இருபுனலும் வருபுனலும் 8
எங்கள் அறையிலிருந்த புத்தக அடுக்கில் பதினைந்து, இருபது புத்தகங்கள் இருந்தன. மீன் வளர்ப்பு, பிராணிகள் வளர்ப்பு பற்றியவை, நக்கீரன், ஜூனியர் விகடன் மற்றும் அரசு நூலகத்திலிருந்து எடுத்து வரப்பட்ட சில நூல்கள். சரவணன் தான் நூலக உறுப்பினர் போலும்.
நான் ஒரு ஜுவியை எடுத்து அதில் மூழ்கியிருந்தபோது மெடிக்கல் ரெப் வேலை முடித்து வந்தார். ஷாகுல் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு என்னுடைய விபரங்களையும் கேட்டுவிட்டு, தன் மீன் தொட்டியைக் கவனிக்கப் போனார். "அச்சச்சோ" என்றவர், பரபரப்பாக ஒரு வாளியில் தண்ணீர் நிரப்பப் போக, "என்ன சார்?" என்று நான் கேட்டேன்.
"கரண்ட் இன்னிக்கு ரொம்ப நேரம் இல்லைல்ல.. மீன் மிதக்க ஆரம்பிச்சுருச்சு. ஆக்சிஜன் லெவல் குறைஞ்சுருக்கும். அமோனியா லெவல் கூடியிருக்கும். அதான் வாட்டர் சேஞ்ச் பண்றேன்" என்றார். "நான் ஹெல்ப் பண்றேன்" என்று அவருடன் இணைந்து வேலை செய்தேன். மனிதரின் பேச்செல்லாம் மீனைப் பற்றியதாகவே இருந்தது. 'ஆட்டோ ஃபில்ட்ரேஷன் செட் பண்ணனும், கெப்பாசிட்டி இன்க்ரீஸ் பண்ணனும்' என்று அவர் பேசியது நிறைய புரியாவிட்டாலும் 'ம்' கொட்டினேன். ஷாகுல் ஐந்து வேளைத் தொழுகையையும் முறையாகச் செய்யும் மனிதராக இருந்தார். சரவணன் பொது விஷயங்கள் நிறைய பேசினார். நான் எங்கள் வீட்டினருக்குத் தொலைபேசியில் பேசிவிட்டு அவர்கள் இருவரும் சாப்பிட்ட ஹோட்டலிலேயே உடன் சென்று சாப்பிட்டு விட்டு வந்து படுத்தேன்.
இருவரும் என்னை விட உலக நிலவரம் நன்கு அறிந்தவர்கள் போலத் தோன்றியதால் தூங்கப்போகும் முன், "சார்! உங்க ரெண்டு பேர்ல யாருக்காவது ஆன்லைன் பிஸினஸ் எப்படி ஸ்டார்ட் பண்றதுன்னு தெரியுமா?" என்றேன். சரவணன், "எவ்வளவு பட்ஜெட், என்ன ப்ராஜெக்ட், இன்டர்நேஷனல் மார்க்கெட்டா, லோக்கல் மார்க்கெட்டா" என்று பல கேள்விகளைக் கேட்க, ஷாகுல், சரவணன் பார்க்காத நேரம் என்னிடம் 'ரொம்பப் பேச்சை வளக்காதீங்க.. காலையில சொல்றேன். படுங்க' என்பது போல் சைகை காட்டினார். சரவணனை விட ஷாகுல் மேல் எனக்கு அதிக நம்பிக்கை வளர்ந்திருந்ததால் அவர் சொன்னதைக் கேட்டு அதற்கு மேல் பேசாமல், செப்புச் சாமானை எதில் விற்க வேண்டும் லோக்கல் மார்க்கெட்டா, இன்டர்நேஷனல் மார்க்கெட்டா என்று குழம்பியபடியே தூங்கிப் போனேன்.
காலையில் விரைவில் எழுந்து விட்டதால் ஷாகுல் பள்ளிவாசலுக்குக் கிளம்பிப் போகும் போது நானும் கூட வாக்கிங் போனேன். சரவணன் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தார்.
"பாஸ்! சரவணன் கிட்ட காசு விஷயத்தில் கரெக்டா இருங்க. அவர் வேலைல இருந்து சஸ்பெண்டாயிட்டு சும்மா இருக்காரு. நிறைய கரடி விடுவாரு.. காசு எதுவும் கண்ணுல காட்டிராதீங்க.. முடிஞ்சா அவர்கிட்ட அஞ்சு பத்து கைமாத்து கேளுங்க. அப்பத்தான் அவரு உங்கள்ட்டக் கேக்க மாட்டாரு" என்றார். மெல்லிய அதிர்ச்சிக்கு உள்ளானேன். என்ன ஏது என்று நான் விசாரிக்க முயல, "உங்களப் பாத்தா இன்னொசன்ட்டாத் தெரியுது. அதான் சொன்னேன். இப்பத்தானே வெளி உலகத்துக்கு வர்றீங்க. இனிமே இப்படி நிறைய பாப்பீங்க" என்றார். சரவணனைப் பரிதாபமாகப் பார்ப்பதா, பயத்துடன் பார்ப்பதா என்ற சிந்தனையுடன் நாங்கள் அறைக்குள் போக, "வாங்க ஜி! இந்தாங்க பிளாக் காஃபி சாப்பிடுங்க.. பாய்! இந்தாங்க நீங்களும் எடுத்துக்கங்க" என்று எங்கள் இருவரிடமும் கருப்பட்டிக் காப்பியை நீட்டினார்.
'இன்னிக்காவது எனக்கு வேலை கொடு முருகா' என்று வேண்டியபடி வேலைக்குப் போனேன். அந்த இன்னொரு பெண் வந்திருந்தாள். பதிவேட்டில் கையெழுத்துப் போடுகையில் பார்க்க அவள் பெயர் ராதிகா என்று இருந்தது. நானாகவே அவளிடம் சொன்று, "நேத்து ஒரு லெட்டர் வந்துச்சு.." என்று முந்தைய நாள் வந்த கடித உறையை நீட்டினேன்.
"அனேகமா நீங்கதான் இனிமேல் டெஸ்பாட்ச் பாக்க வேண்டியதிருக்கும். ரெகார்ட் கிளார்க் வேற ஆஃபீஸ் போயிட்டார்" என்றாள். எனக்குப் புரியவில்லை.
"கொஞ்சம் சொல்லித் தந்தீங்கன்னா நானே செஞ்சிருவேன்" என்றேன். அவளிடம் இருந்த சாவியால் என் மேஜை இழுப்பறையைத் திறந்து ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து பழைய பக்கங்களைக் காட்டி சொல்லித்தந்தாள். "அதே மாதிரி புது லெட்டரையும் இப்படி என்ட்ரி போடணும்" என்றாள். முன்தினம் இவள் திமிர் பிடித்தவளோ என்று லேசாகக் தோன்றியிருந்த எண்ணம் அவள் சொல்லி முடிக்கையில் முற்றிலும் மறைந்திருந்தது. முந்தைய பக்கங்களில் ஆங்காங்கே இடைவெளி விடப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி, "முக்கியமா இப்படி கேப் விடாதீங்க. சில சமயம் யாராவது பழைய டேட்டுல சில லெட்டர்ஸ் வந்த மாதிரியும், போன மாதிரியும் இதுல நுழைக்கப் பாப்பாங்க. இந்தப் பக்கத்துல இத்தனை என்ட்ரீஸ்னு கீழே போட்டுட்டீங்கன்னா இன்னும் சேஃப்" என்றும் கூறினாள்.
அன்றும் சூப்பரிண்டென்ட் குமார் அதேபோல் பரபரப்பாக வந்தார், என்னிடம் ஏதோ பேசினார், போனார். "இன்னைக்கு மேலதிகாரி யாரும் வரலையா?" என்று நான் ராதிகாவைக் கேட்க, "நம்ம ஏஓ போஸ்ட் வேகன்ட்டா இருக்கு. மெயின் ஆபீஸ்ல தான் டிஎஃப்ஓ இருப்பாரு.. வாரம் ஒரு தடவை தான் இங்கே வருவாரு. அந்த ரேஞ்சர் பன்னி நினைச்சா வரும், நெனச்சாப் போகும்" என்றாள். அன்று மாலை ராதிகா கிளம்பும் நேரம் ஒரு கட்டைப்பையில் எதையோ கொண்டு வந்தார் ரங்கசாமி. என்னைக் கடந்து அவர் போகையில் இரண்டு பாட்டில்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உரசுவது போல் கேட்ட ஒலி பிரமையா உண்மையா என்று தெரியவில்லை. நான் மும்முரமாக என்னிடம் கிடைத்த நோட்டில் மார்ஜின் போட்டுக் கொண்டிருக்க, ராதிகா என் டேபிளில் வந்து இரண்டு தட்டுத் தட்டி "சீக்கிரம் கிளம்புங்க. கோடு போட்டது போதும்" என்றபடி டக் டக்கென்று தன் செருப்புகள் சத்தமிடக் கிளம்பினாள். நான் பதறி விழிக்க, "கிளம்பிருச்சு பாரு ஊர் மேய.." என்று ராதிகாவைக் குறித்து முணுமுணுத்தார் ரங்கசாமி. அவர் அப்படிக் கூறியது மனதுக்கு ஒரு மாதிரி கஷ்டமாக இருந்தது.
சீக்கிரம் போகலாமா யாரும் திட்டுவார்களோ என்று எழுந்த தயக்கத்தைத் துடைத்துப் போட்டு விட்டுக் கிளம்பினேன். அறையில் அதே நிலை தொடர்ந்தது. சரவணன் அரசியல் பேசினார். ஷாகுல் தன் பிராணிகளைக் கவனித்தார். இவர்கள் இருவரும் செல்போன் நோண்டும் போதோ அல்லது சரவணனின் மொக்கை பொறுக்க முடியாத போதோ நான் லைப்ரரி புத்தகங்களில் ஒன்றை எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்தேன். அதை வாங்கிப் போடுவது சரவணன் தான். எப்போது படிக்கிறார் என்று தெரியவில்லை.
"நான் எப்பவுமே ஒரு ஆர்கனைஸ்ட் பெர்ஸன் ஜி!" வரிசையா ஒரே ஆத்தர் புக்காத் தேடிப் படிப்பேன்.. இப்ப பூரா கோட்டயம் புஷ்பநாத். இதுக்கு முன்னாடி ஜெயகாந்தன் கதை. அப்படி ஒரு ஆளோட கதைகளை வரிசையாக படிக்கும் போது அவங்க வாழ்க்கையும் அவங்க மனநிலையும் கண்ணு முன்னாடி வரும் ஜி!" என்பார். "லைப்ரரியில புக்க குப்பை மாதிரி போட்டு வச்சுருக்காங்க ஜி! நான் தான் படிச்சிட்டு வரிசையாக அடுக்கி வைப்பேன். ஷெல்ஃபுல அந்தப் பக்கத்தில் ஒரு பேப்பர்ல ஆத்தர் பேரை எழுதி ஓட்டுவேன். அப்படியும் ஒரே வாரத்துல கலைச்சுப் போட்டுருதாங்க" என்றும் சொன்னார். வேலை இல்லை சும்மா இருக்கிறார், ஆனால் ஜாலியாக இருக்கிறார். இவருக்கு வேலை இல்லை என்பது இவர் காதலிக்கும் உனக்கு தெரியுமா, முப்பது வயதுக்குக் கொஞ்சம் மேற்பட்டவர் போல் இருக்கிறார், ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை என்றும் தோன்றியது.
பொழுதை நெட்டித் தள்ள, ஒன்று.. ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் அல்லது கடலை போட எனக்கும் ஒரு ஆள் வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் தான் வாங்க வேண்டும். இந்த மாதச் சம்பளத்தில் எல்லாருக்கும் உடை எடுத்துவிட்டு அறை வாடகை, உணவு போக அவ்வளவாக மிஞ்சாது. அதனால் அடுத்த மாதம் வரை ஸ்மார்ட்போன் இல்லாமல் ஓட்ட வேண்டியதுதான். சத்யாவின் நம்பர் கிடைத்தால் பேசிப் பார்க்கலாமா என்று தோன்ற, நண்பர்கள் யாரிடமாவது உதவி கேட்கலாம் என்று நினைத்தேன்.
முருகேசன் தான் வெளியே சொல்லாமல் கலாய்க்காமல் காதலுக்கு உதவக்கூடிய ஒரே ஆளாகத் தோன்றினான். அவனைத் தான் பிடிக்க வேண்டும் என்று நான் நினைத்திருக்கையில் முற்றிலும் எதிர்பாராத விதமாக ஒருநாள் சத்யாவே அழைத்தாள். எப்படி என் நம்பர் கிடைத்தது என்று நான் கேட்பதற்குள்,
"எங்கப்பா செல்லுல இருந்து உங்க நம்பர் எடுத்தேன்" என்றாள். அன்று என் ஃபோனில் இருந்து அவள் அப்பாவுக்கு அழைத்து கடலைமாவு வாங்கித் தரச் சொன்னது நினைவுக்கு வந்தது. அப்போதே என் நம்பர் வேண்டும் என்றுதான் கடலைமாவு கதையை எடுத்திருப்பாளோ என்று ஒரு சிந்தனை ஓட, அப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றும் தோன்றியது. பரபரப்பில், "நீங்க கேட்டபடி ஆன்லைன் பிஸினஸ் பற்றி விசாரிச்சிருக்கேங்க" என்றேன்.
"அப்படியா? ரொம்ப தேங்க்ஸ். ஆனா நான் வேற விஷயமா கூப்பிட்டேன். அம்மாவுக்கு அடிக்கடி இளைப்பு வருதுல்ல.. பெரிய ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி நிறைய டெஸ்ட் பாக்கணும்னு சொல்றாங்க. திருநெல்வேலி ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரி மாதிரி பெரிய ஹாஸ்பிடல் போகணுமாம். அங்கே எனக்கு யாரையும் தெரியாது. தெரிஞ்ச ஆள் இருந்தா வசதியா இருக்கும்ல.. தூத்துக்குடியில எதுவும் வாய்ப்பு இருந்தா நீங்க உதவி செய்ய முடியுமா?" என்றாள்.
தூத்துக்குடி என்றதும் என் ஞாபகம் வந்திருக்கிறதே என்று உச்சி குளிர்ந்து போன நான், "திருநெல்வேலில தாங்க நான் படிச்சேன். காலேஜ் பிரண்ட்ஸ் இருக்காங்க. அங்க விசாரிக்கவா? அது உங்களுக்கு இன்னும் பக்கம்ல?" என்றேன். பின், 'மடையா தூத்துக்குடி வந்தாங்கன்னா அவ கூட பழக வாய்ப்பு கிடைக்குமே..' என்று என்னை நானே திட்டிகொண்டேன்.
"எதுனாலும் சரி தான். தெரிஞ்சா சொல்லுங்க" என்றபடி வைத்துவிட்டாள் சத்யா. மருத்துவத்துறையில் எனக்குத் தெரிந்த ஒரே ஆள்தான் ஷாகுல் தான். அவரிடமே கேட்டேன். இத்தனை நாட்களில் ஓரிருமுறை கடற்கரைக்கு, வளர்ப்பு மீன் விற்கும் கடைகளுக்கு, புறா முயல் இவை மொத்தமாக விற்கப்படும் மார்க்கெட்டுக்கு, என்று அவர் போகும் இடங்களுக்கு நானும் ஓட்டிக்கொண்டு போயிருந்தேன்.
ஒரு முறை வளர்ப்புக்காக வண்ணக் கடல் மீன்கள் பிடிக்கும் இடம் ஒன்றிற்குக் கூட்டிச் சென்றிருந்தார். அது ஆறு கடலில் கலக்கும் கழிமுகப் பகுதி. புன்னைக்காயல் என்று பெயர். ஆத்தூர் என்பது அருகிலிருந்த பெரிய ஊர். "உங்க ஊர் ஆறோட கடைசி இதுதாங்க.." என்றார்.
எங்கள் தாமிரபரணி ஆற்றின் ஆரம்பத்தையும் முடிவையும் பார்த்து விட்டதில் எனக்கு உடலே புல்லரித்தது. "இங்க தான் கடல்ல உள்ள மீன்கள்ல சில வெரைட்டி வந்து ப்ரீட் (breed) ஆகுது. இங்க சலைனிட்டி ஸீ வாட்டரை விடக் குறைவா இருக்கும். ஸீ ஏஞ்சல், ஸ்காட் ரெண்டும் ப்ரீட் ஆகுறதுக்கு சலைனிட்டி குறைவா இருந்தா தான் கரெக்டா இருக்கும்" என்று கூறினார். நான் புரியாமல் பார்க்கவும், "சலைனிட்டின்னா உப்புத்தன்மைங்க.. கடல் மீன்கள் வாழ்றதுக்கு உப்புத்தன்மை தேவை.. சிலதுக்கு இனப்பெருக்கம் செய்றதுக்கு உப்புத் தன்மை குறைவா இருக்கணும். அதனால இங்கே வந்து இனப்பெருக்கம் பண்ணிக் கூட்டிட்டு போயிடும். இந்தப் பகுதியில்தான் நிறைய கலர் மீன்கள் பிடிப்பாங்க" என்று கூறினார். ப்ளூ டாங்க், எல்லோ டாங்க், கிளவுன்ஃபிஷ் என்று அவர் ஏதேதோ பெயர்களைக் கூற, எனக்கு வியப்பாக இருந்தது. எனக்குத் தெரிந்ததெல்லாம் சீலா, ஊழி, வாவல் மீன் போன்றவை தான். அதற்கும் ஷாகுல் டூனா, பாரக்குடா, பாம்ஃப்ரட் என்று ஆங்கிலப் பெயர்களையும் அதன்பின் உயிரியல் பெயர்களையும் கூறுவார்.
நான் ஆச்சரியத்துடன் வாய்பிளந்து கேட்கையில், "இதெல்லாம் என்னங்க.. சாதாரணம். நீங்க ஃபிஷ்ஷிங் ஹார்பருக்கு நைட்டு பத்து, பதினோரு மணிக்கு வந்தீங்கன்னாத் தெரியும். கடல்ல இருந்து பிடிச்ச மீன்களைக் கொண்டு வந்து கொண்டு வந்து போடுவாங்க பாருங்க.. ஒரு புட்பால் கிரவுண்ட் அளவு இடம்.. அதுல 10 அடி உயரத்துக்கு மீனா குவிச்சுப் போட்டுருந்தா எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணிப் பாருங்க.. ஒரு பக்கம் மீன்களை வண்டிகள்ல ஏத்திக்கிட்டுப் போய்க்கிட்டே இருப்பாங்க.. இன்னொரு பக்கம் டன் கணக்குல மீன்கள் வந்து எறங்கிக்கிட்டே இருக்கும்.. அந்த ஒருநாள் கூட்டிட்டுப் போறேன். அப்படியே பிரமிச்சுப் போயிருவேன்" என்றார். நான் ஃபுட்பால் க்ரவுண்டின் நீள அகலம் எவ்வளவு என்று மனதிற்குள் கணக்குப் போட்டுப் பார்ப்பேன்.
மனிதருக்கு பிராணிகள் வளர்ப்பு விஷயத்தில் இருக்கும் அறிவினைப் பார்த்து வியந்து போய், "சார் நீங்க ஏன் இதையே தொழிலாப் பண்ண கூடாது?" என்று கேட்டேன். "அதுக்கு நிறைய அரசியல் பண்ணத் தெரிஞ்சிருக்கணும் பாஸ்" என்றார். இதற்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்குப் புரியவில்லை.
சத்யாவின் அம்மா குறித்து நான் மீண்டும் ஞாபகப் படுத்தவும், ஷாகுல் தனக்குத் தெரிந்த ஒரு மருத்துவரிடம் கேட்டு, "செஸ்ட் மெடிசின்ல ஒரு ஸ்பெஷலிஸ்ட் இருக்காரு. எனக்குத் தெரிஞ்சவர் தான். உங்க ரிலேஷனை வரச் சொல்லுங்க" என்றார். நான் சத்யாவிடம் அதைக் கூற, அவள் குடும்ப சகிதம் கிளம்பி வந்து அரசு மருத்துவமனையில் அம்மாவை அட்மிட் செய்தாள். அடுத்து வந்த ஒரு வாரமும் அங்குதான் இருந்தார்கள். அவள் அப்பா ஒரு நாள் மட்டும் இருந்துவிட்டு, "தம்பி! அங்க தொழிலைப் பாக்கணும்ப்பா.. கொஞ்சம் பாத்துக்கோங்க. இங்க ஆஸ்பத்திரியிலையும் ஒருத்தர்தான் கூட இருக்கணுமாம். ரெண்டு நாள்ல திருப்பி வரேன்" என்று கூறிவிட்டுச் சென்றார். வெட்டியாக இருந்த எனக்கு நேரத்தை நிரப்பும் வேலையாக இது அமைந்துவிட்டது. அவ்வப்போது சத்யாவுக்கும் அவள் அம்மாவுக்கும் சாப்பாடு வாங்கிக் கொடுக்க, மருத்துவமனையில் ரிப்போர்ட் வாங்க, என்று நானும் உதவினேன்.
சத்யாவின் அம்மா, "பாவம் தம்பி.. நிறைய வேலை இருக்கும். எனக்காக அலையுதீங்க" என்றார் வருத்தப்பட்டு. "உங்களுக்காக இல்லம்மா.. எனக்காகத் தான்" என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். ஆஸ்பத்திரிக்கு அலைவதற்கு சும்மா நிற்கும் சரவணனின் பைக்கைக் கடன் வாங்கிக் கொண்டேன்.
சத்யா மருத்துவமனைக்கு வந்து இரண்டு நாட்கள் கழித்து, "எனக்கு இங்கே குளிக்க, துவைக்க பிடிக்கல.. எங்கேயாவது வீடு மாதிரி அரேஞ்ச் பண்ண முடியுமா?" என்று உரிமையாகக் கேட்டபோது மறுக்கத் தோன்றவில்லை. எங்கள் கீழ் வீட்டு அக்காவிடம் அனுமதி கேட்டு அவர்கள் குளியலறையை பயன்படுத்திக்கொள்ள சத்யாவை எங்கள் குடியிருப்புக்கு அழைத்து வந்தேன். தயக்கமின்றி என்னுடன் வண்டியில் ஏறி வந்து விட்டாள். அந்த ஒரு வாரத்தில் இருவரும் இயல்பாக நெருங்கிவிட்டோம். காதலிக்கிறோம் என்று சொல்லாமலேயே காதலர்கள் ஆகிவிட்டது மாதிரி எனக்குத் தோன்றியது. நடுநடுவே தெரிந்தவர் என்ற முறையில் சாதாரணமாகத்தான் பழகினேன். சத்யா பிற்பாடு, 'நான் எங்க லவ் பண்ணினேன்.. ஃப்ரண்டாத் தான் பழகினேன் என்று சொல்லிவிடுவாளோ என்று மனதின் ஒரு ஓரத்தில் சந்தேகம் அவ்வப்போது தோன்றியது.
ஒருமுறை, "நான் ஹோட்டல், பிசினஸ் அந்த மாதிரி பண்ணலாம்னு நினைச்சிருந்தேன்.. அம்மா சொல்றது மாதிரி உங்களை மாதிரியே கவர்மெண்ட் வேலைக்கு போயிட்டாக் கூட நமக்கு நிம்மதியாக போயிரும்ல?" என்று அவள் கேட்ட போது அந்த சந்தேகம் சுத்தமாகப் பறந்து போனது. ஐ லவ் யூ என்றோ நாம கல்யாணம் பண்ணிக்கலாமா என்றோ சினிமாத்தனமாகக் கேட்க வேண்டாம் என்று முடிவெடுத்துக் கொண்டேன்.
"பேச்சியப்பா! லவ்வு உனக்கு சூப்பராக ஒர்க் அவுட் ஆயிடுச்சுடா" என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். பீச் ரோட்டில் இருக்கும் என் அலுவலகத்திற்கு கடற்காற்று முகத்தில் மோத ஜாலியாக விசிலடித்துக் கொண்டே சென்றேன். அன்று விசில் நன்றாகவே வந்தது.

Author: SudhaSri
Article Title: இருபுனலும் வருபுனலும் 8
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.