தொட்டுத் தொடரும்….. -1
பன்னிருதிங்கள் வயிற்றில்கொண்டஅப்பாங்கினால்
என்இளங்கொங்கை அமுதமூட்டியெடுத்துயான்
பொன்னடிநோவப் புலரியேகானில்கன்றின்பின்
என்னிளஞ்சிங்கத்தைப்போக்கினேன் எல்லேபாவமே
(*மகனின் செயல்பாடு குறித்து ஏங்கும் ஒரு தாயின் நிலை)
பிருந்தாவனம், சென்னையில் இப்படி ஒரு பசுமையா என்று ஆச்சர்யப்படும் அளவு, பச்சைப் பசேல் என்ற தோட்டத்தின் நடுவே பார்த்தவரைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு அமைந்திருந்தது அந்த வீடு. வீட்டில் இருந்தவர்களின் பாசப்பிணைப்பால் சந்தோஷமும் உற்சாகமும் பொங்கி வழிய, நிஜத்திலும் கண்ணனின் பிருந்தாவனமாகவே இது வரை இருந்தது. ஏப்ரல் மாதத்தின் வெயிலையும் தாண்டி, இரவு முழுவதும் பெய்த மழையால் ரம்யமாக விடிந்தது அந்த காலைப்பொழுது. அலுவலகம் செல்லத் தயாராகி காலை உணவுக்காக உணவு மேசையில் வந்து அமர்ந்தான் அபிமன்யு, அந்த பிருந்தாவனத்தின் நந்தகுமாரன்.
“வாவ்! சூப்பர் மா! உங்களோட காரச் சட்னியும் கண்ணம்மா அக்காவோட இட்லியும் மேட் ஃபார் ஈச் அதர் மா! இரண்டும் இருந்தால் எத்தனை இட்லியை வேணும்னாலும் உள்ள தள்ளலாம். தயவு செஞ்சு கண்ணம்மா அக்காவ சட்னி வைக்க சொல்லாதீங்க. உங்களுக்கு புண்ணியமா போகும். நேத்து ஒரு நாள் சாப்பிட்டதே ஆயுசுக்கும் மறக்காது” என்ற அபிமன்யுவை பரிதாபமாக பார்த்த கண்ணம்மாவைப் பார்த்து கண் சிமிட்டியவன் “அக்கா! நோ டெரர் லுக். இந்த சின்ன பாராட்டுக்கெல்லாம் இப்படி பார்க்கக் கூடாது. மீ பாவம். நீங்க செய்யற இட்லிய நான் ஏதாவது சொன்னேனா. நீங்க இட்லி எக்ஸ்பர்ட், அம்மா சட்னி எக்ஸ்பர்ட். மாத்தி செய்யணும்னு நினைக்கவே கூடாது. அப்புறம் என் வயிறு புண்ணாகிடும்” என்று சொல்லி விட்டு இட்லியில் கவனமானான்.
“போடா போக்கிரி! ஒரு நாளாவது காலங்கார்த்தால வம்பு பண்ணாம சாப்பிடு” என்று ராதா அவன் தலையில் செல்லமாகக் கொட்டினார் என்றால், “நீங்க வேணும்னா பாருங்க தம்பி, அம்மாவோட சட்னியை விட நல்லா செஞ்சு உங்ககிட்ட என் சட்னியும் சூப்பர்னு பேர் வாங்கலை என் பேரு கண்ணம்மா இல்லை” என்று மற்றவர் அவனுக்கு சவால் விடுத்தார்.
“அப்படி தான் இருக்கணும் அக்கா, விடாதீங்க! நீங்களா சட்னியான்னு ஒரு கை பாத்திடலாம். அப்படியே வரலைன்னாலும், நீங்க கவலையே படாதீங்க நான் உங்களுக்கு நல்ல பேரா தேடி வைக்கிறேன். அம்மா, அக்கா மாதிரி நீங்க இட்லி சபதம் போடலையா, உங்களுக்கும் நல்ல பேரா தான் செலக்ட் பண்ணுவேன் மா. உங்க இட்லி மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லை போல, வாட் எ பிட்டி” என்றவனை ராதா அடிக்க வர, கண்ணம்மா கலகலத்துச் சிரிக்க “சிறுத்தை சிக்காது மா, மீ எஸ்கேப்” என்றபடி அங்கிருந்து ஓடிப் போனான்.
இரவு பெய்த கன மழையால், தோட்டத்தில் இருந்த பூக்களும் இலைகளும் உதிர்ந்து இருக்க, அவற்றை ஒழுங்கு படுத்தி விட்டு, அவற்றில் குளித்திருந்த மகனின் காரையும் துடைத்து விட்டு உள்ளே வந்த கிருஷ்ணன், சென்னை ஐஐடியில் இயற்பியல் துறையின் தலைவர் என்று யாரும் நம்ப மாட்டார்கள்.
கல்லூரியில் அனைவருக்கும் சிம்மசொப்பனமாக விளங்குபவர் வீடு என்று வந்து விட்டால் தலைகீழாக மாறிப் போவார். அன்பான கணவன், அருமையான தந்தை. தேவைப்படும் நேரங்களில் பிள்ளைகளுக்கு நண்பனாகவும் மாறுவார். மொத்தத்தில் பழகுவதற்கு எளிமையான இனிமையான மனிதர். அவரது வீட்டுத் தோட்டம் முற்றிலும் அவரது தனிப்பட்ட பராமரிப்பில் பசுமையாக மிளிர்ந்தது. அங்குள்ள மரம் செடி கொடிகள் எல்லாம் அவருக்கு பிள்ளைகளைப் போல பிரியமானவை.
வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்ளவும், பிள்ளைகளுக்கு தேவையானவற்றைச் செய்யவும் அவர் தயங்கியதே இல்லை. இன்றும் அவ்வாறுதான், மகன் சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று முன்தினமே சொல்லி இருந்ததால், அவனது காரை துடைத்துவிட்டு உள்ளே வந்தவர், மனைவி வெறித்த பார்வையுடன் அமர்ந்திருப்பதையும் மகன் அதைக் கண்டுகொள்ளாமல் அமைதியாகத் தட்டை எடுப்பதையும் கண்டு “ராதா என்னம்மா? என்ன யோசனையில் இருக்க? அபி சாப்பிட வந்துட்டான் பாரு” என்றவாறு அருகில் வந்தார்.
கிருஷ்ணனின் குரல் ராதாவை எட்டியதாகத் தெரியவில்லை. தன் முன்னே இருந்த இட்லியையும் சட்னியையும் வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தார். அதைக் கண்டு ஆச்சர்யப்பட்டவராய் கிருஷ்ணன் அவரைத் தோளில் தட்டி நினைவுக்கு கொண்டு வந்த போது, அபிமன்யு நான்கு இட்லிகளை சாம்பாரை ஊற்றி விழுங்கி விட்டு “நான் கிளம்பறேன் மா, வரேன் பா. இன்னைக்கு ஒரு இன்டர்வியூ இருக்குப்பா. ஏதாவது எமர்ஜன்ஸின்னா என் பெர்சனல் நம்பருக்கு கூப்பிடுங்க” என்றவன் அவர்களின் பதிலை எதிர்பாராதவனாய் வெளியேறினான்.
மேசை மேல் திறக்கப்படாமல் இருந்த சட்னி கிண்ணத்தைப் பார்த்து பெருமூச்சு விட்டபடி தனக்கும் கணவருக்கும் தட்டை எடுத்து வைத்தார் ராதா. ஆறு மாதத்திற்கு முந்தைய அபிமன்யு என்றால் இப்படி அமைதியாகவா சாப்பிட்டிருப்பான். அதுவும் அந்த காரச் சட்னியை வேறு யாரையும் தொடவும் விடாமல் “எனக்கே எனக்கு தான்” என்று கிண்ணத்தைக் காலி செய்து விட்டு போவான். குறைந்தது எட்டு இட்லிகளையாவது காரச் சட்னியுடன் சாப்பிடுபவன், இன்று வெறும் நாலே இட்லிகளை, அதுவும் அவனுக்கு பிடிக்காத சாம்பாருடன் சாப்பிட்டுச் சென்றிருந்தான்.
சென்னையின் பிரபல கல்லூரி ஒன்றில் உளவியல் துறையின் பேராசிரியராக இருக்கும் ராதாவுக்கு, தன் மகனது மனதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவனது வாழ்க்கையில் என்ன குழப்பங்கள் நடக்கின்றன என்பதை அவனாகச் சொல்லும் வரை தெரிந்து கொள்ளவும் முடியாது. ஒரு நல்ல தாயாக அவரது மனம் மகனுக்காக வருந்தியது.
“ராதா, அபி இன்னும் சின்னப் பையன் இல்லை. அவன் வாழ்க்கையை அவன் நல்லபடியா பார்த்துப்பான்” என்று இடைவெளி விட்ட கிருஷ்ணன் “நீ அநாவசியமா கவலைப் படறத விட்டுட்டு, அடுத்து வரப் போற பிஸியான நாட்களை எப்படி சமாளிக்கிறதுன்னு யோசி. புது ரோல்ல, உனக்கு தான் வேலை ஜாஸ்தியாகும். நான் நல்லா என்ஜாய் பண்ணுவேன்” என்று சிரித்து மனைவியின் முறைப்பைப் பெற்றுக் கொண்டார்.
“உங்களுக்கு புரியலைங்க. அவன் ஏதோ பெரிய குழப்பத்தில் இருக்கான். நம்ம கிட்ட கூட சொல்ல முடியாம அப்படி, என்ன மாதிரியான விஷயமோன்னு பயமா இருக்கு. எதுவாக இருந்தாலும் அவன் சமாளிப்பான். ஆனாலும், என்ன வரப் போகுதோன்னு ஒரு சின்ன பயம்” என்றவர் “நீங்க கவிக்கு ஃபோன் பண்ணி எப்போ வரான்னு கேளுங்க” என்று அடுத்த வேலையைக் கொடுத்தார். தற்போதைய நிகழ்வுகள் கலகலப்பான தனது இயல்பினைத் தலைகீழாக மாற்றிய விந்தையை எண்ணி மனம் நொந்தவனாகத் தனது அலுவலகத்தை நோக்கி காரைச் செலுத்தினான் அபிமன்யு. தாயின் வருத்தங்கள் புரிந்தாலும் எதுவும் செய்ய இயலாத நிலையில், அமைதிக்குப் பின்னே ஒளிந்து கொண்டான்.
ஆர்கே ஆட்டோமொபைல்ஸ் திங்கள் கிழமைக்கே உரிய பரபரப்புடன் இயங்கிக் கொண்டு இருந்தது. ஆட்டோமொபைல் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கென்றே பட்டா போட்டு கொடுத்திருக்கும் இருங்காட்டுகோட்டை சிப்காட்டில் உள்ள சிறிய, வளர்ந்து வரும் நிறுவனம். மூர்த்தி சிறியதாக இருந்தாலும் கீர்த்தி பெரிது.
ஹுண்டாய், நிசான், மாருதி சுசூகி போன்ற ஜாம்பவான்களின் கார்களுக்கு பிரேக் தயாரிப்பது தான் அதன் ஒரே வேலை. ஆரம்பித்து ஐந்து வருடங்கள் தான் ஆகிறது என்று நம்ப முடியாதபடி குறுகிய காலத்தில் மார்க்கெட்டை பிடித்திருந்தது. இந்திய அளவில் நல்ல தரமான, புதிய ரக ப்ரேக் தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரோடு பெரிய கம்பெனிகளுக்கு போட்டியாக இருந்தது. சென்ற ஆண்டு சிறந்த தொழில் முனைவோருக்கான தேசிய விருது பெற்றது.
இன்று கூடுதல் பரபரப்புடன் காணப் பட்டதன் காரணம் இரண்டு முக்கியமான விஷயங்கள். கடந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு அறிவிக்கப் பட உள்ளது. அதோடு புதியதாக உருவாக்கப்பட்ட பொது மேலாளர் பதவிக்கான நேர்முகத் தேர்வு நடைபெற இருக்கிறது. அலுவலகத்தில் ஏற்கனவே பணிபுரிபவர்க்கு முதல் வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்ததால் அனைத்து துறை சார்ந்த மேலாளர்களும் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களால் நிர்வாகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் போனால் விளம்பரம் செய்து கொள்ளலாம் என்பது அபிமன்யுவின் எண்ணம்.
காலியாக இருந்த நிர்வாக இயக்குனரின் அறை, இன்னும் பத்து மணி ஆகவில்லை என்றது. காரணம் அபிமன்யு கடிகாரத்தை விழுங்கி விட்டானோ என்று எண்ணும் படி நேரம் தவறாமையை கடைப்பிடிப்பவன். அந்த நிறுவனத்தின் ஃபவுன்டர், மேனேஜிங் டைரக்டர், பொது மேலாளர் இப்படி நிறைய சொல்லலாம். ஆர்கே என்பதன் விரிவாக்கமான ராதா & கிருஷ்ணனின் புத்திரன். அந்த தொழிற்சாலையை ஒற்றை ஆளாகத் தன் சுயமுயற்சியில் ஆரம்பித்து இயக்கிக் கொண்டிருக்கும் இருபத்தொன்பது வயதே ஆன இளைஞன். ஆட்டோமொபைல் தொழில்நுட்பத்தில் உயர்கல்வியை இத்தாலியில் படித்தவன்.
அனுபவ அறிவையும் அதோடு புதிய தொழில் தொடங்குவதற்கான பணத்தையும் அங்கேயே சம்பாதித்தவன். அங்கே இருந்தபடியே தனது தொழில் தொடங்க தேவையான ஆரம்ப கட்ட பணிகளை செய்து முடித்து, தனது விடா முயற்சியால் குறுகிய காலத்தில் பெரிய நிறுவனங்களே பொறாமைப்படும் அளவு நல்ல வளர்ச்சி அடைந்திருப்பவன். உலக அளவில் போட்டி போட வேண்டும் என்ற பேராசை எல்லாம் அவனது அகராதியில் கிடையாது. சுருக்கமாக சொன்னால் பணம் அவனது லட்சியம் அல்ல. தாய் தந்தை இருவருமே பேராசிரியர்களாக இருந்தாலும், பிள்ளைகள் என்று வந்தால் நல்ல பெற்றோர்கள் மட்டுமே. குழந்தை வளர்ப்பில் இருவரும் அவரவர் பங்களிப்பை சிறப்பாக செய்து நல்ல மனிதர்களாக உருவாக்கி இருந்தனர். பணக்கஷ்டம் என்பதை அவர்கள் பார்த்தது இல்லை என்றாலும் தேவைக்கு அதிகமாக எதுவும் கிடைக்காது. பிள்ளைகளும் அதை உணர்ந்தே வளர்ந்தார்கள். படிப்பு விஷயத்திலும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப ஊக்கம் கொடுத்து அவர்களது துறையில் முன்னேற முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.
சரியாக காலை 9:50 மணிக்கு தன் காரை அலுவலகத்தில் அதற்கான இடத்தில் நிறுத்திய அபிமன்யு, தனது பையை எடுத்துக்கொண்டு தனது அறையை நோக்கி நடந்தான். வழியில் வணக்கம் சொன்ன அனைவருக்கும் பதில் சொல்லியவாறு, தனது இருக்கையில் சென்று அமர்ந்தான். தன் மடிக்கணினியை திறந்து அன்றைக்கு கொடுக்க வேண்டிய ஊதிய உயர்வு கடிதங்களை ஒரு முறை சரி பார்த்தான். அவனது தொழிற்சாலையில் மொத்தம் நூற்றைம்பது பேரும் அலுவலகத்தில் ஐம்பது பேரும் ஆக இருநூறு பேருக்கு கடிதங்கள் தயாராக இருந்தன. இவர்களைத் தவிர ஊக்கத் தொகையுடன் பயிற்சியாளர்களாகப் பத்து பேர் இருந்தனர்.
அனைவரது கடிதங்களையும் சரிபார்த்தவன் மனிதவள மேம்பாட்டு துறை மேலாளரை அழைத்தான். அவருக்கான கடிதத்தை கையெழுத்திட்டு வழங்கியவன், “கன்கிராட்ஸ் அண்ட் தேங்க்ஸ் எ லாட் மகேஷ். உங்க எல்லோருடைய ஹார்ட் வொர்க்கால தான் தொடர்ந்து நல்ல ரிசல்ட் காட்டறோம். ஹோப் தி சேம் வில் பி கன்டிநியூட் இன் கம்மிங் இயர்ஸ் ஆல்ஸோ (வரப் போகிற வருஷங்களிலும் இதே தொடரும் என நம்புகிறேன்)” என்று வாழ்த்தியவன், “மத்தவங்களோட லெட்டர்ஸ் உங்களுக்கு மெயில் பண்ணி இருக்கேன். சைன் பண்ணி இன்னிக்கு ஈவ்னிங்க்குள்ள கொடுத்துடுங்க” என்று அவரது அடுத்த பணியை அறிவுறுத்தி அனுப்பினான்.
மணி பதினொன்றை நெருங்கி இருக்க அடுத்து நடைபெற உள்ள நேர்முகத் தேர்வுக்கு தயாரானான். தனது அலுவலக கைபேசியை செயலிழக்க செய்தவன், தனிப்பட்ட கைபேசியை எடுத்து அழைப்புகளோ செய்திகளோ வந்திருக்கிறதா என்று பார்த்தவன் கண்களில் மொபைலின் வால் பேப்பர் பட்டதும் புன்முறுவலுடன் “லவ்யூ” என்று ஒரு முத்தம் வைத்தான். எதிர்பார்த்த நபரிடமிருந்து அழைப்போ செய்தியோ வரவில்லை என்பதால் மனம் சற்றே வாடியது. அதைப் பற்றி மேலும் சிந்திக்க விடாமல் அலுவல்கள் அவனை அழைத்தது. அவனது பெற்றோர் விடுமுறையில் இருப்பதால் ஏதேனும் அவசர உதவி தேவைப் படலாம் என்று கைபேசியை வைப்ரேட்டரில் போட்டான்.
மற்றபடி அலுவலகத்தில் சொந்த வேலைகள் எதையும் அனாவசியமாக நுழைப்பவனில்லை அவன். அதனால் பல வேதனைகளைச் சந்தித்து இருந்தாலும் தன் கொள்கையை மாற்றிக் கொள்ள வில்லை. இன்று எதையோ எதிர்பார்த்தது போல் இருந்தான். அதற்கு ஏற்ப அன்றைய தினம் அவனது தந்தையிடம் இருந்து உடனே வீட்டுக்கு வரும் படி அழைப்பு வந்தது.
“தி டாக்டர்ஸ்”, நான்கு தலைமுறையாக சிறந்த டாக்டர்களை உருவாக்கிய பெருமையுடன் கம்பீரமாக நின்றது, வடபழனியில் இருந்த அந்த மாளிகை. நேரம் காலம் பார்க்க முடியாத பணி என்பதால் அனைவரும் காலையிலேயே கிளம்பி இருக்க, ராகவி மட்டுமே வீட்டில் இருந்தாள்.
“டேய்! இரண்டு பேரும் ஒரு இடத்தில உட்காரப் போறீங்களா இல்லையா? சமத்தா சாப்பிட்டா இன்னிக்கு நாம, மாமா வீட்டுக்குப் போகலாம். இல்லேன்னா நீங்க வீட்டுலயே இருங்க. அம்மா மட்டும் கிளம்பறேன்” என்ற ராகவியின் அதட்டலுக்கு பலன் இருந்தது. அதுவரை துறுதுறுவென்று வீடு முழுதும் சுற்றியபடி அவ்வப்போது உணவை வாயில் வாங்கிய வாண்டுகளை, “மாமா வீடு” என்ற மந்திரம் பிரமாதமாக வேலை செய்து அமைதியாக சாப்பாட்டு மேசைக்கு இழுத்து வந்தது.
குழந்தைகளுக்கு விடுமுறை காலம் என்பதால் அவர்களை போரூரில் உள்ள தாய் வீட்டில் விட்டுத் தனது பணிக்கு செல்லலாம் என்று முடிவு செய்து இருந்தாள் ராகவி. எந்த நேரத்திலும் பிள்ளைகளின் கேள்விக்கணைகள் ஆரம்பிக்கும் என்று உணர்ந்தவளாய், அதற்கு இடம் கொடாமல் அவர்களுக்கு உணவைத் திணித்து கொண்டு இருந்தாள். அவளது இந்த பிளானை தலைகீழாக மாற்றியது அன்னையிடம் இருந்து வந்த அழைப்பு.
ராகவி, அபிமன்யுவின் உடன் பிறந்த இரட்டை சகோதரி. மானவ், கேசவ் என்ற நான்கு வயது இரட்டையருக்குத் தாயானவள். இரட்டை குழந்தைகள் என்பது இவர்களின் ஜீன்ஸ்லயே இருக்கிறது போலும். ராகவி அவளது கணவன் சரண் இருவருமே நரம்பியல் அறுவை சிகிச்சை வல்லுனர்கள். பெற்றோர்களால் அங்கீகரிக்கப்பட்டு நடத்தி வைக்கப்பட்ட காதல் திருமணம் அவர்களது.
சென்னை நகரின் புறநகர் பகுதியான பூந்தமல்லியில் உள்ள அவர்களது “சுஸ்ருதா” சகல வசதிகளுடன் அனைத்து தரப்பினரும் பயனடையும் படி பெயர்பெற்ற கைராசியான மருத்துவமனையாக விளங்கியது. பணம் அதிக அளவில் இருந்தாலும் மனிதர்களை மதிக்க தெரிந்தவர்கள். குடும்பத்தில் அனைவருமே மிகவும் படித்து சமுதாயத்தில் நல்ல நிலையில் இருந்தாலும் வாழ்க்கையை ரசித்து வாழ்பவர்கள். குடும்பத்தில் என்றுமே குதூகலத்துக்கு குறைவு இருக்காது. மொத்தத்தில் எடுத்துக் காட்டான குடும்பம். மற்றவர்கள் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு வாழ்க்கையை அனுபவித்து வாழ்பவர்கள்.
யார் கண்பட்டதோ, இந்த உறவுச் சங்கிலியின் உறுதியை சோதிப்பதற்கு என்றே புதிய உறவு, அவனுக்கென்று அமைந்த முக்கியமான உறவு வந்ததோ.

Author: siteadmin
Article Title: தொட்டுத் தொடரும் -1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.