- Joined
- Jun 17, 2024
- Messages
- 25
இழைத்த கவிதை நீ! 16
“நரியும் தோட்டகே ஹோயித்து
நோடி த்தேனிது?
சப்பர தல்லி தும்பிதா
திராக்ஷை கொஞ்சலு
ஒந்து செல்வா ஆடித்தா
எரடு செல்வா ஆடித்தா
மூரு செல்வா ஆடித்தா
திராக்ஷை சிக்கலில்லா
ஹுளி, ஹுளி ஹேளித்து,
மனேகி காடேகி ஹோயித்து”
தந்தையும் மகனும் நரியின் ஏமாற்றத்தை கன்னடத்தில் பாடியபடி குதித்துக் கொண்டிருக்க, வீடு கேனக் கதறியது.
அர்னவ் கோஸ்வாமி ஒருபக்கம் தேசத்திற்கு தெரிந்தே ஆகவேண்டும் என்று கத்த, ஆன் செய்யப்பட்ட லேப்டாப் திறந்து கிடக்க, பொம்மைகளும் அவற்றின் பாகங்களும், பாதி கடித்து வீசப்பட்டதில் நசுங்கி ரத்தம் சிந்திய ஒரு ஸ்ட்ராபெரியும், உருண்டு கிடந்த பூஜை மணியும் ஹால் எங்கும் வாரி இறைந்து கிடக்க, சமையலறை வாயிலருகே பாத்திரம் தேய்க்கும் நீல நிற லிக்விட் சோப் வட்டமாக தேங்கி நிற்க, தந்த நிற சோஃபா நட்ட நடுவே லிப்ஸ்டிக்கால் ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொண்டு, அந்த பெருமாளைப் போலவே அங்கே நடப்பவற்றுக்கு எல்லாம் மௌன சாட்சியாக நின்றது.
இவை எல்லாமே மூன்று குட்டி ட்ரவுஸர்கள் அவிழ்த்து வீசப்பட்டுத் தரையில் கிடக்க, காதில் சிறிய கடுக்கனும், கையில்லா கருநீல நிற பனியனுடன், மறக்காது ஷூ அணிந்து குதிக்க மாட்டாது குதித்த இரண்டு வயதை நெருங்கும் வாசுதேவின் (சௌமித்ரனின் தந்தையின் பெயர்) கை வண்ணம்.
“சௌ”
“சௌமி”
“வசும்மா”
அழைப்பை காதிலேயே வாங்காது குதித்தவர்களை நோக்கி கையில் கிண்ணத்துடன் வந்த ருக்மிணி, உயிரை விட்டிருந்த பொம்மையின் உதிர்ந்த பாகத்தில் கால் இடறி விழப்போக, சௌமித்ரன் பிடித்து நிறுத்தினான்.
“பாத்துடீ”
பிள்ளைக்கு ஊட்டுவதற்கு ஹேதுவாக தரையில் அமர்ந்தவள் “இந்த ரகளையை கொஞ்சம் க்ளீன் பண்ணலாம்தானே சௌ, அவனோட சேர்ந்து நீங்களும் குதிச்சா என்ன அர்த்தம்?”
“அடப்போடீ, காலைல ஒம்போது மணில இருந்து சங்கீதா ஒரு தரம், நீ ரெண்டு தரம், நான் மூணு தரம் சாமானை அள்ளியாச்சு. மணி இன்னும் ஒண்ணு கூட ஆகலை. இதுல பெட்ரூம் வேற போர்க்களம் மாதிரி இருக்கு. எப்படியும் மறுபடி கொட்டதான் போறான். கிடக்கட்டும் விடு” என அவள் அருகில் அமர்ந்தான் சௌமித்ரன்.
“..ப்பா, தான்ஸ்” என தந்தையின் கையைப் பிடித்து இழுத்தான் பிள்ளை.
ருக்மிணி “டேய் அலிபாபா, நீ டான்ஸ் ஆடினது போறும், சாப்பிட வா. நான் லாகின் பண்ணனும்”
மீண்டும் “...ப்பா… தான்ஸ்” என்றதும் எழப்போனவனை முறைத்தாள்.
“பீம் பாய் , அம்மா நோ சொல்றா, வந்து மம்மம் சாப்பிடு”
சுற்றும் முற்றும் பார்த்த வசு, அடுத்த இலக்காக லிக்விட் சோப்பை நோக்கி நகர, சௌமித்ரன் இழுத்துப் பிடித்தான்.
ருக்மிணி வாயருகே உணவைக் கொண்டு செல்ல,
“பாத்தீட்ட”
“பாட்டி டாட்டா போய் இருக்கா”
“டாட்டா” என வாசல் கதவை நோக்கி ஓடியவனைத் தூக்கி வந்த சௌமித்ரன் கால்களுக்கிடையில் சிறை வைத்துக்கொள்ள, சாதத்தை மறுத்து முகம் திருப்பினான் குழந்தை.
“வசு, நீ இப்ப வாயைத் திறக்கலைன்னா அப்பாக்கு ஊட்டிடுவேன்” என்றதற்கு நான்கு வாய்கள் வரை பலன் இருந்தது.
“சொல்றியே தவிர, ஒரு நாளாவது செய்யறயாடீ?” - சௌமித்ரன்
ஒரு வழியாக உணவைத் திணிக்க, வசு ஒற்றை சோஃபாவில் ஒய்யாரமாகப் படுத்திருந்த ஜிஞ்சரின் மேலே உட்காரும் முயற்சியில் இறங்க, ஜிஞ்சர் அரண்டு ஓடியது.
“மியாவ், கம்” என்று தலையை ஆட்டி பூனையை அருகே அழைத்த மகனின் செயலை ரசித்த சௌமித்ரன்,
“அடேய், பீம் பாய், நீ உக்கார்ந்தா என்னத்துக்கு ஆகும் ஜிஞ்சர்?”
மகன் அறியாது நறுக்கென கணவனைக் கிள்ளினாள் ருக்மிணி.
“எப்பப் பாரு எம்புள்ளையை ஏதானும் சொல்ல வேண்டியது. உங்க கண்ணே படும். வசும்மா, நீ அம்மாட்ட வாடி பட்டு”
அம்மாவின் கொஞ்சல் மொழியில், வசு சோஃபாவில் இருந்து ஒரே தவ்வாக தாவி ருக்மிணியின் மேல் மோதி குதித்ததில் “அம்மா…” என வலியில கத்தினாள்.
“ஊவா” என்று ஊதி, இறுகிய அணைப்பும் இளசான முத்தங்களும் ஈந்த வசுவை, தன்னோடு அணைத்து மடியில் சரித்த நொடியில், டீவி அணைக்கப்பட்டது.
உடனேயே உறங்கத் தொடங்கி இருந்தவனைப் படுக்கையில் படுக்க வைக்க எண்ணி சௌமித்ரன் தூக்க முயல, “ம்மா..” என அவளிடமே ஒண்டினான்.
“இன்னும் டீப் ஸ்லீப் இல்ல. கொஞ்ச நேரம் இருக்கட்டும் சௌ”
“லாகின் பண்ணனும்னு சொன்னயேடா”
“ ம்…” என்றவளின் கண்களும் தூக்கத்தில் சொருகியது.
எழுந்து களேபரத்தை சரி செய்த சௌமித்ரன், மகனை பெட்ரூமில் படுக்க வைத்து, இரண்டு தட்டுகளில் சாப்பாடு போட்டு எடுத்து வந்து “மினி, வா, சாப்பிடலாம்” என்றான் ஹஷ்ஹஷ் குரலில்.
ருக்மிணியும் “சமத்து சௌ” என்றாள் அதே குரலில். இப்போதில்லை, வாசுதேவ் பிறந்த முதலே அவன் தூங்கும் நேரமெல்லாம் இப்படித்தான். இல்லையென்றால், வசுவின் இந்தக் கோழித் தூக்கத்திற்கும் ஆபத்து வந்துவிடும்.
சௌமித்ரனை முந்தைய நாள் நந்திவனில் ஏதோ வண்டு கடித்ததில் மணிக்கட்டு அருகே வீங்கி, லேசான ஜுரம் இருந்ததில் மூன்று நாட்கள் கட்டாய ஓய்வு என மருத்துவர் சொல்ல, வீட்டில் இருக்கிறான்.
கைக்கு மருந்திட்டு, மாத்திரையும் நீரும் கொடுத்தவள் “கையை வலிக்கறதா சௌ, நான் பாட்டு யோசிக்காம வேலை சொல்றேன். வசு வேற தூக்க சொல்றான்”
“ஹேய், மேனேஜபிள்தான்” என்றவன், அப்படியே படுத்துக் கொள்ள, ருக்மிணி கணினியைத் திறந்தாள்.
வாசுதேவ் பிறந்து ஆறேழு மாதங்களுக்குப் பின்னும் குழந்தையை விட்டு வேலைக்குச் செல்ல விரும்பாதவளை, சௌமித்ரன்தான் “ட்ரை பண்ணி பாரு மினி, எப்படியும் ஒர்க் ஃப்ரம் ஹோம் ஆப்ஷன் இருக்கு. அப்படியும் முடியலை, வேண்டாம்னா விட்டுட்டு ஜாலியா இரு. ஐடில எக்ஸிக்யூடிவ் கேடர்ல உன் இடத்துக்கு போற பெண்கள் ரொம்ப குறைச்சல்டா”
மைதிலி அநேக நாள்கள் பேரனோடு இங்கேயே இருக்க, அவரும் அடிக்கடி வரும் ஜெயந்தியும் சேர்ந்தோ, தனியாகவோ குழந்தையைப் பார்த்துக் கொண்டனர்.
ஒர்க் ஃப்ரம் ஹோம் எனில், ஆஃபீஸுக்குப் போவதே தேவலாம் என்பது போல், ருக்மிணி வேலைசெய்யும் அறை வாசலிலேயே தவமிருப்பான் குழந்தை. மைதிலி பேரனுக்கு சப்போர்ட்டாக “கதவைத் திறடி ருக்கு” என பாட வேறு செய்வார்.
வசு தவழத் தொடங்கியதில் இருந்தே ருக்மிணியும் சௌமித்ரனும் கட்டிக்காத்த அலங்காரமும் துய்மையும் ஒழுங்கும் நீண்ட விடுப்பில் போய் விட்டது. அவனுக்கு நடக்க வந்த சிறிது நாட்களுக்குப் பின் ஓட்டம் மட்டுமே.
அவனுக்கு எதிரே காய்கறி வாங்கினால், குறைந்தது மூன்று தக்காளியாவது உயிரை விடும். துணியை மடித்து கப்போர்டில் அடுக்கிய பின்தான் உள்ளே ஏறி உட்காருவான். சுத்தம் முக்கியம் பாஸ்! பால்கனி, ஜன்னல் என எல்லா க்ரில்லிலும் ஏறித் தொங்குவான்.
வசுவிற்குப் பிடிக்காதது பேன்ட்டும் டயப்பரும். நினைத்தால் உருவி எறிந்துவிட்டுத் திகம்பரனாக அலைவான். நல்லவேளையாக சீக்கிரமே டாய்லெட் ட்ரெயின் ஆகிவிட்டான்.
அமைதியான, இதமான சூழலோடு இருந்த வீட்டில் அழுகை, கூச்சல், ஆரவாரம், சளசளப்பு என வசு விழித்திருக்கும் நேரமெல்லாம் சத்தம்தான்.
இப்போது வசு உறங்கவும், வீட்டில் நிலவிய அமைதியில் இருந்த அமைதி !
வாக்கிங், யோகா, பில்லியர்ட்ஸ், டிடி, பார்ட்டிகள், நட்புகள், ஊர்சுற்றுதல், பயணங்கள்… என எதையெல்லாம் அனுபவிக்க வேண்டி குழந்தையைத் தவிர்த்தனரோ, இப்போது வசுவிற்கு முன் அது எதுவுமே பெரிதாகத் தெரியவில்லை. இருவருக்குமே அவற்றை இழந்துவிட்ட உணர்வோ, வருத்தமோ சிறிதும் இல்லை. சொல்லப்போனால், அவை நினைவிற்கே வரவில்லை.
இப்போதும் நடைபயிற்சியும், யோகாவும் செய்கிறார்கள்தான். அவ்வப்போது க்ளப்பிற்கும் விளையாடச் செல்கிறார்கள்.
குருவாயூருக்கு, இரண்டு பக்க குலதெய்வ கோவில்களுக்கு, நாலைந்து தரம் திருச்சிக்கு, ஏன், ஒருமுறை ஆர்க்கிட் பூக்களின் வர்த்தகம் மற்றும் புதிய ரகக் கன்றுகள், விதைகளை வாங்கவென மலேஷியாவிற்கும் அருணாச்சல பிரதேசத்துக்கும் சென்ற சௌமித்ரன் மனைவி மற்றும் மகனையும் கூடவே அழைத்துச் சென்றதும் கூட நன்றாகத்தான் இருந்தது.
கொஞ்சம் பொறுமையும், சின்னச் சின்ன அனுசரிப்பும்தான் தேவையே தவிர, குழந்தை எதற்கும் தடையில்லை என்று புரிந்தது.
‘ப்ரெக்னென்ஸி, மூட் ஸ்விங்ஸ், மசக்கை, டெலிவரி, தாய்ப்பால், அழும் குழந்தை, தூக்கமில்லா இரவுகள், பொழுதுகளைக் களவாடும் பொறுப்புகள், போஸ்ட் பார்ட்டம் டிப்ரஷன், இதெல்லாம் பெண்ணுக்கு மட்டும்தானா’ என ருக்மிணி ஏதேதோ நினைத்தது போக, அடுத்தவர் சொல்லாது, தானாகவே உணர்ந்த வசுவின் மீதான அக்கறையும், பிள்ளைக்கெனவே இரண்டரை அல்லது மூன்று மணி நேர இடைவெளியில் சுரந்து கனக்கும் ஸ்தனங்களும்,
தாய்மை குறித்தான சமூகத்தின் உயர்வு நவிற்சிகளைத் தாண்டி, அதன் பொறுப்பும் பொறுமையும் புரிந்துணர்வும் இயற்கையானது என்று புரிந்தது.
தன்னை எதிர் பார்த்து பாலுக்கென மடியில் படுத்துக்கொண்டு உடையைத் தளர்த்தும் வரை கூட பொறுமையின்றி அழுகையும் சிரிப்புமாகக் கை, காலை உதைத்தபடி, ம் கொட்டி பேசியவாறு, அவசரப்பட்டு அலைமோதும் மகனைப் பார்க்கையில் உள்ளுக்குள் பொங்கும் உணர்வை, தனக்கும் மகனுக்குமான தனிப்பட்ட நேரத்தை, அந்த பந்தத்தை, ருக்மிணி ஆழ்ந்து அனுபவித்தாள்.
இந்த உணர்வும், உடலோடான தொடர்பும் பந்தமும் தனக்கும பிள்ளைக்கும் பிரத்யேகமானது, அதை வசுவின் தந்தையான சௌமித்ரனால் கூட உணர முடியாதென நினைத்தவளுக்கு, பெருமிதத்தோடு கூட அம்மா ஜெயந்தியின் அன்பும், மாமியார் மைதிலியின் உணர்வுகளும் புரிந்தது.
‘நான் சுமந்து பெத்த புள்ளையை, மொத்தமா தூக்கி இன்னொருத்தி கிட்ட தரணும்னா எப்படி, என்னால முடியாதும்மா’ என கற்பனையில் இருபத்தைந்து வருடம் முன்னே சென்ற ருக்மிணிக்கு சிரிப்பு வந்துவிட்டது.
ஐந்து மாதக் குழந்தைக்குப் பசிறாற்றுகையில் பேரலையாய் எழுந்த ‘என் மகன், என் பிள்ளை’ என்ற உரிமையுணர்வு தந்த பெருமிதத்தில், அத்தனை மென்மையாக அவனை அணைத்து, வருடி, முத்தமிட்டவள், மனதிற்குள் அதற்கு நேர்மாறான மூச்சடைக்கும் மூர்க்ககத்துடன் அழுத்தமாக மஃபிள்ளையை இறுக்கிக்கொண்ட ருக்மிணிக்குத் தன்னை நினைத்தே வியப்பும் வெட்கமும்.
“முனீம்மா, என்னடீ நீயே சிரிக்கற?”
“...”
“முனீஸ்…”
“ஹான்… உங்களுக்குப் புரியாது சௌ?”
“என்னன்னு சொல்லாமலே புரியா… ஏ…ய், கம் அகெய்ன், கம் அகெய்ன். என்ன சொன்ன?”
“உங்களுக்குப்…”
“என்னடீ முனீஸ் மரியாதையெல்லாம் பலமா இருக்கு?”
“நீங்க கவனிக்கலையா, ரெண்டு மாசமாவே இப்படிதான் கூப்பிடறேன். வசு பெரியவனானா இதான் சரியா இருக்கும்னு தோணித்து”
“ஆமாவா, பாஸ் லவ்வரா மாறினதும் போன மரியாதை அப்பாவா ஆனபிறகு திரும்பக் கிடைச்சிருக்கு. மிக்க நன்றி டா பீமசேனா”
நாலேகால் கிலோ எடையும், உயரமுமாக மடியை நிறைத்த குழந்தையை பீம்சேன், கடோத்கஜ் என்று அழைத்து அம்மாவிடமும், மனைவியிடமும் தினமும் திட்டுவாங்குவதே சௌமித்ரனுக்கு வாடிக்கையானது.
வசுவிற்கு ஒரு வயது தாண்டி, தாய்ப்பாலை நிறுத்தியதும், அவ்வப்போது தன்னோடு நந்திவனுக்கு அழைத்துச் சென்றுவிடுவான்.
பணியாட்கள் எல்லோரும் வசுவிடம் “இதேனிது?” என்று கேட்க,
“ஹா…க்கித்”(ஆர்க்கிட்)” என்று மழலையில் அவன் ராகம் போடுவதை ஆளாளுக்குக் கேட்டுக் கேட்டுக் கொஞ்சுவர்.
அத்தையும் பாட்டியும் சொல்ல மறந்த கதைகளுக்கும் பாடாத பாட்டுகளுக்கும் புத்துயிர் கொடுக்க, அம்மாவும் அப்பாவும் அரிச்சுவடி கற்றனர்.
அவர்கள் ஐந்து வருடங்களாக வசிக்கும் ஹென்னூர் ஹைட்ஸ் குடியிருப்பு வளாகத்தில் எப்போதாவது மின்தூக்கியிலோ, தரிப்பிடத்திலோ, நடைபாதையிலோ எதிர்ப்படுகையில் ஒரு ஹலோ ருக்மிணி, ஹாய் ஸார், குட்மார்னிங் அங்கிள்/ ஆன்ட்டீயுடன் கடந்தவர்கள், யாரென்றே தெரியாதது போல் ஒதுங்கிச் சென்றவர்கள், இவர்களே ஒதுக்கியவர்கள் என அத்தனை பேரும் இப்போது இவர்கள் வசுவின் அம்மா, அப்பாவாக அடையாளம் கண்டனர்.
சௌமித்ரன் “வர வர நான் கேர் ஆஃப் வசு ஆயிடுவேன் போல இருக்கு” என சந்தோஷமாக அலுத்துக்கொண்டான்.
ருக்மிணியின் அலுவலகத்தில் நடந்த ஃபேமிலி கெட் டு கெதரில் வசுவுடன் செல்ஃபி எடுத்தவர்கள் அநேகம்.
பிறந்தபோது கடவுள் தன்மையுடன் பெரிதாக இருந்த வசுவின் கண்மணிகள், உலகைப் பார்க்கப் பார்க்க, அறிவும் புரிதலும் வர வர, தன் வெகுளித்தன்மையை ஒவ்வொரு நாளும் இழப்பதைக் காண சௌமித்ரனுக்கு வெகு ஸ்வாரஸ்யமாக இருந்தது.
வசுவின் அழுகையும் பிடிவாதமும் அதிகரிக்கும்போது
“முனீம்மா, நம்ம பீம்பாய் கொஞ்ச கொஞ்சமா மனுஷக் குட்டியா மாறிண்டு வரான்டீ” என்று சிரிப்பான்.
நவம்பர் மாதத்தில் ஒரு வாரமாகவே மாலையானால் தொடர்ந்து சீரான மழை பெய்ததில், பெந்தகொள்ளூரே சில்லிட்டுக் கிடந்தது.
முந்தையநாள் மாலைதான் சுற்றம் சூழ இரண்டாவது பிறந்தநாளைக் கொண்டாடிய வசுவிற்கு ஏற்கனவே முட்டு சளி இருக்க, இரவே லேசான காய்ச்சல் வந்துவிட்டது.
பாட்டிகள் இருவரும் உப்பு, மிளகாய், கற்பூரம் என மாற்றி மாற்றி கண்ணேறு கழித்தும் ஜுரம் இறங்கவில்லை.
சைபர் செக்யூரிடியின் முக்கிய அங்கமான எதிகல் ஹேக்கிங் பற்றிய டெக்னிகல் செமினார் இருந்ததால், ருக்மிணி அலுவலகம் சென்றிருந்தாள். சௌமித்ரன்தான் மகனோடு வீட்டில் இருந்தான்.
மகள்தான் தந்தைக்கு நெருக்கம் என யார் சொன்னது?
ஜூர வேகத்தில், பாட்டிகளிடம் போகாது, நாள் முழுவதும் தந்தை வாகனத்தில் பவனி வந்தவனை, மருந்து கொடுத்து, உறங்க வைத்த சௌமித்ரனின் செயல்களில்தான் எத்தனை மென்மையும் லாகவமும்!
வசு தூங்கியதும் நந்திவனுக்கென கூடுதலாக வாங்கி இருந்த சில கருவிகள், ஸ்ப்ரேயர்கள், தொட்டிகள் அனைத்தும் வந்து இறங்கவிருந்ததால், சத்தம் போடாது விரைவில் வந்து விடுவதாகச் சொல்லி நழுவிச் சென்றான்.
அதிசயமாக இரண்டு மணி நேரம் போல் உறங்கிய குழந்தைக்கு மருந்தின் வீரியம் குறைந்து மீண்டும் ஜூரம் அதிகமானதில், பிதற்றத் தொடங்கியவன், திடீரென விழிகள் நிலைக்க, உடல் ஒருமுறை உதற, வசவின் கை, கால் வெட்டி இழுக்கத் தொடங்கியது.
பயந்து போன ஜெயந்தியும் மைதிலியும் ருக்மிணி சௌமித்ரன், ரேகா என மாறி மாறி அழைத்தனர். நல்ல வேளையாக, வீட்டின் அருகே வந்து விட்ட சௌமித்ரன் “குழந்தையோட கீழே வந்து நில்லுங்கோ, நான் வரேன்” என்றான், தன் பதட்டத்தை மறைத்துக்கொண்டு.
சைல்ட்கேர் ஹாஸ்பிடலுக்குப் போனதுமே ‘அதிக ஜூரம்தான் காரணம்’ என்ற குழந்தைநல மருத்துவர் விரைந்து சிகிச்சையளிக்க, இருபது நிமிடத்தில் சீராகி உறங்கத் தொடங்கினான் குழந்தை.
பெங்களூர் டிராஃபிக்கில் சிக்கி ஏழரை மணிக்கு வந்த ருக்மிணியைக் கண்டதும், அப்போதுதான் விழித்திருந்த வசு, எதுவுமே நடவாதது போல் “உக்கூ (ருக்கு)” எனவும் கலங்கியவள் “ஸாரிடா பட்டு, நான் இனிமே உன்னை விட்டு எங்கயும் போக மாட்டேன்” என மகனை இறுக அணைத்துக் கொள்ள, டாக்டர் சிரித்தார்.
“டோன்ட் ஒர்ரி மேம், இது சகஜம்தான். ஹி ஈஸ் ஆல்ரைட். ஸ்டில், நைட் மட்டும் கொஞ்சம் மானிட்டர் பண்ணுங்க” என்று அனுப்பி வைத்தார்.
வீடு திரும்பிய பின், நன்கு உறங்கி இருந்த வசு வழக்கமான சேட்டை மோடுக்குத் திரும்பி, வீட்டை இரண்டாக்கிய பிறகே உறங்கினான்.
மெதுவே மடியிலிருந்து மெத்தையில் படுக்க வைத்தாள் ருக்மிணி.
வசு தூக்கத்தில் புரண்டு விழுந்தால் அடி படாது இருப்பதற்கென கட்டிலை ஒட்டித் தரையில் விரித்திருந்த மெத்தையில் அமர்ந்திருந்த சௌமித்ரனை நெருங்கித் தோளில் சாய்ந்தவள், தேக்கி வைத்திருந்த பதற்றத்தை அழுகையாகப் பொழிந்தாள்.
“நான் நாளைக்கே பேப்பர் போடப்போறேன் சௌ. என்னால இந்த டென்ஷனைத் தாங்க முடியல”
“சரி”
“பணம், கேரியர்லாம் எம் பட்டுவை விட ஒன்னும் ஒசத்தி இல்ல”
“சரி”
“நினைக்கவே பயமா இருக்கு சௌ. நீங்க எப்படி மேனேஜ் பண்ணினேள். பாவம், அம்மா ரெண்டு பேரும் கலங்கி போயிட்டா”
“ஆமாடா”
“ஜுரத்தோட அவனை விட்டு உங்களை யாரு சௌ வெளில போகச்சொன்னா?”
“...”
“சீரியஸா நான் வேலையை விடப் போறேன் சௌ”
“முனீஸ், என்னைப் பாரு”
“என்ன, நீங்க என்னை கன்வின்ஸ் பண்ண வேண்டாம். உடம்பு சரி இல்லாத குழந்தையை விட்டுட்டு நான் ஆஃபீஸுக்கு போயே இருக்கக் கூடாது சௌ”
“வேலையை விடு, விடாத. அது உன்னிஷ்டம். ஆனா, ஸ்டாப் பிளேமிங் யுவர் செல்ஃப் மினி. இப்படி ஆகும்னு உனக்குத் தெரியுமா? இங்கேயே இருந்த எனக்கே ஒன்னும் புரியல. இது காமன்தான், நிறைய குழந்தைகளுக்கு வரும்னு டாக்டர் சொன்னதை கேட்டதானே?”
“ஆனா, வசு…”
“ஹி ஈஸ் பர்ஃபெக்ட்லி ஆல்ரைட் டா மினி, நீயே பாரு, தூங்கும்போது கூட பிடிவாதமா கைல மத்தோட தூங்கறான் பாரு. தயவு செய்து அவனை இறுக்கிப் புடிச்சு பயமுறுத்திடாதடீ. ஃப்ரீயா விடு”
“குழந்தை சௌ அவன். இனிமே ஸ்கூலுக்குப் போகணும். படிக்கணும். நாமதானே…”
“யார் இல்லைன்னா மினி, அவனுக்குத் தேவையானதை கத்துக் கொடுப்போம். எதை, யாரை எப்படி கவனிக்கறதுன்னு சொல்லித் தருவோம். சரி எது, தப்பு எதுன்னு புரிய வைப்போம். எல்லாத்துக்கும் துணையா இருப்போம். முக்கியமா வசு, வசுவா வளர,
அவன் கூடவே இருப்போம். அவனே புரிஞ்சு, கத்துண்டு வளர்ந்தா நல்லது. நம்ம படிப்பு, எக்ஸ்போஷர், அனுபவத்தை சொல்லித் தரணுமே தவிர, நமக்குத் தெரிஞ்சதை எல்லாம் அவன் மேல திணிக்கக் கூடாது, அக்ரி?”
“ம்… ஆனா வசு விஷயத்துல என்னால உங்களை மாதிரி யோசிக்க முடியலை சௌ. ஒரு மாதிரி பொஸஸிவ் ஆயிடறேன்”
சிரித்த சௌமித்ரன் “மாமியார் இன் மேக்கிங்”
ருக்மிணி “போடா” என்றாள் கிசுகிசுப்பாக.
உறங்கும் மகனையே பார்த்தபடி கணவன் சொன்னதை அசைபோட்டவளுக்கு, அவன் சொன்னது அனைத்தும் சரி என்று புரிந்தாலும், தாய்மனம் முரண்டியது.
“என்னடா மினி யோசிக்கற?”
“லைஃப் இப்படி மாறும், நாம ரெண்டு பேரும் நம்மை விட்டு, இப்படி குழந்தையே உலகம்னு இருப்போம்னு நினைக்கவே இல்லை சௌ”
“ஏன், இந்த சேஞ்ச் பிடிக்கலையா?”
“சேச்சே, வாழ்க்கை முன்னை விட ஸ்வாரஸ்யமா, எங்கேஜிங்கா, அர்த்தமுள்ளதா மாறி இருக்கு சௌ”
“ம்…”
“ஐ மீன், இப்பவுமே குழந்தை வேணாம்னு நாம எடுத்த முடிவு தப்புன்னு நான் நினைக்கலை சௌ. ஆனா, அந்த நாட்களை நம்ம செயலால, பேச்சால, பயணங்களால நாமே இட்டு நிரப்ப வேண்டி இருந்தது. இப்ப அதுக்கு அவசியமே இல்லாம வசுவே எல்லாமா இருக்கான்”
ருக்மிணியின் நெகிழ்ந்த குரலில் விரவிக்கிடந்த வாஞ்சையில், சௌமித்ரன் எட்டி மகனின் கன்னத்தை ஒற்றை விரலால் வருடினான்.
சௌமித்ரனுக்கு தங்களின் உறவுக்கு, மரபுக்கு சாட்சியாக, தங்கள் காலத்துக்குப் பின்னும் தங்களின் நிழலாக, நீட்சியாக நிற்கப் போகும் அடாவடி மகனின் அமைதியான உறக்கம் கவிதையாகத் தோன்றியது. ஆம், அவர்களே இழைத்த கவிதை!
“தூங்கற குழந்தையை அப்படிப் பார்க்காத சௌ, கண்ணு படும்”
“முனீஸ், நாம ஏன் இப்படி செய்யக்கூடாது?”
“எப்டி?”
“ஒரு வசுவே இத்தனை சந்தோஷம் தந்தா, ஒரு பொண்ணு வந்தா எப்படி இருக்கும்?”
“ஸோ, பிரேர்ணா பேரை வைக்க ஆள் வேணுமாக்கும்?”
“சான்ஸே இல்லைடீ முனீஸ். வெச்சா ராதா அல்லது சத்யபாமாதான்”
“அடப்பாவி!” என்றவள் “சௌ, நாம திட்டம் போட்டு, கொள்கைக்கு கொடி புடிச்சு, இறுக்கமா இருக்கறதை விட, வாழ்க்கை அதன் போக்குலதான் அதிக சுவாரஸ்யமா இருக்கு. இப்பவும் அதேதான் சொல்றேன், வசு போலவே தானா வந்தா வரட்டும்”
“கையை கட்டிண்டு வா வான்னா வருமா, நாமதான் வரவழைக்கணும்”
“நீ திருந்தவே மாட்ட சௌ”
“திருந்த நான் என்ன கிரிமினலாடீ?”
பேச்சு ஸ்வாரஸ்யத்தில் மெதுவே குரல் உயர்ந்ததில், வசு “...ம்மா..” என்று எழவும், எதிரியைக் கண்ட போர் வீரர்களைப் போல் சௌமித்ரனும் ருக்மிணியும் தரையில் குப்புறப் படுத்துப் பதுங்க, பொத்தென அவர்கள் மேலே குதித்த வசு,
“நானும், நானும்”

Last edited:
Author: VedhaVishal
Article Title: இழைத்த கவிதை நீ! 16 - FINALE AND EPILOGUE
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.