பகலிரவு பல கனவு - 25
பிரபாகரனின் தினசரி வாழ்க்கை காலை ஐந்து மணிக்கே தொடங்கிவிடும். இரவு பத்து மணிக்கு முன்னால் வீடு வந்து சேர்வது என்பது மிகவும் அரிதான நிகழ்வு. பதினெட்டு வயதில் இருந்தே கடினமாக உழைத்து முன்னேறியவன். நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தவன், அவனது கடைகளின் எண்ணிக்கை கூடியதில் கால்களில் சக்கரம் கட்டாத குறை தான். இதற்கிடையில் சம்யுக்தாவின் மீதான காதல். அவனது வாழ்க்கையில் எக்ஸ்பிரஸ் ரயில் போல முன்னேற்றம் வேண்டும் என்று தூண்டியது அந்தக் காதல் தான். அது கனிந்து கல்யாணம் என்ற நிலையை எட்டிய போது சிறகில்லாமலே பறந்தான். ஆனால், அந்தக் கல்யாண வாழ்க்கையின் ஆரம்பமே அமர்க்களமாக இருந்ததில் நொந்து போனான்.
திருமண இரவை நினைத்து ஆயிரமாயிரம் கனவு கண்டிருக்கிறான். ஆனால் அந்த இரவு கணவன் மனைவிக்கான இனிமையான இரவாக இல்லாமல் விடிய விடிய அழுத புத்தம் புதிய மனைவியைச் சமாதானம் செய்வதாக அமையும் என்று அந்த ஆயிரத்தில் ஒரு கனவில் கூட கண்டதில்லை.
இதோ விடிந்து சில மணி நேரம் ஆகியும் அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாமல் குழம்பிய நிலையில் அமர்ந்திருக்கிறான்.
அவன் மனைவி சம்யுக்தாவோ இன்னமும் உறக்கத்தில் இருந்தாள். நேரம் சென்று கொண்டிருந்ததே தவிர சம்யுக்தா விழிப்பதற்கான அறிகுறிகள் எதையும் காணவில்லை. இவனுக்கும் அவளை எழுப்ப மனமில்லை. இரவு முழுவதும் அவளை மடிதாங்கியிருந்த பிரபாகரனின் கால்கள் இரண்டும் மரத்துப் போயிருந்தது. இதற்கு மேல் தாங்காது என்று நினைத்து அவளது தலையை மெல்ல தலையணைக்கு நகர்த்த முயற்சித்தான். அதே நேரத்தில் அவனது மொபைல் கூவி அழைத்தது. “வெற்றி நிச்சயம்! இது வேத சத்தியம்“ என்ற அலறலில் சம்யுக்தா விழித்து விட்டாள்.
மறுமுனையில் மலர்விழி. “ஹலோ மை டியர் ப்ரதர்! குட் ஆஃப்டர்நூன். இதுக்கு மேல நீங்க கீழே இறங்கி வரலேன்னா சேதாரம் ரொம்ப ஜாஸ்தி ஆகிடும். காலைல இருந்து லட்சார்ச்சனை நடக்குது. என் காதுல ரத்தம் வர்றதுக்கு முன்னாடி வந்து என்னைக் காப்பாத்து.” தான் சொல்ல வேண்டிய விஷயத்தைச் சொல்லி அவன் பதில் பேச வாய்ப்பே கொடுக்காமல் அழைப்பை நிறுத்தி விட்டாள்.
பெருமூச்சுடன் அவன் மொபைலைப் பார்த்திருக்க, சம்யுக்தா அமைதியாக எழுந்து அமர்ந்தாள். அதற்காகவே காத்திருந்தது போல கால்களை அசைத்து, நீட்டி மடக்கி என்று ஏதேதோ செய்து கொண்டிருந்தான் பிரபாகரன்.
“அச்சோ க்ராம்ப்ஸா ப்ரபா? என்னாலயா? ராத்திரி பூரா இப்படியே இருந்தீங்களா?” என்று அக்கறையான கேள்விகள் வந்த போது பிரபாகரன் பூரித்துப் போனான். கூடவே உள்ளங்கால்களை நன்றாகவே நீவி விட்டாள்.
“ஷ்ஷ்.. ஆஆஆஆ.. ஏய் என்னடி பண்ற? இருக்கிற நோவுல இவ வேற?” கால்களை இழுத்துக் கொள்ள முயன்றவனுக்குத் தோல்வியே மிஞ்சியது.
“யோவ்! வாயை மூடி அமைதியா இரு. இரண்டு நிமிஷத்துல சரியாகிடும்.” தனது வேலையில் கவனம் வைத்தவாறே அழுத்திக் கூறினாள்.
