Dhakai
New member
- Joined
- Mar 23, 2025
- Messages
- 28
திருமணம் முடிந்த மறுநாளே திட்டமிட்டப்படி தேனிலவுக்குக் கிளம்பியிருந்தனர் இருவரும்.
திருமணத்திற்கென சுந்தரலட்சுமியை இரு வாரங்கள் அலுவலகத்தில் விடுப்பெடுக்க உரைத்திருந்தான் செந்தில்.
தனது அரிசிக் கடையைக் கவனித்துக் கொள்ள இந்த இரு வாரத்திற்கு ஆள்களை ஏற்பாடு செய்திருந்தான்.
தேனிலவுக்காக எங்குச் செல்கிறோமென அவள் கேட்டதற்கு சர்ப்ரைஸ் என உரைத்திருந்தான் செந்தில்.
கண்டிப்பாக வெளிநாட்டிற்கெல்லாம் திட்டமிட்டிருக்க மாட்டான், தமிழ்நாட்டிற்குள்ளேயே ஏதேனும் மலை வாசஸ்தலமாய்த் திட்டமிட்டிருப்பான் என்று எண்ணியிருந்தாள் சுந்தரலட்சுமி.
தேனிலவுக்காகப் பெட்டியில் துணிகளை அடுக்கி வைக்கும் போது சில புடவைகளையும் எடுத்துக் கொள்ளுமாறு அவன் சொல்லவும், தான் புடவை உடுத்துவது அவனுக்குப் பிடித்திருக்கிறது போலும் என்று எண்ணியவளாய் எடுத்து வைத்திருந்தாள் சுந்தரலட்சுமி.
கோயம்பேட்டில் இருந்து ஒரு பிரபலமான டிராவல்ஸ்ஸின் ஏசி பஸ்ஸூல் ஏறிய போது கூட அந்தப் பேருந்து எந்த ஊருக்குச் செல்கிறது என அறிந்து கொள்ள விரும்பவில்லை அவள். அவனது சர்ப்ரைஸ்ஸை தான் சர்ப்ரைஸ்ஸாகவே உணர வேண்டுமென அந்த இடத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள எந்த முயற்சியும் எடுக்காமல் அவனுடன் பயணித்திருந்தாள் சுந்தரலட்சுமி.
தன்னை நேசிக்கும் ஒருவள்! அவளுடனான சில்லென்ற பேருந்து பயணம். வழமைப்போல் இரவு வானொலியை இயக்கி அவளின் காதில் ஒரு காதொலிப்பானையும் தனது காதில் ஒரு காதொலிப்பானையும் மாட்டியவனாய் தலையைச் சாய்த்தவனின் தோளில் வாகாய் சாய்ந்து காதில் கேட்டிருந்த இன்னிசையை ரசித்திருந்தாள் சுந்தரலட்சுமி.
இருவருமே இன்பமாய் அந்நொடியை ரசித்தவர்களாய் மோன நிலையில் பயணித்திருந்தனர்.
மறுநாள் காலைப் பேருந்திலிருந்து இறங்கியவளாய், 'இது எந்த ஊரு?' என்று எண்ணியவாறு சுற்றும் முற்றும் பார்த்தவளின் கண்களில் தென்பட்ட அந்த ஊரின் பெயரைக் கண்டு, 'நாம என்ன ஊரு மாத்தி வந்துட்டோமா?' என்று குழப்பமடைந்தாள்.
"நாம எந்த ஊருக்கு வந்திருக்கோம் செந்தில்?" பெட்டியை இழுத்துக் கொண்டு நடந்தவனுடன் இணைந்து நடந்தவளாய் அவள் கேட்க,
"ராமேஸ்வரம்" என்றான் அவன்.
"என்னது ராமேஸ்வரமா?" அதிர்ச்சியில் அவளின் நடை அப்படியே நிற்க,
"ஏன் ஷாக்காகி நின்னுட்ட சுந்தரி?" அவன் கேட்கவும் அத்தனை கோபத்துடன் அவனை முறைத்திருந்தாள்.
"யாராவது ஹனிமூனுக்கு ராமேஸ்வரம் வருவாங்களா?" எனக் கேட்டாள்.
"எனக்குக் கல்யாணம் நடக்காம டிலே ஆகிட்டே இருக்கவும், கல்யாணம் முடிஞ்சதும் இங்கே வரதா வேண்டிக்கிட்டேன் சுந்தரி! அதான் உன்னைச் சர்ப்ரைஸ்ஸா கூட்டிட்டு வந்தேன்" என்றவன் சொன்னதைக் கேட்டு கடுப்பானவளாய்,
"எது? இது சர்ப்ரைஸ்ஸா? உங்களை எதுவும் கேட்காம, நம்பி கூட வந்தேன் பாருங்க! என்னைச் சொல்லனும்" என்று கோபத்துடன் உரைத்தவளாய் நெற்றியிலேயே அடித்துக் கொண்டாள்.
"எதுக்கு இப்ப இவ்ளோ கோபப்படுற?" என்றவன் கேட்க,
"பின்னே! நான் நம்ம ஹனிமூனுக்காக என்னலாம் கற்பனை செஞ்சி வச்சிருந்தேன் தெரியுமா! எல்லாத்தையும் கெடுத்துட்டு இப்ப பேச்சைப் பாரு" என்று அவனை முறைத்து வைத்தாள்.
"இனி என் வாழ்க்கைல உங்களை நம்பி நான் எங்கேயும் வர மாட்டேன்" கோப முகம் காட்டி உரைத்திருந்தாள்.
"நான் என்ன உன்னைப் பப்புக்கா கூட்டிட்டு வந்தேன். கோவிலுக்குத் தானே கூட்டிட்டு வந்திருக்கேன். இதுக்கு ஏன் இவ்வளோ பேச்சு பேசுற? இனி நீயா என்னைக் கூட்டிட்டு போங்கன்னு சொல்லாம நானும் உன்னை எங்கேயும் கூட்டிட்டு போக மாட்டேன்" கோபமாய்க் கத்தியவனாய் இவளைத் தாண்டி விறுவிறுவென முன்னே செல்ல, இவளின் கண்கள் கலங்கி விட்டன.
'நான் ஏன் உங்ககிட்ட வந்து என்னைக் கூட்டிட்டு போங்கனு நிக்கப் போறேன். எனக்கு எங்கேயாவது போகனும்னு தோணுச்சுனா நானே போய்க்கிறேன்' கடுப்புடன் மனத்தோடு உரைத்துக் கொண்டவளாய் கண்களைத் துடைத்தவள் அவனின் பின்னே நடந்து சென்றிருந்தாள்.
அவன் இணையத்தில் முன்பதிவு செய்திருந்த தங்கும் ஹோட்டலுக்குச் சென்று சாவியை வாங்கி அறைக்குள் செல்ல, அமைதியாக அவனின் பின்னே சென்றவள், அறைக்குள் நுழைந்ததும், "நான் கோவிலுக்கு வரலை. நீங்க மட்டும் போய்ட்டு வாங்க" என்றவளாய் தொப்பெனக் கட்டிலில் அமர்ந்தாள்.
"கடுப்பேத்தாத சுந்தரி! நான் என் பொண்டாட்டியைக் கூடக் கூட்டிட்டு வருவேன்னு தான் வேண்டிக்கிட்டேன். தனியாலாம் போக முடியாது. ஒழுங்கா கிளம்புற வேலையைப் பாரு" அதட்டலாய் உரைத்தவனாய் கழிவறைக்குள் புகுந்து கொள்ள, இவளுக்குக் கண்ணீர் பொங்கிக் கொண்டு வந்தது.
எந்த வகையிலேனும் தன்னுடைய கோபத்தை விருப்பமின்மையை அவனிடம் காட்டிட உள்ளம் உந்தித் தள்ள, அப்படியே அழுதவாறு படுக்கையில் படுத்துக் கொண்டாள்.
கழிவறையில் இருந்து வெளியே வந்தவன், "நான் என்ன சொன்னா? என்ன செஞ்சிட்டு இருக்க சுந்தரி? ஒழுங்கா எழுந்திரிச்சுக் கிளம்பு" படுக்கையில் படுத்திருந்தவளின் அருகில் வந்து அவளை உலுக்கினான்.
"எனக்குப் பிடிக்கலைனா விடுங்களேன். எதுக்கு என்னை டார்ச்சர் செய்றீங்க?" என்று அவள் கோபத்துடன் கத்தவும், அப்படியே அங்கிருந்த சோபாவில் அமர்ந்து விட்டான். அவனுக்குக் கோபம் தலைக்கேற, இப்பொழுது அவளிடம் பேசினால் தன்னிலையை மீறிவிடுவோம் என்று அமைதிக் காத்தவன் அப்படியே அந்த சோபாவில் படுத்துக் கொண்டான்.
கட்டிலில் அழுதவாறு படுத்திருந்தவள் அப்படியே உறங்கிப் போக, அவளைப் பார்த்தவாறு படுத்தவனுக்கு அவளின் அழுகையும் விம்மல் சத்தமும் நெஞ்சை வதைத்தது.
'அவக்கிட்ட சொல்லிட்டு கூட்டிட்டு வந்திருக்கனுமோ' என்று இப்பொழுது சிந்தித்தான்.
ஒரு மணி நேரம் கழித்து அவள் கண் விழித்ததும், ரூம் சர்வீஸூக்கு அழைத்து இரண்டு டீ ஆர்டர் கொடுத்தவன், அவளருகில் வந்தமர்ந்து படுத்திருந்தவளின் தலையை வருடியவனாய், 'சாரி' என்றான்.
அது வரையில் அவன் முகம் காணாது தனது முகத்தைத் திருப்பிக் கொண்டு படுத்திருந்தவள் அவனது மன்னிப்பு வேண்டலில் சட்டென அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
அவளின் உள்ளங்கையோடு கையினைக் கோர்த்தவனாய், கண்களைச் சுருக்கி மீண்டுமாய் சாரி என்றிட, மௌனமாய் எழுந்து அமர்ந்தவள் அவன் மடியில் தலை சாய்த்துக் கொண்டாள்.
"சாரி" என்றாள்.
"இட்ஸ் ஓகே டா! நான் உன்கிட்ட முன்னாடியே சொல்லிருந்திருக்கனும். நீ வேற எதிர்ப்பார்ப்போட வந்திருப்ப" அவளின் தலையைக் கோதியவனாய் உரைத்தான்.
இருவருமே சில நிமிடங்கள் அமைதியாக இருக்க, "தேங்க்ஸ்" என்றாள்.
எதுக்கு என்பது போல் அவன் பார்க்க, "உங்களுக்குக் கோபம் வந்தும் என்னைத் தனியா விட்டு வெளியே போகாம இருந்ததுக்கு. ஈகோ பார்க்காம முதல்ல வந்து சாரி கேட்டதுக்கு" என்றவள் சொன்னதும்,
"உன் கூட நான் ஒழுங்கா குடும்பம் நடத்தனும்னா இதெல்லாம் என்னை வாழ்நாளைக்கும் இந்த ராமநாதசாமி கடைப்பிடிக்க வைக்கனும்" என்று சிரிப்புடன் கை எடுத்துக் கும்பிட்டவாறு அவன் கூறியதைப் பார்த்து முறைத்தவளாய்,
"என்னமோ நான் உங்களைக் கொடுமைப்படுத்துற மாதிரி சொல்றீங்க?" என்று உதட்டைச் சுழித்தாள்.
"இதுக்கு மேல உன்கிட்ட சண்டைப் போட தெம்பு இல்லடா. வயிறு வேற பசில கூப்பாடு போடுது. குளிச்சிட்டு கிளம்புவோமா? கண்களைச் சுருக்கிக் கெஞ்சும் பாவனையில் அவன் கேட்கவும்,
பசி என்ற சொல்லில் மனம் இரங்கியவளாய், "சரி நான் குளிச்சிட்டு கிளம்புறேன். நாம கோவிலுக்குப் போவோம்" என்று குளியலறைக்குள் சென்றாள்.
'ஹப்பாடா அவ்ளோ ஒன்னும் பிடிவாதக்காரி இல்ல. கோபம் குறைஞ்சதும் நார்மல் ஆகிடுறா, அது வரைக்கும் சந்தோஷம்' என்று மனத்தோடு நினைத்து நிம்மதிக் கொண்டான்.
ராமேஸ்வரம் கடலில் குளித்து விட்டு, உள்ளே இருந்த அனைத்து தீர்த்தங்களிலும் நீராடிவிட்டு, மூலவரைத் தரிசித்த போது கண்களில் கண்ணீர் திரையிட சாமியை வணங்கினான் செந்தில்.
அன்றைய நாள் மட்டுமல்ல அடுத்து வந்த மூன்று நாள்களும் கும்பகோணம் மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள பல்வேறு கோவில்களுக்கு அவளை அழைத்துச் சென்றவன் அனைத்து கோவில்களிலும் மூலவரைத் தரசிக்கும் போது கண்ணீர் மல்கவே தரிசித்திருந்தான்.
'இந்தளவுக்குப் பக்திமானா இருப்பாருனு நினைக்கலையே' அவனது கண்ணீரைப் பார்த்து அவ்வாறு தான் நினைத்துக் கொண்டாள் சுந்தரலட்சுமி.
யாத்திரையின் நிறைவாய் தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அவளை அழைத்துச் சென்றவன் அங்கேயும் கண்ணீருடன் இறைவனை வணங்கினான்.
அங்குள்ள சுற்றுப் பிரகார மண்டபத்தில் அமர்ந்ததும், "நீங்க இவ்வளோ பக்திமானா இருப்பீங்கனு நான் நினைக்கலை செந்தில்" என்றாள் சுந்தரலட்சுமி.
"நான் பக்திமானா? யாரு சொன்னா? எனக்குத் தினமும் சாமி கும்பிடுற பழக்கம் கூடக் கிடையாதே" என்றான்.
"அப்படியா? அப்புறம் ஏன் எல்லாக் கோவிலையும் கண்ணீரோடு சாமி கும்பிட்டீங்க? உங்க மனசுல எதுவும் பெரிய துக்கம் சோகம் இருக்கா செந்தில்? என்கிட்ட சொல்லாம மறைக்கிறீங்களா?" என்று தீவிரமாய்க் கேட்டிருந்தாள்.
அவளின் கேள்வியில் சிரித்தவனாய், "என் ஜாதகப்படி எனக்குக் கல்யாணம் நடக்கிறது கஷ்டம்னு ஜோசியர் சொன்னதா மாமா சொன்னப்ப நீ சொன்ன துக்கம் கவலை சோகம் வெறுமை எல்லாமே எனக்கு இருந்துச்சு சுந்தரி. வாழ்க்கையே வெறுத்து போன நிலைல தான் இப்ப நாம போன எல்லாக் கோவிலுக்கும் போன வருஷம் நான் போனேன். எனக்குனு ஒரு ஜீவன், என்னை நேசிச்சு உயிரா பார்த்துக்கிற ஒருத்தி எனக்கு வேணும்னு நான் எதிர்பார்க்கிறது தப்பானு மனசு வெதும்பி அழுது தான் எல்லாக் கடவுள்கிட்டயும் வேண்டிக்கிட்டேன். 'இந்தா பிடி நீ கேட்ட உன்னோட ஜீவன்னு' எல்லாக் கடவுளும் உன்னைத் தூக்கி என்கிட்ட கொடுத்த உணர்வு தான் இப்ப இந்தச் சாமியைப் பார்த்தப்ப வந்துச்சு. அதனால வந்த ஆனந்த கண்ணீர் தான் இது" என்றான்.
அவனின் பதிலில் விழி விரிய ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தவளாய், "உங்களுக்கு ஜோசியத்துல அவ்ளோ நம்பிக்கையா செந்தில்?" எனக் கேட்டாள்.
இல்லையெனத் தலையசைத்தவனாய், "என் அம்மாவுக்கும் மாமாவுக்கும் ஜோசியத்துல நம்பிக்கை அதிகம். நான் இது வரைக்கும் ஒரு ஜோசியர்கிட்டயும் போனதில்லை. அப்பா ஸ்தானத்துல இருந்து என்னை வளர்த்த மாமா காண்பிக்கிற பொண்ண தான் கட்டிக்கனும்னு வைராக்கியமா இருந்தேன். அது தான் நான் அவருக்குச் செய்ற மரியாதையா நன்றிக்கடனா இருக்கும்னு நினைச்சேன். ஆனா எந்தப் பொண்ணு ஜாதகம் வந்தாலும் ஜோசியர்கிட்ட பார்த்துட்டு பொருந்தலைனு சொல்லிடுவாங்க மாமா. உன் ஜாதகத்தையும் அப்படித் தான் சொன்னாங்க சுந்தரி. ஆனா எப்படியோ மாமா பேச்சை மீறி எதிர்த்து பிடிவாதமா இருந்து உன்னைக் கட்டிக்கிட்டேன்" என்றான்.
"என்னது நம்ம ஜாதகம் பொருந்தலைனு சொன்னாங்களா? ஆனா எங்க வீட்டுல பார்த்த ஜோசியர் பத்து பொருத்தமும் பக்கவா இருக்குனு சொன்னதா அம்மா சொன்னாங்களே" என்றவளின் மனத்திலோ இவளின் நிச்சயத்திற்குப் பிறகு ஒரு நாள் இவளை நேரில் சந்தித்த தரகர் பாலமுருகன், "செந்திலோட மாமா குடும்பத்தினால தான் அவனுக்கு இவ்வளோ நாளா கல்யாணம் ஆகலைமா. அந்தக் குடும்பத்துக்கு நன்றியா இருக்கேன்னு இவன் மிஷின் மாதிரி அவங்களுக்கு உழைச்சி கொடுக்கிறான். ஆனா அந்தக் குடும்பம் இவனை வாழ்நாளுக்கும் பலிஆடா வச்சிக்க அவனுக்குக் கல்யாணம் செஞ்சி வைக்காம தள்ளிப் போட்டுட்டே போய்ட்டாங்க. இப்ப கூட நான் தலையிடலைனா இந்தக் கல்யாணம் ஃபிக்ஸ் ஆகி இருக்காதுமா" என்று உரைத்தது நினைவினில் வந்து போனது.
"எங்க அப்பா அம்மாவுக்கும் ஜாதகம் மேல நம்பிக்கை அதிகம் செந்தில். அதிலும் எங்க குடும்ப ஜோசியர் மேல நம்பிக்கை ரொம்ப ரொம்ப அதிகம். அவர் என்ன சொன்னாலும் அப்படியே கேட்டு செய்வாங்க. அவர் சொல்லித் தான் உங்க சம்பந்தத்தை விட்டுடக் கூடாதுனு என்னைக் கட்டி வச்சாங்க" என்றாள்.
"இப்பலாம் ஒவ்வொரு ஜோசியரும் ஒவ்வொரு மாதிரி தானே பலன் சொல்றாங்க" என்று இலகுவாய் அந்த விஷயத்தை இவன் கடந்து விட்ட போதும்,
'இதுல ஏதோ உள்குத்து இருக்கே! இவரோட மாமா பிளான் செஞ்சி பொருத்தம் வரலைனு சொல்லிருப்பாரோ? இதைக் கண்டுபிடிச்சி செந்தில்கிட்ட
சொன்னா அவரோட மாமாவோட உண்மையான குணம் தெரிஞ்சி விலக்கி வைப்பாரா?' என்று இந்த விஷயத்தின் ஆணிவேரை ஆராய முனைந்தாள் சுந்தரலட்சுமி.

Last edited:
Author: Dhakai
Article Title: உனதன்பின் கதகதப்பில் 8
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.