• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

ஆகாயம் - 4

kanjeevaram

New member
Joined
Mar 17, 2025
Messages
7
ஆகாயம் - 4

நாதனின் இரண்டாவது அக்கா தேவியின் தேவன் தான் முத்துகுமார், நாதன் குடும்பத்தின் ஜாலியான மருமகன்.

ராமநாதனின் காலேஜ் சீனியர். தேவியை காதலித்து மணம் முடித்த பெருமை முத்துக்கு உண்டு.

நாதனின் தாய் புவனாவின் அண்ணன் மகன் தான் முத்துகுமார். புவனாவின் அண்ணன் தேங்காய் மண்டி வைத்து இருந்தார், அதை தேங்காய் பொருட்கள் எல்லாம் தயார் செய்யும் ஒரு நிறுவனமாக மாற்றியது முத்துகுமார் தான்.

சிறு வயதில் இருந்தே தேவி, நாதன், நாதனின் பெரிய அக்கா லதா எல்லாரும் ஒன்றாக தான் வளர்ந்தார்கள்.

முத்துவின் அன்னைக்கு பிரசவத்திற்கு பிறகு ஏற்பட்ட உடல் பருமன் காரணமாய், முத்துகுமார் ஒரே பிள்ளை செல்ல பிள்ளை அவர்களுக்கு.
முத்துக்குமார் சிறு வயதில் இருந்தே தன் மாமன் நாதனின் குடும்பத்தை பற்றி கூறும் ஒரு வார்த்தை "சரியான மியுசியம் குடும்பம்"

நாதன் லதா தேவி மூவரும் அப்படி ஒரு கட்டு செட்டு கொண்டு தான் வளர்க்க பட்டனர். நாதன் தந்தை முருகவேலின் வருமானத்தில் மூன்று குழந்தைகளை இளங்கலை வரை படிக்க வைத்து, கெளரவம் குறையாது கரை சேர்க்க அந்த கட்டுப்பாடுகள் நிறைய உதவியது.

நாதன் வேலைக்கு சென்ற பின் தான் அவர்கள் வீட்டுக்கு கேபிள் கனெக்ஷன் என்ற ஒன்றே வந்தது.

முருகவேல் தன் கஷ்டங்களை, படிப்பின் தேவையை சொல்லி சொல்லி வளர்த்ததால் மூவரும் இப்போது நல்ல வேலையில் தான் உள்ளனர்.

நாதனை பற்றி நமக்கு தெரியும். தேவி ஒரு கல்லூரியின் விளங்கியல் துறை பேராசிரியர். லதா ஒரு கல்லூரியின் நூலக பொறுப்பாளர்.

தேவியை சின்ன வயதில் இருந்து பார்த்தாலும், இருவருக்கும் மணம் முடிக்க என்று எல்லாம் வீட்டில் பேசியது இல்லை. தேவி இளங்கலை படித்து விட்டு ஒரு பள்ளியில் வேலைக்கு சென்று கொண்டு இருந்தபோது, பார்த்து காதலில் விழுந்து, பெரியவர்களிடம் பேசி மணந்த முத்துக்குமார், அவன் காதலின் அளவை கல்யாணம் முடிந்து எட்டு வருடம் குழந்தை இல்லாத நேரத்தில் தான் தேவிக்கு காட்டியது. இப்போது தேவிக்கும் முத்துக்கும் ஒரு பையன் பெயர் நீரஜ்.

முத்துவுக்கு தன் மாப்பிள்ளை நாதனுடன் நெருங்கி பழக வேண்டும், நண்பர்களாய் இருக்க வேண்டும் என்ற பல ஆசைகள் உண்டு, நாதன் அத்தனை நெருக்கம் காட்டியது இல்லை, தன் அக்காவை மணம் முடித்த பொழுதில்.

நாதனுக்கு மணம் முடித்து நான்காவது வருடம் வந்த பிரச்சினைக்கு பின் தான் மாமனும் மாப்பிள்ளையும் நண்பர்களானது.

நாதன் பெண் குழந்தை தர்ஷி பிறந்து மூன்றாம் பிறந்தநாள் அன்று

நாதனின் அப்பா முருகவேல் அம்மா புவனா, ஜானகி தர்ஷி எல்லாரும் காலையில் கோவில் சென்று, ஒரு நல்ல ஹோட்டலில் காலை உணவை சாப்பிட்ட பின்,

"ஏங்க நான் இப்படியே ஆபீஸ் போறேன், நீங்க தர்ஷி கூட்டிட்டு வீட்டுக்கு போங்க" - ஜானு

முன்னமே ஜானுவும் நாதனும் இதை முடிவுடுத்து இருந்ததால்,

"சரி ஜானு நீ ஆட்டோ பிடிச்சு கிளம்பு" - நாதன்

கிளம்பலாம் என்று சாப்பிட்டு முடித்து ஜானு கையை கழுவி கொண்டு வந்த சமயம், தன் மாமியார்,

"எல்லாம் படிச்ச வேலைக்கும் போற திமிர்"

என்று சொல்வது அரசல் புரசலாக காதில் விழுந்தது.
இப்படி மாமியார் நேரடியா சொல்லாவிட்டாலும், இதை போன்ற வார்த்தைகள் அப்போ அப்போ வீட்டில் கேட்பதால், இன்று இதை பற்றி கேட்டுவிடுவது என்று முடிவெடுத்து, அவர்களுக்கு எதிர்க்க ஜானு அமர,

"அத்தை எதுனாலும் நேர்ல சொல்லுங்க" - ஜானு

"இன்னைக்கு ஒரு நாள் லீவு போடலாம் இல்ல - கண்டிப்பா போயே ஆகணுமா"-புவனா

"அம்மா அவளுக்கு மீட்டிங் இருக்கு, நேத்தே நாங்க பேசிட்டோம், அதான் நான் லீவு போட்டேன் இல்ல"- நாதன்

"ஆமாம்டா இப்படி எதுவும் சொல்ல கூடாது, பெரியவங்க சொல்லுக்கு என்ன மதிப்பு, நீயும் தான் பெரிய பேங்க் ஆஃபீஸ்ர், ஆனா பாரு நீயே லீவு போட்டுட்ட" - புவனா

தர்ஷியின் இரண்டாவது பிறந்தநாளுக்கு ஒரு மாதம் முன்பு தான் ஜானுவின் தாயும் தந்தையும் ஒரு கோர விபத்தில் இறந்து போயினர்.

அந்த நிகழ்வில் இருந்து வெளியே வர ஜானு நிறைய போராட வேண்டி இருந்தது, வருடம் சென்று, தர்ஷியின் மூன்றாவது பிறந்தநாளை கொண்டாட முடிவு எடுத்து எல்லாம் பிளான் செய்த பின் தான் தர்ஷியின் பிறந்தநாள் அன்று அலுவலத்தில் ஒரு ஆடிட் இருப்பதால் கண்டிப்பாக செல்ல வேண்டிய சூழல்.

இதை பற்றி முன்பே பேசி இருந்ததால் ஜானகி பெரிதாக யோசிக்கவில்லை.

இப்படி பட்ட பேச்சுக்கள் வரவும், கோபத்தில் அழுகை வர, தாய் தந்தை நினைவு, நாதனின் பாரமுகம் எல்லாம் சேர

" நான் ஆபீஸ் போறேன்" என்று கிளம்பிவிட்டாள்.

நாதன் கூட
'பரவாயில்லை பெரிய பிரச்சினை வரல' என்று மனசுக்குள் நினைத்தது பொய் என்னும் விதமாய்,

மாலை வீடு வந்த ஜானு தர்ஷியை கூட்டிக்கொண்டு தன் தங்கை வீட்டுக்கு சென்று வருகிறேன் என்று நாதனிடம் சொன்னவள், இரவு வீடு திரும்பவில்லை.

ஜானுவின் தங்கை சுஜீ, தன் மாமாவின் மகனை மண முடித்து அப்போது மசக்கையால் அவதிப்பட்டு கொண்டு இருந்த தருணம்.

ஜானு தன் தங்கையிடம்
"உன்ன பாத்துக்க தான் வந்து இருக்கேன்!?"

என்று சொல்லிவிட, சுஜீயின் கணவருக்கு சற்று அசுவாசம். சுஜியின் மாமனார் மாமியார் அவர்களின் பெண்ணை பார்க்க அயல் நாடு சென்று இருந்தனர்.

பெற்றோரை பறிகொடுத்த அக்காவும் தங்கையும் ஒருவருக்கொருவர் உதவியாய் இருந்தனர்.

சுஜீ தன் அக்காவின் முகம் பார்த்து மாமாவிற்கு தொலைபேசியில் அழைக்க

"மாமா சாரி காலையில முடியல இல்லனா தர்ஷி பிறந்தநாளுக்கு கோவில் வந்து இருப்பேன்" - சுஜீ

"பரவாயில்லை மா, இப்போ ஒகேவா" - நாதன்

"ஒகே தான் மாமா, அக்கா போன் பண்ணி நான் சாயங்காலம் வரேன்னு சொல்லிட்டா, இல்லனா நானே வந்து இருப்பேன், நீங்களும் கூட வருவீங்க நினைச்சேன்" - சுஜீ

"கொஞ்சம் வேலைமா "- நாதன்

இதற்குள் இந்த பேச்சுக்களை கேட்ட படி வந்த ஜானு

" அக்கா வந்துட்டா மாமா, பேசுங்க " - சுஜீ தொலைபேசியை நீட்ட

"நான் அவர்கிட்ட அப்புறம் பேசிக்கிறேன்!" - என்ற ஜானு
நாதனிடம் பேசவும் இல்லை, ஏதும் சொல்லவும் இல்லை. நாதனின் அழைப்புகளை ஏற்கவும் இல்லை.

தர்ஷி அடுத்த நாள் காலையிலேயே
"மா ஆயா அப்பா பாக்க போனும்" என்று அப்பா ஞாபகம் அதிகம் வந்தவளாக.

இதை எல்லாம் பார்த்து சுஜீ தன் அக்காவிடம் என்ன என்று கேட்டாலும் மலுப்பல் பதில் தான் வந்தது.
ஜானு ஆடிட் முடிந்த காரணத்தால் மூன்று நாள் விடுப்பு எடுத்து இருந்தாள்.

ஆர்ப்பாட்டமாய் வந்து இறங்கினான் முத்துகுமார், தன் மருமகள் தர்ஷியின் பிறந்தநாளுக்கு அடுத்த நாள். தன் தாயின் திதி காரணமாய் தர்ஷியை காண அத்தையும் மாமனும் அடுத்த நாள் வந்து விட்டனர்.

வந்தவர்கள் ஜானுவையும் தர்ஷியையும் கேக்க,

புவனா நேற்று ஹோட்டலில் நடந்தது, பின் ஜானு தங்கை வீட்டுக்கு சென்று வருகிறேன் என்று சொல்லி சென்று இரவு திரும்பாதது என்று அனைத்தையும் உள்ளது உள்ளபடி சொல்லி விட்டார்.

"உங்க அம்மாவுக்கு கறார் மாமியார் இருக்க தெரியல இல்ல.. அப்புறம் எதுக்கு இந்த பில்டப்" - முத்து சற்று சத்தமாக

முருகவேல் இந்த மாறி விஷயகளில் தலையிடுவதை நிறுத்தி நெடு நாளானது. தன் மகனுடன் சென்னைக்கு வந்த பின், தங்களுக்கு என்று தனி அறை, கட்டில், டிவி, நேரத்துக்கு சாப்பாடு, மகன் மாத செலவுக்கு கொடுக்கும் பணம். இது எல்லாம் மருமகளும் வேலைக்கு செல்வதால் தான் சாத்தியம் என்று உணர்ந்த பின் அவர்களின் வாழ்வில் தேவையின்றி தலையிடுவதை நிறுத்தி நாளானது.

புவனாவும் நல்ல மாமியார் தான், மதியம் நாதனும், ஜானுவும் தங்கள் பணியிடத்தில் உண்ணும் பழக்கம் கொண்டதால் காலை உணவை மட்டும் ஜானு செய்துவிட்டு சென்றால், அவர் மற்றதை பார்த்து கொண்டு, தர்ஷியையும் பார்த்துக்கொள்வார்.

விடுமுறை பண்டிகை தினங்களில் கூட மருமகளுக்கு பல உதவிகளை செய்பவர் தான். ஏனோ தன் மகனுக்கு இணையாக மருமகளும் சம்பாதிப்பது அவரை அவ்வப்போது டெம்ப்லேட் மாமியாராக மாற்றும்.

அவரவர் எதோ எண்ணங்களில் இருக்க

"சரி எல்லாரும் சட்டு புட்டுன்னு குளிச்சிட்டு கிளம்புங்க, போய் உங்க மருமகளை சமாதான படுத்தி கூட்டிட்டு வருவோம் " - முத்து

"மாமா நான் சண்டையே போடலயே!" - நாதன்

"அவளே வருவா!?" - குறைந்த சத்தத்தில் புவனா

"சரி போய் டிபன் பண்ணுங்க சாப்பிட்டு பேசலாம்" - முத்து

"சரி நான் போய் ஆபீஸ் கிளம்புறேன் "- நாதன்

"பொண்டாட்டிய சண்டை போட்டு தூரத்திவிட்டு நீ எங்க ஆபீஸ் போற " - முத்து

கலவரமாக பார்த்த நாதனை வெளியே வரும்படி ஜாடை காட்டி விட்டு சென்ற முத்து

நாதன் வெளியே வந்ததும்

"இத பாரு ராமு, ஜானு மாறி ஒரு பொறுப்பான பொண்ண, சுய மரியாதை உள்ள பொண்ண சமாதானம் பண்ண ஒரே வழி சாஸ்ட்டாங்கமா கால்ல விழுறது தான், ஆக இப்போ போறோம் நீ கால்ல விழுகிற"
முத்து இதை சொன்னவுடன், நாதனுக்கு என்ன தோன்றியதோ என்னவோ இன்றே ஜானுவை பார்க்க செல்வது என்று முடிவெடுத்து, காலை உணவு முடித்து. தன் அக்கா மாமா எல்லோரையும் வீட்டில் இருக்க சொல்லிவிட்டு சுஜியின் வீட்டுக்கு சென்றான்.

ஜானு அப்போது தான் தலைக்கு குளித்து அங்கே இருந்த தன் பழைய சுடிதார் ஒன்றை அணிந்து தலை காய வைத்து கொண்டு இருந்தாள். பூரிக்கு கிழங்கு செய்து விட்டு தர்ஷி உண்ட பின், காலை மசக்கைக்கு பிறகு தூங்கும் தங்கையை எழுப்ப யோசிக்கும் போது வந்து சேர்ந்தான் நாதன்.

அப்பா என்று ஓடி தூக்க சொன்ன தர்ஷி

"அப்பா அம்மா நாங்க நைட் இந்த ரூம்ல தூங்கும் போது ஜானு தாத்தா ஜானு ஆச்சி போட்டோ பார்த்து அழுதாங்க" என்று தாங்கள் தூங்கிய அறையை காண்பிக்கவும் நாதனுக்கு என்னவோ போல் ஆனது.

"ஜானு அம்மா சொன்னது தப்புதான், உனக்கு என்ன சொல்லி சமாதான படுத்த எனக்கு தெரியல. நான் அம்மா கிட்ட சொல்லுறேன், வா ஜானு வீட்டுக்கு போலம் சுஜீயும் கூட்டிட்டு போலாம், அங்க இருக்கட்டும்" - நாதன்

முன்னமே சுஜீ அக்கா வீடு வருவது முடிவு செய்யப்பட்டது தான், சுஜியின் கணவர் மூன்று நாள் அலுவலக பயணம் காரணமாய் வெளியே செல்ல இருக்க, மாசமாக இருக்கும் தங்கையை தான் பார்த்து கொள்ளவதாக ஜானு சொல்லி இருந்தாள்.

நடுவில் ஜானு நானே உங்க வீட்டுக்கு வரேன் என்று சொன்னதும், ஜானு வரவும் தான் சுஜியின் கணவன் நிம்மதியாய் இரவு கிளம்பியது.

"தேவி அக்காவும் முத்து மாமாவும் வந்து இருக்காங்க" - நாதன் இதை சொன்னவுடன், இதை எப்படி மறந்தோம் என்று தான் ஜானுவிற்கு தோன்றியது.
நாத்தனார்கள் இருவரும் அவளிடம் என்றும் வேற்றுமை பார்த்தது இல்லை.

அதுவும் தேவிக்கு குழந்தை பிறப்பு தாமதம் ஆனதால், தர்ஷி எல்லோருக்கும் நல்ல செல்லம்.

வேறு வழி இல்லாமல், சுஜியிடம் சென்று கேக்க அவளும் அக்கா வீடு செல்லலாம் என்று சொல்லி விட்டாள். ஜானு சுஜியின் வீடு அரை மணிநேர பயணம் தான். சுஜீக்கு தேவையான அனைத்தும் எடுத்து, ஜானு வீடு வர மதியம் பன்னிரண்டு தாண்டி விட்டது.

வீட்டுக்குள் வந்ததும்
"முத்து மாமா" என்று தர்ஷி ஓடி சென்று கட்டி கொண்டாள்.

மூன்று நாட்கள் சென்ற மாயம் தெரியவில்லை. மூன்று நாள் கழித்து எல்லாரும் அவரவர் வீடு சென்று விட்டனர்

புவனாவும் மருமகளையும் அவள் தங்கையையும், எந்தவொரு பிரிவு காட்டியும் நடத்த வில்லை. நாதன் ஜானுவை கூப்பிட சென்றதும் தேவி தன் அன்னையிடம் செய்த போதனையின் விளைவு.

மேலும் ஒரு வாரம் சென்று, ஒரு நாள் இரவு

நாதன் வந்து கட்டிலில் எப்போதும் போல் படுத்து விட, நடுவில் படுக்கும் தர்ஷி அன்று அம்மாவிடம் சண்டையிட்டு, ஓரத்தில் படுத்து இருந்தாள்.

அருகில் இருந்த நாதன் பார்த்த ஜானு

"முத்து அண்ணா இவளுக்கு வாங்கி கொடுத்த அந்த பெரிய டெட்டியும் கூட படுக்க வச்சு இருந்தா, நான் தான் இப்போ எடுத்து அதை கீழ வச்சேன்"

"ஆமாம் ஜானு முத்து மாமா தர்ஷிய கூட்டிட்டு போய் ஒரு வாரம் வச்சுக்கவான்னு கூட கேட்டாரு என்கிட்ட, சீக்கிரம் அவங்களுக்கு குழந்தை பிறக்கணும்"

நாதனின் முகம் பார்த்து கொண்டு இருந்த ஜானு தன் கைகளை நாதன் நோக்கி தூக்கி நாதனின் இடுப்பு பகுதியில் வைக்க, இரண்டொரு நொடிக்கு பிறகு, மெல்ல கைகளை விளக்கிய நாதன், அந்த பக்கம் திரும்பி படுத்து விடவும்,

ஜானுவிற்கு மனசே விட்டு போனது. ஒரு அணைப்பிற்கு கூடவா நாம் ஏங்க வேண்டும். நெடு நேரம் தூக்கம் வராமல் படுத்து பின் உறங்கியும் விட்டாள்.

திரும்பி படுத்த நாதனும், எதோ எதோ எண்ணங்களை யோசனைகளையும் விடுத்து, தூங்க வெகு நேரம் ஆனது.

பதினைத்து வருடங்களுக்கு பின்னால், அடுத்த வாரமும் ஜானு தன் தங்கை சுஜியின் வீட்டுக்கு கோவம் கொண்டு போக போகிறாள் என்று தெரியாமல், நாதன் எப்படி ஜானுவிடம் பேசுவது என்று நூறாவது முறையாக மனதில் ஒத்திகை பார்த்தான்.


 

Author: kanjeevaram
Article Title: ஆகாயம் - 4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Joined
Mar 21, 2025
Messages
56
மனம் அறிந்து
மருமகள் நடந்தாலும்
மாமியாரின் பேச்சில்
மகனுக்கு தான்
முன்னுரிமை....
மகனும் தன்
மனைவிக்கு தானே பார்க்கவேண்டும்....
மாமன் மச்சான் நட்பு மகிழ்ச்சி.....
மனைவிக்கும் மனம் இருக்கு பா நாதா.....
 
Top Bottom