Subha Balaji
Active member
- Joined
- Jun 30, 2024
- Messages
- 124
சுயம்பு-5
ஆரம்பத்தில் தினமும் அம்மா அப்பாவை பார்க்க முடியாமல் தவித்த கவுதம்க்கு நாளடைவில் மெல்ல சூழ்நிலைகள் பழக்கமானது.
ஏற்கனவே அதிகாலையில் எழும் பழக்கம் இருந்ததால் காலை 5 மணிக்கு எழுவது அவனுக்கு மிக சுலபமாக இருந்தது.
காலையில் எழுந்ததும் எக்ஸர்சைஸ், படிப்பு, குளியல், ப்ரேக்பாஸ்ட், அசெம்ப்ளி, 8 மணிக்கு அவரவர் கிளாஸ்க்கு போவது, 2 மணிக்கு லஞ்ச் முடித்ததும் ஒரு மணிநேரம் தூக்கம்.
ஸ்னாக்ஸாக ஏதாவது சுண்டல் சாப்பிட்டு நாலு மணியில் இருந்து ஆறு மணி வரை விளையாட்டு, அதன் பின் இரண்டு மணி நேரம் படிப்பு, 8 மணிக்கு டின்னர், சரியாக ஒன்பது மணிக்கு தூக்கம் என அவனுக்கு நாள் சரியாக இருந்தது.
காலையில் எழுவதில் இருந்து குளியல், சாப்பாடு வரை தினமும் உத்ராவை பற்றி கம்ப்ளையிண்ட் தான். அவளுக்கு பேச வராததால் அவள் சொல்ல வருவதும் யாருக்கும் புரியாததால் அங்கு தினமும் ஒரு ரகளை தான்.
ஆனால் அவளுடைய க்ளாஸ் டீச்சருக்கு ஏற்கனவே உத்ராவின் நிலை தெரிந்ததால் அவர் அவளிடம் இதமாகவே நடந்து கொள்வார். க்ளாஸில் அவளை தனியாக கவனித்து கொள்வார்.
கவுதமால் அவளுடைய ஹாஸ்டலுக்கு போக முடியாததால் தினமும் லஞ்ச்க்கு போகும் போது உத்ராவை சாப்பிட தேடி அழைத்து போவான். அவளும் மிக உற்சாகமாக அவனுடன் போவாள்.
அன்று லஞ்ச்க்கு அழைத்து போகும் போது கவுதம் "மான்குட்டி...உனக்கு இந்த அண்ணாவை பிடிச்சிருக்கா.." என தினமும் கேட்கும் கேள்வியை கேட்க...அவளும் தினமும் செய்வது போல கண்களை விரித்து சிரித்து தலையாட்டினாள்.
அவளை அழைத்து போய் தன் பக்கத்து டேபிளில் உட்கார வைத்தவன் இலை போட்டதும் பரிமாறுபவரிடம் "அங்கிள்...இவ என்னோட தங்கச்சி..அவளுக்கு சரியா சாப்பிட தெரியாது...அதால சாப்பாடு கொஞ்சமா போடுங்க.." என சொல்லி உத்ரா சாப்பிடும் அளவுக்கு கொஞ்சமா பரிமாற சொல்லி அவளுக்கு ஊட்டி விட..உத்ரா கண்களில் தண்ணீர் தளும்பியது.
"ஸ்ஸ்...மான்குட்டி...என்னாச்சு ..காரமா இருக்கா" என கவுதம் கேட்க.. "இல்லை" என தலையாட்டினாள் உத்ரா.
"அப்ப எதுக்கு அழற..அழ கூடாது..சரியா..அண்ணா உன்னை பத்திரமா பாத்துக்க இருக்கறப்ப..நீ அழலாமா..என் தங்கச்சி அழகா சிரிச்சுக்கிட்டே இருக்கணும்.." என பாசமாக சொல்லி அவளை சாப்பிட வைத்தான்.
இது தான் அவனுடைய தினசரி வேலையானது. அவனும் கூடுமானவரை உத்ராவிடம் "ஸ்கூலில் நல்லா நடந்துக்கணும்...யாரையும் தேவையில்லாம முறைக்க கூடாது..சரியா.."
"நீ என்ன சொல்ல வரேனு அண்ணாக்கு புரியுது...எனக்கு என் தங்கச்சி என்ன சொல்லுவானு தெரியும்...மத்தவங்களுக்கும் அதே மாதிரி புரியுமா..பொறுமையா நீ அவங்களுக்கு புரியற வரைக்கும் வெய்ட் பண்ணணும் கோவப்படகூடாது.." என தினமும் நல்லவிதமாக தனக்கு தெரிந்தவரை அவளுக்கு சொல்லி சொல்லி...தற்போது அவள் யாரிடமும் கோவப்படுவதில்லை.
தான் சொல்ல வருவதை மற்றவர்கள் புரிந்து கொள்கிறார்களா என அவன் சொல்படி கேட்க ஆரம்பிக்க...கவுதம்க்கு பெருமை தாங்கவில்லை.
அவனுடைய அப்பா அம்மா அவனிடம் போனில் பேசும் போது தன் கூடவே உத்ராவை பக்கத்தில் நிற்க வைத்து கொள்வான். அவளிடம் போனை குடுத்து தன் பெற்றோர் அவளிடம் பேசுவதை கேட்க வைப்பான்.
உத்ராவின் மாமா ராம் பேசினாலும் கவுதம் கூடவே இருப்பான். அவரிடம் அவனும் பேசுவான். அவரின் குடும்பத்தினர்க்கும் கவுதம் குடும்பம் போன் மூலமாக நன்றாக அறிமுகமாகி இருந்தது.
உத்ராவுக்கு அவளுடைய அப்பா ஒரே ஒரு போன் கூட செய்யாதது அவனுக்கு மிக ஆச்சர்யமாக இருந்தது. அதை அவனுடைய பெற்றோரிடமும் சொல்லி "பாவம் நம்ம மான்குட்டி" என சொல்லி வருத்தப்படுவான். அவர்களும் இப்டிலாம் நீ சொல்ல கூடாது கவுதம்..அவருக்கு என்ன வேலையோ..பாவம்.." என சொல்லி அவனுக்கு அறிவுரை சொல்வார்கள்.
நாட்கள் வேகமாக ஓடி பத்து நாட்கள் ஸ்கூல் லீவ் வர...கவுதமை ஊருக்கு அழைத்து போக அவனுடைய அப்பாவும் அம்மாவும் வந்திருந்தனர்.
அப்பாவை பார்த்ததும் வேகமாக ஓடி போய் கட்டி கொண்டவன் "அப்பா..எப்டி இருக்கீங்க" என கேட்க.."நல்லா இருக்கேன்..ராஜா..நீ எப்டி இருக்க" என விசாரித்தவர்..
அங்கு நின்று அவர்களையே பார்த்து கொண்டு இருந்த உத்ராவை பார்த்தவர்..
"அடடே...கவுதம் கண்ணா...உன் மான்குட்டி இங்க தான் இருக்கா...இங்க வா.." என அவளையும் கொஞ்சியதும் அவளுக்கு பெருமை முகத்தில் தெரிய அழகாக சிரித்தாள்.
அவளை இழுத்த புவனா "எப்டி இருக்க..மான்குட்டி" என கொஞ்சியபடி கேட்டதும் உத்ரா ஆனந்தமாக தலையாட்டினாள்.
சரி...கண்ணா...நீ உன்னோட திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணிட்டீயா..நான் போய் வீட்டுக்கு கூப்பிட்டுகிட்டு போற லெட்டர் குடுத்துட்டு லெட்ஜர்ல சைன் பண்ணிட்டு வரேன்..வந்ததும் கெளம்பலாமா.." என ராஜாராமன் கேட்க...
"பா...மான்குட்டி பாக்காம என்னால இருக்க முடியாது...ஸ்கூல்ல பர்மிஷன் கேட்டு அவளை நம்ம வீட்டுக்கு கூப்பிட்டுகிட்டு போகலாமா.." கவுதம் ஆசையாக கேட்க..
"அவங்க வீட்டுல அவளை நம்ம கூட அனுப்புவாங்களானு தெரியல கண்ணா" என்றதும்..
"அவ்ளோ தானே... நீங்களும் குடும்பத்தோட எங்க வீட்டுக்கு வந்துடுங்க..மான்குட்டி மட்டும் இல்ல...தம்பி..இன்னும் ரெண்டு வானரமும் இருக்கு...உங்களுக்கு விளையாட தோதா இருக்கும்" என்ற குரலால் திரும்பி பார்த்தவர்கள் அங்கு தன் குடும்பத்தோடு வந்து நின்று கொண்டு இருந்த உத்ராவின் மாமாவை பார்த்து ஸ்னேகமாக சிரித்து பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர்.
தன் மனைவி சத்யாவையும், இரட்டை குழந்தைகளான ஸ்வேதா அபிமன்யுவை அவர்களுக்கு அறிமுகம் செய்தவர் "கிளம்புங்க...தங்கச்சி..மச்சான்...வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம்.."என பாசமாக அழைக்க..
ராஜாராமன் "இல்லைங்க...இந்த தடவை எனக்கு லீவ் இல்ல..நாங்க அடுத்த தடவை நிச்சயம் வரோம்.."என தயக்கமாக சொன்னார்.
அவர் கூட நின்றிருந்த உத்ராவின் மாமி சத்யா.."நல்லா இருக்குங்கண்ணா..
இவ்ளோ தூரம் வந்துட்டு நம்ம வீட்டுக்கு வராம..தங்காம போக கூடாது..எங்க கூட வந்து ரெண்டு நாளாவது நீங்க தங்கிட்டு தான் போகணும்" என பாசமாகவும் உத்தரவாகவும் சொன்னார்.
"இல்ல மா..நீங்க குடும்பமா உங்க வண்டில வந்திருக்கீங்க..இடமிருக்கானு தெரியல...நாங்க வந்தா உங்களுக்கு சங்கடமா இருக்க போகுதோனு யோசனையா இருக்கு...வேற ஒண்ணுமில்ல தயங்கி தன் மனதில் உள்ளதை சொன்ன புவனா பார்த்த சத்யா "நல்லா இருக்குங்க அண்ணி..கார்ல இடமில்லேனா என்ன ஒருத்தர் மடியில ஒருத்தர் உட்கார்ந்து போனா போகுது.." என்றவர் சிரித்து கொண்டே
"ரொம்ப யோசிக்காதீங்க...
அதெல்லாம் பெரிய வண்டி தான் எடுத்துட்டு வந்திருக்கோம்..நீங்க எந்த யோசனையும் இல்லாமல் நம்ம வீட்டுக்கு வரீங்க..ரெண்டு நாளாவது தங்கறீங்க...அவ்ளோ தான் பேச்சு முடிஞ்சது..." என சொல்லி விட்டு
"அங்க பாருங்க..அவங்களை... எப்டி விளையாட ஆரம்பிச்சிட்டாங்க.."என கவுதம், உத்ராவோடு விளையாடி கொண்டு இருந்த தன் குழந்தைகளை காண்பித்தவர்..
அவர்களை கூப்பிட ஓடி வந்தவர்களிடம் ராஜாராமன் குடும்பத்தை தங்களது வீட்டுக்கு அழைக்க சொன்னதும் இரு குழந்தைகளாக சேர்த்து "மாமா...அத்தை நீங்க நம்ம வீட்டுக்கு வாங்க..நாங்க இருக்கோம்..மான்குட்டி இருக்கா.." என அழைத்ததும் உருகி போன புவனா "ரொம்ப சமத்து..."என சொல்லி கொஞ்சினார். கவுதம் அழைத்ததால் ராமின் குழந்தைகளுக்கும் உத்ரா மான்குட்டியாக போனாள்.
"நாங்க கூப்பிட்டா தான் தயங்குனீங்க..இப்ப உங்க மருமக, மருமகன் கூப்பிடறாங்க..இதுக்கு என்ன சொல்றீங்க.."என ராம் சிரித்தபடி கேட்டார்.
தன் மனைவியை பார்க்க..என்ன பண்ணலாம் என கண்களால் கேட்க அவள் தலையசைத்ததும்
"சரி நாங்க வரோம்" என ராஜாராமன் சொன்னதும் குழந்தைகள் வேகமாக ஓடி காரில் ஏறி கொண்டனர். அவர்களின் கார் கோயமுத்தூரை நோக்கி பறந்தது. (தொடரும்)

Author: Subha Balaji
Article Title: சுயம்பு 5
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.