பகலிரவு பல கனவு -24
கட்டிலில் கால் நீட்டி அமர்ந்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தவனின் கண்கள் தற்செயலாக கடிகாரத்தின் மீது படிந்தது. அது காலை முடிந்து பகல் வரப்போகிறது என்று காட்டியது. சற்று நேரமாகவே வயிறு, என்னைக் கவனி என்று கூப்பாடு போடத் தொடங்கி இருந்தது. நேற்று சாயங்காலம் குடித்த காப்பிக்குப் பிறகு கிட்டத்தட்ட பதினெட்டு மணி நேரம் பட்டினி. வெகுநேரமாகவே வயிறு கடாமுடா என்று சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்ச நேரம் சென்றால் பெருங்குடலை சிறுகுடல் தின்று விடும் அபாயமும் இருந்தது.
கீழே இறங்க முயற்சி செய்தவனின் கால்கள் ஒத்துழைக்கவில்லை. மடியில் தலை வைத்து அவனது கைகளை இறுக்கிப் பிடித்து கொண்டு அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் அவள். மரவட்டை போல சுருண்டு படுத்திருந்தவளை ஆழ்ந்து பார்த்தான். முதல் நாள் காலையில் தொடங்கிய அழுகை, இனி அழத் தெம்பில்லை என்றான பின் வந்த அசதியில் விளைந்த உறக்கம்.
பெருமூச்சுடன் நேற்று இரவு நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்தான். காமாட்சி வெளிப்படையாகவே தனது கோபத்தைக் காட்டிவிட்டதில் இவனும் சாப்பிடாமல் எழுந்துவிட, பயங்கர பசியில் இருந்த சம்யுக்தா என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள். இது போன்ற ஒரு நிகழ்வை அவள் இதுவரை பார்த்திராதவள்.
அவர்களின் வீட்டில் அடுத்தவர் பரிமாற சாப்பிடுவது என்ற பழக்கம் இருந்ததே இல்லை. சாப்பாடு டைனிங் டேபிள் மீது தயாராக இருக்கும். அனைவரும் அவரவருக்கு பசிக்கும் போது வந்து தனக்கு வேண்டியதை எடுத்து சாப்பிட்டு சென்று விடுவார். எப்போதேனும் அரிதாக அனைவரும் ஒன்றாக அமரும் போது கூட தன் கையே தனக்கு உதவி என்ற கொள்கை தான் அங்கே. பாரதி, ஒரு போதும் பரிமாறும் வேலையைச் செய்ததில்லை. ஏன் சமையலே கூட பெரும்பாலும் வேலையாள் செய்வது தான்.
பிரபாகரனின் வீட்டுக்கு வந்தது முதல் சுற்றுப் புறத்தில் கவனம் இல்லாமல் இருந்தவள் இப்போது தான் அதைக் கவனிக்க ஆரம்பித்தாள். காலை முதல் தொடர்ந்த காமாட்சியின் மறைமுக பேச்சு இப்போது நேரடியாகவே அவளைத் தாக்கியது.
இத்தனை வருடங்களாக பிரபாகரனை மட்டுமே நினைத்தவள் திருமணம் என்று வரும் போது அதில் அவனைச் சேர்ந்த குடும்பமும் வரும் என்று முதல் முறையாக உணரத் தொடங்கினாள். பசித்தாலும் பரவாயில்லை என்று தானும் எழுந்து கொண்டாள்.
“அட! என்ன ஆத்தா இது? இன்னைக்குத் தான் கல்யாணம் ஆன புதுப் பொண்ணு, இப்படி சாப்பிடாம எழுந்திரிக்கலாமா? உன் புருஷன் சாப்பிட்டா தான் பொண்டாட்டி சாப்பிடணும்னு பழக்கம் எல்லாம் இந்த வீட்டுல கிடையாது. பசிச்சா சாப்பிட வேண்டியது தான். இப்போ எதுக்குடா என்னை முறைக்கிற? ஒரு நாளும் இல்லாத திருநாளா இன்னைக்கு எதுக்கு உன் கோவத்தை சாப்பாட்டுல காட்டுனா அந்தப் புள்ள என்ன நினைக்கும். கல்யாணம் பண்ணிட்டு வந்து முதல் நாளே பட்டினி போடுவியா? ஒழுங்கா மரியாதையா உட்காரு.”
அப்பத்தா நிலைமையைக் கையில் எடுத்தாலும் அவருக்கு வெற்றி கிட்டவில்லை. பிரபாகரன் அசையாது நின்றான். காமாட்சி, பிரபாகரன் எழுந்து நின்ற போதே அந்த இடத்தில் இருந்து சென்று விட்டார். மகனது இந்தக் கோபம் அவருக்குப் புதியது. ஆனால், அவரது கோபமும் மகனுக்குப் புதியது என்பதை அவர் உணர்வாரா?
“நீ உட்காரு தாயி. அவன் கிடக்கான், துப்புக் கெட்ட பய. இந்த சோத்துக்கு எத்தனை பாடுபட்டான்னு மறந்து போயிட்டான் போல. மதியம் நேரத்தோட சாப்பிட்டது, உனக்கு பசிக்கும். அவனுக்கென்ன தடிமாடாட்டம் வளர்ந்திருக்கான்ல, ஒரு வேளை சாப்பிடலேன்னா ஒன்னும் குறைஞ்சிடாது” பல்வேறு சமாதானம் சொல்லி அவர்களை சாப்பிட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டார் அப்பத்தா.
“போதும் அப்பத்தா! உனக்கு வாய் வலிக்கப் போகுது. இந்தப் பிரசங்கத்தை உன் மருமகளுக்கு ஓதினா நல்லா இருக்கும். நேத்து வரைக்கும் ஒரு மாதிரி இருந்துட்டு இன்னைக்கு வேற மாதிரி இருந்தா என்ன அர்த்தம்? எதுன்னாலும் வெளிப்படையா பேசச் சொல்லு. சோறு போடறேன்னு உட்கார வச்சு இலைல வேற எதையோ வச்சது மாதிரி இருக்கு. இதுக்குப் பேரு தான் சந்தோஷமா கல்யாணம் செஞ்சு வைக்கிறதா? பிடிக்கலேன்னா முதல்லயே சொல்லி இருக்கலாமே. இப்படி நம்ப வச்சு…” குரல் தழுதழுக்க பிரபாகரன் கண்களை இறுக்கி மூடி கொண்டான்.
“பிரபா!!!” அப்பத்தாவின் குரலில் அப்பட்டமான அதிர்ச்சி வெளிப்பட்டது. பேரன் இப்படிப் பேசுவான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இன்று நடந்த விஷயங்களும் சாதாரணமாக கடந்து போகக் கூடியவை கிடையாதே. அவன் கோபத்திலும் ஒரு நியாயம் இருக்கிறதே. உணர்ந்து கொண்ட அப்பத்தா, சுதாரித்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.
“உங்க ஆத்தா எப்படிப்பட்டவன்னு உனக்குத் தெரியாதா கண்ணு? மருமக வரும் போது எல்லா மாமியாருக்கும் உண்டானது தான். அதைத் தப்பா எடுத்துக்க கூடாது” சொல்லும் போதே அவரது குரல் உள்ளே சென்றது.
பிரபாகரன் சிரித்தான். “உன் மருமக வரப்போற மருமகள எப்படி எல்லாம் நடத்துவேன்னு சொன்னாங்கன்னு உனக்கே தெரியும் அப்பத்தா. அதனால அவங்களுக்கு வக்காலத்து வாங்குற வேலை வேண்டாம். எது எப்படியோ எங்க கல்யாண நாள ஆயுசுக்கும் மறக்க முடியாம இரண்டு குடும்பமும் செஞ்சிட்டீங்க. நாங்க இல்லாமல் எப்படி வாழப் போறீங்கன்னு நேருக்கு நேரா சவால் விடல. மத்தபடி நடந்துக்குற விதம் அப்படித்தான்னு சொல்லுது. அவங்க ஆசையை ஏன் கெடுக்கணும். கைய கழுவிட்டு நடைய கட்டு சம்யூ! ஒரு வேளை பட்டினி இருந்தா செத்துட மாட்டோம்.” தீர்மானமாகச் சொல்லி விட்டு மனைவியுடன் மாடியேறிவிட்டான்.
அவனுக்குத் தெரியும், மொத்த வீடும் இன்று பட்டினி தான் என்று. ஆனால் சமாதானமாகப் போகக் கூடாது என்ற முடிவுடன் மாடிக் கதவையே இழுத்து மூடிவிட்டான். இல்லையென்றால் அட்லீஸ்ட் மலர்விழியாவது வந்து வெள்ளைக் கொடியை பறக்க விடுவாள்.
சம்யுக்தா ஜன்னல் வழியாக தூரத்தில் வெறித்திருக்க, “வா! நாம மொட்டை மாடியில போய் உட்காருவோம்” என்று அவளை அழைத்துச் சென்றான். கட்டியிருந்த புடவையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் அவனுடன் அமைதியாக நடந்தாள் அவள்.
மொட்டை மாடியில் கிரானைட் கல் கொண்டு செய்யப்பட்ட ஒரு கட்டில் இருந்தது. ஆனால் அதில் இருவர் படுப்பது என்பது சாத்தியமே இல்லை. “அதெல்லாம் படுக்கலாம் வா!” என்றவன் எப்படிப் படுப்பது என்பதைச் செய்தும் காட்டினான்.
“புருஷன் பொண்டாட்டி படுக்க இந்த இடமே அதிகம் யூ நோ. இங்க பாரு, எவ்வளவு இடம் மிச்சம் இருக்கு.”
சம்யுக்தாவிடம் அதற்கு எந்த எதிரொலியும் இல்லை. “ஹேய் சம்யூ! இங்க நானும் நீயும் தான். இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட். தேவையில்லாத தாட்ஸ் எல்லாம் ஓரமா வச்சிட்டு மாமனை கவனி.. வா.. வா.. இல்லேன்னா நாளைக்கு வரலாறு நம்மளை தப்பா பேசும்.”
“பிரபாஆஆஆஆ!” என்று பல்லைக் கடித்தாள் சம்யுக்தா.
“உங்களால எப்படி இப்படி பேச முடியுது? காலைல இருந்து எவ்வளவு பிரச்சினை? நீங்க என்னடான்னா ஃபர்ஸ்ட் நைட்னு எரிச்சல் கிளப்பிட்டு.. என் லைஃப்லயே இது தான் வொர்ஸ்ட் நைட்..” தன் பங்குக்கு அவளும் வார்த்தைகளை ஆசிட் போல அள்ளித் தெளித்தாள்.
“நமக்கு நடந்ததுக்குப் பேரு கல்யாணமான்னே எனக்கு தெரியல! எப்படி குடும்பம் நடத்த இதுன்னு எதுவும் தெரியாது.. இங்கே வந்து முதல் நாளே சூப்பரா ஒரு ரிசப்ஷன். ம்ம்.. லவ் மேரேஜ்னா இப்படித் தான் இருக்குமா? பேரன்ட்ஸ் ஓகே சொல்லித் தான எல்லாம் செஞ்சாங்க. ஆரம்பமே இப்படி இருந்தால் போகப் போக.. நினைக்கவே பயம்மா இருக்கே. நான் எல்லாம் டாடீஸ் லிட்டில் பிரின்ஸஸ்னு நம்பினதெல்லாம் எவ்வளவு பெரிய பொய். எல்லாருக்கும் அவங்கவங்க ஈகோ.. ஏன் எனக்கு அந்த ஈகோ இருக்காதா, உனக்கு இருக்காதா.. இல்லை நமக்கு இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறாங்களா? இவங்களுக்கு முன்னாடி நாம நல்லபடியா வாழ்ந்து காட்டணும். அதுக்கு நமக்குள்ள சில அக்ரீமென்ட் போட்டுக்கணும்.”
சூரிய வம்சம் தேவயானி மாதிரி சிலபல கட்டளைகளைப் பிறப்பித்தவள் அடுத்த கணம் துவண்டு போய் அழ ஆரம்பித்தாள். “இனிமேல் அம்மா அப்பா சஞ்சய் யாரும் என் கூட பேச மாட்டாங்களா? இந்த சரண்யாவ கூட அவங்க மிரட்டி வச்சிருக்காங்க போல. என் கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியாம சொல்லிக்காமலே போயிட்டா. இங்கே அப்பத்தாவும் ஃப்ளவரும் இல்லேன்னா என்ன ஆகுமோ? இந்த அத்தை நேத்து வரைக்கும் கண்ணு கண்ணுன்னு கொஞ்சினாங்க. இன்னைக்கு வேற மாதிரி பிஹேவ் பண்றாங்க. யாராவது வம்பு பேசற ரிலேட்டிவ்ஸ் தான் இப்படி ஃப்ரீ சர்வீஸ் எல்லாம் செஞ்சிட்டு போயிருக்காங்க. போகப் போக அத்தையைக் கவனிக்கலாம்.”
“அடியேய்! அது என்னைப் பெத்த அம்மா. என்னத்த கவனிக்கப் போற?”
“அதெல்லாம் இப்பவே சொல்ல முடியாது. அப்பப்போ தோணறத செஞ்சு விடணும்.”
அவள் பேசப் பேச, “போச்சு டா!” என்று தலையில் கை வைத்துக் கொண்டான் பிரபாகரன்.
“சரி! சரி! நான் சொன்ன கண்டிஷன் எல்லாம் ஞாபகம் இருக்குல்ல. அதுக்கு இந்த கட்டில தோதுப்படாது. எழுந்து உள்ளே போகலாம். நீங்க இங்கேயே படுக்கறதானாலும் எனக்கு நோ அப்ஜக்ஷன்.”
“அடிங்க.. முதல் நாளே வெளியே தள்ளிடுவா போல இருக்கே. பிரபாகரா முழிச்சிக்கோடா!” சத்தமாகச் சொன்னவன் முதல் ஆளாக அறைக்குள் சென்று கட்டிலில் படுத்து விட்டான்.
“டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு படு சம்யூ! அந்த ஷெல்ஃப்ல உனக்கு நைட் டிரஸ் வச்சிருக்கேன் பாரு.”
“அட! சாருக்கு இதெல்லாம் கூட தெரியுமா? நான் குளிச்சிட்டு டிரஸ் மாத்திக்கிறேன்” கேலி பேசியபடி பாத்ரூம் சென்றாள்.
“என் சோப், என் ஷாம்பு, என் டவல் எதையும் தொடக்கூடாது மேடம். எனக்குப் பிடிக்காது” சத்தமாக கத்தினான் பிரபாகரன்.
“நாங்களும் அப்படித்தான். எங்களோடது எல்லாம் ஈவ்னிங்கே எடுத்து பாத்ரூம் உள்ளே வச்சாச்சு” பதிலுக்கு அவளும் கத்தினாள்.
வெளியே வீர வசனம் பேசியவள் உள்ளே அவளை வரவேற்ற கரப்பான்பூச்சியைப் பார்த்து அலறினாள்.
“போட்டு வச்ச காதல் திட்டம் ஓகே கண்மணி!” என்று பாடிக் கொண்டே கதவைத்திறந்த பிரபாகரனுக்கு மெகா சைஸ் பல்ப் ஒன்று பரிசாகக் கிடைத்தது.
கூடவே, அவனைப் போட்டு பொத்தி எடுத்து விட்டாள். “சார் பக்காவா ப்ளான் போட்டீங்க போல.. ஆனால் அது மெகா ப்ளாப் ஆகிடுச்சு பாஸ். கரப்பான் பூச்சி, பல்லி இதுக்கெல்லாம் பயந்தா சர்ஜன் ஆக முடியாதுங்க பாஸ்.. மைன்ட்ல நல்லா ஏத்திக்கோங்க.”
“அடக் கொடுமையே!” என்றானது அவனுக்கு.
குளித்து உடைமாற்றி வந்தவளைக் கண் இமைக்காமல் பார்த்திருந்தான் பிரபாகரன். காத்திருந்து கைபிடித்தவன், இந்த நாளைப்பற்றி பல கனவு கண்டவன். ஆனால்..
அவன் அருகில் வந்து அமர்ந்த சம்யுக்தா அமைதியாக அவன் மடியில் படுத்துக் கொண்டாள். அவளுக்கு ஏற்கனவே நல்ல பசி. குளித்ததால் பசி அதிகமாகித் தலைவலி வரும் போலிருந்தது. அதை முகத்தில் காட்டினால் பிரபாகரன் கண்டுபிடித்து விடுவான். அதனால் அமைதியை ஆயுதமாக்கினாள்.
ஆனால் அவளால் பொங்கி வரும் கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியாமல் போனது. அவனது வேட்டி நனையவும் பதறிப் போனான் பிரபாகரன்.
“சம்யூ! எழுந்திரு. ஈரத்தலையோட படுக்காத. தலைவலி, காய்ச்சல்னு எல்லாம் வந்து சேரும். ஏற்கனவே பட்டினி. அதுக்கே உனக்கு தலைவலி வந்திரும்… ஹேய்.. தலைவலிக்குதா அதான் இப்படி சொல்லாமல் படுத்திட்டியா?”
பதில் சொல்லாமல் அவனை இறுக்கி அணைத்தாள். ஏதாவது கிடைக்குமா என்று அறையை வட்டமிட்டான். அறைக்குள் இருந்த ஃப்ரிட்ஜ் கண்ணில் பட்டது.
“ஒரு நிமிஷம் இரு.. வரேன்..” என்று எழுந்து ஃப்ரிட்ஜைத் திறந்தான். அங்கே இருவருக்கும் பிடித்தமான ஜுஸ் இருந்தது. அவர்களின் கடையில் இருந்து தான் வந்திருக்கிறது. மலர்விழியின் வேலையாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு அவற்றை வெளியே எடுத்தான்.
“சம்யூ! எழுந்துரு! இங்கே பாரு! ஜுஸ் எடு கொண்டாடு!”
ஏனோ பிரபாகரன் அந்த நொடியில் மிகவும் மகிழ்ச்சி
யாக உணர்ந்தான். ஆனால் அந்த ஜுஸைக் கண்ட சம்யுக்தா விக்கி விக்கி அழத் தொடங்கினாள்.

Author: SudhaSri
Article Title: பகலிரவு பல கனவு -24
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.