• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

மீட்டாத வீணை 3

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
மீட்டாத வீணை

அத்தியாயம் 3

டிசம்பர் மாதம். கல்லூரியில் கலைவிழா நடந்து கொண்டிருந்தது. மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நிறையப் பொறுப்புகளை எடுத்துக் கொண்டு ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தார்கள். சென்னையில் இருக்கும் மற்ற கல்லூரிகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் நிறைய மாணவர்கள் கலந்து கொள்வதால் கல்லூரி வளாகம் ஜே ஜே வென்று இருந்ததோடு குதூகலம் எங்கும் பொங்கி வழிந்தது.

விதவிதமான ஆடைகள், விதவிதமான போஸ்டர்கள், கலகலவென்ற பேச்சு சத்தம் , கூரையைக் கிழிக்கும் சிரிப்பு சத்தம் என்று எல்லா இடங்களிலும், " இளமை, இதோ, இதோ, இனிமை இதோ இதோ" என்று இளைஞர் கூட்டம் பறைசாற்றிக் கொண்டிருந்தது. கல்லூரி புரஃபசர்கள், லெக்சரர்கள் மாணவர்களுக்கு இந்த சமயத்தில் முழு சுதந்திரம் கொடுத்து விட்டுத் தள்ளியிருந்து மேலோட்டமாகக் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.

"பவித்ரா, பவித்ரா, சீக்கிரம் வா. இன்னைக்கு ம்யூசிக் புரோகிராம் செமையா இருக்கும். வா, பாக்கலாம். நிறைய காலேஜில் இருந்து க்ரூப், க்ரூப் கலந்துக்குவாங்க. நம்ம காலேஜ் க்ரூப் கூட ரொம்ப நல்லா பெர்ஃபார்ம் பண்ணுவாங்க. அதுவும் நம்ப அநியோட பேண்ட் (பேண்ட்) இருக்கே, "அட்டகாசமா இருக்கும். இழுத்துக் கொண்டு ஓடினாள் அதிதி.

"ம்யூசிக்ல எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லைன்னு உனக்குத் தெரியாதா? என்னை எதுக்குக் கூப்பிடறே?" என்று சொல்லி விட்டு, அததியின் கையை உதறினாள் பவித்ரா.

" போதும்டி உன்னோட அப்பா சென்டிமென்ட். கேட்டு சலிச்சுப் போயிடுச்சு எனக்கு. ஊருல உலகத்துல இல்லாத அப்பா, பொண்ணு அதிசய ஜோடி நீங்க தான். இன்னும் அப்பா சொல்லைத் தட்டாத அபூர்வ சிகாமணியா ஏன் இருக்கேன்னு எனக்குப் புரியவேயில்லை. உன்னை மியூசிக் கத்துக்கக் கூடாதுன்னு தானே அங்கிள் சொன்னார்? ஏன் தான் இப்படி இருக்கயோ?"

"அது வந்து, அது வந்து... … அதிகமாப் பாத்தாத் திரும்ப மியூசிக் கத்துக்கணும்னு ஆசை வருமோங்கற பயம் தான்"

" வொண்டர்ஃபுல்! என்ன ஒரு புத்திசாலிடி நீ!
இப்படியே சொல்லிக்கிட்டு ஒதுங்கி ஒதுங்கிப் போ! ஓவராத் தான் பண்ணாதே இப்படி! எத்தனை நாளுக்குத் தான் ஓடி ஒளிஞ்சு உன்னை நீயே ஏமாத்திக்குவே! சினிமா பாக்கப் போனா பாட்டு சீனில என்ன பண்ணுவே? காதில் பஞ்சு வச்சுக்குவயா? ரேடியோ எஃப் எம் கேக்க மாட்டேன், டிவி பாக்க மாட்டேன்னு வெட்டி பந்தா வேற! எனக்கு வர கோபத்தில் உன்னை குண்டுக்கட்டத் தூக்கிட்டுப் போய் ஒரு ரெகார்டிங் ஸ்டூடியோவில் ஒரு நாள் முழுக்க அடைச்சு வைக்கப் போறேன், பாத்துக்கிட்டேயிரு, நீ செய்யற அலட்டல் தாங்காமல், மியூசிக்குக்கே ஒருநாள் கோபம் வந்து உன் மேல விழுந்து கட்டிப் பிடிக்கப் போகுது பாரு" என்று அதிதி சொல்லிக் கொண்டிருந்த போது, ஒரு மாணவன் அந்தப் பக்கம் வேகமாக ஓடி வந்தவன், காலில் ஏதோ பட்டு, சறுக்கி விழுந்தான்.

விழும்போது அங்கே நின்று கொண்டிருந்த பவித்ராவின் மேலே மோதியதில் அவளும் சேர்ந்து அவனுடன் விழுந்தாள். அவளைக் கட்டிப் பிடித்தபடி உருண்டான்.

"சாரி, சாரி, ஐ ஆம் வெரி சாரி" என்று சொல்லிக் கொண்டே கீழே கிடந்த பவித்ரா எழுந்து உதவி செய்தான். பவித்ராவின் முகமோ அதிர்ச்சி கலந்த கோபத்தால் சிவந்து போயிருந்தது.

அறிமுகமில்லாத ஆண்மகனுடன், எல்லோர் கண்களுக்கும் முன்னால் உடலோடு உடல் உரசும்படியாகக் கீழே தரையில் விழுந்து கிடந்தது பவித்ராவின் மனதில் அவமானத்தையும் கோபத்தையும் உண்டு பண்ணியிருந்தன. அவளுடைய முகத்தைப் பார்த்தவனுக்கு அவள் மனதில் ஓடிய எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது.

"சாரி அகெயின். நான் வேணும்னு பண்ணினதா நினைக்காதீர்கள். ஏதோ யோசிச்சுட்டே வேகமா வந்தேன். கீழே ஏதோ தடுக்கிடுச்சு" என்பவனின் வார்த்தைகளில் உண்மையான வருத்தம் தெரிந்தது.

"ஹே அநி, புரோகிராம் ஆரம்பிக்கற சமயத்தில் இங்கே என்ன பண்ணறீங்க? உங்க நிகழ்ச்சியைப் பாக்கறதுக்காகத் தான் நாங்களும் அவசரமா வந்துட்டிருந்தோம்" என்று பவித்ராவையும் தன்னுடன் சேர்த்து அதிதி சொல்ல, பவித்ராவோ அவளை முறைத்தாள்.

"ஓ அப்படியா, இவங்க முகத்தைப் பாத்தா அப்படித் தெரியலையே?" என்றான் அவனும் குறும்புத்தனமாக.

"ஓகே, லெட் மீ இன்ட்ரட்யூஸ் மை ஃப்ரண்ட், இவ தான் என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட் பவித்ரா. சின்னக் குழந்தையில இருந்து என் கூட ஒண்ணா ஒட்டிட்டுத் திரியற ஃபெவிகால் ஃப்ரண்ட். பவி, இவரு தான் நான் எனக்கு சொல்லிட்டிருந்தேனே? அதே அநிகேத் தான், இவர் ஒரு பயங்கரமான வெறித்தனமான மியூஷியாரு. நல்லாப் பாடுவாரு. பத்து இன்ஸ்ட்ருமென்ட் தெரிஞ்சவரு.. இப்போ நம்ப காலேஜில டெக்

" போதும், போதும், பத்து இன்ஸ்ட்ருமென்ட் வாசிக்க முயற்சி பண்ணி ஒண்ணுமே சரி வராம, இப்போ பாட ஆரம்பிச்சு எல்லாரையும் என் பாட்டில் தொந்தரவு பண்ணறேன். அது தான் உண்மை."என்றான் அனிகேத். தன்னடக்கத்துடன் அவன் பேசினாலும், உண்மையில் எல்லாவற்றிலும் அவன் எக்ஸ்பர்ட் தான்.

"சரி, இப்போ எங்க அவசரமாப் போறீங்க தல?"

"என்ன தலயா? தலன்னா அவரு ஒருத்தர் தான். வேற யாருக்கும் அது பொருந்தாது. அநாவசியமா ஆரம்பிக்காதே. அவரே யாரும் என்னைத் தலன்னு சொல்லாதீங்கன்னு சொல்லிட்டாரே? நீ வேற. நான் வந்து அவசரமா எங்க நிகழ்ச்சிக்கு ஆள் தேடிட்டிருக்கேன். எங்க புரோகிராமுக்கு கம்பியரிங் பண்ண வந்த ஆளு மிஸ்ஸிங். அதுக்குத் தான் புதுசா யாரையாவது பண்ண வைக்கலாம்னு ஐடியா. . தேடித் தேடி ஓடுகிறேன்" என்றவன், சட்டென்று புன்னகைத்தான்.

"ஏய், அதிதி நீ ஏன் டிரை பண்ணக் கூடாது? சளசளன்னு பேசறதில உன்னை மிஞ்ச ஆளே இல்லையா?"

"வாயாடின்னு சொல்லாமச் சொல்லறீங்க தல, சாரி சாரி சீனியர்" என்றாள் அதிதியும் விடாமல்.

"வாயாடியா இருந்தாத் தான் இந்த காலேஜில் பிழைக்க முடியும்! இல்லைன்னா எல்லாரும் தலையில் மிளகாய் அரைச்சுடுவாங்க. இதோ, உன் ஃப்ரண்ட் மாதிரி ஒரு வார்த்தை பேசாமல் நின்னா, ஊமையோன்னு டவுட் வரும்" என்றான். ஓரக்கண்ணால் பவித்ராவைப் பார்த்துக் கொண்டே பேசினான்.

"இவ வாயை மூடிட்டு நிக்கறதைப் பாத்துத் தப்பா எடை போடாதீங்க சீனியர். இவ நம்ம காலேஜ் டிபேட்டிங் கிளப்பின் செகரட்டரி. நம்ம காலேஜ்ல பிரின்ஸிபல் ரூமில அடுக்கி வச்சிருக்கிற ஷீல்டுல பாதி இவ ஜெயிச்சது தான். இப்ப ஏன் இப்படி நிக்கறாங்கன்னா இவங்களுக்கு மியூசிக் பிடிக்காது. நான் ஏன் டி கூட வரமாட்டேன். , டிஷும் "

"வாவ், வெரி இன்ட்ரஸ்டிங். அப்படின்னா நீங்க தான் கம்பியரிங் செய்ய ஆகச் சிறந்த கேன்டிடேட்" என்று பவித்ராவைப் பார்த்துச் சொன்னான்.

"அது எப்படி சீனியர்? புரியலையே! அப்படியே என்னை ஓரம் கட்டறீங்களே லீனியர்!? இது தர்மமா? இது நியாயமா? இது முறையா? " என்று அதிதி கண்ணைக் கசக்கினாள்.

"இவங்களுக்கு மியூசிக் பிடிக்காதுன்னா இவங்க வந்து ஸ்டேஜில எங்களைப் பத்தி நல்லா நெகடிவ்வாப் பேசட்டும். அதுவே எங்களுக்கு சாதகமா ஒர்க் அவுட் ஆயிடும் நிச்சயமா. எப்பவுமே ஏதாவது கான்ட்ரவர்சி வந்தாலே அந்த நிகழ்ச்சி சூப்பர் டூப்பர் ஹிட் இல்லையா? டிவிக்காரங்க சொல்லிக் கொடுத்த டெக்னிக் தான். எப்படி ஐடியாக்? " என்றது.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த பவித்ராவுக்கு எரிச்சல் பண்ணியது. 'ரொம்பத் திமிர் பிடிச்சவனா இருப்பான் போல இருக்கே! இவனோட திமிரை அடக்கவாவது இவனோட நிகழ்ச்சியைப் பாத்து மேடையில் மட்டமாப் பேசணும் ' என்று மனதிற்குள் முடிவு செய்தாள்.

"மிஸ்டர், அனியா, கனியா வாடெவர் பீ யுவர் நேம், நான் வந்து கலந்துக்கறேன். முடிவு பண்ணிட்டேன். உங்க ஈகோவை வெட்டிக் கொலை பண்ணிக் குழி தோண்டிப் புதைக்கறதுக்காகவே நான் வரேன்" என்றாள்.

" ஏய் ஆச்சரியமாக பவித்ரா, என்ன இவ்வளவு கடுமையான வார்த்தைகளை உபயோகிக்கறே ? என்ன ஆச்சு உனக்கு ? சாதாரணமா இந்த மாதிரிப் பேச மாட்டயே ? " அதிதியுடன் பவித்ராவைப் பார்க்க, அனிகேத் அவளிடம் கை காட்டினான்.

"தட்ஸ் ஓகே ஃபார் மி. அவங்க ஏதோ கோபத்தில் பேசறாங்க. இந்தக் கோபத்தோடு மேடையில் ஏற்படும். அதுவும் நல்லது தான். ஐ ஆம் ஃபைன் வித் அதிதி. வாங்க, என்ன பாட்டெல்லாம் நாங்க பிரசன்ட் பண்ணப் போறோம்னு உங்களுக்கு சுருக்கமாச் சொல்லறேன்" என்று சொன்ன அனிகேத் அவர்களை க்ரீன் ரூமுக்கு அழைத்துப் போனான்.

பவித்ராவும், அதிதியுமாகப் பேசி என்னவெல்லாம் பேச வேண்டும் என்று ஒரு முன்னோட்டம் பார்த்துக் கொண்டார்கள். ஆமாம், அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்தே நிகழ்ச்சியை கம்பியரிங் செய்யலாம் என்று முடிவெடுத்திருந்தார்கள்.

நிகழ்ச்சி தொடங்கியது. அதிதி மேடைக்கு வந்து நல்லபடியாக அறிமுகம் செய்தாள்.
"எங்கள் காலேஜின் மிகச்சிறந்த மியூசிக் பேண்ட் உங்கள் முன்னே, உங்களுக்குப்
பிடித்த பாடல்களை வழங்குகிறார்கள். இன்றைய இளமை என்ற தலைப்பில் அன்று முதல் இன்று வரை மக்களிடையே பிரபலமான தமிழ்ப்படப் பாடல்களை உங்களுக்கு முன்னால் வாசிக்கப் போகிறார்கள்" என்று சொல்லி விட்டு, அந்தக் குழுவில் இருந்தவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

"இதோ என் கூட நிற்கிறாளே, என்னுடைய தோழி பவித்ரா, இந்த புரோகிராமை விமர்சனம் செய்வதற்காகவே வந்திருக்கிறாள். குற்றம், குறைகளைத் தயங்காமல் எடுத்துச் சொல்லப் போகும் நமது நக்கீர பரம்பரை பவித்ராவை, இரு கை நீட்டி வாழ்த்துகிறேன். நானும் பவித்ராவும் மேடைக்கு வரும்போதெல்லாம் எனக்கும் காரசாரமான வாக்குவாதம் நடக்கும். ரசியுங்கள் " என்று சொல்ல, பயங்கரக் கைதட்டல் தொடர்ந்தது.

"இளமை இதோ இதோ" என்று அனிகேத், கிடாருடன் மேடையில் வந்து நின்றதும் ஆடியன்ஸ் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடல்களில் ஆரம்பித்து இன்றைய சரண், கார்த்திக், விஜய் பிரகாஷ், சித் ஸ்ரீராம் வரை பாடியுள்ள பிரபலமான பாடல்களை ஒரு கலவையாக அதாவது மெட்லியாக அவர்கள் தொகுத்து வழங்கியது உண்மையிலேயே மிகவும் நேர்த்தியாக இருந்தது.

"நன்றாக முயற்சி செய்திருக்கிறார்கள்.

ஆனால் சில இடங்களில் குரல் ஒத்துழைக்கவில்லை.

சில இடங்களில் ஸ்ருதி தவறிவிட்டது, பாவம்.

சில இடங்களில் பீட்( தாளம்) சரியாக இல்லை.

இன்னும் கொஞ்சம் துடிப்பு இருந்திருக்கலாம்.

ஓகே ஓகே பெர்ஃபாமன்ஸ்"

என்று பவித்ரா தனது குற்றச்சாட்டுகளைக் கடுமையாக அடுக்கி, அங்கிருந்த பார்வையாளர்களிடம் பயங்கர சலசலப்பு.

"சினிமாப் பாடல்கள் வெளியிடப்படுவதற்கு முன்னால் ரெகார்டிங்கில் தவறுகளைச் சரி செய்தால் எத்தனையோ சான்ஸ் கிடைக்கும். தனித்தனியாகப் பாடக் கூடச் சேர்ப்பார்கள். சிறிது நேரம் நடு நடுவே இடைவேளை விட்டு இளைப்பாறிய பிறகு கூடப் பாடுவார்கள். அவங்களோட தீவிர உழைப்பை நாம் நிச்சயம் மதிக்க வேண்டும்.

அதிதியிடம் இருந்து மைக்கை வாங்கிக் கொண்ட பவித்ரா பார்வையாளர்களைப் பார்த்து,

"எனக்கு இசையில் ஆர்வம் கிடையாது. மனதில் கோபத்துடன், எரிச்சலுடன் தான் இந்த நிகழ்ச்சியைப் பார்க்க வந்தேன். ஆனால் என்னையும் மியூசிக் என்ற உலகத்தில் நுழைய வைத்த இந்தக் குழுவின் இசை. இதற்காக உழைத்த இவர்கள் அனைவரையும் இப்போது மனதாரப் பாராட்டுகிறார்கள். உண்மையில் மிகவும் சிறப்பான இசை நிகழ்ச்சியாக இருந்தது. இனிமேல் நான் என்னை மறந்து பாடல்களை ரசித்தேன் என்பது உண்மைதான். ஆர்ப்பரித்து மகிழ்ந்தது.

இசை என்ற அரக்கன் பவித்ராவின் மனதையும் வீழ்த்தி வெற்றி கொண்ட பின் உள்ளே புகுந்து முற்றுகை இட்டு விட்டான். இனி என்னவெல்லாம் செய்யப் போகிறானோ தெரியவில்லை!

ஓடி வருகையிலே கண்ணம்மா
உள்ளம் குளிருதடீ!
ஆடித் திரிதல் கண்டால் உன்னைப் போய்
ஆவி தழுவுதடீ!

தொடரும்,

புவனா சந்திரசேகரன்.
 

Author: Puvana
Article Title: மீட்டாத வீணை 3
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
இசைக்கு மயங்காதவர் யாரேனும் உண்டோ
 
Top Bottom