• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நினைவெல்லாம் நீயே 7

Subha Balaji

Member
Joined
Jun 30, 2024
Messages
71
நினைவெல்லாம் நீயே-7

அவர்கள் கிளம்பி போனதும் பேசியதில் மனம் ஓய்ந்து போய் ஆராதனா அப்படியே தரையில் தாத்தாவின் நாற்காலிக்கு அருகில் உட்கார்ந்து கொண்டாள்.

நடந்ததை பார்த்து எதுவுமே பேசாமல் இருந்த பராங்குசம் தம்பதியர் தங்களது அருகில் வந்து உட்கார்ந்த ஆராதனாவின் தலையை பாசமாக தடவி விட்டனர்.

"பாத்தீங்களா பாட்டி..அவங்க எப்டி பேசறாங்க..இதுவரைக்கும் எங்க மேல அக்கறையே இல்லாம இருந்தவங்க..
சினிமால நடிக்க போறேன்னு தெரிஞ்சதும் ஓடி வர்றாங்க.."
"அவனுக்கு அப்பாவோட பிறந்த நாள் கூட நினைவே இல்ல..எதாவது ஒரு வார்த்தை. பேசினானா..பாருங்க.."

"வந்தான்..பொம்மை மாதிரி நின்னான்..அவங்க போகலாம்னு சொன்னதும்..அப்படியே ரோபா மாதிரி கிளம்பி போயிட்டான்.."

"எனக்கு நெஞ்சே வெடிச்சிடும் போல இருக்கு.."என சொல்லி சுசீலாவின் மடியில் படுத்து கதறி அழ ஆரம்பித்தாள்.

அவள் சற்று தெளிந்ததும் மணி "இப்ப கேட்க கூடாது தான்...ஆனா..நான் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துல இருக்கேன்..மா..நீ நடிக்கறதை பத்தி என்ன முடிவு எடுத்திருக்கனு சொன்னா..நான் பிரபு சார்க்கு சொல்ல வசதியா இருக்கும்.." என கேட்டான்

அவள் "அண்ணா..நான் ஏற்கனவே சொன்னது தான்.. இதுல யோசிக்க எதுவும் இல்ல..தாத்தா பாட்டி முடிவு தான் என் முடிவு.." என தீர்மானமாக பதில் சொன்னாள்

சில நிமிடங்கள் யாரும் எதுவும் பேசாமல் அமைதியாக கழிந்தது. தன் தொண்டையை கனைத்து கொண்ட பராங்குசம் "பிரபு ரொம்ப பெரிய ஆள் மா..அவரை பகைச்சுக்கறது சரியில்ல..அதனால் அவரோட இந்த படம் மட்டும் நீ நடிச்சு கொடுத்திடு..அடுத்தது என்னனு பிறகு பார்க்கலாம்.."

"அங்க நம்ம வீட்டு பொண்ணுக்கு நல்ல பாதுகாப்பா இருக்கும்..மணி உன் கூடவே இருப்பான்..நானும் இந்த படம் முடியறவரைக்கும் உன் கூட வரேன்.."

"அதனால உங்க பாட்டிக்கும் டென்ஷன் இல்லாம நிம்மதியா இருக்கும்.." என விஷயங்களை தெளிவாக பேசினார்.

"தாத்தா..நீங்க சொல்றது தான் சரி..அப்டியே பண்ணிடலாம்..நான் கெளம்பறேன்.."

"சார் கிட்ட பேசிட்டு என்ன விஷயம்னு சொல்லுங்க..நான் காலைல வரேன்..." என சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

நடந்ததை பார்த்து ஏற்கனவே மனம் நொந்திருந்தவர் "சரி..எதை பத்தியும் யோசிக்காம போய் நிம்மதியா தூங்கிட்டு காலைல வா கண்ணு " என சொல்லி அனுப்பி விட்டு..

"மணி.. பிரபுக்கு போன் பண்ணி குடு.." என அவனை போன் செய்து தர சொன்னார்.

அவன் போன் செய்ததும் உடனே போனை எடுத்த பிரபு "சொல்லு மணி.." என்றதும்

"நான் பராங்குசம் பேசறேன் தம்பி..
மணியோட அப்பா..நீ இப்ப வேலை எதாவது செஞ்சுட்டுட்டு இருக்கீயா.."

"இல்ல ப்ரீயா இருக்கீயா..உன் கிட்ட அஞ்சு நிமிஷம் பேசணுமே தம்பி.." என சொன்னதுமே

"சொல்லுங்க ஐயா..வீட்டுல தான் இருக்கேன்..இப்ப எந்த வேலையும் இல்ல..என் கிட்ட என்ன பேசணும்.."

"அதான் பா..எங்க ஆராதனாவை நீ எடுக்கற படத்துல ஹீரோயினா நடிக்க கூப்பிட்டதா மணி சொன்னானே..அது விஷயமா தான் பேசணும்.."

"ஏற்கனவே ஒருத்தர் பாதி நடிச்சிருக்கும் போது..அவங்களை எடுத்துட்டு அந்த இடத்துல என் பேத்தியை நடிக்க வெக்கறது உன்னோட விருப்பமா இருக்கலாம்.."

"நம்ம சினிமா துறையில இருக்கிற சென்டிமென்ட் பத்தி உனக்கு தெரியாதது இல்ல தம்பி..."

"அவ இந்த ஒரு படம் தான் நடிப்பேன்னு சொல்லி இருக்கா..ஒரு வேளை தொடர்ந்து நடிச்சா..அவளை தேடி வர்ற எல்லா படமும் இதே மாதிரி பாதியில நடிக்கற மாதிரியே வெச்சு அவளுக்கு பேரே அதே மாதிரி மாத்திடுவாங்க.."

"அதுவும் இல்லாம...அந்த பொண்ணோட பொழப்பை கெடுத்து என் பேத்தி வாழ்ந்தானு ஒரு கெட்ட பேர் அவளுக்கு வர கூடாதுனு நான் நினைக்கிறேன் தம்பி.." என தான் சொல்ல வந்ததை கோர்வையாக சொல்லி முடித்தார்.

நடுவில் குறுக்கிடாமல் எல்லாவற்றையும் அமைதியாக கேட்ட பிரபு அவர் பேசி முடித்ததும் "நீங்க சொல்றது எல்லாம் நியாயமா தெரியுது..ஐயா..ஆனா என் நிலையை கொஞ்சம் யோசிச்சு பாருங்க.."

"உங்க கிட்ட சொல்றத்துக்கு என்ன..ஏற்கனவே படத்துக்கு தேவையான பணம் எல்லாத்தையும் தன்ராஜ் சார் குடுத்திட்டாரு.."

"நானும் ரூபாக்கு இந்த படத்துல நடிக்கறத்துக்கு அவர் சொன்ன மாதிரி முழு பணமும் செட்டில் பண்ணிட்டேன்.."

"பாதி படம் ஷீட்டிங் எடுக்கற வரைக்கும் அமைதியா இருந்துட்டு இப்ப இன்னும் பத்து லட்சம் குடுத்தா தான் மீதி படத்துல ரூபா நடிப்பானு அவ அம்மா சொல்றாங்க ஐயா.."

"ரூபாவை எப்படியும் ரீச் பண்ணவே முடியல..அவ போனே அவங்கம்மா தான் எடுக்கறாங்க... "

"தன்ராஜ் சார் காசு விஷயத்துல கறாரானு ஆளுனு உங்களுக்கு தெரியாதது இல்ல..மறுபடியும் போய் காசு கேக்க முடியாது.. "

"என் கிட்டயும் அவ்ளோ காசு இல்ல..நானும் ஒரு பெரிய ப்ரேக் எடுத்துக்கிட்டு தான் மறுபடியும் இந்த படத்தை டைரக்ட் பண்றேன்.."

"அவ குடுத்த குடைச்சலை தாங்க முடியாம என்ன பண்றதுனே தெரியாம நான் தலையை பிச்சிக்கிட்டு இருக்கும் போது தான் உங்க பேத்தியை பாத்தேன்..மணி கிட்ட பேசினேன்.." என நடந்ததை தெளிவாக எடுத்துரைத்தார்.

"நான் ஒண்ணு சொன்னா தப்பா நெனக்க மாட்டீங்களே.." என பீடிகையோடு பராங்குசம் பேச.."நீங்க வயசுல பெரியவங்க..உங்க மேல எனக்கு எப்பவும் மதிப்பு அதிகம்..உங்களை நான் எங்கப்பா ஸ்தானத்துல தான் வெச்சிருக்கேன்.."

"எனக்கு தப்பா நடக்கற அளவுக்கு எதுவும் பேச மாட்டீங்கனு எனக்கு நம்பிக்கை இருக்குங்க ஐயா.. என்ன சொல்லணும்னு நெனக்கறீங்களோ..அதை எந்த தயக்கமும் இல்லாம தைரியமா சொல்லுங்க.."என ஊக்கம் கொடுத்ததும்..

"தம்பி..இப்ப மணி பத்தாக போகுது.. நீங்க சிரமம் பார்க்காம..தன்ராஜ் போன் பண்ணி அவரை நேர்ல உடனே வந்து பாக்கணும்..ரொம்ப அவசரம்னு சொல்லி வீட்டுக்கு போயி இதை எல்லாம் சொல்லிடுங்க.."

"வேற யார் மூலமாவது அவர்க்கு தெரியறத்துக்கு முன்னால நீங்களே சொல்லிடறது நல்லது.."

"அவர் என்ன முடிவு எடுக்கறாரு அதுக்கு கட்டுப்படலாம்.."

"அந்தம்மா அதிக நாளா தொல்லை தரல..இப்ப ஒரு வாரம் தான் பிரச்சினை பண்றாங்கனு தெளிவா சொல்லுங்க.."

"என்ன பணம் போட்டதால..கொஞ்சம் சத்தம் போடுவாப்பல.."

"அவர் சத்தம் போடறவரைக்கும் அமைதியா இருங்க...அதுக்கு பிறகு என்ன பண்ணணும்னு அவர் சொல்வாரு.." என பராங்குசம் சொன்னார்

அதை கேட்டதுமே பெரிதும் மகிழ்ந்த பிரபு "ரொம்ப.. ரொம்ப சந்தோஷம் ஐயா..வேற யாராவது இருந்தா இதை பெரிய பிரச்சனை ஆக்கி இருப்பாங்க.."

"நீங்களா இருக்கவே இதுக்கு ஒரு வழி சொன்னீங்க...நான் இப்பவே நீங்க சொன்ன மாதிரியே பண்றேன்.." என சொல்லி அவருடைய போன் காலை கட் செய்து விட்டு தன்ராஜை அழைத்து பராங்குசம் சொன்னது போல வார்த்தை மாற்றாமல் பேசி அவரிடம் அனுமதி வாங்கி கொண்டு நேராக அவர் வீட்டுக்கு போனார்.

தன்ராஜ் வீட்டுக்கு போய் சேர்ந்ததும் அவரை வரவேற்று உட்கார வைத்த தன்ராஜ் அவர் மனைவியை அழைக்க அவரும் வந்து உட்கார்ந்து கொண்டார்.

காரில் வரும் போதே பிரபு என்ன பேச வேண்டும் என யோசித்தபடி வரவே..கவனமாக தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் நடக்கும் விஷயங்களை அவரிடம் தெளிவாக எடுத்து சொன்னார்.

அதை கேட்டதுமே "ஏன் எங்கிட்ட நீ மொதல்லயே சொல்லல..பணம் என்ன மரத்துலயா காய்க்குது..அந்த பொம்பளை காலைல அப்டி பண்ணும் போதே நீ சொல்லி இருந்தா..அப்பவே கூப்பிட்டு பேசி இதை சரி செஞ்சு இருக்கலாம்.."

"இப்ப என்ன பண்றது சொல்லு..பாதி படம் எடுத்த பிறகு அடுத்தது வேற ஆளையா மாத்த முடியும்.. இது என் பேரனோட அறிமுக படம்.."

"ஏதாவது தப்பா நடந்தா..
அவனோட எதிர்காலம் என்னாகும்னு நீ கொஞ்சம் கூட யோசிக்கலையா.." என ஆரம்பித்து கோபமாக பிரபுவை தொடர்ந்து திட்ட எதற்கும் பதில் சொல்லாமல் அமைதியாக உட்கார்ந்து கேட்டு கொண்டார்.

பக்கத்தில் உட்கார்ந்து இருந்த அவருடைய மனைவி ராஜலட்சுமி "போதுங்க..அந்த தம்பி என்ன இதை எல்லாம் எதிர்பார்த்திட்டா இருந்தாரு..உங்க கிட்ட சொல்ல கூடாதுனு நெனச்சிருந்தா இது உங்களுக்கு தெரியவே போறதே இல்ல.."

"ராத்திரி நேரத்துல வந்து சொல்றாருனு எவ்வளவு பதறி போய் இருந்தா இதை சொல்வாரு.." என அவரை சமாதானம் செய்தார்.

"என் கிட்ட பேசறத்துக்கு முன்னால நீ யார் கிட்டயாவது பேசினியா.." என சரியான கேள்வி கேட்ட தன்ராஜை மனுஷனுக்கு ஏகப்பட்ட அறிவு அதான் இப்டி பெரிய பொஸிஷன்ல ஜொலிக்க முடியுது என மனதுக்குள்ளேயே பாராட்டிய பிரபு "ஆமா சார்..காஸ்ட்யூம் சப்ளையர் பராங்குசம் ஐயா கிட்ட பேசினேன்.." என்றார் (தொடரும்)
 
Top Bottom