இருபுனலும் வருபுனலும் -5
ஏனென்று தெரியாமலே அந்தப் பெண்ணின் நடவடிக்கைகள் அன்று என்னைத் திரும்பிப் பார்க்க வைத்திருந்தன. நம்மூர் குரங்கைக் கூட இப்படித்தானே திரும்பிப் பார்க்கிறார்கள். வித்தியாசமாக ஏதாவது செய்தால் திரும்பிப் பார்க்கத் தானே தோன்றும் என்று நானே சொல்லிக் கொண்டேன். ஆண்களின் பைக்கைப் பெண்கள் ஓட்டுவது கொஞ்சமே வித்தியாசமான செயல்தான் என்றாலும் அவ்வளவாக நடக்கவே நடக்காத விஷயம் இல்லை. திருநெல்வேலியில் சில பெண்கள் பைக் ஓட்டிப் பார்த்திருக்கிறேன். எங்கள் பகுதியிலேயே போலீஸ் ட்ரைனிங் போகும் ஒரு பெண் பெரிய பைக் ஓட்டுவாள். இந்தப் பெண்ணிடம் வேறுபாடு என்னவென்றால் அன்று ரூல்ஸ் பேசியதுதான். ஏதாவது அரசு அலுவலகத்துக்குச் சென்றால் நம் வேலை முடிந்து கிளம்பினால் போதும் என்றுதான் நினைப்போம். ஆனால் 'நான் வண்டியை ஓட்டிக் காட்டியே தான் தீருவேன்' என்று ஊழல்வாதிகளிடம் வம்பிழுப்பது போல் இந்தப் பெண் பிடிவாதமாக கூறியது தான் என்னை ஈர்த்தது. இப்போது அவள் மிளகாய் பஜ்ஜி போடுவதும் கூட அவ்வளவு அழகான செயலாகத் தோன்றியது.
"என்னடே மொளகா பஜ்ஜி வேணுமா?" என்றான் கரடிப் பாண்டி. அதன்பின் தான் நான் வண்டியை நிறுத்தி விட்டு இறங்காமல் அதே திசையைப் பார்த்துக் கொண்டு நின்றது எனக்கு உரைத்தது. ஒரு இளம் பெண்ணைப் பார்த்தவுடன் அப்படியே நின்று விடும் பழக்கம் எனக்கும், அப்படி நின்றுவிட்டால் கிண்டலடித்தே கொன்று விடும் வழக்கம் என் நண்பர்களுக்கும் இல்லை. அதனால் தப்பித்தேன்.
எங்கள் குழுவில் கரடிப் பாண்டிக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்தது. முருகேசனுக்குப் பெண் பார்த்தாகிவிட்டது. இட்லிப் பாண்டிக்கு அத்தை மகள் இருக்கிறாள். மீதமிருப்பது நானும், மூர்த்தியும் தான். மூர்த்தி வீட்டில் தங்கை கல்யாணத்துக்கு பிறகுதான் அவனுக்கு பார்க்க வேண்டும் என்று முடிவு. அதனால் சில நாட்களாக, 'பேச்சியப்பா! அந்தப் பொண்ணு ஓகேவா பாரு.. இந்த பொண்ணு ஓகேவா பாரு..' என்று நண்பர்கள் என் கண்களை தெருவில் காணும் பெண்களை நோக்கித் திருப்பி வந்தனர். அப்படி இப்போது கேட்டால் கூட நன்றாக இருக்குமே என்று மனதில் தோன்றியது. கரடிப் பாண்டி கேட்ட கேள்விக்கு, "நல்ல எண்ணைல தான் போடுதாங்களான்னு பாத்தேன்.. சாதத்துக்கு வாங்குவோமா?" என்றேன்.
"ஒரு முங்கு போட்டுட்டு வருவோம், வாடே!" என்று ஆற்றை நோக்கி என்னை இழுத்துச் சென்றான் கரடிப் பாண்டி. மற்றவர்கள் ஏற்கனவே ஆற்றை நோக்கிப் போயிருந்தனர்.
