அத்தியாயம் 7
"என்ன சொல்றிங்க நீங்க? எப்படி வர முடியும் நான்? என் வீட்டுல பேச வேண்டாமா? அம்மா! அம்மா என்ன நினைப்பாங்க என்ன சொல்லுவாங்க? இதெல்லாம் கேட்க வேண்டாமா நான்?"
உடனே என்னுடன் வா என்று அவன் கூறியதில் அதிர்ந்து பதறி கவிபாலா மறுத்து கூற,
"அப்போ நான் வரலையா உன்னை தேடி இவ்வளவு தூரம்?" என்றான் சித்தார்த்.
"அதுவும் இதுவும் ஒண்ணா?" என்று முறைத்தவள்,
"நமக்கு பிடிச்சிருக்கு ஓகே. ஆனா அவங்க ஆசைனு இருக்கே! நீங்க வீட்டுல பேசுங்க. நானும் அப்பா அம்மாகிட்ட பேசுறேன்" என்றாள்.
"ப்ச்! உனக்கு எப்படி புரிய வைக்க?" என்று டேபிளில் விரல் கொண்டு தாளம் தட்டியவன்,
"அம்மா கேரக்டர் அப்படி தான். சில விஷயங்கள் அவங்க போக்குல விடணும். சில விஷயங்கள் அவங்களை கவனிக்க வைக்கணும். இப்ப நான் கவனிக்க வைக்கணும். அப்ப தான் என்னோட முடிவு அவங்களுக்கு புரியும்!" என்றான்.
"அப்போ?"
"என்ன அப்போ? இப்போ சொல்றேன் பாலா! வா பார்த்துக்கலாம்! அடலீஸ்ட் இப்ப என் கூட ஊருக்கு வா. உன் அம்மாகிட்ட பேசு. நானும் பேசுறேன். முடிவு ஒண்ணு தான். அதுல மட்டும் நீ ஸ்ட்ரோங்கா இருக்கனும். எனக்கு அது போதும்!" என்று சொல்ல, யோசனையுடன் தலையசைத்தாள் கவிபாலா.
"தேங்க் யூ!" என கண் சிமிட்டி சித்தார்த் புன்னகைக்க, இளம் புன்னகை கவிபாலாவிற்கும். மனம் இதமாய் இருப்பதாய் தோன்றியது.
என்னவோ தான் மட்டும் பல காலமாய் நடக்கவே நடக்காத ஒன்றிற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறோமோ என நினைத்து தவித்து தனியே இருந்தவளுக்கு ஆறுதலாய் கைகோர்த்து பக்கம் நின்று துணையாய் வர சம்மதம் கேட்டு நிற்பவனை இன்னும் மனம் உயரத்தில் தூக்கி வைத்துக் கொண்டது.
"போலாமா?" சித்தார்த் கேட்க, சம்மதம் சொல்லி உலல் வந்த கவிபாலா அபிநயாவிடம் வந்து சொல்ல,
"அச்சோ! பட்டுக்குட்டி! அப்படியே கன்னம் எல்லாம் சிவந்து டாலடிக்குற போ! என்ஜோய் கேர்ள்! யூகேஜி அரை மணி நேரத்துல பாஸ் பண்ணிட்டார் போல? நீ கலக்கு டா!" என்று சொல்லி அனுப்பி வைத்தாள் அபிநயா.
"பேப்பர் பீரியட் கூட இல்லாம கவிபாலாவை அனுப்ப சொல்லி என் வேலைக்கு ஆப்பு வச்சுட்டு கிளம்புறேன்னு நிக்குற இல்ல நீ?" என்று ஸ்ரீதர் சித்தார்த்த்தை முறைக்க,
"அங்க ஒரு குட்டச்சி.. அதான் உன் அபி! இருக்குல்ல! அதை பாலாவோட பேப்பர் பீரியட் டைம்க்கும் சேர்த்து வொர்க் பண்ண சொல்லி ஈகுவல் பண்ணிக்கோ! வரட்டா! பை!" என்று சொல்லி ஸ்ரீதர் கைகளால் நான்கு மொத்து வாங்கிக் கொண்டு தான் கிளம்பினான் சித்தார்த்.
சித்தார்த் காரில் அவனுடம் பயணம். அதுவும் நினைத்தவுடன். என்னவோ சட்டென்று முடிவெடுத்து விட்டோமோ! சரிவருமா என சிந்தித்தவள் காதுக்கு அருகே சித்தார்த் சொடுக்கிட, அவன் பக்கம் திரும்பி விழித்தாள் கவிபாலா.
"பேக்கடிக்கலாம்னு பாக்குறியா என்ன?" என்றவன் கேள்வியில் சிரித்தவள் இல்லை என தலையசைக்க,
"ரொம்ப திங்க் பண்ணாத! பார்த்துக்கலாம்!" என்று தைரியம் கொடுத்தான்.
"ஆமா! என் அம்மா சம்மதிக்கலைனா என்ன செய்வீங்க?" கவிபாலா கேட்க,
"அந்த ஷூட் எடுத்தது எனக்கு தெரிஞ்ச டைரக்டர் தான். அன்னைக்கே நம்ம கல்யாண போட்டோஸ் கொண்டு வந்து தந்தார். பத்திரமா வச்சிருக்கேன். போஸ்டர் அடிச்சு ஒட்டுவேன்!" என்றவன் சொல்லில் அவள் வாயில் கைவைத்து விட, சத்தமாய் சிரித்தான் சித்தார்த்.
"உன் அம்மா ரொம்ப இன்னசன்ட் இல்ல பாலா?" என்று சித்தார்த் சிரித்து முடித்து கேட்கவும் முறைத்துக் கொண்டிருந்தவள் ஆம் என்று மெதுவாய் தலையசைக்க,
"முதல்ல அவங்ககிட்ட நீ இல்லாதப்ப சாரி கேட்க போனேன். என்னை கையெடுத்து கும்பிட்டாங்க! மறக்கவே முடியாது என்னால அதை!" என்றான் அந்த நினைவுகளில்.
"யோசிக்காம நாம பண்ற ஒரு விஷயம் அடுத்தவங்களை எவ்வளவு பாதிக்குது இல்ல? உன் அம்மா அப்பாவை அடிக்கடி நான் பார்க்க போனதே அவங்களை நினைச்சு பயத்துலயும் கஷ்டத்துலயும் தான். உன்னை நினைச்சதை விட தூக்கத்துல கூட அவங்க பொண்ணுக்கா அவங்க கைகூப்பி நின்னது தான் அதிகமா நினைச்சுருக்கேன் நான்!" என்றான் சித்தார்த்.
"இந்த முடிவை நான் முன்னாடியே எடுத்திருந்தாலும் நீ சரியா அப்ப புரிஞ்சிருக்க வாய்ப்பில்ல. நம்ம ரெண்டு பேருக்குமே இது தான் சரியான நேரம் போல!" என ஒவ்வொன்றாய் பேசியபடி வந்தான் கவிபாலாவோடு.
சித்தார்த் பேச பேச அவன் குணநலன் தெரிந்த பின் சிறு ஆசை இருந்தது என்னவோ உண்மை விஜயாவிற்கு சித்தார்த் கவிபாலா திருமணத்தில்.
ஆனால் அமலியின் முந்தைய பேச்சுக்கள் இப்போது தானே அழைத்து மகனுக்கு பெண் பார்ப்பதாய் சொல்லியது என விஜயாவின் மனதில் கவலையை தேக்கி இருந்தது.
மகளும் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்று தந்தை மதியும் சில நாட்களாய் வாடிப் போய் தான் நடமாடிக் கொண்டிருந்தார்.
இனியும் தாமதிக்க கூடாது. மகளை வர சொல்லி மாப்பிள்ளையை பார்க்க ஆரம்பித்து விட வேண்டும். சித்தார்த் திருமணத்திற்கு முன் எப்படியாவது மகள் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என பல எண்ணங்கள் விஜயாவின் மனதில்.
"ம்மா!" என்ற கவிபாலா அழைப்பில் தான் நினைவுகளில் இருந்து விஜயா திரும்பிப் பார்க்க, ஆம் மகளே தான் தன்னருகில்.
"கவிம்மா! எப்ப வந்த? வர்றேன்னு சொல்லவே இல்லையே நீ? எப்படி இருக்க டா?" என மகளைப் பார்த்த சந்தோசத்தில் பேசிக் கொண்டிருக்க, வீட்டிற்குள் நுழைந்த சித்தார்த்தை அப்போது தான் கவனித்தார் விஜயா.
சித்தார்த்தைப் பார்ப்பதும் மகளைப் பார்ப்பதுமாய் இருந்த விஜயாவிற்கு ஆச்சர்யம் தான். சில நொடிகளுக்கு முன்பு வரை இவர்களை தான் நினைத்திருக்க, இப்படி கண்முன் வந்து நிற்கிறார்களே என்று.
"ம்மா! நான் சித்தார்த் கூட தான் வந்தேன்!" கவிபாலா சொல்ல, அதிர்ச்சியும் குழப்பமும் என அவனைக் கண்டார் விஜயா.
"அங்கிள் எங்க ஆண்ட்டி?" சித்தார்த் கேட்க,
"வெளில போயிருக்காங்க!" என்றார் புரியாமல்.
"முக்கியமான விஷயம் பேசணும்!" என்று சித்தார்த் புன்னகையுடன் கூற, கவிபாலா தயங்கி அமர, என்னவோ புரிவது போல தான் இருந்தது விஜயாவிற்கு.
உடனே அலைபேசியில் அழைத்து கணவனை வீட்டிற்கு வர சொல்ல அடுத்த கால் மணி நேரத்தில் எல்லாம் வந்துவிட்டார் மதி.
"கவி பாப்பா!" என ஆசையாய் வந்ததும் மகளை அழைக்க, அவர் கைகளுக்குள் சென்று இருந்து கொண்டாள் கவிபாலா.
"ஏங்க!" என்று அழைத்த விஜயா சித்தார்த்தை காட்ட, அப்போது தான் அவனை கவனித்தவர், மனைவியைப் பார்க்க,
"என்னனு கேட்க வேண்டியது தான? ஏன் ரெண்டு பேரும் இப்படி பாக்குறீங்க?" என அப்போதும் சிரித்தான் சித்தார்த்.
"ஓகே நானே சொல்றேன்!" என்ற சித்தார்த் நடந்ததை கூற, அத்தனை அமைதி கவிபாலா வீட்டினுள்.
"எங்களுக்கு ஒரு நினைப்பு இருந்துச்சு தான். ஆனா உங்க அம்மாக்கு இஷ்டம் இல்லாம.. அது சரியா வராதுங்களே!" மதி சொல்ல, அமோதிப்பதாய் அமைதியாய் இருந்தார் விஜயா.
"ஹே! என்ன நீ? அமைதியா இருக்க? வரும் போது தான ஸ்ட்ரோங்கா இருக்கணும்னு சொல்லி கூட்டிட்டு வந்தேன்!" என கவிபாலாவை சித்தார்த் கேட்க, மற்றவர்கள் விழிக்க,
"அங்கிள்! ஆண்ட்டி! இந்த கதையெல்லாம் இனி வேண்டாம்! நாங்க டிசைட் பண்ணிட்டோம். எங்களுக்கு பிடிச்சிருக்கு. அம்மாவை நான் ஹண்டில் பண்றேன். உங்க சம்மதத்தை மட்டும் சொல்லுங்க!" கிட்டத்தட்ட மிரட்டி தான் இருந்தான் சித்தார்த்.
"நீ விளையாட்டுத்தனமா பேசுறது எல்லாம் நல்லா தான் இருக்கு சித்தார்த். ஆனா என் பொண்ணு அங்க வந்து வாழணுமே! எங்களுக்கு எந்த ஈகோவும் இல்ல. நாங்களே வந்து கூட உங்க அம்மாகிட்ட பேச தயார் தான். ஆனா அவங்க முடிவு வேறன்னும் போது...." என இன்னும் தயங்கினார் மதி. அவர் கைகளுக்குள் மகளை வைத்து அமர்ந்திருக்க,
"ஜம்ப் பண்ற நீ? இப்ப இந்த பக்கம் வர்றியா இல்லையா?" என்றான் சித்தார்த் நேராய் கவிபாலாவிடம்.
மாட்டேன் என்பதாய் தலையசைத்தவளிடம் சிறு குறும்பு புன்னகையும்.
"அடிப்பாவி!" என்றவன் சொல்லில் விஜயா முதலில் அதிர்ந்தவருக்கும் புன்னகை வரப் பார்க்க,
"நீ தனியா மாட்டு அப்ப இருக்கு!" என்றான் அவள் அன்னை தந்தை முன்னேயே!
"ஓகே! அப்ப நான் அம்மாவை கூட்டிட்டு வந்தா பாலா என்கூட வரலாம்! அப்படி தானே?" என்றான் சித்தார்த். அவர்களிடம் இன்னும் அமைதி.
"நாங்களும் வர்றோம்!" விஜயா சொல்லி கணவனைப் பார்க்க,
"ம்ம் வரலாமே!" என்றவன் முகத்திலும் புன்னகையே!
"வேண்டாம் சித்தார்த் ப்ளீஸ்!" உடனே மறுத்தாள் கவிபாலா.
அவன் வீட்டிற்கு சென்று மன்றாடி அன்னை தந்தை நிற்பதை போல மனதுக்குள் தோன்றவும் திடுக்கிட்டு அவள் தடுக்க,
"ப்ச்! பேமிலியா பேச தான் போறோம்! உன் நினைப்பு இருக்கே!" என அப்பட்டமாய் அவளை முறைத்தவன்,
"வாங்க போலாம்!" என்று சொல்லி அழைத்து வந்திருந்த இடம் ஒரு ஹோட்டல்.
இடத்தைப் பார்த்ததும் தன்னைத் தானே நிந்தித்து கவிபாலா தலையில் அடித்துக் கொள்ள, சிறு செல்ல முறைப்போடு புன்னகை என அவன் முகம் அத்தனை பிடித்தது கவிபாலாவிற்கு.
"அம்மா வந்துட்டு இருக்காங்க! இங்கேயே இருங்க! ஆர்டர் சொல்லிட்டு அம்மா வந்ததும் உள்ள கூட்டிட்டு வர்றேன்" என்றவன் கவிபாலாவிடம் தலையசைத்து கிளம்பிவிட்டான்.
"இது சரியா வருமா விஜயா?" மதி மனைவியிடம் கேட்க,
"தெரியலையே!" என்றவருக்கு மகள் விருப்பம் புரிந்த பின் பதில் சொல்ல முடியவில்லை.
ஆனால் இதைவிட நல்ல முடிவு மகள் வாழ்க்கைக்கு கிடைத்துவிடாது என்று மட்டும் புரிந்தது.
சுற்றி இருப்பவர்களின் பேச்சுக்கள் அவளின் மீது விழுந்த பழிச்சொல் என அனைத்தும் இத்தோடு நின்றுவிடுமே!
அதையும் மீறி பேசுபவர்கள் அடிமட்டத்திற்கும் சென்று பேசுவார்கள் தான். ஆனால் எத்தனை காலம் பேசிட முடியும்? அவரவர் உலகம் இயங்கும் வரை தானே? அடுத்தவர் பேச்சிற்கான மரியாதையை குறைத்து தான் ஆக வேண்டும்.
"இப்படி தான் உடனே வான்னு போன் பண்ணுவியா சித்து? நான் கால் பண்ணினேன். சரியாவே ரெஸ்பான்ஸ் பண்ணல. இப்ப நீயா கூப்பிட்டு ஹோட்டலுக்கு வர சொல்ற! என்ன பண்ணிட்டு இருக்க நீ?" என மகனை திட்டியபடி சித்தார்த்துடன் உள்ளேயே வந்திருந்தார் அமலி.
"அந்த பொண்ணு...." என எதுவோ சொல்ல வந்த அமலி அங்கே அவளையே நேரில் பார்த்ததில் அமைதியாகி மகன் பக்கம் திரும்ப,
"வாங்க ம்மா!" என கைப்பிடித்து அன்னையை அழைத்து வந்தான் கவிபாலா அருகில்.
தொடரும்..

Author: Kota
Article Title: கூழாங்கல் கூவுகின்ற கானம்! 7
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.