இருபுனலும் வருபுனலும் 9
மருத்துவமனையில் வைத்தியம் முடித்து அடுத்து சில நாட்களுக்கான மருந்துகளையும் கையில் வாங்கிக் கொண்டு, ஊருக்குக் கிளம்பும்போது சத்யாவின் அம்மா, "ஊருக்கு வரும்போது கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரணும்" என்றார். "கண்டிப்பா வரேன்" என்றேன்.
"அம்மா! இவரு கூடவே இன்னும் நாலு பேர் வருவாங்க. ஃப்ரெண்ட்ஸுன்னு.. நல்லா ரவுண்டு கட்டி சாப்பிடுவாங்க.. பாத்தும்மா.. பத்திரமா இருந்துக்கோ" என்று அம்மாவிடம் கூறினாலும், "எப்ப வருவீங்க?" என்று ஆர்வமுடன் என்னிடமும் கேட்கத் தவறவில்லை.
"வர்ற வாரம் போய் அடுத்த சனி ஞாயிறு வருவேன்" என்றேன். அவள் அம்மாவுக்கு உடல்நலம் முன்னேறியிருக்கிறது என்பதில் சத்யாவும் நானும் மகிழ்ந்தாலும், பிரிந்து போவதில் எங்கள் இருவருக்குமே வருத்தம் தான் என்பதை உணர முடிந்தது.
அன்றும் அதற்குப் பின் வந்த நாள்களிலும் நான் அதிக நேரம் அலைபேசியில் செலவழிப்பதைப் பார்த்து, "லவ்ஸ் வொர்கவுட் ஆயிடுச்சு போல பாஸ்!" என்று ஷாகுலும், "ஜி! ட்ரீட் வைங்க ஜி!" என்று சரவணனும் கேட்ட போது தான் விஷயத்தை என் நண்பர்களிடம் கூறவில்லையே என்று தோன்றியது.
பள்ளி, கல்லூரி, டைப்ரைட்டிங் க்ளாஸ், அலுவலகம், என்று எத்தனை நண்பர்கள் வந்தாலும் என் பால்ய நண்பர்கள் தானே என் குடும்பத்தினர் மாதிரி நெருக்கமானவர்கள்.. தயங்கித் தயங்கி அவர்களிடம் ஃபோனில், "ஆத்தங்கரையில ஒரு பொண்ணப் பாத்தோம்ல டே.. பஜ்ஜிக் கடை.. அந்தப் பொண்ணுக்கும் எனக்கும் பிடிச்சுப் போச்சு. பேசிக்கிட்டு இருக்கோம்" என்றேன் வெட்கத்துடன்.
"சைலன்ட் சாமியார் மாதிரி இருந்துட்டு இப்படி காதல் மன்னனா ஆயிட்டான் பாரு.."
"புதுவேலை, புது ஊரு, புது லவ்வரு.. கலக்குற பேச்சியப்பா!" என்று வாழ்த்தியவர்கள்,
"வீட்ல சொல்லிட்டியாடா?" என்று கேட்டு கனவுலகத்தில் பறந்த என்னை நிகழுலகத்துக்கு இழுத்து வந்தார்கள்.
"இன்னும் இல்லடா. அதை நெனச்சாத் தான் பயமா இருக்கு. மொத மாசம் சம்பளம் கூட வாங்கலை.. அதுக்குள்ள பொண்ணு பாத்திட்டியான்னு அம்மா கேட்டா என்னடா சொல்றது?" என்றேன் வருத்தத்துடன். "உங்க அம்மா அப்பாவுக்கு உன் மேல பிரியம் ஜாஸ்தில்லா.. அதனால வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க" என்றான் கரடிப் பாண்டி. நான்கு பேருமே அலைபேசியைச் சுற்றி இருக்க, லவுட் ஸ்பீக்கரில் கேட்டுக்கொண்டிருந்த முருகேசன்,
"நேத்து உங்க அம்மா உனக்கு ஜாதகம் பார்க்கணும்னு எங்க அம்மாகிட்ட சொல்லுச்சாம்.. இப்ப நீயே பொண்ணு பாத்துட்டேன்னா வேலை மிச்சம்ல அவங்களுக்கு.." என்றான்.
"இருக்கட்டும் டே.. எங்கேயாவது வாயை கீய விட்றாதீங்க நீங்க.. அந்தப் புள்ளையும் படிக்கணும், வேலை பாக்கணும்ங்குது.. அவங்க அம்மா வேற முடியாதவங்க.. எனக்கும், கொஞ்சம் காசு சேர்த்து அப்புறம் நம்ம ஊரு கிட்ட மாத்தல் வாங்கிக்கிட்டா நல்லதுதானே.." என்றேன்.
"பிறகு என்னடே.. அந்த அளவுக்குத் திட்டம் போட்டுட்டேல்லா.. நல்ல முன்னேத்தம் தான். நாங்க ஒருத்தர்ட்டையும் சொல்ல மாட்டோம். நீ தைரியமா இரு" என்று ஆறுதல் படுத்தி ஃபோனை வைத்தான் இட்லிப் பாண்டி. இருந்தாலும் எவனாவது ஓட்டை வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், எங்காவது போய் உளறி வைத்து விடுவானோ என்ற பயமும் இருந்தது. நான் பயந்தது போலவே கரடிப் பாண்டி என் அம்மாவிடம் போய்,
"அத்தை! என்ன சொல்லுதா உங்க புது மருமவ.." என்று கேட்டிருக்கிறான். நல்லவேளையாக அம்மா அப்போதுதான் தங்கத்திடம் ஒரு வாக்குவாதத்தை முடித்து விட்டு வந்திருப்பாள் போலும்.. மருமகள் என்றதும் அவள் தான் என்று நினைத்துக் கொண்டு,
"விளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சலமாம்.. புது மருமகளாம்ல புது மருமக.. வந்து ஒரு வருஷம் ஆச்சு.. இன்னும் வாய அடக்குதாளா பாரேன்.. முழு நீளத்துக்குப் பேசுதா.. புள்ளத்தாச்சியாச்சேன்னு உடம்புக்கு நல்லதா நாலு விஷயம் சொன்னா கேக்க மாட்டேங்கா.. வயித்துக்குள்ள இருக்க புள்ளை மேல எனக்கும் உரிமை இருக்குல்ல.." என்று புலம்பியிருக்கிறாள்.
"தங்கத்தை சொல்லல அத்தை.." என்று பாண்டி பேச்சை இழுக்கவும், முருகேசன் சுதாரித்து அவனை இழுத்துக் கொண்டு வேகமாகத் தள்ளிப் போயிருக்கிறான்.
வாழ்வில் எல்லாம் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது என்று ஒரு கணம் அதிகமாக மகிழ்ந்திருப்பேன் போலும், அலுவலகத்தில் என் முதல் பிரச்சனை வந்து சேர்ந்தது.. இதற்குள் எனக்கு அலுவலக ஆட்களின் நடவடிக்கை பழகி விட்டிருந்தது. ராதிகா ஜூனியர் அசிஸ்டென்ட் என்பதைத் தெரிந்து கொண்டேன். எங்களுக்கு சம்பளம் போடுவது அவள் தான். சில சமயம் தான் என்னிடம் நன்றாகப் பேசுவாள். வேறு யாராவது ஒருவர் உடன் இருந்தால் கூட என்னிடம் சுள்ளென்று பேசுவாள். அதற்கான காரணத்தை அவளே ஒரு முறை சொன்னாள்.
"தம்பி.. நான் ஒரு விடோ.. என் வீட்டுக்காரர் இறந்து போய் கம்பாஷனேட் க்ரவுண்ட்ஸ்ல தான் வேலைக்கு வந்தேன். 38 வயசு ஆச்சு எனக்கு. ஒரு பொண்ணு இருக்கா. சின்னப் பசங்கள்ள இருந்து, கிழடு கட்டை வரை எந்த ஆம்பளைன்னாலும் சரி.. இவளை மடக்கிற மாட்டோமா, ஒரு சான்ஸ் கிடைக்காதா அப்படிங்கிற நெனப்புல தான் பாக்காங்க.. அதனாலதான் இப்படிப் பாதி நேரம் கத்திக்கிட்டு இருக்கேன். நீ தப்பா நினைச்சுக்காதே" என்றாள். அவளைக் கொண்டு வந்து விடும் அந்த இளைஞன் யார் என்ற கேள்வி என் மனதுக்குள் எழ, அதைப் படித்தவள் போல,
"என்னைக் கொண்டு வந்து விட்டானே, அவன் எங்க அக்கா மகன். வெட்டியா சுத்திக்கிட்டு இருந்தான். புது பைக் வாங்கி அங்கேயும் இங்கேயுமா அலஞ்சு அம்மா அப்பாட்ட திட்டு வாங்கிக்கிட்டு இருந்தவனை, நான் தான் 'வாடா பெட்ரோலுக்குக் காசு தரேன். தினமும் என்னை கொண்டு போய் விட்டு கூப்பிட்டுட்டு வா'ன்னு சொல்லி இருக்கேன். இதுக நான் அவனை வச்சிருக்கேன்னு நினைச்சுக்கிட்டு இப்ப என்னைப் பத்தி அசிங்கமா பேசிக்கிட்டுத் திரியுதுக. அதுலயும் ஒரு நல்லது.. இப்ப என்னை ரொம்பத் தொல்லை பண்றது இல்ல.. அதனால என்னமும் பேசிட்டுப் போகட்டும்னு விட்டுட்டேன். சில சமயம் ஏதாவது பிரச்சனை வர்ற மாதிரி இருந்தா, அவனைக் கூப்பிட்டு பக்கத்துல கொஞ்ச நேரம் உக்காந்து இருந்துட்டுப் போடா அப்படின்னு சொல்லுவேன்" என்றாள்.
அவள் என்னமோ சாதாரணமாக, குரலில் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல், 'காலையில் இட்லி சாப்பிட்டேன்' என்பது போல் தான் சொன்னாள். ஆனால் எனக்கு அவ்வளவு கஷ்டமாக இருந்தது. அவள் மனதில் எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று புரிந்தது. நான் என்ன சொல்வது என்று தெரியாமல் தரையையே பார்த்துக் கொண்டிருக்க,
"ஹலோ.. பரிதாபம் எல்லாம் வேண்டாம்.. உங்களுக்கு யாராவது அரசியல்வாதி, கட்சிக்காரங்க இப்படி சொந்தக்காரங்க இருக்காங்களா?" என்றாள் சட்டென்று. என்னடா இது சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் இப்படி ஒரு கேள்வி கேட்கிறாள் என்று நினைத்துக்கொண்டு "இல்லையே, ஏன்?" என்று நான் கேட்க,
"குறைந்தபட்சம் ரவுடியாவது யாராவது இருக்காங்களா?" என்றாள் சர்வசாதாரணமாக. பின் அவளே, "ஏன்னா இங்க அப்பதான் குப்பை கொட்ட முடியும். இங்க இருக்குற ஒவ்வொருத்தனும் ஒரு பேக்ரவுண்டோட இருப்பான். அதை வச்சு ஒரு வேலையும் பாக்காம ஊரை ஏமாத்துவான். உங்க சொந்தக்காரங்கள்ல அப்படி டெரர் பார்ட்டி யாரும் இல்லேன்னாலும் எங்க சித்தப்பா போலீஸு, மாமா எம்எல்ஏ அப்படி ஏதாவது சொல்லு.. இந்தப் பக்கிங்க பயந்துரும்.. தொடைநடுங்கிங்க.. பேஸ்மென்ட் இல்லாம பேக்ரவுண்ட்டை மட்டும் வெச்சு நாக்கு வழிக்கவா?" என்றாள்.
அவள் பேசியதில் நிறைய விஷயங்கள் தொடர்பில்லாமல் இருப்பது போலத் தோன்றினாலும், அவள் மனதில் உள்ள வலி அவள் பேசும் போது நன்கு தெரிந்தது. பாவம், சமீபமாகக் கணவன் இறந்து, அதனால் மன உளைச்சலில் இருக்கிறாள் போலும் என்று நான் நினைத்தால், அவள் சொன்னது வேறு மாதிரி இருந்தது.
"பன்னெண்டு வருஷம் ஆச்சு என் புருஷன் செத்து.. இதுவரை ஒரு பைசா யார்ட்டயும் நான் கை நீட்டி வாங்குனதில்லை.. கைமாத்தாக் கூட வாங்குனதில்லை.. என் அக்கா, அண்ணன், தம்பி யார்கிட்டயும் கஷ்டம்னு போய் நின்னதில்லை.. அப்படி இருக்கதுக்கு இவனுங்களுக்கு தைரியம் இருக்கா?" என்று ஆவேசமாகப் பேசி, வாய்க்குள்ளாகவே ஏதோ வசைச்சொல்லை உதிர்த்தாள்.
"சரி தம்பி.. எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லிக்கிட்டே இருக்கேன். பாக்க அப்பிராணி மாதிரி இருக்கியேன்னு தான் இதெல்லாம் சொன்னேன்.. போகப்போகத்தானே தெரியும்.. நீ அப்பிராணியா, இல்லை நீயும் இவங்க கூடச் சேந்து சாக்கடைல விழப்போறியான்னு… " என்று ஒரு பெருமூச்சுடன் கூறிவிட்டு நகர்ந்தாள்.
இந்த அமைதியான அலுவலகத்தில் அப்படி என்ன பிரச்சனை வரக்கூடும் என்று தெரியாத நான், சரி சொல்கிறாளே, கவனமாக இருப்போம்.. போகப் போக தெரிந்து விடாதா, இது ராதிகாவின் மனப்பதற்றமா இல்லை உண்மையா என்று, என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அமைதியான வனத்துக்குள் பயங்கர ஆபத்து இருப்பது போல, அமைதியான ஆறு எப்போது ஆக்ரோஷமாகும் என்று தெரியாதது போல, எங்கள் அலுவலகத்திலும் ஆபத்துக்கள் இருப்பது பின்னால்தான் தெரிந்தது.
நான் வந்து இருபது இருபத்தைந்து நாட்கள் ஓடியிருக்கும். ராதிகா எங்களுக்கு மட்டுமல்லாது, ஃபீல்டு ஸ்டாஃப், வேறு ஏதோ ஒரு அலுவலகம் இரண்டுக்கும் சம்பளம் போடுவது மற்ற செலவுகளுக்கு பில் போடுவது எல்லாம் செய்கிறாள். என்னிடம் பேங்க் டீடைல்ஸ் கேட்டு வாங்கிக் கொண்டாள். எனக்கு சம்பளம் எப்போது வரும் என்று கேட்க ஆர்வமாக இருந்தது. நீ பார்க்கும் வேலைக்கு சம்பளம் ஒரு கேடா என்று கேட்டு விடுவாளோ என்றும் தோன்றியது. "அக்கவுண்ட்ல தான் போடுவாங்களா?" என்று கேட்டேன்.
"ஆமா. ரொம்ப நாள் கழிச்சு சம்பளத்தைப் பத்திக் கேட்ட ஒரே ஆளு நீதான்" என்றாள். "இங்கே எல்லாருக்கும் கிம்பளமே நிறைய வரும். சம்பளத்தைப் பத்தி கண்டுக்க மாட்டாங்க.. நான் ஒரு ரெண்டு மாசம் லீவுல இருந்தேன், வேற யாரையாவது போட்டு சம்பள பில் போடலாம்ல? யாரும் சம்பளம் வாங்கவே இல்லைன்னா பார்த்துக்கோயேன்.. பிறகு நான் தான் லீவுல இருந்தாலும் வந்து பில்லைத் தயார் பண்ணி வச்சுட்டுப் போனேன். எனக்கு சம்பளம் வேணும்ல.. அதான்" என்றாள்.
இந்தத் துறையில் யார் வந்து அவ்வளவு கிம்பளம் கொடுப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அவ்வப்போது வந்து குமாரிடம், ரங்கசாமியிடம் சிலர் பேசிவிட்டுப் போகிறார்களே, அவ்வளவு கொடுப்பார்களா என்பது புதிராக இருந்தது.
இத்தனை நாட்களில் நான் இன்னும் சில விஷயங்கள் தெரிந்து கொண்டேன். மெயின் அலுவலகத்தில் பத்து பேர் வரை இருக்கிறார்கள். என்னுடையது துணை அலுவலகம். குமார் அவ்வப்போது வருவார், போவார். முக்கால்வாசி நேரம் போதையில் இருப்பார். நிறைய நேரம் வேலைகளைக் காக்கப் போடுவதால் பல பிரச்சனைகள் வரும். அதை சமாளிக்கப் போகிறேன் என்று அடுத்து வரும் வேலைகளைக் காக்க வைப்பார். இரண்டு பெண்டாட்டிக் காரர் போலும்.
ரங்கசாமி ஒரு பச்சோந்தி. அதிகாரம் இருக்கும் இடத்தில் கேள்விக்குறி போல் வளைந்து நிற்பார். அலுவலகத்தில் நடக்கும் எல்லா விஷயங்களும் அவருக்குத் தெரியும். எந்தக் கோப்பு எங்கிருக்கிறது, என்று என்ன வேலை செய்யவேண்டும் எல்லாம் தெரியும். இருந்தாலும் தெரியாதது போலவே இருப்பார். யார் என்ன கேட்டாலும், 'எனக்குத் தெரியாது, குமார் சார் வரட்டும், ராதிகாம்மாட்ட கேளுங்க, ரேஞ்சர் பார்த்தா திட்டுவாரு, அவரு லீவுல இருக்காரு, இவரு மீட்டிங் போயிருக்காரு' இப்படியே ஏதாவது சொல்வார். மூத்தவர்களுக்கு மரியாதை கொடுத்தே பழக்கப்பட்டிருந்த நான் இந்த மாதிரி கேரக்டருக்கு மரியாதை கொடுப்பதை மனதளவில் எப்போதோ நிறுத்தி விட்டிருந்தேன்.
இன்னொரு மனிதர் பெயரும் எங்கள் பதிவேட்டில் இருக்கிறது. அவர் பாதி நேரம் லீவில் தான் இருப்பார், அவர் வேலையையும் சேர்த்து நாங்கள் யாராவது தான் பார்க்கிறோம். நான் வேலைக்குச் சேர்ந்த அன்று இரண்டு அதிகாரிகள் வந்தார்களே.. சொரிமுத்தையனார் கோயிலுக்கு கூட்டிப்போக சொன்னவர் டிஎஃப்ஓ மாவட்ட வனவியல் அதிகாரி. நல்லவர், ஆனால் நிர்வாகம் தெரியாதவர். அவரை இந்த 'கிருத்தியம் பிடிச்சவங்க' எல்லாரும் சேர்ந்து அமுக்கி விடுவார்கள். பவ்யமாக வந்தாரே இன்னொரு அதிகாரி.. அவர் பனிஷ்மென்ட்டில் டிரான்ஸ்பர் வாங்கி இங்கு வந்திருக்கும் ரேஞ்சர். பல ஊர்களில் இருந்தவர். நான் வந்து இத்தனை நாட்களில் இவ்வளவு விஷயங்கள் தெரிந்து வைத்ததையே பெரிய சாதனையாக நினைத்துக் கொண்டிருக்க, மற்றவர்கள் எவ்வளவு ஜகஜ்ஜால கில்லாடிகள், என்னவெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை
அந்த மாத இறுதியில் தெரிந்து கொண்டேன்.
எங்கள் தலைமை அலுவலகத்தில் ஒருவர் பணி நிறைவு செய்கிறார், பிரிவு உபச்சார விழா நடக்கப்போகிறது என்று பேசிக்கொண்டார்கள். குமார் அலுவலகம் வந்த சில தடவைகளில் ரங்கசாமியிடம் அதைப் பற்றியே விவாதித்தார். ரேஞ்சர் வேறு ஏதோ கோப்பு பற்றி கேட்டபோது கூட, "சாமுவேல் சார் ரிட்டயர்மென்ட் இருக்கு.. அதை முடிச்சுட்டு பார்ப்போம் சார்" என்றார். இவருக்கு ஒவ்வொரு நாளும் வேலையை தள்ளிப் போட ஏதாவது ஒரு சாக்கு வேண்டும் என்று நினைத்துக் கோண்டேன். யாரோ ரிட்டயர்ட் ஆவதற்கு இவருக்கு என்ன வந்தது என்றும் தோன்றியது.
ரிட்டயர்மென்ட் பார்ட்டிக்கு என்று என்னிடமும் 100 ரூபாய் வாங்கினார்கள்.. "எல்லார்ட்டயும் 200 ரூபா சார்.. நீங்க இன்னும் சம்பளம் வாங்கலைல்லா.. அதான் தள்ளுபடி" என்றார் ரங்கசாமி ஒரு அசட்டுச் சிரிப்புடன்.
"பாதிக் காசை நீங்க ஏப்பம் விட்டுட்டு ரிட்டயர்டாகுற மனுஷனுக்கு ஒரு அரை கிராம்ல மோதிரம் போடுவீங்க.. அதுக்கு நான் காசு தர முடியாது" என்று மறுத்து விட்டாள் ராதிகா. எனக்கும் அவளிடம் கேட்டுவிட்டு கொடுத்திருக்கலாமோ அவசரப்பட்டு நூறு ரூபாயை இழந்து விட்டோமோ என்று வருத்தமாக இருந்தது. பின்னே இது என் காசல்லவே, அப்பா காசாயிற்றே.. அதனால் தான் சிக்கனமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம்.
பிரிவுபசார விழாவன்று, "கண்டிப்பா சாப்பிட வந்துடணும் சார்.." என்று கூறி ரங்கசாமி இழுக்காத குறையாக அழைத்துச் சென்றார். ராதிகா மதிய உணவுக்கு வீட்டுக்குப் போய்விட்டாள். அலுவலகத்தைப் பூட்டி விட்டுத் தான் சென்றோம். நிகழ்ச்சியில் ரிட்டயர்ட் ஆகப் போகும் மனிதரை எல்லாரும் கூடி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தார்கள். அவர் ஒரு புன்னகையுடன் அமர்ந்திருந்தார். அதன்பின் அவர் அளித்த மதிய உணவுக்காக பந்தியில் அமர்ந்தோம்.
முதலில் சோறு வைத்தார்கள், பின் சிக்கன் குழம்பு ஊற்ற ஒருவர் வருகையில், "ஐயோ! சாருக்கு வைக்காதீங்க.. சார் சைவம்லா.." என்றார் பரிமாறிய இன்னொருவர். நான் யாரையோ சொல்கிறார்கள் என்று சிக்கன் குழம்பை எதிர்பார்த்து உட்கார்ந்திருக்க, "சாருக்கு சாம்பார் ஊத்துப்பா" என்று என்னைக் காட்டிச் சொன்னார் ரங்கசாமி. ஏன் என்று நிமிர்ந்து பார்த்தேன்
முதலில் சொன்னவர் இந்த அலுவலகத்துக்கு ப்யூன் போல.. ரங்கசாமியை போன்றே சீருடை அணிந்திருந்தார். "ஏன்? சார் சிக்கன் சாப்பிட மாட்டாரா?" என்று என் அருகில் அமர்ந்திருந்த ஒருவர் கேட்க, "சார் குடும்பம் சைவம்லா.." என்றார் அந்த இன்னொரு பியூன்.
"இல்ல நான் சாப்பிடுவேன்.. ஊத்துங்க" என்று அசைவத்தைக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டேன்.
உணவு நேரம் முழுவதும் எனக்கு ஒரே குழப்பம். ஏன் அப்படிச் சொன்னார் என்று உணவு நேரம் முடிந்ததும் நானே ரங்கசாமியை அழைத்துக் கேட்டேன். "எனக்கு சாம்பார் ஊத்தச் சொன்னீங்களே.. ஏன்?" என்று நான் கேட்க,
"யாரு வந்தாலும் அவங்க பேரு, ஊரு, அட்ரஸ், சாதி சான்றிதழ் எல்லாம் பாத்துருவோம்ல.. நீங்க சைவம் சாப்பிடுத ஆளுக தானே.." என்றார்.
அப்போதுதான் எனக்கு உறைத்தது. நாங்கள் பிறப்பால் சைவம் சாப்பிடும் பரம்பரைதான். ஆனால் தாத்தா காலத்திலேயே மெல்ல மெல்ல அசைவத்துக்கு மாறி விட்டோம். இப்போது நாங்களே மறந்து விட்ட ஒரு விஷயம் இன்று ரங்கசாமி மூலமாக நினைவுக்கு வருகிறது. நான் ஒரு சாதாரண டைப்பிஸ்ட்.. என்னுடைய பயோடேட்டாவையே வைத்திருக்கிறார்களே.. இவர்கள் பொல்லாதவர்கள் தான் என்ற நடுக்கம் எனக்குள் பரவியது.
குமார் மிகவும் ஜாலி மூடில் இருந்திருப்பார் போல.. காலையிலேயே 'தீர்த்தம்' சாப்பிட்டிருந்தார். மெயின் அலுவலக ஆட்கள் இரண்டு பேருடன் அமர்ந்து உரத்த குரலில் உரையாடிக் கொண்டிருந்தவர், "பேச்சியப்பன்! வாங்க.. என்ன ஒதுங்கி ஒதுங்கிப் போறீங்க.." என்று என்னையும் இழுத்து அருகில் நிறுத்திக்கொண்டார்.
"தம்பிக்கு பாவநாசம்ங்க.. எதுவும் பாவத்தைத் தொலைக்கணும்னா தம்பிட்ட கேளுங்க.. கூட்டிட்டுப் போயி தொலைச்சு விட்ருவாரு.." என்று அவர் கூறி அபத்தமாகச் சிரிக்க, "ஹா ஹா!" என்று சுற்றியிருந்தவர்களும் பெரிய நகைச்சுவையைக் கேட்டு விட்டவர்கள் போலச் சிரித்தார்கள்.
"அப்புறம் தம்பி! உங்க ஊர்ல என்ன ஃபேமஸ்?" என்றார் குமார். நான் ஆறு, குளம் என்று அடுக்க.. "உங்க சூப்பு (சூப்ரிண்டென்ட்டாம்) சாப்பிடற ஐட்டத்தைல்ல கேப்பாரு.." என்றார் இன்னொருவர். "திருநெல்வேலிக் காரனா, அல்வாவக் கொண்டா.. ஸ்ரீவில்லிபுத்தூர்னா ஊருக்குப் போகும் போது பால்கோவாவை வாங்கிட்டு வா அப்படின்னு கேட்டுக் கேட்டு சாப்பிட்டு தான் தொப்பை பக்கத்து டேபிள் வரைக்கும் இடிக்குது.." என்று குமாரின் வயிற்றில் செல்லமாகக் குத்தியபடி கூறினார் முதல் நபர்.
"ஆபீஸ் வாசலையே இவருக்காக பெருசா வச்சாங்கன்னா பாருங்களேன்.." என்றார் இரண்டாம் நபர். ஆபீஸ் வாசல் என்ன அவ்வளவு பெரிதாகவா இருக்கிறது என்று நான் யோசிக்கையில்,
"அட விடுங்கப்பா! என்னையக் கலாய்க்கவா தம்பியைக் கூப்பிட்டீங்க.. அப்புறம் தம்பி! உங்க அப்பா என்ன பண்றாப்ல?" என்றார் குமார்.
"ஏன்பா.. உங்க ஆபீஸ் ஆளை இன்னைக்குத் தான் விசாரிக்கியாக்கும்?" என்று முதல் நபர் குமாரைக் கேட்க, "ஆபீஸுக்குப் போனாத் தானேய்யா அங்க வச்சுக் கேப்பாரு" என்று இன்னொருவர் வெடிச்சிரிப்புடன் கூறினார்.
"ஹா ஹா ஹா!" என்று தானும் ஒரு வெடிச் சிரிப்பு சிரித்த குமார்,
"சொல்லுங்க தம்பி.. அப்பா என்ன செய்றாப்ல.." என்றார் விடாமல். பழைய பேச்சியப்பனாக இருந்தால், அப்பா ஆட்டோ ஓட்டுகிறார், முதலில் போட் ஓட்டினார் என்று ஆரம்பித்து இப்போது ஓட்டும் ஆட்டோவின் நம்பர் வரை சொல்லியிருப்பேன். இப்போது நானும் அரசு ஊழியன் ஆகிவிட்டேன் அல்லவா, அதனால் என்ன சொல்லலாம் என்று. அறையில் படித்த கோட்டயம் புஷ்பநாத் கதைகள் எப்படியோ சட்டென்று நினைவுக்கு வர, "அப்பா கேரளாவுல மாந்திரீகம் பண்ணினாரு சார்.. இப்ப டிராவல்ஸ் வச்சிருக்காரு" என்றேன்.

Author: SudhaSri
Article Title: இருபுனலும் வருபுனலும் 9
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.