• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Subha Balaji

Active member
Joined
Jun 30, 2024
Messages
124
அனைவருக்கும் வணக்கம். நீண்டட நாட்களுக்கு பிறகு சுயம்பு கதை மூலமாக வரவு.(2020ல் முகநூலில் எழுதியது)

தங்கள் அன்பான கருத்துக்கள், விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.

சுயம்பு -1

சில நாட்களாக பெய்த தொடர் மழை விட்டு..அதிகாலையில் இருந்தே அடித்த சில்லென்ற காற்றால்..

கருமேகங்கள் விலகி வானம் சற்று வெளிச்சமாக தெரிய...அந்த காற்றில் இருந்து தப்பித்த கருமேகங்கள்..

மெல்லிய பூந்தூறலாக தூறல் தூர...அதில் ஆனந்தமாக நனைந்தபடி வாக்கிங் போய் கொண்டு இருந்த உத்ராவை பார்த்தவர்கள் காலை வணக்கம் சொல்லி வணங்க பதிலுக்கு அவளும் புன்முறுவலோடு அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு தன் நடையை தொடர்ந்தாள்.

அருகில் இருந்த பார்க்குக்குள் நுழைந்தவள் அரைமணி நேரம் வேகமாக தன் நடை பயிற்சியை முடித்து விட்டு, பார்க்கின் சின்ன அரங்கில் நுழைந்தாள்..

அங்கிருந்தவர்கள் அவளை பார்த்ததும் உற்சாகமாக ஒரே குரலில் "குட்மார்னிங் டாக்டர்" என்க..அவளும் சிரித்தபடி பதிலுக்கு "குட்மார்னிங் ஆல்.. ரெடியா.. எக்ஸர்சைஸ் ஸ்டார்ட் பண்ணலாமா என கேட்டு அங்கிருந்தவர்களுக்கு எளிய உடற்பயிற்சிகள் சொல்லி தந்து, தவறாக செய்தவர்களை திருத்தமாக செய்ய வைத்து முடிந்ததும் அங்கிருந்து கிளம்பினாள்.

உத்ரா எம்.பி.பி.எஸ், ஆர்த்தோ சர்ஜன், கோல்ட் மெடலிஸ்ட்..
படித்தது கோயமுத்தூரில்..
தற்போது இருப்பது
மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில்..

மூன்று வருடங்களுக்கு முன்பு ஷில்லாங்க் கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் ஆர்த்தோ சர்ஜனுக்கு ஒரு வேகன்சி இருக்கிறது, நீ போக முடியுமா என அவளுடைய சீனியர் ஒருவர் தயக்கமாக கேட்க, உடனே அப்ளை செய்து வேலை கிடைத்தும் இங்கு வந்து விட்டாள்.

அவளுக்கு தங்குவதற்கு ஒரு அழகான வீடு, சமையல், வீட்டை சுத்தம் செய்யும் வேலைக்கு ஒருவரையும் அவளுடைய சீனியரே தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக ஏற்பாடு செய்து விடவே அவளுக்கு அங்கு வந்து தங்க எந்த பிரச்சினையும் இல்லாமல் எளிதாகி விட்டது.

காலையில் நடைபயிற்சி, பார்க்குக்கு வரும் தெரிந்த சிலருக்கு எளிய எக்ஸர்சைஸ் என அவளுடைய காலை வேளைகள் போகும். வீட்டு வந்ததும் குளியல், பிரேக்பாஸ்ட், அதன் பின் ஹாஸ்பிடல்க்கு போவது...மாலை 4 மணிக்கு வீடு திரும்புதல் என அவளுடைய வார நாட்கள் சக்கரம் சுழல்வது போல வேகமாக நகரும்..

வார இறுதிகளில் அவளுடன் வேலை செய்யும் ஒரு டாக்டர், இரண்டு நர்ஸ்களோடு சேர்ந்து பக்கத்தில் இருக்கும் சில கிராமங்களுக்கு போய் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி செய்வது என தன்னை எல்லா நாட்களும் பிசியாக வைத்து கொள்வாள்.

வீட்டுக்குள் நுழைந்ததுமே அவளுடைய வீட்டில் வேலை செய்பவர் அவளிடம் ஏதோ சொல்ல வர..அதை புரியாமல் பார்த்தவளுக்கு மறுபடியும் செய்கைகளால் புரிய வைக்க முயல...அதுவும் புரியாமல்...உத்ரா ...

"சோனு மா...உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது..எனக்கு நீங்க பேசறது.. பண்ற சைகைகள் எதுவும் புரியல.." என ஹிந்தியில் அலுத்து கொண்டாள்.

அவர் உடனே தன் தலையை தட்டி கொண்டவர் "உங்களுக்கு விஷயம் தெரியுமா...மேம் சாப்...நாலு நாளா மழை பெய்யுதுல...அதால.. மா-சின்-ராம் ஹைவே பக்கத்து பெரிய நிலசரிவாம்.."

"பத்து பேரு செத்து போயிட்டாங்களாம்...
நிறைய பேருக்கு காயமாம்... "

"அங்க இருக்கிற ஹாஸ்பிடல்ல எல்லாம் எடமே இல்லையாம்" என சொன்னதை கேட்ட உத்ரா அதிர்ந்து போனாள்.

உடனே டிவியை போட...அதில் அவர் சொன்னதே ஒளிபரப்பாகி கொண்டு இருக்க..அதை பார்த்தபடி சில நிமிடங்கள் பேச்சற்று இருந்தவள் ஏதோ நினைத்து கொண்டதை போல வேகமாக எழுந்து "சோனு மா..சீக்கிரமே ஏதாவது சாப்பிட ரெடி பண்ணுங்க..நான் போய் குளிச்சுட்டு வந்துடறேன்.."

"உடனே ஹாஸ்பிடல் போக வேண்டி இருக்கும்..நான் குளிக்கற நேரத்துல ஏதாவது போன் வந்தா..யாருனு கேட்டு அந்த டைரில எழுதி வெச்சிடுங்க" என அவருக்கு உத்தரவிட்டு வேகமாக உள்ளே போனாள்.

பத்தே நிமிடங்களில் குளித்து அழகான இள மஞ்சள் சல்வாரில் வந்தவளை பார்த்த சோனு வேகமாக அவளுக்கு சாப்பிட தட்டு வைத்து சூடாக ஆலு பராட்டாவை பரிமாற...மெல்ல உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தவளின் போன் அடித்தது.

எடுத்து பார்த்ததுமே தன்னுடன் வேலை செய்யும் மனீஷ் என தெரிய..போனை ஆன் செய்ய.. மனீஷ் "உத்ரா எமர்ஜென்சி...மட் ஸ்லைட் நடந்ததால பேஷண்ட்ஸ் அதிகமா இருக்காங்க..எங்களால மேனேஜ் பண்ண முடியல..எங்க இருக்க..கொஞ்சம் சீக்கிரம் வர முடியுமா" என பதறிபடி கேட்க..

"ஓஓஓ...வில் பீ தேர் இன் பைவ் மினிட்ஸ் மனீஷ்..." என அவனுக்கு பதில் சொல்லி போனை அணைத்து..சோனுவை பார்த்து "ஏதோ எமர்ஜென்சினு போன் வந்தது...நைட் வர எவ்ளோ நேரமாகும்னு தெரியல..சாப்பிட எதுவும் வைக்க வேணாம்..நீங்க சாப்பிட்டு படுங்க" என அவரிடம் சொல்லி விட்டு வேகமாக வீட்டில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

ஹாஸ்பிடல் உள்ளே போனதும் அங்கிருந்த நிலையை பார்த்ததும், நிலைமையின் தீவிரம் புரிந்து வேகமாக தன்னறைக்குள் போய் தன் ஸ்டெதஸ்கோப்பை எடுத்து கொண்டு ஜெனரல் வார்ட்டுக்குள் நுழைந்தாள்.

ஒவ்வொருவரையாக பார்த்து அவர்களின் கட்டிலில் இருந்த பேடில் அவர்களின் குறிப்புகளை எழுதி, நலன் விசாரித்து கூட வந்த நர்ஸை எல்லாவற்றையும் குறித்து கொள்ள சொல்லி எல்லாம் முடித்து விட்டு வர அவளுக்கு மூன்று மணி நேரமானது.

ஒரு டீயை வரவழித்து குடித்து விட்டு தன்னறைக்கு போக..அங்கு ஏற்கனவே வந்து காத்திருந்த ஓபி பேஷண்ட்களை பார்க்க ஆரம்பித்தாள்.

ரூம் கதவை திறந்து தளிர் நடையில் வந்த குழந்தையின் அழகில் சொக்கி போய் தன் சீட்டில் இருந்து எழுந்து போய் அந்த குழந்தையை தூக்கி கொண்டு...அந்த குழந்தையை கொஞ்ச ஆரம்பித்தாள்.

கூட வந்த அந்த குழந்தையின் அம்மாவிடம் என்ன பிரச்சினை என கேட்க.."நீத்து ரெண்டு நாளா வலது கை விரல்ல வலினு அழறா டாக்டர்... களிப்பு தடவினேன்... எண்ணெய் தடவி தேய்ச்சு விட்டேன்..எதுக்கும் சரியாகல.." என அழுது கொண்டே சொல்ல..

அவளை அமைதிபடுத்திவிட்டு..
குழந்தையின் வலது கை விரல்களை மெல்ல தடவி பார்க்க..வந்த சந்தேகத்தை உறுதி செய்ய..உடனே எக்ஸ்ரே எடுத்து கொண்டு வருமாறு அவளிடம் சொல்லி அனுப்பி விட்டு..எக்ஸ்ரே டிபார்மெண்ட்க்கும் போன் செய்தவள் "பையா..நீத்துனு ஒரு குழந்தை வருவா.. அவளுக்கு உடனே எக்ஸ்ரே எடுத்து ரிப்போர்ட் குடுத்துங்க..குழந்தை ரொம்ப அழறா" என சொல்லி போனை வைத்தாள்.

கதவு தட்டும் சப்தம் கேட்டு எஸ் என அவள் சொல்வதற்குள் உள்ளே வந்த நர்ஸ் "நேத்து நடந்த மட்ஸ்லைட்ல மாட்டிக்கிட்டவர் போல இருக்கு டாக்டர்....மல்ட்டிபிள் ப்ராக்சர்..சீப் உங்களை உடனே ஐசியுக்கு வர சொன்னார்.." என சொல்லவும் தன்னறையில் இருந்து ஐசியுக்கு வேகமாக போனாள்.

அங்கிருந்த சீப் டாக்டர் மல்ஹோத்ராவுக்கு வாயசைவில் காலை வணக்கம் சொல்ல.. அவருக்கு தலையசைத்து ஏற்றுக்கொண்டு..அங்கு கட்டிலில் இருந்தவரை காட்டி "செக் ஹிம் தரோலி அண்ட் லெட் மீ நோ ஹிஸ் ஸ்டேட்டஸ் ஆஸ் சூன் ஆஸ் பாசிபிள்" என சொல்லி விட்டு நகர..அவருக்கு சரி என தலையாட்டி விட்டு திரும்பி கட்டிலில் இருந்தவரை பார்த்து உயர்நிலை மின்சாரம் பாய்ந்தது போல அதிர்ந்து போனாள்.

அவளையும் அறியாமல் மனு என உதடுகள் முணுமுணுத்தது. (தொடரும்)
 

Attachments

  • images (74).jpeg
    images (74).jpeg
    55.1 KB · Views: 0

Author: Subha Balaji
Article Title: சுயம்பு 1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top