kanjeevaram
New member
- Joined
- Mar 17, 2025
- Messages
- 7
ஆகாயம் - 3
ஜானுவும் நாதனும் டாக்டரிடம் சென்று அவர் கொடுத்த மாத்திரைகள் வாங்கி வீட்டுக்கு கிளம்பலாம் என்று மருத்துவமனை விட்டு வெளியே வந்தனர்.
நாதன் ஜானகியின் முகம் பார்த்து எதோ சொல்ல வருவது புரிய
"என்ன சொல்லுங்க!"
"நாம கொஞ்சம் பேசணும் ஜானு"
"எத பத்தி பேச போறீங்க?!"
"அது நாம இனிமேல் எப்படி சொல்ல ஜானு... உனக்கு நான் சொல்ல வரது புரியுது இல்ல"
"இவ்வளோ நாள் நீங்க இப்படி எல்லாம் இல்ல இத பத்தி பேசவே எனக்கு பிடிக்கல, தயவு செய்து வாங்க வீட்டுக்கு போலாம்"
"ஜானு நான் பண்ணது எவ்வளோ பெரிய தப்பு, நான் இப்போ உணர்ந்த்துட்டேன், அதை சரி செய்ய தான் நினைக்குறேன்"
"உங்க கிட்ட எனக்கு பிடிச்சது என்ன தெரியுமா நீங்க ego இல்லாம இருக்குறது, நீங்க என்னோட மனசை புரிஞ்சுக்கல but எப்போவும் என்னை மட்டம் தட்டியோ விட்டு கொடுத்தோ போனது இல்ல, நமக்கு குழந்தை பிறந்த பிறகு நான் உங்களை நாடி வந்தாலும் ஒரு கட்டத்துல நீங்க என்னை அணுக கூட இல்ல, நானும் அப்போ எல்லாம் கொஞ்சம் நெறையவே காயப்பட்டு இருக்கேன். ஆனா நீங்க அதை பத்தி பேச கூட அனுமதிக்கல உங்களுக்கு அதை பத்தி பேசவும் பிடிக்கல"
"ஜானு எனக்கு புரியுது நான் பண்ணது மிக பெரிய தப்பு"
"சரி தீடீர்னு இப்போ எதுக்கு இப்படி?"
"அது ஜானு" என்ன சொல்லுவது என்று சற்று யோசிக்கும் போதே...
"சரி அதை விடுங்க, இப்போ எனக்கு சொல்லுங்க அப்போ இளமை அப்படி இருக்கும் போதே, என்கிட்ட தள்ளி இருக்க காரணம் என்ன சொல்லுங்க???"
இதற்கு நாதனின் மௌனம் தான் பதில் என்று தெரிந்தும் இந்த கேள்வியை கேட்ட ஜானு நாதன் மௌனமாகி விடவும் காரை கிளப்பி வீடு நோக்கி செலுத்தினாள்.
நாதன் ஜானு மணமா புதிதில் தாம்பத்தியத்தில் செழித்து தான் இருந்தனர். நாதன் எதிலும் நிதானம் என்பதால் அவரின் ஆளுமை படுக்கையிலும் ஒரு நிதானத்துடன் தான் இருக்கும்.
குழந்தை பிறந்த பின் நாதன் சிறிது சிறிதாக ஜானுவை அணுகுவதை குறைத்து, தர்ஷியின் முதல் பிறந்த நாளுக்கு பின் அவர்களின் கட்டில் நாதம் நின்றே போனது.
ஜானுவிற்கு தனது குழந்தை பிறந்த உடல் தான் காரணமோ? தன் அழகு குறைந்து விட்டதோ? அவருக்கு ஏதும் உடல் சார்ந்த பிரச்சினையோ? என்று பல கேள்விகள் எழுந்தாலும், நாதனை எந்த வகையிலும் தவறாக நினைக்க முடியவில்லை.
நாதன் ஒரு நல்ல தந்தை, நல்ல மகன், நல்ல கணவரும் கூட! மனைவியை யாரிடமும் எதற்கும் விட்டு கொடுக்காதவர்.
ஜானகிக்கு பணியின் காரணமாய் ஆறு மாதங்கள் யூரோப் செல்ல வாய்ப்பு கிடைத்த போது, வற்புறுத்தி அனுப்பி வைத்தது நாதன் தான். தர்ஷி அப்போது எட்டாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தாள்.
வருடம் ஒரு முறை எங்காவது செல்வது, வீட்டில் கலக்கப்பாக பேசுவது, நாட்டு நடப்பு பற்றி விவாதிப்பது என்று ஒரு அழகான சூழல் உண்டு ஜானுவின் வீட்டில்.
தொலைகாட்சியில் எதாவது ஏடாகூடமான காட்சிகள் வந்தால், நழுவும் மீன் போல் அந்த இடத்தில் இருந்து நழுவி விடும் நாதனை பார்த்து எப்போதும் ஜானகி வியந்தது உண்டு.
பெரிய சண்டைகள் எல்லாம் முடியும் இடம் கட்டிலாக இருக்கும் போது, பெரிய சண்டைகள் வந்தால், கட்டிலை நாடாது அதை தீர்க்க நாதன் முன்னெடுக்கும் வழி தலை குப்புற விழுந்து மன்னிப்பு கேட்பது தான்.
இப்படி ஒரு கணவருடன் வாழ்க்கை என்று முடிவான பின் ஜானகிக்கு இதை எப்படி யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை, கரணம் தப்பினால் மரணம் போன்ற மிக நுட்பமான இந்த பிரச்சினையை, நூறு போர்வைக்குள் கீழ் இருக்கும் பட்டாணியை கண்டு கொள்ளும் இளவரசி போல் அல்லாது,
நல்ல நூறு விஷயங்களுக்கு கீழ் இந்த பிரச்சினையை அழுத்தி வைத்து வாழ்வை அதன்
போக்கில் வாழ பழகி கொண்டாள்.
ஜானகிக்கு இப்போது இருக்கும் கேள்வி எல்லாம்,
இவ்வளோ நாளுக்கு பிறகு இப்போது எதற்கு என்பது தான்.
ஜானகி விசாலமான வாசிப்பு அனுபவம் கொண்டவள். கழிவறை இருக்கை(Toilet Seat) தொடங்கி ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன் (Men are from Mars, Women are from Venus) போன்ற பல நூல்களையும் ஹார்ரி போட்டர், அமிஸ் திரிபாத்தியின் ஷிவா வரிசை போன்ற நூல்கள், அவளை கழிவிறக்கம், காம்ப்லெஸ் போன்ற வழிகளில் செல்லாமல் பாதுகாத்து வைத்தது.
சில சமயம் ஜானகிக்கு நாதனின் இந்த போக்குக்கு காரணம் என்ன என்று டெடேக்ட்டிவ் வேலை செய்ய தோன்றினாலும், தேவை இல்லாத வேலை என்று அதை விட்டு விடுவாள். நாதனின் போன் லாக் பாஸ்போர்ட் எல்லாம் ஜானுவுக்கு தெரியும் என்பதால், அவரை சந்தேகப்படவும் முடியவில்லை.
வீடு விட்டால் வேலை வேலை விட்டால் வீடு, வெகு சில நண்பர்கள் என்று வாழும் நாதனை சில சமயம் மனதில் வறுத்தெடுத்தாலும், பல சமயம் மன்னித்து தங்கள் தாம்பத்தியத்தை!?! அழகாக கொண்டு சென்றதில் பெரிய பங்கு ஜானகிக்கு உண்டு.
வீடு வந்து சேர்ந்த பின் ஜானகிக்கு வழக்கம் போல் இரவு உணவு வேலைகள் இழுத்து கொள்ள, நாதன் தன் எண்ணங்களுடன் தனித்து இருந்தார். வீட்டு வேலையில் சமையலில் அதிகம் உதவுவது இல்லை நாதன், காரணம் உதவி பல சமயம் உபத்திரவமாய் முடிவாதால்.
நாதனுக்கு ஜானுவை பற்றிய நினைவுகள் தான்,
போன மாதம் அவர் எதிர் கொண்ட அந்த நிகழ்வு தான் அவரை இத செய்ய தூண்டியது. அந்த நிகழ்வுக்கு பின் தான் நாதனின் குற்ற உணர்வு பெறுகியது. அதன் தொடர்ச்சி தான் நாதனின் இந்த மாற்றம்.
நாதன் ஒன்றும் தெரியாத ஆள் இல்லையே, தான் செய்தது தவறு என்று தெரியும் மனைவியை விலக்கியது தவறு என்றும் தெரியும், மனைவி பேச எண்ணிய போது எல்லாம் அதை பேசாமல் போனது தவறு என்று தெரியும்.
இப்போது இருக்கும் அறிவும் தெளிவும் முதிர்ச்சியும் பதினைந்து வருடத்துக்கு முன்னால் இருந்து இருந்தால் என்று நாதன் எண்ணாத நாள் இல்லை.
வாழ்க்கை எந்த பெரிய கஷ்டமும் இல்லாத போதும் அவரும் அதை அப்படியே விட்டு விட்டது இப்போது மிக பெரிய தவறாக தோன்றியது.
தன் மனைவிக்கு தெரிந்தே செய்த தவறாக தெரிகிறது. அதை சரி செய்ய நினைக்கும் இப்பொழுது தான், அதுவும் தவறாக படுகிறது.
நாதனுக்கு இதை யாரிடம் சொல்லி புலம்ப யாரிடம் இதை பற்றி விவாதிக்க ஒன்றும் புரியவில்லை.
நண்பர்களும் இதை பேசும் அளவு நெருக்கம் இல்லை, மனைவியிடம் பேசலாம் என்றால், இத்தனை வருடம் ஆகினும் இதை பற்றி பேச ஒரு அசௌகரியம், வெட்கம், பயம்.
மொத்தத்தில் இரு மனங்களும் குழம்பி கிடைக்கிறது. குழம்பிய குட்டையில் மீன் கிட்டுமா?

Author: kanjeevaram
Article Title: ஆகாயம் - 3
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.