காண்பது எல்லாம் உனது உருவம் 3
ரத்னாவின் ஆஃபீஸ் வாசலில் போய் நின்றவனை பார்த்த ரத்னாவின் தோழி அம்ருதா வேகமாக அவன் அருகில் வந்தாள்.
"அண்ணா வண்டி கரெக்டா நேரத்துக்கு பிக்அப் பண்ண வந்துடுதே.."
"வண்டி வந்து என்ன பிரயோஜனம்..பாசன்ஜர் எப்பவும் லேட்டா தானே வர்றாங்க.."
"ஆமா..அண்ணா..உங்க பேசன்ஜர்க்கு இந்த ஆஃபீசே அவ தலைல ஓடற மாறி எண்ணம்..
கவர்மெண்ட் ஆஃபீஸ்ல நாலு மணிக்கே எழுந்து வீட்டுக்கு போறவங்களுக்கு மத்தியில பியூன் அண்ணா வந்து நான் கெளம்பணும்..கதவை பூட்டணும் கெளம்பறீங்களானு தொறத்தற வரைக்கும் உக்காந்திருப்பா.."
"விடு மா..எல்லாரும் உன்னை மாறி இருப்பாங்களா..அவளாவது வாங்கற சம்பளத்துக்கு உழைக்கணும்னு நினைச்சு வேலை செய்யவே தான் உங்க ஆஃபீஸ் சுறுசுறுப்பாவே இருக்கு.."
"அதானே..பொண்டாட்டியை ஒண்ணும் சொல்லிட கூடாதே..உடனே சப்போட்டா.."
"என் பொண்டாட்டியை நான் சப்போர்ட் பண்ணாம வேற யாரு சப்போர்ட் பண்ணுவாங்ளாம்.."
"சரி..அண்ணா..அப்பா வந்துட்டாங்க..நான் கெளம்பறேன்..அவ வர இன்னும் கொஞ்சம் நேரமாகும்.."
அவளுடைய அப்பாவை பார்த்து அவர் அருகில் போய் "சித்தப்பா..உங்களுக்கு ஏதாவது வேலை இருக்கா..உடனே கெளம்பணுமா.."
"இல்லப்பா..என்ன விஷயம்.."
"ஒரு அஞ்சு நிமிஷம் இருங்க..தோ வந்துடறேன்.."
வேகமாக தன் பைக்கை எடுத்து கொண்டு போய் அவனுக்கு தெரிந்த இடத்தில் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் செய்யும் சுண்டலையும் டீயையும் வாங்கி கொண்டு வந்தவன் அமிர்தாவின் அப்பாவிடம் குடுத்தான்.
"மா..இது உனக்கு..நீ சுண்டல் சாப்பிட மாட்டீல்ல..உனக்கு பஜ்ஜி..சாப்பிடு.."
"உள்ள இருக்கற உன் ப்ரெண்ட் மதியம் சாப்பாடுனு ஒரு கையளவு கூட கொண்டு வந்திருக்க மாட்டா..பசி வந்திருக்கும்.."
"நீ சாப்ட்டு இதுல இருக்கறத உள்ள கொண்டு போய் குடு...சாப்பிடட்டும்..வீட்டுக்கு போக நேரமாகுமே.."
"அப்பா..நல்லா பாத்துக்க..நீயும் இருக்கீயே.. அண்ணா பொண்டாட்டி கிட்ட எவ்வளவு பாசமா இருக்காங்க..எனக்கும் இதே மாறி பாசமான ஆள் தான் புருஷனா வேணும்....நீ மாப்பிள்ளை பாக்கும் போது இதே மாறி ஆளை தான் தேடி கட்டி வெக்கற..சரியா.."
"நான் உள்ளே போய் இதை குடுத்திட்டு வந்த பிறகு நாம கிளம்பலாம் பா.."
"தம்பி..அவ பேசினதை தப்பா நெனக்காதீங்க..வெகுளி..மனசுல எதையும் வெச்சுக்க தெரியாது.."
"இதுல என்ன இருக்கு சித்தப்பா..அவ ஆசையை தானே சொல்றா..நாம எதுக்கு இருக்கோம்..அவ ஆசை பட்டபடி அப்படியே தேடி கண்டு பிடிச்சிடுவோம்.."
"அவ அம்மாவை நான் அடிக்கடி திட்றேன்னு அம்முக்கு கோவம்..நான் சொல்றதை மாத்தி செய்யிறதையே வேலையா வெச்சிருந்தா கோவம் வராம இருக்குமா சொல்லுங்க..."
"எல்லாருக்குமே அவங்க பொண்டாட்டிக்கு வாழ்க்கையிலே தனி இடத்தை குடுப்பாங்க.
அவளுக்கு உங்களோட அன்பை, நீங்க அவங்களை யாரும் எதுவும் சொல்லிட கூடாதுனு பாதுக்காக்கறது..."
