• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

கடல் தேடும் மீன்கள் -5

Ilampillai

New member
Joined
Mar 27, 2025
Messages
18
கடல் தேடும் மீன்கள்-5

அன்று இனியா சொன்னது தான்.
" உனக்கு வேணும்னா அந்த பையனை உன்னோட கடைசி பொண்ணுக்கு பார் " மாறனை விட தீபாவை வேறு யாரால் நல்ல விதத்தில் பார்த்துக் கொள்ள முடியும்? அல்லது அவனை விட வேறு யார் கிடைத்து விடுவார்கள் . ஆனால் தீபாவுக்கு இன்னும் படிப்பு முடியவில்லையே? தான் யோசித்த விஷயத்தை கணவனிடமும் மகனிடமும் பேசினார் அருணா .

"தீபா மேல நம்பிக்கை இல்லையா ?"

" நம்ம வீட்டு பொண்ணு நம்பறோமா இல்லையா? அது வேற விஷயம் . அதைத் தாண்டியும் இப்போ நடக்கிற விஷயங்கள் எல்லாத்தையும் பார்க்கும்போது எனக்கு ரொம்ப பயமா இருக்கு. எனக்கு கண்ணுக்கு தெரிஞ்சு நம்ம தீபாவுக்கு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சிரனும் . திடீர்னு எனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா என்னுடைய பொறுப்பும் சேர்ந்து உங்க தலையில் விழுகிறது எனக்கு இஷ்டம் இல்லை . அது மட்டும் இல்லாம யாராவது நம்ம வீட்டு பொண்ணு மனசு கலச்சி கூட்டிக்கிட்டு போய்ட்டாங்கன்னா? இது நடக்காது என்று உங்களால சொல்ல முடியுமா ? நா ரொம்ப யோசிச்சு தான் இந்த முடிவு எடுக்கிறேன் ."

உடன் பிறந்தவளே தன்னை ஏமாற்றி தன் மகளை தூக்கிவிட்ட பிறகு தேவேந்திரனுக்கு பேசுவதற்கு வார்த்தைகள் இல்லை. மனைவி சொல்வது அத்தனையும் சரிதான் ஒத்துக் கொள்ள வாய் வரவில்லை என்றாலும் மனதளவில் ஏற்றுக் கொண்டு விட்டார் .

"சரி" என்று தலையாட்டியதை தவிர அவரிடமிருந்து வேறு எதுவும் எதிர்பார்க்க முடியாது .

அருணா தான் மாறனிடம் பேசினார் .

"அச்சோ ஆண்ட்டி! நான் என்னைக்குமே அந்த மாதிரி எண்ணத்துல உங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சதே இல்ல . இன் ஃபேக்ட் நான் உங்க வீட்டு பொண்ணுங்கள சரியா பார்த்தது கூட கிடையாது . உங்களுக்கு ஏன் என்ன பத்தி இப்படி ஒரு எண்ணம் வந்ததுன்னு எனக்கு தெரியல. நான் ஏதாவது தவறா நடந்து இருந்தா என்ன மன்னிச்சிடுங்க. இனிமே உங்க வீட்டுக்கு நான் வரல. "

"இல்ல மாறன்! நீ தப்பான எண்ணத்தில் பழகலை. அது எங்க எல்லாருக்குமே தெரியும் வெளிப்படையா சொல்லணுன்னா எங்க வீட்டு நிலைமை என்னங்கிறது உனக்கு நல்லாவே தெரியும் . அம்மா தனக்கு ஏதாவது ஆயிடுமோன்னு ரொம்ப பயப்படுறாங்க . இந்த சமயத்துல தீபாவ ஒரு நல்ல இடத்துல கட்டி வைக்க வேண்டியது எங்களுடைய பொறுப்பு. புதுசா வேற யாரோ வெளியில் இருந்து வரவங்க கிட்ட வீட்ல நடக்குற பிரச்சனை எல்லாத்தையும் சொல்லி அதுக்கு மேல அவங்க ஓகே சொல்லி இந்த எத்தனை பேர் கிட்ட அதுவும் தெரியல .

தொண்டை அடைக்க பேசிய தோழனின் நிலைமை மாறனுக்கு புரிந்தது. மாறனுக்கு பெற்றோர் இல்லை. அவனும் தீபக்குடன் சேர்ந்து படித்தவன் தான். கடந்த சில வருடங்களாக இவர்களை தெரியும் ஏற்கனவே சொல்லி இருந்தது போல அவன் படிப்பையும் படித்துக் கொண்டு கூடவே ஆட்டிசம் என்ற குறைப்பாடால் குழந்தைகளுக்கு ஓவியம் வரைய கற்றுக் கொடுக்கும் பணியும் செய்து கொண்டிருந்தான் . படிப்பிலும் சுட்டி . குணத்திலும் கெட்டி .பெற்றோர்கள் இல்லை என்பது அவனுக்கு ஒரு குறையாக இருந்தாலும் அருணாவை பொறுத்தவரை அது ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை.

