Subha Balaji
Member
- Joined
- Jun 30, 2024
- Messages
- 79
சுயம்பு-12
உத்ராவையும் அவளின் குறும்புகளை பற்றி ஏற்கனவே நன்றாக தெரிந்ததால் அங்கிருந்தவர்கள் "வா மா...குட்டி பொண்ணு..உங்கண்ணன் ஏற்கனவே சொன்ன மாதிரி எங்க ஜோதில ஐக்கியமாகிடு.."என சொல்லி அவளை வரவேற்றார்கள்.
"என்னது இது புதுசா இருக்கே..மொதல்ல..பேச்சு வேற மாதிரி இருந்தது...இப்ப வேற மாதிரி இருக்கே.."என யோசித்த உத்ராவின் முதுகில் தட்டியதில் திரும்பி பார்க்க மீரா நின்று கொண்டிருக்க...அவளை பார்த்த மகிழ்ச்சியில் "அக்கா...எப்டி இருக்கீங்க.." என கேட்டாள்
"நான் நல்லா இருக்கேன்...நீ எப்டி இருக்க..ஏன்டா...மறுபடியும் மறுபடியும் இந்த அராத்துங்க தான் உங்க கண்ணுக்கு தெரியுதா.."
"கவுதம் அம்மாவை இப்ப தான் பாத்து பேசிட்டு வர்றேன்... அவங்க சொல்லி தான் நீ இன்னிக்கு வந்ததே தெரியும்.." என சொல்லி முடித்தாள்.
அதை கேட்டதும்..அங்கிருந்தவன்.."யாரு க்ரீன் சாரி ஆன்டி தானே..அவங்க பாக்கறது, சிரிக்கறது கவுதம் மாதிரியே இருக்கவே தான் சந்தேகப்பட்டு இவளை கேட்டேன்..இவ பெரியம்மானு சொல்லவே அதிகம் யோசிக்கல.."என்றதும
"ஆமா டா..அவங்க இவளோட பெரியம்மா தான்..நீங்க ரெண்டு மூணு தடவை கவுதம் வீட்டுக்கு வந்த போதும் ஆன்டியை மீட் பண்ணாததால உங்களுக்கு அவங்களை தெரியல..." என மீரா சொன்னாள்.
"ஹேய்...வாலு..போ..உங்க க்ளாஸ் ஆரம்பிக்கற நேரமாச்சு...பர்ஸ்ட் டே வேற...லேட்டா போனா..அதுக்கு பிறகு உன்னை மார்க் பண்ணிடுவாங்க..என சொல்லி உத்ராவை அங்கிருந்து அனுப்பி வைத்தாள்.
உத்ரா க்ளாஸ் தேடி போய் உட்கார்ந்ததும் டீன் வர..அவரை வரவேற்ற ஸ்டூடண்ட்ஸை பார்த்து புன்னகை முகமாக தன்னை அறிமுகம் செய்து கொண்டு.. அவர்கள் ஒவ்வொருவராக அறிமுகம் செய்து கொள்ள சொன்னார்.
உத்ராவின் தன்னை அறிமுகம் செய்து கொண்டதும்.."நீ கவுதம், ஸ்வேதாவோட ரிலேடிவ் தானே.."என கேட்டதும் ஆம் அவள் என தலையாட்ட ஓகே சிட்டவுன்" என சொல்லி விட்டு காலேஜ் பற்றியும் அங்க நடக்கும் க்ளாஸ்களை பற்றியும் அவர்களுக்கு எளிமையாக சொல்லி புரிய வைத்து விட்டு "நாளைக்கு தான் உங்களுக்கு லெக்சரர்ஸ் க்ளாஸ் எடுக்க வருவாங்க..இன்னிக்கு எல்லாரும் இன்ட்ரோக்கு மட்டும் தான் வருவாங்க.."
"இங்க படிக்கறது உங்களுக்கு ஒரு நல்ல ஆரம்பமா இருந்து உங்க லைப்ல பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்..ஆல் த பெஸ்ட்.." என சொல்லி கிளம்பினார்.
அவர் சென்றதும் அவர்களுக்கு என அலார்ட் செய்திருந்த லெக்சரர்ஸ் எல்லாருமே ஒன்றாக வந்து தங்களை அறிமுகம் செய்து கொண்டு சென்று விட..அதன் பிறகு க்ளாஸ் பாட்டு டான்ஸ் என அமர்க்களப்பட்டது.
பத்து நாட்கள் அமைதியாக போக...அதன் பின் ஃப்ரெஷ்ஷர்ஸ் வெல்கம் பார்ட்டி என சீனியர்கள் அழைக்க அதில் பங்கெடுத்த பின்...மறுபடி அவர்களின் காலேஜ் வாழ்க்கை படிப்பு,லெக்சர், க்ளாஸ் அசைன்மெண்ட் என நகர ஆரம்பித்து அவர்களை பிசியாக வைக்க ஆரம்பித்தது.
அன்று அனாடமி முதல் க்ளாஸ் என சொல்லி பர்ஸ்ட் இயர் ஸ்டூடன்ஸ்களை அழைக்க..அங்கிருந்த ஹாலுக்கு போயினர்.
அங்கு டேபிள் மேல் வைத்திருந்த டெட்பாடியை பார்த்ததும் அலறி பயத்தில் உத்ரா மயங்கி விழ...அவளை பார்த்த பலரும் பயந்து மயங்கி விழுந்தனர்.
அவள் மயங்கி விழுந்த தகவல் கேட்டு ஓடி வந்த கவுதம், அபிமன்யு அவளை மெல்ல வெளியே அழைத்து போய் முகத்தில் தண்ணீர் தெளிக்க..அதில் மெல்ல கண் திறந்தவளின் எதிரே நின்ற அபிமன்யு "அத்தான்... அனாடமி க்ளாஸ் பாத்தாலே பயப்படறவ டாக்டர் ஆகணும்னு ஆசைப்படலாமா.."என நக்கலாக கேட்க..
அதை கேட்ட உத்ரா பல்லை கடித்தபடி.."டேய்...தம்பி...ஒரு வாட்டி பயந்தா...அப்பறமும் பயப்படுவாங்கனு யாரு உனக்கு சொன்னா.."என நக்கலாக கேட்க..
கவுதம்.."உத்ரா...மரியாதையா பேசணும்னு சொல்லி இருக்கேனா...இல்லையா.."என கண்டிப்புடன் சொல்லி அவளை முறைக்க .
"நீ சொல்ற எல்லாத்தையும் கேப்பேன்... அதுக்காக இவனுக்கு எல்லாம் மரியாதை குடுக்கணும்னு சொன்னா..அதை கேக்க மாட்டேன் அண்ணா.."என சொல்லி விருட்டென அங்கிருந்து கிளம்பினாள்.
"நம்ம உத்ரா தானே..அவ என்னை தானே சொல்றா..சொன்னா சொல்லிட்டு போகட்டும் அத்தான்...நான் ஒண்ணும் குறைஞ்சிட மாட்டேன்.." என சொல்லி அவன் கவுதமை சமாதானம் செய்து அழைத்து சென்றான்.
அதற்கு பின் உத்ரா அனாடமி வகுப்புகளில் மயங்காமல் மெல்ல அந்த சூழ்நிலைக்கு தன்னை பழக்கப்படுத்தி கொள்ள ஆரம்பித்தாள்.
கவுதம், ஸ்வேதா, அபிமன்யுவை தொடர்ந்து உத்ராவும் ஹாஸ்டலிலேயே தங்கி கொள்ள..அதன் பின் க்ளாஸ் போவது, கவுதமின் நண்பர்களோடு அரட்டை வாரக்கடைசியில் வீட்டுக்கு போவது என அவளின் நாட்கள் ஓட ஆரம்பித்தது.
ஏகப்பட்ட குறும்புகள் செய்தாலும் முதல் செமஸ்டரில் காலேஜ் டாப்பராக வந்த உத்ராவை பார்த்தவர்கள்.."குறும்பிலும் பர்ஸ்ட்டா இருந்தாலும் காலேஜ்லயும் பர்ஸ்டா வந்திருக்கா.." என பாராட்ட ஆரம்பித்தனர்.
காலேஜ் கல்ச்சுரல்ஸ்க்கு பேர் குடுக்க...நான் நீ என போட்டி போட...உத்ரா மட்டும் எதிலும் பங்கெடுக்காமல்..
பங்கெடுப்போரை எல்லாம் ஸ்டேஜ்க்கு கீழே நின்று உற்சாகப்படுத்துவதை தன் நண்பர்களோடு சேர்ந்து செய்தாள்.
சில நாட்களுக்கு பின்..அன்று அவளுடைய பெரியப்பா சுந்தரலிங்கத்தின் மகன் வருண் உத்ராவை பார்ப்பதற்காக வந்திருந்தான்.
அவள் மரத்தடி நண்பர்கள் உடன் உட்கார்ந்து இருப்பதை அறிந்து அங்கு வந்தவனை பல மாதங்களுக்கு பின் பார்ப்பதால் மகிழ்ந்து போன உத்ரா.."வாங்க அண்ணா..எப்டி இருக்கீங்க.."என உற்சாகமாக வரவேற்றாள்.
"நான் நல்லா இருக்கேன்...நீ எப்டி இருக்க...கவுதம் எல்லாம் எப்டி இருக்காங்க.."என அவர்களை பற்றி விசாரிக்க..
அப்போது அங்கு வந்த கவுதம் "வருண் அண்ணா.."என ஆசையோடு அணைத்து கொண்டான்.
"இப்ப தான் கவுதம் உன்னை கேட்டேன்...நீ வர்ற.."என்றவனை பார்த்த உத்ரா வந்ததில் இருந்தே அவன் முகம் சரியில்லாததை கவனித்தவள் "அண்ணா..வாங்க உங்க கிட்ட நிறைய பேசணும்..நாம கேன்டின்க்கு போகலாம்.... வாங்க.."என அழைத்து சென்றாள்.
அங்கு போனதும் கவுதம் அவர்களை உட்கார வைத்து விட்டு சாப்பிட டீயும் பஜ்ஜியும் வாங்கி வர...அதற்குள் வருண் வந்திருப்பதை கேள்விப்பட்ட ஸ்வேதாவும், அபிமன்யுவும் அங்கு வந்து சேர்ந்து வருணை விசாரித்து விட்டு உட்கார்ந்து கொண்டனர்.
கவுதம் வந்ததும் "சொல்லுங்க அண்ணா...என்னாச்சு..உங்களுக்கு...ஏன் உங்க முகம் ஒரு மாதிரியா இருக்கு.."என யோசனையாக கேட்டான்.
சில நிமிடங்கள் அமைதியாக இருந்த வருண்.."எனக்கு கல்யாணம் நிச்சயம் பண்ண போறாங்க கவுதம்.."என்றான்
அதை கேட்டு ஆனந்தப்பட்ட அனைவரும் அவனுக்கு வாழ்த்துக்கள் சொல்ல..உதடுகளில் ஒட்டாமல் சிரித்தவனை பார்த்த அபிமன்யு "இதை ஏன் இவ்ளோ வருத்தமா சொல்றீங்க அத்தான்.."என கேள்வியாக அவனை பார்த்தான்.
"உங்களுக்கு எங்கம்மாவை தெரியும் தானே..அவங்க குணம் பிடிக்காம தானே நான் எங்க வீட்டு பணத்தில படிக்காம..மெரிட்ல படிச்சு..சீட் வாங்கினேன்.. என் மனசுக்கு பிடிச்ச வேலையை பாக்கறேன்.."
"இப்ப எங்கம்மா என்னை கல்யாணம் பண்ண பாத்திருக்க பொண்ணும் அவங்களை மாதியே பாத்திருக்காங்க..அதே திமிர்.. அலட்டல்.."
"நேத்திக்கு அவளை தனியா பாத்து பேச சொன்னாங்கனு அவளை போய் பாத்தேன்...
அப்பப்பா..என்ன அலட்டல்..நான் படிச்சிருந்தாலும்...எங்க வீட்டோட தொழிலை பாக்காம வேலைக்கு போறது சரியில்லையாம்...அவளுக்கு பிடிக்கலையாம்.."
"வேலைக்கு போனா..அது அவளோட சர்க்கிள்ல கேவலமாம்..அதனால என் வேலையை விட்டுட்டு வந்து இங்க இருக்கிற தொழில்களை மட்டும் பாத்தா போதுமாம்..."
இப்டி கண்டிஷன் கண்டிஷனா பேசினா...நான் எந்த பதிலும் சொல்லாம எழுந்து வந்திட்டேன்.."
எங்கம்மாவையே என்னால பொறுத்துக்க முடியல...ஒதுங்கி போறேன்..வர்ற பொண்டாட்டியும் அப்டி தான்னா என் வாழ்க்கையே அவ்ளோ தான்.. இதை எப்டி சரி பண்ணறதுனு எனக்கு தெரியல.."
"வர்றவ..எங்க குடும்பத்துக்கு ஏத்தவளானு பாக்காம..அவ பணத்தை மட்டும் பாக்கற எங்கம்மாவை என்ன பண்றது..என்ன பண்ணா இந்த கல்யாணத்தை நிறுத்தலாம்னு புரியல.." என வருத்தமாக சொல்லும் போது அங்கு வந்த மீரா..கடைசியாக பேசியதை மட்டும் கேட்டு விட்டு.. "கவலைபடாதீங்க சார்.. உங்க கல்யாணத்தை நிறுத்த நான் ரெடி.."
"எதுக்கு சார் இவ்ளோ டென்ஷன்...பேசாம என்னை கல்யாணம் பண்ணி உங்க பிரச்சினையை சால்வ் பண்ணிக்கங்க.."என யோசிக்காமல் பேசினாள்.
அதை கேட்டதுமே அதிர்ந்தவர்கள் மீரா என கோரஸாக அலறினார்கள்.(தொடரும்)

Author: Subha Balaji
Article Title: சுயம்பு 11
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.