Subha Balaji
Active member
- Joined
- Jun 30, 2024
- Messages
- 124
சுயம்பு-6
கோயமுத்தூர் போய் சேர இரவாகி விடவே..காரில் வரும் போதே விளையாடி ஓய்ந்து போன குழந்தைகளுக்கு வீட்டுக்கு போனதுமே அவசர அவசரமாக குளிக்க வைத்து சாப்பிட குடுத்ததும் சாப்பிட்ட உடனே தூங்கி போனார்கள்.
பெரியவர்கள் சாப்பிட்டதும் சற்று ஓய்வாக ஹாலில் இருந்த சோபாக்களில் உட்கார்ந்து கொண்டனர்.
தங்களை பற்றியும் தங்களது வேலையை பற்றியும், கவுதமை பார்த்து கொள்ள ஆளில்லாததால் அவனை ஹாஸ்டலில் கொண்டு விட நேர்ந்தது தங்களுக்கு மிக கஷ்டமாக இருப்பதாக சொல்லி ராஜாராமனும், புவனாவும் வருத்தப்பட்டனர்.
அதை கேட்ட ராம்..."விடுங்க மச்சான்... ஆம்பள புள்ள...தைரியம் வர வேணாமா..இங்க பாருங்க உத்ராவையே நாங்க கொண்டு விடல" என வருத்தமாக சொல்லி...
"எனக்கு ரெண்டு தங்கச்சிங்க...ரெண்டு பேரையும் ஒரே வீட்டுல அண்ணன் தம்பிக்கு தான் எங்கப்பா கட்டி குடுத்தாரு.."
"பெரிய தங்கச்சி..மாலினி ..சின்ன தங்கச்சி..நந்தினி... நந்தினி பொறக்கும் போது எனக்கு பதினாலு வயசு, பெரிய தங்கச்சிக்கு பத்து வயசு...
அவ பொறந்த பின்னால எல்லாரும் சின்ன குழந்தைனு நந்தினி கொஞ்சவே...அதுவரைக்கும் தானே கடைசி...தன்னை தானே எல்லாரும் கொஞ்சிட்டு இருக்காங்க...இப்ப இவ வரவே தான் தன்னை எல்லாம் ஒதுக்கறாங்கனு பொறாமைபட்டு மாலினி நந்தினிய கிள்ளறது, அடிக்கறது எல்லாம் எங்களுக்கு தெரியாம பண்ணுவா..."
"இதை எங்களால கண்டுபிடிக்கவே முடியல...எதுக்கோ குழந்தை அழறானு எங்க வீட்டுல அவளுக்கு அடிக்கடி சுத்தி போடுவாங்க.."
"ஒரு நாள் அப்ப தான் குளிப்பாட்டி, நந்தினியை தொட்டில்ல கொண்டு விட்டுட்டு வந்த எங்க பாட்டி தன்னோட கண்ணாடியை எடுக்க அந்த ரூம்க்கு போக.."
"அங்க மாலினி..நத்தினியை தொட்டில்லேந்து எடுத்து கீழே போட போறதை பாத்து..உடனே கத்தி குழந்தையை அவ கிட்டேந்து வாங்கிட்டு எல்லாரையும் கூப்பிட்டு இதை சொல்ல...
அங்க இருந்த எங்கப்பா..மாலினி பண்ணது தப்பு..இனிமே இது போல செய்ய கூடாதுனு திட்டவே...அவ வரவே தான் என்னை எல்லாம் ஒதுக்கிட்டீங்க...அவ இந்த வீட்டுக்கு வேணாம்..அதனால நான் அப்டி தான் பண்ணுவேன்னு பிடிவாதமா சொன்னா.."
"எங்கப்பா அடிச்சும் அவ பிடிவாதமா இருக்கவே...எங்க பாட்டி பயந்து போய் நந்தினியை தான் வளர்க்கறதா சொல்லி அவங்க வீட்டுக்கு தூக்கிட்டு போய் அவங்க தான் வளர்த்தாங்க..."
அதுக்கு பிறகு வீட்டுல எதாவது விசேஷம்னா தான் நந்தினி இங்க வருவா...விசேஷம் முடிஞ்சதும் பாட்டி கூடவே கிளம்பிடுவா..."
"மாலினிக்கு கல்யாணமும் முடிஞ்சது..அப்பறம் பாட்டி இறந்து போயிடவே தான் நந்தினியை இங்க கூப்பிட்டு வந்தாங்க.."
என்ன சொல்வது என தெரியாது ராஜாராமன் தலையை மட்டும் அசைத்தார்.
"எல்லாம் நல்லா தான் போயிட்டு இருந்தது. நந்தினியை தான் கட்டுவேன்னு ...சின்ன மச்சான் சொல்ற வரைக்கும்.."
"அதுக்கு பெறகு மாலினி பண்ண அமர்க்களம் இருக்கே..சொல்லவே முடியாது...அவ பண்ண எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு சின்ன மச்சான் நந்தினியை கல்யாணம் செஞ்சுக்கிட்டாரு.."
"நந்தினி அங்க போன அன்னிக்குலேந்து..பெரியவ...அவ கிட்ட தினமும் ஒரு சண்டை இழுப்பா..சொந்த தங்கச்சினு கூட நினைக்காம..சோத்துக்கு விதி இல்லாம..சொத்துக்கு பங்குக்கு வந்த ஓரகத்தினு அவளை அசிங்கப்படுத்துவா.." என சொல்லியடி இருந்த ராமை தடுத்த சத்யா..
"நந்தினியை மாதிரி ஒரு பொறுமைசாலியை பாக்கவே முடியாது... அக்கா என்ன சொன்னாலும் எதிர்த்து பேச மாட்டா...அமைதியா போயிடுவா...சில விஷயம் வெளில சொல்ல முடிஞ்சாலும்... பல விஷயங்களை வெளில சொல்ல முடியாம நந்தினி பெரிய அண்ணியால ரொம்ப அவஸ்தைபட்டா.."
அவ குழந்தை உண்டானதும் பெரிய அண்ணி ஆத்திரப்பட்டு அவளை கீழே தள்ளி விட..குழந்தையை கலைக்க பாத்ததால பயந்து போன வீட்டு பெரியவங்க.. அவளை இங்க கொண்டு வந்து விட்டுட்டாங்க.."
"ஐயோ...அப்பறம் என்னாச்சு.." என பயந்து குரல் எழுப்பிய புவனாவை பார்த்த சத்யா..
"குழந்தையை நல்லபடியா பொறக்கற வரைக்கும் காப்பாத்திட்டோம்..உத்ரா பொறந்தா...பெரிய அண்ணி அவளை வந்து பாக்க கூட இல்ல.." என சத்யா வருத்தமாக சொன்னார்.
"ஆமா..ஆமா...நந்தினிக்கு..மச்சானுக்கு எல்லாருக்குமே மாலினி நடந்துக்கறதை பார்த்து ஒரே வருத்தம்..அவ யார் பேச்சையும் கேக்க மாட்டா..யாருக்கும் அடங்க மாட்டா..பெரிய மச்சான் சொன்னாலும் அவரை மதிக்க கூட மாட்டா.."
"அவர் எதாவது கண்டிச்சா..தேவையில்லாம எதையாவது பேசி வீட்டுல சண்டை போடறது, பிரச்சினை பண்றது, தெருவுல போய் சத்தம் போடறதுனு அவ கலாட்டா பண்ணுவா..."
"அவ பண்ற அமர்க்களத்தால குடும்ப மானம் மரியாதை எல்லாம் போயிடுமேனு பயந்து யாரும் அவளை எதிர்த்து ஒண்ணும் சொல்ல மாட்டாங்க.."
இப்படியே ரெண்டு வருஷம் போச்சு..கல்யாணம் பண்ணி மூணு வருஷமா நந்தினியை எங்கேயும் அழைச்சிட்டு போகலையேனு அவ வீட்டுக்காரர் அவளை ரிஷிகேஷ் கூப்பிட்டுக்கிட்டு போக ஏற்பாடுகள் செஞ்சு கிளம்ப போனார்.
"கிளம்பும் போதே பெரியவ..நான் இந்த வீட்டுக்கு வந்த இத்தனை வருஷத்துல இதுவரையில் எங்கயும் போனதில்லை..
நந்தினி மட்டும் தான் வெளியூர் போகணுமா...என் வீட்டுக்காரும் தான் சம்பாதிக்கறார்..அவர் இப்டி ஆடம்பரமாவா இருக்காரு.."
"வர்ற காசை நந்தினி தான் செலவு பண்ணணுமா..அவ புருஷனுக்கு மட்டும் என்ன தனி அந்தஸ்து, அவளுக்கு மட்டும் தனி சலுகைனு அவங்களோட சண்டை பிடிச்சு ஊருக்கு போறவங்களை நிம்மதி இல்லாம தான் அனுப்பி வெச்சா.."
"அதுக்கு ஏத்த மாதிரி ரிஷிகேஷ்ல வந்த வெள்ளத்துல நந்தினி அடிச்சிட்டு போயிட்டா..விஷயம் கேள்விப்பட்டு நான் உடனே வெள்ளத்துல முழுகினா காப்பாத்தற ஆட்கள் ரெண்டு பேரை இங்கேயிருந்து கூப்பிட்டுகிட்டு போயிருந்தேன்..அவங்களும் அங்க இருக்கிற ஆளுங்ளோடு சேந்து தண்ணில இறங்கி தேடினாங்க..ஒரு மாசம் தேடியும் அவ உடம்பு கூட கிடைக்கல.." என ராம் மிகுந்த வேதனையோடு சொல்லி முடித்தார்.
"மன்னிச்சுக்கங்க...நீங்க சொன்னதை கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கே...நீங்க எப்டி இதை தாங்கினீங்க.. அதுலேந்து வெளியே வந்தீங்க" என ராஜாராமன் உண்மையான அக்கறையோடு கேட்க..
"நாங்க ஒரு வழியா ஆறுதலாகிட்டோம்..சின்ன மச்சான் நந்தினி கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணவராச்சே.."
அவர் தான் ஒடைஞ்சு போயிட்டார்.. எந்த ஆறுதலும் யாராலையும் சொல்ல முடியல.."
"போனவ போயிட்டா..உத்ரா சின்ன குழந்தையாச்சே..அத்தை மாமாக்கும் வயசாச்சு..உத்ராவை யார் பாத்துக்கறது..அதால அவரை இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொல்லி பேச்சு வந்தது.."
"அவரு ஒரே தீர்மானமா நந்தினி மட்டும் தான் என் பொண்டாட்டி.. வேற யாருக்கும் என் பொண்டாட்டிங்கற ஸ்தானத்தை தர நான் விரும்பலனு அதை மறுத்திட்டாரு.."
"வீட்டு பெரியவங்க கொஞ்சம் நாளைக்கு உத்ராவை மாலினியை பாத்துக்க சொல்ல..அப்ப ....தான் பெரியவளுக்கு பொறாமையும் ஆத்திரமும் எவ்ளோ இருக்குனு தெரிஞ்சது.."
"யாரோ பெத்த குழந்தையை நான் பாத்துக்க முடியாதுனு தீர்த்து சொல்லிட்டா..யார் சொல்லியும் கேக்கல.."
"அப்பறமா அவளோட பாட்டி தான் பாத்துக்கிட்டாங்க..அத்தையும் தவறிடவே..அதுக்கு பிறகு பெரிய தங்கச்சி பண்ண ஆர்ப்பாட்டத்தால உத்ராவோட பேச்சே நின்னு போயிடவே அதுல பயந்து போன சின்ன மச்சான்..அவளை நல்லபடியா பாத்துக்க ஆளில்லனு ஹாஸ்டல்ல விட்டாச்சு.."
"சின்ன மச்சான் கிட்ட நாங்க பாத்துக்கறேன்னு எவ்வளவோ சொல்லியும் அவர் கேக்கல.."
"உத்ராவால வீணா எனக்கும் பெரிய தங்கச்சிக்கும் ஏதாவது பிரச்சினை வந்துடும்னு மறுத்திட்டாரு.." என அங்கலாய்ப்பாக ராம் சொன்னார்.
சத்யா "நம்ம வீட்டை பாத்தீங்கல்ல..ஒரு கல்யாணம் பண்ற அளவுக்கு பெருசா இருக்கு..இதுல உத்ரா மட்டும் இருக்க இடமில்லாமயா போக போகுது...அந்த குழந்தையை அங்க விட்டுட்டு தினமும் நாங்க வேதனைபடறோம்.." என சோகம் ததும்ப தங்களது குடும்பத்தை பற்றி சொன்னார். (தொடரும்)

Author: Subha Balaji
Article Title: சுயம்பு 6
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.