"தன் குடும்பத்தை விட்டு நம்மள மட்டுமே நம்பி வர்றவளை கூடுமானவரை மனசு கஷ்டப்படாம வெச்சுக்கணும்..பாதுகாப்பா வெச்சுக்கணும்னு நீங்க நினைக்கறீங்க..எனக்கு புரியுது...."
"இதெல்லாம் இன்னும் புரிஞ்சிக்கற அளவுக்கு அனுபவமில்ல..
சித்தப்பா..காலம் வந்தா தானே புரிஞ்சிப்பா.."
"நானும் உங்களை மாதிரி தான் இருக்கணும்னு பாக்கறேன் சித்தப்பா.."
"ரொம்ப சந்தோஷம் பா..அவங்களை சந்தோஷமா வெச்சிருந்தா தான் குடும்பம் தழைக்கும்..நிம்மதியா இருக்கும்.."
"சரி பா...அம்மு வந்துட்டா..நாங்க கெளம்பறோம்.."
"சரிங்க சித்தப்பா..வர்ற வாரம் புதன் கிழமை எனக்கு உங்க ஊருக்கு வர்ற வேலை இருக்கு..சாப்பாட்டு வந்திடறேன்னு சித்தி கிட்ட சொல்லிடுங்க.."
"ரொம்ப சந்தோஷம்..அவளும் ரொம்ப சந்தோஷப்படுவா.
நிச்சயம் சொல்றேன்..வரேன் பா.."
அவர்கள் கிளம்பியதும் மறுபடியும் அவன் மட்டும் அங்கு நின்றிருக்க..வெகு நேரமாக அங்கு நின்று கொண்டு இவர்களையே பார்த்து கொண்டு இருந்த பெண்களை பார்த்தவன் யாரு இது எந்த ஊரு..இதுவரை பாத்த மாறி இல்லயே என யோசித்தான்.
தன்னை நோக்கி வந்தவர்களை குழப்பமாக பார்த்தவனின் அருகில் வந்தவர்கள் "நீங்க ரத்னா மேடம் ஹஸ்பென்ட் தானே.."
"ஆமா..நீங்க.."
"எங்களோட நிலம் ஒண்ணு கிரயத்துக்கு வருது அண்ணே
குடும்ப கஷ்டம்..அதால விக்கறோம்.."
"தாய் பத்திரம் இல்லை..அது இல்லாம பதிவு பண்ண ரிஜிஸ்ட்ரார் டேபிளுக்கு அனுப்பி வைக்க மாட்டேன்னு ரத்னா மேடம் சொல்லிட்டாங்க.."
"கொஞ்சம் நீங்க அவங்க சொல்லுங்க..ஏதாவது பணம் வேணுமானாலும் குடுத்திடறோம்..அண்ணா.."
"மா..ஒரு விஷயம் நீங்க தெளிவா புரிஞ்சிக்கோங்க..அவங்க வேலை சம்பந்தப்பட்டது..இதுல நான் தலையிடறது தப்பு..
தலையிடவும் மாட்டேன்.."
"எனக்கு இது பத்தி எதுவும் தெரியாது..எதுவா இருந்தாலும் அவங்க கிட்ட நீங்க பேசிக்கோங்க.." என லேசாக புன்னகைத்தபடி கூப்பி வணங்கி விட்டு அங்கிருந்து நகர்ந்து போனான்.
ரத்னாவின் வருகையை பார்த்து வண்டியில் ஏறி அதை ஸ்டார்ட் செய்ய, தூரத்தில் இருந்தே தன் கணவனிடம் அவர்கள் பேசியதை பார்த்தபடி வந்தவள் ஊர்ல இருக்கறவ கிட்டலாம் சிரிச்சு பேச தெரியும்..பொண்டாட்டி மட்டும் பிடிக்காதே...புள்ளையை நல்லா பெத்து வெச்சிருக்காங்க அத்தை என மனதுக்குள் அவனை தாளித்தபடி வண்டியில் உட்கார வண்டி வேகம் எடுத்தது.
வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் சமையலறைக்குள் போக அங்கு இரவு உணவு தயாராக இருந்ததை பார்த்து ஆச்சரியம் அடைந்து விட்டாள்.
"என்ன கா..இன்னிக்கு சீக்கிரமே டிபன் ரெடியா இருக்கு.."
"ஆமா வா டி..எதுவும் கேக்காத..சாப்பிடலாம்.."
இரவு சாப்பிட இவ்வளவா..இந்த வீட்டுல இப்படி நடக்காதே என யோசித்தபடி அங்கு வைத்திருந்ததை பார்த்து மலைத்தவள் வேகமாக தன்னறைக்குள் போய் குளித்து விட்டு வந்தாள்.
எதுவும் பேசாமல் இந்திரா சொன்னபடி இருவரும் அமைதியாக சாப்பிட்டு முடித்தனர்.

Last edited:
Author: Uppada
Article Title: காண்பது எல்லாம் உனது உருவம் 3
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.