வண்டி நிறுத்தும் இடத்துக்கு அருகிலேயே ஒரு படித்துறை உண்டு. அதில் நீர் வேகமாகப் போகும். அங்கு கால் நனைப்பதே பயமாக இருக்கும். நண்பர்கள் அங்கு போய் விடக்கூடாதே, இந்தப் பெண் முன்னால் நான் பயந்து, அவமானமாகி விடுமோ என்று ஒரு கணம் யோசித்தேன்.
நல்லவேளையாகக் கொஞ்சம் தள்ளி, பாறைகளினூடே சற்றே மெதுவாக நீர் ஓடிவரும் இடத்திற்குச் சென்று விட்டனர் மூன்று பேரும். அந்தப் பெண்ணின் வண்டிக் கடையை நோக்கி ஒரு பார்வையை செலுத்திவிட்டு நானும் சாப்பாட்டுப் பையுடன் அவர்கள் பின் நடந்தேன். இப்போதுதான் முதல் சட்டி பஜ்ஜி போடுகிறாள். கலந்து வைக்கப்பட்ட மாவு இன்னும் நிறைய இருந்தது. உள்ளூர் ஆட்கள் இனிமேல்தான் குளிக்க, துவைக்க வருவார்கள். இன்னும் கொஞ்சநேரம் இருப்பாள் என்று எனக்குள் உறுதிப்படுத்திக் கொண்டு வழக்கத்தை விட விரைவாக ஆற்றில் இறங்கினேன்
மற்ற சமயங்களில் ரொம்பவும் யோசித்து கிட்டத்தட்ட மற்றவர்கள் குளித்துக் கரையேறும் நேரம்தான் இறங்குவேன். "என்ன பேச்சியப்பா? சீக்கிரமே இறங்கிட்ட? வெக்கை தாங்கலயோ?" என்றான் முருகேசன்.
"இந்த ஆத்துல தான் ஈசியா நீச்சல் பழக முடியும்னு அப்பா சொன்னார்" என்று வாய்க்கு வந்ததைச் சொன்னேன். "என்ன? நீச்சல் பழகப் போறியா?" என்று ஒரே நேரத்தில் நான்கு குரல்கள் கேட்டன. "வேலைக்குப் போற இடத்துல போய் நான் பாவனாசத்துக்காரன் தான்.. ஆனால் நீச்சல் தெரியாதுன்னு சொன்னா நல்லாவா இருக்கும்?" மீண்டும் ஏதோ உளறினேன்.
"நீ ஆபீஸ் வேலைக்குத் தானே போற? நீச்சல் தெரியணுமா என்ன?" என்று இட்லிப் பாண்டி வெள்ளந்தியாகக் கேட்டான். அதற்குள் மூர்த்தி அவன் முகத்தில் சளப் என்று தண்ணீரை அடிக்க, அந்தக் கேள்வி தண்ணீரோடு கலந்து அப்படியே ஓடிவிட்டது. மூர்த்தி இப்படி திடீரென்று தண்ணீரைக் கைகளால் அள்ளி யார் மேலாவது தெளித்து விடுவான். தண்ணீரைப் பார்த்தவுடன் அவனுக்கு அவ்வளவு சந்தோஷம் வந்து விடும்.
நான் கூறியதைப் பெரிதாக எடுத்த ஒரே ஆத்மா முருகேசன் தான் போலும், "வாடே! கையப் புடிச்சு கூட்டிட்டுப் போறேன்.. இந்த இடத்தில தான் தண்ணி ஜாஸ்தியா இருக்கும். அந்தப் பாறை கிட்ட போயிட்டா ஒன்னும் செய்யாது" என்று நீச்சல் பழக்கிக் கொடுப்பதற்காக என்னை நோக்கிக் கையை நீட்டினான்.
நானும், சரி.. இவனைப் பிடித்து நீச்சல் பழகி விடவேண்டியதுதான். திருமணம் செய்ய வேண்டுமானால் என் தகுதிகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். சிறுவனாக இருக்கும் நான் முழுமையான ஆண்மகனாக மாறுவதற்கு முதற்படி வேலை. இரண்டாம் படி நீச்சல் என்று முடிவெடுத்துக் கொண்டேன்.
"பஜ்ஜி வாங்கிட்டு வரேன், சாப்பிட்டுட்டுப் பெறகு அந்தப் பக்கம் போவோம்" என்றபடி கரையோரமாகவே இரண்டு முங்கு போட்டு விட்டு வெளியே வந்தேன். துண்டை எடுத்துத் தலையைத் துடைத்து விட்டு அப்படியே மேலே போர்த்திக்கொண்டு பஜ்ஜிக் கடையைப் பார்க்க நடந்தேன்.
என்ன பேச வேண்டும், பஜ்ஜி சூடா இருக்கா என்று கேட்கலாமா? ஒண்ணு எவ்வளவு? அஞ்சு பஜ்ஜி குடுங்க.. எவ்வளவு ஆச்சு? எப்படி கேக்கலாம் என்று இங்கி பிங்கி பாங்கி போட்டு நடந்தேன். அந்தப் பெண்ணின் தந்தை வண்டியில் வந்து இறங்கினார். வண்டியிலிருந்து ஒரு காபி டிரம்மை இறக்கினார். காப்பியோ டீயோ வீட்டிலேயே போட்டுக் கொண்டு வருகிறார் போல..
ஏதோ ஒரு சுறுசுறுப்பு வந்து என் உடலில் திடீரென்று தொற்றிக்கொண்டது போல அவர் அருகில் சென்று, "வணக்கம் சார்" என்றேன். "தம்பி யாருன்னு தெரியலையே.. பாத்த முகமா இருக்கு.." என்று அவர் உரக்க யோசிக்க,
"நேத்துக் கூட பாத்தீங்களே சார்… ஆட்டோ பெருமாள் மகன்" என்றேன்.
"அட ஆமா! பாத்தீங்களா.. பயங்கர ஞாபக மறதியாப் போச்சு. அதுக்குள்ள மறந்துட்டேன். அரசாங்க அதிகாரியாகப் போறாரும்மா தம்பி!" என்றார் மகளிடம்.
"அதிகாரி எல்லாம் இல்ல சார்.. க்ளார்க் மாதிரி சின்ன உத்தியோகம் தான்" என்றேன் நான்.
"சுக்குக் காபி சாப்பிடுங்க" என்று வண்டியின் ஓரத்தில் டிரம்மை வைத்தவர், ஒரு பேப்பர் கப்பைக் கையில் எடுத்து சுக்குக் காபியை நிரப்பப் போனார்.
"ஐயோ! சாப்பிடுற நேரம்.. கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்.." என்று நான் சொல்ல, "இந்தாங்க தம்பி!" என்று பத்து பஜ்ஜிகளை ஒரு பேப்பரில் சுற்றித் தந்தார். நான் பணத்தை எடுக்க, "அட! இருக்கட்டும்.. உங்கள்ட்டப் போயி காசு வாங்குவேனா?" என்று மறுத்தார். நான் அங்கிருந்த காசு டப்பாவில் பணத்தைப் போடப் போக, என் கையோடு சேர்த்துப் பிடித்து என் பர்ஸிலேயே மீண்டும் பணத்தை வைத்து விட்டார். அவரது மகள் முறைத்தது போல இருந்தது. நான் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றேன். அப்புறம் சுதாரித்து, "குளிச்சு முடிச்சுத் திரும்பி வந்து சுக்குக் காபி குடிப்போம்.. ப்ரண்ட்ஸ் நாலு பேர் வந்திருக்காங்க.. அப்ப கண்டிப்பா காசு வாங்கிக்கிடணும்" என்று அவரிடம் கூறினேன். "சரிப்பா உங்க பிரியம்.. சத்யா! தம்பி மறுபடி வந்தாருன்னா காசு வாங்கிக்கோ.. சரியா?" என்றார் மகளிடம்.
"வீட்டுக்குப் போயிட்டு வரேன்.. அம்மா ஊசி போடணும்னா.." என்றவர், என்னிடம், "இவங்க அம்மா உடம்புக்கு ரொம்ப முடியாதவப்பா.. அடிக்கடி இளைப்பு வரும்.. ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போகணும்... அதான் இப்படி பொட்டப் புள்ளைய வேலை பார்க்க வைக்கோம்.." என்று வருத்தத்துடன் சொன்னார்.
"அப்பா!" என்று மிரட்டுவது போல் சொன்ன சத்யா, "பார்சல் அனுப்பியாச்சா?" என்றாள். "இன்னைக்கு லாரி போகலையாம்.. புக் பண்ணிட்டேன், நாளைக்கு அனுப்புறேன்னான்" என்றபடி வண்டியில் ஏறினார். "கடைசல் பட்டறை வச்சிருக்கோம் தம்பி.. முன்னாடி கோலாட்டு என்ன, நடைவண்டி என்ன, செப்புச் சாமான் என்ன, மரக்குதிரை என்னன்னு நாலு ஆள் வச்சு வேலை பாத்த பட்டறை.. எல்லாத்துலயும் இப்ப சைனா ஐட்டம் வந்துருச்சு. யாரு நம்ம கிட்ட வாங்குதா? சூப்பர் மார்க்கெட்டுக்குப் போய் பிளாஸ்டிக் பொம்மையத் தான் வாங்குதாங்க.. ஏதோ ஒன்னு ரெண்டு டூரிஸ்ட் சென்டர்ல இருந்து ஆர்டர் வருது.. அவனும் நம்மள்ட்ட பொருளை நூறு ரூவாய்க்கு வாங்கிட்டு ஐநூறு ரூவாய்க்கு விக்கிறான்" என்று புலம்பிக் கொண்டே சென்றார்.
முன்பெல்லாம் அம்பையில் கடைசல் பொருட்கள் செய்யும் பட்டறைகள் நிறைய உண்டு. கிட்டத்தட்ட இரண்டு மூன்று தெருக்களில் ஜேஜே என்று வேலை நடக்கும். நவராத்திரி சமயங்களில் கோலாட்டக் குச்சிகளுக்கு ஏக கிராக்கி. 100, 200 என்று ஆர்டர் வரும். பள்ளிக்கூடங்களுக்கு மொத்தமாக வாங்குவார்கள்.. பேரப்பிள்ளைகளுக்கு நடைவண்டி வாங்க என்று தினமும் நான்கு பேராவது வந்து வழி விசாரிப்பார்கள். அனேகமாக எல்லார் வீட்டிலும் ஒரு ஓலைப் பெட்டிக்குள் அடுக்கப்பட்ட சொப்புச் சாமான்கள் இருக்கும். சிறிய சிறிய சமையற்கட்டு பொருட்கள்- அந்தக் கால உரல்- உலக்கையிலிருந்து, இந்தக் கால கிரைண்டர்- மிக்ஸி வரை அதில் இருக்கும். எங்கள் வீட்டிலும் எனக்கு வாங்கியது வண்ணம் மாறாமல் அப்படியே இருக்கிறது. எந்தக் குழந்தை எங்கள் வீட்டுக்கு வந்தாலும் அம்மா அதை எடுத்து விளையாடத் தருவாள். பின் மீண்டும் பத்திரமாக எடுத்து வைத்துவிடுவாள். எங்கள் பெரியப்பா சிறுவயதில் விளையாடிய மரக்குதிரை ஒன்று ஆள் மாற்றி ஆள் விளையாடி இன்னும் எங்கள் பிள்ளைகளுக்காக பரணில் காத்திருக்கிறது. பிளாஸ்டிக் பொருட்கள் வருகையால் எத்தனையோ தொழில்கள் நொடித்துப் போனது போல இந்தக் கடைசல் தொழிலும் ஆகிவிட்டது போல. சத்யாவின் தந்தையை நினைத்தால் வருத்தமாக இருந்தது, ஆளும் குணத்தில் அவ்வளவு நல்ல மனிதராக இருக்கிறார்.
"இப்போ எல்லாம் ஆன்லைன் அப்படி இப்படின்னு இருக்கே சார்.. அதுல ஏதாவது விற்க முயற்சி பண்ணலாம்ல...." என்ற ஒரு கருத்தைக் கூறிவிட்டு நான் திரும்ப, சத்யாவின் அப்பாவும் கிளம்பி விட்டார்.
நான்கடி கூட நடந்திருக்க மாட்டேன், முதல் படித்துறையில், "ஐயோ பிடிங்க, பிடிங்க!" என்று ஒரு சத்தம். சத்யா என்னிடம், "சார்! இந்த அடுப்பைக் கொஞ்சம் பார்த்துக்கோங்க" என்று கூறிவிட்டு விறுவிறுவென்று ஆற்றை நோக்கி ஓடினாள். என்ன ஏதென்று நான் சுதாரிக்கும் முன் அவள் படித்துறையை அடைந்து உடுத்தியிருந்த சுடிதாருடனேயே நீருக்குள் குதித்திருந்தாள். எப்போது துப்பட்டாவை கழற்றித் தரையில் வைத்தாள், எப்போது செருப்பைக் காலிலிருந்து உதறினாள், கையிலிருந்த பஜ்ஜிமாவு என்ன ஆனது ஒன்றும் புரியவில்லை எனக்கு.
விஷயம் இதுதான்.. ரொம்ப நேரமாகத் துணி துவைத்துக் கொண்டிருந்த ஒரு பாட்டி, தன் பித்தளை குடத்தைத் தேய்த்து கொண்டிருக்க, கை தவறிக் குடம் நீரோடு போய்விட்டது. குடத்தைப் பிடிக்க பாட்டியும் நீருக்குள் இறங்க, ஒரு இருபதடி தூரத்துக்குப் பாட்டி நீரோடு போய்விட்டாள். அங்கு நீருக்குள் துழாவியபடி இருந்த தூர்ப்புக்காரன் ஒருவனும் இன்னொரு இளைஞனும் சட்டென்று நீந்திப் போய் பாட்டியின் முடியைக் கொத்தாகப் பற்றி இழுத்து விட்டனர். சத்யா என்ன செய்யப்போகிறாள் என்று நான் பார்த்துக் கொண்டிருக்க, பாட்டி பத்திரம் தான் என்று உறுதி செய்து கொண்ட பின் இன்னும் கொஞ்ச தூரம் நீந்திச் சென்று பாட்டியின் குடத்தைப் பிடித்து விட்டாள் சத்யா. அவளது வேகம் என்னை பிரமிக்கச் செய்தது.
அப்போதுதான் அவள் எனக்கு இட்ட பணி நினைவுக்கு வர, எண்ணைச் சட்டியைப் பார்த்தேன். நெருப்பைக் குறைத்துத் தான் வைத்திருந்தாள். பஜ்ஜி ஒருபுறம் வெந்தது போலிருக்க, அருகிலிருந்த கரண்டியால் திருப்பிப் போட்டேன். நல்ல வேளையாகக் கருகவில்லை. கருகியிருந்தால் வந்து என்னைத் திட்டியிருப்பாள் என்று தோன்றியது. அவளை நிமிர்ந்து பார்த்தேன். அந்தக் குடத்தை வைத்து பாட்டியின் தலையில் அடிப்பது போல் கொண்டு போய் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். திட்டுகிறாள் போல.. 'உங்க ஆத்தா சீதனமாக் குடுத்த குடத்தைப் பிடிக்கப் போறேன்னு ஆத்துல போகப் பார்த்தியே கிழவி' என்று சொல்வாளாக இருக்கும். பாட்டி அசடு வழிந்து கொண்டே குடத்தைப் பெற்றுக்கொண்டார். சுற்றியிருந்தவர்கள், 'வயசான காலத்துல ஆத்துக்கு வந்து தான் துணி துவைக்கணுமா? அதிலும் இந்தக் கொடத்தை இந்தத் தேய் தேய்க்கணுமா?' என்று திட்டியது தெரிந்தது. ஆற்றில் குளிக்க வரும் நபர்கள் தவறவிடும் மெட்டி, தோடு, மூக்குத்தி போன்ற சிறிய நகைகளும் ஏதாவது நாணயங்களும் கிடைக்கிறதா என்று ஆற்றின் ஒரு முங்கு முங்கி அலசிப் பார்ப்பதையே தொழிலாக வைத்திருக்கும் தூர்ப்புக்காரர்கள் இருவரும் அங்கு இருந்தார்கள். அதில் ஒருவன் தான் பாட்டியைப் போய்க் காப்பாற்றப் போனது. அவனும் பாட்டியைத் திட்டிக் கொண்டிருந்தான்.
தன் தலைமுடியையும் உடையையும் அப்படியே பிழிந்து விட்டுவிட்டு, கீழே கிடந்த துப்பட்டாவைத் தோளில் தூக்கிப் போட்டு வந்தாள் சத்யா. வந்தவுடன் நான் திருப்பிப் போட்டிருந்த பஜ்ஜியின் நிலையைப் பார்த்தாள். அவள் முகத்தில் திருப்தி தெரிந்தது. நான், "வரேங்க!" என்று கூறிவிட்டு நடக்க ஆரம்பிக்க, "சார்!" என்று சத்யா அழைத்தாள். வேறு சில வாடிக்கையாளர்களும் கடை அருகில் வந்திருந்தனர். அதனால் அவர்களைத் தான் கூப்பிடுகிறாள் போதும் என்று நான் மேலும் நடக்க, "சார்! கவர்மெண்ட் வேலை சார்" என்று மீண்டும் அழைத்தாள்.
என்ன இப்படிக் கூப்பிடுகிறாள் என்று எழுந்த புன்னகையை அடக்கிக்கொண்டு நான் திரும்ப, "கைல போன் வச்சிருக்கீங்களா சார்? எங்க அப்பாக்கு ஒரு போன் பண்ணனும்" என்றாள். பர்ஸிலிருந்து என் சிறிய ஃபோனை எடுத்து நீட்டினேன். அவளது அப்பாவின் நம்பரை அழுத்தியவள், "ஒரு அரை கிலோ கடலை மாவு வாங்கணும்பா.. வரும்போது வாங்கிட்டு வாங்க" என்று கூறிவிட்டு போனை என்னிடம் திருப்பித் தந்தாள், "தேங்க்ஸ்" என்றபடி.
அன்றைய உணவு, குளியல் எல்லாம் நல்லபடியாக முடிந்தது. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நீரில் நன்றாக ஆட்டம் போட்டோம். சத்யாவின் அப்பா வீட்டிலிருந்து திரும்பி வரும்போது உளுந்தவடைக்கு அரைத்துக் கொண்டு வந்திருப்பார் போல, நாங்கள் கரையேறிய போது மாலையில் அவர்கள் கடையிலேயே வடை இருந்தது. காப்பியும் வடையும் சாப்பிட்டோம். இந்த முறை பணம் வாங்கிக் கொண்டார்.
"கௌரிசங்கருக்குப் போகாமலேயே ஒப்பேத்திட்ட மாப்பிள.." என்று இட்லிப் பாண்டி கேட்க, "வேணும்னா வாங்கடே.. நைட் சாப்பாடு முடிச்சுட்டுப் போவோம்" என்றேன் நான். மனதுக்குள் கையிலிருக்கும் காசு பத்துமா என்ற ஒரு கணக்கு ஓடியது.
"போதும்டே.. வடையும் பஜ்ஜியும் சாப்பிட்டதுல வயிறு நிரம்பிருச்சு.. லேட்டானா செக்போஸ்ட்ல நிக்கிற பாரஸ்ட்காரன் வாயில விழணும்" என்று மூர்த்தி கூறி என் வயிற்றில் பாலை வார்த்தான். அப்படியே கிளம்பி விட்டோம். அப்போது புதிதாக ஒரு கூட்டம் ஆற்றுக்கு வந்து இறங்கியது. அதில் ஒருவன் ஓட்டிவந்த புல்லட்டை ஆசையாகத் தடவிப் பார்த்தாள் சத்யா.
தெரிந்த பையன் போலும்.. அவனிடம் சாவியை வாங்கி ஒரு ரவுண்டு ஓட்டிப் பார்க்கிறேன் என்று அந்தச் சாலையிலேயே அனாயாசமாக ஓட்டினாள். மாலை மங்கும் வேளையில் என் டிவிஎஸ் பிஃப்டியில் மலையேறிய எனக்குள் ஏதேதோ சிந்தனை ஓடியது. முதலிலேயே வந்துவிட்ட இளைய மருமகள் மரம் ஏறுபவளாய் அமைந்துவிட்டாள். அடுத்ததாக வரப்போகும் மூத்த மருமகள் புல்லட் ஓட்டுபவளாக இருந்தால் என் அம்மாவின் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்தேன். என் வண்டி கடைசியாகப் போனதால் நான் தனியே சிரித்ததை மற்ற நான்கு பேரும் பார்க்கவில்லை.

Author: SudhaSri
Article Title: இருபுனலும் வருபுனலும் -5
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.