Subha Balaji
Member
- Joined
- Jun 30, 2024
- Messages
- 78
சுயம்பு-26
நன்றாக தூங்கி எழுந்த உத்ரா நேரத்தை பார்க்க மணி மூணு என காட்ட..பசிக்கவே தன் போனில் வந்த கால்களை கூட பார்க்காமல் போனை எடுத்து கொண்டு வீட்டுக்கு கிளம்பினாள்.
வீட்டு வாசலில் போய் கார் நிறுத்திய சத்யாவின் காரை பார்த்ததும் தான் அவளுக்கு காலையில் சத்யா சொன்னது நினைவுக்கே வந்தது.
அவன் முகம் சிவக்க கோபத்தில் வாசலை பார்த்து உட்கார்ந்து இருந்ததை பார்த்து பயந்து போனவள்... தயக்கமாக மெல்ல வீட்டுக்கு உள்ளே நுழைந்து சத்யாவின் அருகில் போய் "சாரி சத்யா..."என்பதற்குள்..."பா..எனக்கு பசிக்கிது..டாக்டர் அம்மா சாப்பிட வராங்களானு கேளுங்க.."என அவள் முகம் பாராமல் பேச...
அதில் முகம் மலர்ந்தவள்.. சாப்பிட்டதும் சத்யாவிடம் பேசி விடலாம் என நினைத்து கொண்டு "தோ..அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்.." என சொல்லி வேகமாக போய் குளித்து விட்டு வந்தவள் தன் மாமனாரை பார்த்து "அத்தை சாப்பிட்டாங்களா...நீங்க சாப்பிட்டிங்களா..மாமா.." என அன்பாக கேட்க...
அதில் பூரித்து போனவர்.."அத்தை சாப்பிட்டா...நான் தான் நீங்க ரெண்டு பேரும் வரட்டும்னு காத்துட்டு இருந்தேன்..." என சொல்லி, சாப்பிடாமல் இன்னும் உட்கார்ந்திருக்கணுமா என சத்யா கோவமாக முறைக்க...அதை அலட்சியப்படுத்தி அவர்களோடு சாப்பிட உட்கார்ந்தார்.
முதலில் எல்லாவற்றையும் பரிமாறி விட்டு சத்யாவும் உத்ராவும் தேவையானதை பக்கத்தில் வைத்து கொண்டு உட்கார்ந்ததும் எந்த பேச்சும் இல்லாமல் அமைதியாக சாப்பிடுவது மட்டும் நடந்தது.
எல்லாவற்றையும் ஒழித்து உத்ரா டேபிள் க்ளீன் செய்து செட் செய்வதற்குள், சத்யா பாத்திரங்களை அலம்பி அடுக்கி வைத்து விட்டு அவளை திரும்பி கூட பார்க்காமல் தங்களறைக்கு சென்றான்.
அவள் மாமனார் முரளி அவளை அழைத்து தாழ்ந்த குரலில் அவன் அதுவரை கோபமாக பேசியதை சொல்லி அவன் எதாவது கேட்டால் பொறுமையாக அவனுக்கு பதில் சொல்ல சொல்லி அவளிடம் சொல்லி அனுப்பினார்.
தங்கள் அறைக்கு போனதும் கட்டிலின் கைகளை வைத்து கண்களை மறைத்து கொண்டு படுத்திருந்த சத்யாவின் அருகில் போய் உட்கார்ந்து கொண்டு "ஸாரி சத்யா.." என்றதுமே..
"தயவு செய்து இங்கு இருந்து எழுந்து போயிடு..என் கோவத்தை கிளறாதே...நான் கஷ்டப்பட்டு அடக்கிட்டு இருக்கேன்..."என்க..
"ப்ளீஸ் நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க...இன்னிக்கு நீங்க சொல்லிட்டு போன பிறகு வந்தனா போன் பண்ணாங்க.."
"போன் பண்ணி ஏதோ ஆக்ஸிடென்ட் கேஸ்...ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ண ஹெல்ப் பண்ணுனு கேட்டாங்க.. அவங்க போன் பண்ணப்ப..மணி பத்து...சரி ஒரு மணி நேரத்துக்குள்ள திரும்பி வந்துடலாம்னு நெனச்சு தான் போனேன்..."
"ஆனா அங்க போய் பார்த்தா எந்த ஆக்ஸிடென்ட் கேஸும் இல்ல..வந்தனாக்கு போன் பண்ணா முதல்ல ரிங் போச்சு... அப்றம் ஸ்விட்ச் ஆப்னு வந்துடுச்சு.."
"எனக்கு பதட்டதுல என்ன பண்றதுனு தெரியாம இருந்து கடைசில அலுப்புல என்னோட ரூம்லயே தூங்கி போயிட்டேன்... எழுந்ததும் வீட்டுக்கு வந்துட்டேன்...இங்க வந்து உங்களை பார்த்ததும் தான் நீங்க எங்கயும் போகாதேனு சொன்னதே நியாபகம் வந்தது..."என நிறுத்தாமல் பேசி முடித்தாள்.
அதுவரை அமைதியாக இருந்தவன் ஒட்டாத குரலில் "நான் சொன்னது என்னை பார்த்ததும் நியாபகம் வந்ததா... இல்ல என்னை பார்த்த பிறகு தான் உனக்கு நான் உன் புருஷன்னு நியாபகம் வந்ததா.." என கேட்க..
"ஐயோ...அப்டி எல்லாம் இல்லைங்க...ப்ளீஸ் நான் சொல்றதை புரிஞ்சுக்கோங்க...
"என்ன புரிஞ்சுக்கணும் உத்ரா...உன்னை புரிஞ்சுக்கிட்டா...உன்னால நான் இன்னிக்கு அவமானப்பட்டேனே...அது சரியாகிடுமா.."
"எவ்ளோ கேவலமா பாத்தாங்க தெரியுமா..அது சரியாகிடுமா...எல்லாம் போகட்டும்...நீ சரியா இரு..என்னோட பேச்சே தப்பா இருக்கட்டும்..."
"நான் எங்கயும் போகாதே..போற மாதிரி இருந்தா எனக்கு தகவல் குடுத்து நான் என்ன பதில் சொல்றேன்னு கேட்டுட்டு போனு சொன்னேனே...ஏன் அதை பண்ணலனு மட்டும் எனக்கு பதில் சொல்லு ..அது போதும்..."என சத்யா கேள்வி கேட்டான்.
"இல்லைங்க..நான் போறதாவே இல்ல.. வந்தனா போன் பண்ணாங்க.. நான் வரலேனு சொல்லியும் ரொம்ப கார்னர் பண்ணவே தான் நான் போனேன்..." என்றதும்
"சரி...உன் போன் குடு.."என அவள் போனை வாங்கி கால் லிஸ்டில் வந்தனா என இருந்த நம்பரை கூப்பிட...வந்தனாவின் அம்மா தான் போன் எடுத்தார்.
சத்யாவின் குரலை கேட்டு ஆச்சரியம் அடைந்தவர் அவர்களின் நலன்களை விசாரித்து விட்டு பிறகு மெல்ல "இது உங்க நம்பரா...காலைல வந்தனா உத்ராவுக்கு இந்த நம்பர்லேந்து கூப்பிட்டு இருக்காங்க...அவங்க எதுக்கு போன் செய்தாங்கனு உங்களுக்கு தெரியுமா அத்தை" என மெல்ல தன் விசாரணையை ஆரம்பித்தான்..
அவரும் "எனக்கு தெரியல தம்பி... அவ இல்ல வெளில போயிருக்கா...வந்ததும் பேச சொல்றேன்..."என போனை வைத்தார்.
சிறிது நேரத்தில் அதே நம்பரில் இருந்து போன் வர எடுத்த சத்யா வந்தனாவின் குரலை கேட்டு அவளுடைய நண்பர் யாருக்கு ஆக்ஸிடென்ட்.. இப்ப எப்படி இருக்கிறார்கள்..."என விசாரிக்க..
அதில் போலியாக தன் குரலில் ஆச்சரியம் காட்டியவள் "என் ப்ரெண்ட் யாருக்கும் ஆக்ஸிடென்ட் ஆகலையே...உங்களுக்கு யாரு சொன்னாங்க..." என்க
"காலைல நீங்க உத்ராவுக்கு கால் பண்ணதாக சொன்னா..அதான் நான் எதாவது ஹெல்ப் பண்ணணுமானு கேட்டேன்..."என சுற்றி வளைத்து கேட்க..
"என்னது...நான் உத்ராவுக்கு போன் பண்ணேனா..நல்ல ஜோக் போங்க...காலைல அத்தையோட நம்பர் ஸ்விட்ச் ஆப்னு வரவே நான் உத்ரா நம்பர்ல கூப்பிட்டு அத்தை கிட்ட குடுக்க சொல்லி அவங்க கிட்ட தான் பேசினேன்... உத்ரா கிட்ட நான் எதுவுமே பேசலையே.." என அப்பாவியாக பதில் சொல்ல "சரி ஓகேங்க" என சொல்லி போனை கட் செய்தான்.
உத்ராவிடம் எதுவும் பேசாமல் கீழே இறங்கி போனவன் தன் அம்மாவிடம் போய் "வந்தனா காலைல உங்களுக்கு போன் பண்ணாங்களா.."என கேட்க..
அவருக்கு "ஆமா டா..தம்பி என் போன் தான் அடிக்கடி ஆஃப் ஆகிடுதுல்ல.. அதால அவ உத்ரா நம்பர்ல கூப்பிட்டா.." என்றதும்
"எதுக்கு அத்தை நம்பர்லேந்து உங்களை கூப்பிடணும்.." என தன் சந்தேகத்தை கேட்க
"அவ அம்மாக்கு வர்ற வாரம் பிறந்த நாள் வருது டா...அவளுக்கு தெரியாம ஏதோ சர்ப்ரைஸா புடவை வாங்கி தரணுமாம்...அதான் என்னை கடைக்கு போக கூப்பிட்டா...ஆமா..இதெல்லாம் உனக்கு எதுக்கு...டா"
"நீ போலீஸ்காரனா உன் விசாரணைஎல்லாம் வீட்டுக்கு வெளிய தான் இருக்கணும்.. வீட்டுல இல்ல...சமயத்துல நம்ம வீட்டுல என் போன் வேலை செய்யலேனா நான் அப்பா போன்ல போன் பண்ணல...அதே மாதிரி தான் ஏதாவது இருக்கும்... இதை எல்லாம் ஒரு கேள்வினு என் கிட்ட கேக்க வந்துட்ட.."
"அது சரி...போகாத போகாத னு நான் சொல்லியும் உன் பொண்டாட்டி அவசர அவசரமா ஹாஸ்பிடல் போனாளே...அவ வந்தாளா இல்லையா.." என அவனிடம் பேச்சை மாற்ற
அதுவரை அமைதியாக பேசி கொண்டு இருந்தவன்.."என் பொண்டாட்டியா...ஏன் அவளுக்கு பேர் இல்ல..அவ பேர் சொல்லி கூட நீங்க கேட்டிருக்கலாமே..." என மறுபடியும் கேள்வி கணைகளை தொடுக்க..
"இங்க பாரு..உனக்கு எதாவது கேக்கணும்னு இருந்தா அவளை கேளு....நான் பாட்டு என் வேலை உண்டு நான் உண்டுனு இருக்கேன்.." என அலட்சிய குரலில் பதில் சொல்லி விட்டு திலகவதி நகர..
"யாரு...நீங்க.." என அதை விட அலட்சியமாக பேசி விட்டு அங்கிருந்து நகர்ந்து மாடிக்கு தங்களறைக்கு போக..அங்கு சோகமாக உட்கார்ந்து இருந்த உத்ராவை கண்டான்.
"நீ வந்தனா உன் கிட்ட பேசி வர சொன்னானு சொல்ற.. அம்மா கிட்ட கேட்டா ஏதோ புடவை வாங்க போறத்துக்கு அவங்களை வர சொன்னதா சொல்றாங்க..எனக்கு ஒரே குழப்பமா இருக்கு..." என அவளிடம் சொல்ல..
"நிஜமா எனக்கு போன் பண்ணி வர சொன்னது வந்தனா தான்.. சத்யா..ப்ளீஸ் என்னை நம்புங்க.." என அழுகுரலில் சொல்ல..
"நான் நம்பறேன்...இல்ல..ஆனா என்னை அலட்சியப்படுத்திட்டல்ல..ச்சே உன் கிட்டே இருந்து இதை நான் எதிர்பார்க்கல.." என சொல்லி அங்கிருந்து வெளியே போனான்.
அதற்கு பிறகு அவர்கள் இடையே பேச்சே இல்லாமல் போனது. சத்யா தினமும் அவள் தூங்கியபின் வீட்டுக்கு வருவது...அவள்எழுவதற்குள் கிளம்பி போய் விடுவது என நடக்க ஆரம்பித்தான். அவள் எதாவது கேட்டாலும் பதில் அளிக்காமல் மௌனமாக அங்கிருந்து நகர்வது என இருக்க ஆரம்பித்தான். பேசி சமாதானம் செய்யலாம் என உத்ரா எடுத்த எல்லா முயற்சிகளையும் அவன் தகர்த்து அவளை விட்டு விலக ஆரம்பித்தான். (தொடரும்)

Author: Subha Balaji
Article Title: சுயம்பு 26
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.