“ம்ம்.. சரியாகிடுச்சு சம்யூ. தாங்க் யூ!” என்று சிரித்துக் கொண்டே எழுந்தவனுக்கு ஒரு முறைப்பு பரிசாகக் கிடைத்தது.
“நீ என்ன லூசா? ஒரே நாளில் ஓவரா சீன் போடாத. நான் அழுதேன்னா பக்கத்தில படுத்துட்டு கூட சமாதானம் செஞ்சிருக்கலாம். அதை விட்டு.. லூசு.. லூசு.. “
“ஏய்! என்னடி? நீ பாட்டுக்கு கணக்கில்லாம லூசுன்னு சொல்லிட்டு இருக்க. உன்ன.. என்ன பண்றேன்னு பாரு!”
அவன் வருவதற்குள் அவள் பாத்ரூம் சென்று கதவை அடைத்துவிட்டாள். மாற்று உடை எதையும் அவள் எடுத்துச் செல்லவில்லை என்றறிந்து அவனது உள்ளம் குத்தாட்டம் போட்டது. புது மணமகனாக, அவன் மனம் மனைவி எந்தக் கோலத்தில் வெளியே வருவாள் என்று கற்பனை கண்டு காத்திருக்க கீழே முருகானந்தத்தின் குரல் ஓங்கி ஒலித்தது.
“இதென்ன வீடா இல்ல வேற ஏதாவதா? ஏய் காமாட்சி! எங்க போய் தொலஞ்ச? ஒரு வாய் காப்பித் தண்ணி கொடுன்னு கேட்டு மாமாங்கம் ஆகுது? எல்லாம் உம்மகன் இருக்கிற தைரியம். எத்தனை நாளைக்கு இந்த மிதப்புன்னு நானும் பார்க்கத் தானே போறேன்” என்ற சத்தத்தைத் தொடர்ந்தது “இதோ வந்துட்டேங்க!” என்ற காமாட்சியின் மெல்லிய குரல்.
“இப்போ எதுக்கு வீட்டுல ஏதோ இழவு விழுந்தது மாதிரி மூஞ்சிய வச்சிருக்க? மொத்த வீடும் சேர்ந்து நினைச்சத சாதிச்சாச்சில்ல. இப்போ உங்களுக்கு குளுகுளுன்னுல்ல இருக்கணும். பார்த்தேனே! உம்மகன் தேடிப்பிடிச்ச சம்பந்தி லட்சணத்த. பணத்தைக் கொடுத்து அத்துவிட்டாங்கள்ள? எங்க உம்மகனும் மருமகளும்? கல்யாணம் முடிஞ்ச முதல் நாளே நல்ல மரியாதை போல…”
இன்னும் என்னவெல்லாம் பேசியிருப்பாரோ, பூட்டிய கதவு சென்சார் செய்துவிட்டது. சட்டென்று எழுந்த பிரபாகரன் வெளியே இருந்த குளியலறையில் காலைக் கடனை முடித்துக் குளித்து விட்டு அறைக்குள் வந்தான். நைட்டி அணிந்து ஒரு கையில் புடவையையும் மறுகையில் சுடிதாரையும் வைத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள் சம்யுக்தா.
“சுடிதாரே போட்டுக்கோ சம்யூ” என்றவாறு அவனும் ஒரு ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் அணிந்து கொண்டான்.
அடுத்த பத்து நிமிடங்களில் இருவரும் கீழே இறங்கி வந்தனர். இருவரையும் கண்டதும் காமாட்சி முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே சென்று விட்டார். முருகானந்தம், என்ன நடக்கும் என்று வேடிக்கை பார்க்கத் தோதாக அமர்ந்து கொண்டார்.
பிரபாகரனுக்குத் தாயின் மனநிலை பிடிபடவில்லை. கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் நடந்த சம்பவங்களை வைத்து அவர் மாறிவிட்டார் என்ற முடிவுக்கு வர அவன் விரும்பவில்லை. இரு வீட்டார் சம்மதத்துடன் நடந்த திருமணம் அது. சம்யுக்தாவின் பெற்றோர் உறவை முறித்துக் கொண்ட வேளையில் அவன் வீட்டிலும் அது போல ஒரு சம்பவம் நடந்தேற அவன் அனுமதிப்பதாக இல்லை.
முடிந்தவரை பொறுமையைக் கடைபிடிப்பது என்று மனதுக்குள் அவசரமாக ஒரு சபதம் செய்து கொண்டான். அதனாலேயே தாயின் முகத்திருப்பலைக் கண்டு கொள்ளாமல் அமைதி காத்தான்.
மனைவியுடன் நேரே பூஜை அறைக்குள் சென்று இறைவனை வணங்கினான்.
“வந்துட்டியா பிரபா? இரண்டு பேரும் இப்படி நில்லுங்க” என்று இருவருக்கும் விபூதி பூசினார் அப்பத்தா.
“நாளைக்கு காலைல கொஞ்சம் சீக்கிரம் எந்திரிக்கணும். குலதெய்வம் கோவிலுக்கு போய் கும்பிட்டு வந்திருவோம். ஊரைக் கூட்டி கிடா வெட்டுறதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்று அவர் சொல்ல சரியென்று தலையசைத்துக் கேட்டுக் கொண்டான்.
“இப்போ கொஞ்சம் வெளியே போயிட்டு வரோம் அப்பத்தா” என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்தார் அவர்.
“இன்னும் ஒரு வாய் காப்பித் தண்ணிய கூட குடிக்கலையே ராசா. இப்படி வெறும் வயித்துல..” என்று ஆரம்பித்தவரை முடிக்க விடாமல் தடுத்தது பேரனின் குரல்.
“அப்பத்தா! கொஞ்சம் நான் சொல்றத நிதானமா கேளு. இங்கேயே இருந்து வம்பு வளர்க்க நான் தயாரா இல்லை. அம்மாவுக்கு ஏதோ கோபம். என்னால புரிஞ்சுக்க முடியுது. அதே சமயம் சம்யூ நிலைமையையும் நான் யோசிக்கணும். உறவ ஒரேயடியா அத்து விடறதானா பேச்சை வளர்க்கலாம். ஆனால் நானா அப்படிச் செய்ய மாட்டேன். அதனால எல்லாத்தையும் கொஞ்ச நாள் ஆறப் போடுங்க. நாங்க ராத்திரிக்குள்ள வந்து சேர்ந்திருவோம்.” நிதானமாக சொல்லி விட்டு மனைவியுடன் வெளியே நடந்தான்.
“என்னத்தச் சொல்ல? யாரை நோக? காலம் போன காலத்தில நான் இதையெல்லாம் பார்க்கணும்னு என் தலையில எழுதி இருக்கு. ” புலம்பிய அப்பத்தா “ஆத்தா! என் புள்ளைங்கள நல்ல படியா வாழ வை” என்று கையெடுத்துக் கும்பிட்டார்.
மகன் வெளிநடப்பு செய்வான் என்று எதிர்பார்க்காத காமாட்சி திகைத்து நின்றார். முருகானந்தம் ஒரு இளக்காரப் புன்னகையுடன் தனது அரசமரத்தடி நண்பர்களைத் தேடிச் சென்றார்.
தனது புல்லட்டை விடுத்துக் காரை எடுத்த பிரபாகரன் மனைவியை அழைத்துக்கொண்டு இலக்கில்லாமல் சுற்றினான். இருவருமே வார்த்தைகள் மறந்து விட்டது போல அமைதி காத்தனர். பசித்த போது கண்ணில் கண்ட ஹோட்டலில் சாப்பிட்டனர். இப்படி நாள் முழுவதும் சுற்றிவிட்டு மறக்காமல் இரவு உணவை முடித்துக் கொண்டு உறங்கும் நேரத்திற்கு வீடு வந்து சேர்ந்தார்கள்.
நாள் முழுவதும் ஊர் சுற்றினாலும் மறக்காமல் குலதெய்வ வழிபாட்டுக்குத் தேவையான அனைத்தையும் ஏற்பாடு செய்து விட்டே வந்திருந்தான் பிரபாகரன். மகனது மௌனம் காமாட்சியைக் கொஞ்சமாக அசைத்துப் பார்த்தது. சம்யுக்தா வீட்டினரின் அலட்சியம், உறவுகள் விடாமல் செய்த மூளைச்சலவை என்று பல காரணங்களால் சராசரி மாமியாராக மாறிப் போன காமாட்சி தனது செயல்களுக்கான எதிரொலியை மகனிடம் எதிர்பார்க்கவே இல்லை.
முந்தைய இரவு உணவு நேரத்தில் கூட தனது கோபத்தைக் கண்டு மகன் பதறுவான், தன்னைச் சமாதானம் செய்ய வருவான் என்றே நம்பினார். மகனது உறவு வேண்டாம் என்று ஒரு போதும் அவர் நினைக்கவில்லை. ஆனாலும் மகனின் திருமண நிகழ்வின் தாக்கத்தை அவருக்குத் தெரிந்த வகையில் வெளிப்படுத்த முயன்றார் என்பதே நிஜம்.
அன்று விடிந்தது முதலே என்ன செய்து மகனது கவனத்தைத் தன் புறம் திருப்புவது என்று எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில் அவன் மறுபடியும் ஏமாற்றத்தையே பரிசாக அளித்தான். நாள் முழுவதும் அறையில் முடங்கியவரை கண்டு கொள்வார் தான் இல்லை.
மறுநாள் காலையில் திருமண உடையில் பிரபாகரனும் சம்யுக்தாவும் தயாராகி நின்றார்கள். ஊர் பழக்கத்தை விடாமல் தலை முதல் கால் வரை தங்கத்தில் ஜொலித்தாள் சம்யுக்தா. பொங்கிய சந்தோஷத்தை மறைத்துக் கொண்டு முகத்தைக் கோபமாக வைப்பதற்கு காமாட்சி முயற்சி செய்ய, அதைக் கண்டு கொண்ட பிரபாகரன், “அப்பத்தா! என் பொண்டாட்டிய பார்த்தியா? இருக்கிறதெல்லாம் அள்ளி சாத்திட்டு வந்திருக்கா. இன்னைக்கு பூரா இவளைக் காவல் காக்கவே சரியா இருக்கும். யாராவது நகைக் கடைக்காரங்க பார்த்தா விளம்பரத்துக்கு கூப்பிடுவாங்கன்னு நினைக்கின்றேன்” கேலி செய்வது போல் பேசினாலும் அவனது பார்வை மனைவியை மேய்ந்தது.
“போடா அங்குட்டு. ராசாத்தி மாதிரி இருக்கா எம்பேத்தி. கோவிலுக்கு போயிட்டு வந்து உன் காலடி மண்ணெடுத்து சுத்திப் போடணும். மசமசன்னு நிக்காம போய் காரை எடு. நல்ல நேரத்தில சாமி கும்பிடணும்” பேரனை விரட்டிய அப்பத்தா அவன் மனைவிக்குக் கையால் திருஷ்டி எடுக்கவும் மறக்கவில்லை.
“நல்லதுக்கே காலம் இல்லடா பிரபா. நீயும் தான் மாப்பிள்ளை மாதிரி இருக்க. யாராவது கண்டுக்கிறாங்களா பாரு!” ஆள்காட்டி விரலால் தன்னைச் சுட்டிக் காட்டி புலம்பிக் கொண்டே காரை எடுக்கச் சென்றான் பிரபாகரன்.
இடைப்பட்ட நேரத்தில் தான் போட்டுக் கொண்ட முகமூடியைத் தொடர்ந்த காமாட்சி குலதெய்வம் கோவிலுக்குச் சென்ற பிறகும் வாய் திறந்து பேசவில்லை. பூஜைக்குத் தேவையானவற்றை பிரபாகரனே செய்ய மற்றவர்கள் கடனே என்று அம்மன் முன் நின்றார்கள். இப்படியே பட்டும் படாமலும் சம்யுக்தாவின் விடுமுறை முடிந்தது. பிரபாகரன் வெளியே சாப்பிட்ட நாளில் காமாட்சி சாப்பிடவே இல்லை. இதையறிந்த அப்பத்தா சமயம் பார்த்து காத்திருந்தார்.
“ஆளாளுக்குக் கோவத்த சாப்பாட்டுல காட்டினா நல்லா இல்ல சொல்லிட்டேன். அடேய் பேராண்டி! இனி ஒரு தடவை வெளியே போய் சாப்பிட்டு வந்தேன்னா பச்சத் தண்ணி கூட இந்த வீட்டுல குடிக்க மாட்டேன். என்னாலயும் பட்டினி கிடக்க முடியும். பாக்கிறியா மருமகளே? புதுசா மாமியார் வேஷம் கிடச்சதும் கண்ணு மண்ணு தெரியாம போச்சு உனக்கு. இன்னைக்கோ நாளைக்கோ போற உசுரு, எப்படிப் போனா என்ன?”
கோவிலுக்குச் சென்ற தினத்தில் அப்பத்தா கடுமையாகப் பேசிய பிறகு அந்த வீட்டில் சாப்பாட்டு நேரம் பிரச்சினை இன்றி நகர்ந்தது. ஆனாலும் பிரபாகரன் வீடு தங்கவில்லை. உணவு நேரத்திற்கு மட்டுமே மனைவியுடன் மறக்காமல் ஆஜரானான்.
விடுமுறை முடிந்து சம்யுக்தா கல்லூரி செல்லத் தொடங்கினாள். காலை, மதியம் இரு வேளையும் கல்லூரியில் உண்பது அவளது வாடிக்கை. இப்போதும் அதுவே தொடர்ந்தது. ஆனால், இதைப்பற்றி அ
றியாத காமாட்சி செய்த செயல் பிரபாகரனின் தனிக்குடித்தனத்திற்கு வழி வகுத்தது.

Author: SudhaSri
Article Title: பகலிரவு பல கனவு -25
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.