• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

சுயம்பு 42

Subha Balaji

Member
Joined
Jun 30, 2024
Messages
71
சுயம்பு-42

ஷில்லாங்க் போய் இறங்கி ஏர்போர்ட் விட்டு வெளியே வர..மெல்லிய பூந்தூரல் அவர்களை வரவேற்றது. அதில் ஆனந்தமாக நனைந்த படி வந்திருந்த மல்ஹோத்ராவின் காரில் ஏறி வீட்டுக்கு போய் சேர்ந்து குழந்தைகளை வீட்டில் ஓடி விளையாட விட்டு அவர்களும் பழைய கதைகளை பேசியபடி நன்றாக சாப்பிட்டு ஓய்வு எடுத்து கொண்டனர்.

மறுநாள் அதிகாலையே கிளம்பி ஷில்லாங்கில் இருந்து பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த உமையம்(Umiam) ஏரிக்கு போய் சேர..அவர்கள் போன போது தான் சூரியன் தன் ஆரஞ்சு நிறக்கதிர்களை பரப்பி வெளிச்சமா தந்து உதிக்கவே ஆரம்பித்திருந்தான். ..அவனின் கதிர் பட்டு அந்த ஏரியே பொன்னை உருக்கி செய்தது போல ஜொலித்தது. மல்ஹோத்ரா அந்த ஏரிக்கரையில் சூரியன் உதிப்பதை பார்ப்பது கண்களுக்கு விருந்தாக இருக்கும் என சொன்னது உண்மை என்பதை நிரூபிப்பதை போலவே அது இருந்தது.

அங்கு இருந்த பார்க்கில் குழந்தைகளோடு சற்று ஓய்வு எடுத்து கொண்டு கொண்டு வந்திருந்த ப்ரேக்பாஸ்டை சாப்பிட்டு விட்டு மறுபடியும் கிளம்பி மாஃப்லேங் என்ற காட்டுக்கு அருகில் இருந்த கிராமத்தை சென்றடைந்தனர்.

அங்கு இருந்த இயற்கை அழகை கண்குளிர பார்த்து விட்டு அந்த மக்கள் தங்கள் கலாச்சாரத்தை பாதுகாக்கும் விதத்தை பார்த்து மலைத்து போய் அந்த மலைப்பு தீராமலே 2003ல் ஆசியாவின் தூய்மையான கிராமம் என டிஸ்கவரி இந்தியாவால் புகழப்பட்ட மவ்லிங்நாங் (Mawlunnong)கிராமத்துக்கு போய் சேர்ந்து அவர்கள் தங்கள் கிராமத்தை, சுற்றப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதை, பார்த்து மகிழ்ந்து அங்கிருந்த வேர் பாலங்களுக்கு(Root Bridge) போய் பார்த்துவிட்டு அன்றிரவு அங்கேயே தங்கினார்கள்.

அரட்டையும், பாட்டும், சிரிப்புமாக அன்றிரவை அவர்கள் மிக மகிழ்ச்சியாக கழித்தனர். மறுநாள் கிளம்பியவர்களை அந்த மலை பிரதேச பயணத்தால் குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி எடுக்க..அன்றும் அங்கேயே தங்கி குழந்தைகளுக்கு உடல் நலம் சரியானதும் மறுநாள் கிளம்பி தற்போது உலகத்தின் ஈரப்பதமான இடமான (Maysymram) என்ற இடத்தை அடைந்து அங்கு தூரலாக தூரி கொண்டிருந்த மழையில் நனைந்து ஆனந்தம் அடைந்து திரும்பி வரும் வழியில் இருந்த டேவிட் ஸ்காட் ட்ரையல்(David Scott Trail) எனும் தொங்கு பாலத்தில் போய் நடந்து போட்டோக்கள் எடுத்து கொண்டு திரும்பி வர அன்றிரவு ஆனது..

குழந்தைகளை வைத்து கொண்டு ட்ரெக்கிங் போக முடியாது என்பதால் அந்த அழகான பசுமையான மலைகளை ஏக்கமாக பார்த்தபடி அடுத்த தடவை இவங்க யாரும் இல்லாம நான் மட்டும் தனியா ட்ரைய்னிங் எடுத்துக்கிட்டு ட்ரெக்கிங் போய் என்ஜாய் பண்ணணும் என மனதுக்கு நினைத்தபடி அபிமன்யு வந்தான்.

வரும் வழியில் இருந்த வாட்டர் ஃபால்ஸ் எல்லாம் பார்த்து மகிழ்ந்து ஸ்வேதா காரை நிறுத்த சொல்ல..குழந்தைகள் ஏற்கனவே மழையில் நனைந்து இருந்ததால்..

