Subha Balaji
Active member
- Joined
- Jun 30, 2024
- Messages
- 124
சுயம்பு-21
சத்யாவையே உற்று பார்த்த கவுதம் "சரி டா...அதுக்கு நீ அவளை அடிச்சா சரியாகிடுமா பாவம் டா..அவ..அடி தாங்க மாட்டா டா"என வேதனையான குரலில் கேட்க..
"மறுபடியும் நீ தேவையில்லாம அதை பேசாத கவுதம்..அவ பண்ண தப்பை கண்டிக்க துப்பில்ல...என்னை கேக்கறீயா..."
"நீங்க வர்றவரைக்கும் உத்ரா கூட துணையா இல்லாததால தான் அவ காணாம போயிட்டானு கோவிச்சிட்டு நீங்க இந்த மூணு வருஷமாக அபிமன்யு கிட்ட பேசாம இருப்பீங்க.."
"ஆனா நான் அவ தப்பு பண்ணதை கண்டிச்சா..நீ என்னை கேட்ப...உங்க வீட்டுல மட்டும் நல்ல நியாயம் டா.."என வேண்டா வெறுப்பாக பேசி விட்டு அவனை முறைத்தான்.
"நான் அவளை என் சொந்த தங்கைனு நெனச்சிருந்தேன்..
எதாவது பிரச்சினைனு தெரிஞ்சா...அவ எங்களை நம்பி இருந்தா நிச்சயம் சொல்லி இருப்பா...நாம பேசி அதை சரி பண்ணி இருக்கலாம்.. "
"ஆனா எங்க கிட்ட கூட சொல்ல முடியாம அவ இருக்கானா..
அவளுக்கு நாங்க அப்டி நம்பிக்கையான ஆளுங்க இல்ல, அவ எங்களை அப்டி நினைக்கல...இல்ல அந்த நம்பிக்கை அவளுக்கு வர்ற அளவுக்கு நாங்க நெருங்கின ஆளுங்க இல்லனு நல்லா புரிய வெச்சிட்டா டா..."
"இவளை விட நீ தான் பாவம் டா..ஆனா இத்தனை வருஷம் இவ மேல வெச்ச பாசத்தால என்னால நீ அவளை திட்டும் போதும், அடிக்கும் போது தாங்கிக்க முடியலடா " என கவுதம் தன்னுடைய மனநிலையை சொன்னான்.
அதுவரை அமைதியாக இருந்த ஸ்வேதா சத்யாவிடம் "இத்தனை வருஷம் உத்ரா காணோம்னு தேடிட்டு இருந்த நீங்க எப்டி இவளை கண்டுபிடிச்சீங்க அண்ணா..."என ஆவலாக கேட்க..
"நான் என்னோட ப்ரெண்ட்ஸ் சர்க்கிள்ல கூட இவ காணாம போனதை இதுவரையில் சொல்லல மா..உங்களை தவிர யாரும் தெரியாது.."
"ஆனா என்னோட டிவிஷன்ல இருக்கிற எஸ்ஐல ஆரம்பிச்சு..கான்ஸ்டபிள் வரைக்கும் எப்டி தான் விஷயம் தெரிஞ்சதோ..யார் சொன்னாங்களோ..தெரியல..
"நான் மொதல்லேந்தே எல்லாரையும் என் கிட்ட தேவையில்லாம பேச விடாம தள்ளி நிறுத்தி வெச்சிருந்ததால யாரும் தைரியமா வந்து என் கிட்ட கேக்கல..."
"என் முதுகுக்கு பின்னால என்னை பற்றி வந்த விமர்சனங்களை எல்லாம் வெளில சொல்ல முடியாத அளவுக்கு ஆபாசமா இருந்தது.."
"நானும் கண்டுக்காம தான் இருந்தேன்..ஒரு நாள் ஸ்டேஷன்ல ஏதோ தகராறுல ஒரு புது எஸ்ஐயை அடிக்க போயிட்டேன்...நல்ல வேளை அந்த பையனுக்கு என்னை பத்தி நல்லா தெரிஞ்சதால..அவன் பேசாம விட்டுட்டான்..."
