• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Subha Balaji

Active member
Joined
Jun 30, 2024
Messages
124
சுயம்பு-9

கவுதம் கேட்ட கேள்வியால் சில நிமிடங்கள் திக்பிரம்மையடைந்த மஹாலிங்கம் தன்னை மெதுவாக நிதானித்து கொண்டு "தம்பி... நீங்க சின்னவங்க... உங்களுக்கு எப்டி சொன்னா புரியும்னு தெரியல" என குழப்பமாக சொல்லியவர்..உடனே

"ஏற்கனவே உத்ராவோட அம்மா இல்லனு உங்களுக்கு தெரியும்ல்ல..அவளை பாத்துக்க ஆளில்லாததால தானே ஹாஸ்டல்ல சேத்திருக்கு..அவ தனியா இருக்கறப்ப..நானும் போன் பேசி..அவ என் கூட வருவேன்னு அடம் பிடிச்சா..நான் என்ன பண்ண முடியும் சொல்லுங்க தங்கம்.."

"அவ கிட்ட பேசினாலும் அவ பதில் சொல்ல மாட்டாளே..பா..ஆனா நான் தினமும் ஸ்கூல்ல டீச்சர் கிட்ட, ஹாஸ்டல் வார்டன் கிட்ட பேசிட்டு தான் இருக்கேன்" என விளக்கமாக தன் நிலையை சொன்னார்.

அவர் சொன்னதை பொறுமையாக கேட்ட கவுதம் "சரி..சித்தப்பா..நீங்க சொல்றது எல்லாமே சரி..ஆனா நீங்க உத்ராவை பத்தி ஸ்கூல்ல ஹாஸ்டல்ல கேக்கறது அவளுக்கு தெரியுமா சொல்லுங்க..."

"அவளால பேச தான் முடியாது... ஆனா கேக்க முடியுமே..எங்க அம்மா அப்பா யார் பேசினாலும் நான் உத்ரா கிட்டயும் குடுப்பேன்..அவங்க பேசறதை பாத்து அவ எவ்ளோ சிரிப்பா..தெரியுமா..சித்தப்பா.."

"நீங்க அவ போன்ல பேசுங்க..அவ கேக்கட்டும் சித்தப்பா..ஹாஸ்டல் வார்டன் போனுக்கு வீடியோ கால் பண்ணுங்க ..அவ உங்களையும் பார்ப்பால்ல.."என அவளுக்கு ஆதரவாகவே பேசியதை கேட்டவர் நெகிழ்ந்து போய் அவனை அணைத்து கொண்டு

"ஏற்கனவே நான் தவிச்சுட்டு இருந்ததை புரிஞ்ச அந்த மருதமலை முருகர் உன் உருவத்துல வந்து எனக்கு புத்தி சொல்லி இருக்காரு... தங்கம்..

இனி நீங்க சொல்றபடியே செய்யறேன்" என சொல்லி அவன் சொன்னதற்கு மகிழ்ச்சியாக தன் சம்மதத்தை தெரிவித்தார்.

சிறிது நேரத்தில் கோயமுத்தூர் ரயில்வே ஸ்டேஷன் வர..காரில் இருந்து இறங்கிய கவுதம் குடும்பம் ராம், சத்யா, மஹாலிங்கத்திடமிருந்து விடை பெற்று சென்னைக்கு கிளம்பினர்.

லீவ் முடிந்து ஸ்கூல் வந்த கவுதம் உத்ராவின் மலர்ச்சியான முகத்தை பார்த்து சந்தோஷப்பட்டான். தினமும் உத்ரா அப்பா அவளுடன் பேசுவதை அறிந்து அவனுடைய பூரிப்பு எல்லையை கடந்தது.

ஒவ்வொரு விடுமுறைக்கும் முதலில் ராம் வீடு, பிறகு கவுதம் வீடு என குழந்தைகளோடு பெரியவர்களும் செல்ல...

அவர்களுக்குள் இயல்பான நட்பு உருவானது.

சில வருடங்கள் உருண்டோட...கவுதம் தற்போது பனிரெண்டாவது படிக்கும் வாலிபனாக வளர்ந்திருக்க...

உத்ரா எட்டாவது படிக்கும் பெண்ணாக வளர்ந்திருந்தாள். கவுதமோடு ஏற்பட்ட நட்பாலும் அவனுடைய பழகும் முறையாலும் கவரப்பட்ட உத்ராவின் மாமா பிள்ளைகளும் அவர்களும் அந்த போர்டிங் ஸ்கூலில் சேரப்போவதாக சொல்லி போன வருடம் அங்கு ஒன்பதாவது சேர்ந்து தற்போது அவர்கள் பத்தாவது படிக்கின்றனர்.

அவர்களோடு கவுதமின் நண்பர்கள் சத்யன், கௌசிக், மித்ரா, ரூபாவும் சேர்ந்து கொள்ள..அவர்கள் எல்லாருக்குமே உத்ரா செல்லமாகி போனாள். கடந்த சில வருடங்களாக சுற்றி குழந்தைகள் அவர்களோடு மட்டும் அதிகமாக பேச்சு என்பதால் உத்ரா திக்கி திணறி பேச ஆரம்பித்தவள் தற்போது அவர்களுக்கு சரியாக பேச தொடங்கிவிட்டாள். அவளுக்கு பழையபடி பேச்சு வந்ததால் அவளுடைய சுற்றம் எல்லாருமே மகிழ்ந்து போனார்கள்.

கவுதம், மித்ரா டாக்டருக்கு படிக்க போவதாக சொல்லி அதற்காக நீட் எக்ஸாம் எழுத கடந்த இரு வருடங்களாக ஸ்கூலிலேயே கோச்சிங் போக, ரூபா ஐஐடி கோச்சிங் போக, கௌசிக் என்டிஏ எக்ஸாம் எழுத கோச்சிங் போக சத்யன் தன்னுடைய லட்சியம் ஐபிஎஸ் ஆவது சொல்லி விடவே அவனுக்கு மட்டும் படிப்புகளில் இருந்து சற்று ஓய்வு கிடைத்தது.

சில மாதங்களில் கவுதம் பைனல் எக்ஸாம் எழுதி ஸ்கூலுடனான தன்னுடைய பந்தத்தை நிறைவு செய்தான். அடுத்த வருடத்தில் இருந்து தன்னுடைய பாசமான கவுதம் அண்ணாவை ஸ்கூலில் பார்க்க முடியாது என அழுத உத்ராவை சமாளிக்க முடியாது கவுதம் திணறி போனான்.

அதன் பின் அவளிடம் "அண்ணா தினமும் உன் கிட்ட போன்ல பேசுவேன்..நீ அழாம நல்ல பிள்ளையா..சமத்தா இருந்தா தானே நான் நிம்மதியா அங்க போய் நல்லா படிச்சு டாக்டர் ஆக முடியும்..அண்ணா என்ன பண்ணலாம்னு நீயே சொல்லு மான்குட்டி.." என அவளை செல்லம் கொஞ்ச..

அவனின் கொஞ்சலில் கொஞ்சம் தன்னை சமாளித்து கொண்டு "சரி...நீ சொல்றபடி நான் கேப்பேன்... நானும் உன் காலேஜ்ல உன்னை மாதிரி டாக்டர்க்கு படிக்கணும்..என்னால உன்னை விட்டுட்டு இருக்க முடியாது அண்ணா..."என அழுதபடி சொன்னவளை...அங்கு வந்த ஸ்வேதாவும் அபிமன்யுவும் சமாதானம் செய்தனர்.

தன் பெரியப்பா பிள்ளைகளை கூட வாங்க போங்க என அழைக்கும் உத்ரா கவுதம், ஸ்வேதா, அபிமன்யூவை மட்டும் வா போ என தான் அழைப்பாள். அவர்களும் அதை பெருமையாகவே நினைத்து கொள்வார்கள்.

அன்று ப்ளஸ்டூ ரிசல்ட்... கவுதம் வீட்டில் அவனுடைய அப்பா தவித்து போய் கம்ப்யூட்டரை பார்த்தபடி உட்கார்ந்து இருக்க..அவனோ...அங்கு வந்திருந்த உத்ராவோடு பேசி கொண்டு இருந்தான்.

"அண்ணா...நீ பாஸ் பண்ணா எனக்கு என்ன ட்ரீட் தர போற..சொல்லு"என அவனை நச்சரித்தபடி இருந்தவளை பார்த்து மென்மையாக சிரித்தவன்..நான் என்னோட செல்ல மான்குட்டிக்கு அவளோட பெரியப்பா கிட்ட சொல்லி ஒரு சர்ப்ரைஸ் ஏற்கனவே வாங்கி வெச்சிருக்கேனே.." என மொழிந்ததும்

அவனிடம் நெருங்கி வந்து "அது என்ன சர்ப்ரைஸ் அண்ணா..ப்ளீஸ் சொல்லு அண்ணா..எனக்கு மண்டை உடையும் போலிருக்கே.."என புலம்பியவளை பார்த்து "இரு...இரு..சர்ப்ரைஸ் வரும்"என பதில் சொல்லி விட்டு ரிசல்ட் வெளியே வந்துவிட்டதால் அதை பார்க்க கம்ப்யூட்டர் அருகில் போக..அவன் அதிக மதிப்பெண் வாங்கி பாஸ் என தெரிந்ததும் அவனுடைய அப்பா அவனை ஆனந்தத்தில் அணைத்து முத்தமிட்டார்.

சில நிமிடங்களில் போன் அழைக்க, ராம் என பெயர் வந்ததை பார்த்து உடனே போனை எடுத்த கவுதமிடம் "தம்பி..நீங்க ஸ்கூல் பர்ஸ்டாமே.. சாதிச்சுட்டீங்க.."என உற்சாகமான குரலில் பேச..மகிழ்ச்சியில் பேச வராத கவுதம் "தேங்க்ஸ் மாமா..இருங்க அப்பா கிட்ட குடுக்கறேன்.." என போனை அப்பாவிடம் குடுத்தான்.

அதற்குள் ஸ்கூலில் இருந்து போன் வர..அவர்கள் கவுதம்க்கு தங்களது பாராட்டுகளையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்க..அதன் பின் அவர்கள் வீட்டில் இருந்த போன் வாழ்த்து சொல்பவர்களால் சில மணி நேரம் தொடர்ந்து அடித்து கொண்டே இருந்தது.

அம்மாவோடு உத்ராவையும் தன்னறைக்கு அழைத்து போய் அம்மா கையால் ஒரு பார்சலை உத்ராவிடம் தர சொல்லி... அவர் தந்ததும் அவளும் வேகமாக அதை பிரித்து பார்க்க அதில் ஒரு ட்ராயிங் போர்ட், பேப்பர், நோட், வரைய தேவையான பென்சில்கள், ஸ்கெட்ச் என நிறைந்திருக்க அதை பார்த்ததும் உத்ரா ஆனந்தத்தில் திணறி போனாள்.

"தேங்க்யூ... தேங்க்யூ சோ மச் அண்ணா" என அவனிடம் மகிழ்ச்சியாக சொல்லி விட்டு.. அங்கேயே உட்கார்ந்து வரைய தொடங்கினாள்.

"நல்லா இருக்கு டி..போய் வாங்கிட்டு வந்தது உங்க பெரியப்பா...தேங்க்ஸ் அண்ணனுக்கா.." என சிரித்தபடி கேட்ட புவனா பார்த்த உத்ரா"எனக்கு இது தான் ரொம்ப பிடிக்கும்னு என்னோட அண்ணா சொல்லி தானே பெரியப்பா வாங்கிட்டு வந்தாங்க..

அவங்களா வாங்கினாங்களா..இல்லல..

அப்ப தேங்க்ஸ் எங்க அண்ணாக்கு தானே சொல்லணும்.." என அவரை பதிலுக்கு கேள்வி கேட்டு செல்லமாக முறைக்க..

புவனா உடனே "சரி..மா..சரி..உங்க அண்ணா தான் நல்லவன் போதுமா..இதை எடுத்தா அப்பறம் நீ சாப்பிட வர மாட்டே..அதனால சாப்பிட்டு வந்து வரையலாம்.."என்ற புவனாவின் அழைப்பை துளியும் சட்டை செய்யாமல் அவள் தன் பாட்டுக்கு வரைய ஆரம்பித்துவிட்டாள். சாப்பிட எழுந்து கூட போகவில்லை.

மனம் கேட்காமல் அவளை, கவுதமை, அவள் பெரியப்பாவை என எல்லாரையும் திட்டி கொண்டே ப்ரேக்பாஸ்ட், லஞ்ச் எல்லாம் புவனா எடுத்து வந்து ஊட்டி விட்டு போனார். (தொடரும்).
 

Author: Subha Balaji
Article Title: சுயம்பு 9
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top