• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தங்கச்சிலை போல் வந்து மனதை…! 23 - PREFINAL 1

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
தங்கச்சிலை போல் வந்து மனதை…! 23

ளினி ஆரத்தி எடுக்க, வைரவனின் நக்கல் பார்வையில், அவனது இடுப்பில் கிள்ளிய மேதா, அவனது பின் தோளில் “ராஜு, ப்ளீஸ் ” என்றாள்.

ராமநாதனும் நளினியும் “வாங்க, வாங்க“ என வரவேற்க, வைரவனும் மேதாவும் ஆயாவின் வீட்டுக்குள் பிரவேசித்தனர்.

முன்தினம் தங்கள் வருத்தத்தை, கோபத்தை, தனது நம்பிக்கைத் துரோகத்தைப் புறந்தள்ளித் தனக்காக வந்திருந்த

பெற்றோரைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டாலும், அத்தனை பேருக்கு நடுவே
“ராசு ரொம்ப நல்லவர்” என்று பெற்றோர், தன்னைவிட தன் கணவனை அங்கீகரித்து ஏற்க வேண்டும் என வைரவனை முன்னிலைப் படுத்தியதில், அங்கு கூடியிருந்தோர் அனைவருக்குமே நெகிழ்வுதான்.


ராமநாதனால் சிறுவயது முதலே, ஒவ்வொரு சின்னச் சின்ன செயலுக்கும், ஒரு பூ வரைந்தால் கூடத் தன்னிடம் காட்டி பாராட்டை எதிர்பார்த்து நிற்கும் மகளின் ஏக்கம் புரிய, ஆமோதிப்பாகத் தலையசைத்தார்.

அழுத்தம், குற்றவுணர்வு, நிம்மதி என கலவையான உணர்வுகளோடு தந்தையின் அருகே அழுதவாறு நின்றவளையே பார்த்திருந்த வைரவனுக்கு மனைவி அழுவது பிடிக்கவில்லை.

அதோடு அவள் சொன்ன ஒற்றை வரி அவனை என்னென்னவோ செய்ததில், தந்தையின் அணைப்பில் இருந்தவளை அவரிடமிருந்து பிடுங்கி இழுத்து இறுக்கிக் கொள்ளும் வேகத்தை சிரமப்பட்டு அடக்கினான். மேதாவின் அழுகையை அடக்கும் ஒரே வழி, அவளைச் சீண்டி, ரோஷத்தைத் தூண்டுவதுதான் எனத் தெரிந்தவன்,

“ஹலோ மேதாவி மேடம், என்னை நல்லவ….ன்னு சொன்னதுக்காகவா அழறீங்க?” எனவும் அவள் முறைக்க, காதில் விழுந்தவர்கள் சிரித்தனர்.

“அரசு, இதென்ன, பாவம் பேரம்பிண்டி, தேடி வந்த ஆத்தா, அப்புச்சி கிட்ட உன்னைப் பத்தி ஒசத்தியா பேசி, சந்தோஷத்துல அழுதா, கிண்டல் பண்ணுதீகளோ?” என பார்வதி ஆச்சி சலுகையாகப் பேரனைப் பகடி செய்யவும், மேலும் சகஜமாயினர்.


பிள்ளையார் நோன்பு முடிந்த பின், மாலை ஆறு மணிபோல் மேதாவின் பெற்றோர் வைரவனின் வீட்டுக்கு வந்தனர்.

இரண்டு தரப்புப் பெற்றோர்களுமே ஆரம்பகட்டத் தயக்கங்களுக்குப் பின் இயல்பாகவே பேசினர். தணிகைநாதன் சகஜமாக உரையாட, வள்ளியம்மை பேசினாலுமே, அவரது ஒதுக்கமும் விலகலும் வெளிப்படையாகத் தெரிந்தது.

ராமநாதன் மறுநாள் ஞாயிறன்று குடும்பத்தோடு விருந்துக்கு வரும்படி அழைத்தார். ஆளுக்கொரு வேலை இருப்பதாகக் கூறி ‘மேதாவும் வைரவனும் வருவார்கள்’ என்றார் தணிகைநாதன்.

