• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நினைவெல்லாம் நீயே 13

Subha Balaji

Member
Joined
Jun 30, 2024
Messages
79
நினைவெல்லாம் நீயே 13

ரூபாவை காணாமல் தேடிய விலாசினி வேகமாக கீழே வந்து "ராணி கொஞ்சம் என் ரூம்க்கு வா" என சத்தமாக கூப்பிட்டார்.

"சொல்லுங்க மா.."

"ரூபா எங்க"

"ரூம்ல தான் இருப்பாங்க மா"

"அங்க இல்ல..நான் தேடிட்டு வந்து தான் கேக்கறேன்..எங்க போனா..உனக்கு தெரியுமா..."

"இல்ல மா..நான் பாக்கல..."

"வீட்டுல இருந்த உன் கிட்ட பத்திரமா பாத்துக்க சொல்லிட்டு தானே போனேன்...ஒரு நாள் ஒரே நாள்
உன்னை நம்பி என் பொண்ணை விட்டுட்டு போனா..இப்ப காணாம போயிட்டா..யார் குடுத்த தைரியம்... அவளை யார் கூட அனுப்பி வெச்ச சொல்லு டி"

"அவ உனக்கு சப்போர்ட் பண்ணும் போதே நீயும் அவளோட ஆளா இருக்கணும்னு யோசிக்காத போயிட்டேனே..அடியேய்...கூட்டு களவாணிகளா..அவ எங்க யார் கூட இருக்கானு ஒழுங்கா சொல்லிடு.."

"இல்லே உனக்கு என்ன மாதிரி மரியாதை கிடைக்கும்னு நான் காட்டுவேன்.."

"மா...எனக்கு சத்தியமா எதுவும் தெரியாது மா..நேத்திக்கு நைட் எப்பவும் போல ஏழு மணிக்கு அவங்களுக்கு ரா சாப்பாடு எடுத்துட்டு வள்ளி தான் போனா..

"வாட்ச்மேன் இல்லே ராத்திரி கூர்க்கா வர்றவரைக்கும் என்னை கேட் கிட்ட உக்கார சொல்லிட்டு போனீங்களே...அப்பத்துலேந்தே நான் வெளிய தான் உக்காந்திருந்தேன்.."

"கூர்க்கா வந்ததும் தான் வீட்டுக்கு உள்ள வந்தேன்...உங்களுக்கு தான் தெரியுமே மா..நான் தூக்கத்துக்கு மாத்திரை போடறது..மாத்திரை சாப்பிட்டு படுத்திட்டேன் மா...காலைல இப்ப நீங்க சொன்ன பிறகு தான் அவங்க காணோம்னே தெரியும் மா.." என அழ ஆரம்பித்தார்

வேறு எதுவும் பேசாமல் வெறித்து பார்த்த விலாசினி "சரி..நீ போ...இது விஷயமா யார் கிட்டயும் எதுவும் பேச கூடாது புரியுதா.."

சரிங்க மா என சொல்லி வெளியே வந்த ராணி ரூபா அடிக்கடி சொல்லாமல் கோவிலுக்கு போகும் வழக்கம் இருந்ததால் ராணி பாப்பா பக்கத்துல எங்காவது போயிருக்கும்..அதுக்குள்ள இந்தம்மா என்னா குதிக்கிது பா..என மனதுக்குள் சொல்லியபடி போனார்.

வேகமாக போய் சிசிடிவி புட்டேஜ் பாக்க அதில் எங்குமே ரூபாவின் தடமே இல்லை..மாயமாக மறைந்து போயிருந்தாள்.

நம்மிடம் சொல்லாமல் எங்கு போயிருப்பாள், யாரிடம் இதை சொல்வது என வெகு நேரம் யோசித்தவர் தன் ஃபோனை எடுத்து தன்ராஜ்க்கு அழைத்து "அண்ணே..ரூபாவ காணோம் ணே..இன்னிக்கு பெங்களூர் வேற போகணும்."

"இப்பனு பாத்து எங்க போனானே தெரியல...இருந்த தடமே தெரியாம காணாம போயிட்டா..ண்ணே" என கதற ஆரம்பித்தார்.

"இரு..மா...பதட்டப்படாம பேசு..அவ ரூம்ல பாத்தியா..வீடு பூரா தேடினியா...மாடில பாத்தியா.."

