• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

சுயம்பு 10

Subha Balaji

Member
Joined
Jun 30, 2024
Messages
71
சுயம்பு-10

காலையில் வரைய ஆரம்பித்த உத்ரா மாலை வரை அங்கிருந்து எழுந்து போகாததை அறிந்து ராஜாராமன் அங்கு வந்தவர்.."ஏன்மா..உத்ரா...எதுக்கு இங்கயே அடைஞ்சு கிடக்கற...வெளியே வந்து பெரியம்மா பெரியப்பா கிட்ட பேசலாம்ல்ல.." என பாசம் ததும்ப அழைத்தார்.

"பெரியப்பா..இதோ...இன்னும் கொஞ்சம் நேரத்துல இது முடிஞ்சிடும்..ப்ளீஸ் வெய்ட் பண்றீங்களா" என கெஞ்சலாக கேட்க..

அதிலேயே நெகிழ்ந்தவர்.."

அடடா..பரவால்ல..டா..இதுக்காக நீ அவசரப்பட வேணாம்...

பொறுமையா முடிச்சிட்டு வா..நாங்க காத்திட்டு இருக்கோம்.."என ஆறுதலாக சொல்லி விட்டு வெளியே போனார்.

அவர் வெளியே போய் அடுத்த அரைமணி நேரத்துக்கு பிறகு தன்னுடைய ட்ராயிங் நோட்டை தூக்கி கொண்டு வெளியே போய் பெரியப்பாவிடம் தான் வரைந்ததை காண்பித்தாள்.

அதை பார்த்ததுமே பரவசமானவர் புவனாவையும் கவுதமையும் அழைத்தவர் அவளுடைய பென்சில் ட்ராயிங்க்களை காட்டினார்.

முதல் படத்தில் அவள் முதன்முதலாக ஸ்கூல் க்ரவுண்டில் பார்த்த போது கவுதமும் அவனுடைய பெற்றோரும் இருந்த தோற்றத்தை அழகாகவரைந்திருந்தாள். அன்று அவன் அணிந்திருந்த ஷர்ட், அதன் டிசைன் கூட துளியும் மறக்காமல்

மிக தத்ரூபமாக இருந்ததை பார்த்தவர்களுக்கு அவளுக்கு கவுதம் பேரில் இருந்த பாசத்தின் அளவு புரிந்து ஆனந்தத்தில் மலைத்து போயினர்.

அடுத்தது அவர்கள் மருதமலைக்கு போனது அவள்,ஸ்வேதா, அபிமன்யு, கவுதமோடு ஒன்றாக ஒரு பாறையில் உட்கார்ந்திருந்தை வரைந்திருந்தாள்.

கடைசியாக ஸ்கூலில் இருந்து கிளம்பிய போது கவுதம் அவன் நண்பர்களோடு நின்று பேசி கொண்டு சிரித்தபடி இருந்ததை வரைந்திருந்தாள்.

எல்லாவற்றையும் பார்த்தவர்களுக்கு சந்தோஷத்தில் வாயடைத்து போனது.

"எங்க செல்ல குட்டி..எவ்ளோ அழகா வரைஞ்சிருக்கா..டேய் கவுதம் இதுக்காகவே இன்னிக்கு குட்டி பொண்ணுக்கு பிடிச்ச ஹோட்டல்ல டின்னர்க்கு போறோம்.."என அவளை ராஜாராமன் கொஞ்ச..அவளோ பெரிய மனுஷி போல சிரித்து விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

அன்றிரவு சொன்னது போல அவளை டின்னர்க்கு அழைத்து சென்றவர்கள் அவளுக்கு பிடித்ததையே எல்லார்க்கும் ஆர்டர் செய்ய சொல்ல அவளும் தனக்கு பிடித்ததை ஆர்டர் செய்து அதை எல்லாருமே சந்தோஷமாக சாப்பிட்டு வீடு திரும்பினார்கள்.

ராஜாராமன் தம்பதிக்கு பெண் குழந்தை இல்லாததால் உத்ராவை தங்களுடைய பெண்ணாகவே நினைத்து அவளை கவனித்து கொள்வார்கள்.

ஏற்கனவே நீட் எழுதி நல்ல ஸ்கோர் இருக்கவே அதன் பின் காலேஜ்க்கு அப்ளிகேஷன் வாங்குவது என அதன் தொடர்பான வேலைகளில் அவர்கள் பிசியாகிடவே..உத்ரா போர் அடிக்கிறது என சொல்லி ஊருக்கு கிளம்பினாள்.

கவுதம்க்கு கோயமுத்தூர் கவர்மெண்ட் மெடிக்கல் காலேஜில் மெரிட் சீட் கிடைத்துவிட, அவன் அங்கு போய் சேர்ந்தான். அவனுடைய பெற்றோரும் அவனுக்காக வீட்டை கோயமுத்தூருக்கு மாற்றி கொண்டனர்.

அவனுடைய காலேஜ் வாழ்க்கை இரண்டு வருடங்கள் அமைதியாக போக..அவனுக்கு தினமும் உத்ராவிடம் பேசுவது மட்டுமே பெரிய பொழுது போக்கானது.

அவனுடைய தேர்ட் இயரில் இருக்கும் போது அங்கு வந்த சேர்ந்த ஸ்வேதாவையும் அபிமன்யுவையும் பார்த்து ஆனந்தத்தில் மகிழ்ந்து போனான். அவர்களும் அவனுடனே இருந்து உத்ராவை சீண்டி விளையாடி கொண்டு இருந்தனர்.

சில நாட்களுக்கு பின் ஒரு நாள் காலை, நேரமாகிவிட்டது என அபிமன்யு காலேஜ்க்கு ஸ்வேதாவை விட்டு விட்டு வந்த கோபத்தில் அவனை மனதுக்குள் திட்டியபடி நடந்து வந்த ஸ்வேதாவின் எளிமையான தோற்றத்தை பார்த்த அருகே இருந்த மரத்தடி உட்கார்ந்திருந்தவர்கள் அவளை கூப்பிட்டு கொஞ்சம் கலாய்க்கலாம் என கூப்பிட்டனர்.

அவர்களை தான் நின்ற இடத்தில் இருந்தே பார்க்க..பத்து பேருக்கும் அதிகமா இருந்ததை கணக்கிட்ட ஸ்வேதா மெல்ல நடந்து அங்கு போய் நின்றாள்.

அங்கிருந்த மீரா அவளை பார்த்து "ஹேய்..நாங்க கூப்பிட்டா அங்கேயிருந்து நடந்து இங்க வர இத்தனை நேரமா ஆகும்..உன் பேர் என்ன..எங்கே இருந்து வர...எந்த ஸ்கூல் நீ..எவ்ளோ பர்சண்ட் எடுத்திருக்க..மெரிட்டா..மேனேஜ்மென்ட் கோட்டாவா.."என அதிகாரமாக கேட்க

அமைதியாக அவர்களை பார்த்தவள் பயந்து போனவள் போல முகத்தை வைத்து கொண்டு "என் பேரு ஸ்வேதாக்கா..எனக்கு கோயமுத்தூர் தான் சொந்த ஊருங்கக்கா..படிச்சது ஊட்டி போர்டிங் ஸ்கூல்ங்க்கா..மெரிட் சீட் தாங்கக்கா..."என பதில் சொல்ல..

அதில் வெறுப்படைந்த மீரா.."ஹேய்...நிறுத்து..நிறுத்து..என்ன விட்டா பேசிட்டே போற..எத்தனை அக்கா சொல்ற..என்னை பாத்தா வயசான மாதிரியா இருக்கு" என கத்த..

அவள் அதட்டலில் இன்னும் பயந்து அப்பாவி போல முகத்தை வைத்து கொண்டு "நா...நான் ரொம்ப பயந்தவங்க கா..நீங்க என்னை விட பெரியவங்க தானே... அப்ப உங்களை அக்கானு தானே கூப்பிடணும்" என்க

"இரு..இரு..நான் உன்னை விட ரெண்டு, மூணு வயசு தான் பெரியவளா இருப்பேன்...அதனால நீ என்னை மீரானே கூப்பிடு சரியா.."

"ஆமா..உன்னை நான் இதுவரைக்கும் பாத்ததே இல்லையே..நீ தினமும் தனியாவா வருவ.." என சந்தேகமாக மீரா கேட்க..

"இல்லீங்க கா...என் கூட தினமும் என் தம்பி வருவான்...இன்னிக்கு அவன் மொதல்லயே போயிட்டான்" என ஸ்வேதா பதில் சொன்னாள்

மீராவோடு இருந்தவர்களில் ஒருத்தி "பாத்தியா..இந்த பாப்பாவை தம்பி தான் தினமும் காலேஜ்க்கு கொண்டு வந்து விடுவானாம்ல்ல..ஏன் மீரா பேபி பாக்க அப்பாவியா இருக்கே.." என்றவள்.

"பாப்பா நாங்க உன்னோட சீனியர்ஸ்...நாங்க இப்ப சொல்றதை அப்படியே செய்யணும் புரியுதா.." என்க

"என்னக்கா செய்யணும்" என்ற ஸ்வேதாவின் கேள்விக்கு..அந்த பெண் "அதோ...தூரத்துல ரெண்டு பேரு வராங்களே...அதுல அந்த ப்ளூ ஷர்ட் போட்டவன் கிட்ட இந்த ரோஸ் குடுத்து ப்ரபோஸ் பண்ணணும்...சரியா" என்றதும்..

புரியாத மாதிரி யோசித்து விட்டு "ப்ரபோஸ் பண்றதுனா என்னக்கா" என்க

மீராவின் மற்றொரு தோழி "பாத்தியா மீரா பாப்பா எவ்ளோ அப்பாவியா பச்சை மண்ணா இருக்கு...ப்ரபோஸ்ன்னா கூட தெரியல...இது எல்லாம் எப்டி தான் டாக்டர்க்கு படிக்க வந்ததோ" என கேலி பேசினாள்.

ஸ்வேதா "ஏன் கா..இது ஸ்கூல்ல சொல்லி தருவாங்களா..எங்க ஸ்கூல்ல சொல்லியே தரலையே" என்று வெகுளித்தனமாக கேட்க..

தலையில் அடித்து கொண்டு மீரா "தோ..பாரு..அங்க வர்றவன் கிட்ட போய் இந்த ரெட் ரோஸை குடு...மத்ததை அவன் உனக்கு சொல்லி தருவான்.."என தீர்மானமாக சொல்லி அவள் கையில் ரோஸை திணித்தாள்

அவள் நகர்ந்ததும் "அந்த துர்வாசமுனி கிட்ட இந்த பொண்ணு செம்மையா மாட்டிக்க போகுது...இன்னிக்கு நமக்கு நல்ல எண்டர்டெயிண்மெண்ட் இருக்கு டி..எல்லாரும் ரெடியா இருங்க.."என சொல்லி சிரித்தபடி ஸ்வேதா போன பக்கத்தை திரும்பி பார்க்க ஆரம்பித்தார்கள்.

ப்ளூ ஷர்ட் போட்டவனின் அருகில் போய் பூ குடுத்த ஸ்வேதாவை குழப்பமாக பார்த்தவனிடம் மரத்தடியை காண்பித்து ஏதோ சொன்ன ஸ்வேதாவையும் தன்னுடன் அழைத்து கொண்டு வந்து சேர்ந்தான்.

"என்ன மீரா..ஏன் இந்த பொண்ணு கிட்ட ரோஸ் குடுத்து அனுப்பியிருக்கீங்க.." என கோபத்தோடு கேட்க..

"இல்ல..சும்மா டைம் பாஸ்க்கு தான்..டோண்ட் மிஸ்டேக் அஸ்..அவ பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்டாம்..வெல்கம் பண்ணோம்..அவ்ளோ தான்..ஐஸ்ட் ஃபார் ஃபன்" என சொல்லி சிரிக்க..

"நம்ம காலேஜ்ல ராகிங் இல்லனு நாம எல்லார்க்கிட்டயும் சொல்றோம்...நாமளே இப்டி நடந்துக்கலாமா..இதெல்லாம் ஃபன்னா"என வருத்தமாக சொல்லி விட்டு

"சரி...ரோஸ் குடுக்க சொல்லி அனுப்ப தான் அனுப்பினீங்க...

ஒரு நல்ல பொண்ணா பாத்து அனுப்ப கூடாதா...போயும் ..போயும்..இந்த அராத்து தான் உங்களுக்கு கிடைச்சுதா.." என உரத்த குரலில் சிரித்தபடி கேட்டவனை முறைத்து பார்த்தவள்...

"கவுதம்...உங்களை.. அடிக்காம மாட்டேன்.."என ஸ்வேதா துரத்த ஆரம்பிக்க..அவனும் சிரித்தபடி அவளிடம் மாட்டாமல் வளைந்து ஓட ஆரம்பித்தான்.

நடப்பதை ஒன்றும் புரியாமல் ஆச்சர்யமாக பார்த்தவர்களிடம் கவுதம் கூட வந்தவன் "ஹாய்..ஐ யம் அபிமன்யு...ஸ்வேதாவோட தம்பி..உங்களை எல்லாம் பாக்க ரொம்ப பாவமா இருக்கு...நாங்க தான் அவ கிட்ட வேற வழியில்லாம மாட்டிக்கிட்டோம்..இன்னிக்கு நீங்களா.."என சிரித்தபடி சொன்னவனை அங்கிருந்தவர்கள் மேலும் குழப்பமாக பார்த்தார்கள்.

(தொடரும்)
 

Author: Subha Balaji
Article Title: சுயம்பு 10
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom