Dhakai
Member
- Joined
- Mar 23, 2025
- Messages
- 39
தாயின் வீட்டில் காலை ரசித்து ருசித்தவாறு இஞ்சித் தேநீரைப் பருகிக் கொண்டிருந்த சுந்தரலட்சுமியின் மனத்தை ஆட்கொண்டிருந்தது பேரமைதி.
கண்களை மூடியவாறு தேநீருடன் உள்ளிறங்கும் இஞ்சியின் காரத்தை உமிழ்நீரில் ருசித்தவளாய் லயித்து ரசித்துப் பருகி முடித்தவள், "இப்படி என்னை மறந்து ரசிச்சு டீ குடிச்சி ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்குமா! எனக்குக் காலைல டீ குடிக்குறது பிடிக்கும்ங்கிறதையே மறந்துட்டேன் கொஞ்ச நாளா! உன் டீயைக் குடிச்சதும் தான் ஞாபகம் வருது" என்ற மகளைக் கவலையுடன் பார்த்திருந்தார் செல்வராணி.
"நீ இங்கே வந்திருக்கிறது மாப்பிள்ளைக்குத் தெரியும் தானே சுந்தரி" எனக் கேட்டார்.
"ஹ்ம்ம் தெரியும்மா" என்றவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவளின் தந்தை மார்க்கெட்டில் இருந்து கறி, மீன் என மகளுக்காக அசைவ உணவுகளைச் சமைப்பதற்கு வாங்கி வந்திருந்தார்.
"எதுக்குப்பா இதெல்லாம் இப்ப?" என்றவள் கேட்டதற்கு,
"உன் அம்மா சமைக்கிற மட்டனும் மீனும் உனக்குப் பிடிக்கும்ல. அதான் வாங்கிட்டு வந்தேன்" என்றவர் சொன்னதும் கண்கள் கலங்கி விட்டது அவளுக்கு.
இப்படி எல்லாம் தனக்கு இது பிடிக்கும் பிடிக்காது என்று கவனித்துச் செய்யும் பெற்றோர் அமைவதும் வரம் தானே என்று நினைத்தவள், அவ்வகையிலேயே புகுந்த வீட்டு உறவினர்களும் அமைய வேண்டுமென எதிர்பார்ப்பது பேராசையோ என்று நினைத்தவளாய் மனத்திற்குள்ளேயே சிரித்துக் கொண்டாள்.
அன்றைய நாள் முழுவதும் தாய் தந்தையருடனேயே செலவிட்டவள், இரவு உறங்கச் செல்லும் முன், "இன்னிக்கு வீட்டுக்குள்ளேயே இருந்துட்டு ஒரு மாதிரி இருக்குப்பா! வெளில சும்மா ஒரு டிரைவ் போய்ட்டு வரேன்ப்பா" என்றவளாய் தனது மகிழுந்தை எடுத்து ஓட்டிச் சென்றாள்.
அன்று செந்திலிடம் உரைத்த ஒரு வாரத்திலேயே தனக்கான மகிழுந்தை தான் பணிபுரியும் நிறுவனத்திலேயே மாத தவணையில் வாங்கியிருந்தாள் சுந்தரலட்சுமி. செந்தில் அந்த மகிழுந்தை ஓட்ட மாட்டேன் என்று விட்டான். அவன் அவளுக்காக வாங்கித் தரும் காரைத் தான் ஓட்டுவேன் என்று அவன் உரைத்ததைக் கேட்டுக் கோபம் கொண்டு, "ஏன் என் சம்பாத்தியத்துல வாங்கினதை நீங்க யூஸ் செய்ய மாட்டீங்களா?" என்று சண்டையிட்டிருந்தாள்.
"அப்படி இல்லடா. உனக்கு நானே வாங்கித் தரனும்னு ஆசை ஆசையா இருந்துட்டு வாங்கித் தர முடியாம போச்சேனு இந்தக் கார் ஓட்ட மனசு வரலை" என்று அவன் விளக்கம் அளித்த போதும் இவளால் ஏற்க முடியவில்லை.
மனைவியின் சம்பாத்தியத்தில் வாழ தயங்குகிறானோ என்று கூடத் தோன்றியிருக்கிறது அவளுக்கு. ஏனெனில் அவளின் சம்பளத்தைப் பற்றி அவன் இது வரை கேட்டதேயில்லை. அவளாகவே கூறினால் மட்டுமே கேட்டுக் கொள்வான்.
வீட்டுக்காக ஏதாவது அவள் செலவு செய்தால், தேவையில்லாமல் காசைக் கரியாக்காதே என்று தாயும் மகனும் பாடம் எடுக்க ஆரம்பித்து விடுவார்கள். சேமிப்பில் அவளின் பணத்தைப் போட்டு வைக்கவே உரைப்பான் அவன்.
மகிழுந்தில் அலுவகத்திற்குச் சென்று வருவது சற்று ஆசுவாசத்தை அளித்திருந்த போதும், அன்றாடம் மாமியாரின் மட்டம் தட்டும் பேச்சினுடனேயே செல்லும் காலை சமையல் பொழுதினை அறவே வெறுத்தாள். அதிலிருந்து தப்பிக்கும் மார்க்கமாக வேலையாளைத் தேடச் சொல்லியும், வேலையாட்கள் கிடைக்க ஒரு மாதமாகியிருந்தது.
ஒரு மாதம் கழித்து வந்த வேலையாளையும், அந்த வேலையாள் வேலை செய்யும் விதம் தனக்குப் பிடிக்கவில்லை எனக் கூறி இரண்டே நாளில் வேலைக்கு வேண்டாமென அனுப்பியிருந்தார் மீனா.
அதில் மேலும் கடுப்பானவளாய், மேல் மாடியில் வீடு கட்டுவதைப் பற்றிச் செந்திலிடம் அன்றாடம் கேட்கத் துவங்கினாள்.
முரளியிடமிருந்து பணம் வந்த பிறகு வீடு கட்டுவதாக உரைத்திருந்தவன், முரளி அவனிடம் திருப்பித் தந்திருந்த பத்து லட்ச பணத்தைக் கார்த்திக் கேட்டான் என்பதற்காகக் கொடுத்து விட்டதாய் உரைத்ததில் பெருத்த அதிர்ச்சியும் கோபமும் இவளுக்கு.
"உங்களுக்குனு குடும்பம் இருக்குனு ஞாபகம் இருக்கா இல்லையா? மனைவினு நான் ஒருத்தி இருக்கேன். எனக்கு மேல வீடு கட்டித் தாங்கனு கேட்டேன். இதெல்லாம் உங்க மனசுல இருந்திருந்தா இப்படிப் பணத்தைத் தூக்கிக் கொடுக்க மனசு வந்திருக்குமா?" ஆத்திரத்துடன் அவள் கேட்டிருக்க,
"கார்த்திக் அர்ஜெண்ட்னு கேட்டான்" என்று செந்தில் இழுக்க,
"உங்ககிட்ட பணம் கொஞ்சம் இருக்குனு தெரிஞ்சாலே அவங்க கேட்கத் தான் செய்வாங்க. ஏன்னா நீங்க அவங்களை விடப் பெரிசா வளர்ந்திடக் கூடாதுனு நினைக்கிற குடும்பம் அது. உங்களை அவங்களுக்குக் கீழே மட்டம் தட்டி வைக்கத் தான் பார்ப்பாங்க. உங்களை ஏமாத்துற ஏமாத்துக்காரக் குடும்பம் அது. இதெல்லாம் உங்களுக்குப் புரியுதா இல்லையா?" கோபமாகக் கத்தியிருந்தாள்.
படுக்கையறைக் கதவு திறந்திருந்ததினால் அங்கே அவள் கத்தியிருந்தது முகப்பறையில் இருந்த மீனாவுக்குத் தெளிவாய் கேட்க, "யாரை மட்டம் தட்டுற குடும்பம் ஏமாத்துற குடும்பம்னு சொல்ற? என் அண்ணன் குடும்பத்தை எப்படி நீ தப்பா பேசலாம்" என்று கோபமாய்க் கேட்டிருந்தார் மீனா.
"சரி தான். உங்க அண்ணன் குடும்பம் மாதிரி தானே நீங்களும் இருப்பீங்க. அதான் உங்க அண்ணனை சொன்னதும் உங்களுக்குக் கோபம் பொத்துக்கிட்டு வருது" என்று ஆத்திரமாகச் சுந்தரலட்சுமி கத்தியிருக்க, "நிறுத்து சுந்தரி. அம்மாவைக் கஷ்டப்படுத்துற மாதிரி பேசாதனு உன்கிட்ட பலமுறை சொல்லிருக்கேன்" என்று உரக்கக் குரலெடுத்து கத்தியவனாய் அவளைக் கோபக்கனலாய்ப் பார்த்திருந்தான்.
"இப்பவே அம்மாகிட்ட மன்னிப்பு கேளு" என்றான்.
"முடியாது! நான் என்ன தப்பா பேசினேன். உங்கம்மா தான் என்னை மட்டம் தட்டி எந்த வேலையும் ஒழுங்கா செய்ய விடாம கொடுமைப் படுத்துறாங்க. அதான் அதே மாதிரி இருக்க அவங்க அண்ணன் குடும்பத்தைப் பத்தி சொன்னதும் கோபம் வந்து பொங்கிட்டு இருக்காங்க. உங்கம்மாவைக் கஷ்டபடுத்துற மாதிரி பேசக் கூடாதுனு சொல்றீங்களே! உங்கம்மா என்னைக் கஷ்டப்படுத்துறது உங்க கண்ணுக்கு தெரியலையா" என்று அவள் கோபமாகப் பேசிக் கொண்டே போக,
டமார் என்ற சத்தத்தில் அதிர்ந்து வாயை மூடினாள் சுந்தரலட்சுமி.
கோபத்துடன் தண்ணீர் அருந்தும் கண்ணாடி ஜாடியைத் தூக்கி கீழே போட்டு உடைத்து அவளின் பேச்சை நிறுத்தியிருந்தான் செந்தில்.
திடீரெனக் கேட்ட சத்தத்தில் மீனாவும் சுந்தரலட்சுமியும் அவனை அதிர்ந்து பார்த்தனர்.
செந்திலின் முகம் கோபாக்கினியாய் ஜொலிக்க, அவன் அங்கிருந்து அகன்று செல்ல முற்பட்ட சமயம், அவனின் கையைப் பற்றி நிறுத்தியவளாய்,
"எனக்கு ஒரு முடிவு சொல்லிட்டுப் போங்க. மேலே வீடு கட்டித் தர ஐடியா இருக்கா இல்லையா உங்களுக்கு. அப்படி எண்ணம் இருந்திருந்தா கார்த்திக்கிட்ட காசைக் கொடுத்துட்டு வந்து நிப்பீங்களா?" அதே ஆத்திரம் குறையாத குரலில் சுந்தரலட்சுமி கத்தியிருக்க,
'என்னது மேலே வீடு கட்டிப் போகப் போறாளா? நான் நினைச்ச மாதிரி என் பையனை என்கிட்ட இருந்து பிரிக்கப் போறாளா?' என்று கலவரத்துடன் மகனைப் பார்த்தார் மீனா.
கண்களை மூடி தன்னைக் கட்டுப்படுத்தியவனாய் தாயை ஒரு பார்வை பார்த்துவிட்டு சுந்தரலட்சுமியைப் பார்த்த செந்தில், "இதைப் பத்தி நாம அப்புறம் பேசலாம் சுந்தரி" என்றான்.
"என்னதுடா அப்புறம் பேசப் போற? அப்ப என்னைத் தனியா விட்டுட்டு நீங்க மட்டும் சேர்ந்து இருக்க வீடு கட்ட முடிவு பண்ணிட்ட! அப்படித் தானே" அழுகைக் குரலில் கேட்டிருந்தார் மீனா.
இவனுக்கு எங்கேனும் சென்று தனது மண்டையை முட்டிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.
"அப்படிலாம் உன்னை விட்டு நாங்க தனியா எங்கேயும் போய்ட மாட்டோம்மா" என்றவன் தனது கையைப் பற்றியிருந்த மனைவியின் கரத்தை கோபத்துடன் உதறியவனாய் அங்கிருந்து சென்றிருந்தான்.
"பாவி சண்டாளி என் குடும்பத்தைப் பிரிக்கிறதுக்குனே வந்திருக்கா! சம்பாதிக்கிற பொண்ணைக் கட்டி வைக்காத, திமிரு பிடிச்சி ஆடும்னு என் அண்ணி அப்பவே சொன்னாங்க. கேட்டானா இவன்" என்று சத்தமாகவே புலம்பியவராய் முகப்பறைக்குச் சென்று படுத்து விட்டார் மீனா.
சுந்தரலட்சுமியின் நெஞ்சம் வலிக்கக் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடின.
அப்படியே கட்டிலில் படுத்து அழுதவாறே உறங்கியும் விட்டாள்.
அதற்கு மறுநாள் தான் அவள் அலுவலகத்தில் அவ்வாறு தன்னை மீறி கத்தியிருந்தாள்.
இவை எல்லாம் நினைத்தவாறு இரவின் நிசப்தத்தில் சில்லென்ற காற்று உடலைத் தழுவதையும் உணராது சிந்தனையில் உழன்றவளாய் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த சுந்தரலட்சுமியின் சிந்தையை,
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
என வானொலியில் வந்த இப்பாடல் கலைத்தது.
காரை ஓரமாய் நிறுத்தி விட்டுச் சீட்டைச் சாய்த்துக் கண்களை மூடியவளாய் பாட்டைக் கேட்டிருந்தவளின் சிந்தையை முழுதாய் ஆக்ரமித்திருந்தான் அவளின் கணவன்.
இந்த ஐந்து மாதங்களில் எண்ணற்ற முறை இப்பாடலை அவர்களின் தனிமைத் தருணத்தில் அவளிடம் பாடியிருக்கிறான்.
தன் மீது அத்தனை அன்பைப் பொழியும் அதே கணவன், கெட்டவர்கள் என்று தெரிந்தும் உறவினர்களை விட்டுக் கொடுக்க முடியாது என்று தன்னைப் பொறுத்துப் போகச் சொல்வதைச் சகிக்க முடியாமல் தடுமாறி நிற்கிறாள்.
அதே நேரம் அங்கே மொட்டை மாடியில் வானொலியில் இப்பாடலைக் கேட்டவனாய் படுத்திருந்தவனின் கண்களை நிறைத்தது கண்ணீர்.
இன்றைய நாள் முழுவதும் இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை. திருமணம் நிச்சயமான நாளிலிருந்து ஒரு நாள் கூட இருவரும் பேசிக் கொள்ளாது இருந்ததில்லை.
கைப்பேசியில் புலனத்தில் தங்களது முந்தைய உரையாடல்களை எல்லாம் பார்த்தவன், தனது வாட்ஸ்அப் ஸ்டேடஸ்ஸாய் இப்பாடலை வைத்தான்.
அங்கே காரில் அமர்ந்திருந்தவளோ அச்சமயம் அவனுக்கு அழைக்கலாமா என்று கைப்பேசியில் அவனது புலனத்தைப் பார்த்தவள் அவன் ஸ்டேடஸ் வைத்ததும் முதல் ஆளாய் பார்த்திருந்தாள்.
'பரவாயில்லேயே என் நினைப்பு கூட அவருக்கு இருக்குப் போலயே' என்று நினைத்துக் கொண்டாள்.
அவள் முதல் ஆளாய் தனது ஸ்டேடஸ்ஸைப் பார்த்ததும் இவனது மனம் குளிர்ந்து போக, அவளுக்கு அழைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த சமயம், அவனது கைப்பேசி இசைத்தது.
மனைவி தான் அழைக்கிறாளோ என்று ஒரு கணம் மகிழ்ந்தவனின் மனம், கைப்பேசியில் வந்திருந்த தோழனின் சரவணனின் அழைப்பைக் கண்டு சுருங்கிக் போனது.
அழைப்பையேற்றவனாய், சோர்வான குரலில், "சொல்லுடா" என்றான்.
"என்னடா குரல்ல சுருதியே காணோம். பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டானு கொண்டாடாம பாட்டுல தூது விட்டுட்டு இருக்கியே இன்னும் புது மாப்பிள்ளையா தான் சுத்திட்டு இருக்கியா?" என்று சிரித்தான் சரவணன்.
"ம்ப்ச் நீ வேற ஏன்டா! சண்டைப் போட்டுட்டு அம்மா வீட்டுக்குப் போய்ட்டாடா" என்றான் சோகமாய்.
"என்னது சண்டையா? என்னடா என்னாச்சு?" கேலியைக் கைவிட்டுத் தீவிரமான குரலில் கேட்டிருந்தான்.
"அம்மாவுக்கும் அவளுக்கும் செட்டே ஆகலைடா! அம்மாவை ஏதாவது கோபமா பேசிடுறாடா! அவங்க மனசு கஷ்டப்பட்டா நான் எப்படி நிம்மதியா இருக்க முடியும் சொல்லு. அம்மா எது பேசினாலும் இவளைப் பொறுத்துப் போகச் சொன்னா, மாடில வீடு கட்டித் தாங்க நாம தனியா இருப்போம்னு சொல்றா. அவங்க ரெண்டு பேருக்கு இடையில சிக்கித் தவிக்கிறேன்டா" புலம்பலாய் உரைத்திருந்தான்.
"ஹ்ம்ம் சரி! நீ என்ன சொன்ன அதுக்கு?" எனக் கேட்டான்.
"அவ கேட்டா மாதிரியே கட்டிக் கொடுக்கிறேன்னு சொல்லிட்டேன்" என்றவன் சொன்னதும்,
"அப்புறம் ஏன்டா கோவிச்சிக்கிட்டு அம்மா வீட்டுக்குப் போனாங்க?" எனக் கேட்டான் சரவணன்.
"ஏற்கனவே அவளுக்குக் கார் வாங்கித் தர வச்சிருந்த பணத்தை முரளி கேட்டான்னு கடனா கொடுத்திருந்தேன். இவ வீடு கட்டச் சொல்லிட்டே இருக்கவும், முரளி பணத்தைக் கொடுத்ததும் கட்டலாம்னு நினைச்சிருந்தேன்"
"உன் மாமாவையே நம்பாதனு சொல்லுவேன் நானு. நீ என்னடானா அவரோட பசங்களை நம்பி பணத்தைக் கொடுத்திருக்கியேடா. அவன் பணத்தைத் திருப்பித் தரலையா?" எனக் கேட்டான் சரவணன்.
"அதெல்லாம் திருப்பிக் கொடுத்துட்டான். ஆனா கார்த்திக் ஏதோ அவசர தேவையா உடனே பணம் வேணும் ஒரு மாசத்துல திருப்பித் தரேன்னு வந்து கேட்டான், சரினு கொடுத்துட்டேன்" என்றவன் சொன்னதும்,
"அறிவிருக்காடா உனக்கு? உன் பொண்டாட்டி கோவிச்சிக்கிட்டு போனதுல தப்பே இல்லடா! ஊரான் குடும்பத்தை ஊட்டி வளர்த்தா தன் குடும்பம் தானே வளரும்னு நினைப்போ? ஒரு மண்ணும் வளராது! தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும். இதுவே நீ இப்படிப் பணம் வேணும்னு போய்க் கேட்டிருந்தீனா இவனுங்கலாம் கொடுத்திருப்பானுகளா? வச்சிட்டே இல்லைனு பொய் சொல்லிருப்பானுங்க" அவன் திட்டிக் கொண்டே போக,
"ஏன்டா நீயும் அவளை மாதிரியே பேசி கடுப்பேத்துற" சலிப்பாய் உரைத்தான் செந்தில்.
"இல்ல தெரியாம தான் கேட்கிறேன். உன்னைக் கெடுக்கனும்னு கங்கணம் கட்டிட்டு இருக்கக் குடும்பத்துக்கு ஏன்டா இப்படி இழுத்துப் போட்டு செஞ்சிட்டு இருக்க?" ஆற்றாமையுடன் கேட்டான் சரவணன்.
"நன்றி மறப்பது நன்றன்று சரவணா" என்றான் செந்தில்.
"அதுக்காக உன் தலையை அடமானம் வச்சிக்கோடா, ஏன் அந்தப் பொண்ணு வாழ்க்கையைப் பணயம் வைக்கிற? இப்ப உன் வாழ்க்கைங்கிறதுல நீ மட்டுமில்ல செந்தில். இனி உன் பொண்டாட்டியைக் கேட்காம நீயா எந்த முடிவும் எடுக்காதடா" என்றான் சரவணன்.
"சரி இப்ப இவ கோவத்தை எப்படிச் சரி செய்றதுனு சொல்லுடா! மனசு ரொம்பக் கஷ்டமா இருக்கு" என்றவன் கவலையுடன் உரைக்கவும், "பேசாம நேர்ல போய்ப் பட்டுனு கால்ல விழுந்துடு" சிரித்தவாறு சரவணன் உரைக்க,
"என் பொழப்பு உனக்குச் சிரிப்பா இருக்கா?" என்றான் செந்தில்.
"மொதல்ல வீடு கட்டுற வேலையை ஆரம்பிடா! அவங்களே கோவம் குறைஞ்சி வீட்டுக்கு வந்துடுவாங்க" என்று சரவணன் உரைக்கவும், யோசிக்கத் தொடங்கினான் செந்தில்.
அங்கே காரில் இருந்தவள் தந்தையின் கைப்பேசி அழைப்பில் வீட்டிற்குச் சென்றிருந்தாள்.
அன்றிரவு புலனத்தில் செந்திலுடனான பழைய உரையாடல்களை எல்லாம் பார்த்தவாறு தாமதமாகவே உறங்கியிருந்தாள் சுந்தரலட்சுமி.
மறுநாள் மாலை சுந்தரலட்சுமி மயங்கி விழுந்த செய்தியைக் கேட்டு அவளைக் காண அரக்கப் பரக்கப் பதட்டத்துடன் சென்றிருந்தான் செந்தில்.

Author: Dhakai
Article Title: உனதன்பின் கதகதப்பில் 12
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.