• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தனித்த வனத்தில் 18

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
31
தனித்த வனத்தில் 18

என்ன தைரியமிருந்தா, அந்த கொல்ட்டிப் பய நம்ம வீடு தேடி வந்து பொண்ணைக் கேப்பான்?
உன் பொண்ணை விட்டுட்டு அவனைச் சொல்லுவானேன், எங்கேயோ போய் உக்காந்துக்கிட்டு, இவ எவனையோ லவ் பண்ணுவா. அதை நம்ம கிட்ட சொல்லக்கூட மாட்டா, ஆனா, அவனோட அப்பா என்னடான்னா புள்ளையோட காதலை நிறைவேத்தறேன்னு இங்க வந்து நிக்கறான்”

மன்மத ராவின் பெற்றோர் வந்து சென்றதில் இருந்து நீலகண்டன் ஒருவர் விடாது, நிறுத்தாமல் திட்டித் தீர்த்தார்.

சாம்பவி பள்ளியில் ப்ளஸ் டூவில் முதலாய் வந்தபோது, மெரிட்டில் அரசு இஞ்சினீயரிங் கல்லூரியில் இடம் கிடைத்தபோது, ஓஎன்ஜிசியில் வேலை கிடைத்தபோது, இருபதாயிரத்துக்கு TITAN Edge வாட்ச் வாங்கித் தந்தபோதெல்லாம் ‘எம்பொண்ணாக’ இருந்தவள், இன்று சகுந்தலாவின் கஸ்டடிக்குத் தள்ளப்பட்டாள்.

“முப்பத்திநாலு வயசாம், அரைக்கிழடு. கேட்டா லவ்வாம், அவங்கப்பன் எங்கிட்டயே சொல்றான். பொண்ணு கிடைக்காம, நல்ல படிச்ச, அழகான பொண்ணு, தனியா மாட்டினதும், வளைச்சுப் போட்டிருக்கான். அதுக்கேத்த மாதிரி பேரைப்பாரு, மன்மத ராவாம். நம்மூர்ல மன்மதன்ற பேர்ல யாரையாவது பார்த்திருக்கீங்களா?”

“ஒழுங்கு மரியாதையா வேலையை விட்டு வந்து நம்ம இனத்துல நாம பாக்கற பையனைக் கட்டிக்கச் சொல்லு. ஏற்கனவே அவளால பட்ட அவமானம் போதாதுன்னு இப்ப இது வேற”

புது வீட்டில் இனிமேல்தான் சாமான்களை ஒழுங்கு செய்யவேண்டும் என்பதால், தேவசேனாவும் மனோஜும் கூட மதியமே இங்கு வந்து விட்டனர்.

சூர்யாவுக்கு கடைசியாக சாம்பவியைப் பெண் பார்க்க வந்த பையனை, பிடிக்கவுமில்லை, பெண்பார்க்க அழைப்பதிலும் விருப்பம் இல்லை. அதன் பிறகு நடந்த வாக்குவாதமும், அவனது பெற்றோர் ஏதோ சாம்பவிதான் தவறு செய்தது போல் பேசியதும், சாம்பவி வருத்தத்துடன் புறப்பட்டுச் சென்றதும்…

‘எனக்காக நான் கூப்பிடப் போய்தானே இப்ப இந்த பிரச்சனை’ என்று தன்னையே நொந்துகொண்டான். அவளும் சென்றுவிட, தேவா இங்கேயேஇருக்க, சமாளிக்க முடியாமல் வீடு திணறியதுதான் உண்மை.

மன்மத ராவின் புகைப்படத்தைப் பார்த்தவனுக்குப் பிடித்துதான் இருந்தது. அவனை விட மூன்று வயது பெரியவனாக இருப்பினும், க்ரிஸ்ப்பாக, இளமையாக இருந்தான்.

சமூக வலைத் தளங்களில் தேடியதில், இந்தியாவின் சிறந்த, முதல் எட்டு கோல்ஃபர்களில் ஒருவன் என்று தெரிந்து கொண்டான்.

நீலகண்டன் “இப்பவே கேக்கறவங்களுக்கு பதில் சொல்ல முடியல. இன்னும் வேற பாஷை, இனம், வயசு வேற அதிகம்…”

“அப்பா”

இடைமறித்தவனை “என்ன?”

“நம்ம இயலாமையை மறைக்க எத்தனை நாள்ப்பா சாம்பவி மேல பழி போடுவீங்க?”

சகுந்தலா “சும்மா இரு சூர்யா, அப்பாவே கோவமா இருக்காரு”

“பரவாயில்லம்மா. இது அப்பாக்கு மட்டுமில்ல. உனக்கும் நம்ம எல்லாருக்கும்தான். சாம்பவியோட கல்யாணம் நின்னதுக்கு அவளா காரணம்?”

“...”

“நாம சொன்ன பையனைக் கட்டிக்க சம்மதிச்சு, மாசம் பொறந்தா ஒன்னரை லட்ச ருபா வருமானம் வர்ற சர்க்கார் உத்தியோகத்தை விட்டு, ஃபியான்ஸேக்கு ஆசையா சட்டையை வாங்கிட்டுதானே வந்தா? “

தேவசேனா “இப்ப எதுக்குண்ணா பழைய கதை? அக்கா பாட்டு அவ இஷ்டத்துக்கு கல்யாணம் செஞ்சுக்கிட்டா, எங்க வீட்ல என்ன சொல்லுவாங்கன்னு நினைச்சுப்பாரு”

“ஷட் அப் தேவா. எல்லாப் பிரச்சனையும் உன்னாலதான். இன்னிவரைக்கும் உன்னையோ மனோஜையோ சாம்பவி ஒரு வார்த்தை கூட சொல்லலை. ஏன் தெரியுமா, நீ செய்யறது சரின்னு ஒத்துக்கிட்டு இல்லை. சொல்லி என்னவாகப் போகுதுன்ற விரக்தில”

அமைதியாக எழுந்து பால்கனிக்குச் சென்ற மனோஜை சூர்யா பொருட்படுத்தவில்லை. இப்போ கூட பேசலைன்னா, தப்பாகி விடும் என்று நினைத்தான்.

தேவசேனா அழத்தொடங்க “இந்த அழுது சீன் போடற வேலையெல்லாம் இங்க. வேணாம். சாம்பவியை, அவ செய்யாத தப்புக்கு, அவளையே குத்தவாளியாக்கி, நிறைய பேசியாச்சு. போதும், இத்தோட நிறுத்திக்கலாம்”

“என்ன, அவளே இப்ப ஒருத்தரை விரும்பறா. அவரும் நல்லா படிச்சு, நல்ல வேலைல இருக்கார். அவங்க வீட்லயும் ஒத்துக்கிட்டாங்க. அவளுக்கு சீனியர்னு சொல்லும்போது அவளுக்கு வயசு வித்தியாசம் தெரியாமலா இருக்கும்?”

தேவசேனா “அப்ப தெலுங்கு பையன்னா பரவாயில்லையா, நம்ம சொந்தமெல்லாம்…”

“கட் இட் அவுட் தேவா. எல்லாரையும் விட நீதான் வயசுல சின்னவ. முதல்ல பாட்டியம்மா மாதிரி பேசறதை நிறுத்து”

நீலகண்டன் விறைத்துக்கொண்டு நிற்க “அப்பா, இதுவரை எத்தனை வரன் பார்த்தோம், கல்யாணம் நின்னது, தேவாவோட திடீர் கல்யாணம், அதுவும் அதே மாப்பிள்ளையோட, சாம்பவிக்கு என்ன பிரச்சனை, எதனால பொண்ணு மாறினா இதையெல்லாம் கேட்காத மாப்பிள்ளை வீடு இதுவரைக்கும் வரலை. இனிமேலும் வராது”

“சும்மா பொறுப்பு முடியணும்னு, கிடைச்ச மாப்பிள்ளைக்கு, அவங்க போடற நிபந்தனைக்கு எல்லாம் ஒத்துக்கிட்டு உங்க கால அட்டவணையை சரி செய்ய நினைக்கறீங்க”

“சாம்பவி பாவம்ப்பா. அவ நிலைல இன்னொரு பொண்ணா இருந்தா, நம்மைத் திரும்பிக்கூட பாக்க மாட்டா”

“...”

“நீங்களே நினைச்சுப் பாருங்க, ஒவ்வொரு பொண்ணு பார்க்கும்போதும், முதல் மாப்பிள்ளைன்னு மனோஜையும் கூப்பிட்டு உக்கார வெச்சு… சாம் மனசு என்ன பாடு படும்னு எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா, அம்மா, நீங்களும்தான்”

“இல்லடா சூர்யா…”

“போதும்மா, எப்பப் பாரு, அவங்க பேசறாங்க, இவங்க கேட்டாங்க, எல்லாரும் என்ன நினைப்பாங்க… இதே பாட்டுதான். சாம்பவி என்ன நினைக்கறா, அவ ஆசை என்ன, அதைக்கூட விடுங்க. பக்கத்துல போய் அவளுக்கு ஆறுதலா ஒரு வார்த்தை சொல்லி இருப்போமா, என்னையும் சேர்த்துதான் சொல்றேன்”

“...”

“தேவாவோட மானத்தைக் காப்பாத்த நினைச்சோமே தவிர, சாம்பவியோட ஏமாற்றத்தை, அவமானத்தை, வருத்தத்தை நாம சுத்தமா புரிஞ்சுக்கலை. பாவம் சாம், எல்லாத்தையும் முழுங்கிட்டு இங்கேயே இருந்து, கல்யாணத்துல கலந்துக்கிட்டு, தேவா பிரசவத்துக்கு வேலை செஞ்சுன்னு எத்தனை … இனஃப் பா”

“சாம்பவி தன்னை மீட்டுக்கிட்டு, ஒருத்தரை விரும்பிக் கல்யாணத்துக்குத் தயாரானதே பெரிய விஷயம். நாம ஒத்துக்கிட்டு நடத்திக் கொடுக்கறதுதான் சரி, அப்படியும் உங்களுக்கு இஷ்டமில்லைன்னா….”

“...”

“அவங்க எப்படிக் கல்யாணம் செஞ்சுக்கிட்டாலும், நானும் மீராவும் போகத்தான் போறோம். எனக்கு இந்தக் கல்யாணத்துல பரிபூரண சம்மதம்” என்றவன், அவர்களது அறைக்குள் சென்றுவிட்டான்.

மனோஜுக்கு செருப்பால் அடித்ததுபோல் இருக்க, தேவசேனாவால் பேச முடியவில்லை.

மறுநாள் நீலகண்டன் சாம்பவியின் அழைப்பைத் தவிர்க்கவே, சூர்யாவுக்கு அழைக்க, அப்போதுதான் மன்மத ராவின் தந்தை பெண் கேட்டுச் சென்றதே அவளுக்குத் தெரிந்தது.

ஒருவழியாக சூர்யா முட்டி மோதியதில், சகுந்தலாவும் நீலகண்டனும் ஒரு வாரத்திற்குப் பிறகு திருமணத்திற்கு சம்மதித்தனர்.

********************

மன்மத ராவின் தந்தை ரவிச்சந்திர ராவுக்கு, தன் மனைவி, மக்களை சம்மதிக்க வைப்பதொன்றும் கடினமாக இல்லை. ஆனால், அவனது அம்மா, எல்லா திருமணச் சடங்குகளும் அவர்கள் முறைப்படி மட்டும்தான் நடக்கவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.

சாம்பவியின் வீட்டினரிடம் இதற்குப் பெரிய எதிர்ப்போ, ஈடுபாடோ இல்லாததால், மன்மத ராவின் பெற்றோர் ஓங்கோலிலேயே திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.

இதோ, இரவு ஒன்பது மணியளவில் தொடங்கிய சடங்குகள் தொடர்கிறது.

மங்களஸ்நானம், கணேச பூஜை, கௌரிபூஜை, கன்யாதானம், பாணிக்கிரஹணம், ஜீலகார வெல்லம்( ஜீரகமும் வெல்லமும் கலந்த கலவையை மணமக்கள் மாற்றிக் கொள்ளுதல்), மதுபர்க்கம் (மணப்பெண் வெள்ளையில் சிவப்புக் கரையிட்ட புடவை அணிய வேண்டும், மணமகனுக்கும் அதே போல் வேட்டி), மங்கள்சூத்ரா (தாலி/கருகமணி கட்டுதல்), மெட்டியிடுதல், சப்தபதி, என எல்லா சடங்குகளும் மன்மத ராவின் குடும்ப வழக்கப்படி குறையின்றி நிறைவேறியது.

மங்கள்சூத்ரா எனும் மாங்கல்யதாரணம் நடக்கையில் நேரம் இரவு பன்னிரெண்டரை மணி.

சாம்பவி வீட்டினருக்கு இந்த இரவு நேர முஹூர்த்தம் புதிதாகையால், வியப்பாகவும், ஏற்க இயலாமலும் இருந்தது.

தெலுங்கர்களின் திருமணத்தில் ஜீரக பெல்லம் என்னும் முக்கியமான நிகழ்வு, மாங்கல்ய தாரணத்தை விட முக்கியமானது. இது மணமக்கள் இருவருக்கும் பொருத்தமான சுபமுஹுர்த்த நேரத்தில் நடக்கும்.

மணமக்கள் இருவரும் எதிரும் புதிருமாக அமர்ந்திருக்க, நடுவில் வெண்பட்டுத் திரையிட்டு, ஜீரகமும் வெல்லமும் பிசைந்த கலவையை வடை போல் தட்டி வெற்றிலையில் வைத்து, இருவரது வலது கையிலும் கொடுத்து பிடித்துக் கொள்ளச் சொல்லி, கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் வரை புரோகிதர்கள் மந்திரங்களை உச்சரித்தனர்.

அதற்கான மந்திரங்கள் முடியும் தருவாயில், இருவரும் தத்தம் வலக்கையை மெதுவே உயர்த்த, கூடவே அட்டுதெரா அல்லது தெரசாலா எனும் திரையும் உயர்த்தப்பட, இருவரும் தங்கள் இணையின் உச்சந்தலையில் வெற்றிலையோடு ஜீரக வெல்லத்தைக் கவிழ்த்து அழுத்தினர்.

சம்பிரதாயப்படி, மணமக்கள் இருவரும் முதலில் நேருக்கு நேர் பார்த்துக்கொள்வது இந்தக் கணத்தில்தான். சாஸ்திரப்படி, இனிப்பும் கசப்பும் கலந்த வாழ்வை இணைந்து எதிர்கொள்ள சம்மதித்து அவர்கள் கணவன் மனைவியாவதும் இப்போதுதான்.

திரைக்கு இந்தப்புறம் இருந்த சாம்பவிக்கு, வினோதமாக, சிரிப்பாக, இது எப்படா முடியும் , திரை எப்போ விலகும் என்று தவிப்பாக, எல்லோரும் தங்களைப் பார்ப்பதில் சற்றே குறுகுறுப்பாக, திரை விலகியதும் மன்மத ராவின் முகம் எப்படி இருக்கும், அவனை எப்படி எதிர்கொள்வது என கொஞ்சமே கொஞ்சம் த்ரில்லாகவும் இருந்தது.

கை உயர்த்திக் கண்ணோடு கண் பார்த்து அவன் கை அழுத்தத்தைத் தலையில் தாங்கிய நொடியில் உடலில் ஒரு சிலிர்ப்பு ஓடியது.

மன்மத ராவிடம் மிக மெலிதான இதழ்க்கடைப் புன்னகை மட்டுமே.

“கூட்டம் கூட்டினா, அஸ்ஸாம்லயே ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிப்பேன்” என்று அவன் திரும்பத் திரும்ப சொல்லியும், அந்த இரவு நேரத்திலும் முன்னூறு பேர் வரை கூடியிருந்தனர்.

அவர்கள் குடும்ப வழக்கப்படி கோவில் வெளி மண்டபத்தில்தான் திருமணம் நடந்தது.

முதல் நாள் இரவு விருந்தும், நள்ளிரவுத் திருமணமும், மறுநாள் காலை ஹெவியான பிரேக் ஃபாஸ்ட் முடிந்ததும், கிருஹப்பிரவேசம் நடந்தது.

சாம்பவியின் வீட்டினரும், வந்திருந்த ஓரிரு உறவுகளும் விடைபெற்றுக்கொண்டனர். இன்னும் ஆறு நாட்களில் சென்று சென்னையில் ரிஸப்ஷன் வைத்திருந்தனர்.

புது மணத் தம்பதிகளுக்குப் பாலும் பழமும், சிறிது அவல் உப்புமாவும் மட்டுமே உண்ணக் கொடுத்து, ரவிச்சந்திர ராவின் வேண்டுதலை நிறைவேற்ற குடும்பம் முழுதும் ஒரு வோல்வோ கோச்சில் அன்னவரம் சத்தியநாராயணப் பெருமாள் கோவிலுக்குச் சென்றனர்.

***************************

சில பிரபலமான தெலுங்கு சினிமாக்களையும் திருப்பதி லட்டுவையும் தவிர எதுவும் தெரியாத சாம்பவிக்கு யார் பேசினாலும், மாயாபஜார் ரங்காராவின் குரலாகவே ஒலித்தது.

முந்தைய நாள் காலையில் இருந்து தொடர்ந்து விழித்திருந்ததும், திருமண நிகழ்வுகளும் சேர்ந்து அழுத்தியதில் மன்மத ராவ் வண்டியில் ஏறியதுமே உறங்கிவிட்டான்.

சாம்பவிக்கு உடல் சோர்ந்திருந்ததே தவிர, உடனே உறக்கம் வரவில்லை. வேனில் ஏறியவுடன் மாட்லாடித் தீர்த்தவர்கள், ஒவ்வொருவராய் உறக்கத்தைத் தழுவினர்.

இன்னுமே தன் பெற்றோருக்கு இந்தத் திருமணத்தில் முழுதான உடன்பாடு இல்லை என்பதோடு, அவசியத்துக்குத் தவிர, ‘உங்க சடங்கு, முறை எல்லாம் எங்களுக்குத் தெரியாது’ என்ற பெயரில் ஒதுங்கியே நின்றதில் சாம்பவிக்கு வருத்தம்தான்.

அவள் தரப்பிலிருந்து திருமணத் தேரை இழுத்தது அண்ணா சூர்யாவும் அண்ணி மீராவும்தான்.

பத்து நாட்களுக்கு முன் சாம்பவி விடுப்பில் வந்ததில் இருந்தே அவளால் அவர்களைப் புரிந்து கொள்ள முடிந்தாலும், இனி, இந்த விலகல் காலப்போக்கில் தானாக சரியானால்தான் உண்டு என்று விட்டுவிட்டாள்.

வருத்தம்தான். அதிலும் தேவசேனாவை சீராட்டுவதில், மனோஜை மாப்பிள்ளை மரியாதையுடன் நடத்துவதில், அவளது தந்தையே மன்மத ராவை ‘தெலுங்குப் பய’ என்றதில் நிச்சயமாக சாம்பவிக்கு வருத்தம்தான்.

‘ஒரே ஜாதியாக இருக்கும் பட்சத்தில், அக்காவுக்கு நிச்சயித்த பையனைக் காதலித்துக் கல்யாணத்துக்கு முன் கர்ப்பமானால் கூடத் தவறில்லை போல’ என்று தோன்ற, பிறகு வருந்திப் பயனில்லை என்று விட்டுவிட்டாள்.

தேவசேனாவிடம் வழக்கமான அலட்சியமும் கூடவே இழைவும் தென்பட, மனோஜின் முகத்தில் எதுவும் தெரியவில்லை.

சென்னையில் வரவேற்பு இருப்பதால், ஓங்கோல் வரை திருமணத்திற்கு வந்த உறவினர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

முன்னிருக்கையில் அமர்ந்திருந்த ரவிச்சந்திர ராவ், நிமிர்ந்து உட்கார்ந்து, எல்லோரையும் ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டுக் கண்களை மூடிக்கொண்டார்.

அவரைத் தெரிந்த இந்த இரண்டு மாதங்களில் எப்போதும் எழும் ‘ஆச்சரியமான மனிதர்’ என்ற வியப்பு இப்போதும் எழுந்தது.

அவரைச் சந்தித்த முதல்நாள் நினைவுக்கு வந்தது.

********************

சாம்பவியும் மன்மத ராவும் தங்கள் நட்பை, உறவை, பேச்சை பழைய படியே தொடர்ந்தனர். வேண்டுமென்று இழையவில்லை, அதே நேரம், மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று பேசாமலும் இல்லை. காலனியில், அலுவலகத்தில் யாராவது கேட்டால், ‘ஆமாம், அப்படிதான், இப்ப என்ன?’ என்று சொல்லும் திடம் வந்திருந்தது.

மன்மத ராவ், இவர்கள் திரும்பி வந்த இரண்டாம் நாளே, தன் தந்தையிடம் தங்கள் திருமணத்திற்கு கூடிய விரைவில் ஏற்பாடு செய்யச் சொல்லிவிட்டான்.

சாம்பவிக்குத் தன் வீட்டின் மனநிலை தெரியுமாதலால், ஃபோனில் சொல்லத் தயங்கினாள். உண்மையில், தன் தந்தையிடம் ‘நான் காதலிக்கிறேன், எனக்குக் கல்யாணம் செஞ்சு வை’ என்று கேட்பதே கடினமானதாகத் தோன்றியது.

அந்த வார இறுதியில், மன்மத ராவ் கோல்ஃப் க்ளப்பிற்குச் சென்றிருக்க, சாம்பவியின் வீட்டு வாசலில், மதியம் ஒரு மணிபோல் ஒரு டாக்ஸி வந்து நிற்க, இறங்கியவர்களைப் பார்த்ததுமே புரிந்துவிட்டது, அது அவனது பெற்றோர் என.

கை கூப்பி வரவேற்றவள் காஃபி போட்டுக் கொடுத்தாள்.
அவனது அம்மா சாம்பவியை சற்றே எடைபோடும் பார்வை பார்க்க, அவனது தந்தை, தெலுங்கிலீஷில் பேசினார்.

“நாங்க மன்மத ராவோட பேரன்ட்ஸ்”

“தெரியுது அங்கிள், ஸார் வீட்ல இல்லையா?”

“தொட்டாக்கு நாங்க வர்றோம்னு தெரியாது”

“!!!, அவருக்குப் பேசினீங்களா, கால் செய்யவா?”

“வேணாம், நாங்க உன்னைப் பார்க்கதான் வந்திருக்கோம். எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். முறையா உங்க வீட்லயும் பேசறோம். நீங்க ரெண்டு பேரும் நல்லபடியா இருந்தா போதும். தொட்டா…. “ என்று தயங்கிப், பின் தொடர்ந்தார்.

“அந்த வயசுல அவன் செஞ்சது தப்புதான். ஆனா, அவனோட அன்புக்கான சரியான அங்கீகாரம் கிடைக்கலை….எல்லாத்துல இருந்தும் ஒதுங்கிப் போனவன், இப்ப சந்தோஷமா இருக்கறதுக்கு காரணம் நீதான்னு புரியுது”

இதுவரை சாம்பவியை எடைபோட்ட அவன் அம்மா, விரைந்து அவள் அருகில் வந்தவர் அழுதுவிட, நிலமையைக் கையாளும் வழி தெரியாது சில நொடிகள் திகைத்த சாம்பவி, சட்டென அவர் கை மீது கை வைத்து செய்கையில் உறுதியளித்தாள். பிறகு உணவளித்தாள். அவள் தந்தையின் அலைபேசி எண்ணைக் கேட்டார்.

மூன்று நாட்கள் இருந்துவிட்டுக் கிளம்பிச் சென்றதோடு, அந்த வாரமே அவள் வீட்டிற்குச் சென்று அதிரடியாய்ப் பெண்ணையும் கேட்டு விட்டானர். அவர்கள் வந்து சென்றதுமே அலுவலகத்தில் அறிவித்துவிட்டனர்.

இதற்கிடையில், விடுப்பு முடிந்து வந்த கல்பகோஷ், திடீரென ஆஃபீஸ் நேரத்தில் சாம்பவியிடம் வந்து மன்னிப்புக் கேட்டான்.

“இப்ப எதுக்கு ஸாரி?”

“உங்களை லவ் பண்றதா சொல்லி ஆசை காட்டினேன். ஆனா, எங்க வீட்ல ஒத்துக்கலை. அவங்களே ஒரு பொண்ணையும் பாத்துட்டாங்க. எங்கேஜ்மெண்ட்டும் முடிஞ்சிடுச்சு. உங்களை ஏமாத்தினதுக்கு ஐ’ம் வெரி ஸாரி”

அவன் அருகில் வந்ததும், இவனை எப்படிச் சமாளிக்க, என்று கவலையான சாம்பவி , இப்போது வந்த சிரிப்பை அடக்கினாள்.

‘யாருடா நீ, லவ் என்ன மிட்டாயா, நான் என்ன பாப்பாவா?’

இந்தியாவின் மத்யமப் பெற்றோர்களுக்கென ஒரு தேசிய குணம் உண்டு, வரையறை உண்டு. அந்தக் கட்டத்துக்குள் அடங்காத எதையும் அவர்கள் ஏற்பதில்லை. அதில் முதலாவது உணவு, இரண்டாவது காதல்.

கல்பகோஷின் பெற்றோர் தங்கள் கொள்கையின் மீது வைத்த அதீத நம்பிக்கை, சாம்பவியைப் பெரிய தர்மசங்கடத்திலிருந்து காப்பாற்றியது.

பிறகு சாம்பவி மன்மத ராவிடம் “நீங்க எனக்குப் பார்த்த மாப்பிள்ளையை நம்பி இருந்தா நான் என்னாகறது?” என்று சொல்லிச் சொல்லிச் சிரித்தாள்.

அவர்கள் வந்த வோல்வோ கோச் அன்னவரத்தை வந்தடைந்தது.
 
Author: VedhaVishal
Article Title: தனித்த வனத்தில் 18
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

suvi

New member
Joined
Nov 18, 2024
Messages
3

Super epi sis 😍 😍
 
Top Bottom