• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

டார்லிங் டார்லிங்

siteadmin

Administrator
Staff member
Joined
Jun 18, 2024
Messages
89
டார்லிங் டார்லிங்



முடிவு பண்ணி விட்டான் மாதவன். தனிக் குடித்தனம் தான் இந்தப் பிரச்சனைக்கு சரியான தீர்வு.

பாவம் வாணி!.எத்தனை வேலைகள்? காலை அஞ்சு மணிக்கு எழுந்திருக்கிறாளோ இல்லை அதற்கும் முன்னாலோ தெரியாது. மாதவன் எழுந்திருக்கும் போது காலை டிபன் ரெடியாக இருக்கும். மதிய சமையல் பாதிக்கு மேல் முடிந்திருக்கும்.

துணி துவைத்து உலர்த்தி எல்லோருக்கும் உணவு பரிமாறி லஞ்ச் பாக்ஸ் பேக் செய்து எல்லாம் டயத்துக்கு முடிக்கணுமே!.அவசரமாக சாப்பிட்டு விட்டுத் தானும் ஆஃபிஸுக்குக் கிளம்பியாகணும்.

"ஹெல்ப்பிற்கு ஆள் போடலாம். உனக்கு சௌகர்யமாக இருக்கும். சமையலுக்கு ஒரு மாமி.மற்ற வீட்டு வேலைகளுக்கு ஒரு ஹெல்ப்பர்."

"அதெல்லாம் வேண்டாங்க.அவர்கள் சமைப்பதில் ருசியும் இருக்காது. சாமானும் நிறைய வேஸ்ட்டாகும்.அதுவும் நம்ப வீட்டில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டேஸ்ட்."

அதுவும் சரி தான். ஒருத்தருக்கு வெங்காயம் பிடிக்காது.ஒருத்தருக்கு பூண்டு பிடிக்காது. ஒருத்தருக்கு வெங்காயம், பூண்டு இல்லாமல் சாப்பாடே பிடிக்காது.வேலைக்கு வைக்கற ஆள் அதெல்லாம் லட்சியம் செய்வார்களா? மொத்தமாக ஒரே ஐட்டம் ராத்திரி எட்டு மணிக்கு சாப்பிடும் டின்னர் மாலை நான்கு மணிக்கே செய்து மூடி வைத்து விட்டுப் போவார்கள்.

நமக்கெல்லாம் சரிப் படுமா ? வீட்டில் யாருமே அட்ஜஸ்ட் பண்ணிக்கிற டைப் இல்லையே!

பெரியவர்கள், சின்னவர்கள் எல்லோருக்கும் பார்த்துப் பார்த்துச் செய்ய வாணி போல முடியுமா? அமையுமா? நடக்காத காரியம்.

முடிவு எடுத்தாகி விட்டது. தனிக் குடித்தனம் ஒன்று தான் வழி.இப்போது எல்லோரையும் மனம் கோணாமல் கன்வின்ஸ் செய்ய வேண்டிய பெரிய பொறுப்பு மாதவன் கைகளில்.

முடிவு செய்தவுடன் அதற்கான வேலைகளையும் தொடங்கி விட்டான். நாலைந்து நாட்களாக ஸெல்ஃபோனில் நண்பர்களுடன் பேசி எல்லா ஏற்பாடும் ஒரு வழியாக ஆரம்பித்து விட்டான். நேரில் குடி போனதும் மீதி அரேஞ்ச்மெண்ட் பார்த்துக் கொள்ளலாம்.

அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை.எல்லோரும் கொஞ்சம் லேட்டாக எழுந்து மெதுவாக எல்லா வேலைகளும்
ஆகும்.அன்றும் பாவம் வாணிக்குத் தான் ரெஸ்டே கிடையாது. ஸ்பெஷல் சமையல் என்று அசத்தலாக ஏதாவது செய்வாள்.

வீடு க்ளீனிங் அது இது என்று எத்தனையோ வேலைகள்.

நிம்மதியாக மனைவியோட பேசக் கூட முடியவதில்லை.இதிலே ரொமான்ஸாவது.ஒரு கத்திரிக்காயோ மண்ணாங்கட்டியோ கிடையாது. என்ன லைஃப் இது?

லஞ்ச் முடிந்து எல்லோரும் ரிலாக்ஸ் செய்து எழுந்ததும் கையில் காஃபிக் கப்புடன் உட்கார்ந்து கொண்டு எல்லோரையும் ஹாலுக்கு வரச் சொன்னான் மாதவன்.

எல்லோரையும் பார்த்துப் பேசினான் ஸாரி பேசினார் அறுபத்திரண்டு வயதான மாதவன்.

"பசங்களா,அம்மாவுக்கும் எனக்கும் வயதாகி வருகிறது. நான் ரிடயர் ஆயாச்சு.அம்மாவுக்கு அடுத்த மாதம் ரிடயர்மெண்ட் .இவ்வளவு நாள் ஓடிக் கொண்டே இருந்து விட்டோம்.வாணிக்கும் ஓய்வே இருந்ததில்லை. அதனால் அடுத்த மாதம் நாங்கள் இரண்டு பேரும் கிளம்பி
கிராமத்து வீட்டுக்குப் போய் டென்ஷனில்லாத வாழ்க்கை வாழப் போகிறோம்.நண்பர்களிடம் பேசி வீட்டை ஓரளவு ரெடி பண்ணச் சொல்லி விட்டேன்.
நாங்கள் இரண்டு பேரும் நிம்மதியாகத்
தனிக் குடித்தனம்.நீங்களும் லைஃபை எங்கள் உதவி எதிர்பார்க்காமல் சமாளிக்கக் கற்றுக் கொள்ள வேண்டாமா? அதற்காகத் தான் இந்த ஏற்பாடு?உங்களுக்கும சுதந்திரம் .எங்களுக்கும் ஓய்வு."

ஆச்சர்யமாக மாதவனின் மகனும் மருமகளும் பேரக் குழந்தைகளும் அவரைப் பார்க்க வாணி ஏதோ மறுத்துச் சொல்ல வந்தாள்.

மருமகள் அனுஷ்கா அவளை நிறுத்தினாள்.

" அம்மா,அப்பா சொல்வதும் சரி தான். நீங்கள் இங்கே இருந்தால் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து எங்களையும் சோம்பேறி ஆக்கி விடுகிறீர்கள். வாழ்க்கையை என்ஜாய் செய்யுங்கள். நாங்கள் இங்கே சமாளித்துக் கொள்கிறோம்.எங்களைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம்."

"அப்புறம் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் எல்லோரும் லீவுக்குக் குழந்தைகளுடன் வந்து கிராம வாழ்க்கையை ரசிக்கலாம். சரியா?"

எல்லோரும் மகிழ்ச்சியுடன் கைதட்டி மாதவனின் ஐடியாவை ஏற்றுக் கொள்ள
அடுத்த வாரமே மாதவனும் வாணியும் கிராமத்திற்குத் தனிக் குடித்தனம்.

புதுப்பெண் போல வெட்கப்பட்டுக் கொண்டு கணவரை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு வாணி காரில் கிராமத்துக்குச் சென்று கொண்டிருக்கிறாள்.

சிரித்த முகத்துடன் காரை ஓட்டி வருகிறான் அவர்களுடைய மூத்த மகன் பெற்றோரை டிராப் செய்ய.

நல்ல புரிதலுடன் அந்தக் கூட்டுக் குடும்பம் பெற்றோரின் தனிக் குடித்தனத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டது.
 

Author: siteadmin
Article Title: டார்லிங் டார்லிங்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
175
சூப்பர் சூப்பர் அம்மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
 

kothaisuresh

Active member
Joined
Jun 19, 2024
Messages
107
சூப்பர், தனிக் குடித்தனம் அவசியம் தான்
 
Top Bottom