"வீட்டுல அதை விட மோசம்...டிவில போடற எல்லா சீரியலையும் பாத்துட்டு எங்கம்மா பண்ண ஆர்ப்பாட்டம் இருக்கே..இவ என்னை விட்டு யார் கூடவோ ஓடி தான் போயிருப்பானு பல தடவை தீர்மானமா சொல்லிட்டாங்க...
"அவங்களை உத்ரா பத்தி தப்பா பேசாதீங்க...எனக்கு அவளை பத்தி நல்லா தெரியும்... அவ தப்பானவ இல்லனு சொன்னாலும் கேக்காம தொடர்ந்து அவங்க உத்ரா மேல ஆரம்பத்துலேந்து சேத்து வச்ச வன்மத்தை எல்லாம் வார்த்தைகளா என் கிட்ட கொட்டி என்னை புழுவா துடிக்க வெச்சாங்க..."
"என்னால அவங்களை அடக்கவே முடியல.. எங்கப்பாவே அவங்களை அடக்க முடியாம இருக்கறப்ப..நான் எப்டி அதை செய்ய முடியும்..."
"கடைசில என்னையே வெறுத்துட்டு...எல்லாத்துலேந்தும் தப்பிக்கறதா நெனச்சு ஒரு மாசம் மெடிக்கல் லீவ் போட்டுட்டு...கூட இருக்கிற யாரையும் பாக்க பிடிக்காம, என்னோட ஐபிஎஸ் பேட்ச்மேட் ஒருத்தன் லூதியானால இருக்கான்... அவன் வீட்டுக்கு போய் அங்க ஒரு வாரம் இருந்தேன்..."
"அப்ப தான் அவனோட வீட்டுல ரெண்டு வருஷத்துக்கு முன்னால வந்த ஒரு பழைய பேப்பர் கட்டிங் தற்செயலா என் ப்ரெண்ட் காண்பிச்சான்..."
அதை காமிச்சவன்..என்னோட பேர் மாதிரி இந்த லேடிக்கு எப்டி சர்நேம் இருக்குனு சொல்லி ஆச்சர்யப்படவே வேகமாக வாங்கி நான் பார்த்தேன். அதுல இந்தம்மா ஏதோ ஆக்கிடெண்ட்ல இறந்தவங்களோட குழந்தையை தத்து எடுத்திருக்கானு எழுதியிருந்தது.."
"சோஷியல் மீடியா, போன் நம்பர்னு எல்லாத்தையும் நம்ம கிட்டேயிருந்து மறைச்சிட்டு இவ தனியா ஒளிஞ்சிக்கிட்டு இருந்தாலும் இவ பண்ண இந்த சமூக சேவையால தான் என்னால இவ இருக்கிற இடத்தை கண்டுபிடிக்க தெரிஞ்சது"
"இவளோட பேர், ஊர் எல்லாம் தெளிவா இருக்கவே..அடுத்தது அவன் மூலமாகவே எல்லா ஏற்பாடும் செஞ்சு இங்க லோக்கல்ல இருக்கிற ஐஜிக்கிட்ட பேசி, அப்பறம் நாங்க வந்தோம்.."
"லேண்ட் ஸ்லைட்ல எனக்கு லேசா தான் அடிபட்டது..என்னை இந்த ஹாஸ்பிடல்ல தான் சேத்திருந்தாங்க.. "
"நான் அபிமன்யுவை தேடிட்டு இருக்கும் போது தான் உத்ராவை பார்த்து அவளை பத்தி விசாரிச்சுட்டு இங்க வந்தேன்.." என பேசி முடித்து தன்னை நிதானப்படுத்தி கொண்டான்.
அவன் சொன்ன அனைத்தையும் கேட்ட கவுதம் அவனை நெருங்கி அணைத்து கொண்டான் "ஸாரி...டா..உன்னை பத்தி தெரிஞ்சுக்கிட்டே உன்னை தப்பா நெனச்சுட்டேன்..எல்லாம் உன் பொண்டாட்டி பண்ண வேலை.."
"நீ தான் அவளை கொடுமை படுத்தி அனுப்பிட்டியோனு நெனச்சு நான் போலீஸ்ல கம்ப்ளையிண்ட் குடுக்க போயிட்டேன்.."
"நல்ல வேளை...ஸ்வேதா தான் நீ அப்படிப்பட்ட ஆள் இல்ல...கொஞ்சம் பொறுமையா இருங்கனு தடுத்தா.."என்றதும்
அதை கேட்டதும் சத்யாவின் கண்களில் இருந்து புறப்பட்ட இரண்டு சொட்டு கண்ணீர் கவுதமின் தோளை நனைத்தது.
"கடைசில...பாத்தியா..ஸ்வேதா சொல்லி தான் என்னை நம்புற மாதிரி இருக்கு...இங்க வலிக்குது டா.."
"எனக்கு இவ பண்ணதை அதிகமா விட வலிக்குதுடா..என தன் நெஞ்சை காட்டினான்.
"பாத்தியா...உன்னால எங்க எல்லாருக்கும் எவ்ளோ வேதனைனு பாத்தியா...உன் புருஷனை வாழ்க்கையில இனி மேல எந்திரிக்கவே முடியாதபடி அசிங்கப்படுத்திட்ட..."
"தாத்தா, மாமா, அப்பானு எல்லாரையும் அவமானப்படுத்திட்டு..நீ இங்க சுகமா வந்து இருக்க..."
"போதாததுக்கு நீ குழந்தையை யாருக்கும் தெரியாம..அண்ணா இருக்கும் போதே...சிங்கிள் பேரண்ட்னு எழுதி குடுத்து தத்தும் எடுத்திருக்க..."
"உனக்கு யாரும் இல்லேனு நீயா நெனச்சுக்கிட்டு...இப்டி திமிரா நடக்கறது கொஞ்சமும் சரியில்ல.." என கோபமாக பேசிய ஸ்வேதாவுக்கு எந்த பதிலும் சொல்லாமல் உத்ரா அமைதியாக நின்று கொண்டு இருந்தாள்.
"ஆளாளுக்கு இவ்ளோ கேக்கறோம்... உனக்கு எங்களை பார்த்தா எப்டி தெரியுது...நாங்கலாம் என்ன வேலை வெட்டி இல்லாம தெருவுல திரியிறவங்கனு நெனச்சியா..."
"நல்ல வேளை..சத்யா அண்ணாவா இருக்கவே நீ தப்பிச்ச...அதே இடத்துல நான் இருந்திருந்தா...
உன்னை வெட்டி போட்டுட்டு ஜெயிலுக்கு போயிருப்பேன்.." என தனக்கு முடியாத நிலையிலும் அபிமன்யு விரக்தியாக பேச..
"ஏன்டா இன்னும் காத்துட்டு இருக்க...வெட்டி போட வேண்டியது தானே.. எனக்கு சாவாவது நிம்மதியா இருக்கும்..." என வெடித்து அழுதவள்...
"இன்னிக்கு ஆளாளுக்கு..வந்து என்னை கேள்வி கேட்கறீங்களே...அன்னிக்கு எனக்கு யாருடா வந்தீங்க...எனக்குனு பேச யாரும் இல்லாம...நான் தனியா நின்னேனே டா.." என சொல்லி உத்ரா அழ...
"நீ பேசற எதுவும் புரியல..எதுவா இருந்தாலும் தெளிவா பேசினா தான் எங்களுக்கு புரியும்.." என்ற அபிமன்யுவின் இறுகிய குரலில் இன்னும் உடைந்தவள்...
"நானும் அத்தையும் சண்டை போட்டது தானே உங்களுக்கு தெரியும்...அதுக்கு காரணம் யார் தெரியுமா..யார் என்னை அங்கே இருக்க விடாம..உங்க கிட்டே இருந்து மறைஞ்சிருக்க வெச்சதுனு தெரியுமா..."என கேட்டாள்
"எல்லாருமே ஒரே குரலாக.."யாரு...யார் அது..சொல்லு.." என வேகமாக கேட்க..
அவர்களை ஒரு வேதனை பார்வை பார்த்தவள் "வந்தனா" என்றாள்(தொடரும்)

Author: Subha Balaji
Article Title: சுயம்பு 21
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.