"பூரா தேடி பாத்திட்டேண்ணே..அவள காணோம்..

"சரி..உன் வீட்டு கேமரால பாத்தியா.."

"இருந்த பதட்டத்துல மொதல்ல அத தான் பாத்தேன்....அதுல எதுவுமே பதிவாகலண்ணே..

"வீட்டுல வேலை செய்ற ஆளுங்களுக்கு தெரியுமா..."

"ராணி கிட்ட மட்டும் ரூபா எங்கனு கேட்டேன்...அதனால அவள தவிர வேற யார்க்கும் தெரியாது ண்ணே...".

" சரி மா..நீயா யாரையும் கேக்காத...அமைதியா இரு..ஒரு வேளை பக்கத்துல எங்காவது போயிருக்காளானு யோசி...

"கொஞ்சம் நேரம் பாப்போம்..நீ எதுக்கும் அந்த ஹிந்தி கம்பெனிக்கு ஃபோன் பண்ணி உனக்கு உடம்பு சரியில்ல..இன்னிக்கு வர முடியல..திரும்ப என்னிக்கு வரலாம்னு கேட்டுக்கோ...

"நான் ஒண்ணு பண்றேன்..எனக்கு ரொம்ப வேண்டப்பட்ட ஒரு ரிட்டயர்ட் கமிஷனர் இருக்காரு..அவர் கிட்ட கம்ப்ளையிண்டா இல்லாம பர்சனலா தேட சொல்லி இப்பவே பேசறேன் மா..ன

"அண்ணே..போலீஸ் எல்லாம் வேணாம்ண்ணே...ரூபா காணாம போனது வெளில தெரிஞ்சா எல்லாரும் கண்டபடி பேசுவாங்க...

"வெளில தெரிய கூடாதுனு சொல்ற நீ எந்த காலத்துல இருக்க விலாசினி...நாம கம்ப்ளையிண்ட் குடுக்க போறதில்லயே..தனிப்பட்ட முறையில விசாரிக்க சொல்ல போறோம்.."

"இதுல பதட்டப்பட என்ன இருக்கு சொல்லு..அவ சினிமா நடிகை...
வீட்டுல இருந்த தடமே தெரியாம காணாம போயிருக்கா.."

"சிசிடிவிலயும் எதுவும் பதிவாகலனு சொல்ற..யாராவது கடத்திட்டு போயிருந்தா என்ன பண்ணுவ..

"ஐயோ..என் பொண்ணை கடத்திட்டு
போயிருப்பாங்களா..எங்க வெச்சிருக்காங்களோ...அவளை என்ன தொல்லை பண்றாங்களோ தெரியல..எவ்ளோ பணம் கேப்பாங்களோ..." என கத்தி கதற ஆரம்பித்தார்

"இந்தா விலாசினி..கொஞ்சம் அமைதியா இரு.. கத்தாத..அழாத.. புலம்பறத நிறுத்து...யார்க்கும் தெரிய கூடாதுனு சொல்லி நீயே தெரிய வெச்சிடுவ போலிருக்கே...

"மொத அந்த கம்பெனிக்கு ஃபோன் பண்ணு..நான் கமிஷனர் கிட்ட பேசி என்ன பண்ண முடியும்னு பாக்கறேன்..." என ஃபோனை வைத்தார்.

எதற்கும் இருக்கட்டும் என கமிஷனருக்கு ஃபோன் செய்து தகவலாக சொல்லி தேட சொல்லி விட்டு வைக்க அடுத்து வந்த ஃபோனை எடுத்து பேசியவர் மறுபடியும் ஃபோனை அணைத்து வைக்கும் போது அரை மணி நேரம் கடந்திருந்தது.

வந்த தகவல்களால் நிம்மதி அடைந்த தன்ராஜ் மெல்ல தன் அறையில் இருந்து வெளியே வர ஹாலில் அமர்ந்து கொண்டு இருந்த மகனை பார்த்து எதுவும் பேசாமல் சோஃபாவில் அமர்ந்தார்.

அவர் வந்ததை பார்த்த அவருடைய மனைவி கஞ்சி கொண்டு வர அமைதியாக வாங்கி குடித்தார்.

ரூபராஜ் தந்தையை பார்த்து "நீங்க பண்றது உங்களுக்கே சரினு தோணுதா...எதுக்கு பார்ம் ஹவுஸ்லேந்து என்னை வர சொன்னீங்க.. எனக்கு தான் இங்க வர்றதோ..சிலரை பாக்கறதோ பிடிக்காதுனு தெரியும்ல்ல.." என கத்த..

"உனக்கு பிடிக்கறது..பிடிக்காதது பத்தி இப்ப எதுவும் யோசிக்கற நிலைல நான் இல்ல..நீ செய்யற எதுவும் எனக்கு தெரியாதுனு நெனக்கறீயா.."

"உனக்குனு உன்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கு...உன் பசங்களும் வளர்ந்துட்டாங்க...பொண்ணு கல்யாணத்து இருக்கானு கொஞ்சமாவது நியாபகத்துல இருக்கா..."

"இங்க பாருங்க..எனக்கு எதுக்கு அது நியாபகத்துல இருக்கணும்..."

"நான் ஆசைப்பட்ட பொண்ணை சினிமால நடிக்கறவ.. குடும்பத்துக்கு ஆகாதவனு ஏதேதோ சொல்லி கல்யாணம் பண்ண விடாம பண்ணீங்க...என் கண் முன்னாலயே அவளை வேற ஒருத்தனுக்கு கல்யாணமும் செஞ்சு வெச்சீங்க.."

"கிராமத்துல இருந்த உங்க பழைய
ப்ரெண்டோட உங்க நட்பு உடைய கூடாதுனு அவசர அவசரமா அவரோட பொண்ணை எனக்கு பாத்தீங்க..எனக்கு பிடிக்கலனு சொன்னேன்.."

"பிடிக்கவே பிடிக்காத பொண்ணை நீங்க வற்புறுத்தி, கல்யாணம் பண்ணலேனா சொத்து இல்லனு கட்டாயப்படுத்தி சொல்லவே தான் கல்யாணம் பண்ணேன்..."

"அந்த பொண்ணை மலடினு யாரும் சொல்லிட கூடாதுனு அவளுக்கு ரெண்டு பசங்களை குடுத்து அவ வாழ்க்கையை காப்பாத்தி விட்டேன்..ரொம்ப பெரிய மனசோட என் இனிஷியலை குடுத்திருக்கேன்.

நான் என் வரையில சரியா தான் இருந்தேன்...சரியா தான் இருக்கேன்..

"டேய்...என்னடா பேசற...உன் பொண்டாட்டி, பசங்கள பத்தி கொஞ்சமும் யோசிக்காம தறுதலையா இப்டி உளறாத..அவ கேட்டா மனசு வருத்தப்படுவா டா.."

"இங்க யாரும் என் மனசு கஷ்டத்தை புரிஞ்சுக்காதப்ப நான் எதுக்கு மத்தவங்கள பத்தி யோசிக்கணும்.."

"இவ்ளோ நேரமா வீட்டுல இருக்கியே..உன் பசங்களை பாக்கணும்னு கூட உனக்கு தோணலையா டா.."

"ஓஓஓ..என்ன இந்த வீட்டுல என்னை தங்க வெக்க முயற்சி பண்றீங்களா...மொதல்ல அம்மானு சொன்னீங்க..இப்ப குடும்பமா...அது நடக்கவே நடக்காது..."

"உங்க கௌரவம் போக கூடாதுனு கல்யாணம் பண்ணி வெச்சீங்க...நானும் அதே கௌரவத்துக்காக அந்த பொண்ணோட வாழ்க்கையை வளப்படுத்தி விட்டேன்..அவ்ளோ தான்.."

"என் வாழ்கையை எப்டி கொண்டு போகணும்னு எனக்கு தெரியும்..பயாலஜிக்கல் நீட் எல்லாருக்கும் உண்டு...அது என் இஷ்டம்..அதுல நீங்க தலையிடாதீங்க.."

"உங்க காசை நான் எதிர்பாக்கல..நான் நடிச்சு சம்பாதிச்ச பணத்துல வாங்கின வீட்டுல இருக்கேன்..இப்பவும் என் தேவைக்கு நான் சம்பாதிச்சுக்கறேன்...

"சரி டா..உன் குடும்பத்துக்கு அதால எதாவது பிரயோஜனமா செஞ்சிருக்கியா..."

"நான் ஏன் செய்யணும்..இல்ல தெரியாம தான் கேக்கறேன்..அத நீங்க உங்க சொத்துக்களை பங்கு பிரிச்சு எழுதும் போது யோசிச்சிருக்கணும்.."

"என் மேல நம்பிக்கை இல்லாம உங்க மருமக..உங்க பேரன் பேத்திக்கு எழுதி வெச்சு எனக்கு ஒண்ணுமில்லாம செஞ்சுட்டு இப்ப எதுக்கு பேசறீங்க.."

வார்த்தை போரால் கண்களில் கண்ணீரோடு இருந்த தன்ராஜின் மனைவி "போதுங்க...அவன் தான் வயசுக்கு மரியாதை இல்லாம பேசறான்னா நீங்களும் ஏன்ங்க..அமைதியா விடுங்க..." என அவரை சமாதானம் செய்து

"வயசாச்சே தவிர உனக்கு அதுக்கான தெளிவே கிடையாதா டா...அப்பா கிட்ட பேசற மாறியா பேசற..எதிரி மாறி பேசற..எதுவும் பேசாம நீ உன் ரூம்க்கு போடா " என மகனிடம் சொன்னார்.

அவருடைய மருமகளும் "இன்னும் எத்தனை வருஷம் தான் என் வாழ்க்கை இப்டி விமர்சனமா இருக்குமோ..தெரியல..போனது போனதாவே இருக்கட்டும் மாமா.. இனி பேசறதால எதுவும் நடக்க போறதில்ல..இத நினைச்சு உங்க உடம்பை கெடுத்துக்காம அப்படியே விடுங்க மாமா.."

"இல்ல மா.." என தன்ராஜ் ஆரம்பிப்பதற்குள் "இனிமே இதை பத்தி பேசறதா இருந்தா என்னை கூப்பிடாதீங்க..ஏன் ஃபோன் கூட பண்ண யோசிக்க கூட யோசிக்காதீங்க..நான் வரேன்.." என ரூபராஜ் நக்கலாக சொல்லி விட்டு கிளம்பி விட்டான்

அப்பாவின் குரல் கேட்டு ரூபராஜின் மகள் சிவாத்மிகா அங்கு ஓடி வருவதற்குள் ரூபராஜின் கார் வேகமாக வீட்டை கடந்தது.

அங்கு சோகமாக நின்றுகொண்டு இருந்த சிவாத்மிகாவை பார்த்து தன்ராஜ் "வா டா என் அம்மா..எப்ப எழுந்த..பல் தேய்ச்சியா..அம்மா மருமகளே..குழந்தைக்கு ஏதாவது சாப்பிட கொண்டு வா..."

"பல் தேய்ச்சு குளிச்சு எல்லாம் முடிஞ்சிது தாத்தா..அப்பா குரல் கேட்டு ஓடி வர்றத்துக்குள் ஏன் போயிட்டாரு..அப்பாக்கு ஏன் என்னை பிடிக்கல.."

"அதெல்லாம் இல்ல மா..அவர்க்கு ஏதோ முக்கியமான வேலை வந்திடுச்சு..அதான் கெளம்பிட்டாங்க.."என அந்த நிலையிலும் கணவனை விட்டு குடுக்காமல் பேசிய மருமகளையும், எந்த குறையும் சொல்லாமல் தந்தையை நல்ல விதமாக சொல்லி நற்பண்புகளோடு வளர்த்திருக்கும் மருமகளை நினைத்து சந்தோஷத்தால் நிறைந்து போன மனது அதே சமயம் குழந்தைகளின் முகத்தை கூட பார்க்க விரும்பாத மகனிடம் அளவில்லா பாசம் வைத்திருக்கும் குழந்தைகளின் நல்ல குணங்களை நினைத்து தன்ராஜின் மனது மிக பாரமானது.

இந்த சம்பவம் நடந்த நேரத்தில் சென்னையில் இருந்து கிளம்பிய விமானம் ஒன்று அருணாச்சல பிரதேச தலைநகரான இட்டா நகரை நோக்கி பறக்க ஆரம்பித்தது. (தொடரும்)
 

Author: Subha Balaji
Article Title: நினைவெல்லாம் நீயே 13
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom