• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நினைவெல்லாம் நீயே 5

Subha Balaji

Member
Joined
Jun 30, 2024
Messages
71
நினைவெல்லாம் நீயே-5

அங்கிருந்து வெளியே வந்தவன் ஆராதனாவை தேட..அவள் மற்ற ஜுனியர் ஆர்டிஸ்ட்களோடு சிரித்தபடி பேசி கொண்டு இருந்ததை பார்த்தான்.

வேகமாக அவள் அருகில் போனவன் "தனா..இன்னிக்கு சாயந்திரம் நம்ம தெரு விநாயகர் கோயில்ல பூஜைக்கு குடுத்திருக்குனு உங்க பாட்டி போன் பண்ணாங்க.."

"நேரமாச்சு...நாம இப்ப கிளம்பினா தான் சரியா இருக்கும்... போகலாமா..."

அவளும் ஒரு நிமிடம் யோசித்து விட்டு "போகலாம்.. அண்ணா.." என சொல்லி அவனோடு கிளம்பினாள்.

வரும் வழியில் ஒரு ரெஸ்டாரன்டை பார்த்து தன் காரை நிறுத்தியவன் "தலை வலிக்குது..ஒரு காஃபி குடிச்சிட்டு போகலாமா.." என கேட்டு இறங்கி உள்ளே போக..அவளும் எதுவும் பேசாமல் இறங்கி அவனை தொடர்ந்தாள்.

உள்ளே போய் உட்கார்ந்து காஃபியும், வடையும் ஆர்டர் செய்து விட்டு வந்ததும் அவள் பக்கமாக நகர்த்த அவளுக்கு இருந்த பசிக்கு தட்டில் இருந்தது நிமிடத்தில் காலியானது.

சாப்பிட்ட பின் மெல்ல மணி "நான் இன்னிக்கு டைரக்டர் கூட பேசிட்டு இருந்தேன்..பாவம் மனுஷன்..ரூபாவோட ஆர்பாட்டத்தை எல்லாம் சொல்லி புலம்பறார்.."

"ஷீட்டிங் வெச்சா ஒழுங்கா வர்றதில்லையாம்..குடுத்த பேமன்ட் போதாது இன்னும் வேணும்னு அவங்க அம்மா தகராறு பண்றாங்களாம்.."

"தன்ராஜ் சார் கிட்ட ஏற்கனவே பட்ஜெட் போட்டு குடுத்து மொத்த அமௌண்டும் வாங்கிட்டாராம்.."

"இப்ப மறுபடியும் பேமன்ட்னு சொல்லி கேட்டா..அவர் குடுக்க மாட்டாராம்.." என சொன்னபடி இருந்தவனை ஆச்சர்யமாக பார்த்து

"சரி..அண்ணா..இதை எதுக்கு என் கிட்ட சொல்றீங்கனு எனக்கு புரியலயே.." என கேட்டாள்.
"உன் கிட்ட ஒரு காரணம் இருக்கு..
பொறு..சொல்றேன்...அது என்னனா....
"டைரக்டர் சார் உன்னை பாத்தாராம்..நீ அசப்புல பாக்க ரூபா மாதிரியே இருக்காம்.."
"இந்த படம் பாதி தான் எடுத்திருக்காராம்..
மீதியை உன்னை வெச்சு எடுத்திடலாம்னு நெனக்கறாராம்...உன்னை இந்த படத்துல ஹீரோயினா நடிக்க வெக்க முடியுமானு என் கிட்ட கேட்டார்.."
"முடிவெடுக்கறது எல்லாம் நீ தான்.. உன்னை கேட்டு சொல்றேன்னு சொல்லிட்டேன்..நீ என்ன நினைக்கறே.." என எல்லாவற்றையும் விளக்கி விட்டு அவளிடம் கேட்டான்.
அவளுக்கு முதலில் கேட்டது புரியவில்லை.. சில நிமிடத்தில் அவன் சொன்னது புரிந்து அதை நம்ப முடியாமல் "நிஜமாகவே டைரக்டர் அப்டியா கேட்டார்..என்னால நம்ப முடியல அண்ணா.."
"இதுல நான் முடிவெடுக்க எதுவும் இல்ல..இதுவரைக்கும் என் விஷயங்கள் எல்லாத்திலும் என்னை வழி நடத்தறது தாத்தாவும் பாட்டியும் தான்.. அதனால அவங்களை கேட்டு முடிவெடுக்கலாம்.."
அவள் வார்த்தைகளில் மனம் குளிர்ந்தவன் அதை காட்டி கொள்ளாது "சரி வா...கிளம்பலாம்.. இன்னிக்கு நைட்க்குள்ள..அவர்க்கு நாம பதில் சொல்லணும்.." என சொல்லி அங்கிருந்து கிளம்பினார்கள்
வீட்டுக்கு போனதுமே அம்மா பார்த்து விட்டு அவளின் நலத்தை விசாரித்தவள், முகம் அலம்பி, வேறு உடை மாற்றி கொண்டு விளக்கு ஏற்றி விட்டு அம்மாவுக்கு சுக்கு காஃபி குடுத்தவள் அடுக்களையில் பார்க்க, இரவு சமையலாக அம்மாவுக்கு குழைந்த சாதம், ரசம் கொஞ்சமாக காரசார சேப்பங்கிழங்கு வதக்கல் என அத்தை சமைத்து வைத்திருந்ததை பார்த்து மகிழ்ச்சி அடைந்தாள்.
அம்மாவிடம் தாத்தா வீட்டுக்கு போவதாக சொல்லி விட்டு பராங்குசத்தின் வீட்டுக்கு வந்து சேர்ந்தவளை வரவேற்ற சுசீலா "வா டி..வா..எப்டி இருந்தது..ஷீட்டிங் பாத்தது எல்லாம்.." என அக்கறையோடு கேட்டார்.
"எல்லாம் நல்லா தான் இருந்தது பாட்டி..தாத்தா எங்க.." என கேட்க..
அவர் கோயில்ல இருக்காரு...உனக்காக தான் காத்துட்டு இருந்தேன்..வா நாம போகலாம்.." என்று அவளையும் அழைத்து கொண்டு கோயிலுக்கு போக அங்கிருந்த பராங்குசம், மணி, அவன் மனைவி ராகினி, அவர்களின் குழந்தைகள் மற்றும் அவர்களின் போர்ஷனில் இருப்பவர்கள் என அந்த விநாயகர் கோவில் ஆட்களால் நிறைந்திருந்தது.
பூஜை, அபிஷேகம், நைவேத்தியம், ஆரத்தி, அர்ச்சனை என அங்கிருந்த குருக்கள் எல்லாவற்றையும் சரியாக செய்து வரிசையாக எல்லாரையும் நிற்க சொல்லி பிரசாதம் தந்து மனநிறைவாக அவர்களை அனுப்பி வைத்தார்.
வீட்டுக்கு வந்ததும் ஆராதனா பராங்குசம், சுசீலாவிடம் மணி சொன்னது எல்லாம் சொல்லி முடித்தாள். அவள் சொல்லும் வரை குறுக்கிடாமல் கேட்ட பராங்குசம் "நீ என்ன முடிவு எடுத்திருக்க கண்ணு" என்று அவளின் மனநிலையை தெரிந்து கொள்ள கேட்டார்
அவளோ "எனக்கு எதுவும் தெரியாது.. எனக்கு தாத்தா, பாட்டினு நீங்க இருக்கும் போது நான் எதுக்கு தனியா யோசிக்கணும்..முடிவு எடுக்கணும்.. நீங்களே என்ன பண்ணலாம்னு சொல்லுங்க" என பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
பராங்குசம் "பிரபு நல்ல டைரக்டர்.. தன்ராஜ் எனக்கு நண்பன்..அவன் படம்னா எந்த வம்பும் இருக்காது..நம்ம ஆராதனா தைரியமா நடிக்கட்டும்.."என்றார்
மணியும் "ஆமா..ஆமா..தன்ராஜ் சார் படம்னா நல்லபடியா பாத்துப்பாங்க..யாரும் தேவையே இல்லாம பொம்பளைங்க கிட்ட பேச கூடாது.."

"எதாவது தேவை இருந்தா அவங்களுக்குனே ஒரு பொம்பளை மேனேஜர் இருப்பாங்க.."

"அவங்க மூலமா தான் எல்லா பேச்சும் நடக்கும்.. அதனால யாருக்கும் எந்த பயமும் இல்லாம..சொந்த வீட்டுல இருக்கிற மாதிரி இருக்கலாம் மா.." என தன் பங்குக்கு சொன்னான்.

"நீங்களே பேசினா எப்படிங்க..
ஆராதனாவுக்கு என்ன வேணும்னு அவளை கேளுங்க..அவளுக்கு நீங்க முடிவு எடுக்காதீங்க.."

"இன்னிக்கு எல்லாமே சரியா இருக்கும்..பிரச்சினை எதுவும் வரவேண்டாம்..ஒரு வேளை எதாவது பிரச்சினை வந்தா..."

"எனக்கு நல்ல வாய்ப்பு வந்தது..
இவங்க தான் வேணாம்னு சொல்லி என் வாழ்க்கையை மாத்திட்டாங்கனு உங்களை குறை சொல்ல கூடாது.." என மணியின் மனைவி ராகினி எப்போதும் போல ஆராதனாவை நோக்கி தன் வார்த்தை அம்புகளை எய்தாள்.

அதை கேட்ட மணி "இந்தா..நீ கொஞ்சம் சும்மா இருக்கியா..எல்லாத்துக்கும் நாட்டாமை பண்ண வந்துடாத..சரியா"

"அவளும் நம்ம வீட்டு ஆளு...தான்..இது எங்க குடும்ப விவகாரம்..நீ பேசாம வேடிக்கை பாரு..போதும்.." என அவளை நிறுத்தாமல் திட்டினான்.

பராங்குசம் "டேய்..டேய்..இவ்ளோ பெருசா வளர்ந்திருக்க..தினமும் நூத்துக்கணக்கான ஆளுங்களோட பழகற.."

"ஆனா வீட்டு பொம்பளைங்க கிட்ட என்ன பேசணும்னே தெரியாதா..நீ அடங்கு டா.."என்றவர்

"அம்மா..அவன் ஏதோ ஆராதனா மேல இருக்கிற பாசத்துல சொல்லிட்டான்..நீ தப்பா நெனக்காத.." என தன் மருமகளை சமாதானம் செய்தார்.

அவர் பேசியதை கேட்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்த ராகினியை பார்த்தபடி பராங்குசம் "அவங்களுக்கு ஒரு கஷ்டம்னு சொல்றப்ப உதவறதுல தப்பில்ல..போனா போகட்டும்.."

"ஒரு படம் நடிக்கட்டும்.. அப்பறம் என்ன நடக்குதோ அப்ப பாக்கலாம்.."என சொல்லி பேச்சை முடிப்பதற்குள் சுசீலா...

"வேணாம்ங்க..ஆராதனாக்கு சினிமா வாசனையே வேணாம்..ஒரு படத்துல நடிச்சு..புகழ் போதை வந்துட்டா..அதுக்கு பிறகு அதுக்காக எந்த எல்லைக்கு வேணாலும் போக தோணும்.."

"அது என் பேத்திக்கு வேணாம்..இனி அவ எந்த ஷீட்டிங்க்கும் போக கூடாது.."

"அவ எப்பவும் போல அமைதியா நம்ம கடையை பாத்துக்கட்டும்...அவ நிம்மதியா இருக்கணும்..அது போதும்..இது தான் என் முடிவு.." என தீர்மானமாக சொன்னார்

"சரி பாட்டி..எனக்கு சினிமால நடிக்கணும்னு ஆசை எல்லாம் இல்ல..வருமானம் கொஞ்சம் அதிகமா வருமேனு பாத்தேன்..அவ்ளோ தான்"

"எனக்கு எல்லாமே நீங்க, தாத்தா, மணி அண்ணா தான்..அண்ணி சொல்றதுலயும் ஒரு நியாயம் இருக்க தான் செய்யுது.."

"என்னிக்கும் நடக்க போற எதுக்கும் நான் யாரையும் குறை சொல்ல மாட்டேன் அண்ணி"

"தாத்தா பாட்டி சொல்றதையே கேட்டு வளர்ந்திட்டேன்..
அவங்களுக்கு பிடிக்கலேனா..
எனக்கும் வேணாம்.. நீங்க சொன்னதை அப்படியே செய்யறேன்.." என சொல்லி முடித்தாள்

"அடி என் கட்டி தங்கம்..முத்து..நான் சொன்னதை எந்த எதிர் கேள்வியும் கேக்காம அப்டியே சரினு சொல்ற"

" உன் நல்ல மனசுக்கு நீ நோய் நொடி இல்லாம..நூறு வருஷம் நல்லா இருப்பே டி ராஜாத்தி.." என சொல்லி அவளை உச்சி முகர்ந்து அணைத்து கொண்டார்.

இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே..அவர்கள் அறியாமல் சப்தமே இல்லாமல் அங்கிருந்து மெல்ல நகர்ந்து உள்ளே போன ராகினி யாருக்கோ போன் செய்து அங்கு நடப்பதை ஒரு வார்த்தை கூட விடாமல் அப்படியே ஒப்பித்தாள். (தொடரும்)
 
Top Bottom