• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

கண்டத்திப்பிலி ரசம்

siteadmin

Administrator
Staff member
Joined
Jun 18, 2024
Messages
89
கண்டத்திப்பிலி ரசம்

கண்டத்திப்பிலி (தேசாவரம்னும் சொல்வாங்க) இது நிறைய விஷயங்களுக்கு மருந்தா பயன்படுது. உடம்பு வலி, ஜலதோஷம், காய்ச்சல், தொண்டைக் கட்டு , அஜீரணம் போன்ற அறிகுறிகளுக்கு கண்டத்திப்பிலி ரசம் மிகவும் சிறந்த மருந்து்.

தேவையான பொருள்கள் ( நான்கு பேருக்கு)
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
நெய் - ஒரு டீஸ்பூன்
கண்டத்திப்பிலி – 8 முதல் 10 குச்சிகள்
காய்ந்த மிளகாய் – 2
துவரம் பருப்பு – 2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு ( தூள் பெருங்காயமும் பயன் படுத்தலாம்)
விரலி மஞ்சள் - சிறிய துண்டு( மஞ்சள் தூளும் பயன்படுத்தலாம்)


தாளிக்க: கடுகு, சீரகம், கறிவேப்பிலை.

செய்முறை:

1. திப்பிலி, மிளகாய், துவரம் பருப்பு, பெருங்காயம், விரலி மஞ்சள், மிளகு, சீரகத்தை தனித் தனியாக, நன்கு சிவக்க வெறும் வாணலியில் வறுத்து சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
2. புளியை நீர்க்கக் கரைத்து உப்பு, சேர்த்து அரைத்த விழுதைப் போட்டு,நன்கு கொதிக்க வைக்கவும்.
3.கொதித்ததும் (இந்த நேரத்தில் நல்ல வாசனை வரும் ) தேவையான தண்ணீர் மேலும் சேர்த்து விளாவவும்.
4.நிதானமான தீயில் பொங்கிவரும்போது இறக்கவும்.
5.ஒரு டீஸ்பூன் நெய்யில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.

இது மற்ற ரசம் மாதிரி தெளிவாக இல்லாமல் கொஞ்சம் கலங்கி கெட்டியாக இருக்கும். பருப்புத் துவையலுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.. சுட்ட அப்பளம் கூட சூப்பர் combination
 

Author: siteadmin
Article Title: கண்டத்திப்பிலி ரசம்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom