Subha Balaji
Active member
- Joined
- Jun 30, 2024
- Messages
- 124
சுயம்பு-22
"என்ன பேர் சொன்னே...மறுபடியும் சொல்லு" என கேட்ட சத்யாவுக்கு "வந்தனா...அத்தையோட ப்ரெண்ட்டோட பொண்ணு...மீரா அண்ணியோட சித்தி பொண்ணு.."என தெளிவாக சொன்னாள்.
"வந்தனா எதுக்கு இது மாதிரி பண்ணணும்...அவளுக்கு இதால என்ன ஆதாயம்.." என கேட்ட கவுதமிடம்
"என்ன நடந்ததுனு நான் முதல்லேந்து சொன்னா தான் உனக்கு புரியும் அண்ணா..."
"எனக்கும் இவருக்கும் கல்யாணம் பேசும் போதே அவ என்னை தனியா வந்து பாத்தா...பாத்துட்டு அவளும், சத்யாவும் பல வருஷமா லவ் பண்றதாவும், நான் கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு விலகி அவளுக்கு வழிவிட்டு அவங்க கல்யாணத்தை நடத்தி வெக்கணும்னு சொன்னா..."
"ஆனா நான் அவ சொன்னதை நம்பல..வீட்டு பெரியவங்களுக்கு அவமானம் வரகூடாதுனு அதை வெளில சொல்லாம விட்டுட்டேன்.."
"இவ்ளோ ஏன் கல்யாணத்துக்கு முதல் நாள் கூட...சத்திரத்துல என் ரூம்க்கு வந்தவ..என்னை மறுநாள் விடியறத்துக்கு முன்னால யார்க்கும் தெரியாம கிளம்ப சொல்லி...என்னை கூப்பிட்டுகிட்டு போக ஆட்கள் கூட தயார் பண்ணிட்டா..."
"அவ பண்றது எல்லாம் பாத்து பயந்து போய் தான் உனக்கு போன் பண்ணேன்..அண்ணி.." என்றதும்..
"ஓஹோ..அதான் உன் முகம் அன்னிக்கு பேயறைஞ்ச மாதிரி இருந்ததா...நான் கூட உங்க பெரியம்மா தான் ஏதாவது உன்னை அசிங்கப்படுத்தற மாதிரி சொன்னாங்களோ நான் பயந்தேன்" என சொல்ல ஆரம்பித்த ஸ்வேதா அன்றைய நினைவுகளில் மூழ்க ஆரம்பித்தாள்...
திடீர் என தனக்கு உத்ரா போன் செய்யவே வேகமாக அவள் இருந்த மணமகள் அறைக்கு போனவள்.."எதுக்கு..டி..உடனே வர சொன்னே.." என கேட்க..
"இல்ல அண்ணி...தனியா இருக்க..ஏதோ மாதிரி இருக்கு...நீங்க என் கூட இருக்க முடியுமா.." என தயங்கி கேட்டவளை..
"அப்டியே அடிச்சன்னா..ஏன் டி நாளைக்கு கல்யாணம் ஆக போற பொண்ணு..தனியா இருக்க பயமா இருக்குனு சொல்றதை யாராவது கேட்டா கேவலமா சிரிப்பாங்க..கல்யாணத்துக்கு வந்தவங்களை நாம தானே கவனிக்கணும்.."
"தாத்தா மாமானு பெரியவங்க எல்லாம் ஏதோ முக்கியமான விஷயத்தை பேசிட்டு இருக்காங்க..வருண் அத்தானும், மனுவும் தான் அலைஞ்சிக்கிட்டே இருக்காங்க..."
"மீராக்கா, கவுதம் ரெண்டு பேரும் சாப்பாட்டு செக்ஷ்னை கவனிச்சுக்கறாங்க..அவங்க எல்லாம் ஆளுக்கு ஒரு வேலைனு எடுத்து செய்யும் போது நான் உன் கூட இருந்தா நல்லா இருக்குமா...சொல்லு..கொஞ்சம் இரு..உங்கண்ணனும் அவரோட ப்ரெண்ட்ஸையும் சாப்பிட சொல்லிட்டு வரேன்.." என்க
"ப்ளீஸ் அண்ணி நீங்க போகாதீங்க..போன் பண்ணி சொல்லுங்க..."என கெஞ்ச..
"அடியேய்...நானும் இன்னும் சாப்பிடல டி...ப்ளீஸ் சாப்பிட்டு உடனே வந்துடறேன்..
அதுவரைக்கும் அட்ஜெஸ் பண்ணிக்கடி என் செல்லமே...புவி அத்தை சாப்பிட்டுட்டாங்க...உனக்கு துணையா அவங்களை இப்பவே வர சொல்றேன்" என கெஞ்சி...கொஞ்சி அவளை சமாதானம் செய்து விட்டு தன் மாமியாரை வர சொல்லி அவரை அவளுக்கு துணையாக வைத்து விட்டு ஸ்வேதா சாப்பிட சென்றாள்.
தன் பெரியம்மா தன்னருகில் வந்து உட்கார்ந்ததுமே அவரின் மடியில் படுத்து கொண்டவளை பார்த்து சிரித்தவர்.."என்ன மா..என்னாச்சு...ஏன் முகம் ஒரு மாதிரியா இருக்கு..." என கேட்க..
அதுவரை தன்னுடன் இருந்த ஸ்வேதா கேட்காத கேள்வியை தன்னை பார்த்ததுமே அவர் கேட்டதில் தடுமாறிய உத்ரா..
"ம்ம்...ம்ம்ம்..அதெல்லாம் ஒண்ணுமில்ல...பெரியம்மா...நாளை கல்யாணம் முடிஞ்சிட்டா..உங்களை எல்லாம் விட்டுட்டு போக போறேனே..அதான் வருத்தமா இருக்கு.." என சமாளிக்க..
"அட அசடே...உன்னை மான்குட்டினு உங்கண்ணா கூப்பிடறதுல தப்பே இல்ல..இன்னும் குழந்தையாவே இருக்க...பொண்ணுங்களுக்கு கல்யாணம் முடிஞ்சா...புருஷன் வீட்டுக்கு போறது இயல்பா நடக்கறது தானே.."
"இதுக்கு போய் வருத்தப்பட்டு மண்டையை குழப்பிப்பாங்களா..இங்க பாரு உனக்கு சத்யா தெரியாத ஆள் கிடையாது...அவன் கொஞ்சம் கோவக்காரனா இருந்தாலும் குணத்துல தங்கம். அவன் உன்னை நல்லா பாத்துப்பான்..."
"இந்த கல்யாணம் நடக்க அவன் அம்மா கிட்ட ரொம்ப போராடி பாவம்...நொந்து போயிருக்கான்... நீயும் அவன் கிட்ட ஏடாகூடமா பேசி நோகடிக்காதே..."
"மொதல்ல நீ ஒரு டாக்டர்..உனக்கு சூழ்நிலைகள், மனுஷங்களை அனுசரிச்சு போறது எல்லாம் எங்களை மாதிரி சாதாரண ஆளை விட அதிகமா தெரியும்..."
"இது நம்மளோட வாழ்க்கைனு தெம்பா..உற்சாகமா கல்யாண கனவுகளை காணறதை விட்டுட்டு இப்டி எதை எதையோ நினைச்சு வருத்தப்படலாமா..." என ஆறுதல் சொல்லி அவளின் தலையை தடவ...அந்த மென் தடவலில் தன்னை மறந்து தூங்க ஆரம்பித்தாள்.
அதற்குள் பேசியபடி கதவை திறந்த ஸ்வேதாவிடம் "உத்ரா தூங்கிட்டா...மெல்ல பேசு..."என்க
"இல்லத்தை சத்யா அண்ணா வந்திருக்காங்க...அவருக்கு உத்ரா கிட்ட ஏதோ பேசணுமாம்...கொஞ்சம் எழுப்புங்க அத்தை.."என மெல்லிய குரலில் பேச..
அதற்குள் உள்ளே வந்த சத்யா உத்ரா தூங்குவதை பார்த்து.."பரவால்ல மா...எழுப்ப வேணாம்...நாளைக்கு பேசினா போகுது.." என சொல்லி அங்கிருந்து கிளம்பி சென்றான்.
மறுநாள் பொழுது புலர்வதற்குள் உத்ராவை எழுப்பி நலங்கிட..அவள் குளித்து விட்டு வந்ததும் தலையை மீரா உலர்த்தி அழகாக பின்னிவிட்டு மல்லிகை பூவை பின்னலில் சுற்ற..ஸ்வேதா அவளுக்கு மேக்கப் செய்ய ஆரம்பித்தாள்.
எல்லாம் முடிந்ததும் வர்ஷா உத்ராவுக்கு அழகாக புடவையை கட்ட, அவளுடன் அவர்கள் சேர்ந்து ஒரு செல்ஃபி எடுத்து கொண்டு அவளை மணமேடைக்கு அழைத்து போக ஆரம்பித்தார்கள்.
மண மேடைக்கு போகும் போதே அங்கிருந்தவர்கள் அவள் உடுத்தி இருந்த குங்கும நிற பட்டுபுடவை அவளுக்கு மிக பொருத்தமாக இருப்பதை சொல்லி மகிழ, அங்கு பார்த்த சத்யா உத்ராவை பார்த்து மலர்ந்து சிரிக்க...அவளும் சிரித்து மணமேடையை நெருங்கி போய் எல்லாரையும் கை கூப்பி வணங்கி விட்டு அவனருகில் உட்கார்ந்து கொண்டாள்.
கொஞ்ச நேரத்தில் அனைவரும் எதிர்பார்த்த ஆனந்த தருணம் வர..செய்ய வேண்டிய பூஜைகளை ஈடுபாடோடு செய்த சத்யா மிக மகிழ்ச்சியாக உத்ராவின் கழுத்தில் தாலி கட்ட..அதற்கு பின் அவர்களுக்கு கிடைத்த வாழ்த்துக்களால் திணறி தான் போனார்கள்.
மணமேடையில் இருந்து இறங்கி பெரியவர்களை வணங்க வந்தவர்களை எல்லாருமாக ஒன்றாக நின்று வாழ்த்தினார்கள்.
அதன் பின் கோயில் தரிசனம், சத்திரத்துக்கு திரும்பி வந்து சாப்பாடு, வீட்டுக்கு செல்லுதல் என அன்றைய பொழுது போனதே தெரியாமலேயே ஓடி போனது.
மறுநாள் காலையில் ஏதோ எமர்ஜென்சி என உத்ரா ஹாஸ்பிடலுக்கு கிளம்ப...அங்கு மறுவீட்டு அழைக்க வந்திருந்த உத்ராவின் அண்ணன் வருண் முன்னாலேயே சத்யாவின் அம்மா..நேற்று கல்யாணம் முடிந்தது...
இன்னும் மறுவீட்டு விருந்துக்கு கூட போகாமல் அவள் வெளியே போக கூடாது என சண்டை ஆரம்பிக்க...அவரிடம் உத்ரா திரும்பி வந்த பிறகு பேசிக்கோமா என சொன்ன சத்யாவிடம்.."நான் என்ன பண்ணுவேன்..ஒரே நாள்ல என் பையனை மாத்தி அவ பக்கம் திருப்பிட்டாளே..."என இன்னும் ஆக்ரோஷமாக பேச..
என்ன செய்வது என தெரியாமல் பதட்டத்தில் அவரையும், சத்யாவையும், தன் வீட்டினரையும் மாறி மாறி பார்த்தபடி இருந்த உத்ராவை உட்கார சொன்ன சத்யா தன் அம்மாவிடம் போய் மெல்லிய குரலில் அவள் போக வேண்டிய அவசியத்தையும் தான் கூடவே இருந்து அழைத்து வருவதாக சொல்லி போராடி சம்மதிக்க வைத்தான்.
உடனே அவளை அழைத்து கொண்டு போய் ஹாஸ்பிடலில் விட்டவன் அவள் திரும்பி வருவதற்காக காத்திருக்க ஆரம்பித்தான். (தொடரும்)

Author: Subha Balaji
Article Title: சுயம்பு 22
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.