• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தனித்த வனத்தில் 14

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
31
தனித்த வனத்தில் 14

சாம்பவியின் மூன்று வார விடுப்பில் இன்னும் ஐந்தாறு நாட்களே மீதமிருந்த நிலையில், சனிக்கிழமை காலையில் ஊருக்குக் கிளம்புவதாக இருந்தாள்.

சகுந்தலா “ஊறுகாய், பொடி ஏதாவது வேணுமா?”

“இப்ப எதுவும் வேணாம்மா. கொண்டு போனதே இருக்கு”

அம்மாவும் அக்காவும் பேசுவதை மௌனமாக வேடிக்கை பார்த்தாள் தேவசேனா. மனோஜ் இங்கு வந்து மூன்று நாட்களாகிறது. இருவருக்கும் இடையே ஏதோ பிரச்சனை என்று தெரிந்தாலும், வீடு இருக்கும் நிலையில் எதுவாக இருப்பினும், தானே வெளியில் வரட்டும் என கேள்வி கேட்காது இருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமையே நீலகண்டன் “நம்ம நாகராஜன் சித்தப்பா மூலமா ஒரு நல்ல வரன் வந்திருக்கு. ஃபேமிலி
சென்னைதான். பையன் பெங்களூர்ல ஒரு எம்என்சில இருக்காப்ல. ஒரு அக்கா மட்டும். அவங்களும் சென்னைதான். பையன் இப்ப லீவுல சென்னை வந்திருக்கானாம். புதன் கிழமை நாள் நல்லா இருக்கு, சாம்பவியைப் பார்க்க வரலாமான்னு கேக்கறாங்க” என்றார்.

சூர்யா பலமாகத் தலையாட்டியதோடு “மாப்பிள்ளை பார்க்க பரவாயில்லையா இருந்தாலும், விசாரிச்ச வரைக்கும் நல்லவிதமாத்தான் சொல்றாங்க” என்றதில், சாம்பவிக்கு தந்தை சொன்ன தகவல்கள் வீட்டினருக்கு முன்கூட்டியே தெரியுமென்று புரிந்தது.

சகுந்தலாவும் மீராவும் “பையனோட ஃபோட்டோ இல்லையா?”

“அதான் வராங்கள்ல, நேர்லயே பாத்துக்கோங்க” என்றார் நீலகண்டன்.

ஒரு இக்கட்டான சூழலில், வீட்டில் தன் உதவி தேவைப்படுகிறது என்ற நினைவில் வந்த சாம்பவி, இதற்குத் தயாராக இல்லை.

மன்மத ராவின் மேல் அழுத்தமான ஆர்வமும் அபிப்ராயமும் மனதில் இருக்க, இந்தப் பெண்பார்க்கும் நிகழ்வில் நிற்பதற்கே அசூசையாக உணர்ந்தாள்.

அதே நேரம், அவனிடமும் தெரிவிக்காது, அவனைப் பற்றி எதுவும் தெரியாது, இன்னும் இந்த உணர்வுகளைப் பரஸ்பரம் பரிமாறிப் பலிதமாகாத நிலையில், எதைச் சொல்லி, எப்படித் தடுக்கவென்றும் புரியாது திகைத்தாள்.

“இப்பதானேப்பா வேலைல சேர்ந்திருக்கேன், கொஞ்ச நாள் போகட்டும்ப்பா, இப்ப வேணாம்” என்றவளின் மறுப்பு சுலபமாகப் புறந்தள்ளப்பட்டு, புதன் கிழமை மதியம் குடும்பத்தோடு பெண் பார்க்க வந்தனர்.

சாம்பவியை வெளியே அழைத்த கணத்தில்,உண்மையாகவே இப்படி நிற்க நேர்ந்ததற்காக மன்மத ராவிடம் மனதார மன்னிப்பு வேண்டினாள்.

வேண்டாம் என்று மறுதலிப்பதற்குப் புடவை எதற்கெனத் தவிர்த்து, டீஸன்ட்டான ஒரு சுரிதாரில் போய் நிற்க, வந்திருந்த தாயும் மகளும் மேலும் கீழும் பார்த்தனர்.

