- Joined
- Jun 17, 2024
- Messages
- 20
இழைத்த கவிதை நீ! 11
“நீயும் வாயேம்மா, ஷாப்பிங் போனா ஒரு சேஞ்சா இருக்கும்” என்ற ருக்மிணியின் அழைப்பை மறுத்தார் ஜெயந்தி.
“என்னால கடை கடையா ஏறி இறங்க முடியாது ருக்கு, நான் ரேகா பொண்ணோட பர்த் டேக்கு வரேன். இப்ப வேண்டாம்”
“சாப்பிட்டதும் நீங்க போட வேண்டிய மாத்திரையை இந்த குட்டி டப்பால வெச்சிருக்கேன் மா” என்றான் சௌமித்ரன்.
“அம்மா, நீ தனியா இருப்பியா, சீக்கிரம் வந்துடுவோம்”
“அடடா, நான் என்ன சின்னக் குழந்தையாடீ ருக்கு, ஒன்னும் பிரச்சனையில்லை. நான் வந்ததுல இருந்து நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வெளிலயே போகலை. நீ நிதானமா வந்தாலே போறும். அவசரம்னா, இருக்கவே இருக்கு மொபைல்”
“எங்க போகலாம் முனீஸ்?”
“கமர்ஷியல் ஸ்ட்ரீட்”
நிறைய எண்ணிக்கைகள் கொண்ட LEGO ப்ளாக்குகள், இரண்டு, மூன்று நிறங்களில் கையில் ஒட்டாத மணல் (Kinetic sand), சி எஸ் லூயிஸின் நார்னியா புத்தகம் என ஸ்வேதாவுக்குப் பரிசுகள் வாங்கினர்.
ருக்மிணி வெள்ளியில் சிறிதான வளையங்கள், குட்டி ஜிமிக்கி, ஹூப்ஸ், டெடி பியர் தோடு, பிரேஸ்வெட் என வாங்கினாள்.
“மினி, சின்னப் பொண்ணுக்கு நகை, அதுவும் வெள்ளில ஏன் வாங்கற?”
“ஏன், மாமாக்கு மட்டும்தான் ஃபோன் வருமா?”
“சரியான கேடிடீ அவ, அவ்ளோதானா, பில் போடலாமா?
“ஒரு நிமிஷம் சௌ,”
என்றவள், மைதிலிக்கு அழைத்து “ஸ்வேதாக்கு கிஃப்ட் வாங்க வந்திருக்கோம். உங்களுக்கு ஏதாவது வாங்கணுமாம்மா?”
“நான் பணமாவே குடுத்துடறேன்”
“சரிம்மா”
தனக்கென ஒரு ஆன்டீக் கொலுசு வாங்கிக் கொண்டு வந்து “இதுவும்” என்றாள்.
“பதினாலாயிரமா, யாருக்குடீ?”
“எனக்குதான்”
“அப்ப சரி”
வெளியில் வந்து ஆளுக்கொரு ஃப்ராங்கி வாங்கி வந்த ருக்மிணி “வேர்ல்ட் பெஸ்ட் ஃப்ராங்கீ இதுதான்” எனவும் சௌமித்ரன் சிரித்தான்.
உணவகத்திற்கு சென்று எதிரெதிரே அமர்ந்தனர். மெனு கார்ட் வந்ததும் “நீயே சொல்லு சௌ”
ருக்மிணிக்குப் பிடித்த டொமேடோ சூப், க்ரிஸ்ப்பி கார்ன், மங்களூர் போண்டா, மைசூர் மசால் தோசை என ஆர்டர் செய்தான்.
. அன்று இந்தியா பாகிஸ்தான் மேட்ச் என்பதாலோ என்னவோ வார இறுதியிலும் வழக்கத்தை விட கூட்டம் குறைவாக இருந்தது
எழுந்து சௌமித்ரனின் அருகில் வந்து அமர்ந்த ருக்மிணி, “நாம இப்படி வெளில வந்து, டின்னர் சாப்பிட்டே ரொம்ப நாளாச்சு இல்ல சௌ?”
“..”
“சௌமி”
“ம்… ஆமா”
அவனுடன் கையைக் கோர்த்து, லேசாக தோளில் சாய்ந்தாள்.
“என்னடா?”
“தெரியல சௌ, சந்தோஷமா, பயமா, எமோஷனலா இருக்கு. Suddenly I feel very vulnerable”
மனைவியின் கைகளை அழுத்தியவன் “முனீஸ்வரிக்கு என்னாச்சு?”
வெயிட்டர் வரவும் விலகினர். மீட்டா பானுடன் வீடு வந்தனர்.
உறங்கக் காத்திருந்த ஜெயந்தியிடம் வாங்கிய பொருட்களைக் காட்டினாள்.
ருக்மிணி விளக்கை அணைத்து, கிச்சனை மூடிவிட்டு ஜிஞ்சருக்கு பால் வைத்துவிட்டு அறைக்குள் வந்தவள், வேகக் குளியல் போட்டு, வேஷ்டியில் நின்றிருந்த சௌமித்ரனைக் கண்டு திகைத்தாள்.
“என்ன சௌ, திடீர்னு?” என்றபடி மாற்றுடை எடுத்தவளின் அருகில் வந்தான்.
சற்றே அடக்கமான மஞ்சள் நிற ஓளியில் சந்தன நிற புடவையும் ஆழ் நீலத்தில் கலம்காரி ரவிக்கையும் தளர்ந்த பின்னலில் ஒரு கிள்ளு பூவுமாக மூக்கில் இருந்த ஒற்றை வைரம் பளீரிட ருக்மிணி வசீகரித்தாள்.
“என்ன?”
“அழகா இருக்கடீ. இந்த பூ, புடவை, விபூதி, குங்குமம் எல்லாம் எனக்கு புடிச்சிருக்குடா மினி”
“டிபிகல் இந்திய ஹஸ்பண்டா ஆயிட்ட சௌ”
சிரித்தான். நகர்ந்தவளிடமிருந்து இரவு உடையைப் பறித்தவன் “உன்னோட மேட்ச் ஆகதான்டீ வேஷ்டி”
“அது சரி”
ருக்மிணி வந்து படுத்த நொடி அணைத்தவன், மனைவி ஏதோ சொல்ல வந்ததை கண்டு கொள்ளவில்லை.
“சௌ, இன்னிக்கு…”
“சும்மா சும்மா டைம் டேபிள் போடாதடீ”
“என்ன பண்ற சௌ..”
“இளகல் சோதனை”
“அப்படீன்னா?”
“Vulnerability checking”
“...”
“முனீம்மா, வேணாம் வேணாம்னு இந்த போ…”
பாதித் தூக்கத்தில் “போடா, க்ரூட் ஃபெலோ (crude fellow)” என்றவளுக்கு வியர்த்திருக்க, ஏசியைக் கூட்டி, சரியாகப் போர்த்தினான்.
எதையோ மறந்த, எதுவோ விடுபட்ட உணர்வுடன் உறக்கத்தில் ஆழ்ந்தான்.
****************
நிதிவனுக்குள் சென்று காரை நிறுத்திய ருக்மிணி அம்மா, மாமியார் இருவருடனும் மெதுவே உள்நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
சௌமித்ரன் காலையிலேயே நிதிவனுக்குக் கிளம்பி இருந்தான். ஜெயந்தி குளிக்கச் சென்றுவிட, ருக்மிணி கையில் காஃபியுடன் பேப்பரில் மூழ்கி இருக்க, எட்டரை மணிக்கு திடீரென மைதிலி வந்தார்.
“அம்மா! வாங்…”
“இப்பதான் எழுந்தியா நீ?””
“காஃபி கொண்டு வரட்டுமா?”
டைனிங் டேபிளில் டப்பாக்களை வைத்துக்கொண்டே “இதுல லெமன் சேவிகேவும் தட்டே இட்லியும் இருக்கு, மித்ரா எங்க?”
“கார்டனுக்கு” என்றபடி டப்பாவைத் திறக்கப் போனவளை ”குளிக்காம அதைத் தொடாத. முதல்ல போய்க் குளிச்சுட்டு வா, சாப்பிடலாம்”
ருக்மிணி தயாராகி வந்தபோது, அம்மாக்கள் இருவரும் ஃப்ளாஸ்க்கில் காஃபியுடன் கார்டனுக்குச் செல்லத் தயாராகி நிற்க, இதோ, உணவுக் கூடையுடன் நிதிவனுக்கு வந்துவிட்டனர்.
சௌமித்ரன் ஆர்க்கிட் மரங்கள் அதிகமிருக்கும் இடத்திற்கு வரச்சொல்ல, சென்றனர். காலை உணவுக்குப் பின், சௌமித்ரன் டெஸ்பேட்ச் செக்ஷனுக்குச் சென்றுவிட, ருக்மிணி சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றாள்.
சற்று நேரத்திலேயே அவர்கள் முகத்தில் சோர்வைக் கண்ட ருக்மிணி “திரும்பி நடக்கலாம்மா”
மைதிலி “ஏன்?”
“வந்த தூரம் நடக்கணும்மா”
“அது எனக்குத் தெரியாதா?”
“...”
மைதிலி ஜெயந்தியிடம் “நாம சொன்னா எதையும் கேக்கறது கிடையாது. ஆனா, நாம மட்டும் அட்டென்ஷன்ல நிக்கணும்” என, ஜெயந்தி மெதுவாகத் தலையசைத்தார்.
ருக்மிணி விறுவிறுவென முன்னால் நடக்க, மைதிலி “ருக்கு என்ன சொல்றா, ஏதாவது பேசினேளா?”
ஜெயந்தி “ம்… சமயம் வரும்போதெல்லாம் நூனும் சொல்லத்தான் செய்யறேன், பார்க்கலாம். அடுத்த வாரம் ருக்கு திரும்பவும் ஆஃபீஸ்ல ஜாயின் பண்ணனுமாம்”
மைதிலி “பகவான்தான் ரெண்டு பேருக்கும் நல்ல புத்தியைக் கொடுக்கணும். குருவாயூர் கிருஷ்ணனுக்கு தங்கத்துல அரணா (அரைஞாண்) பண்ணிப் போடறேன்னு வேண்டிண்டு இருக்கேன்”
குழந்தை வேண்டாம் என்பது என்னதான் சௌமித்ரனும் சேர்ந்து எடுத்த முடிவுதான் எனினும், தன் மகளின் முரட்டுப் பிடிவாதத்தையும், அவள் எடுத்தெறிந்து பேசியதையும் பின்னுக்குத் தள்ளி, நல்லதை யோசிக்கும் மைதிலியின் பேச்சில் ஜெயந்தி நெகிழ்ந்தார்.
எங்கே, பதில் பேசி விடுவோமோ என்ற எண்ணத்தில், அவர்களுக்குக் காத்திருக்காது ருக்மிணி நடையை எட்டிப் போட, மாலா அழைத்தாள்.
“ருக்கு, எங்க இருக்க, அம்மா எங்க?
“ஃபர்ஸ்ட், ஹாய், ஹலோ எல்லாம் சொல்ல மாட்டியா, நான் நிதிவன்ல இருக்கேன், அம்மா, மாமியார் ரெண்டு பேரும் இங்கதான் இருக்கா”
ஏன்?”
“நான் உன் வீட்டு வாசல்ல நிக்கறேன்”
“என்னடீ மாலா சொல்ற, நம்ம ஃப்ளாட்லயா, யூ மீன் பெங்களூர்லயா, தனியாவா வந்த?”
“இல்லல்ல, நாங்க மூணு பேரும்தான்… ஓசூர்ல ஒரு கல்யாணம். அதான்…”
“ஸாரிடீ, முன்னாலயே ஒரு கால் பண்ணி இருக்கலாம்தானே, பத்தே நிமிஷம் வெய்ட் பண்ணு. வரோம்”
சௌமித்ரன் வேலையை முடித்துவிட்டு வருவதாகக் கூற, மூவரும் வீடு திரும்பினர்.
லிஃப்ட் திறந்ததுமே “ விது” என்று பட்டுப் பாவாடை தாவணியில் நின்ற வித்யாவை அணைத்துக்கொண்டு “என் கண்ணே பட்டுடும் போல இருக்கு” என அக்கா மகளுக்கு திருஷ்டி எடுத்த மருமகளை வைத்த கண் வாங்காது பார்த்தார் மைதிலி.
அக்கா மகளென்று இல்லை, ரேகாவின் பிள்ளைகளிடம் கூட பேச்சும் விளையாட்டுமாக இதே போல்தான் இருப்பாள். புதிதாக எதையாவது வாங்கித் தருவாள். அதிலும் ஸ்வேதா குழந்தையாக இருக்கையில் ‘அழகாயிருக்கு’, புடிச்சிருந்தது ‘ என டஜன் கணக்கில் உடைகள் வாங்கி வந்து போட்டு அழகு பார்ப்பாள்.
குழந்தைகளிடம் அத்தனை ரசனையும் ஒட்டுதலும் கொண்டவள் எப்படி குழந்தை வேண்டாமென இருக்கிறாள், அதுவும் கருக்கலைப்பு செய்யும் அளவிற்குத் தீவிரமாக?
‘என் சரக்கும் சரியா இல்ல, இதுல அவளை மட்டும் சொல்லுவானேன்?’
“அம்மா” என்ற ருக்மிணி பைனாப்பிளும் சாத்துக்குடியும் கலந்த ஜூஸை நீட்டினாள்.
“நீ பாரு ருக்கு, நான் கிளம்பறேன்” என்றவரைத் தடுத்தாள்.
”இப்ப என்னம்மா, அவர் வரட்டும், பார்க்கலாம்”
முஹூர்த்தம் சீக்கிரம் என்பதால் மாலா வீட்டினர் காலை டிஃபன் மட்டும் சாப்பிட்டு வந்திருந்தனர்.
காய்கறிகளை எடுத்து மேஜையில் வைத்தவள், மைதிலியிடம் “ என்னம்மா சமைக்கலாம்?” என்றதும், அதுவரை சற்று தனியே உணர்ந்தவர், உற்சாகமாக எழுந்து வந்துவிட்டார்.
மறுநாள் காலையே திருச்சிக்கு கிளம்புவதாகச் சொன்ன மாலா, ஜெயந்தியைக் கேட்க, அவரும் புறப்படத் தயாராகி விட, ருக்மிணியின் முகம் சுருங்கியது. பிற்பகலில் இந்துவின் குடும்பமும் வர, வீடே கலகலத்தது.
சௌமித்ரன் வித்யாவும் இந்துவின் குழந்தைகளும் நிதிவனுக்குச் செல்ல விருப்பப்படவும் அழைத்துச் சென்றான்.
திரும்ப வந்து அவனே எல்லோருக்கும் டீ போடச் செல்ல, கோப்பைகள், ஸ்நாக்ஸ், ரஸ்க் என எடுத்து ட்ரேயில் வைக்க உதவிக்கொண்டே
அதுவரை பார்க்காத பெரிய அளவிலான, வித்தியாசமான உருவ அமைப்புள்ள பூக்களைக் கண்ட வியப்பில் மெவரும் அவனிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்டனர்.
“ஜிஞ்சர் கடிக்குமா சித்தி?” என்ற இந்துவின் சின்ன மகளின் கேள்விக்கு,
“சேச்சே, உன் சித்திதான் கடிப்பா”
வித்யா “யூ டூ சித்தப்பா?”
எல்லோரும் அரட்டையில் இருக்க, சௌமித்ரன் “மினி, சமைக்க வேணாம். டின்னர் ஆர்டர் பண்ணிடலாம்” என்றான். டின்னருடன் ஐஸ்க்ரீமும் வந்தது.
வித்யாவும் ருக்மிணியும் ஒரே நிறத்தில், கிட்டத்தட்ட ஒரே மாதிரி உடை அணிந்திருந்தனர். இருவருக்குமான உருவ ஒற்றுமை பளிச்சென தெரிய, மைதிலி, “உனக்கு பொறந்த பொண்ணா இருந்தா கூட இப்படி அச்சடிச்ச மாதிரி ஜாடை இருக்குமான்னு தெரியலை ருக்கு”
“...”
“யா, தெ ரிஸம்பிள் எ லாட்” என்ற சௌமித்ரனின் கண்களை சந்திப்பதை காரணமின்றித் தவிர்த்த ருக்மிணிக்குத் தன் தவிப்பும் தத்தளிப்பும் ஏனென்று புரியவில்லை.
எதிர்பாராது கிடைத்த வாய்ப்பை விடாது தொடர்ந்த அரட்டை நிற்பதாகத் தெரியாததில், ஹாலிலேயே படுக்கையை விரிக்க முடிவு செய்து சோஃபாக்கள், மேஜைகளை ஓரம் தள்ளிவிட்டு ரஜாய்களை விரித்தனர்.
எல்லோருக்கும் போர்வை, தலையணைகள் எடுக்கையில் கிடைத்த தனிமையில் தன்னைப் பின்னிருந்து இறுக்கியவளின் உணர்ச்சிகள் தந்த தாக்கத்தில் சௌமித்ரன் உறைந்தான்.
ருக்மிணி மறுநாள் காலையில் சௌமித்ரனிடம் அவள் ஆசைப்பட்டு வாங்கிய ஆன்டிக் கொலுசை “இதை வித்யாக்கு கொடுக்கட்டுமா?”
“உனக்கு பரவாயில்லைன்னா கொடேன்”
“போ சௌ, ஒழுங்காவே பதில் சொல்ல மாட்டியா?”
“கொடு”
“குட் பாய்”
“சரிதான்”
வித்யா அம்மாவைப் பார்க்க,
மாலா “இப்ப எதுக்குடீ இத்தனை காஸ்ட்லியா?”
சௌமித்ரன் “கிஃப்ட் குடுத்தா கேள்வி கேக்காம வாங்கிக்கணும். விது, நீ வாங்கிக்கோடா”
மாலா தயக்கத்துடன் இந்துவைப் பார்க்க, சிரிப்புடன் “ஏய், என்னை ஏன் பாக்கற, என் பசங்களுக்கு அடிக்கடி ஏதாவது வசூலாயிடும்” என்றாள் இந்து,
“இதென்ன கம்பேரிஸன்?” ருக்கு.
“ருக்கு, இது போல செய்ய எங்களுக்கும் சான்ஸ் வேண்டாமாடீ?” - மாலா.
“...”
ஜெயந்தி “நான் சொன்னதை யோசி ருக்கு” என சொல்லிச் சென்றார்.
அன்றிரவு இரண்டு மணி இருக்கும். ஏசி குளிர்ந்ததில் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்ட சௌமித்ரன், போர்வைக்குள் மனைவியைத் துழாவ, தென்படவில்லை. பிளாக் காஃபியுடன் டெரஸ் ஜூலாவில் அமர்ந்திருந்தாள்.
“மினி”
“நத்திங் சௌ, ஜஸ்ட் அன்வைன்டிங்”
“நீ முதல்ல உள்ள வா” என இழுத்து வந்தான்.
“போட்டுக் குழப்பிக்காதடீ. என்ன யோசிக்கற, எது உன்னைடிஸ்டர்ப் பண்றதுன்னு எங்கிட்ட சொல்லணும், காட் இட்?”
“எனக்குத் தெரிஞ்சா உங்கிட்டதான் வருவேன் சௌ”
“குட், இப்ப தூங்கு வா”
மறுநாள் மதியமே தன்னை மீட்டுக்கொண்டவள், ஏப்ரனுடன்
“சதாசார சேனாபதி வீரா...
படுகாமலோலுபா...
என்றம்மேடெ ஜிமிக்கி கம்மல்
என்றப்பன்றெ ப்ராண்டிக்குப்பி” என அட்சரம் பிசகாது பாடியபடி பீட்ஸா பேக் செய்தவளைக் கண்ட சௌமித்ரன் நிம்மதியானான்.
******************
புதன்கிழமையன்று சௌமித்ரன் ஆன்லைனில் ஆர்க்கிட் கல்ட்டிவேஷன் க்ளாஸ் எடுக்க வேண்டி இருந்ததால், ருக்மிணி மட்டும் காலை பத்து மணிக்கெல்லாம் ரேகா வீட்டிற்குச் சென்றாள்.
ரேகா மட்டும் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் இருக்க, நல்லதொரு காஃபிக்குப் பின் பணிப்பெண்ணின் உதவியுடன் ஸ்ட்ரீமர், பலூன், என ஹாலை அலங்கரித்தனர். ஃப்ரையம்ஸ் பொரித்து, பாதாம்கீர் மற்றும் ஃப்ரூட் சாலட் செய்து வைத்தனர்.
ருக்மிணிக்கு ஏனோ, ரேகாவின் பார்வை சற்று அதிகமாகத் தன் மீது படிவது போல் தோன்றியது.
ஒரு கட்டத்தில் “ஏதாவது கேக்கணுமா ரேகா?”
“நந்திங் ருக்கு. இந்த ஆரஞ்ச் கலர் உன் கன்னத்துல ரிஃப்ளெக்ட் ஆகறது”
மதியம் மூன்று மணிக்கு மைதிலி வர, பினனோடே பள்ளியிலிருந்து குழந்தைகள் வந்தனர்.
எக்ஸைட்மென்டில் துள்ளிக் குதித்த ஏழு வயது ஸ்வேதா, ஷிம்மியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தவள், அப்போதுதான் உள்ளே நுழைந்த சௌமித்ரனிடம் ஓடியவள் “கிஃப்ட் எங்க, ரெடியா?” என கையை ஆட்டிக் கண்களை உருட்டி சைகையில் கேட்க, அவனும் அவளைப் போலவே இரண்டு கைகளையும் ‘இல்லை’ என்பது போல் விரித்துக் காட்ட, மூச்சு வாங்க முறைத்தவளைத் தூக்கிச் சுற்றினான்.
“பேட் மாமா, விடு என்னை”
“கிஃப்ட் தரலைன்னா பேட் மாமாவா, போடீ சிக்கது கப்பே (சின்ன தவளை)”
“..ம்மா, பாரும்மா, நான் ஒன்னும் frog இல்ல”
அவளது அண்ணன் அஸ்வின் “நீ ஃப்ராக் இல்ல, காக்ரோச்” என, ஸ்வேதா அழத் தொடங்க, சரியாக குமார் வரவும் டாடீ” என தஞ்சம் புகுந்தாள்”
“யாருடா என் தங்கக் கிளியை அழவெச்சது, அதுவும் பர்த் டே அன்னிக்கு?”
ரேகா “ஐயோ, இப்ப ஒரு பெர்ஃபார்மன்ஸை வேற பார்க்கணுமே”
ருக்மிணி குட்டியாக கிஃப்ட்கள் இருந்த ஒரு கிஃப்ட் பையைக் கொண்டு வந்து ஸ்வேதாவிடம் தர, அத்தனை அழுகையும் சிணுங்கலும் ஸ்விட்ச் போட்டது போல் மறைந்து, குழந்தை பிரஸன்ன வதனியானாள்.
ஐந்து மணிக்கு மேல் கேக்கும் உணவு வகைகளும் வர, அஸ்வின் மற்றும் ஸ்வேதாவின் நண்பர்களும், மற்ற விருந்தினர்களும் வந்தனர். முதலில் எளிதான ஒரு புது உடையில் இருந்த ஸ்வேதா பிறகு, ஆழ் நீலமும் பேஸ்டல் பிங்க்கும் கலந்த ஒரு லேயர் ஃப்ராக்கை அணிந்து கேக் வெட்டினாள். எட்டு மணி வரை ஆட்டமும் பாட்டமுமாக நேரம் கழிய, உணவு முடிந்து அனைவரும் சென்ற பிறகு, அஸ்வினும் ஸ்வேதாவும் பரிசுகளைத் திறந்தனர்.
மைதிலி அன்று அங்கேயே தங்கிக்கொள்ள, சௌமித்ரனும் ருக்மிணியும் புறப்பட்டனர்.
சௌமித்ரன் மருமகளைத் தூக்கி முத்தமிட, ருக்மிணி “ஸ்வேதாவோட ட்ரெஸ் க்ளாஸா இருக்கு, இல்ல சௌ?”
“ம், எங்க வாங்கின ரேக்ஸ்?”
ரேகாவிற்கு முன் மாமாவின் கேள்விக்கு பதில் சொல்ல விரும்பிய ஸ்வேதா “அங்காடி ஹெரிடேஜ் மால்லதான் வாங்கினோம் மாமா. நீ கூட ஒரு ஆன்ட்டி கூட சாப்ட்டல்ல, நாங்க பார்த்தமே, அப்போதான் வாங்கினோம், இல்லம்மா?”
மகள் இப்படி கவனித்துப் போட்டு உடைப்பாள் என எதிர்பாராத ரேகாவும் குமாரும் அதிர்ந்து விழிக்க, மௌனத்தின் அரசாங்கம்.
மைதிலி “யாருடா மித்ரா அது, என்னிக்கு?”
“ஸாட்டர்டே பாட்டி” என்ற மகளை, குமார் “ஸ்வே குட்டி, நாளைக்கு ஸ்கூல் உண்டுல்ல, போய் ட்ரெஸ் சேஞ்ச் செஞ்சுட்டு, பிரஷ் பண்ணிட்டு படு போ. அஸ்வின், நீயும் போடா”
பெரியவர்கள் சௌமித்ரனின் பதிலுக்குக் காத்திருக்க, சமீபமாக எதையோ மறந்தது, மிஸ் செய்தது போல் தோன்றிய அனைத்தும் தக்க தருணத்தில் நினைவு வரப்பெற்ற ருக்மி “அது பிரேர்ணா, காஸ்மோபாலிடன் க்ளப் மெம்பர், ‘நான் வரேன்’ என்றபடி வெளியேறியவளைத் தொடர்ந்தான் சௌமித்ரன்.
******************
வெள்ளிக்கிழமை இரவு, பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் தோஹா வழியாக சான்ஃபிரான்ஸிஸ்கோ செல்லும் விமானத்திற்குக் காத்திருந்தாள் ருக்மிணி.

Last edited:
Author: VedhaVishal
Article Title: இழைத்த கவிதை நீ! 11
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.