• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Subha Balaji

Active member
Joined
Jun 30, 2024
Messages
124
சுயம்பு-20

அபிமன்யு சொன்ன விவரங்களை கேட்டு அதிர்ந்த கவுதமும் ஸ்வேதாவும் அவனையே பார்க்க ஆரம்பித்தார்கள்.

அதுக்கு பிறகு நான் பண்ண வேண்டிய ரெண்டு முக்கியமான சர்ஜரிகளை செஞ்சு..பேஷண்ட்ஸ் நல்லா ரிகவர் ஆன பிறகு தான் ஷில்லாங்க் வர ப்ளான் பண்ணேன்.."

"அப்ப தான் சத்யா அண்ணாக்கும் உத்ரா இங்க இருக்கறது தெரிஞ்சிருக்கு..

அவர் எனக்கு போன் பண்ணி அவர் கூட ஷில்லாங்க் வர முடியுமானு கேட்க...எனக்கு உத்ராவை பார்த்து நல்லா நாக்கை பிடிங்கிக்கற மாதிரி கேள்வி கேக்கணும்னு இருக்கவே...நாங்க ரெண்டு பேரும் வந்தோம்..."

"வந்த இடத்துல திடீர்னு வந்த லேண்ட் ஸ்லைட்ல எங்க கார் மாட்டி, எனக்கு அடிபட்டு இங்க வந்து சேர்ந்தேன்...சத்யா அண்ணா என்ன ஆனார்னே தெரியல..."என வேதனையாக சொல்லி கொண்டு கண்களை மூடி கொள்ள....

அங்கிருப்பவர்களை கூட பார்க்காமல் வேகமாக நர்ஸ் கூட வந்த உத்ரா அபிமன்யுவை பரிசோதித்து அவன் உடல்நிலையை எழுதி கொள்ள சொன்னாள்.

அதுவரையில் அமைதியாக இருந்த கவுதம்.."இப்ப மனுவுக்கு எப்டி இருக்கு டாக்டர்.." என கேட்க..

வழக்கமாக பதில் சொல்வது போல தன்னை மறந்து "இன்னும் ரெண்டு வாரத்துல எல்லாம் சரியாகிடும் சார்....அடுத்த வாரத்துலேந்து அவரோட கைக்கு பிசியோ ஆரம்பிச்சுடலாம்..."என பதில் சொன்னவள்..

திடீர் என எதையோ உணர்ந்தது போல ஏற்கனவே கேட்ட குரல் போல இருக்கவே..திரும்பி பார்க்க...அங்கு அமைதியாக கைகளை கட்டி கொண்டு நின்று இருந்த கவுதம், ஸ்வேதாவை பார்த்ததும் தீயை மிதித்தது போல அதிர்ந்தாள்.

வார்த்தையே வராமல் அவர்களையே பார்த்தவளிடம்.."என்ன டாக்டர்... பேச மாட்டீங்களா..இல்ல பேசறது மறந்துடுச்சா.." என நக்கலாக கவுதம் கேட்க..

அவர்களையே ஆச்சரியம் பொங்க பார்த்த நர்ஸிடம் கவுதம் தன்னுடைய அண்ணா, அவர்களிடம் தான் பேச வேண்டும் என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தாள்.

"என்ன டாக்டர் மேடம்...பதில் தெரியலையா...இல்ல பதில் இல்லையா.."என ஸ்வேதாவும் நக்கலாக கேட்க..

"அவ பதில் சொல்ல மாட்டா கா..அவளுக்கு எப்பவும் நாமனாலே அலட்சியம் தான்.." என அபிமன்யுவும் தன் பங்குக்கு அவளை வார்த்தைகளால் ஊசி போல குத்த...

"ப்ளீஸ்... அண்ணா...அண்ணி...மனு..

எனக்கு நீங்க எல்லாம் இல்லாம வாழ்க்கை ஏது...தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க.."என அழுதபடி சொல்ல...

"என்னது மன்னிக்கறதா...எப்டி மன்னிக்கணும்...ஏன் உன்னை மன்னிக்கணும்னு சொல்லு..இத்தனை நாளா நீ எங்க இருக்கனு கூட தெரியாம ஊர் ஊரா நாய் மாதிரி சோறு தண்ணி இல்லாம நாங்க அலைஞ்சோமே...அதுக்கு என்ன சொல்ல போற.." என அபிமன்யுவின் கோப குரலுக்கு..

"நான் பண்ணது தப்பு தான் மனு...அந்த மாதிரி நான் எங்க இருக்கேன்னு தெரியாம இருந்ததுக்கு ஒரு காரணம் இருக்கு..." என சொல்லி.."சரி...எப்டி என்னை கண்டுபிடிச்சீங்க.." என கேட்க..

"நீ பண்ணது பெரிய தப்பு...அதுக்கு மன்னிப்பே கிடையாது...உன்னாலயும், நீ சொல்லாம ஊரை விட்டு வந்ததாலயும் ஊர்ல எங்களுக்கு எவ்ளோ அவமானம் கிடைச்சதுனு உனக்கு தெரியுமா..."

"உங்கப்பா...தாத்தா..எங்கப்பானு நம்ம குடும்பமே..ஊரே உன்னை பத்தி ஏன் உங்க வீட்டு பொண்ணு காணாம போயிட்டா... யார் கூடவாவது ஓடி போயிட்டாளானு வித விதமா கேள்வி கேட்க...பதில் சொல்ல முடியாம எவ்ளோ அசிங்கப்பட்டாங்க தெரியுமா..."

"இவ நம்மளை பாத்ததும் மன்னிச்சுடுனு ஒரே வார்த்தைல சொல்வாளாம்...உடனே நாம நடந்ததை மறந்துட்டு இவ சொல்றதை தட்டாம கேட்டுடணுமாம்.."என ஆக்ரோஷமாக ஸ்வேதா பேச...

"எல்லாம் என்னோட தப்பு தான் அண்ணி.."என கதறியவளை அவர்கள் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் பார்த்தார்கள்.

"உன்னால நம்ம குடும்பம் கஷ்டப்படறது போதாதா...எதுக்கு உனக்கு கல்யாணம் பண்ணி வெக்கணும்..உன்னால சத்யா அண்ணாவும் கஷ்டப்படணும்...சொல்லு.." என ஸ்வேதா கோபமாக நிறுத்தாமல் கேட்க..

"நீ வந்த பிறகு என்ன என்னல்லாம் நடந்ததுனு உனக்கு தெரியுமா...சத்யா அண்ணாவோட அம்மா நம்ம வீட்டுக்கு வந்து எவ்ளோ கேவலமா பேசினாங்க தெரியுமா..."

"சத்யா அண்ணா..இந்த மூணு வருஷமா பைத்தியக்காரன் போல உன்னை பத்தி எந்த தகவலும் தெரியாம..தேடி அலைஞ்சிட்டு இருக்காரே..

நீ ஏன் வீட்டை விட்டு போனேனு கூட அவருக்கு தெரியாத அளவுக்கு என்ன ரகசியம் இருக்கு..அண்ணா வந்து கேட்டா என்ன பதில் சொல்ல போற.." என விடாமல் அபிமன்யு கேட்க..

"நான் அங்கே இருந்து கிளம்பும் போது என் வாழ்க்கையை தேடி போறேன்...என்னை தேட வேணாம்னு லெட்டர் எழுதி வெச்சுட்டு...உங்கண்ணா கஷ்டப்பட கூடாதுனு தான் நான் அங்கேயிருந்து வந்தேன்.." என சொன்னவளை ஸ்வேதா விசித்திரமாக பார்த்தாள்.

அப்போது அங்கு வேகமாக உள்ளே வந்தவன் பளார் என அறைய உத்ரா ஓரமாக போய் விழுந்தாள்.

அதிர்ந்து பார்க்க...அங்கு நரசிம்மமாய் நின்றிருந்த கணவனை பயந்தபடி பார்த்தாள்.

"டேய்...சத்யா...கோவம் வேணாம் டா..ப்ளீஸ் என் தங்கையை அடிக்காத டா...பாவம் டா...அவளுக்கு என்ன பிரச்சனையோ...நிதானமா பேசலாம் டா.."

"நீ போலீஸ்காரனா....எப்ப பாரு ஏ சி பியாவே இரு டா..அதுக்காக என் தங்கச்சியை அக்யூஸ்ட்டை டீல் பண்ற மாதிரி நீ டீல் பண்றது எனக்கு கஷ்டமா இருக்கு டா..."

"இது ஹாஸ்பிடல்... ப்ப்ளிக் ப்ளேஸ்ல நியூசென்ஸ் க்ரியேட் பண்ண வேணாம் டா..எதுவா இருந்தாலும் வீட்டுல வெச்சு பேசிக்கலாம்...கொஞ்சம் பொறுமையா இரு டா.." என வேகமாக அவனருகில் வந்த கவுதம் அவனை சமாதானம் செய்ய முயல

"நீ மூடறியா...தயவுசெய்து என் பக்கத்துலேந்து தள்ளி போயிடு கவுதம்..நான் இவ மேல கொலை வெறில இருக்கேன்.."

"அதிகபடியா நீங்க எல்லாம் குடுத்த செல்லத்தால தான் இவ இப்டி இருக்கா...அன்னிக்கே கண்டிச்சிருந்தா...ஒழுங்கா இருந்திருப்பா..." என கத்தியவன்..

"உங்களுக்கெல்லாம் என்னடா..சொல்லிட்டு போயிடுவீங்க... என் நிலைமைல இருந்து பாத்தா தான் நான் என்ன அனுபவிச்சேன்னு உங்களுக்கு தெரியும்..."

"எங்க கல்யாணத்துக்கு எங்கம்மாவை சம்மதிக்க வெக்க எவ்ளோ கஷ்டப்பட்டோம்னு உனக்கு தெரியும்ல்ல."

"நான் இவளை லவ் பண்றதா எவ்ளோ பேச்சு பேசினாங்க...அதெல்லாம் இல்ல...அவங்களா வந்து சம்பந்தம் பேசினாங்கனு அவளுக்கு புரிய வெக்க எவ்ளோ போராடினோம்..."

"கல்யாணம் பண்ண பின்னாலயும் இவளுக்கும் அவங்களுக்கும் தினமும் ஒரு சண்டை தான். நானும் எங்கப்பாவும் இவங்க ரெண்டு பேரையும் சமாதானம் செஞ்சு டயர்டாகிட்டோம்..."

"அப்பறம் இவங்க கொஞ்சம் அமைதியா இருக்கவே எல்லா சரியாகிடுச்சு னு சந்தோஷப்பட்டேனே டா..

நான் வர ஒரு வாரம் ஆகும்..அதுவரை எங்கம்மா எதுவும் சண்டை போட்டாலும் நீ கொஞ்சம் பொறுமையா இருனு சொல்லிட்டு தான் நான் எங்களோட சீக்ரட் மீட்டிங்க்கு போனேன்.."

"திரும்பி வந்து பாத்தா இவளை காணோம்...எந்த தகவலும் தெரியாம...இவ எங்க போனாளோ...யாராவது கடத்திட்டாங்களா..இல்ல எதாவது ஆக்ஸிடெண்ட் ஆகி இருக்குமோனு பயந்து போய் நான் நாய் மாதிரி அலைஞ்சேன் தெரியுமா..."

"இந்த மூணு வருஷமா எந்த கொலை கேஸ், ஆக்ஸிடெண்ட் கேஸ், வேற எதுக்காவது ஹாஸ்பிடல்களுக்கு போணும்னாலும் நான் அங்க இருக்கறது இவளா இருக்க கூடாது...இவளுக்கு எந்த ஆபத்தும் இல்லாம காப்பாத்துனு கடவுளை வேண்டிக்கிட்டு எவ்ளோ பதட்டமா இருப்பேன்னு உனக்கு தெரியுமா டா.."

"என்ன சொன்னே..நான் அக்யூஸ்ட்டை டீல் பண்ற மாதிரி இவளை டீல் பண்றேனா...

நிஜமா நான் அவங்களை டீல் பண்ற மாதிரி இவ கிட்ட நடந்தா...இவ செத்தே போயிடுவா டா..."

"ஒரு அடி அடிச்சத்துக்கே..ஓரமா போய் விழுந்துட்டா..இவ நமக்கெல்லாம் தெரியாம பண்ண வேலைக்கு நீ தேவையில்லாம இவளை சப்போர்ட் பண்ணாத கவுதம்.." என கோபமாக கத்தினான். (தொடரும்)
 

Author: Subha Balaji
Article Title: சுயம்பு 20
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top