ராமநாதன் “நாளன்னைக்குக் காலைல கோயம்புத்தூருக்கு கிளம்பறோம். அதுவரை ஒரு நாள் எங்க கூட இருக்கட்டுமே. அப்படியே நாளைக்கு சாயங்காலமா எங்க கோவிலுக்கும் போய் வந்துடறோம்” என்றதற்கு தணிகைநாதன் சம்மதிக்க, வைரவனிடம் எந்த எதிர்வினையும் இல்லை.


பெரிய வீட்டிலும் ழைப்பை மறுத்துவிட, மேதாவும் வைரவனும் மட்டுமே விருந்தாட வந்திருந்தனர்.

நேற்று அவர்கள் அழைத்துவிட்டுச் சென்றது முதல், அகத்தின் சந்தோஷம் முகத்தில் பிரதிபலித்தாலும் “ராசுக்குட்டி, அங்க வர்றதுல உனக்குப் பிரச்சனை இல்லைதானே?”

“ஆயா வீட்டுக்குப் போக உங்களுக்குப் பிடிக்கலைன்னா, சங்கடமா இருந்தா, நாம போக வேணாம் ராசு”

“நீங்க வாங்கிக் குடுத்த புது ஷிஃபான் புடவையைக் கட்டிக்கவா வைரம், பிளவுஸ் சரியா இருக்கான்னு தெரியலையே”

“அதென்ன மோக்ஸ், புதுசா வைரம்?”

“நீதான் ராசு. அதைவிடு, நிஜமா உனக்கு ஓகேவா?” என வீட்டு வாசலில் வந்து இறங்கும் வரை மேதா புலம்பிக்கொண்டே இருந்தாள்.

சம்பந்தி வீட்டுப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, அடிக்கடி பார்க்கும் நெருக்கத்தில் இருக்கும் உறவுகள் விட்டுப் போகாதென தெரிந்த வைரவன், மனைவிக்காகத் தன் சங்கடத்தை ஏறக்கட்டிவிட்டு முழுமனதோடுதான் வந்திருந்தான்.


தயாராகி வந்தவனிடம் “உன்னை அம்புட்டுப் பேசினவக வீட்டுக்கு ரெப்பா கிளம்பி நிக்குற” என்றார் வள்ளியம்மை.

“ஏம்மா, அவங்க அவளோட அம்மா, அப்பா இல்லையா, சமாதானம் பேசறவக கிட்ட சண்டையா போட முடியும்?

“அதுக்காக அவங்கப்பா சொன்னதெல்லாம் இல்லைன்னு ஆயிடுமா?”

“என்னைப் பத்தி அவர் சொன்னதெல்லாம் இன்னும் அப்படியேதாம்மா இருக்கு”

தணிகைநாதன்தான் “வள்ளி, பேசாம இருக்க மாட்ட, நீ புறப்படுடா. வழியில பழம், ஸ்வீட்டுனு வாங்கிட்டுப் போம்மா. பத்திரமா போய்ட்டு நிதானமா வாங்க” என விடுவித்து அனுப்பி வைத்தார்.

வரவேற்று இஞ்சி டீ குடுத்தனர். சற்று நேரத்தில் சமையலறையில் வேலை இருக்கவே, எழுந்து சென்ற நளினி “உள்ள வாடீ” என மகளையும் கையோடு அழைத்துச் சென்றுவிட, அவளது பலத்தில் கேட்ட கேள்விக்கு தலையசைப்பு அல்லது ஒரு, ரெண்டு வார்த்தையில் பதில் என ஓட்டிக்கொண்டிருந்த வைரவன்தான் தவித்துப்போனான்.

‘என் பொண்டாட்டியத் திருப்பிக் கொடுங்கடா’ மொமென்ட்.

அவனது நிலை புரிந்த ராமநாதன் , ஆன்லைன் பிஸினஸ் எப்படிப் போகிறது, இருவரும் வேறென்ன திட்டம் வைத்திருக்கின்றனர் என்று பேச்சைத் தொடங்கவும்தான் சகஜமானான். தன் மொபைலில் தங்கள் வெப் சைட்டைக் காட்டி விளக்கியவன், மேலோட்டமாக அதன் வருமானத்தை சொல்லவும் தயங்கவில்லை. தனது அடுத்த கட்ட முயற்சியை பெரிய நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தைத் தெரிவித்தான்.

தன் படிப்பு, வேலை, பொருளாதாரப் பின்னணி குறித்து அவர் வைத்திருந்த அபிப்பிராயத்திற்கு, மேதாவின் தந்தையாக, இதைத் தெரிந்து கொள்ள அவருக்கு உரிமை இருப்பதாகவே வைரவன் கருதினான்.

“நீங்க வேற கடைகள்ல முயற்சி செய்யலையா…”

“மறுநாளே கூப்பிட்டாங்க. ஆனா, ஐயாக்கு நான் யாரு, அழகுநாச்சிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்னு ஊருக்கே தெரியும். அது சரியா வராது ஸார்”

“இந்த நகையெல்லாம் எங்க செய்யறீங்க, அழகுநாச்சியோட சாலைலயேவா?”

வைரவன் வேறு வழியின்றி, தான் வீடு பார்ப்பதை விடுத்து, சாலைக்கு இடம் தேடுவதை மட்டும் சொன்னான். கேட்டுக்கொண்டார்.

சமையலறையில் நளினி மகளின் வாயைப் பிடுங்கிக் கொண்டிருந்தாள். நேற்று பார்த்த வரையில் வைரவனின் வீடெல்லாம் நன்றாகத்தான் இருந்தது.

ஆனால், மாடியில் இருந்த அவளது அறையில், சுருட்டி வைக்கப்பட்ட பாய்கள் இருக்க, கீழே இருந்த அறைகளில் ஒன்றில் பழைய காலத்துத் தேக்குமர இரட்டைக் கட்டிலும் மெத்தையும் யாரும் உபயோகிக்காமல் அமைப்பாக இருக்க, அது மீனாக்ஷியும் நந்தகுமாரும் வந்தால் என்றதை நளினியால் ஏற்க முடியவில்லை.

“ஏன் மாமா, புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கு கட்டிலைக் கொடுக்காம, எப்பவோ வர்றவங்களுக்குன்னா தூசிதட்டி வைப்பாங்க?” என்று கணவரிடம் புலம்பினாள்.

மீனாக்ஷியின் வளைகாப்பு பற்றி கேட்ட நளினி “ரெண்டாவதுக்கா, யாராவது ஜோசியக்காரன், செஞ்சா ஆண் குழந்தை பொறக்கும்னு சொல்லி இருப்பான், வேறென்ன?” என்றாள்.

வள்ளியம்மையின் தினசரி நடவடிக்கை குறித்துக் கேட்டாள்.

“உங்க மாமியார் இன்னும் கோபமாதான் இருக்காங்க போல”

வள்ளியம்மை பேசுவதையெல்லாம் பற்றி மேதா, தன் அம்மாவிடம் எதுவும் சொல்லாவிட்டாலும், ஆமோதித்தாள்.

“என்னவோ போ, ஏற்கனவே, நடக்க முடியாத மாமியார், மாமனார், அந்தப் பையன் ஜீவா, வயசுப்பொண்ணு லதா… இப்ப மீனாக்ஷி வேற மகளோட டெலிவரிக்கு வருவா… இதுல உங்களுக்குன்னு நேரம் எங்கடீ?”

“...”

“உன் வீடு இருக்கற நிலமைல ஹனிமூனைப் பத்தி கேக்கறதே தப்பு”

“...”

“ஆமா, நேத்து கூட மாப்பிள்ளைதான் காஃபி போட்டார் போல. தினமும் யாரு சமைக்கறா?”

“அரசுதாம்மா”

“ஏன்டீ நீ பாட்டு அவங்கய்யாவும் அப்பத்தாவும் அழைக்கற பேரைச் சொல்ற”

“பேர்தானேம்மா, சொன்னா என்ன?”

“நல்லி, சாப்பாடு ரெடியா?”

“ரெடி மாமா”

வைரவன் சொல்லச் சொல்லக் கேட்காமல், பணிப்பெண்ணின் கணவன் மூலம் இரண்டு கேரியர்களில் அவனது வீட்டிற்கு சாதத்தைத் தவிர, மற்ற அனைத்தையும் அனுப்பினர்.

தம்பதிகளுக்கு டைனிங் டேபிளில் இலை போட்டு, உப்பு, ஊறுகாயில் தொடங்கி, வடை, அப்பளம், கத்தரி, முருங்கை சாம்பார், வாழைப் பூ வடை, மரச்சீனி ரோஸ்ட், பைன்ஆப்பிள் ரசம், தயிர்சாதம், தேங்காய்பாலில் செய்த காய்கறி மண்டி, கல்கண்டு பொங்கல், பால் பணியாரம், இளநீர் பாயசம் என தடபுடலான மாப்பிள்ளை விருந்தைப் பரிமாறினாள் நளினி.

வைரவனுக்கு விருந்துச் சாப்பாடு புதிதில்லை என்றாலும், வள்ளியம்மை படுத்த படுக்கையானதுக்குப் பின், ஆள்களின் உதவியின்றி, நீண்ட வருடங்கள் சென்று, இப்படி அவனுக்கெனவே சமைக்கப்பட்ட முழு விருந்து நன்றாகவே இருந்தும், அவனால்தான் அதற்கு நீதி செய்ய முடியவில்லை.

இலையில் குறுக்கே படுத்துக்கொள்ளாத குறையாகத் தடுத்தவன் “நைட்டுக்கும் இங்கதானே இருக்கப் போறோம். இதையே வெச்சுக்கலாம் ஆன்ட்டி. இப்ப போதும்” என கெஞ்சும் குரலில் சொல்ல, மேதா சிரித்தாள்.

இதில் நளினி வேறு “உங்களுக்கு என்ன புடிக்கும்னு நேத்தே இவளைக் கேட்டேன் தம்பி, தெரியாதுன்னுட்டா, அதான் தோணினதை சமைச்சிருக்கேன்” என மகளை முறைத்தார்.

“அதனால என்ன ஆன்ட்டீ, எனக்கு அப்படி எதுவும் குறிப்பா கிடையாது. எல்லாமே நல்லா இருந்துச்சு. தேங்க்ஸ் ஆன்ட்டீ”

“…ம்மா, எனக்கு என்ன புடிக்கும்னு ராசுக்கு தெரியும்”

“அப்படியே போட்டேன்னா தெரியுமா, ஸாரி தம்பி, இவ சமையல் கட்டு பக்கமே வர மாட்டா. லண்டன்ல கூட, மாமாவோட ஃப்ரெண்டு வீட்லதான் பேயிங் கெஸ்ட்டா இருந்தா. பிராமின் ஃபேமிலி. வத்தக் குழம்பு, பருப்பு உசிலின்னு இவளுக்குன்னு வந்து மாட்டினாங்க”

“விடுங்க ஆன்ட்டீ, கத்துப்பா”

“ஒரு கப் பாயசம் மட்டும் தரவா?”

அவஸ்தையாகச் சிரித்துவிட்டு, கை கழுவச் சென்றவன் “மோக்ஸ், முடியலடீ, இங்கயே படுத்துக்கவா?”

“ராசுக்குட்டீ, இதுக்கேவா, இப்பதானே மணி ஒன்னரை, நாலு மணிக்கு காஃபி, கேசரி, போண்டோ இருக்காம்”

“இதுக்கு மேல ஏதாவது செஞ்சாங்க, நான் ஏறிக்குதிச்சு ஓடிடுவேன். ஒரு மனுஷன் ஒரு மாச மெனுவை ஒரே நாள்ல எப்படி சாப்பிட…”

மாலையில் ராமநாதனின் குடும்பத்தினர் சார்ந்துள்ள இளையாற்றங்குடிக் கோவிலுக்குச் சென்றனர்.

ராமநாதன் கூகுள் மேப்பைத் திறக்க, வைரவன் கார் சாவியைக் கேட்டான்.

தரிசனம் முடிந்து திரும்புகையில், ராமநாதன் “இந்த ஸார், ஆன்ட்டீ எல்லாம் வேணாமே மாப்பிள்ளை”

“அப்ப இந்த மாப்பிள்ளையும் வேணாம் ஸார்… ஸாரி மாமா”

மேதாவின் வழக்கமான சிறிய அறை வேண்டாம் என்றவர்கள், இருவரையும் மாடியறைக்கு அனுப்பினர்.

இவர்கள் கோவிலுக்குச் சென்றிருந்த சமயத்தில், பணியாளை வைத்து, டெக்கரேட்டரை அழைத்து மிதமாக அலங்காரம் செய்யப்பட்டு, அத்தரும் ஊதுபத்தியும் மணத்த அறையைக் கண்ட வைரவன்,

“பார்றா, மோகினி, உங்கப்பா மாமாவேதான்டீ” என விசிலடித்தான். பதில் வராது போக, திடீரென நாணிக் கோணியவளைப் பார்த்து வெடித்துச் சிரித்தவன் “இந்த வெக்கமெல்லாம் உனக்கு சூட் ஆகலடீ மோக்ஸ்”

மேதா “அது இந்த அலங்காரத்தோட எஃபெக்ட் ராசு தானா வருது”

“தட்’ஸ் மை மோகினி” என மேதாலக்ஷ்மியை நெருங்கினான்.

அதற்குப் பின் நடந்ததெல்லாம் மோகினியை ஆட்கொண்ட வைரவனாட்டம்தான்.

“இப்ப ஏறிக்குதிச்சு ஓட வேண்டியதுதானே? என்றாள், மேதா மூச்சிரைக்க.

“போடீ, அதிர்ஷ்டம் ஒரு முறைதான் கதவைத் தட்டும்”

“தட்டும், தட்டும்”

"தட்டலை?"

****************

காலையில் முதலில் கீழே வந்த வைரவனை “வாங்க” என அழைத்துச் சென்ற ராமநாதன் அவர்களது வீட்டுக்கு அடுத்து இருந்த ஒரு காம்பௌண்டுக்குள் அழைத்துச் சென்றார்.

அங்கே முன்னால் ஒரு அறை, ஒரு பெரிய ஹால், ஒரே அளவிலான இரண்டு அறைகள், சிறிதான ஸ்டோர் ரூம், ஒரு அறையில் அட்டாச்ட் பாத்ரூமும், பின்னால் ஒரு ஓய்வறையும் இருந்தது. சிறிதுதான். ஆனால், நன்கு பராமரிக்கப்படுவது தெரிந்தது. நல்ல இயற்கை வெளிச்சம். எல்லாமே ஃபர்னிஷ்டாக இருந்தது.

முன்னறைக்கு வந்ததும், ராமநாதன் “எங்க மாமா, அதாவது நளினியோட அப்பா ஒரு கண் டாக்டர்”

“தெரியும் மாமா”

“அவரோட க்ளீனிக்தான் இது. அவர் இறந்ததுக்கு பிறகு சில பேர் வாடகைக்கு வந்தாங்க. ஆனா, அக்காவுக்கு பிடிக்கலை”

“...”

“தப்பா நினைக்காதீங்க வைரவன். இந்த இடம் வருஷக்கணக்கா பூட்டிதான் கிடக்கு. உங்களோட சாலையை நீங்க ஏன் இங்க தொடங்கக் கூடாது?”

“....”

“வைரவன்…”

“அது… வேணாம் மாமா…”

“அவசரம் ஒன்னுமில்லை. யோசிச்சு, உங்க வீட்ல பேசிட்டு சொல்லுங்க. எப்பவும் காலியாதான் கிடக்கு. நேத்து நைட்டு பேசினபோது அக்காதான் இந்த ஐடியாவையே சொன்னது”

“...”

அந்த இடத்துக்கு வாடகை குறைந்தது இருபதாயிரமாவது ஆகும். நேற்றுவரை முறைத்துக்கொண்டு திரிந்தவர், இன்று எப்படியாவது அவனுக்கு உதவ நினைப்பது புரிந்தாலும், வைரவன் அவரிடமிருந்து எந்த அனுதாபத்தையோ, சலுகையையோ பெற விரும்பவில்லை.

அவர்கள் வீடு திரும்பியபோது நளினியும் மேதாவும் காலை உணவுடன் தயாராக இருக்க, எட்டரை மணிக்கெல்லாம் கோவைக்குப் புறப்பட்டனர்.


நளினி “குட்டிமா, ஆயா கொஞ்ச மாசத்துக்கு கோவைலதான் இருப்பாங்க. அப்பப்ப வந்து வீட்டை பாத்துக்க. சுப்பு அக்காக்கு ஃபோன் செஞ்சா வந்து க்ளீன் பண்ணுவா” என வீட்டுச் சாவியை மகளிடம் கொடுத்தாள்.

ராமநாதன் “வைரவன், வாரம், பத்து நாள்ள ஒரு தரம் வந்து பாத்துக்கோங்க. நைட்டு தங்கினாலும் சரிதான். இதுலயே க்ளீனிக் சாவியும் இருக்கு. திங்க் இட் ஓவர்” என்றார்.

காரில் ஏறி அமர, அருகே வந்த வைரவன் “வாடகைக்குன்னா எடுத்துக்கறேன் மாமா”

புன்னகைத்த ராமநாதன் “அக்காவை பேசச் சொல்றேன், பை வைரவன், பைடா குட்டிமா. கால் செய்” என்று காரைக் கிளப்பினார்.

*****************

வளைகாப்பிற்கு தணிகைநாதன், வைரவன், மேதாலக்ஷ்மி மூவரும் மதுரைக்குப் போவதென முடிவானது.

வைரவன் கொடுத்த டிஸைனில் பவள வளையல்களை அழகுநாச்சியில்தான் செய்து வாங்கினர்.

தணிகைநாதன் மீனாக்ஷி கேட்ட வளையல்கள், மென்பட்டுப் புடவை, வேஷ்டி, குர்த்தா, நிலாவுக்கு உடைகள், இனிப்புகள் மற்றும் மங்கலப் பொருட்களை சீராக வைத்தார்.

முருகப்பனும் தெய்வானையும் வந்திருக்க, ராமநாதன் மட்டும் வந்திருந்தார்.

தணிகைநாதன் வளையலை மேதாவிடம் தர, அவள் “நீங்க போடுங்க ஆன்ட்டீ” என தெய்வானையிடம் தந்ததில், அவருக்குப் பரம திருப்தி.

“மோகிக் குட்டூஸ், சர்ரியான ஆளுடீ நீ” என்றான் வைரவன்.

சீராக, தங்க வளையலை எதிர்பாராத நந்தகுமாரின் முகம் கன்றியது. மனைவியை முறைத்துப் பார்க்க, மீனாக்ஷி மாமியாரா, கணவனா என முழித்தாள்.

“நீயாவது எங்கிட்ட சொல்லக் கூடாதா வைரவா, இதுக்கான பணத்தை நான் தந்துடறேன்” எனக் கடிந்து கொண்டான்.

“சீர் மாமா அது. ஃபங்ஷன் வெச்சா வரிசை வைக்க வேணாமா?”

கிளம்பும் நேரத்தில் “அப்ப மீனா டெலிவரிக்கு இங்கேயே இருக்கட்டும்” என்றவனிடம் கெஞ்சிக் கூத்தாடி மீனாக்ஷியைக் காரைக்குடிக்கு அழைத்து வந்தனர்.

*******************

மீனாக்ஷி மேதாவுடன் நன்றாகப் பேசினாலும், அவளிடம் வள்ளியம்மையின் நிழல் தட்டியது.

மேதாவின் பெற்றோர் வந்தது, ஆயாவின் வீட்டிற்குப் போவது, அவர்களது இடத்தில் சாலையைத் தொடங்கப் போவது என எல்லாமே குற்றமாகப் பார்க்கப்பட, வீடு இருக்கும் நிலையில் தனிக்குடித்தனம் போவது சரிவராது என்று புரிந்தது.

தற்காலிகப் பிரிவாவது அவசியம் என எண்ணிய வைரவன், தனக்கும் மேதாவுக்கும் GIA (Gemological Institute of America) வின் மும்பை கிளையில் இரண்டு வாரத்துக்கான CAD CAM கோர்ஸ் செய்வதற்குப் பதிவு செய்துகொண்டு அந்த வாரமே இருவரும் மும்பை புறப்பட்டுச் சென்றனர்.
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: தங்கச்சிலை போல் வந்து மனதை…! 23 - PREFINAL 1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Joined
Jun 19, 2024
Messages
33
😍😍😍

என்னாது! ரெண்டு பேரும் மும்பை போறாங்களா? அப்ப இனி மோகனியாட்டம், வைரவனாட்டம் எல்லாம் அந்த அரபிக் கடலோரத்திலா? 🙈🙈🙈


 
Last edited:

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
😍😍😍

என்னாது! ரெண்டு பேரும் மும்பை போறாங்களா? அப்ப இனி மோகனியாட்டம், வைரவனாட்டம் எல்லாம் அந்த அரபிக் கடலோரத்திலா? 🙈🙈🙈


🙈🙈🙈😍
 

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
சூப்பர்👌👌👌, தப்பாட்டம் போய் கர்பா , தான்டியா, லாவனி எல்லாம் ஆடப் போறாங்களோ?
 

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
கடைசிவரை வள்ளியம்மை மட்டும் மனம் மாறவே மாட்டாரா?
 
Top Bottom