வணக்கம் மக்களே🙏
தோழிகள் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்⚘️⚘️⚘️
சைட் தொடங்கி போட்டி நடத்தலைன்னா சாமி கண்ணைக் குத்துமாமே😍
ஆகையினால… இப்ப நான் என்ன சொல்றது… அதாகப்பட்டது மக்களே… விஷயம் என்னன்னா…. நம் கதைத்தறி தளத்தில் கதை எழுதற போட்டி நடக்கப் போகுது.
கரு / Theme
ஆடி அல்லது கண்ணாடி
(Lens & Mirror)
இந்த உலகத்து மேல நம்ம எல்லாருக்குமே முன் முடிவுகள், விருப்பு, வெறுப்புகள், பாரபட்சம்னு வெவ்வேறு நிறம் மாறும் பார்வைகளும் கோணங்களும் உண்டு.
அதே போல பிறருக்கு நம்மை எப்படி, எவ்வளவு வெளிக்காட்டலாம் என தீர்மானிக்கும் மனிதர்களும் உண்டு.
முகம் பார்க்கும் கண்ணாடி முதல் மூக்குக் கண்ணாடி, ரசம் போன கண்ணாடி, திரையாக இடை நிற்கும் கண்ணாடி, நாம் பிறரைப் பார்க்கும் கண்ணாடி, நம்மைப் பிறர் பார்க்கும் கண்ணாடி, குளுமையைக் கொடுக்கும் கண்ணாடி, கூசும் வெளிச்சத்தைத் குறைக்கும் கண்ணாடி, அடுத்தவரை எட்டிப் பார்க்கும் தொலைநோக்கி, சிறிதைப் பெரிதாக்கும் பூதக் கண்ணாடி, வெவ்வேறு கோணத்தில் வெவ்வேறு பரிமாணம் காட்டும் கலைடாஸ்கோப் வரை ஆடிகளும் பார்வைகளும் அநேகம்.
இப்படியெல்லாம் சொல்றதால இது சீரியஸ் போட்டினு நினைச்சு ஓட வேண்டாம் ஃப்ரெண்ட்ஸ்😍
வித்தியாசமான குணநலன்களுடைய, நம் வாழ்க்கைச் சூழலில் சந்தித்த, சந்திக்கும் இயல்பு மீறாத கதா பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து நம்மிடையே உலவ விடுங்கள்!
காமெடி, சோகம், த்ரில்லர், பீரியட், காதல், குடும்பம், ஃபீல் குட், ஹிஸ்டரி, ஜியாகரஃபினு எதை வேணும்னாலும் எழுதுங்க.
ஆனா, கூடிய வரை பிழையில்லாத தமிழ்ல எழுதுங்க.
வார்த்தைகளில் வன்முறை வேண்டாம், வரைமுறை போதும்.
ஆசையான அன்பான சொற்களை உபயோகியுங்கள், அதீதமும் ஆபாசமும் நமக்கெதற்கு?
சுருக்கமா சொன்னா கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.
தள வேறுபாடின்றி எழுத விரும்பும் யாவரும் போட்டியில் கலந்து கொள்ளலாம். எழுத்தாளராக விரும்பும் வாசகர்களுக்கு வாழ்த்தும் வரவேற்பும்⚘️
பரிசு
தேர்ந்தெடுக்கப்படும் முதல் இரண்டு கதைகளுக்கு தலா ₹3000/-
சிறப்பாக டஃப் கொடுக்கும் நான்கு கதைகளுக்கு தலா ₹1000/-
வாசகர்களுக்கு…
அனைத்து கதைகளையும் படித்து விமர்சனம் செய்யும் ஐந்து வாசகர்களுக்கு வசீகரமான பரிசுகள் வெயிட்டிங்!
மார்ச் 25ம் தேதிக்குள்
1.உங்கள் பெயரையும்,
2.கதையின் தலைப்பையும்
3.email id உடன்
kadhaithari@gmail.com என்ற email idக்கு அனுப்பி வையுங்கள்.
அத்தியாயங்களைப் பதிவிடத் தயாரானதும் திரிகள் உருவாக்கித் தரப்படும்.
கதை எழுத வேண்டிய காலம் ஏப்ரல் 1 முதல் மே 31 வரை.
கதைகள் 17000 முதல் 20000 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதவும்.
போட்டி முடிவுகள் ஜூன் மாதம் 18ம் தேதி அறிவிக்கப்படும்.
நம்ம தறில கலர் கலரா கதை நெய்ய வாங்க மக்கா!
நன்றி💙
வேதா விஷால்💙
அனன்யா 🙏 🙏