Subha Balaji
Active member
- Joined
- Jun 30, 2024
- Messages
- 124
சுயம்பு-16
தன் பிள்ளைகளுக்கு கல்யாணம் நடப்பதாக கேள்விப்பட்டு தான் நிச்சயம் செய்த பெண்ணின் குடும்பத்தோடு அங்கு வந்த மாலினி பார்த்தது அவர்களின் திருமண கோலமே.
அதிர்ந்து போனவள் அங்கு தன் குடும்பமே இருப்பதை பார்த்து வேகமாக போனவள் ஆத்திரத்தோடு மாமனார் பார்த்து "நீங்க பண்ணது நியாயமா.. மாமா..அவங்களோட அம்மா நான் இன்னும் உயிரோட தான் இருக்கேன்..எனக்கு ஒரு வார்த்தை சொல்லணும்னு வீட்டுக்கு பெரியவர் உங்களுக்கு தோணலையா.."
"எதுக்கு....இல்ல..எதுக்கு எங்கப்பா உன் கிட்ட சொல்லணும்..நீ எங்களுக்கு தெரியாம பிள்ளைகளுக்கு கல்யாணம் நிச்சயமே செய்வ...ஆனா எங்களுக்கு தெரியாம பாத்துப்ப..ஏன்னு கேட்டா...அவங்களுக்கு நிச்சயம் அன்னிக்கு சொன்னா போதும்னு அலட்சியப்படுத்துவ..."
"எங்கப்பா...எந்தம்பிய தான் உனக்கு கண்ல தெரியாது...உனக்கு தாலி கட்டின புருஷன் நான் இன்னும் உயிரோட தானே இருக்கேன்...ஏன் என் கிட்ட உனக்கு சொல்லணும்னு தோணல.."என அவள் கணவன் பதில் கேள்வி கேட்டு மடக்க..
அதில் இன்னும் ஆத்திரமானவள்.."நீங்க எல்லாம் கல்யாணத்தை கலச்சிடுவீங்கனு பயந்து தான் சொல்லல.."என திமிராக பதில் சொன்ன மாலினியை பார்த்தவர்
"பாத்தியா...இவ்ளோ நடந்தும்...உன் திமிர் குறையுதா..ச்சீ..நீ எல்லாம் ஒரு பொம்பளையா "என சுந்தரலிங்கம் அவளை போலவே அலட்சியமாக பேசினார்..
அதில் இன்னும் ஆத்திரமானவள்
"நான் இந்த கல்யாணத்தை ஒத்துக்க மாட்டேன்..என் குடும்ப மானத்தை வாங்கி என்னை சம்பந்தம் பேசினவங்க கிட்ட அவமானப்படுத்தின இவங்களை நான் வாழ்க்கையில மன்னிக்க மாட்டேன்...என் வீட்டுக்குள்ளயும் சேக்க மாட்டேன்..." என உறுமியவள்..
"ஏன் செல்வி..உனக்கும் என் கிட்ட சொல்லணும்னு தோணலையா...அவ்ளோ கர்வம் வந்துடுச்சா..யாராவது இந்த கல்யாணம் நடந்ததை பத்தி கேட்டா அவங்க ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கனு சொல்லி அவமானப்படுத்துவேன்.." என கோபத்தோடு சொல்லி முடித்தாள்.
அதை கேட்ட செல்வி..இல்ல அண்ணி...அப்டி இல்ல...உங்க கிட்ட சொல்ல கூடாதுனு இல்ல...என பேசுவதற்குள்.. வருண்.."மா..கொஞ்சம் பேசறதை நிறுத்திட்டு..சுத்தி பாரு..எல்லாரும் நம்மளை தான் வேடிக்கை பாக்கறாங்க.."
"உனக்கு பேசணும்னு வீட்டுல வந்து பேசு..."என்றதும்..
"பாக்கட்டும் டா...நல்லா பாக்கட்டும்...நீங்க எனக்கு பண்ண துரோகத்தை அவங்க பாக்கட்டும்..."
"இனி..வாழ்நாள்ல...நீ, நீ தாலி கட்டினவளும்...உன் தங்கச்சியும் அவளுக்கு தாலி கட்டினவனுக்கும் என் வீட்டுல எடமே இல்லை.."என அவனை கத்தரித்தது போல பேச..
"யார் வீடு...யார் உரிமை கொண்டாடறதுனு ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு...இதுவரைக்கும் இந்த பசங்களுக்காக தான் உன் ஆட்டத்தை எல்லாம் நான் பொறுத்துட்டு இருந்தேன்.."
"இவங்களுக்கு நல்லபடியா கல்யாணம் முடிஞ்சிருச்சு...இனி உன்னை பொறுத்துட்டு போக வேண்டிய அவசியம் எனக்கு இல்ல.."
"என் பிள்ளைங்க எங்க வீட்டுக்கு வருவாங்க..அங்க தான் இருப்பாங்க..உனக்கு வேணாம்னா நீ வீட்டை விட்டு வெளியே போயிடு.." என உக்கிரமாக சுந்தரலிங்கம் அவளுக்கு பதில் சொன்னார்..
"நீங்க சொன்ன பிறகு நான் ஏன் அங்க வரப்போறேன்...நான் தோட்டத்து வீட்டுல தான் இனி இருக்க போறேன்...என் சம்பந்தப்பட்ட சாமான்களை இன்னிக்குள்ள வேலைக்காரங்க கிட்ட குடுத்து விடுங்க.." என சொல்லி அவர்கள் எல்லாரையும் அலட்சியமாக பார்த்தவள் மாலினி மீராவை ஒட்டி நின்ற உத்ராவை மட்டும் கண்களில் குரோதத்தோடு பார்த்து விட்டு அங்கிருந்து கிளம்பினாள்...
அவளின் நடவடிக்கைகளை பார்த்து பயந்து போன மீராவிடம் "நீ ஒண்ணும் பயப்படாத மா..அவளுக்கு இது அதிர்ச்சியா இருக்கும்... அவ சொல்றதை தவிர வீட்டுல எது நடந்தாலும் கலவரம் வெடிக்கும்... அதுக்கு பயந்து என் பையன் பொறுத்துட்டு போயிடுவான்.."
"எத்தனை வருஷம் தான் பொறுப்பான்...சொல்லு...அவன் பொறுமை எல்லை மீறி, இத்தனை வருஷமா அவளை அனுசரிச்சுட்டு போன என் பையனுக்கே கோவம் வந்து அவளை விரட்டிட்டான்..
அவளோட சுயரூபம் தெரிஞ்சிட்டதால இனி அவ ஜம்பம் நம்ம யார் கிட்டயும் சாயாது.." என அம்பலவாணன் அவர்களுக்கு ஆறுதலாக பேசினார்.
"போனது போகட்டும்...திருஷ்டி கழிஞ்சதுனு நெனச்சுக்கங்க..
வாங்க நாம போய் சாமி கும்பிட்டு வீட்டுக்கு போகலாம்.."என சொல்லி சுந்தரலிங்கம் கிளம்ப..
அப்போது மாலினியோடு வந்த பெண்மணியும் அவருடைய பெண்ணும் மீராவின் அருகில் வந்தனர். அவரை பார்த்த அதிர்ச்சியில் தன்னை மறந்தவளிடம் வந்தவர்..
மெல்லிய குரலில் "என்னை மன்னிச்சுடு..மா...சுயநலமா நான் நடந்துக்கிட்டத்துக்கு...இந்த மருதமலை முருகன் எனக்கு புத்தியை தெளிய வெச்சிட்டான்.."
"நான் பண்ணதை எனக்கே திருப்பி குடுத்து எனக்கு வலிக்க வெச்சு உன் வலியை எனக்கு புரிய வெச்சுட்டான்...உங்கப்பா போன பின்னால..தான் எனக்கு பல விஷயங்கள் தெரிஞ்சது..."
"உங்கம்மாவை தான் அவர் முதல்ல பதிவு கல்யாணம் பண்ணிக்கிட்டார்னு அவர் சாகும் போது சொல்லி என்னை குறுக வெச்சப்ப தான் எனக்கு உன்னை ஊருக்கு பயந்து அலட்சியமா விட்டது நினைவுக்கு வந்தது. அப்பலேந்து என் மனசாட்சி என்னை தூங்க விடாம தொல்லை பண்ணுது..நீ தான் அவரோட சட்டப்படி வாரிசுனு சொன்னதும் தான் என்னோட நிலை புரிஞ்சது.."
"ஆனா வந்தனா என் பையனுக்கும் சொத்து எழுதி இருக்கறதா சொல்லி எல்லாம் என் கிட்ட குடுத்துட்டு செத்து போயிட்டாரு..."
"இந்தம்மா வில்லங்கமான ஆளுனு தெரியாம அவங்க சாதுவா பேசி என்னை ஏமாத்திட்டாங்க...நல்ல வேளை என் பொண்ணு தப்பிச்சா.."
"சரி..சரி..போனதை எதுக்கு பேசணும்...நீ கல்யாணம் பண்ணதுக்கு என்னோட நல்வாழ்த்துக்கள்.. உங்களுக்கும் என்னோட நல்வாழ்த்துக்கள் மாப்ளை.."
"கடைசியா ஒரு விஷயம்...உங்கப்பா எழுதி வெச்சு உனக்கு சேர வேண்டிய சொத்துக்கள் எல்லாம் இந்த டாகுமெண்ட்ல இருக்கு...இதை என்னோட கல்யாண பரிசா வாங்கிக்கோ..
முருகனோடு அருளால சுகமா இரு..அடிக்கடி நம்ம வீட்டு வா மா.."என சொல்லி அவள் கைகளில் பத்திரங்களை திணித்து, அவர்களை ஆசீர்வாதம் செய்து விட்டு தன் மகளை அழைத்து கொண்டு கிளம்பினார். அவருடைய மகள் வந்தனா சம்பந்தமே இல்லாமல் உத்ராவை கண்களில் வெறுப்பு வழிய பார்த்து சென்றதை பார்த்து வருணுக்கு புதிராக இருந்தது.
மீராவிடம் "அந்தம்மா யாரு" என கேட்க..."எங்கப்பானு சொன்னவரோட பொண்டாட்டி... பொண்ணு.."என பதில் சொல்லி...அவங்க குடுக்க சொத்து எனக்கு வேணாம்..நான் கஷ்டப்படும் போது ஆறுதலா யாரும் இல்ல...இனி எனக்கு எதுக்கு.." என வேதனையாக எங்கோ பார்த்தபடி சொன்னாள்.
"இங்க பாரு...மீரா...நான் உன் கிட்ட சொத்து இருக்கானு பாத்து கல்யாணம் பண்ணல..நீ சின்ன வயசுலேந்தே ஒரு குடும்ப சூழ்நிலைல இல்லாம தனியா இருக்க... உன்னை எங்க குடும்பம் போல ஒரு குடும்பத்துல வாழ வெச்சு...இதுவரைக்கும் உனக்கு கிடைக்காத சந்தோஷங்களை குடுக்கணும்னு தான் நான் உன்னை கல்யாணம் பண்ணேன்.."
"சொத்து விஷயமா நீ என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம்" என அவளிடம் தேறுதலாக பேசினான்.
அதற்குள் தாத்தா கூப்பிட...அங்கிருந்து நகர்ந்தவர்கள் நேராக முருகனின் சன்னதிக்கு போய், சிறப்பு அபிஷேகத்தை கண் குளிர தரிசித்து கோயிலில் இருந்து கிளம்பினார்கள்.
எல்லாருமே செல்வியின் வீட்டுக்கு வர...வந்த மணமக்களை செல்வி ஒன்றாக நிறுத்தி வைத்து ஆலம் சுற்றி கொட்டி வீட்டுக்குள் அழைத்தார்.
வர்ஷாவை பூஜையறைக்குள் அழைத்து சென்று, விளக்கேற்ற சொல்லி..மணமக்களை வணங்கி சொல்லி அழைத்து வந்து பாலும் பழமும் குடுத்தார்.
சற்று நேரத்தில் விருந்து தயாராக..எல்லாரையும் உட்கார வைத்து செல்வி, ஸ்வேதா,உத்ரா, கவுதம் பரிமாற...ஏதேதோ பேசி, சிரித்து கொண்டு அவர்கள் சாப்பிட்டு முடித்தனர். அடுத்து பரிமாறியவர்கள் சாப்பிட உட்கார அவர்களுக்கு வருணும், நிரஞ்சனும் சாப்பிட பரிமாறினார்கள்.
அதன் பின் சிறிது நேர ஓய்வுக்கு பின் உத்ரா குடும்பத்தினர் தங்களது வீட்டுக்கு கிளம்ப...அழுத வர்ஷாவை செல்வி சமாதானம் செய்து உள்ளே அழைத்து சென்றார். (தொடரும்)

Author: Subha Balaji
Article Title: சுயம்பு 16
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.