எந்த வித எதிர்பார்ப்போ, வந்த வரன் தன்னையோ, தான் அவனையோ ஏற்க வேண்டும் என்ற எண்ணமோ கிஞ்சித்தும் இல்லாததில், சாதாரணமாகப் போய் நின்று கை கூப்பியவளுக்கு, சூர்யாவின் ‘பார்க்க பரவாயில்லை’ யின் அர்த்தம் புரிந்தது.

வயதுக்கு மீறி முற்றிய முகமும், பெரிய காதுகளும், ஒரு பார்வையிலேயே தெரியுமளவிற்குக் காதுகளில் கற்றையாக முடியுடன், சற்றே குட்டையாக, கட்டையாக இருந்தான். கூடுதல் சிறப்பாக உருண்டையான பியர் தொந்தி வேறு.

சாம்பவி உருவக் கேலி செய்யும், ஆண் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என இலக்கணம் வகுக்கும் ரகம் இல்லைதான். ஆனாலும், தனக்கு வரப்போகும் கணவனுக்கான குறைந்தபட்ச எதிர்பார்ப்பு அவளுக்கும் உண்டே!

மனோஜுடனான நிச்சயத்திற்கு முன்பு இந்தப் பையன் வந்திருந்தால் கூட சாம்பவிக்கு எதுவும் தோன்றியிருக்காதோ என்னவோ? முதல் வரன் என்று மகிழ்ந்து, சம்மதித்து இருப்பாளாகக் கூட இருக்கும். அதுவும் மன்மத ராவைப் பார்த்த பின்?

தன் நிச்சயித்து நின்றுபோன திருமணம், சமரசங்களைத் திணிப்பது புரிந்தாலும், தந்தையிடமும், அண்ணன் சூர்யாவிடமும் அவள் இதை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் ஃபோட்டோ கொடுக்காததின் காரணம் புரிந்தது.

ஆனால் ‘இத்தனைக்குப் பின், உனக்கு இது போதும், நீ இதற்குதான் லாயக்கு, இதுவே உனக்கு அதிகம்’ என்பதுதானே இதன் அர்த்தம்?

‘அப்படி எதில் நான் குறைந்து போய்விட்டேன்?’

‘இந்தப் பிரச்சனையே வேண்டாம்னுதானே எங்கேயோ ஒரு காட்டுல போய் இருக்கேன்?’

‘எனக்குக் கல்யாணம் செஞ்சு வைங்கன்னு நான் கேட்டேனா?’

தந்தை “உள்ள போ சாம்பவி” என்றதும், விட்டால் போதுமென ஓடிவிட்டாள்.

‘நல்லவேளை, நிக்க வெச்சு கேள்வி கேட்டுத் தனியா பேசணும்னு கேக்காத வரை மகிழ்ச்சி’

வேகமாகத் தன் பெற்றோரின் அறைக்குள் சென்றாள். வெளியில் அவர்கள் உரையாடுவது கேட்டது.

பையனின் தந்தை “எங்களுக்குப் பொண்ணைப் பிடிச்சிருக்கு. பையனுக்கு வர்ற மாசியோட வியாழ நோக்கம் முடியுது. அதுக்குள்ள கல்யாணத்தை முடிச்சுடணும்”

பை. தாய் “வர்ற வெள்ளிக்கிழமை சின்னதா ஒரு நிச்சயதார்த்தம் வெச்சுடுவோம். எதுக்கும் ஒரு உறுதி வேணும் பாருங்க”

பையனின் அக்கா “பொண்ணோட வேலையை பெங்களூருக்கு மாத்திக்க முடியுமா?”

பையன் “இந்த வேலையை விட்டுடச் சொல்லுங்க ஸார்”

அவர்களே எல்லாவற்றையும் முன்கூட்டியே முடிவு செய்து விட்டுப் பெண் பார்க்க வந்தார்கள் போலும். தாங்கள் சொல்வதுதான் நடக்க வேண்டும் என்ற தெளிவும் தீர்மானமும்!

அவர்களது ஒவ்வொரு கேள்விக்கும், கட்டளைக்கும், நிபந்தனைக்கும் தந்தையும் தமையனும் மையமாகத் தலையாட்டுவதும், மெப்பாக பதில் சொல்வதும் சாம்பவிக்குப் பார்க்காமலே தெரிந்தது.

‘என் விருப்பமோ, சம்மதமோ இன்றி, என் திருமணம் பற்றித் தீர்மானிக்க நாமென்ன ரெண்டு செஞ்சுரி பின்னால இருக்கோமா, இல்ல, ரெண்டு பேருக்கும் குழந்தைத் திருமணமா?’

‘அதுசரி, அவங்களைச் சொல்லுவானேன், முதல்ல எங்கப்பா என்னை ஏதாவது கேட்டாரா, என்ன?’

சாம்பவி “எந்திரிச்சு வெளில போங்கடா” என்று உரக்கக் கத்தும் உந்துதலை அடக்கப் பெரிதும் பிரயத்தனப்பட்டாள்.

இதில், சகுந்தலா “தேவாவே நம்ம வீட்ல இருக்கும்போது மாப்பிள்ளையைக் கூப்பிடலைன்னா மரியாதையா இருக்காது” என்றதில், மேதகு மனோஜும் ஆஜர்.

பெண் பார்க்க வந்தவர்கள் ஒரு வழியாகக் கிளம்பிச் சென்றனர். பிறகு தொடங்கியது வாதப் பிரதிவாதங்கள்.

*******************

அம்மா, அப்பா இருவரும் அழைத்தும், யாரையும் சந்திக்க விரும்பாது சாம்பவி உள்ளேயே நின்றிருக்க, அவளை அழைக்க வந்த சூர்யாவின் முகத்தில் சங்கடம் தெரிந்தது.

“சாம், எவ்வளவு நேரம்தான் இங்கயே நிப்ப, வெளிய வா, பேசிக்கலாம்”

தன் பெற்றோரும், உடன் பிறந்தவர்களும் தன்னை இப்படிக் கூறு போட்டு ஆய்வு செய்யும் பார்வை பார்ப்பார்கள் என சாம்பவி, கனவிலும் நினைத்ததில்லை.

கணினித் திரை போல் அவர்களது பார்வைகளைப் படிக்க முடிந்தது.

‘நீ சம்மதித்துதான் ஆக வேண்டும்’ - அப்பா.

‘மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதடீ’ - அம்மா.

‘ஸாரி சாம், அப்பா சொன்னதை நான் செஞ்சேன்’ - அண்ணா.

‘நல்ல வேளை, நான் தப்பிச்சேன்’ - தேவசேனா.

மீரா அனுதாபமாகப் பார்க்க, மனோஜ் சாம்பவியின் கண்களைத் தவிர்த்தான்.

அருகில் வந்த ஆதி “அத்த, சமோஸா சாப்புடுறியா?”

“நீ சாப்டு செல்லம்”

சகுந்தலா “அவங்க சொன்னதைக் கேட்டதானே சாம்பவி, வர்ற வெள்ளிக்கிழமையே நிச்சயம் செஞ்சுக்கலாம்னு சொல்லிட்டாங்க”

“...”

“மாசி முடியற முன்ன கல்யாணம் பண்ணிடனுமாம். இப்பவே தை கடைசி வாரம் ஆயாச்சு. இனிமேதான் நகை, நட்டுல தொடங்கி எல்லாம் வாங்கணும். மீராக்கும் சின்னக்குழந்தை…”

“...”

மைசூர் பாகை வாயில் போட்டுக்கொண்ட தேவசேனா “அக்கா, நீ பேசாம ஊருக்குத் திரும்பிப் போகவே வேணாம். இங்கருந்தே வேலையை ரிஸைன் பண்ணிடு”

“...”

சகுந்தலா “என்னடீ சாம்பவி, எதுவுமே பேச மாட்டேங்கற?”

சூர்யா “..ம்மா, கொஞ்சம் அமைதியா இரும்மா. மொதல்ல சாம்க்கு அந்தப் பையனை புடிச்சிருக்கான்னு…”

நீலகண்டன் “புடிக்காம? புடிச்சுதான் ஆகணும். இப்ப பொண்ணு கேட்டு வர்றவங்களே ஒண்ணு, ரெண்டு பேருதான். அதுலயும் எல்லாம் பொருந்தி, இதுபோல பொண்ணு பாக்கற ஸ்டேஜ் வரைக்கும் வர வைக்கறத்துக்குள்ள தாவு தீர்ந்து போவுது. இதுல வந்த சம்பந்தத்தை வேண்டாம்னு சொல்ற இடத்துல நாம இல்ல”

“...”

“அதோட, தேவா சொன்னதுபோல, வேலையை விட்டுட்டுக் கல்யாணத்துக்கு ரெடியாகற வழியைப் பாரு”

எதுவும் பேசாது, உள்ளே செல்லத் திரும்பிய சாம்பவிக்கு, “இப்படி மூஞ்சியத் திருப்பிக்கிட்டுப் போனா என்னக்கா அர்த்தம், புடிக்குது, புடிக்கலைன்னு ஏதாவது ஒன்னு சொல்லு” என்ற தேவாவின் வார்த்தைகள் கடும் கோபத்தைத் தந்தது. தன்னையே ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

“எனக்குப் பிடிக்கலை”

சகுந்தலா “என்ன பிடிக்கலை, ஏன் பிடிக்கலை?”

“பிடிக்கலைன்னா, பிடிக்கலைதான். காரணமெல்லாம் தெரியாது”

சகுந்தலா “அந்தப் பையன் பார்க்க கொஞ்சம் சுமாராதான் இருக்கான், இல்லைங்கல. ஆனா, நம்ம பக்கமும் குறை இருக்குல்ல?”

விலுக்கென நிமிர்ந்தவள் “நீயே சொல்ற அளவுக்கு, எங்கிட்ட அப்டி என்னம்மா குறை?”

“...”

ஏதோ சொல்ல வந்த தேவாவின் கையைப்பிடித்து மனோஜ் தடுப்பது தெரிந்தது.

“இல்ல, எனக்குப் புரியல. நான் கஷ்டப்பட்டு படிச்சு, GATE எக்ஸாம் எழுதி, ஒவ்வொரு கம்பெனியா பரிட்சை எழுதி, ஏழெட்டு ரவுண்டு செலக்ஷன்ல முட்டி மோதி வேலை வாங்கினா, எவனோ ஒருத்தன் வந்து அஞ்சு நிமிஷம் பார்த்ததுமே, வேலையை விடுன்னுவான். நான் உடனே, ஆகட்டும் ஹுஸூர்னு வேலையை விடணும், அப்டித்தானே?”

“ஒரு தரம் வேலையை விட்டு, ஏமாந்து, அவமானப்பட்ட ரணமே இன்னும் ஆறலை. இந்த ஆட்டத்துக்கு நான் வரலை. ஆளை விடுங்க”

மனோஜ் சங்கடத்துடன் எழுந்து நிற்க தேவசேனா “பாருங்கப்பா, அவரை எப்படி மரியாதை இல்லாமப் பேசறான்னு” என்று முடிப்பதற்குள், நீலகண்டன் பதறினார். சாம்பவியிடம் உறுமினார்.

“சாம்பவி, என்ன பேச்சு இதெல்லாம், முதல்ல மாப்பிள்ளை கிட்ட மன்னிப்புக் கேளு”

மனோஜ் “பரவாயில்லை மாமா” எனப் பெரிய மனது செய்தான்.

அந்தக் கணத்தில் சாம்பவிக்குத் தேன்றியது : ‘இவன் என்ன மாப்பிள்ளையா, மண்புழுவா?’

நீலகண்டன் “இப்ப நாங்க சொல்றதைக் கேட்டுக் கல்யாணம் செஞ்சுக்க முடியுமா, முடியாதா?”

“எனக்குக் கல்யாணம் செஞ்சு வைங்கன்னு நான் கேட்டேனாப்பா? அவுட் ஆஃப் சைட், அவுட் ஆஃப் மைண்ட்னு நான்தான் கண்காணாத இடத்துக்குப் போய்ட்டேனே, கொஞ்ச நாள் என்னை நிம்மதியா இருக்க விடுங்களேன்”

திடீரெனத் தலையில் மடேர் மடேரென அடித்துக்கொண்ட சகுந்தலா “நீ நிம்மதியா இருப்ப. உனக்கு இருக்கற திண்ணக்கம் எங்களுக்கு இல்லையே. பொண்ணு கேட்டு வர்றவங்க எல்லாம், உன் கல்யாணம் நின்னதுக்கு இதுதான் காரணமான்னு ஆளுக்கொரு காரணத்தை சொல்றாங்களே”

“உண்மையான காரணத்தை சொல்ல வேண்டியதுதானே?”

“அதெப்படி சாம்பவி முடியும், நீ ஏன்டீ தேவா அழற?”

தங்கை அழுவதை சாம்பவி அமைதியாக வேடிக்கை பார்த்தாள்.

‘என் தங்கை தேவாவா இது? இதுவா அவள் குணம்? எத்தனை பொய்யான அழுகை, பாசாங்கு?’

“நீலகண்டன் “யார் இருக்கா, என்னன்னு கொஞ்சம் யோசிச்சுப் பேசு சாம்பவி. அம்மா சொல்றது உண்மைதான். இப்ப வந்துட்டுப் போன பையன் வீட்ல கூட நீ வேலை பாக்கற இடத்துல யாரையோ விரும்பினதுதான் உன் கல்யாணம் நின்னதுக்குக் காரணமான்னு கேட்டாங்க”

“அதுக்குப் பிறகும் அவங்களை எப்படிப்பா பொண்ணு பாக்க வரச் சொன்னீங்க?”

“...”

“ஒரு மகளா நான் இதை சொல்லக்கூடாது. அந்தப் பையனை விட நீங்க இளமையா இருக்கீங்கப்பா”

“சாம்பவீ…”

“என் தகுதி இவ்வளவுதான், எனக்கு இது போதும்னு, நீங்களே …”

இடைமறித் சூர்யா “டேய் சாம், அப்படி இல்லடா”

“இன்னொரு தரம், யாராவது வேலை பாக்கற இடத்துல எனக்கு யாரோ இருக்காங்கன்னு சொன்னா ஆமான்னு சொல்லிடுங்கப்பா. நான் இந்தப் பக்கமே வராம அங்கேயே இருந்துக்கறேன்” என்று உள்ளே சென்று விட்டாள்.

நேரமாக, ஆக தான் பிறந்து, வளர்ந்த வீட்டில் இருப்பதே, வெம்மையாக, அழுத்தமாக, மூச்சு முட்டுவதைப்போல் இருப்பதாகத் தோன்ற, ஏழாயிரம் ரூபாய் போனால் போகிறதென்று சனிக்கிழமை டிக்கெட்டை, மறுநாளைக்கே மாற்றியவள், பிடிவாதமாகக் கிளம்பியும் விட்டாள்.
 
Author: VedhaVishal
Article Title: தனித்த வனத்தில் 14
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Krishnanthamira

New member
Joined
Nov 7, 2024
Messages
5

Eppadi ipdi irukanga. Enaku romba manasu kastam aagitu. Sam enna thappu senja. Typical men cheat panna andha aanoda manaivi Or women part avana sariya 'gavanichukala' nu solra mindset. Didn't expect this from surya. And are they even her parents??? Epudi ipdi panna thonuthu.
 
Joined
Jun 19, 2024
Messages
21
😍😍😍

"யாரோ" இருக்காங்கன்னு எதுக்கு சொல்லணும்? 😏😏 அழகான மன்மத ராவ் தான் இருக்காருன்னு சொன்னா போதாதா.? 😍😍🙈🙈

Last edited:

dharani

Member
Joined
Jul 6, 2024
Messages
18
மொத்த குடும்பமும் மூளை சூடு பிடிச்சிட்டு இருக்கு போல....
 
Joined
Jun 19, 2024
Messages
12
இந்த மாதிரி குடும்பத்தில் இருப்பதற்கு தனியே இருப்பது ரொம்பவும் நல்லது.
 
kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
85
இந்த குடும்பத்த பார்த்தாலே பத்திண்டு வருது😡😡😡😡, இப்போதாவது இந்த அளவுக்கு பேச தைரியம் வந்ததே, இனிமே இந்த பக்கமே வராத சாம்பவி, சுயநல கூட்டம்
 
Top Bottom