என்றென்றும் வேண்டும்-1
திருமணத்தின் போது ஒரு தந்தை தன் மகளை, வேறு குடும்பத்தில் பிறந்த ஒரு ஆண் மகனுக்கு தானமாக கொடுப்பதே கன்னிகா தானம் என்பர்.
எல்லா தானத்திலும் இது சிறந்தது என்று சொல்ல இந்த நிகழ்வின் போது சொல்ல படுகிற மந்திரங்களும், சங்கல்பங்களுமே சாட்சி.
"தசானாம் பூர்வேஷாம்,தசானாம் பரேஷாம், மம ஆத்மனஸ ஏக விம்சதி குல உத்தாரண....."
என்று அந்த மந்திரம் நீள்கிறது.
அதாவது, கன்னிகாதானம் செய்பவனுக்கு முன்னால் உள்ள பத்து முறையும், பின்னால் வருகிற பத்து தலைமுறையும், கன்னிகாதானம் செய்பவனும் ஆக, இருபத்தோரு தலைமுறையும் கரை சேர இந்த தானத்தை செய்கிறேன் என்று பொருள் .
அவ்வளவு தான். எல்லாம் முடிந்தது. இன்னும் சிறிது நேரத்தில் கழுத்தில் தாலி ஏறி விடும்..!
கல்யாணம் நடப்பது தனக்குத் தான் என்ற உணர்வே இல்லாமல் ஒரு விரக்தியோடு அங்கு நடக்கும் சடங்குகளை பார்த்துக் கொண்டிருந்தாள் காயத்ரி.
பக்கத்தில் ஒரு குரல் கணீரென்று சாஸ்திரிகள் சொல்லத் தேவையில்லாமலே மந்திரங்களை சொல்ல காயத்ரியின் முகத்தில் விரக்தியான புன்னகை.
தனக்கு இன்னும் சில நிமிடங்களில் மனைவியாகப் போகிறவளின் மனநிலை பற்றி கவலையே படாமல் விஸ்வநாத கனபாடிகள் விவாக மந்திரத்தை சொல்லிக் கொண்டிருந்தான்.
சமித்தையும் நெய்யையும் அக்னியில் வார்த்து கொண்டிருந்த மருதாணி இட்ட அவன் விரல்களை பார்த்தவளின் பார்வையில் எரிச்சல்.
ஆம்! அவன் தான் மாப்பிள்ளை.
இன்ஜினியரிங் படித்து ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் காயத்ரிக்கு அவள் அப்பா பார்த்து வைத்த மாப்பிள்ளை. அவள் எவ்வளவோ பிடிக்கவில்லை என்று கெஞ்சிக் கேட்டும் அழுதும் பிடிவாதமாக நிச்சயம் செய்த மாப்பிள்ளை.
அவள் பள்ளிக்கூடம், கல்லூரிக்கு என்று போய்க் கொண்டிருந்த போது அவன் கும்பகோணம் வேத பாடசாலையில் எட்டு வயதில் இருந்து வேதம் படித்துக் கொண்டிருந்தான்.
பதினாறு வருடங்கள் பிராமண குடும்பங்களில் நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்குமான மந்திரங்களோடு ருத்ரம், சமகம், கோயில்களில் கும்பாபிஷேக ஆகமம் என எல்லாம் கற்று கனபாடிகள் என்னும் பட்டத்தோடு இருபத்தி நாலு வயதில் வெளியே வந்தான்.
அவன் அப்பா தாராமங்கலம் சீனிவாச கனபாடிகள் பிள்ளை படிப்பு முடிந்து வந்த இரண்டு வருடங்களில் மாரடைப்பில் இறந்து விட குடும்பப் பொறுப்பு அவன் தலையில் விழுந்தது.
அம்மா, தம்பி அரவிந்தோடு சின்ன வயதிலிருந்தே அவர்களோடு இருக்கும் அத்தை இவர்கள் தான் அவன் குடும்பம்.
அவன் தம்பியும் அவனைப் போலவே இப்போது கும்பகோணத்தில் வேத பாடசாலையில் படித்துக் கொண்டிருக்கிறான்.
ஐடி கம்பெனியில் வேலை பார்த்து கால் லகரம் சம்பளம் வாங்கும் தனக்கு கொஞ்சம் கூட படிப்பு அறிவே இல்லாமல் கட்டுக் குடுமியோடு ஒரு மாப்பிள்ளை.
அப்பாவின் நன்றியுணர்வை நினைத்து காயத்ரியின் உதடுகள் ஏளனமாய் வளைந்தன.
தனக்கு சமயத்தில் உதவிய சொந்த ஊர் நண்பனுக்கு நன்றிக்கடனாக தன் மகளையே அவர் மகனுக்கு கல்யாணம் செய்து கொடுக்க முன் வந்த மஹானுபாவர் அல்லவா?
மணப்பெண்ணின் மனம் புரியாமல் கல்யாணம் விஸ்தாரமாக நடந்து கொண்டிருந்தது.
மாப்பிள்ளைக்கே எல்லா மந்திரங்களும் தெரியும் போது எதையும் விட முடியாது அல்லவா?
கசப்போடு தன்னைப் பார்க்கும் மனையாளை கவனிக்காதவன் போல விஸ்வநாதன் விடாமல் மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தான்.
தான் விதவை என்ற காரணத்துக்காக ஒதுங்கி ஓரமாக நின்றிருந்த அத்தை காயத்ரியின் வாடிய முகத்தை பார்த்து விட்டு
"அம்மாடி! என்ன ஹோமப்புகை கண்ணெரியறதா? கொஞ்சம் ஜலத்தை (தண்ணீரை) துண்டுல நனைச்சு தரவா? கண்ணு எரிச்சலுக்கு இதமா இருக்கும்.
காலம்பரவே வேற எழுந்துனுட்ட? கண்ணே சிவந்து போய் இருக்கே? முகமும் களைச்சுப் போயிருக்கே? பால் கொண்டு வரட்டுமா ராஜாத்தி? "
என்று அன்பாய் விசாரிக்க மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்த விஸ்வநாதன் "அப்படியா?" என்பது போல அவளைத் திரும்பிப் பார்த்தான்.
காயத்ரியும் திரும்பி அவனைத் தான் பார்த்தாள்.
நெருப்பின் அருகே அமர்ந்திருந்ததால் ஏற்கனவே சிவந்த நிறத்தோடு இருந்தவனின் முகம் இன்னும் சிவந்திருந்தது.
நிகோடின் கறை படியாத சிவந்த உதடுகளால் ஸ்பஷ்டமாக (தெளிவாக) மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தவனின் நிறமும் களையான முகமும் ஆஜானுபாகுவான தோற்றமும் காயத்ரியின் கண்ணில் படவில்லை.
அவன் கட்டுக் குடுமியும் மீசை மழித்த இடத்தில் பச்சை நிறமோடிய உதட்டின் மேல் புறமும் தான் அவள் கண்ணில் பட்டது.
'இந்த காலத்துல யாராவது மீசையை மழிச்சிட்டு கட்டுக் குடுமியோட இருப்பாளா? ஏன் நம்மாத்துக்கு வர வாத்தியார் கூட என்ன ஸ்டைலா கிராப்பு வெச்சிண்டு இருக்கார்?
நாப்பது வயசுக்கு அவரே அப்படி இருக்கறச்சே இருபத்தியெட்டு வயசுல இப்படி அம்மாஞ்சி மாறி இருக்கணுமா இவர்?'
அவள் யோசனை அதிலேயே சுழன்று கொண்டிருக்க விஸ்வநாதன் அவள் கவனத்தை கலைத்தான்.
"அத்தை! எவ்வளவு நாழியா நிக்கறா? பதில் சொல்ல மாட்டியா?"
எந்த உணர்வுமில்லாமல் அவன் கேட்ட கேள்விக்கு காயத்ரி பதில் சொல்லாமல் அத்தைக்கு பதில் சொன்னாள்.
"ஒண்ணும் வேண்டாம் அத்தை! ஒரு நாளைக்கு தானே? அப்புறம் சரியாயிடும்.." என்று பதவிசாகவே பதில் சொன்னாள்.
பெண் பார்க்க வந்த நாள் முதல் "அம்மாடி!" "ராஜாத்தி" என்று அன்பைப் பொழியும் அவரிடம் காயத்ரியால் கோபத்தை காட்ட முடியவில்லை.
சின்ன வயதிலேயே கணவரை இழந்து அந்த கால வழக்கப்படி தலையை மழித்து வெள்ளைப் புடவையை மடிசாராய் கட்டிக் கொண்டு மேலே ரவிக்கை கூட இல்லாமல் புடவையை முட்டாக்காய் போட்டு உடம்பை மறைத்துக் கொண்டிருந்தார் அந்த எழுபது வயது மூதாட்டி.
நெற்றி நிறைய விபூதியுடன் கண்களில் வாத்சல்யத்தை (அன்பை) தவிர எதையும் காட்டத் தெரியாத பெண்மணி அவர். அவள் மாமியார் கூட அப்படித் தான்.
அதனாலேயே அவளால் அவர்கள் மேல் தன் கோபத்தை காட்ட முடியவில்லை.
அவள் கோபம் மொத்தமும் பக்கத்தில் இருப்பவன் மேல் தான். ஆனால் அவன் அவள் கோபத்தை கொஞ்சம் கூட லட்சியம் செய்யவில்லை.
அதுவே அவள் கோபத்தை அதிகமாக்க பக்கத்தில் இருந்தவனை ஓரக்கண்ணால் முறைத்தாள். நேரே முறைத்தால் அம்மா கன்னத்தை நிமிண்டி விடுவாளே என்று பயம்.
அத்தைக்கு காயத்ரி பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் மாமியார் கையில் ஒரு டம்ளருடன் வந்தார்.
"காயத்ரி! இந்தா! இந்தப் பாலை மொதல்ல குடி. காத்தாலேருந்து பட்னி கிடந்து கண்ணு ரெண்டும் உள்ளே போயிருக்கு.
புகைல உக்காண்டு தொண்டை காஞ்சு போயிருக்கும். சூடா குடி!"
குரலில் அதிகாரம் போல இருந்தாலும் செயலில் அன்பு தான் தெரிந்தது.
செய்து கொண்டிருந்த சடங்குகளில் அப்போது சற்று இடைவெளி வர விஸ்வநாதன் காயத்ரியை பார்க்க நன்றாக திரும்பி உட்கார்ந்தான்.
"ஏம்மா! நானும் காத்தாலேந்து விரதமா தானே இருக்கேன்? என்னை கேக்கணும்னு உங்களுக்கு தோணித்தா? மாஞ்சு மாஞ்சு எல்லாரும் அவளையே கவனிச்சிண்டு இருக்கேளே?"
"ஏண்டா விச்சு? நீ எப்பவும் காரியம் முடியற வரைக்கும் எதையும் சாப்பிட மாட்டியே? அதாண்டா உன்னைக் கேக்கல.
நீ என்ன காயத்ரி அவன் வாயைப் பாத்துண்டு இருக்கே? சட்டுனு பாலை குடிச்சிட்டு லோட்டாவை (டம்ளரை) குடு. முகூர்த்த நாழி வந்துடுத்துன்னு இப்போ நம்மள பறக்கடிப்பா..! அப்புறம் எவ்வளவு சம்பிரதாயம் இருக்கு? எல்லாம் முடிஞ்சு சோத்தை கண்ணால காண மணி ஒண்ணாயிடும்."
விஸ்வநாதனின் அம்மா பத்மா காயத்ரியை அதட்டிக் கொண்டிருந்தார்.
மருமான் (மருமகன்) கேட்டதும் அத்தைக்கு தாங்கவில்லை.
"அம்பி! நோக்கும் (உனக்கும்) கொஞ்சம் போல காபி கொண்டு வரட்டுமாப்பா?"
அத்தைக்கு யாரும் பசித்திருக்கக் கூடாது.
அவரைப் பார்த்து அழகாய் கன்னத்தில் குழி விழ சிரித்த விஸ்வநாதன்
"வேண்டாம் அத்தை! இன்னும் ரெண்டு மணி நேரம் தானே..! கொஞ்சம் தூத்தம் (தண்ணீர்) மட்டும் குடுங்கோ போறும். ஒரே தரியா சாப்பாடு சாப்டுக்கறேன்."
என்று சொல்ல வாயில் டம்ளரை வைத்து பாலை உறிஞ்சிக் குடித்துக் கொண்டே பார்த்தாள்.
அவள் கண்ணில் கன்னக்குழி எங்கே தெரிந்தது? கண்ணிலும் கன்னத்திலும் காசி யாத்திரைக்காக வைத்த மை தான் தெரிந்தது.
அதற்குள் காயத்ரியின் அப்பா பறந்து கொண்டு கையில் கூஜாவோடு வந்தார்.
"மாப்ள! இந்தாங்கோ..! உங்களுக்கும் மத்த சாஸ்திரிகளுக்கும் நானே பக்கத்துல நின்னு நன்னா ஸ்ட்ராங் காப்பியா கேட்டு வாங்கிண்டு வந்திருக்கேன். சொட்டு வாயில விட்டுக்கோங்கோ"
என்று கையோடு அடுக்காய் வைத்திருந்த டம்ளர்களில் ஒன்றில் நிறைய காபியை விட்டுக் கொடுக்க விஸ்வநாதன் தன் கையில் அணிந்திருந்த பவித்திரத்தை(தர்ப்பை புல்லால் ஆன மோதிரம்) கழற்றி காதில் வைத்துக் கொண்டு அதை வாங்கினான்.
காயத்ரி அப்பாவை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. அவருடன் பேசியே ஒரு வாரம் ஆகிறது.
எப்போது அவர் பிடிவாதமாக இந்த பையன் தான் உன் மாப்பிள்ளை என்று சொன்னாரோ அன்றிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு குறைந்து நின்றே போனது.
பார்வையை வெறுப்போடு எதிரே திருப்ப அவள் கூட வேலை செய்யும் நளினா அவளைப் பார்த்து சிரித்தாள்.
காயத்ரிக்கு என்னவோ அது கிண்டல் சிரிப்பு போல தான் தோன்றியது. எங்கே எல்லோரும் கிண்டல் செய்வார்களோ என்றே அவள் அலுவலகத்தில் யாரையும் அழைக்கவில்லை.
நளினா அவளின் நெருங்கிய சிநேகிதி என்பதோடு பக்கத்து கேபின் என்பதால் தவிர்க்க முடியவில்லை. நளினாவுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்னால் தான் திருமணம் ஆகியிருந்தது.
நளினாவின் பக்கத்தில் அமர்ந்திருந்த அவள் கணவன் வான் ஹுசைன் (Van Heusen) பார்மல் பாண்ட் ஓட்டோ (Otto) முழுக்கை சட்டை அணிந்து அலையலையாய் கேசம் காற்றில் பறக்க பிரெஞ்சு குறுந்தாடியுடன் மாடல் போல இருக்க அவள் பார்வை தன்னை அறியாமல் பக்கத்தில் இருந்தவனை ஆராய்ந்தது.
விஸ்வநாதனுக்கும் அவள் பார்வையின் பொருள் புரிந்தாலும் வெளியே எதையும் காட்டிக் கொள்ளவில்லை.
அதற்குள் "டேய் விஸ்வநாதா! முஹூர்த்தத்துக்கு நாழி ஆயிண்டே போறதே! ஆரம்பிக்கலாமா?" என்று அவர்களின் திருமணத்தை நடத்தி வைக்க வந்த வாத்தியார் அவசரப்படுத்தினார்.
எப்படி நடந்திருக்க வேண்டியது அவள் திருமணம்?
அவளைப் போலவே ஐடி கம்பெனியில் வேலை செய்பவனாக பார்த்து கல்யாணம் செய்து ஆன் சைட் என்ற பெயரில் அமெரிக்காவுக்கு பறந்து போக வேண்டும்.
க்ரீன் கார்ட் வாங்கி அங்கேயே செட்டில் ஆக வேண்டும். அழுக்கும் குப்பையும் நிறைந்த இந்த ஊர் பக்கமே வரக் கூடாது என்று எத்தனை ஆசைகள்? எத்தனை கற்பனைகள்?
கடைசியில் அவள் திருவல்லிக்கேணியில் இருந்து மாம்பலத்துக்கு தான் போகப் போகிறாள்.
அவளையும் அறியாமல் பெருமூச்சு வர அதற்கு மேல் யோசிக்க நேரமில்லாமல் நேரம் பறந்தது.
அரக்கு நிறத்தில் ஒன்பது கஜம் புடவையை மடிசாராய் கட்டி அதற்கு பொருத்தமாக தங்க வண்ணத்தில் ரவிக்கை போட்டு இடுப்பில் ஒட்டியாணம் புடவை அவிழ்ந்து விடாமல் இறுக்கிப் பிடிக்க கழுத்து நிறைய மாலையோடு காயத்ரி மணமேடைக்கு வந்த போது அவளை பெற்றவர்களுக்கும் அத்தை, பத்மாவுக்கும் ஆனந்தக் கண்ணீர்,
தலையில் இரண்டு பக்கமும் சூரிய சந்திர பிரபை வைத்து நெற்றியில் சுட்டியோடு காதில் வைரத்தோடு ஜிமிக்கி ஆட நீண்ட அவளின் சொந்த தலைமுடியில் பின்னிய ஜடையில் குஞ்சலம் தொங்க கொள்ளை அழகாய் இருந்தாள் காயத்ரி.
நடக்கும் போது தெரிந்தும் தெரியாமலும் பளீரிட்ட அவள் பின்னங் கால்கள் அவள் சிவந்த நிறத்தை எடுத்துக் காட்ட கையிலும் காலிலும் இட்ட மருதாணி (மெஹந்தி வைத்துக் கொள்ளக் கூட அவள் அப்பா ஒத்துக் கொள்ளவில்லை) அவ்வளவு அழகாய் சிவந்திருக்க அனைவரின் பார்வையும் அவள் மேல் தான்.
அத்தை எதிரே வர காயத்ரியின் அம்மா "பெரியவா காலுல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோ..!" என்று ஆணையிட்டார்.
அவள் புடவை அவிழ்ந்து விடுமோ என்ற பயத்தோடு குனியப் போக அவளைத் தடுத்து
"என் ராஜாத்தி! எவ்ளோ லட்சணமா இருக்கேடா? நூறு வருஷம் தொங்க தொங்க தாலி கட்டிண்டு ரெண்டு பேரும் க்ஷேமமா இருங்கோ!"
என்று அவளை அணைத்தவர் அவளுக்கு இரண்டு கைகளாலும் நெட்டி முறித்து திருஷ்டி கழித்தார்.
அவர் அன்பில் எரிந்து கொண்டிருந்த அவள் கோபம் தணிய லேசாக புன்னகை செய்தாள் காயத்ரி.
அதுவரை நொடிக்கொரு முறை அவளை கவலையோடு பார்த்துக் கொண்டிருந்த அவள் அம்மா ஜானகிக்கு அப்போது தான் நிம்மதி ஆனது.
அப்பா பெண் பிடிவாதத்திற்கு நடுவே அவரை அல்லவா இருவரும் பந்தாடினார்கள்?
அவள் அப்பா வெங்கடேசன் மேடையில் ஒரு புறத்தில் இருந்த சேரில் அமர்ந்திருக்க விஸ்வநாதன் எதிரே நின்றிருந்தான்.
காயத்ரி நிமிர்ந்து அவனைப் பார்க்க இவளைப் பார்த்தும் அவன் கண்ணில் எந்த பிரதிபலிப்பும் இல்லை.
எதோ தாலி கட்டுவது ஒரு தினப்படி காரியம் போல சாதாரணமாக நின்றிருந்தான்.
ஒரு வேளை அவள் அழகை மெச்சும் ஒரு பார்வை கிடைத்திருந்தால் அவள் கொஞ்சம் இளகியிருப்பாளோ என்னவோ?
அவன் கல்லையும் மண்ணையும் போல பார்க்கவும் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது.
இருவரையும் பார்க்காமல் தலை குனிந்து நின்றவளை வாத்தியார் ஜோக்கடிப்பதாக நினைத்துக் கொண்டு "மாமா! உங்க குழந்தையை மடியில உட்கார வெச்சுக்கோங்கோ.." என்று சொல்ல சுற்றி இருப்பவர்களின் சிரிப்பை காயத்ரியால் தாங்க முடியவில்லை.
எதுவும் பேசாமல் ணங்கென்று அவள் அப்பா மடியில் போய் உட்கார்ந்தாள்.
வாத்தியார் அவள் கையில் வெற்றிலை பாக்கு தேங்காய் வைக்க அவள் அப்பாவும் சேர்ந்து பிடித்துக் கொண்டார்,
"இப்போ கன்னிகா தானம் நடக்கப் போறது. பந்துக்கள் எல்லாம் மேடைக்கு வாங்கோ.
கன்னிகா தானம் பாக்கறது அவ்வளவு புண்யம். தாரமங்கலம் வெங்கடேச சர்மா தன்னோட ஏக குமாரத்தி காயத்ரியை தாரமங்கலம் சீனிவாச சர்மாவின் ஜேஷ்ட குமாரன் விஸ்வநாத சர்மாவுக்கு கன்னிகா தானம் செஞ்சு குடுக்கப் போறார்.
இந்த கல்யாணத்துல என்ன விசேஷம்னா விஸ்வநாதன் பிராமணனுக்கான நேம நிஷ்டைகளை ஒண்ணு விடாம அனுசரிச்சுண்டு வரவன். ரொம்ப ஸ்ரேஷ்டமான (உயர்ந்த குணங்கள் கொண்ட) பையன்.
அவனுக்கு தன் பொண்ண கொடுக்க வெங்கடேச சர்மா ரொம்ப புண்ணியம் பண்ணிருக்கணும். இப்போ தம்பதிகள் க்ஷேமமா வாழ மாங்கல்ய தாரண மந்திரங்களை தான் சொல்லப் போறோம்"
என்று பீடிகை போட்டு வாத்தியார் மந்திரத்தை சொல்ல ஆரம்பித்தார்.
சற்று நேரத்தில் "கெட்டி மேளம் கெட்டி மேளம் " என்று குரல் கொடுக்க விஸ்வநாதன் காயத்ரியின் கழுத்தில் தாலி கட்டினான்.

Author: siteadmin
Article Title: என்றென்றும் வேண்டும்-1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.