அத்தியாயம் 17 எபிலாக்
"என்னங்க இன்னும் வர்ல?" என கோவிலின் வாசலில் காத்து நின்றனர் விஜயாவும் மதியும்.
"அப்பவே கிளம்பிட்டேன்னு கவி சொன்னாளே!" என்ற மதி,
"நீ போய் ஸ்வேதா என்ன பன்றானு பாரு. நான் அவங்க வந்ததும் கூட்டிட்டு வர்றேன்!" என்றும் சொல்ல,
"ம்ம் சரி" என்று கூறி கவிபாலாவின் ஒரு வயது மகளை தேடி சென்றார் விஜயா.
அமலி பேத்தியை கைகளில் தூக்கி வைத்திருக்க, பொங்கல் வைப்பதற்கு அனைத்தும் தயாராய் இருந்தது.
"வரலையா அவங்க?" அமலி கேட்க,
"இல்லையே! இவ சாப்பிடுவாளேனு தான் நான் உள்ள வந்தேன்!" என்றார் விஜயா.
"நான் ஊட்டிவிட்டுட்டேன் விஜயா! சித்தார்த் வந்துட்டா முடியை எடுத்துட்டு பொங்கலும் வச்சுடலாம். எல்லாரும் வந்தாச்சு!" என்று சொல்ல,
"ஆமா அண்ணி!" என்றார் விஜயாவும்.
இன்று சித்தார்த் கவிபாலா மகள் ஸ்வேதாவிற்கு முடி எடுத்து காது குத்தும் விழா. சித்தார்த் கவிபாலா சந்தித்துக் கொண்ட அதே கோவிலில் தான்.
"சித்தார்த்தை மட்டும் அனுப்பி இருக்கலாம்!" விஜயா சொல்ல,
"கவி கேட்கணுமே!" என்றார் அமலியும் சிரித்தபடி.
கோவிலுக்கு சொந்தங்களுடன் அனைவரும் தான் வருகை தந்திருந்தனர்.
வந்தபின் தான் கவிபாலா குழந்தையின் காதணியை வீட்டில் வைத்துவிட்டு வந்ததாய் சொல்லி இருக்க, சித்தார்த் எடுத்து வருவதாய் சொல்லி கிளம்பவும் தானும் உடனே வருவதாய் சொல்லி குழந்தையை அமலி கைகளில் கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டாள் கவிபாலா.
அவர்களுக்காக தான் மற்றவர்களும் காத்திருந்தனர். இதோ வாசலில் சித்தார்த் கவிபாலா என மதியுடன் வர,
"அண்ணி! வந்துட்டாங்க!" என்றார் விஜயா.
"எடுத்தாச்சா கவி?" அமலி கேட்க,
"இவங்க கையில தான் குடுத்து வச்சேன் த்தை. வீட்டுல எங்க வச்சாங்கன்னே மறந்தாச்சு. தேடி எடுத்துட்டு வர லேட்டாகிட்டு!" என்றாள் கவிபாலா.
தந்தையை கண்டதும் ஸ்வேதா அமலி கைகளில் இருந்து தாவ,
"பாப்பா அப்பாவைப் பார்த்துட்டிங்களா?" என கைகளில் அள்ளிக் கொண்டான் சித்தார்த் குழந்தையை.
"இவளால தான்! இவ கையில இருந்தா எல்லாம் மறந்துடுறாங்க!" கவிபாலா சொல்ல,
"என் கையில இருந்தா நீ எல்லாம் மறந்துடுவியே! அந்த மாதிரியா?" என்றான் அவளிடம் ரகசியமாய் சித்தார்த்.
"சித்து!" என கண்டித்து கவிபாலா கண்களை விரிக்க,
"எஸ் பாலாம்மா!" என அவன் கண் சிமிட்ட,
"இப்ப பொங்கல் வைக்குறதா வேண்டாமா? நல்ல நேரம் போகுது!" என்ற அமலி சொல்லில் தான் குழந்தையுடன் நகர்ந்தனர் அனைவருமே.
"போச்சு! அத்தை! ஸ்வே அழுறாளோ இல்லையோ! உங்க மகன் கண்ல இருந்து எப்படி தண்ணி ஊத்த போகுதுன்னு மட்டும் பாருங்க!" ஸ்வேதாவிற்கு முடி எடுத்தபின் காது குத்துவதற்காக அமர வைத்திருக்கவும் கவிபாலா அமலியிடம் சொல்ல,
"எங்க நீ அழாம கூட நின்னு பாரு!" என்று அமலியும் மருமகளை சொல்ல,
"ஏன்! பார்ப்பேனே!" என்றாலும் பயம் தான் அவளுக்குமே!
கர்ப்பமாய் இருக்கும் சமயத்தில் கவிபாலாவை எவ்வளவுக்கு தங்கினானோ அதில் கொஞ்சமும் குறைவில்லாது மனைவியோடு மகளையுமே தாங்கிக் கொண்டிருக்கும் கணவனை அத்தனை ரசித்தாள் கவிபாலா.
தன்னுடன் வேலைகளை கற்றுத் தர கவிபாலாவை அழைத்து செல்லும் அமலி அவள் கர்ப்பம் உறுதியான பின் எங்கும் அசையவிடவில்லை.
பல நேரங்களில் அவருமே வெளியில் செல்லாது அருகில் இருந்து பார்த்துக் கொண்டார்.
ஏழாம் மாத தொடக்கத்தில் வளைகாப்பு பற்றி விஜயா கேட்க, "நீங்க என்ன நினைக்குறிங்க?" என சித்தார்த்திடம் கவிபாலா கேட்க,
"ஒன்பதாவது மாசத்துல வச்சுக்கலாம் பாலா! இப்பவே அங்க போய்ட்டன்னா எனக்கு கஷ்டமில்ல? சித்தார்த் பாவம் இல்ல?" என அவன் சொல்லவும் சரி என்று பாலா சொல்லிவிட்டாள்.
அவன் அத்தனை சொன்னபின் மறுத்து கூற முடியவில்லை. ஆனால் அன்னையுடன் இருக்க மனம் அத்தனை ஆசையும் கொண்டது.
விஜயாவும் ஏழாம் மாத முடிவில் அழைத்துக் கொள்ள தயாராய் இருக்க, "சித்து! பொண்ணுங்களுக்கு அம்மாவை தான் இந்த நேரத்துல தேடும். அவ அம்மாக்கும் கூட வச்சு பார்த்துக்கணும்னு இருக்கும். அடுத்த வாரத்துல வளைகாப்பு வச்சுக்கலாம் டா!" என அமலி சித்தார்த்திடம் சொல்லவும், அவன் மனைவியின் முகம் காண, அதில் தெரிந்த ஆசைகளையும் கண்டான்.
"நான் சொன்னா சரினு தலையாட்டிடுவியா? உனக்கு பிடிச்சிருந்தா என்கிட்ட நீ சொல்ல வேண்டாமா?" என தனிமையில் மனைவி தலையில் சித்தார்த் கொட்டு வைக்க,
"உங்களுக்கு கஷ்டமா இருக்குமே! எனக்கும் தான்" என்றதும் அவன் சிரிக்க,
"அம்மா கூட இருக்கணும்மு ஆசை தான். ஆனா உங்களையும் மிஸ் பண்ணுவேன். அதனால தான் எதுவும் சொல்லல!" என்றாள் பாவமாய்.
"உன்னை என்ன செய்ய!" என அணைத்துக் கொண்டவன் அடுத்த வாரத்திலேயே பெரிதாய் மகிழ்வாய் நடத்திவிட்டான் மனைவியின் வளைகாப்பு விழாவை.
காலையில் நிகழ்ச்சியின் போது மகிழ்வாய் இருந்த கவிபாலா நேரம் செல்ல செல்ல, அவனைப் பிரிய எண்ணி கலங்கிவிட, அவளை நான்கு மணிக்கு அனுப்பி வைத்தான் சிரித்த முகமாய் சித்தார்த்.
"ஒன்பதாவது மாசமே வச்சிருக்கலாம்!" என மனைவி முணுமுணுத்து செல்வது கேட்டாலும் அசையாமல் இருந்தவன் இரவு ஏழு மணிக்கெல்லாம் தானுமாய் கிளம்பிவிட்டான் அவள் வீட்டிற்கு.
"நினச்சேன் நீ இப்படி எதாவது செய்வன்னு!" அவன் கிளம்பி வருவதைப் பார்த்து அமலி சொல்ல,
"ம்மா! இன்னைக்கு மட்டும் தங்கிக்குறேன். நான் இல்லைனா தூங்க மாட்டா ம்மா!" என்றான் அன்னையிடம்.
"நான் எதுவும் சொல்லலையே டா! தாராளமா போய்ட்டு வா!" என அனுப்பி வைத்திருந்தார்.
ஏழரை மணிக்கு அவனை தன் வீட்டில் கண்ட பின் தான் கண்கள் பளிச்சிட்டது அவன் மனைவி கவிபாலாவிற்குமே!
அடுத்தடுத்த நாட்களில் காலை மாலை என அலுவலகம் செல்லும் முன்னும் பின்னுமாய் அங்கே இங்கே என அழைந்த சித்தார்த் சனி ஞாயிருகளில் முழுதும் மனைவியுடனே நேரத்தை செலவழித்து கவனித்துக் கொண்டான்.
அடுத்த இரண்டு மாதமும் அப்படியே செல்ல, இரண்டாம் மாத முடிவில் அலுவலகத்தில் சித்தார்த் வேலையாய் இருக்கும் சமயம் விஜயா அழைத்து கவிபாலாவிற்கு வலி வந்ததாய் சொல்லி மருத்துவமனை சென்று கொண்டிருப்பதை சொல்ல, அத்தனை வேகமாய் தானும் கிளம்பி சென்றிருந்தான் சித்தார்த்.
சித்தார்த் சென்ற அரை மணி நேரத்தில் எல்லாம் அவன் மகள் இந்த பூமியில் பிறந்திருக்க, அவளைக் கைகளில் வாங்கிக் கொண்டவன் உடலெல்லாம் பூரிப்பில் கூசி சிலிர்த்தது.
"பாலா?" என மருத்துவரிடம் கேட்க,
"இப்ப ரூம்க்கு மாத்தினதும் அவங்களை பார்க்கலாம்!" என்று சொல்லி சென்றிருந்தார்.
இதோ அவள் அறைக்கு மாற்றப்பட்டிருக்க, அவள் முன் குழந்தையுடன் சென்று நின்றவன் முகத்தில் அத்தனை வெளிச்சம்.
"என்ன கனவா?" என கவிபாலா சித்தார்த் கைகளில் தட்ட, தோளில் சாய்ந்திருந்த மகளை தட்டிக் கொடுத்தான்.
அத்தனை அழுகை குழந்தையிடம். முடியை எடுக்கும் போது அழுத அழுகை முடியும் முன் கையோடு காதினை குத்தி வாங்கி இருந்த குட்டியான அந்த தோடும் அவள் காதில் சேர்ந்திருக்க இன்னும் அதன் அழகை ரசிக்கும் மனநிலைக்கு எல்லாம் வந்திருக்கவில்லை சித்தார்த்.
"பாப்பா பிறந்தப்ப இப்படி கைக்கு வாகா இல்ல பாலா! அதுக்குள்ள வளந்துட்டா!" சித்தார்த் சொல்ல,
"ஒரு வயசு குழந்தை வளந்திருக்காதா? ரொம்பத்தான்!" என்று சொல்லி சிரித்தவனை முறைத்துவிட்டு நகர்ந்தாள் அவள்.
குழந்தையின் அழுகையில் மற்றதெல்லாம் பின் என்பதை போல சமாதானமாய் தோளில் போட்டு ஆட்டிக் கொண்டிருந்தவன் ஓரிடத்தில் நிற்காமல் குழந்தையுடன் பேசியபடி சுற்றிக் கொண்டே இருக்க, அரை மணி நேர முடிவில் குழந்தை அழுகை கேவலாய் மாறி கொஞ்சம் கொஞ்சமாய் அழுததில் சோர்ந்து உறக்கத்திற்கும் சென்றிருந்தது.
விஜயா, அமலி என கவிபாலாவுடன் சேர்ந்து பொங்கல் வைப்பதில் பார்வை சென்றிருக்க, அவ்வபோது கணவனையும் திரும்பிப் பார்த்துக் கொண்டாள் கவிபாலா.
"பொங்கல் பதம் வந்துடுச்சு! இறக்கிடலாம்!" என்று அமலி சொல்ல, கடவுளின் முன் படையல் வைத்து சாமி கும்பிட்டு என வந்தவர்களுக்கு பரிமாற ஆரம்பித்தார் அமலி.
"தூங்கிட்டாளா?" என விஜயா பேத்தியை கைகளில் வாங்கிக் கொள்ள, மனைவியைக் கண்டான் சித்தார்த்.
"ரொம்பவே அழுதுட்டா!" என்ற கணவன் முகம் சோகம் என்பதாய் இருக்க, கவிபாலாவிற்கும் வருத்தம் இருந்த போதும் கணவனைப் பார்த்து முறைத்தவள்,
"எவ்ளோ ப்ரியாரிட்டிஸ் இல்ல அவளுக்கு?" என்று கேட்க,
அதில் சின்னதாய் முறைத்தவன், "உனக்கான ப்ரியாரிட்டிஸ் என்னனு அப்புறமா காட்டுறேன்!" என்றான் அவள் கன்னம் கிள்ளி.
"வந்து சாப்பிடுங்க கவி!" மதி அழைக்க,
"இதோ பிரகாரத்தை சுத்திட்டு வர்றோம் மாமா!" என்று சித்தார்த் சொல்லவும் கவிபாலா அவனுடன் செல்ல, இன்றுமே அன்றைய நினைவுகள் தான் இருவரிடமுமே!.
அன்று தங்களை வைத்து பேசிய உறவுகள் சுற்றங்கள் தான் இன்று தள்ளி நின்று வேடிக்கை பார்க்கின்றனர் இந்த அழகிய வாழ்வியலை.
இதுவரை என்றில்லாது இனியுமே அவர்களை நினைத்து எல்லாம் இவர்களின் பயணம் நிற்கவோ தடைப்படவோ போவதில்லையே!
அதற்கான நேரங்களும் சித்தார்த் கவிபாலாவிடம் இல்லை. தங்கள் வாழ்க்கையை அனுபவித்து ரசித்து வாழவே அவர்களுக்கான நேரம் முழுதும் போதாமல் அழகாய் நகர்ந்தது. நகர்ந்து கொண்டிருக்கிறது.
முதலில் இருந்த கனங்கள் எல்லாம் இப்பொழுது காதலாய் அவர்களை தாலாட்ட, நினைவில் இருவருக்குமே புன்னகை தான்.
கவிபாலா கைகளைப் பற்றிக் கொண்டு கோவிலுள் சுற்றி வந்தவன் கைகளை இறுக்கமாய் பற்றிக் கொண்டாள் அவனவள்.
அதை உணர்ந்தவன் கைகளும் அவளை அரணாய் பற்றிக் கொண்டது புன்னகையுடன்.
இதே அன்பும் காதலும் அவர்களின் வாழ்வின் எல்லை வரை அவர்கள் உடனிருக்கும் இருவரின் நேசமாய் பலமாய் துணையாய்.
-சுபம்-

Author: Kota
Article Title: கூழாங்கல் கூவுகின்ற கானம்! 17 final
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.