• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

கூழாங்கல் கூவுகின்ற கானம்! 10

Kota

Member
Joined
Mar 27, 2025
Messages
60
அத்தியாயம் 10

"சித்து! இதுல தனித்தனியா இன்விடேஷன் எடுத்து வச்சிருக்கேன்! யாருக்கெல்லாம் குடுக்கணும்ன்ற பேர் லிஸ்ட்டும் அங்கேயே இருக்கு. இதை மட்டும் நீ முடிச்சிடு. ரிலேட்டிவ்ஸ்க்கு எல்லாம் நான் குடுத்துக்குறேன்!" என்று அமலி சொல்ல,

"நான் பாத்துக்குறேன் ம்மா. நீங்க ஸ்ட்ரைன் பண்ண வேண்டாம்!" என்றான் சித்தார்த்.

"ஹ்ம் இப்ப வந்து சொல்லு!" என்று அமலி புன்னகைக்க,

"ம்மா!" என சித்தார்த்துமே சிரித்துவிட்டான் அதில்.

"பார்த்துக்கோ! ஸ்டோர்க்கு நான் குடுத்துக்குறேன்" என மீண்டுமாய் அவர் நியாபகப்படுத்தி கடைக்கு கிளம்பிவிட, ஒருமுறை சரிபார்த்து எடுத்துக் கொண்டான் சித்தார்த்.

அலுவலகத்திற்கு நேரமாகி இருந்தது. அங்கிருக்கும் மீட்டிங்கை முடித்துக் கொண்டு திருமணத்திற்கு அழைப்பு வைக்க கிளம்ப வேண்டும் என எண்ணியபடி தான் வீட்டிலிருந்து கிளம்பினான் சித்தார்த்தும்.

திருமணத்திற்கு இன்னும் மூன்று வாரங்கள் தான் இருந்தது. அத்தனை வேலைகளையும் இரு குடும்பமுமாய் பகிர்ந்து கொள்ள, சிரமங்கள் எதுவும் இல்லை.

முன் வேலை பார்த்த அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு இன்றே அழைப்பு வைத்துவிட வேண்டும் என ஒவ்வொரு நாளுக்கான வேலைகளையும் குறித்து வைத்துக் கொண்டிருந்தான் சித்தார்த்.

இதில் நேற்று தான் பாலா வேறு பெங்களூர் கிளம்பி சென்றிருந்தாள்.

கவிபாலா அலுவலகத்தில் இருந்து நின்று கொண்டதை ஸ்ரீதர் ஒரு விதத்தில் பார்த்துக் கொண்டாலும் இத்தனை வருடங்கள் அங்கே பணிபுரிந்துவிட்டு அப்படியே விட்டு வந்ததில் அவளுக்கும் வருத்தம் தான்.

இப்போது ஸ்ரீதரரே அழைத்து பீஎஃப் மற்றும் இதர சலுகைகள் பற்றிய விவரங்கள் சொல்லி அதற்கான கையெழுத்து புகைப்படம் வங்கி விவரங்கள் என கேட்கவும் கவிபாலா நேரில் சென்று வருவதாய் கூறினாள் சித்தார்த்திடம்.

"இப்பவா?" என சித்தார்த் நகர முடியாமல் வேலை இருக்க, "இட்ஸ் ஓகே! நான் போய்ட்டு அதை முடிச்சுட்டு அப்படியே ஸ்ரீதர் சார் அப்புறம் என் பிரண்ட்டையும் இன்வைட் பண்ணிட்டு வந்துடுறேன்!" என்றாள் சித்தார்த்திடம் கவிபாலா.

"சூர்? தனியாவா?" என சித்தார்த் தான் தயங்கினான் அவளை தனியே அனுப்பிட.

"மூணு வருஷம் நான்இருந்த ஊர் தான்!" என கேலியாய் அவள் கூற,

"இப்பவும் அப்படியா? உன்னை தனியா அனுப்பிட்டு நான் என்ன பண்ண?" என்றான் சித்தார்த்.

"நான் பாத்துக்குறேன்! ரெண்டு நாள் தான். அபி வீட்டுக்கு போய் அவங்க அம்மா அப்பாவையும் இன்வைட் பண்ணனும். ரொம்ப நல்ல மனுஷங்க. பீஎஃப் வந்தா அம்மா அப்பாக்கு கொஞ்சம் ஹெல்ப்பா இருக்கும்" என தான் யோசித்ததை எல்லாம் அவள் சொல்ல,

"இவ்வளவு யோசிச்ச நீ என்னை யோசிக்கவே இல்ல இல்ல?" என சித்தார்த் முறைக்க,

"ப்ளீஸ் ப்பா! ரெண்டு நாள் தானே?" என கெஞ்சி கொஞ்சி தான் கிளம்பி இருந்தாள் அங்கிருந்து.

நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே கவிபாலாவிடம் இருந்து அழைப்பு வர,

"சொல்லு டா!" என்று தான் அழைப்பை ஏற்றான் சித்தார்த்.

"சாப்பிட்டீங்களா? என்ன பண்றீங்க?" என விசாரித்தவளை எண்ணி புன்னகைத்தவன்,

"ஆச்சு ஆச்சு! ஆபீஸ் போய்ட்டு இருக்கேன்!" என்றான்.

"நானும் ஆபீஸ்ல தான் இருக்கேன். ஸ்ரீதர் சார் இன்னும் வரல!" கவிபாலா சொல்ல,

"ஹ்ம்! அவன் வந்ததும் கால் பண்ணு. நானும் பேசுறேன்! நீ சாப்பிட்டியா?"

"ஹ்ம்! அபி வீட்டுலயே சாப்பிட்டேன்! ஈவினிங் மறுபடியும் அவங்க வீட்டுக்கு தான் போகணும். பஸ் லேட்டா தான் புக் பண்ணிருக்கேன்!" என்று சொல்ல,

"பத்திரம் டா!" என்றான்.

மீண்டும் சில நிமிடங்கள் பேசிவிட்டு தான் வைத்திருந்தான். முடிந்தவரை அன்றே பாதிக்கும் மேலான அழைப்பிதழ்களை அவன் கொடுத்து முடித்திருக்க, மீதி இருப்பவற்றை கணக்காய் எண்ணிக் கொண்டு அடுத்த நாள் முடித்துவிட வேண்டும் என்றும் எண்ணிக் கொண்டான் சித்தார்த்.

ஸ்ரீதர் வந்ததுமே அவனிடம் பேசி உரிய முறையில் அலுவலகதுக்கு கடிதம் எழுதி கொடுத்து மற்ற வேலைகளையும் முடித்துக் கொண்டாள் கவிபாலா.

பின் சித்தார்த்க்கு அழைத்து ஸ்ரீதர் அவன் குடும்பம் என அனைவரையும் இருவரும் வரவேற்க, வருவதாய் கூறி இருந்தான் ஸ்ரீதர்.

அபிநயாவுடன் அந்த ஒருநாளும் அழகாய் கடந்தது கவிபாலாவிற்கு. அன்று முழுவதும் அவளுடன் தான் இருந்தாள். மதியத்திற்கு பின் அபிநயா விடுப்பு எடுத்துக் கொள்ள, இருவருக்கும் அந்த நேரம் தேவையாய் இருந்தது.

"சித்தார்த் எப்படி டி?" என அபிநயா கேட்க,

"அன்னைக்கு பார்த்தியே!" என்றாள் கவிபாலா புன்னகையோடு.

"பார்த்ததை விடு! பழக எப்படி? கேரக்டர் எப்படி? உனக்கு இப்ப ஓகே தானே எல்லாம்?" என்றாள் அபிநயா.

"ரொம்ப நல்லவங்க அபி! இப்ப இல்ல முன்னாடியே தெரியும்! அம்மா அப்பப்ப சொல்லும் போதே புரிஞ்சது. எங்க லைஃப்ல இப்படி தான் நடக்கணும்னு சில விஷயங்கள் ஏற்கனவே எழுதி இருக்கும் போல! ஆனா அதனால தான சித்து எனக்கு கிடைச்சது? அதுல நான் ஹாப்பி தான்!" என்றாள் முகம் மலர்ந்து.

"இப்ப தான் டி எனக்கு நிம்மதி! சந்தோசமா இரு.! என்ன இங்க உன்னோடவே இருந்து பழகிட்டேனா! நீ இல்லாம எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு!" என்று அபிநயா சொல்லவும் அணைத்துக் கொண்டாள் அவளை கவிபாலா.

அன்றைய நாள் முழுதும் தோழிகள் அத்தனை சந்தோசமாய் இருக்க, இரவு ஒன்பது மணிக்கு கவிபாலாவிற்கான பேருந்து.

தானே அழைத்துக் கொள்ள வருவதாய் சொல்லி இருந்தான் சித்தார்த்.

மாலை வீடு வந்து அன்னையிடம் அழைப்பிதழ் கொடுத்த விவரங்களை கூறி மிச்சமிருக்கும் பாதியை நாளை எடுத்துக் கொள்வதாய் சொல்ல,

"கவி வீட்டுல ரிலேட்டிவ்க்கு எல்லாம் குடுத்தாச்சானு கேட்டியா சித்தார்த்?" என்றார் அன்னை.

"கேட்டேன் ம்மா! பாலா அம்மாகிட்ட பேசினேன் மார்னிங். மோஸ்ட்லி எல்லாருக்கும் கொடுத்தாச்சுன்னு தான் சொன்னாங்க. பாலா வந்ததும் பக்கத்துல மட்டும் கொடுக்கணுமாம்!" என்றான்.

"ஹ்ம்! எதுவும் ஹெல்ப் வேணுமான்னு கேட்டுக்கோ! நானும் பேசிக்குறேன். மண்டபம் அரேஞ்மெண்ட்ஸ் எல்லாம் எக்ஸ்ட்ரா ஒரு டைம் செக் பண்ணிடு சித்து. விஐபீ எல்லாம் வருவாங்க இல்லையா? எல்லாம் சரியா இருக்கணும்!" என திருமண வேலைகள் முழுதாய் அவர்களை ஆட்டி வைத்திருந்தது. இரவு உணவை எடுத்துக் கொண்டு அறைக்கு வந்த சித்தார்த் கவிபாலாவிற்கு அழைக்க, பேருந்து நிலையம் செல்வதாய் கூறி இருந்தாள்.

அடுத்து இரவு பத்து மணி வரையுமே அவளுடன் தான் பேசிக் கொண்டிருந்தாள் சித்தார்த்.

"கொஞ்ச நேரம் தூங்குங்க. நான் வந்ததும் கால் பண்றேன்!" கவிபாலா சொல்ல,

"நீ வந்தா தான் எனக்கு தூக்கமே வரும்!" என்றான் அவன்.

"எவ்ளோ அலைச்சல் இன்னைக்கு. டையார்ட் இருக்கும். சும்மா எனக்காக சொல்லாதீங்க. நான் வந்துட்டு கால் பண்றேன்!" என சொல்லி தான் கவிபாலா வைத்திருக்க,

"ஹ்ம்! நீ கால் பண்ணாட்டியும் கூட நான் வந்துடுவேன்!" என்று சொல்லி தான் வைத்திருந்தான் சித்தார்த்.

சில நிமிடங்கள் மீண்டும் அவளுடன் குறுஞ்செய்தி விளையாட்டு என இருந்தவன் அவள் மிரட்டிய பின்பே புன்னகையுடன் உறங்க சென்றிருந்தான்.

மீண்டும் அவன் கண் விழிக்கும் பொழுது மணி இரண்டை தொட்டிருக்க, பேருந்து வந்து கொண்டிருக்கும் இடத்தை அவன் மொபைலில் பார்க்க, அது ஒரு மணி நேரம் முன்பு இருந்த இடத்தையே காட்டிக் கொண்டிருந்தது.

"லேட் பன்றாங்க!" என நினைத்துக் கொண்டவன் மூன்று மணிக்கெல்லாம் வீட்டில் இருந்து கிளம்பிவிட்டான் அவளை அழைத்துவர என.

மீண்டும் காரில் செல்லும் போது பேருந்து இருக்கும் இடத்தைப் பார்க்க, அது சேவையில் இல்லை அப்பொழுது.

மணி நான்கை தொட இருக்கும் நேரம் வரை காத்திருந்தவன் இவ்வளவு நேரமா என்று சிந்தித்து அதன்பின் தான் பேருந்து சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கு அழைக்க, சுத்தமாய் அவன் எதிர்பாராத செய்தி அவனுக்கு அதிர்ச்சியாய் காத்திருந்தது.

நடு இரவில் அங்கே நின்று கொண்டிருந்த காரில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து மோதி விபத்து என தகவல் அவனுக்கு தெரியவர, அதிர்ந்து நின்றவனுக்கு சில நொடிகள் மட்டுமே கைகால்களோடு மூளையும் வேலை செய்யவில்லை.

அடுத்த நொடி அவன் கண்களில் கவிபாலாவின் முகம் தோன்றிவிட, கண்களில் கண்ணீர் உலகத்தை மறைக்கப் பார்க்க, எங்கே யாரை அழைப்பது என்பதாய் விழித்தவன் முதலில் அன்னைக்கு அழைத்து விவரம் சொல்லி கவிபாலா வீட்டினரை காண அனுப்பி வைத்தான்.

இரண்டு மணி நேரங்கள் அத்தனை வேகம் என விபத்து நடந்த இடத்தை அவன் காரில் வந்தடையும் பொழுது மனதெல்லாம் சொல்ல முடியாத பயத்தில் முகத்தில் உணர்வுகளற்று வெளிரிப் போய் தான் வந்து சேர்ந்திருந்தான்.

"பக்கத்துல இருக்க ஹாஸ்பிடல்ல தான் எல்லாரையும் சேர்த்திருக்காங்க!" அங்கிருந்த ஒருவர் சொல்ல, உயிரை கையில் வைத்துக் கொண்டு தான் ஓட்டமெடுத்தான் சித்தார்த்.

"பாலா! ஒண்ணுமில்ல தான உனக்கு?" என்ற அரற்றல் ஒருபக்கம் இருக்க, உயிரை எதுவோ பறித்து இழுப்பது போன்ற வலி ஒருபக்கம் இருக்க, மருத்துவமனை வருவதற்குள் நொறுங்கி இருந்தான்.

"சித்து எங்க டா இருக்க?" என அலைபேசியில் அன்னையின் குரலுக்கு தெம்பாய் பதில் கூற கூட முடியவில்லை அமலியின் குரலுக்கு பின் கேட்ட விஜயாவின் அழுகை சத்தத்தைக் கேட்ட நொடி.

"சித்து!" என மீண்டும் அன்னை சத்தம் கரகரத்து வர, மருத்துவமனை பெயரை மட்டும் கூறி வைத்துவிட்டான்.

அத்தனை கூட்டம். பேருந்தில் வந்தவர்களின் சொந்தங்கள் முழுதும் அங்கே திரண்டிருக்க, பத்திரிக்கையளர்கள் ஊடகத் துறையினர் என மொத்தமும் அங்கே தான் இருந்தது.

இத்தனைக் கூட்டத்தை தாண்டி எப்பொழுது அவளைக் காண என ஒரு நொடி தான் நினைத்திருப்பான். அடுத்த நொடியே இந்த கணம் அவளை தன் கைகளுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என தவிப்பு கதறலை உண்டு பண்ண, அத்தனை பேரையும் தாண்டிக் கொண்டு உள்ளே ஓடியவன் அங்கும் இங்குமாய் அலைந்த கோலம் யார் வாழ்க்கையிலுமே வந்திட கூடாதது.

