அத்தியாயம் -12
ஆற்றங்கரைத் தோப்பு. வீரசிம்மனும் அவனது "மகாராஜாவும்" இந்த தோப்பிற்கு வந்து மூன்று நாட்களாகிவிட்டன. அவர்கள் இங்கு வருவதற்கு முன்னால் தங்களது தோணியை நிறுத்தி பாம்பன் தீவில் இறக்கிவிடப்பட்ட தனுக் காத்த குமாரத் தேவர் திட்டமிட்டபடி இங்குவந்து சேராதது அவர்களுக்குக் கவலை அளித்தது.
அவருக்குஎன்ன ஏற்பட்டது? ஏதாவது விபத்தில் சிக்கிக் கொண்டாரா? அல்லது சேதுபதி மன்னரது அலுவலர்களிடம் அகப்பட்டுக் கொண்டாரா? அல்லது பேய்க்கரும்பில் தேடிச் சென்ற செம்மனத் தேவரது வழித் தோன்றல்களை இனங்கண்டு பேசுவதில் ஏதும் இடையூறு ஏற்பட்டுவிட்டதா?.
கடந்த இரண்டு நாட்களாக இத்தக் கேள்விகளைத்தங்களுக்குள் எழுப்பி, அதற்கு இயைந்த பதிலையும் கண்டுபிடிப்பதில் தோல்வியடைந்த வீரசிம்மனும் அவனது மகாராஜாவும் சோர்ந்து போனார்கள். மாலை நேரத்தில் அந்தக் கடற்கரையில் சிறிதுநேரம் உலாவி விட்டு வரலாம் என்று கடற்கரைக்குப் புறப்பட்டார்கள்.
அப்பொழுது, "மகாராஜா! அதோ பாருங்கள் தமது குமாரத் தேவன்" என்று வியப்புடன் கூறினான் வீரசிம்மன்.
ஆமாம், கூப்பிடும் தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தான்குமாரத் தேவன். "ஓடிப்போய் வெள்ளை வீசு1. நாம் இங்கு இருப்பது, அப்பொழுதுதான் அவனுக்குத். தெரியும்."
"உத்தரவு" என்று, சொல்லிய வீரசிம்மன் தனதுதலையில் கட்டியிருந்த துண்டைக் கையில் பிடித்துக்கொண்டுதோப்பிற்குள் சென்றான்.
"குமாரா... குமாரா..."
வீரசிம்மன் கூவியழைத்ததை அவன் புரிந்துகொண்டு அந்த தோப்பு தோக்கி நடத்து வத்தான்.
சாதாரண மூங்கில் கட்டிலில் அமர்த்து இருந்த மகாராஜாவிடம் வீர பாண்டியனும் குமாரத் தேவனும் போய் நின்றார்கள்.
"என்ன நடந்தது? மூன்று நாட்களாகி விட்டதே. நாங்கள் மிகவும் கவலைப்பட்டுக்கொண்டிருந்தோம்”
"என்ன செய்வது? நான் மூன்று நாட்களுக்கு முன் கரை இறங்கிய இடம் புங்குடி அல்ல. பாம்பனில் உள்ள சேதுபதி வீரர்கள் என்னை பிடித்து இராமநாதபுரம் கோட்டைக்கு அனுப்பிவைத்தனர். அங்கே மன்னரிடம் நேரடி விசாரணைக்கு
நிறுத்திவிட்டனர்....'
"அப்புறம்...."
**********************************************************************************************
1 "வெள்ளை வீசுதல்: கூப்பிடு தூரத்திற்கும் மேலான தொலைவில் இருப்பவர்களை அமைப்பதற்காக கையினால் துண்டை வீசி அழைத்தல்.
"அப்புறம் என்ன, சேதுபதி மன்னர் என்னை விசாரித்தார்" என்று சொல்லிக்கொண்டிருந்த போது, சில வீரர்கள் அந்தத் தோப்பு நோக்கிவருவதைக் கண்ட வீரசிம்மன்அவர்களிடம் தெரிவித்தான்.
"நிச்சயமாக என்னைத்தான் அவர்கள் தேடிவருகிறார்கள். மற்ற கதையை அப்புறம் சொல்கிறேன். இப்பொழுதுஎங்கே ஓடி ஒளிவது? நிராயுதபாணிகளான நாம் அவர்களை எதிர்கொள்வதில் பயனில்லை."
"உடனே வாருங்கள்" சைகை காட்டி தோப்பின் மேற்கு கடைசியில் உள்ள கிணற்றடி அருகே அடர்த்தியாக வளர்ந்து நிற்கும் மாமரங்களில் ஏறி ஒளிந்து கொள்வோம், வேறுவழியில்லை" என்று அவசரமாகச் சொன்னான் வீரசிம்மன்.
மூவரும் வேகமாக சமையல் கொட்டகையில் இருந்தசமையல்காரர்களிடம் சைகையினால் தகவல் தெரிவித்துவிட்டு மேற்குப் புறம் ஓடினார்கள்.
குதிரை வீரர்கள் இப்பொழுது அந்தத் தென்னந்தோப்பின் வேலியருகே குதிரைகளை நிறுத்திவிட்டு தோப்பிற்குள் வந்து, யாராவது இருக்கிறார்களா என்று பல
பக்கங்களிலும் நோட்டமிட்டனர்.
சமையல் கொட்டகைக்கு வந்து உற்றுப் பார்த்தனர். அங்கு ஒருவன் சமையலுக்கு அரிசி களைந்துகொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு, "ஏய் ,இங்கே யார் இருக்கிறார்கள்?" என்றார்கள்.
அவன் அவர்களுக்குப் பதில் எதுவும் சொல்லாமல் அவர்களைப் பார்த்து பீதியுடன் விழித்தான். வீரன் ஒருவன் அவனது முதுகில் சற்று வேகமாக ஒரு அடி கொடுத்தான்.
"பே. . .பே. . ."" என பரிதாபமான குரலில் சமையற்காரன் கத்தியபாழுதுதான், அவன் ஊமை மட்டுமல்ல செவிடனும் கூட என்பதை அந்த வீரர்கள் உணர்ந்தார்கள்.அவர்கள்
சைகை மூலம் அங்கு யார் இருக்கிறார்கள் என்பதை அறிய முயன்றமுயற்சி தோல்வியில் முடிந்தது.
பின்னர் அத்த பெரிய தோப்பின் பல பகுதிகளுக்கும்சென்று பார்த்தனர். மனித சஞ்சாரம், நடமாட்டம் எதுவும் இல்லைஎன்பதை எளிதில் புரிந்தனர். பொதுவாக இத்தகைய தோப்புகளில்தேங்காய் வெட்டுக்காலம் வரைதான் காவல்காரர்கள் இருப்பார்கள். அவர்கள் குடும்பத்தினர் வியாபாரிகள் ஆகியோரது நடமாட்டமும்
இருக்கும். அடுத்த மூன்று மாதங்களுக்கு அங்கு யாரையும் பார்க்க முடியாது.
அந்த வீரர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தினால், அவர்கள் மெளனமாக வேலியைக் கடந்து தோப்பிற்கு வெளியே சென்றனர். பின்னர் தங்கள் குதிரைகளில் ஏறி வடக்கே செல்லும் சேது வழிப் பாதையில் முடிவீரன்பட்டினம் நோக்கிச் சென்றனர். இன்னொரு
பிரிவினர், தெற்கே தாகாச்சி சத்திரம் நோக்கி விரைந்தனர்.
இவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த சமையல்காரன் சில நிமிடங்கள் கழிந்த பின்னர், தனது வலது கையினால் வாயின் மேல்விரலை மறைத்தவாறு நாக்கினால் ஒருவகையான ஒலியை எழுப்பினான். அமைதியான அந்தத் தோப்புப் பகுதியில் அந்த ஒலி மிகத் தெளிவாக எதிரொலித்தது. அந்த ஒலியையக் கேட்டவர், ஏதோ பறவை தனது இணையைக் கூவி அழைக்கிறது என்று தான் நினைக்கக்கூடும். ஆனால் இது சமையல்கார ஊமையின் ஒலி என்பதை அந்த மூவரும் அறிந்து அவர்கள் ஒளிந்திருந்த
மரங்களில் இருந்து இறங்கி வந்தனர்
அந்த மகாராஜா அங்கு கிடந்த மூங்கில் கட்டிலில் அமர்ந்தவுடன் வீரசிம்மனும் குமாரனும் அந்தக் கட்டிலின் எதிரே இருந்த மரத்தடியில் உட்கார்ந்தனர்.
"குமாரா! இப்பொழுது சொல். இராமநாதபுரம் கோட்டையில் என்ன நடந்தது?"
************
“கோட்டைக்குள் இருந்த அறையில் அமர்ந்து இருந்த சேதுபதி மன்னர் முன் என்னை அழைத்துப் போய் நிறுத்தினார்கள். அவர் என்னை இருமுறை உற்று தோக்கினார். அந்தப் பார்வையில்பயங்கரமான கடுமை இருந்தது. அத்தகைய சுடுமையான பார்வையை யாரிடமும் நான் பார்த்தது இல்லை. ஆனாலும் சிறிதும் தயக்கமில்லாமல் அவரது கேள்விகளுக்குப் பதில் சொன்னேன்.
"அஞ்சுகோட்டை நாட்டைச் சேர்ந்த உனக்கு இலங்கையில் என்ன வேலை?"
"பிழைப்பிற்காகச் சென்றேன்"
"இந்த சேது நாட்டில் உழைத்துப் பிழைப்பதற்கான வழியா இல்லை?"
"ஆம் மகாராஜா! பிழைப்பதற்கு வழி இல்லைதான். வானம் பார்த்த எங்களது பூமியில் மழை பெய்து கண்மாய்கள் நிரம்பினால் தான் மக்களுக்கு வேலை, மற்ற காலங்களில் எங்களது. பசியைப் போக்க உப்புத் தண்ணீர் தான் உள்ளது. என்னைப் போன்றவர்கள் சோழ சீமைக்கும், இலங்கை நாட்டிற்கும் ஓடிச் சென்றால் தானே குடும்பத்தினரை வாழச் செய்ய முடியும்!"
"உனது குடும்பத்தில் உன்னைத் தவிர உழைக்கக் கூடியவர்கள் எவரும் இல்லையா?"
"இல்லை. எனது பாட்டன் ஆளஞ்சாத் தேவர், இராமேஸ்வரம் போரில் சேது நாட்டின் மானத்தைக் காப்பாற்ற போரிட்டு வீர மரணம் அடைந்தார். எனது தந்தை அமரடக்கித் தவர் மகாராஜா தலைமையில் அம்மைய நாயக்கனூர் போரில் கன்னடப் படைகளுடன் போரிட்டு மடிந்தார். அந்தப் போரில் காயமுற்று இரு கையை இழந்த எனது சிறிய தந்தை என்னுடன் தான் வாழ்ந்து வருகிறார். எனது பாட்டனாருக்கு அளிக்கப்பட்ட உதிரப்பட்டியையும் எனது தந்தைக்கு அளிக்கப்பட்ட சீவித காணியையும் நான் திரும்ப ஒப்படைத்துவிட்டேன்.”
“ஏன்?"
"எனது பாட்டனார் ஆளஞ்சாத்தேவர் பிறந்த மண்ணின் மானம் காக்கப் பேராடினார்: மரணமுற்றார். மன்னரது உதிரப்படி கிடைத்தது. இராமநாதசுவாமியின் புனித பாதம் பட்ட சேதுநாட்டின்மீது போர் தொடுத்து இராமேஸ்வரம் போரில் கணக்கற்ற மறக்குடியினர் மரணமடையக் காரணமான திருமலை நாயக்கருக்காக, அம்மைய நாயக்கனூர் போரில் கன்னடப் படையை எதிர்த்துப் போரிட்டதற்கு பரிசாக ஜீவித காணியைப் பெற்றுக்கொள்வது என்பது மனம் கொள்ளாத செயல் அல்லவா? அதனால்தான்...."
"அப்படியானால் இந்த நாட்டு அரசியல் மக்களுக்காக அல்லாமல் மக்களை அழிப்பதற்காகவா நடைபெறுகிறது?"
"மன்னரது செயலை விமரிசனம் செய்யத் தகுதியற்றவன் நான், ஆனால் மன்னரது ஆணையை மதித்துத்தான். எனது தந்தையும் போருக்குச் சென்றார். அதன் விளைவாக ஊனமுற்றும், வேலையற்றும் ஊர்களில் முடங்கிக் கிடக்கும் வேதனையைத்தான் இங்கே வெளிப்படையாகச் சொன்னேன்."
"சரி இரவு தேரத்தில் பாம்பனில் கரை இறங்கியதன் காரணம் என்ன?"
"மகாராஜாரில் இருந்து தாமதமாகப் புறப்பட்ட தோணியில் பயணமாக வத்தேன். காலை கும்மிரூட்டில் புங்கடித் துறை என்று நினைத்து கப்பல்காரன் தவறுதலாக பாம்பன் கரையில், என்னை இறக்கி விட்டான். புங்கடியில் இருந்து பேய்க்கரும்பிற்கு செல்ல வேண்டியவன். இங்கே மாட்டிக் கொண்டேன்.”
"பேய்க்கரும்பில் யார் இருக்கிறார்கள்?”
"எனது கொள்ளுப்பாட்டன் செம்மனத்தவர் பேய்கரும்பில் இருந்தார். தளவாய் சேதுபதி மன்னரது இராமமேசுவர முன்னணியில் படைப்பிரிவில் பணியாற்றியவர். பல வருடங்களாகத் தொடர்பு இல்லாததால் அவர்களது உறவினர்களைச் சந்திக்க அங்கு செல்லலாம் என்று எண்ணி இருந்தேன். அதற்குள்ளாக பாம்பன் கோட்டைச் சேர்வைக்காரர் என்னை இங்கு அனுப்பி வைத்துவிட்டார்."
"அவர் சந்தேகப்பட்டதில தவறு. இல்லை என்றாலும் இப்பொழுது நேரம் கடத்துவிட்டது. இன்று இரவு லட்சமிபுரம் சத்திரத்தில் தங்கிவிட்டு நாளை நீர் நினைத்தபடி பேய்க்கரும்பு செல்லலாம். பிரதானி இவருக்கு கடவுச் சீட்டு வழங்கி லஷ்மிபுரம் சத்திரத்துக்கு அனுப்பி வையுங்கள்.”
********
"இதுதான் இராமநாதபுரம் கோட்டையில் நடந்தவை. அடுத்த நாள் காலை லஷ்மிபுரம் சத்திரத்தில் மண்டபம் தோணித்துறை சத்திரத்திற்கான வழியைக் கேட்டுத் தெரிந்துகொண்டு கிழக்கு நோக்கிப் புறப்பட்டேன். நன்கு இருட்டிவிட்டதால் வழியில் இரவு தங்கிவிட்டு காலையில் புறப்பட்டேன். நீண்ட நேரம் வைகை ஆற்றங்கரையில் காத்திருந்தும் படகோட்டி வராததால் வைகை ஆற்றை நீந்திக் கடத்து வந்தேன்.”
"ஆமாம். உமது பேச்சைப் பொறுமையாகக் கேட்ட சேதுபதி மன்னர், இப்பொழுது உன்னைத் தொடர்ந்து வீரர்களை அனுப்புகிறார்? பார்த்தாயா?"
"ஆமாம். அதுதான் அரசியல் தந்திரம். எனது பேச்சில் இருந்து நான் ஒரு கலகக்காரன் என்பது புரிந்து இருக்கும். தனது ஆட்சிக்கு என்னால் இடைஞ்சல் ஏற்படலாம் என்பதை அறிய எனது நடமாட்டத்தைக் கண்காணிக்க இந்த ஏற்பாடு."
"ஆம்! சேதுபதி மன்னர் உஷாராகிவிட்டார். நமது இலக்கை அடைய விரைவாகவும், மிகவும் ரகசியமாகவும் நடந்துகொள்ள வேண்டும்” பெரியவர் நிதானமாகச் சொன்னார்.
Author: SudhaSri
Article Title: அத்தியாயம் -12
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம் -12
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.