Subha Balaji
Member
- Joined
- Jun 30, 2024
- Messages
- 79
சுயம்பு-4
காரில் ஏறி கார் கிளம்பியதும் வெளியே வேடிக்கை பார்த்தபடி வந்த ஸ்வேதா அடுத்த அரை மணி நேரத்துள்ளாகவே கவுதமின் தோளில் சாய்ந்து தூங்க ஆரம்பித்தாள். புன்னகையோடு அவளை சீட்டில் நன்றாக படுக்க வைத்து விட்ட கவுதம், டிரைவரை காரை நிறுத்த சொல்லி இறங்கி முன் சீட்டில் போய் உட்கார்ந்து கொண்டான்.
காரில் ஒலித்த மெல்லிய புல்லாங்குழல் இசை மனதை வருட அந்த இனிமையை கலைக்க விரும்பாத கவுதம் தன் கண்களை மூடி கொண்டவனுக்கு உத்ரா சம்பந்தப்பட்ட விஷயங்கள் அவன் கண் முன்னால் வர ஆரம்பித்தது.
ஊட்டியின் புகழ் பெற்ற ரெசிடென்ஷியல் ஸ்கூல்...ஆனுவல் ஹாலிடேஸ் முடிந்து ஸ்டூடண்ட்ஸ் அன்று தான் ஸ்கூலுக்கு திரும்பி வருவதால்...ஸ்கூல் பூராவே பிள்ளைகள் அவர்களை கொண்டு வந்து விட்ட பெற்றோர் கார்களுமாக நிரம்பி வழிந்தது.
அன்று எதுவும் வகுப்புகள் இல்லாததால் அங்கிருந்த க்ரவுண்ட்டில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு பேசி கொண்டு இருந்தனர்.
அங்கு ஐந்தாவது படிக்கும் கவுதமிடம் அவனுடைய அம்மா புவனா "கண்ணா...நீ இப்ப சின்ன குழந்தை இல்ல...பிக் பாய் ஆகிட்ட இல்லையா...அதனால யார் கிட்டயும் அசிங்கமா பேச கூடாது..சண்டை போட கூடாது...கெட்ட வார்த்தைகள் உனக்கு தெரிஞ்சிருக்கலாம்..
ஆனா அதை வெச்சு யாரையும் திட்ட கூடாது...புரியுதா..."
"இத்தனை நாளா நீ குட் பாய்னு பேர் வாங்கி மாதிரி இனி மேலும் இருக்கணும் சரியா.." என்றதும்..
பக்கத்தில் இருந்த அவருடைய கணவர் ராஜாராமன் "புவி போதும் மா...இதையே ஏன் ஒரு வாரமா சொல்லிட்டு இருக்க..அவன் தான் ஸ்மார்ட்டாச்சே..ஒரு தடவை சொன்னாலே கேப்பானே" என சொல்லி சிரித்ததும் ஓடி போய் அவரை கட்டி கொண்டு "பா..திரும்பி நான் எப்ப உங்களை பாப்பேன்..வீட்டுக்கு எப்ப வருவேன்"என ஏக்கமாக கேட்க..
"அடுத்த லீவ் வரும் போது...கண்ணா..நானே வந்து உன்னை ஊருக்கு கூப்பிட்டுகிட்டு போவேன்.. அதுவரைக்கும் நீ நல்லா படிக்கணும்..சாப்பிட எது குடுத்தாலும் பிடிக்காதுனு சொல்லாம சாப்பிடணும்.."
"உடம்பு சரியில்லேனா..உடனே உங்க வார்டன் கிட்ட இன்பார்ம் பண்ணணும்..சரியா...அவங்க குடுக்கற மருந்துகளை சாப்பிடணும்...அப்ப தான் உடம்பு சரியாகும்... நீ ஸ்ட்ராங்க் பாய் ஆகி நல்லா படிக்க முடியும்... சரியா..."
ராஜாராமன் சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் ஏஜிஎம்மாக இருக்க..புவனாவும் ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் மேனேஜராக வேலை செய்கிறார்..
அதுவரை கவுதமை பார்த்து கொண்டிருந்த அவர்களின் பெற்றோர் ஒவ்வொருவராக மறைந்து போகவே..கவுதமை பார்த்து கொள்ள ஆள் இல்லாததால்.. மிக மனவருத்தத்தோடு தான் அவனை அங்கு கொண்டு வந்து சேர்த்திருந்தனர்.
அவனும்...அவன் பெற்றோர்களும் பேசுவதை பக்கத்து தூண் மறைவில் இருந்து யாரோ எட்டி எட்டி பார்த்து விட்டு மறைவதை பார்த்தவன்..மெல்ல அந்த தூணுக்கு மறுபுறம் போய் பார்க்க...
அங்கு பாஃப் கட் தலையோடு, பெரிய கண்கள் அலை பாய, புசுபுசு கன்னத்தோடு அழகிய மான்குட்டி போல நின்று கொண்டிருந்த ஒரு குட்டி பெண்ணை கண்டான்.
"ஹாய்...உன் பேர் என்ன"என அவன் கேட்டதும்..
அவனையேஉற்று பார்த்திருந்த அந்த குழந்தையிடமிருந்து எந்த பதிலும் வராது போகவே..மெல்ல அவளருகில் போய் முட்டி போட்டு அமர்ந்து மென்மையாக "உன் பேர் என்ன பாப்பா" என மறுபடியும் கேட்டான்.
அதற்கும் அவளிடம் இருந்து பதில் வராது போகவே.. ஆச்சரியமாக பார்த்து கொண்டு இருந்தவனின் பின்னால் "அவ பேரு உத்ரா தம்பி" என குரல் கேட்டதும் திரும்பி பார்த்தான்.
நெடு நெடுவென்று உயரமாக வெள்ளை வேட்டி சட்டை நின்றிருந்தவர் அவனை பார்த்து சினேகமாக சிரித்தார்.
அவனுடைய தோளில் கை போட்டு அழைத்து போனவர் அவனிடம் "நான் உத்ராவோட மாமா...என் பேரு ராம்..உன் பேர் என்ன பா" என கேட்டதுமே கடகடவென தன்னை பற்றி மொத்த விஷயத்தையும் சொன்ன கவுதமை முதல் பார்வையிலேயே அவருக்கு மிகவும் பிடித்து போனது.
"அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல...அதனால தான் பேச வரல...உன்னால அவளை உன் தங்கை போல பத்திரமா பாத்துக்க முடியுமா...தம்பி" என கேட்டதுமே...
"என்ன சொல்றீங்க...அங்கிள்..எனக்கு தங்கை பாப்பா னா ரொம்ப பிடிக்கும்..இந்த மான் குட்டி என்னோட தங்கையா...ஹை எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா.."
"இவளை நான் பத்திரமா பாத்துப்பேன்..சாப்பிடும் போது என் கூடவே அழைச்சிட்டு போவேன்..யாரும் அவளை திட்டாதபடி பாத்துப்பேன்..அவ கூட பேசி பேசி அவளை சீக்கிரமே பேச வெச்சிடறேன்..பாருங்க அங்கிள்" என கவுதம் சொன்னதுமே சந்தோஷத்தில் கண்களில் நீர் பெருக அவனை அணைத்து கொண்டவர் வாய் தன்னையும் அறியாமலேயே "ரொம்ப நன்றி தம்பி" என சொல்லியபடி இருந்தது.
அதன் பின் அவன் பெற்றோரிடம் உத்ராவையும் அவளுடைய மாமாவையும் அழைத்து வந்தவன்..அவர்கள் இருவரையும் ராஜாராமன், புவனாவுக்கு அறிமுகம் செய்து வைத்து.."இங்க வந்ததுமே...குட் திங்க்ஸ் நடக்கும்னு சொன்னீங்களே பா...அதே மாதிரி இந்த மான்குட்டி எனக்கு குட்டி தங்கையா கெடச்சுட்டா பா..."என சந்தோஷமாக அவர்களிடம் இரைந்தான்.
அங்கிருந்த புல்வெளியில் கவுதமையும் உத்ராவையும் விளையாட அனுப்பி விட்டு உத்ராவின் மாமா ராம் "உத்ரா என்னோட தங்கச்சி குழந்தை..தங்கச்சியும் மச்சானும் மூணு வருஷத்துக்கு முன்னால வட இந்தியா டூர் போனப்ப..திடீர்னு வந்த வெள்ளத்துல எந்தங்கச்சி அடிச்சிட்டு போயிட்டா..."
"அதுலேந்து அவரே தனியா குழந்தையை பாத்துட்டு இருந்தாரு..அவருக்கு கோயமுத்தூர்ல ரெண்டு ஸ்பின்னிங் மில் இருக்குங்க.."
"அவரால மில்லையும் பாத்துக்கிட்டு...குழந்தையும் பாத்துக்க முடியல..அதான் இங்க கொண்டு வந்து சேத்துட்டாரு...அவர் உள்ளாற ஆஃபீஸ் ரூம்ல பேசிட்டு இருக்காருங்க.." என சொல்லி முடித்தார்.
அதற்குள் அவர்களை தேடி வந்த உத்ராவின் அப்பா மஹாலிங்கம் வர..அவரை பார்த்து "மச்சான்...மச்சான்...இங்க இருக்கேன்" என அழைத்து அவரையும் கவுதம் குடும்பத்துக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
பரஸ்பர அறிமுகத்துக்கு பிறகு..அங்கிருந்த கேண்டின்க்கு போய் காபி குடித்து விட்டு, தங்களுக்கு நேரமாவதாக கிளம்புவதாக சொல்லி உத்ராவின் அப்பாவும், மாமாவும் சொல்ல எல்லாருமாக அவர்களை வழியனுப்பி வைத்தனர்.
கவுதம் பக்கமாக திரும்பிய ராஜாராமன் "கண்ணா...இந்த குட்டிமாவை நீ பத்திரமா பாத்துக்கணும் சரியா..குட்டிமா..நீயும் அண்ணா கூட சமத்தா இருக்கணும்" என்றதுமே தலையாட்டிய உத்ராவை இழுத்து அணைத்த புவனா.."குட்டி மா ரொம்ப சமத்து" என கொஞ்ச..அதை உத்ரா மிக வினோதமாக பார்த்தாள்.
"கவுதம்..அப்பா நாளைக்கு ஊருக்கு கெளம்பணும்...இப்ப நாங்க கெளம்பினால் தானே அம்மாவை கொண்டு வீட்டுல விட்டுட்டு நான் போக முடியும்...டைம் ஆகுது..நாங்க கெளம்பவா" என அவர் கேட்டதும்..
"சரி பா...நீங்க சொன்னதை நான் கேப்பேன்..குட் பாயா இருப்பேன்..மான்குட்டியையும் நல்லா பாத்துப்பேன்.." என அவரை கட்டி முத்தமிட...அவரும் பதிலுக்கு அவனை அணைத்து விட்டு கிளம்ப...கிளம்பும் முன் அம்மா குடுத்த முத்தம் இன்னும் அவனுக்கு சந்தோஷத்தை தர..தன்னுடைய மான்குட்டியின் கைகளை பிடித்து கொண்டு அவர்கள் இருவருக்கும் ஆனந்தமாக கையசைத்து விடை குடுத்தான்.(தொடரும்)

Author: Subha Balaji
Article Title: சுயம்பு 4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.