'பெற்றோர் இருந்து வளர்த்திருந்தால் கூட இத்தனை அருமையாக வளர்த்திருக்க முடியாது. மாப்பிள்ளைக்கு அன்னையாக நான் இருக்கிறேன்' என்ற எண்ணத்தில் தான் இருந்தார் அருணா .


இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க அங்கே நம் நாயகி என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று பார்க்கலாம் . தனக்கு மிகவும் பிடித்தமான மாமனுடன் திருமணம் நடந்த குதூகலத்தில்தான் இருந்தாள் இனியா. ஒருபுறம் அன்னையை நினைத்து மனதில் கவலை இருந்தாலும் அதை எல்லாம் பற்றி கவலைப்படாமல் இருக்க நல்லவன் துணை இருந்தான் . நல்லவனாக அல்ல . அவனை பொறுத்த வரையில் இனியாவும் அவளின் அழகும் பணமும் அவனுக்குத் தேவை . இப்போது வேண்டுமானால் மாமா தன் மீது கோபமாக இருக்கலாம் பிறகு வரும் நாளில் ஒரு குழந்தை என்று வந்துவிட்டால் எல்லாம் சமாதானம் ஆகி விடுவார்கள். அப்போது இனியாவுக்கு அவர்கள் சேர்த்து வைத்த அத்தனை பணம் நகை எல்லாம் கறந்து விட வேண்டும் .
"காம்பில் பாலை கறப்பதா சாதனை?" கொம்பிலும் கறந்து விடுவான் நம் நல்லவன் . அதாவது இனியாவின் கணவன் . நல்லவனைப் பற்றி பெரிதாக சொல்வதற்கு எதுவும் இல்லை . அல்லது எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை . சிறிதாக எடுப்பாக சொல்லிவிடலாம் அவன் பார்வதியின் மகன் . இதிலேயே அவன் எப்படிப்பட்டவன் என்பது உங்களுக்கு விளங்கி இருக்கும் . அவன் கெட்டவன் என்று நான் சொல்ல மாட்டேன் .

இனி என்ன ?

அண்ணி உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் கிடக்க இங்கு மகனுக்கும் மருமகளுக்கும் பார்வதி முதலிரவு தயார் செய்தாள். மகனின் கட்டளை பக்க நட க்காவிட்டால் அடிக்கவும் தயங்க மாட்டான். அதிலும் கடந்த சில தங்களுக்கு முன்புதான் கணவனும் இறந்த நிலையில் இன்று கேட்பாரோ அல்லது அவனிடமிருந்து காப்பாற்றுவாரோ யாரும் கிடையாது. அவன் சொல்வதை இவள் செய்ய வேண்டும் .

அவசரமாக இனியாவை இவர்கள் திருமணம் செய்ததற்கு அதுவும் ஒரு முக்கிய காரணம் .
எது ?
கணவன் இறந்தவரை கடைகள் எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொண்டு ஓரளவு வியாபாரம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்தது. அவரின் இறப்புக்குப் பிறகு அன்னையும் மகனும் சரியாக கவனிக்காமல் விட்டது, கடை இப்போது நஷ்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. போகிற போக்கில் அன்றாடம் சாப்பிட கூட இவர்களுக்கு வரும்படி இல்லாமல் போய்விடும். ஒரே ஆறுதல் கடை இவர்களுக்கு சொந்தம் அதனால் வாடகை வரலாம் மற்றபடி இவர்களின் சோம்பேறித்தனத்துக்கு எந்த வருமானமும் வரப்போவதில்லை .

ஒரே வழி, இனியா தான். இனியா படித்தவள் . நிறைய சம்பாதிக்கிறாள் . நிறைய என்றால் இவர்களின் வாழ்க்கைக்கு போதுமானது . மேலும் மேலும் அவளுக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.வேறு என்ன?
இனியாவும் தான் மாமா சம்பாதிக்கலைன்னா என்ன ? நான் சம்பாதிக்கிறேன். மாமா வேலைக்கு போகலைன்னா என்ன? நான் போறேன் என்ற எண்ணத்தில் தான் அவள் இருந்தாள்.

மாமா! மாமா! என்று சிறுவயதில் இருந்து அவனை சுற்றி சுற்றி வந்தவளுக்கு பெரியவளான போதும் அவனின் குறைபாடுகள் தெரியவில்லை. மாமா என்று சொந்தகாரியாக இருந்து அவனை தூரத்திலிருந்து பார்த்தவளுக்கு இனி அவன் தனக்கு சொந்தம் என்று வரும்போது அப்படியே அவனை ஏற்றுக் கொள்ள முடியுமா ?

முதல் இரவு . முதலான இரவு . பல இரவுகள் இனி வரக்கூடிய முதல் இரவு. கணவன் மனைவிக்கான முதல் நாள் .

இனியா அந்த வீட்டுக்கு வந்து சமையல் அறையை சுத்தம் செய்து அங்கே சிறிய மர அலமாரியில் வைக்கப்பட்டிருந்த சாமி படங்களை துடைத்து விளக்கையும் தேய்த்து ஏற்றியதுடன் அவ்வளவுதான். அருகில் இருக்கும் கோவிலுக்குக் கூட கணவனுடன் செல்லவில்லை .
அதற்குள் அவர்களுக்கு முக்கியமாக வேறு ஏதோ தேவைப்பட்டது . ஒரு நாளா? இரு நாளா நினைவுத் தெரிந்த நாள் முதல் மாமனை மனதில் வைத்துக் கொண்டிருப்பவள் . இப்போது உடலால் எடுத்துக்கொள்ள எதற்கு தாமதம் ? நல்ல நாள்! திருமணம் செய்து கொண்டார்கள் . இவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் அத்தையின் ஆசிர்வாதம் தவிர வேறு என்ன வேண்டும்?


முதலில் ஒரு முறை அவன் . பிறகு வந்த அத்தனை முறையும் அவளானது .

இன்னும் இன்னும் வேணும் வேணும் அவள் கேட்டாள். அவன் கொடுத்தான் . காமமும் இளமையும் மோகமும் சேர்ந்து இருவரையும் ஆட்டி வைத்தது .

அன்று மட்டும் அல்ல அடுத்து வந்த இரவுகளும் அப்படித்தான் .

பிறகு வந்த நாட்கள் ! நாட்கள் மட்டும்தான். அது மாதங்கள் ஆனபோது இதோ வயிற்றில் பிள்ளையுடன் கணவனைக் காண காவல் நிலையத்தில் வந்து நிற்கிறாள் இனியா..

"நீ யாரும்மா?"

"நான் நல்லவனோட மனைவி."

"ஓ ! நீ தானா ? " நக்கலாக அந்த பெண் காவலதிகாரி இவளை ஏற இரங்கப் பார்த்தார். நிச்சயம் கேவலமாகத் தான் பார்த்திருப்பார்.

யாரோ ஒரு பெரியவர் வந்து இவளின் தோளைக் குலுக்கினார். 'ஏம்மா? நீங்கல்லாம் நல்ல இருப்பீங்களா ? என்னோட வயிறு எரியுது. நான் பெத்த புள்ள மூஞ்சில இப்படி அசிட் அடிச்சுட்டாங்களே. *** *** என்று தலையில் அடித்துக் கொண்டு கதறினார்.

"அய்யா ப்ளீஸ் ! உங்க வாயால எதுவும் சொல்லாதீங்க. இப்ப நான் மாசமா இருக்கேன்."

இனிப்புடன் கொண்டவனிடம் சொல்ல வேண்டியவள் இப்போது அவனுக்காக யாரோ ஒருவரிடம் கையெடுத்துக் கும்பிட்டாள் . அதுவும் காவல் நிலையத்தில்.

"நாங்களும் புள்ளைய வலிக்கத்தானே பெத்தோம். இந்த மாதிரி ஜென்மத்துக்கெல்லாம் புள்ள ஒரு கேடா தூ !"

"சார் ! கொஞ்சம் பொறுமையா இருங்க. அவங்க என்ன பண்ணுவாங்க. நீங்க உக்காருங்க"யாரோ ஒரு இளைஞன் அவரை தோளில் சாய்த்து சமாதானம் செய்துக் கொண்டிருந்தான்.

சந்தோஷக் கடலில் நீந்த வேண்டியவள் மணலில் கிடக்கிறாள்.

இது தொடரும்.......
 
Last edited:

Author: Ilampillai
Article Title: கடல் தேடும் மீன்கள் -5
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
100
உறவுகள் மதிப்பும் தெரியலை
உழைப்பின் முக்கியத்துவமும் தெரியலை
உணர்வுகளின் வேதனையும்
தெரியலை
உன்னை இப்போ நடுக்கடலில் தத்தளிக்க உன் சொந்தம் நிற்க வைத்திருக்கு ....இப்போ
உலகம் புரியும்....
 

Ilampillai

New member
Joined
Mar 27, 2025
Messages
18
உறவுகள் மதிப்பும் தெரியலை
உழைப்பின் முக்கியத்துவமும் தெரியலை
உணர்வுகளின் வேதனையும்
தெரியலை
உன்னை இப்போ நடுக்கடலில் தத்தளிக்க உன் சொந்தம் நிற்க வைத்திருக்கு ....இப்போ
உலகம் புரியும்....
நன்றி சகோ
 
Top Bottom