யாரிடம் கேட்க? என்ன சொல்லி கேட்க? இத்தனை பேரில் என்னவென்று சொன்னால் இவர்களுக்கு புரியும் என மூளை அவனை கிறுகிறுக்க வைக்க, அவளுக்காக மட்டுமே அவன் மூச்சை இழுத்து பிடித்திருந்தான் அந்த நேரம்.

"பாலா! எங்க டி இருக்க?" என்று வெளியில் காயத்துடன் அமர்ந்திருந்த ஒவ்வொருவரையும் கூர்ந்து பார்த்து, ஒவ்வொரு அறையாய் தேடி என வந்தவனுக்கு இதோ அவள் தரிசனம்.

"ஆஆ..!" என்ற முணங்களுடன் அவளும் அவனைப் பார்த்துவிட்டவள், "சித்து!" என்றபடி மயங்கி இருக்க,

"பாலா! பாலா! பாலா!" என அருகில் வந்து அழைத்து அவள் கன்னம் தட்டி என அழைத்து அழைத்துப் பார்த்தவன் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தே விட,

"உங்க ரிலேட்டிவா?" என்று அவனிடம் கேட்டிருந்தார் மருத்துவர்.

தொடரும்..

Author: Kota
Article Title: கூழாங்கல் கூவுகின்ற கானம்! 10
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Joined
Mar 21, 2025
Messages
43
கல்யாண வேலை
கச்சிதமாக செல்ல
காத்திருக்கும் சித்துவிற்கு
காத்திருந்த எதிர்பாராத
கவிபாலா விபத்து...
கண்ணீருடன் தவிப்பாக..
கண்டுவிட்டான்
கவியை ....
😭😭😭😭
 
Kota

Member
Joined
Mar 27, 2025
Messages
60
கல்யாண வேலை
கச்சிதமாக செல்ல
காத்திருக்கும் சித்துவிற்கு
காத்திருந்த எதிர்பாராத
கவிபாலா விபத்து...
கண்ணீருடன் தவிப்பாக..
கண்டுவிட்டான்
கவியை ....
😭😭😭😭
😭😭
 
Thirubhuvanam

New member
Joined
Nov 7, 2024
Messages
6

Idhu na expect pnave illa
 
Joined
Mar 21, 2025
Messages
43
Idhu na expect pnave illa
நான் எதிர்பார்த்தேன் ஸ்மூத்தாக போகுதே.... அமலி கிட்ட குண்டு எதிர்பார்த்தேன் ஆனா இப்படி ஆக்சிடென்டுல வெச்சுட்டாங்க ஆத்தர்😂😂😂😂
 
Kota

Member
Joined
Mar 27, 2025
Messages
60
நான் எதிர்பார்த்தேன் ஸ்மூத்தாக போகுதே.... அமலி கிட்ட குண்டு எதிர்பார்த்தேன் ஆனா இப்படி ஆக்சிடென்டுல வெச்சுட்டாங்க ஆத்தர்😂😂😂😂
அமலியை வில்லியா கொண்டு போக ஏனக்கு விருப்பம் இல்ல பா.. அதான் இந்த பக்கமா போய்ட்டேன் 😷😷🤣
 
Joined
Mar 21, 2025
Messages
43
அமலியை வில்லியா கொண்டு போக ஏனக்கு விருப்பம் இல்ல பா.. அதான் இந்த பக்கமா போய்ட்டேன் 😷😷🤣
சதி வேண்டாம்
விதி போதும் என நினைத்த
மதி அழகு 🤩🤩🤩🤩
 
dharani

Member
Joined
Jul 6, 2024
Messages
25
ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க... கண்ணு பட்ட போல் ஆகிடுச்சே
 
Top Bottom