• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நினைவெல்லாம் நீயே 4

Subha Balaji

Member
Joined
Jun 30, 2024
Messages
71
நினைவெல்லாம் நீயே- 4

ஏற்கனவே பாரிச வாயு தாக்கி இருந்த ஆராதனாவின் அம்மாவின் உடல்நிலை இன்னும் சீர் கெட ஆரம்பிக்க அதனுடன் சேர்த்து வேறு சில உடல்நலக்குறைவும் எற்பட ஆரம்பித்தது.

அவரின் மருந்து மாத்திரைகள் வாங்க மாதம் மாதம் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் ஆனது. மணிக்கு தெரிந்த சில மெடிக்கல் ரெப்கள் மூலமாக வாங்கவே இது சாத்தியப்பட்டது. இல்லாது போனால் மருந்துகளின் விலை இதை விட இருமடங்கு ஆகும்...

இந்த சூழலில் செலவை சமாளிக்க இயலாத ஆராதனா மறுபடியும் மணியிடம் தொடர்ந்து சினிமா சான்ஸ் கேட்க ஆரம்பித்தாள்..

அவனும் தன் அம்மாவிடம் ஆராதனாவின் தொடர் கோரிக்கைகளை சொல்லி "அவளை சமாளிக்க முடியல மா..என்ன செய்யறது ஒண்ணும் புரியல மா' கேட்டான்.

அவர் "நீ இன்னிக்கு ஷீட்டிங்க்கு போகும் போது ஆராதனாவை கூப்பிட்டுகிட்டு போ டா...அந்த சூழ்நிலை புடிச்சா..அவ நடிக்கட்டும்...இல்ல எப்பவும் போல நம்ம கடையை மட்டும் பாத்துக்கட்டும்..." என தீர்மானமாக சொல்லி விட்டார்.

அவர் சொன்னது போல அவளை அன்று தன்னுடன் ஷீட்டிங்க்கு அழைத்து போனவன் அங்கிருந்த சூழ்நிலைகளை "ஒரமா உக்காந்து பாரு....நான் என் வேலைகளை முடிச்சுட்டு வரேன்" என சொல்லி தன் வேலையை பார்க்க கிளம்பினான்.

அவளும் காலையில் இருந்து ஒரே இடத்தில் உட்கார்ந்து ஷுட்டிங் பார்த்தவளை அடிக்கடி பார்த்த அந்த படத்தின் டைரக்டர் பிரபுராம், லஞ்ச் ப்ரேக்கில் தன்னுடைய அசிஸ்டெண்ட் டைரக்டர் கிருஷ்ணாவிடம் மணியை தனியாக தன்னுடைய கேரவேனுக்கு அழைத்து வர சொன்னார்.

கேரவேனுக்கு அருகில் போனதும் கதவை தட்டிய கிருஷ்ணா "சார்...சார்" என குரல் கொடுக்க..."கதவு திறந்து தான் இருக்கு...உள்ளே வா கிருஷ்ணா..." என அவர் அழைத்ததும் மணியையும் அழைத்து கொண்டு உள்ளே போன கிருஷ்ணாவை "நீ போய் சாப்ட்டு...அடுத்த ஷாட்க்கு ஆர்ட்டிஸ்ட் ரெடி பண்ணு பா.." என சொல்லி அனுப்பி வைத்தார்.

"சார் வர சொன்னீங்களா" என மணி கேட்க...பிரபுராம் "ஆமா பா..உக்காரு" என தன் பக்கத்து சேரை காட்ட..

இத்தனை வருட சினிமா அனுபவத்தால் மணி "இல்ல சார்...நான் நின்னுக்கறேன்..நீங்க சொல்லுங்க" என மரியாதையாக அவருக்கு பதில் சொன்னான்.

அதை கேட்டதும் வாய் விட்டு சிரித்தவர் "எனக்கு உன் கிட்ட பிடிச்சதே இந்த பணிவு தான் யா...அப்டியே உங்கப்பா மாதிரியே..." என்றவர்...

"ஆனா இப்ப நாம பேச போறது கொஞ்சம் முக்கியமான விஷயம்...நாம பக்கத்துல உக்காந்து பேசினா தான் சரியா இருக்கும்...அது போக...உன்னை நிமிர்ந்து பாத்து பாத்து என் கழுத்து வலிக்குதுயா" என்றதும் அவன் அங்கிருந்த சேரில் பட்டும் படாமலும் உட்கார்ந்து கொண்டான்.

"உன் கிட்ட சொல்றத்துக்கு என்ன..இந்த படம் எனக்கு வாழ்வா..சாவானு முடிவு பண்ண போற படம்..ஹீரோவா நம்ம தன்ராஜ் சாரோட பேரன் அஷோக்ராஜை அறிமுகப்படுத்தறேன்...ஹீரோயின் ரூபா வர்மா..."

"இந்த ரூபாவை அறிமுகம் செஞ்சதே நான் தான்..உனக்கு தெரியும்ல்ல..." என்க அவனும் குழப்பமாக ஆமாம் என தலையசைத்தான்.

"ஆரம்பத்துல அவளும் அவ அம்மாவும் சினிமா சான்ஸ்க்காக என்னோட ஆஃபீஸ்லயே குடி இருந்தாங்க யா.. ரெண்டு படம் நடிச்சு பேர் வந்ததும் எல்லாம் மாறி போச்சு..."

"இது அவளோட பத்தாவது படம்..ஆனா பண்ற ஆர்ப்பாட்டம் இருக்கே.. என்னவோ முன்னூறு படம் நடிச்சிட்ட மாதிரி பண்ற அலப்பறை இருக்கே.. இவ பெரிய ஹைனஸ் மாதிரியும் நாம எல்லாம் பிச்சைக்காரங்க மாதிரியும் பார்க்கறா.."

"இவளே பரவால்ல..இவ அம்மா பண்ற அலப்பறை ரொம்ப அதிகமா இருக்கு மணி..கால்ஷீட் குடுக்கறது..சரியான நேரத்துக்கு ஷீட்டிங்க்கு வரது இல்ல...கேட்டா..பேமெண்ட் இன்னும் அதிகமா தந்தா தான் ரூபா வருவானு தகராறு பண்றதுனு ரொம்ப அராஜகமா இருக்கு.."

"உனக்கு தெரியாதது இல்ல..தன்ராஜ் சார் பண விஷயத்துல எவ்ளோ கரெக்டா இருப்பாரு..அவர் கிட்ட அக்ரிமெண்ட் படி எவ்ளோ கமிட்மெண்ட்டோ அந்த பணத்தை ஏற்கனவே குடுத்துட்டாரு.."

"அதே மாதிரி ஆர்ட்டிஸ்ட்க்கு எல்லாம் படம் ஆரம்பிக்கறத்துக்கு முன்னாலயே முழு சம்பளமும் குடுத்திடுவாரு..ஏன் உனக்கு கூட முழு பேமண்ட் வந்திருக்கும்ல்ல.."

மணி "வந்திருச்சு..அது ப்ரொட்யூசரோட ஸ்டைல் சார்" என பட்டும் படாமலும் பதில் சொல்ல..

"ஆங்..கரெக்டா சொன்ன மணி.. படத்துல நடிக்கற, வேலை பண்ற எல்லாரும் அக்ரிமெண்ட் போட்டதும் முழு சம்பளம் குடுக்கற ஒரே முதலாளி இவர் தான் யா"

"ரூபாக்கும் சம்பளம்னு சொல்லி ஏற்கனவே மொத்த பணத்தை குடுத்தாச்சு இப்ப மறுபடியும் பேமண்ட் தந்தா தான் நடிப்பேன்னு சொல்றது எவ்ளோ பேமானித்தனம்..சொல்லு.."

அதை கேட்ட மணி ஆமோதிப்பதை போல தலையாட்ட..பார்த்தவர் "நான் என்ன பண்றது சொல்லு..இவளுக்கு படியளக்க முடியல பா..ரொம்ப படுத்தறா"

"ஏற்கனவே ஷீட்டிங்க்கு அறுவது நாள் தான் ஆகும்னு பட்ஜெட் போட்டு அதுக்கு மொத்த பணத்தையும் தன்ராஜ் சார் குடுத்துட்டாரு பா.."

"இப்ப மறுபடியும் காசு கேட்டா...சும்மா விடுவாரா சொல்லு..அசிங்கமா திட்டி செருப்பாலயே அடிப்பாரு.."

"இவங்க பண்றது எல்லாம் சார்க்கு தெரியுமா சொல்லு.. படம் எடுக்க சொன்ன தேதிக்கு மேல ஆச்சுனா...நான் தானே யா அவர் கேக்கற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லணும்.. எனக்கு எவ்ளோ டென்ஷன்"

"மொதல்ல எதுவும் செய்யாம ஒழுங்கா வந்து நடிச்சு குடுத்துட்டு, பாதி ஷீட்டிங் முடிஞ்ச பிறகு தான் வேலையை காட்டறாங்க யா...."

"இன்னிக்கு பாரு..காலைல ஒம்போது பணிக்கு ஷீட்டிங்... இது எல்லா ஆர்டிஸ்ட்டும்..
ஒண்ணா இருக்கிற சீன்.."

"எல்லாரோட கால்ஷீட்டும் வாங்கி அவங்க எல்லாரும் வந்த பிறகு..இவ மட்டும் வரல..எவ்ளோ டென்ஷன் தெரியுமா..."

"எப்ப போன் பண்ணாலும் பாப்பா எழுந்துட்டா..ரெடி ஆகிட்டா..தோ பத்து நிமிஷத்துல வந்துடுவா...அரை மணி நேரத்துல வந்துடுவானு அவ அம்மாகாரி சொல்லிட்டு இருந்தா.."

"இப்ப மணி என்னாகுது பாரு..லஞ்ச் ப்ரேக்கே விட்டாச்சு..இப்ப போன் பணாணா இன்னொரு பத்து லட்சம் தந்தா தான் அவ நடிக்க வருவானு சொல்றா..."

"இவளை எல்லாம் என்ன பண்றதுனே தெரியல...இதுல எங்கப்பா மும்பாய்ல பெரிய தொழிலதிபர்..எங்களுக்கு பணம் பெருசு இல்ல..நல்ல கேரக்டர் தான் முக்கியம்னு மீடியால பேட்டி குடுக்கறா..."

"இவ ஆத்தாக்காரி குடுக்கற குடைச்சலை எல்லாம் சேத்து சொல்ல வேண்டியது தானே..எல்லாம் என் தலையெழுத்து யா..." என வேதனையோடு சொல்ல...

இதெல்லாம் தன்னிடம் எதற்காக சொல்கிறார் என குழப்பமாக பார்த்த மணியை "ரொம்ப யோசிக்காத யா..என்னால இவங்களை வெச்சு எப்டி சமாளிக்கறது தெரியாம குழம்பிட்டு இருக்கறப்ப..தான் இன்னிக்கு அந்த பொண்ணை பார்த்தேன்...என்னா கண்ணு யா...பேசவே வேணாம்...நடிக்க வேணாம்..அதோட கண்ணே எல்லாம் செஞ்சுடும் யா..." என சொன்னதும் அவரை மணி குழப்பமாக பார்த்தான்.

"சார்..தப்பா நெனக்கலேனா..நீங்க பேசினது எனக்கு எதுவும் புரியல..தயவு செய்து கொஞ்சம் தெளிவா சொல்றீங்களா.." என பணிவாக கேட்டான்.

"அதான் யா..இன்னிக்கு உன் கூட ஒரு பொண்ணு வந்திருக்கே...ஓரமா உக்காந்து நடக்கறது எல்லாத்தையும் பாத்துட்டு இருக்கே...அந்த பொண்ணை தான் சொன்னேன்..."

"இன்னிக்கு வரைக்கும் பாக்க போறேன்...ரூபா வரல..அந்த பொண்ணு பாக்க...ரூபா மாதிரியே இருக்கு..அவளை வெச்சு மீதி படத்தை எடுத்துடுவேன்...அந்த பொண்ணு யாரு யா.." என விசாரிக்க...

மணி அவரின் ஆராதனாவை பற்றியும் அவளுடைய குடும்ப நிலையையும் விரிவாக அவரிடம் எடுத்து சொல்லி "அவளுக்கு பணப்பிரச்சனை அதிகமா இருக்கு சார்..அதான் சினிமால நடிக்க வரேன்னே சொன்னா..."

"ஆனா இந்த ரூபா மேடம் எல்லாம் ரொம்ப பெரிய ஆளு சார்...அவங்களை எதிர்த்து எல்லாம் அவ ஹீரோயினா நடிப்பாளானு தெரியல.." என சொன்னான்.

"மேடம்மா...போ யா.."என வாய்க்குள் ரூபாவை அசிங்கமாக திட்டிய பிரபுராம் "இவளுங்க பண்ற அசிங்கம் எல்லாம் ஊருக்கு தெரியாது யா..எல்லாரும் டைரக்டர் முசுடு..செட்ல கோவப்படுவான்..டைம்க்கு சூட்டிங்க்கு வரமாட்டான்னு எனக்கு தான் யா கெட்ட பேரே.."

"இந்த குடைச்சல் எல்லாம் மறக்கணும்னா நைட் என்னை மறந்து தூங்க தூக்க மாத்திரை போட்டுக்கறேன் யா..சமயத்துல ரெண்டு மூணு மாத்திரை கூட எடுத்துக்கற மாறி ஆகுது யா.. "

"சரியான தூக்கம் இல்லேனா அடுத்த நாள் பாக்கற எல்லாத்துமேயும் எரிச்சலா வருது..உன் கிட்ட சொல்றதுக்கு என்ன..நிறைய சமயம் கன்டினியூட்டி கூட மறந்துடுது யா..கத்தி தீர்த்திடறேன்..
அப்பறம் தான் கொஞ்சம் சரியாகுது..ம்ம்ம்..விடு அது என் தலவிதி.."

"என்ன சொல்ல வந்தேன்..ஆங்..ரூபா கவலை உனக்கு எதுக்குயா..நான் பாத்துக்கறேன்...நீ அவளுக்கு சம்மதமானு கேளு...அவளுக்கு ஓகேனா..நான் என்னோட சம்பள பணத்துலேந்து அவளுக்கு நடிக்க சம்பளம் தரேன்..நீ இன்னிக்கு நைட்க்குள்ள கேட்டு சொல்லு...நான் ஆட்டிஸ்ட்னு மத்த ஏற்பாடுகளை பாக்கணும் யா..." என அவனிடம் சொல்லி விட்டு எழ

மணியும் "சரி..சார்..நான் பேசிட்டு சொல்றேன்..என அவனும் கேரவேனில் இருந்து வெளியே வந்தான்.

அவன் கேரவேன்க்கு போனதில் இருந்து வெளியே வந்தது வரை கேரவேனுக்கு வெளியேவே நின்று பார்த்தபடி இருந்த ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டர் அவனிடம் வந்து "என்ன மணி...சார் கிட்ட ரொம்ப நேரம் பேசிட்டு இருந்த போலிருக்கு.. என்னா விஷயம் யா.." என விஷயம் அறிந்து தகவல் பரப்புவதற்காக கேட்க..

மணி "ம்ம்ம்..எங்க ஆயாக்கு சினிமால நடிக்க சான்ஸ் குடுக்கறேன்னு சொன்னாரு...அது விஷயமா பேச கூப்பிட்டாரு போதுமா..போயா போய் எல்லார் கிட்டயும் சொல்லு.." என அவனுக்கு பிடிப்பில்லாமல் பதில் அளித்து விட்டு அங்கிருந்து நகர அந்த அசிஸ்டெண்ட் நாம சரியா தான் கேட்டோமா என குழம்பியபடி அங்கிருந்து நகர்ந்தான். (தொடரும்)
 
Top Bottom