அவர்களுக்கு மறுபடியும் நனைந்தால் காய்ச்சல் வந்தால் சமாளிப்பது கஷ்டம் என கவுதமும் சத்யாவும் தீர்மானமாக சொல்லி விட..ஸ்வேதா முகத்தை தூக்கி வைத்து கொண்டு வந்தாள்.

மறுநாள் கிளம்பி பட்டர் பிளை மியூசியம், ரைனோ (Rhino) மியூசியம், மேகாலயா மாநில மியூசியம், அருணாச்சல மாநில மியூசியம், வான்கர் என்டோமாலஜி மியூசியம்(Wankhar Entomology Museum) என அன்று முழுவதும் ஷில்லாங்கில் இருந்து மியூசியத்தை சுற்றி அலுத்து போன ஸ்வேதா "நீங்க சொன்ன எல்லா இடத்தையும் பாத்தாச்சு..இப்ப எங்களுக்கு போலீஸ் பஜார்(Police Bazaar)போறத்துக்கு வழி சொல்லிட்டு ஆளுக்கு ஒரு குழந்தையை தூக்கிகிட்டு வீட்டுக்கு கிளம்புங்க..உங்க தொல்லை இல்லாம..நானும் உத்ராவும் நிம்மதியா இருக்கணும்.." என சொல்லி அவர்களை அனுப்பி விட்டு ஷில்லாங்கின் புகழ் பெற்ற போலீஸ் பஜார்க்கு போய் வீட்டினர் ஒவ்வொருவருக்கு பார்த்து பார்த்து வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்து சேர்த்தனர்.

அடுத்த நாள் முழுமையும் ரெஸ்ட் எடுத்து விட்டு மறுநாள் கவுதம், ஸ்வேதா மட்டும் குழந்தைகளோடு அங்கிருந்து கிளம்ப அபிமன்யு "நான் இனி இந்த ஊர்ல தான் இருக்க போறேன்..இங்க தான் பிராக்டிஸ் பண்ண போறேன்.." என தன் முடிவை தீர்மானமாக சொல்லவே அவர்கள் கிளம்பி போனார்கள்.

மறுநாள் சத்யா ட்யூட்டியில் சேர..உத்ரா ஹாஸ்பிடலில் லீவ் முடிந்து சேர..என வீடே காலையில் இருந்தே பரபரப்பாக இருந்தது. அதன் பின் அவர்களின் வாழ்க்கை தெளிவாக அமைதியாக போக ஆரம்பித்தது.

அபிமன்யு பக்கத்தில் இருந்த கிராமங்களுக்கு போய் அங்கிருப்போருக்கு இலவசமாக மருத்துவம் பார்க்க..அங்கிருப்போர் அவனின் கனிவான அணுகு முறை, அவர்களுக்கு உடலில் இருந்த பிரச்சனைகளை பற்றி தெளிவாக விளக்குவது, அதை பொறுமையாக சீர் செய்வது என செய்யவே அவன் அவர்களின் அன்புக்கு பாத்திரமாகி அவர்களோடு ஒன்றாகி போனான்..



எபிலாக்:

ஐந்து வருடங்களுக்கு பின்

"என்ன உத்ரா இன்னுமா ரெடியாகல" என கேட்டபடி உள்ளே ஸ்வேதா..உத்ராவை பார்த்து மலைத்து நின்றாள்..தேன் நிறத்தில்.. மெல்லிய கரையிட்ட மேகாலயா சில்க்கில் தேவதையாக ஜொலிக்க.."வா டி..அவங்க எல்லாம் ஏற்கனவே கிளம்பி வெளியே நிக்கறாங்க..நேரமாச்சு.." என சொல்லி அழைத்து போனாள்.

அவர்கள் குடியரசு தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி வந்துள்ளனர். சென்ற வருடம் மழையினால் ஏற்பட்ட மண்சரிவில் மாட்டி கொண்ட கிராம மக்களை மிக சாமர்த்தியமாக, சமயோசிதமாக காப்பாற்றிய உத்ராவின் தைரியத்தை பாராட்டி ஜனாதிபதி கையால் அன்று அவார்ட் வழங்கப்படும் என அறிவித்திருக்க அதை வாங்குவதற்காக வந்துள்ளனர்.

முதல் நாளே வந்து அவார்ட் எப்படி வாங்க வேண்டும்.. எப்படி வர வேண்டும்..எங்கு நிற்க வேண்டும்..எப்படி ஜனாதிபதியை வணங்க வேண்டும்.. எப்படி திரும்பி போக வேண்டும்.. என ரிகர்சல் பார்த்திருக்கவே அன்று ஜனாதிபதி கையால் அவார்ட் வாங்குவது உத்ராவுக்கு மிக எளிதாக இருந்தது.

விருது அறிவிக்கப்பட்ட எல்லாரும் அவார்ட் வழங்கி ஜனாதிபதி அங்கிருந்து கிளம்ப..அதன் பின் அன்றிரவு அவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் விருந்து என அறிவிக்கப்பட்டது.

அவார்ட் வாங்கி கொண்டு அங்கிருந்து வெளியே வந்தவர்களை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொள்ள.. உத்ராவையும் சில பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்விகள் கேட்க..அவர்களுக்கு அவள் பொறுமையாக பதில் சொன்னாள்.

முதலில் அவள் எப்படி அந்த கிராம மக்களை காப்பாற்றினாள்..என வந்த கேள்விகளுக்கு பதிலளித்தபடி வந்தவளை "உங்களோட லைப்ல அச்சீவ் பண்ணதுக்கு நீங்க யாருக்கு க்ரெடிட் குடுக்க விரும்பறீங்க.." என வந்து விழுந்த பர்சனல் கேள்விக்கு சிரித்தபடி..

"என்னை சேர்ந்தவங்க எல்லாருமே எனக்கு முக்கியமானவங்க..அவங்க எல்லாரும் இல்லேனா..நான் இல்ல..என்னோட அம்மா நான் ரொம்ப சின்ன குழந்தையா இருந்தப்பவே இறந்து போயிட்டாங்க.. அப்பலேந்து என் அம்மா மாதிரி என் கூடவே இருந்து என்னை பாத்துக்கிட்ட என்னோட நெருக்கமான ஆட்கள் எல்லாருமே என் வளர்ச்சிக்கு காரணம்..யாரையும் பிரிச்சு பார்க்க முடியாது..என் வளர்ச்சில எல்லாரோட பங்கும் இருக்கு.." என பதில் சொல்லி விட்டு..

" நீங்க தப்பா நினைக்கலேனா..எனக்கு கொஞ்சம் அவசர வேலை இருக்கு.. நான் கிளம்பவா.." என தன்மையாக பேசி அவர்களிடமிருந்து விடை பெற்று கிளம்பினாள்.

அன்றிரவு ஜனாதிபதி மாளிகையில் நடந்த விருந்தில் கலந்து கொண்டு மறுநாள் கிளம்பி ஷில்லாங்க் வந்து சேர்ந்தார்கள்.

சத்யாவின் அம்மா உத்ராவுக்கு குடுத்த மருந்துக்கு மாற்று மருந்து குடுத்து அவளுக்கு சரியாகி விட..அதன் பின் கர்ப்பம் தரித்து, அழகான பெண் குழந்தை பெற்று இப்போது அவளுக்கு ஒரு வயது ஆகிறது..வர்த்தினி மறக்காமல் அவளுக்கும் ஹம்சவர்த்தினி என பெயரிட்டு உள்ளனர்.

இரண்டு மாதங்கள் கழித்து அபிமன்யுவின் கல்யாணத்துக்காக ஊருக்கு வந்த சத்யா தம்பதியர் முதலில் தன் வீட்டுக்கு போய் அப்பா அம்மாவை பார்த்து விட்டு, தர்ஷினியின் வீட்டுக்கு போய் அவர்களை பார்த்து விசாரித்து விட்டு அங்கிருந்து கிளம்பி உத்ராவின் பிறந்த வீட்டுக்கு போய் சேர்ந்தனர்.

அங்கு ஏற்கனவே கவுதம், ஸ்வேதா மற்றும் அவர்களின் நண்பர்கள் என இருக்க அவர்களின் பொழுது நன்றாக போனது.

பெண் அபிமன்யுவோடு படித்தவள் என்பதால் அவளிடம் பழக இவர்கள் எல்லாருக்குமே எளிதாக இருந்தது. அவளையும் தங்களோடு சேர்த்து கொண்டு கொட்டமடித்தனர்.

கல்யாணத்தன்று குறித்த நேரத்தில் அவர்களின் குல தெய்வத்தின் ஆசிகளோடு, வந்திருந்த எல்லாருடைய மனம் நிறைந்த வாழ்த்துக்களோடு அபிமன்யுவின் திருமணம் மிக சிறப்பாக நடந்தது.

நாமும் அவர்களோடு மணமக்களை வாழ்த்தி விடை பெறுவோம்.

இக்கதையை இதுவரை படிக்க நேரம் ஒதுக்கி, பொறுமையாக படித்து உங்களின் அருமையான கருத்துக்களை தந்ததற்கு நன்றிகள் பல.
 

Author: Subha Balaji
Article Title: சுயம்பு 42
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom