காதல் காலமிது 4
கும்மிருட்டு. தெரியாத வானத்தை வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான் அர்ஜுன்.
“நீயும் அந்தப் பொண்ணைக் கட்டிக்கச் சொல்லி கேட்டுறாதடா.. தட் இஸ் தி லாஸ்ட் திங் ஐ வாண்ட் டு ஹியர்!” மித்ரன் தன் அண்ணன் அர்ஜுனிடம் கேட்டுக் கொண்டிருந்தான். மித்ரனை சரியாகக் கூட சாப்பிட விடாமல் அவனிடம் வந்து அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும்படி அத்தனை பேர் விதவிதமாக சொல்லி இருந்தனர்.
அர்ஜுன் பதில் பேசாமல் இருக்கவும், “என்னடா ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குற?” என்றான் மித்ரன்.
அவனது மௌனத்தை பார்த்தால் பயமாக இருந்தது மித்ரனுக்கு. “ஆமா, அதைத்தான் பேச வந்தேன்னு மட்டும் சொல்லிடாதடா ப்ளீஸ்..” என்று கேட்க,
ஆம் என்னும் படியாக இருட்டிக் கிடந்த வானத்தையே பார்த்துக் கொண்டு தலையாட்டினான் அர்ஜுன்.
“நீயே அந்த ஃபேமிலிய பத்தி எவ்வளவு திட்டியிருக்க.. அண்ணி, அதான் உன் வைஃப்- அடங்காப்பிடாரி. அவங்க குடும்பமே அடங்காப்பிடாரி. இந்த குடும்பத்துல போய் பொண்ணு எடுத்துட்டேன்.. அப்படி இப்படிங்குற.. இப்ப அதே குழியில என்னையும் தள்ளிவிடப் பாக்குறியே.. அது மட்டுமா, கல்யாணமே வேஸ்ட்.. லிவிங் டுகெதர்ல இரு.. அப்படி இப்படின்னு எனக்கு அட்வைஸ் பண்ணினவன் டா நீ!”
“போன வருஷம் வரைக்கும் அப்படி தான்டா சொல்லிட்டு இருந்தேன்.. எப்பவுமே ஹஸ்பெண்ட் அண்ட் வைஃப் வெளியே அவங்களோட நெகட்டிவ் பக்கங்களை மட்டும் தான் சொல்லுவாங்க.. ஆனா எல்லா ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்க்கு உள்ளேயும் வெளியே சொல்லாத மோஸ்ட் செரிஷ்ட் மொமெண்ட்ஸ் இருக்கும்டா.. பிரண்ட்ஷிப், லவ், லஸ்ட் இப்படி எல்லாமே..” என்று சொல்லிவிட்டு ஒரு வெட்கச் சிரிப்பை சிரித்தான் அர்ஜுன்.
“எங்க அந்த மூஞ்சிய கொஞ்சம் காட்டு? முதல் தடவை பொண்டாட்டி கூட சண்டைன்னு நீ சொன்னப்ப நான் என்ன சொன்னேன் நினைவிருக்கா? இந்த சண்டை போடுற விஷயத்தையெல்லாம் மாறி மாறி வெளியே சொல்றீங்களேடா.. அப்ப புள்ள எப்படி பொறந்தது? அத மட்டும் மட்டும் கமுக்கமா வச்சுக்குறீங்களேடா.. அப்படின்னு நான் கேட்டேன். அப்பவும் இதே மாதிரி ஒரு கேவலமான சிரிப்பு தான்டா சிரிச்ச நீ.. திரும்பியும் அதே மாதிரி சிரிக்காதே. நெஞ்சு வலிக்குது”
“ரெண்டு வருஷம் கழிச்சு நீயும் இதே மாதிரி அடிக்கடி சிரிப்ப” என்று கூறிக்கொண்டு அர்ஜுன் அவன் அருகில் கொஞ்சுவதைப் போல் வர,
“இந்த பாரு.. இதெல்லாம் வேற யார்கிட்டயும் வச்சுக்கோ” என்றான் மித்ரன்.
“கல்யாணம் பண்ணிக்கிட்டா தான், அதுவும் நம்ம இண்டியன் கேர்ளா பார்த்து பண்ணிக்கிட்டா தான் கடைசி காலத்துல நமக்கு ஒரு ஆதரவு இருக்கும்.. தண்ணி குடிச்சியா வெந்நி குடிச்சியான்னு கேட்குறதுக்கு ஒரு சோல் மேட் வேணும் டா”
“நீ டைவர்ஸ் பண்ணிட்டு வா. நான் சிங்கிளாவே இருக்கேன். நம்ம ரெண்டு பேரும் மாத்தி மாத்தி தண்ணி குடிச்சியா, வெந்நி குடிச்சியா கேட்டுக்குவோம். அதுக்கு சோல் மேட்டு இருந்தா தான் ஆச்சா..”
“இங்க பாரு உன்னைத் தானே அந்தக் குடும்பத்தில் விரும்பிக் கேக்குறாங்க.. அந்த பொண்ணு நல்ல பொண்ணு தான்டா. ஏன் உங்க அண்ணியே நல்ல பொண்ணு தான். நான் தான் புரிஞ்சுக்கல. இந்த ஆறு மாசமா தான் நானும் உன்னை மாதிரி சிங்கிளா வாழ்ந்திடலாம், வீக் எண்ட் மட்டும் மகனைப் பார்த்துக்கிறேன், டைவர்ஸ் பண்ணிக்கலாம் அப்படின்னு எல்லாம் சொன்னேன். அந்த யுடியூப்ல வீடியோ போட்டுட்டு சுத்துறானே அந்த கிழவன் தான், டைவர்ஸ் ஆன அப்புறம் என்ன பண்ண போறீங்களோ அதையே இப்போ ஒரு ஆறு மாசம் பண்ணி பாருங்க அப்படின்னு சொன்னான்.. அவங்க குடும்பத்தில் அந்த கிழவன் சொல்றது தானே வேதவாக்கு.. அப்படியே செஞ்சோம். இப்ப பாரு அது கரெக்ட்டா இருக்கு. மூணு மாசத்திலேயே என்னடா வாழ்க்கை இது அப்படின்னு ஆயிடுச்சு. சதா பொண்டாட்டியோட அர்ச்சனையை கேட்டே வளர்ந்துட்டனா இப்ப அது இல்லாம தூக்கம் வரமாட்டேங்குது. சரின்னு ஆபீஸ்ல வேலை பார்க்கிற பொண்ணுங்க, சினிமா நடிகைகள் இப்படி ஒவ்வொருத்தனும் இமேஜினேஷன்ல என்னோட வாழ்க்கையில பொருத்தி பார்த்தேன்.. அதைவிட மேனகாவே பெட்டர்னு தோணுச்சுடா.. வாழ்க்கைன்னாலே அப்பப்ப சோகம் அப்பப்ப மகிழ்ச்சி.. அதுதான் நல்லாருக்கும் தெரியுமா.. ஒரே மகிழ்ச்சியா இருந்துகிட்டே இருந்தா நல்லா இருக்காது”
“தத்துவம்? வாய மூடு! அப்படியே போட்டேன்னா தெரியும். இது பெரிய ராயல் பேமிலி.. என்னை விரும்பி கேட்கிறாங்களாம்.. என்னோட சேலரி ஸ்டேட்மென்ட் கையில் கிடைச்சிருக்கும்.. எப்படியாவது வளைச்சுப் போடலாம்னு பாக்குறாங்க.. எத்தனை மேரேஜ் ப்ரபோசல் வந்துச்சு.. எல்லாத்தையும் ரிஜெக்ட் பண்ணிட்டு நான் ஏன் பைத்தியக்காரன் மாதிரி இந்த மாதிரி சூழ்நிலையில் மாட்டிக்கிட்டு இருக்கேன்? அப்படி உன் குடும்ப வாழ்க்கையை காப்பாத்த நான் என் வாழ்க்கையை தியாகம் பண்ணனும்னா, அந்த அளவுக்கு நீ எனக்கு என்ன பண்ணி இருக்க? இப்போதைக்கு நான் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இல்லை. அப்படி ஒரு ஐடியா வந்துச்சுன்னா நானே செலக்ட் பண்ணி, லவ் பண்ணி, டேட் பண்ணிப் பார்த்து பண்ணிக்கிறேன். இந்தப் பொண்ணை எனக்கு பிடிக்கல”
“பேசிப் பாரேன் டா.. புடிச்சாலும் பிடிக்கும். காலம் காலமா அண்ணியோட தங்கச்சியை லவ் பண்ணி கல்யாணம் பண்றது நடைமுறையில் தான்டா இருக்கு. அது ரொம்ப சேஃபான லவ் தெரியுமா?
“யார்ரா உங்களுக்கெல்லாம் இந்த ஐடியாவை சொன்னது? அந்த ஆள விட்டுட்டு உன்னோட புகுந்த வீட்ல யாரு கிட்ட வேணா போய் கேளு நம்ம குடும்பம் இல்லாம வேற குடும்பத்துல பண்ணிக்கலாம்னு சொல்லுவாங்க. ஒரு தடவை காலை விட்ட புதைகுழில திருப்பியும் விடலாமாடா?”
“கேள்விப்பட்டதில்லை நீ? தெரியாத தேவதையை விட தெரிந்த சாத்தானே மேல்னு.. வேற ஏதோ ஒரு ஃபேமிலி மாட்டுறதுக்கு பதில் இதே குடும்பம்னா பழகின ஆட்களா போயிடுவாங்க”
இப்படியே இருவரும் மாற்றி மாற்றி விவாதித்துக் கொண்டிருக்க, அது முடிவில்லா உரையாடலாக நீண்டு கொண்டே போனது.
“உனக்கு எல்லாத்துலயுமே அவசரம் தான். அலைபாயுதே ஸ்டைலில் லவ் பண்ணிட்டு, ரிஜிஸ்டர் பண்ணிட்டு வீட்ல ரொம்ப நாள் சொல்லாம இருந்தியே.. அதை இன்னைக்கு வரைக்கும் நான் வெளியே சொல்லி இருக்கேனா? அப்புறம் சொல்லச் சொல்ல கேட்காம, நம்ம அம்மா அப்பாவோட ஹெல்த், வீட்டுப் பொறுப்பு எதையும் பார்க்காம இருந்தே.. ஊருக்காக மறுபடியும் கல்யாணம் பண்ணினது, குழந்தை பிறந்தது எதுவும் என்கிட்ட டிஸ்கஸ் பண்ணிக்கல.. சண்டை, பிரியப் போறேன்னு மட்டும் வந்து சொன்ன.. உன் லைஃப் ரீவைண்ட் பண்ணி பாருடா.. எதையாவது நிதானமா பண்ணி இருக்கியா? அவசரப்படாத அவசரப்பட்டு தான் எல்லா முடிவு எடுக்குற.. இப்ப அதே அவசரத்தோட என் வாழ்க்கையில் வந்து கும்மி அடிக்குற”
சத்தம் கேட்ட திசையில் தேடி வந்து அர்ஜுனின் மகனைத் தூக்கிக் கொண்டு வந்தாள் மேனகா. “குழந்தையை அப்படி பார்த்துக்கிறேன், இப்படி பாத்துக்குறேன்னு சொல்லிட்டு இங்க தனியா வந்து கதை பேசிட்டு இருக்கீங்க? அப்பா எங்கன்னு அழுவுறான்.. புடிங்க” என்று சொல்லிவிட்டு வித்தியாசமாக ஒரு முறைமுறைத்து விட்டுச் சென்றாள் அவள்.
மகனைக் கையில் வாங்கி, மேனகா சென்றதும், “அப்பாவைத் தேடினியா டா செல்லம்? நீ தேடினியா, அம்மா தேடினாளா?” என்க,
“டேய்..!”
“அவன்லாம் நிச்சயம் என்னைத் தேடியிருக்க மாட்டான்.. எனக்கே தெரியும். இப்ப குழந்தை தேடுதுன்னு சொல்லி வர்றது, முறைக்கிற மாதிரி சிக்னல் காட்டிட்டுப் போறதெல்லாம் என்னை வரச் சொல்றதுக்குத் தான்”
“டேய் அண்ணா! உங்க ரெண்டு பேருக்கும் சேர்ந்து ஒரே ரூமாடா போட்டிருக்கு? தனித்தனியா தங்கின மாதிரி இருந்துச்சு? நீ அம்மா அப்பா கூட தானே இருந்தே?”
“அது அப்ப. இப்ப அவங்க செவ்வந்தி சித்தி, அந்த யூ டியூப் தாத்தா, அப்புறம் நம்ம தயாளன் மாமா எல்லாரும் சேர்ந்து எங்களுக்கு தனி ரூம் போட்டுட்டாங்க” என்று சொல்லி வெட்கப்பட்டுக் கொண்டே சென்றான் அர்ஜுன்.
“இவங்களப் பாத்தா அடுத்த பத்தாவது மாசம் சுஜித்துக்கு ஒரு தங்கச்சியை ரிலீஸ் பண்ணப் போறது மாதிரி இருக்குதே.. அப்புறம் ஏன் நம்மள கதையில இழுக்குதுங்க? இது இவங்க ரெண்டு பேரும் சேர்றதுக்காக போட்ட பிளான் மாதிரி தெரியலையே? ஏண்டா பெர்ஷியா பூனை! உனக்கு ஏதாவது புரியுது? இந்த மாதிரியான விஷயங்கள் கருத்து சொல்றதுக்கு நமக்கு நண்பர்கள் யாரும் இல்லையே. இருக்கிற ஒன்னு ரெண்டு பேருக்கும் என் அளவுக்கு கூட நாலெட்ஜ் இல்ல. என்னடா பண்றது பெர்ஷியா?” என்று கூறி அந்த பூனையை லேசாக நோண்ட, தூக்கம் தொலைந்து போன கடுப்பில் அது மியாவ் என்று கோபத்துடன் சொல்லிவிட்டு மீண்டும் தூங்கியது.
“சரி சரி நீ தூங்
கு. உனக்கு எதுக்கு இந்த குடும்ப சண்டை, சச்சரவு எல்லாம்?”