா? 🤔🤔 அதெல்லாம் கண்டிப்பா வருவா, வரலையின்னா கட்டி இழுத்துட்டு வந்துர மாட்டோம்..😁😁

💝💝💝
 

dharani

Member
Joined
Jul 6, 2024
Messages
26
ராகவி சத்தியமா உன் மேல செம கடுப்பு ஆகுது... உன்னால் உன்னோட தம்பி தங்கை ரெண்டு பேரும் சங்கட படுறாங்க ஆனா உனக்கு அதை பத்தி கொஞ்சம் கூட அறிவு இல்ல... உன் வீட்டு ஆள் சரி இல்ல அவனை பத்தி தங்கை கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம உனக்கு பிடிகலனு ஒரு காரணத்தக்காக வைரவன் பத்தி குறையா படிக்கிற... பரவில்லை ஐயாவாது நேர்மையா இருக்காரே... ராகவி மாமியார் சொல்லுறதுக்கு ஒன்னும் இல்ல
 

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
ராகவி நிஜமாவே மேதாவோட அக்கா தானா? ஜொள்ளு பார்ட்டிய கண்டிக்கிறது விட்டுட்டு, மாமியார் அதுக்கு மேல, பரவாயில்லை ஐயா கரெக்டா இருக்கார்
 

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
ராகவி -
பயங்கொள்ளியா?
கோழையா?
வாயில்லாப்பூச்சியா?
அல்லது, சுயநலவாதியா??
 
Top Bottom